அத்தியாயம் 20
அருகில் உள்ள ஊர் ஒன்றிலிருந்து சுமித்ராவின் தூரத்து உறவினர்களும் திருமணத்துக்கு வந்திருந்தனர். "இவங்க தானே ரேணுகா வீட்ல போயி மிரட்டினது? அவங்க கிட்ட பேச மாட்டேன்" என்று அடம்பிடித்தாள் சுமி. விஸ்வநாதன் தான், "அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. ஒருவேளை நமக்குக் குழந்தை பிறந்து, அது வளர்ந்த பிறகு நாம கூட இப்படி செய்வோமோ என்னவோ? இப்ப மனசு மாறி உங்க அம்மா அப்பா அனுப்பி தானே வந்திருக்காங்க? நல்லபடியாப் பேசு" என்க, அவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து மேடை அருகில் அமர வைக்கப்பட்டிருந்தனர். விஸ்வநாதனின் பெற்றோருக்கு ஏக திருப்தி. சுமித்ரா அவர்களிடமும் மரியாதையாகப் பேசி அவர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டாள். இங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளும், மகன் காட்டும் மகிழ்ச்சியும் அவர்களையும் மகிழ்ச்சிக்கடலில் தள்ளியிருந்தது. சுமித்ராவின் அம்மா அப்பா சார்பில் செய்ய வேண்டிய சடங்குகளை அஜய்யின் பெற்றோர் தம்பதிகளாகச் செய்தனர்.
தமிழ்ச்செல்வன் முதலில் மேடையில் ஏறத் தயங்கினாலும், "வாங்க தமிழ்! வாங்க தமிழ்!" என்று விஸ்வநாதன் வருந்தி அழைக்கவும் அவன் அருகில் சென்று நின்று கொண்டான். அங்கிருந்து பார்கவியைப் பார்ப்பதற்கு ரொம்பவே வசதியாக இருந்தது. வேறு யார் கவனிக்கவில்லை என்றாலும் பார்கவிக்கு அவன் தன்னையே பார்ப்பது தெரிந்தே இருந்தது. பிடிவாதமாகத் தன் கண்களை சுமித்ராவின் மேலேயே வைத்திருந்தாள். தவிர்க்க முடியாமல் ஓரிருமுறை தமிழ்ச்செல்வன் பக்கம் பார்வை போனால் கூட லேசாக முறைத்து விட்டு சுமித்ராவின் பக்கமே திரும்பிக் கொண்டாள். எவ்வளவு வேண்டுமானாலும் முறைத்து விட்டுப் போ, நான் இரண்டு மாதம் கழித்துப் பார்க்கிறேன், அதுவும் கண்களையும் நெற்றியையும் தான் பார்க்க முடிகிறது. அப்படித்தான் பார்ப்பேன் என்று நினைத்தவாறு வைத்த கண்களை எடுக்காமல் பார்கவியையே பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராஃபர் கூட ஒன்றும் சொல்லவில்லை, அஜய் தான் அவன் அருகில் நின்று அனைவரையும் இங்கே பாருங்க, அங்கே பாருங்க என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
"தமிழ் அண்ணே! இந்த பக்கம் பாருங்க.. நேரா இந்த லைட்டைப் பாருங்க" என்று அவன் ஒரு முறை கூற, "ஒழுங்கா மாப்பிள்ளை பொண்ணை எடுடா.. உதை படுவ!" என்று சைகையில் கூறினான் தமிழ். பார்கவிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அதை அடக்கும் விதமாகத் தன் அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுப்பது போல் மணமக்களை நோக்கி உயர்த்தினாள். கேமரா வழியே அவளும் ஜும் செய்து தன்னைத் தான் பார்க்கிறான் என்று உணராத தமிழ்ச்செல்வன், அஜய்க்கும் பார்கவிக்கும் நடுவில் விழிகளைத் திருப்பியவாறு இருந்தான். அப்போது பார்த்து ஊர் பெரியவர்கள் சிலர் வந்து சேர, "வாங்க!" என்று கற்பகம் வரவேற்றாள். வந்தவர்களை வரவேற்கும் விதமாகத் தன்னுடைய மாஸ்க்கை ஒரு நொடி கீழே இறக்கி வணக்கம் போட்டான் தமிழ்ச்செல்வன். அப்படியே கீழே இறங்கிய தமிழ்ச்செல்வன் அவர்களை முன்புறம் இருந்த நாற்காலிகளில் அமர வைத்துவிட்டு அஜய்யின் அருகில் நின்று கொண்டான்.
"கெட்டி மேளம், கெட்டி மேளம்!" என்ற குரல் ஒலிக்க, கீழிருந்தே அட்சதை தூவினான். அவனுக்கு இடது புறமாக வெகு அருகில்தான் பார்கவி அமர்ந்திருந்தாள். முன்புறம் இருந்து அவளைப் பார்ப்பதை விட இப்படி பக்கவாட்டில் இருந்து பார்ப்பது வெகு சுவாரசியமாக இருந்தது. பார்கவிக்குத்தான் தனியாக அமர்ந்திருப்பது என்னவோ போலிருந்தது. தம்பியைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சற்றுத் தாமதமாகவாவது வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் கால் மாற்றிக் கால் போட்டு உட்கார்ந்தாள்.
திருமணம் முடிந்து முக்கியமான விருந்தினர்கள் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றவுடன் சுமித்ரா பார்கவியை கைகாட்டி மேலே வருமாறு அழைத்தாள். 'அப்பாடி!' என்று நினைத்து மேலே போனவளுக்குத் தெரியவில்லை, கீழே இருந்ததே பரவாயில்லை என்று. அவள் மேடைமேல் நின்றிருக்க இவன் பார்த்தவிழி பார்த்தபடி பூத்து நின்றதை சுமியும் பார்கவியும் மட்டுமே அறிந்தார்கள். இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் கொஞ்ச நேரம் தொடர, மேடையில் விருந்தினர் வருகைகொஞ்சம் குறைந்திருந்தது.
"யக்கோவ்! கண்ணு நெறஞ்சு போன மாதிரி இருக்கு" என்றாள் சுமி பார்கவியிடம்.
"யாருக்கு?" என்று பார்கவி கேட்க,
"யாருக்கோ.." என்றாள் தமிழ்ச்செல்வன் பக்கம் பார்வையைத் திருப்பி.
"அடியேய்! உனக்கு தான் டி கல்யாணம். இந்நேரம் நாங்க உன்னைக் கிண்டல் பண்ணனும்.."
"பண்ண மாட்டேன்ங்கிறீங்களே.. அதான் நானும் வெயிட் பண்றேன். ஒருத்தரும் என்னைக் கிண்டல் பண்ற மாதிரித் தெரியல.." என்றவள், பின்புறம் இருந்த பார்கவியை, "பக்கத்துல வாங்க!" என்று முன்னே இழுத்து, "அஜய்! பார்கவி அக்கா என் கூட நிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கணும்" என்றாள்.
'அடடா! மாஸ்க் போட்டுட்டுத் தான் இருக்கணும்னு ரூல்ஸ் போட்டேனே.. அது எனக்கே ஆப்பாயிடுச்சே! இல்லேன்னா இப்பவாவது அவ முகத்தைப் பார்த்திருக்கலாமே' என்று நினைத்தான் தமிழ்ச்செல்வன்.
சுமித்ரா சட்டென்று பார்கவியின் மாஸ்க்கைக் கீழே இறக்கிவிட்டு,
"என்னோட ஒரே கெஸ்ட்டு.. நல்லா எடுக்கச் சொல்லு அஜய்! சிரிச்ச மாதிரி நில்லுங்க பார்கவி அக்கா" என்றாள்.
'உனக்குக் கோயில் தான் கட்டணும் சுமி!' என்று மனதில் நினைத்த தமிழ்ச்செல்வன் தன் கண்களில் மட்டும் பார்கவியின் முகத்தை சேமிக்காமல் தன் அலைபேசியிலும் அவசரமாக சேமித்துக் கொண்டான். சாதாரண கோயில் பத்தாது, பெரிய கோபுரமாக வைத்துக் கட்டு என்று சொல்வதைப் போல சுமி அடுத்தபடியாக, "பெரியம்மா! அன்பு அண்ணே, வாங்க.." என்றாள். கூடவே, "தமிழ் அண்ணே! நீங்களும் வாங்க" என்று கூப்பிட, வானில் பறக்காத குறை தமிழ்ச்செல்வனுக்கு. தன் ஃபோனை அஜய்யிடம் கொடுத்து, "டேய் இதுல ரெண்டு போட்டோ எடு" என்று கூறிவிட்டு மேடைக்கு ஏறினான். தன்னிச்சையாய் அவன் கைகளும் அவனது மாஸ்க்கை இறக்கிவிட நல்லவேளையாக அஜய் கவனிக்கவில்லை.
"பெரியம்மா, இங்க வாங்க! இதுதான் பார்கவி அக்கா. நான் அடிக்கடி சொல்வேன்ல? ரொம்ப நல்லவங்க. நீங்க அக்கா பக்கத்துல நில்லுங்க" என்று தன் அருகில் பார்கவியையும் அதற்கடுத்து கற்பகத்தையும் நிறுத்தினாள். விஸ்வநாதன் அருகில் தமிழ் அதற்கடுத்து அன்புச்செல்வன் நின்று கொண்டான். 'இந்தப் பொண்ணு அறிவின் சிகரம் தான்' என்று மெச்சிக் கொண்டான் தமிழ்.
'இந்தப் பிள்ளை கிட்ட தமிழ் ஏதோ சொல்லிருக்கான் போல. அதான் லூசு ஓவராக்ட் பண்ணுது. வரட்டும், என் கிட்ட தனியா மாட்டுவாங்க இல்ல ரெண்டு பேரும்? அப்ப பேசிக்கிறேன்' என்று நினைத்தபடி நெளிந்துகொண்டே நின்றாள் பார்கவி. அந்த புகைப்படம் எடுக்கும் படலம் முடியவும் சமையல் உதவி செய்யும் கண்ணம்மா நான்கு தம்ளர்களில் பாயசத்தோடு வந்தார். "பொண்ணு மாப்பிள்ளை காலையிலருந்து எதுவும் சாப்பிடலையே.. பாயசம் ரெடி ஆயிடுச்சு.. அதக் குடிங்க" என்றார். பார்கவி தான் பரிசாகக் கொண்டு வந்திருந்த வெள்ளி விளக்கை சுமித்ராவிடம் கொடுத்துவிட்டு, "ரேணுகா வெயிட் பண்ணிட்டு இருப்பா. நான் கிளம்புறேன். ஆல் த பெஸ்ட்!" என்றாள்.
"ஏம்மா சாப்பிட்டுட்டு போயேன்.." என்று கற்பகம் கூற,
"இல்லம்மா என் பெஸ்ட் பிரெண்ட்க்கு நிச்சயதார்த்தம். சாப்பாட்டுக்கு அங்க வர்றதா சொல்லி இருக்கேன்" என்றாள் பார்கவி.
"எந்த ஊரு?"
"மலையடிப்பட்டி"
"சரி இந்தா.. நீயும் ஒரு டம்ளர் பாயாசமாவது குடிச்சுட்டுப் போ!" என்றபடி அவளுக்கும் ஒரு டம்ளர் பாயாசத்தை எடுத்துக் கொடுத்தார் கற்பகம். அதை வாங்கிப் பருகி முடித்தவள், "ஆட்டோ எதுவும் கிடைக்குமாம்மா இங்க?" என்றாள்.
"தமிழ்! நம்ம ஆட்டோவே இருக்கே.. யாரையாவது கொண்டு போய் விடச் சொல்லலாமே?" என்றான் விஸ்வநாதன். மனைவியின் முக்கிய விருந்தினர், தங்கள் திருமணத்திற்கான முக்கிய காரணிகளில் ஒருத்தி, என்ற மரியாதையுடன்.
"தமிழ், நீயே மலையடிப்பட்டில இவங்களை இறக்கி விட்டுட்டு அப்படியே ரைஸ்மில்லுல மூணு மூட்டை அரிசி ரெடியா இருக்கும்.. ஏத்திட்டு வந்துருடா.." என்றான் அன்புச்செல்வன்.
"ஓ! நாளைக்குப் போடுறதுக்கு அரிசி இல்லல்ல.. சரிண்ணே.." என்றான் தமிழ்ச்செல்வன் அவசரமாக.
பார்கவியும் வேறு வழியில்லாமல் "கிளம்புறேன்மா, சுமி வரேன்" என்று கற்பகம் மற்றும் சுமித்ராவின் விடை பெற்றவள், விஸ்வநாதன் மற்றும் அன்புச்செல்வனிடமும் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டு தமிழ்ச்செல்வனின் பின் நடந்தாள்.
யார் மனதும் மாறிவிடும் முன் செயலாற்ற வேண்டும் என்று நினைத்த தமிழ் ஆட்டோவை எடுத்து முன்னால் கொண்டு வர, பார்கவியும் ஏறிக்கொண்டாள். ஊர் எல்லை தாண்டும் வரை இருவரும் பேசவில்லை. தமிழுக்கு முந்தைய தினம் அஷோக்குடன் பேசியவை நெஞ்சில் நிழலாடின. பல நாட்களுக்குப் பிறகு அவனிடம் மனம் விட்டுப் பேசியிருந்தான். பார்கவியின் மேல் தனக்கு இருந்த ஈர்ப்பு அதிகரித்து காதல் என்ற பரிமாணத்தை அடைந்துவிட்டதை அஷோக்கிடம் ஓத்துக்கொண்டிருந்தான். மறுநாள் பார்கவியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றும் அவனிடம் தமிழ்ச்செல்வன் புலம்ப, "நிறைய படம் பார்த்துருப்பியேடா.. அதுல உள்ள சீன் எல்லாம் யோசிச்சுப் பாரு.. வேணா யூடியூப்ல லவ் ப்ரொபோஸ் பண்ற சீன்ஸ்னு ஸர்ச் பண்ணு" என்று அஷோக் கூறியிருந்தான்.
"நீதானேடா என்னைக் காதல் படமெல்லாம் பார்க்காதேன்னு சொன்ன?"
"ஆமா! இவரு பெரிய நியாயவாதி. நண்பன் போட்ட கோட்டைத் தாண்ட மாட்டாரு. அம்பது வருஷம் முன்னால வந்த படமாவது பாத்திருக்கியாடா.. அதுல கூட உன்னை விட ஃபாஸ்டா இருப்பாங்க"
"படுத்தாம ஐடியா சொல்லுடா!"
"ஐடியாவா? எங்க அக்கா நிறைய காதல் கதை படிக்கும். என் லேப்டாப்லயும் நிறைய சேவ் பண்ணி வச்சிருக்கு. அதுல சில பக்கங்களை மார்க் பண்ணி வேற வச்சிருக்கும். அதை உனக்கு அனுப்பி வைக்கிறேன். படிச்சுப் பாரு. இதுக்கு மேல நீ தான்டா முயற்சி பண்ணனும். நீ.. பொறுப்பான குடிமகன், பொது நல விரும்பி அப்படிங்கிற சட்டைய எல்லாம் கழட்டிட்டு…"
எதுவோ யோசித்துக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், "என்ன சட்டையைக் கழட்டவா?" என்றான் அதிர்ச்சியாக.
"அடச்சீ! தப்பாப் பேசாத. நல்லவன்கிற முகமூடியைக் கழட்டிட்டு ரொமாண்டிக் ஹீரோ முகத்திரையை மாட்டிக்கோ.. சரியாடா" என்றிருந்தான். தமிழ்ச்செல்வன் அவன் அனுப்பிய சில பக்கங்களைப் படிக்க அதில் ஒன்றிரண்டு மனதில் பதிந்திருந்தன.
இரண்டு கதைகளில் இப்படித்தான் ஹீரோவும் ஹீரோயினும் காரில் செல்வார்கள். இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவும். ஹீரோ ஹீரோயினை அடிக்கடிப் பார்ப்பான். ஹீரோயின் முறைப்பாள். சட்டென்று ஹீரோ ஆளரவமற்ற, மரங்களடர்ந்த சாலையில் காரை நிறுத்துவான். ஹீரோயினால் கார் கதவைத் திறக்க முடியாத அளவு சென்டர் லாக் போடுவான்.
இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சூழல். ஆனால் ஆளரவமற்ற பொட்டல்காடு. நிறுத்தினால் எதிரே வரும் டிராக்டர் காரன் திட்டுவான். ஆட்டோவில் கதவே கிடையாது. நான்கு கம்பிகள் கொண்ட சிறிய தட்டி தான். நிறுத்தினால் பார்கவி குதித்து இறங்கி விடுவாள். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால் கூட கோபித்துக்கொள்வாளோ என்று தயக்கமாக இருந்தது. ரோட்டின் சற்று முன்பாக இடதுபுறம் ஒரு சிறிய கோவில் இருந்தது. 'இது என்ன சாமி? இசக்கியம்மனா, அய்யனாரா? ஏதோ ஒன்று.. யாராக இருந்தாலும் கொஞ்சம் உதவுங்க சாமி.. நண்பர்கள் போட்டுக் குடுத்திருந்த ரூட்டில் குறைந்தபட்சம் சைக்கிளாவது விட வேண்டாமா?' என்று தமிழ்ச்செல்வன் வேண்டிக் கொண்டிருக்கையில்,
"கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்துறீங்களா?" என்றாள் பார்கவி. சட்டென்று பிரேக்கை அழுத்தினான். தான் கேட்டது நிஜம்தானா என்பதுபோலத் திரும்பிப் பார்த்தான் பார்கவியை. இப்போது அவள் முகக்கவசத்தைக் கழற்றியிருந்தாள். "இந்தக் கோயிலுக்குப் போறேன்" என்றாள் மொட்டையாக.
அதன்பின் இறங்கிச் சென்று கோயிலின் முன் கண்மூடி, கைகூப்பி நின்றாள். அவள் முக பாவனையில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை தமிழ்ச்செல்வனால். குழந்தை போன்ற முகம், ஆனால் அழுத்தக்காரி பிடிவாதக்காரி என்று சொல்லக் கூடிய அளவு பாவனைகள், ஏறு நெற்றியும் கண்களில் தீர்க்கமும் இவள் படிப்பாளியாக்கும் என்று கூறின.
முதல்கட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். சாமி கும்பிட்டு விட்டுப் பர்ஸைத் திறந்து ஏதோ தேடியவள் அவனிடம் திரும்பி, "சில்லறை இருக்கா?" என்று கேட்டாள். சட்டைப்பையிலிருந்து கையில் அகப்பட்ட ஐந்து ரூபாய், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க் காசுகளை மொத்தமாக அவள் முன் நீட்ட, அதில் ஒரு நாணயத்தை மட்டும் எடுத்துச் சென்று உண்டியலில் போட்டாள். உண்டியல் மேல் வைக்கப்பட்டிருந்த விபூதிக் கிண்ணத்திலிருந்து சிறிது விபூதியை நெற்றியில் கீற்றாக வைத்துக்கொண்டு கொஞ்சத்தை எடுத்து தமிழ்ச்செல்வனிடமும் நீட்டினாள். வண்டியை நிறுத்தச் சொன்னதற்கு அடுத்ததாக பார்கவி காசு கேட்ட அதிர்ச்சியில் மூழ்கியிருந்த தமிழ்ச்செல்வன் விபூதியை வாங்காமல் ஒரு கணம் தாமதிக்க, "ஓ! கடவுள் நம்பிக்கை கிடையாதா" என்றபடி அதையும் தன் நெற்றியிலேயே பூசிக்கொண்டு கையைத் தட்டி விட்டுக் கொண்டாள். அதன்பின் ஆட்டோவில் ஏறியவள், "போகலாமா?" என்றாள்.
ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணிய தமிழ், "என்ன வேண்டிக்கிட்டீங்க?" என்றான்.
"சீக்கிரம் வேற நல்ல வேலை கிடைக்கணும்னு தான்"
"ஏன்? இந்த வேலை என்னாச்சு?"
"கம்பெனி டவுனா இருக்குதாம்.. எங்களை மாதிரி ஃபிரெஷ் ரெக்ரூட்டீஸை லே- ஆஃப் பண்ணிடுவாங்கன்னு பேச்சு அடிபடுது"
"ஓ!" என்றான் தமிழ்ச்செல்வன்.
'இப்போது என்ன சொல்வது, தனக்குத் தெரிந்த கம்பெனிகள் பெயரைச் சொல்லலாமா? ஃப்ரீலான்சராக எதுவும் பணிபுரிய சஜஸ்ட் செய்யலாமா? எது சொன்னால் சரியாக இருக்கும்' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
"ஏன் தமிழ்? உங்க கம்பெனில ஓபனிங் இருக்குன்னு சொன்னீங்களே? ரெகமெண்ட் பண்ண மாட்டீங்களா?" என்றாள்.
"தாராளமா பண்றேன்.." என்று தமிழ்ச்செல்வன் கூற,
"கேட்டாத் தான் சொல்லுவீங்களோ.. நீங்களா சொல்ல மாட்டீங்களோ.." என்றாள்.
இப்போது தைரியமாகத் தலையைத் திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான் தமிழ்ச்செல்வன், கோபமாகப் பேசுகிறாளோ என்று. முகத்தில் கோபம் எல்லாம் தெரியவில்லை.
"என்ன பதிலையே காணோம்?"என்று பார்கவி கேட்க,
"அதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. என்ன ஐடியா சொல்லலாம்னு.."
"நல்லா யோசிச்சீங்க போங்க.. நீங்க யோசிச்சு சொல்றதுக்குள்ள.. விடிஞ்சுடும்" என்று பார்கவி நக்கலாகக் கூற, சரி இவள் வழியிலேயே போக வேண்டியதுதான் என்று நினைத்தவன் ஆட்டோவை வலதுபுறமாகப் பிரிந்த சாலையில் சட்டென்று திருப்பினான்.
"ஏங்க! மலையடிப்பட்டிக்கு நேரால்ல போகணும்?" என்று பார்கவி பதடட்த்துடன் கேட்க, வேகத்தைக் கூட்டினான் தமிழ்ச்செல்வன்.
"எங்க போறீங்க தமிழ்? தமிழ் சார்! நேராப் போகணும்" என்று பார்கவி கூற, அப்போது ஒரு சிற்றூரைக் கடந்தது ஆட்டோ. அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த பெருசுகளும் பள்ளி இல்லாத காரணத்தால், செம்பட்டைத் தலையுடன் வெயிலில் விளையாடிய பொடிசுகளும் கண்ணை விட்டு மறையும் வரை ஆட்டோவைத் திரும்பிப் பார்த்தார்கள்.
"வண்டியைத் திருப்புங்க.. இல்லன்னா கத்திடுவேன்"
"இல்லை.. திருப்ப மாட்டேன்" என்றான் தமிழ்.
"அப்ப நான் கத்துவேன்"
"கத்த மாட்டீங்க"
"ஏன் கத்த மாட்டேன்? அதெல்லாம் நல்லா கத்துவேன். பாக்குறீங்களா?" என்றாள்.
இன்னுமொரு உள்ளடங்கிய சாலையில் ஆட்டோவைத் திருப்பி அங்கிருந்த சிறு குன்றின் அருகில் நிறுத்தினான். "கத்துறதா இருந்தா அந்த ஊர் வந்துச்சே, நிறைய மக்கள் இருந்தாங்களே, அப்பவே கத்தியிருப்பீங்க.. அப்பல்லாம் பேசாம வந்துட்டு ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல வந்துட்டு கத்துவேன், கத்துவேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்னை மாட்டிவிட இஷ்டமில்லைன்னு தானே அர்த்தம்?" என்று சொன்னவாறு முன்னிருந்து பின்னால் வந்து ஆட்டோவின் பின்சீட் கம்பிக் கதவின் மேல் கையை வைத்தான் தமிழ்ச்செல்வன். முன் மதிய வெயில் அவன் நெற்றியில் இருந்த வேர்வையில் பட்டுத் தெரித்தது மடித்து கட்டிய வெள்ளை வேஷ்டி, அரக்கு நிறச் சட்டையில் பார்க்க நன்றாகவே இருந்தான். அவனை ரசித்தாலும் சற்றுப் பின்னால் சாய்ந்தாள் பார்கவி. அவளது நகர்தலைக் கண்டு கொள்ளாதவாறு காட்டிக் கொண்டு அந்த சிறிய கதவைத் திறந்து விட்டவன், "இங்கே ஒரு சின்ன குடவரைக் கோயில் இருக்கு. சக்திவாய்ந்த சாமின்னு சொல்லுவாங்க. போய் வேண்டிட்டு வாங்க" என்றான். அவளது வாய் திடீரென மௌனமாகிப்போக, தயக்கத்துடன் இறங்கினாள் பார்கவி.
வழிவிட்டும் விடாமலும் சற்றே ஒதுங்கி நின்றான் தமிழ்ச்செல்வன். குனிந்த தலை நிமிராமல் அவன் காட்டிய திசையில் கைப்பையை இறுக்கப் பிடித்தவாறே நடந்தாள் பார்கவி. தன்னையும் உடன் வரச்சொல்லிக் கூப்பிடுவாள் என்று எதிர்பார்த்து தமிழ் சற்று நேரம் நின்றான். கூப்பிட மாட்டாள் என்று தோன்றியவுடன் அங்கேயே ஒரு கல்லில் அமர்ந்து விட்டான். ஒரு குச்சியை எடுத்து மண்ணில் பார்கவி, தமிழ், P, T என்று மாற்றி மாற்றிக் கிறுக்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை பார்கவி வரும் ஓசை கேட்டது. இப்போதும் விபூதி கொண்டு வருவாளா, கொண்டு வந்தால் அவளுக்கும் வைத்து விட்டு, தானும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பார்கவியின் முகம் இப்போது தெளிவாக இருந்தது. மீண்டும் உதட்டில் ஒரு குறும்பு சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டிருந்தது போல் தெரிந்தது. அவள் வந்ததைக் கவனிக்காதவன் போல மீண்டும் குனிந்து தரையில் குச்சியால் கோலம் போடுவதைத் தொடர்ந்தான்.
"அப்போ சாமி தான் வேலை வாங்கித் தரணும், நீங்க ஹெல்ப் பண்ண மாட்டீங்க?" என்றாள்.
"வாங்கித் தாடான்னு சொல்லுங்க.. நாளைக்கே ஆர்டர் வரும்"
"அதெல்லாம் சும்மா.. கதை விடாதீங்க* என்றாள் எங்கோ பார்த்தவாறு.
"ஏன்மா ஏன் உனக்கு டவுட்? இப்பவே வேணா எங்க ஹெச்.ஆர். கிட்ட பேசவா? வேற ரெண்டு கம்பெனியோட ஆட் கூட எனக்கு மெயில்ல வந்திருக்கு. நீ கேட்டா குடுக்கலாம்னு சேவ் பண்ணி வச்சிருக்கேன்" என்றபடி பாக்கெட்டில் தன் மொபைலை தேடினான். அழைப்பு 'நீ' என்று மாறியிருந்தது. அதை இருவருமே கவனிக்கவில்லை.
"அச்சோ மொபைல வீட்டுலேயே விட்டுட்டேனே" என்று அவன் கூற,
"பாத்தீங்களா பாத்தீங்களா.. நல்லா சாக்குபோக்கு சொல்றீங்க" என்றாள் பார்கவி.
"நிஜம்மா.. வேணும்னு உன் மொபைல்ல இருந்து என் மொபைலுக்குக் கால் பண்ணு. ஃபோட்டோ எடுக்குறதுக்காக நம்ம அஜய் இருக்கானே, அவன் கையில குடுத்திருந்தேன்.."
"ஏமாத்தாதீங்க" என்றபடி அவன் சொன்னபடியே அவனது எண்ணுக்கு டயல் செய்தாள் பார்கவி. அஜய் எடுத்து ஹலோ என்றவுடன் தன் அலைபேசியை அவனிடம் நீட்டினாள் பார்கவி.
"நான் தமிழ் அண்ணன் தான்டா பேசுறேன்.. இப்ப ஒரு மெயில் ஐடி அனுப்புறேன், இந்த நம்பர்ல இருந்து.. என் செல்லுல ஜிமெயில் ஓபன் பண்ணி 'டூ பார்கவி'னு ஜாப் சம்பந்தமா ரெண்டு மூணு ஃபைல் சேவ் ஆகி இருக்கும். அதை ஃபார்வேர்ட் பண்ணு. இதெல்லாம் பண்ணத் தெரியும்ல டா?"
"அதெல்லாம் நல்லாத் தெரியும். ஃபோனை வைங்க.. கல்யாண வீட்டு வேலை தலை மேல இருக்கு.. இதுவா முக்கியம்?" என்றான் அஜய்.
"நீ வெட்டி முறிக்கிறது எல்லாம் தெரியும். இது முக்கியம் தான். சீக்கிரம் அனுப்பு" என்றபடி காலைக் கட் செய்தான். "மெயில் ஐடி சொல்லுங்க, என் நம்பருக்கு வாட்ஸ்அப் அனுப்புறேன்" என்றபடி மீண்டும் பார்கவியின் மொபைலைத் திறக்கப் பார்க்க அது லாக் ஆகிவிட்டதைக் காட்டியது.
"குடுங்க உங்க நம்பருக்கு தானே அனுப்பணும்? நானே அனுப்புறேன்" என்று மொபைலுக்குக் கையை நீட்டினாள் பார்கவி. "சொல்லுங்க, நானே அனுப்புறேன்" என்று தமிழ் மொபைலைக் கொடுக்காமல் இருக்கவும், கையை எட்டி அதைச் சட்டென்று பிடுங்கியவள் ஆட்டோவில் ஏறினாள்.
அந்தச் சிறிய கைகலப்பில் மீண்டுமாய் அதிர்ந்த தமிழ், அப்படியே நின்றிருந்தான். "போலாம்" என்று பார்கவியின் குரல் கேட்க, 'போடா!
திரும்பி அவ கையைப் புடி! கண்ணைப் பாரு, எதையாவது உளறி வை! மறுபடியும் இப்படி சான்ஸ் கிடைக்காது' என்று அவனை உந்தித் தள்ளியது மனசாட்சி.