அத்தியாயம் 5
தமிழ்ச்செல்வனும் நாகராஜனும் பயணித்த கார் கோவையை நெருங்கியிருக்க, சற்று சுறுசுறுப்பாகி விட்ட நாகராஜன், "குடுங்க தம்பி.. நான் ஓட்டுறேன்" என்று கேட்டு வாங்கி, வாகனத்தை ஓட்ட ஆரம்பித்திருந்தார். மருத்துவமனை வாசலில் இறங்கியதும் தமிழ்ச்செல்வன் பணம் கொடுக்க எவ்வளவோ முயன்றும் நாகராஜன் வாங்கவே இல்லை. உண்மையில் தமிழ்ச்செல்வனிடம் கொஞ்சம் பணம் தான் இருந்தது.
"அண்ணே! ஏடிஎம்ல நிறுத்துங்களேன்" என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
"தம்பி! அங்கெல்லாம் போகக்கூடாது. நீங்க எதுக்கு ஏடிஎம்முக்குப் போக நினைக்கறீங்கன்னு தெரியும்.. போனா கொரோனா பாம்பு கொத்திடும்" என்றார்.
"ஹா ஹா! அண்ணே, சிரிக்காம காமெடி பண்றீங்களே.."
"என்னங்க தம்பி! அப்ப கொரோனா பாம்பு இல்லைங்களா?" அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.
"தெரிஞ்சு சொல்றீங்களா, தெரியாம சொல்றீங்களான்னு தெரியல.."
"தெரியலையா.. ஓகே! அதை யோசிச்சுக்கிட்டே இறங்குங்க பாப்போம்... இந்தா பெரிய ஆஸ்பத்திரி வந்துருச்சு" என்றபடியே வண்டியை நிறுத்தினார். பிரியங்காவை அரசு பொது மருத்துவமனையில் தான் சேர்த்திருந்தார்கள். தமிழ்ச்செல்வனின் நண்பன் அஷோக் அவனை எதிர்பார்த்து ரத்த வங்கியின் வாசலில் காத்திருந்தான்.
"அதோ அந்த பில்டிங் தான். கட்டம் போட்ட சட்டை ஒருத்தன் நிற்கிறானே.. அங்க நிறுத்துங்க" என்று வண்டியை நிறுத்தச் செய்து இறங்கிக் கொண்டவன்,
"கடைசியில காசு வாங்கிக்கவே மாட்டேன்னு நின்னுட்டீங்களே" எனவும்,
"கடைசிவரை இந்தப் பேச்சை நிறுத்தாம நீங்களும் பேசிக்கிட்டே வந்துட்டீங்களே தம்பி!' என்றபடியே வண்டியைத் திருப்பினார் நாகராஜன்.
"பாப்போம் ணே!" என்று விடை கொடுத்தான் தமிழ்ச்செல்வன்.
"வாடா தமிழ்.. ஜெபாக்கா குடுத்து விட்ருக்காங்க.. ஆப்பம்.. சாப்பிட்டுட்டு வாடா" என்றபடி ஒரு உணவுப் பையை நீட்டினான் அஷோக்.
"வழியிலயே சாப்பிட்டுட்டேன்டா.. இந்த அக்கா குழந்தையை மட்டும் பாக்கலாம்ல.. இதை வேற செஞ்சு குடுத்துவிட்டுருக்காங்களா.. இவங்களோட ஒரே அன்புத் தொல்லை டா"
"அக்கா எப்பயும் செய்றது தானேடா.." இருவரும் ரத்த வங்கியை அடைய,
"வாங்க பாம்பே.. ஏபி காலையிலேயே வந்துட்டாரே.. நீங்க இப்ப தான் ஊர்ல இருந்து வரீங்களா?" என்றார் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான செவிலியர் சாவித்திரி.
சில குருதிக் கொடையாளர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் ரத்ததானம் செய்து விடுவார்கள். அத்தகைய ரெகுலர் டோனர் பெயரும் ரத்தவகையும் ரத்த வங்கியில் உள்ள செவிலியர்களுக்கு நன்றாகத் தெரியும். சாவித்திரி இருபது வருடங்களாக அங்கேயே பணிபுரிபவர். தமிழ்ச்செல்வன் பாம்பே குரூப் என்பதால் அவரை பாம்பே என்றும் அசோக் ஏபி குரூப் என்பதால் ஏபி என்றும் பாசமாகக் கூப்பிடுவார்.
"கீ ஸிஸ்டர்! இந்த A1, A2 ப்ளட் க்ரூப். இதெல்லாம் எப்படிக் கூப்பிடுவீங்க? மதராசப்பட்டினம் படத்துல வர்ற மாதிரி எ, ஏ, பி, பீ அப்படிக் கூப்பிடுவீங்களோ?" என்றான் அஷோக். அவரது பெயர் சாவித்திரி என்பதால் சாவியை 'கீ'யாக்கி கீ சிஸ்டர் என்பான்.
"ஹா ஹா! இது நல்லா இருக்கே.. அப்ப நெகட்டிவ் க்ரூப்ப எப்படிக் கூப்பிடுறது நீங்களே சொல்லுங்களேன்.." என்றார் சிஸ்டர். "ஆமா, உங்க ஃபிரண்டு டெங்கு எப்படி இருக்காப்ல?" என்று கேட்டுக்கொண்டே தமிழ்ச்செல்வனை அமரவைத்து, அவனுக்கு மேற்கொள்ள வேண்டிய ஆரம்பகட்ட சோதனைகளில் ஈடுபட்டார்.
ஆனந்த் என்ற இவர்களுடைய நண்பன் டெங்கு வந்து அவதிப்பட்டான். அப்படியும் மூன்றே மாதத்தில் ரத்தம் கொடுத்தே தீருவேன் என்று வந்து நின்றான். டெங்கு வந்ததிலிருந்து ஆறு மாசத்துக்கு ரத்ததானம் வழங்கக்கூடாது என்று மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. அவனை சமாதானப்படுத்தி அனுப்புவதற்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. அவனை 'டெங்கு' என்று தான் சாவித்திரி சிஸ்டர் கூப்பிடுவார்.
தன்னுடைய பிறந்த நாள், திருமணநாள் பெற்றோரின் பிறந்தநாள் என்று தவறாமல் வந்து ரத்ததானம் வழங்குபவர்கள் பலர். அனுமதிக்கப்பட்ட மூன்றாவது மாதம் நிரம்பிய உடனேயே வந்துவிடும் நபர்களும் உண்டு. இவர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் இயல்பாகவே ஒரு இனிமையான உறவு ஏற்பட்டு விடும்.
"அவனுக்கு என்ன, நல்லா இருக்கான்.. ஊருக்குப் போயிருக்கான்.. கடைசியா டொனேட் பண்ணி மூணு மாசம் ஆயிடுச்சு.. எங்க ஊர்ல குடுத்துக்கிறேன்னு சொல்லி இருக்கான்" என்றான் அஷோக்.
"சரிங்க சிஸ்டர்... எல்லாரையும் பேர் வச்சுக் கூப்பிடுறீங்களே.. உங்க ஃப்ரெண்ட் பலமுக மன்னனை எப்படிக் கூப்பிடுவீங்க?" என்றான் தமிழ்ச்செல்வன்.
"அவனைப் போய் நான் ஏன் கூப்பிடப் போறேன்.. அவனைக் கண்டாலே ஓடிடுவேன்" என்றார் சிஸ்டர் சிரித்தபடியே. சந்திக்கும் அனைவரிடமும் நன்றாகப் பழகி விடுவார் சாவித்திரி. இருந்தாலும் அஷோக்கும் தமிழ்ச்செல்வனும் அவருக்குக் கூடக்கொஞ்சம் பிடிக்கும்.
சுற்றிலும் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்களா, கெட்டதும் ஆங்காங்கே நடக்கும் தானே? கொஞ்ச வருடங்கள் முன்பு வரை இளைஞர்கள் தானாகவே முன் முன்வந்து ரத்தத்தை தானமாக அளிப்பது மிகவும் குறைவு. 'ப்ரொஃபஷனல் டோனர்' எனப்படும் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களே அதிகம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வந்து ரத்தத்தைக் கொடுத்துவிட்டு போவார்கள். கிடைப்பதற்கரிய குரூப் என்றால் விலை இன்னும் அதிகரிக்கும். அதற்காகவே புரோக்கர்கள் மருத்துவமனை வளாகங்களில் சுற்றித் திரிவதுண்டு. யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும் போது அவர்கள் ப்ரொஃபஷனல் டோனார்களை அழைத்து வருவார்கள். இப்படிக் காசுக்காகத் தன் ரத்தத்தை விற்பவர்கள் பெரும்பாலும் கெட்டப் பழக்கவழக்கங்கள் நிறைந்தவராக இருப்பது வழக்கம். புகை, மது, பெண்கள், கஞ்சா இப்படி... அதனால் அவர்கள் மூலம் எச்ஐவி போன்ற நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகம். அதுமட்டுமன்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் இரத்தம் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி அடிக்கடி விற்றுக் கொண்டிருப்பார்கள். அனுபவசாலி மருத்துவர்களும், செவிலியர்களும் இப்படிப்பட்டவர்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அப்படி சாவித்திரி சிஸ்டர் கண்டுபிடித்துத் துரத்தி விட்ட ஒரு புரொஃபஷனல் டோனர் தான் நல்லசிவம். திடீரென்று நல்லவன் போல் பேசுவான், திடீரென்று அரசியல்வாதி போல் வேஷம் போட்டுக் கொண்டு வருவான், அவ்வப்பொழுது மதுபோதையில் ரவுடி மாதிரி சலம்புவான், அதனால் அவனுக்கு, 'பல முகமன்னன்' என்று பட்டப் பெயர்.
ஆரம்பத்தில் ஒரு பணக் கஷ்டத்திற்காகத் தன் ரத்தத்தை விற்க வந்தவன், பின்பு அதையே தொழிலாக்கிக் கொண்டான். ஒரே மருத்துவமனைக்கு அடிக்கடிப் போனால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று வேறு வேறு மருத்துவமனைகளுக்கு பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செல்வான். அவனுடையதும் கிடைப்பதற்கரிய ரத்த வகை என்பதால் அவனுக்கு டிமாண்ட் அதிகம். இதில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டவன், அதற்கான புரோக்கராகவும் மாறிவிட்டான். அவனுக்குத் தெரிந்த பலரை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தியும் இருக்கிறான்.
ஒருமுறை இப்படி நல்லசிவம் அழைத்து வந்த ஒருவனை புதிய செவிலியர் ஒருவர் கிட்டத்தட்ட ஓகே செய்துவிட, சாவித்திரி சிஸ்டர் கடைசி நேரத்தில் வந்து தடுத்து விட்டார். அதனால் நல்லசிவம் அவரிடம் பிரச்சனை செய்ய ஆரம்பித்தான். தெருவில் நின்று 'ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரி' என்று கத்துவது, போக வர தொல்லை செய்வது, துறை ரீதியாக பொய்ப் புகார் கொடுப்பது என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான் எதேச்சையாக ஒரு முறை அவன் ஒருவருக்குக் காசு கொடுத்து அழைத்து வந்ததை அஷோக் வீடியோ எடுத்து விட, அதை வைத்து புகார் கொடுத்து அவனை முழுவதுமாகத் துரத்தி விட்டார்கள். அது முதல் ரத்த வங்கி ஊழியர்களிடம் இன்னும் நெருங்கி விட்டார்கள் அஷோக், தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களின் நண்பர்கள்.
பரிசோதனைகள் முடிந்து ரத்தம் சேகரிப்பதற்காகக் கவச உடை அணிந்து வந்தார் சாவித்திரி.
"என்ன சிஸ்! நீங்களும் பூச்சாண்டி டிரஸ் போட ஆரம்பிச்சாச்சா?"
"ஆமா ப்ரோ! நீங்க எல்லாம் தைரியமா ஹாஸ்பிடலுக்கு வந்துட்டீங்களே.. கொரோனா பயம் இல்லையா?"
"நாங்க எப்பயாவது தானே வர்றோம் சிஸ்.. ஜாக்கிரதையா இருந்துக் கிட்டாப் போச்சு.. நீங்க பாவம்.. தினசரி வரீங்களே.."
"மத்தவங்க எல்லாரும் ஹாஸ்பிடலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போற என்னைப் பாத்துக் கூட ரொம்ப பயப்படுறாங்க.. அப்பா! என் சர்வீஸ்ல இப்படி ஒரு வியாதியப் பாத்து ஒதுங்கி ஓடுறது.. இந்த ஒரு கிருமிக்குத் தான்" என்று வருத்தப்பட்டார்.
"இந்த உலகத்தில இருக்கிற ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிச்சிடுச்சுல்ல இந்த கொரோனா" தமிழ் சொல்ல,
"ஏற்கனவே கேன்ஸர் மாதிரி தொடர் ட்ரீட்மெண்ட் எடுக்க ஹாஸ்பிடலுக்கு வர்ற பேஷன்ட்ஸ் தான் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. அதுபோக நெஜமாவே உடம்புக்கு முடியலைன்னாக் கூட வர்றதுக்கு ரொம்ப தயங்குறாங்க.. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு"
"ஆமா சிஸ்டர்! பிரியங்காவுக்கும் இந்நேரம் சர்ஜரி முடிஞ்சிருக்க வேண்டியது.."
"ஆமால்ல? அந்தப் பொண்ணுக்கு ஆபரேஷனுக்காகக் கூட நீங்க ஏதோ டொனேஷன் கலெக்ட் பண்ணி வச்சுருந்தீங்கல்ல.. இப்ப ப்ளட் ஏத்த வேண்டிய டேட் தாண்டி ஒரு வாரம் ஆயிடுச்சு போல, அவங்க அம்மா இந்த ஒரு வாரத்துல பத்துப் பதினஞ்சு தடவை இங்கேயே அலஞ்சுருப்பாங்க. அவங்க வீட்ல உள்ளவங்க கொஞ்சமாவது சப்போர்ட் பண்ணலாம்"
"ரொம்பப் பாவம்.. குழந்தைக்கு இப்படி வியாதின்ன உடனே அவங்க கணவரும் பிரிஞ்சு போயிட்டார் போல. இப்படி ஆளுங்களப் பாக்கும்போது தான் வர வர மனித உறவுகள் மேல நம்பிக்கையே போயிடுது சிஸ்டர்"
"எல்லாக் காலத்திலேயும் நல்லவங்களும் உண்டு, கெட்டவங்களும் உண்டு. ஏன் இப்ப நீங்க இல்லையா? உறவா இல்லேன்னாலும் நெருங்கின சொந்தம் மாதிரி பெரிய மனசோட எத்தனை பேருக்கு ஹெல்ப் பண்றீங்க?"
"பெரிய மனசுன்னு ஒண்ணும் இல்ல சிஸ்டர். எங்க சுயநலமும் இருக்கு. எனக்கெல்லாம் என்ன எண்ணம்னா, என்னால முடியுற போது ஒரு ஆளுக்கு உதவி செஞ்சா, எனக்குத் தேவையான அப்ப வேற யாராவது கை குடுக்க மாட்டாங்களா அப்படிங்கிற எதிர்பார்ப்பு தான். இதோ இவனைப் பாருங்க.. இன்னைக்குப் பொழுதுக்கு யாருக்காவது உதவினா தான் இவனுக்கு நிம்மதி. இல்லேன்னா தூக்கமே வராது" என்று அங்கு அமர்ந்து தன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அஷோக்கைக் காட்டினான் தமிழ்ச்செல்வன். "அதுவும் ஒரு போதைதான் சிஸ்டர். உதவி செய்யும்போது எவ்வளவு மனநிறைவு வருது தெரியுமா? உங்க நல்லசிவம் சரக்கு அடிக்காமத் தூங்க மாட்டான் இல்ல? அதே மாதிரி தான்!"
"அவனை இழுக்காமப் பேச முடியாதே உங்களுக்கு? சரி ப்ரோ! கன்டினியூ யுவர் குட் ஒர்க்!" என்று சிஸ்டர் சொல்ல, ரத்த தானமும் முடிந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பின், "நீங்க ஜாக்கிரதையாயிருங்க சிஸ்டர். பாத்து கேர்ஃபுல்லா ஒர்க் பண்ணுங்க. பை!" என்று இருவரும் கூறிவிட்டு அறைக்குச் சென்றனர்.
"பிரியங்காவைப் போய்ப் பாக்கலாமா டா?" என்று தமிழ்ச்செல்வன் கூற, "அதெல்லாம் வேண்டாண்டா.. வீடியோ கால் போட்டுக்கலாம். பாப்பாக்கு இன்பெக்ஷன் எதுவும் வந்திரக் கூடாது. நீ எல்லாம் ஊர் ஊரா வேற சுத்திட்டு வந்துருக்கே" என்றபடி வீடியோ கால் போட்டான் அஷோக்.
பிரியங்காவின் தாய் ஜெபா அலைபேசியின் திரையில் தோன்றியவுடன், "ப்ளட் கொடுத்திட்டீங்க போல தமிழ்! தேங்க்ஸ் பா." என்க,
"அது இருக்கட்டும், உங்க ஆப்பம் தான் இன்னைக்கு லஞ்ச்சுக்கு. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான் தமிழ்செல்வன்.
"ஐயோ அது டிபனுக்குல்ல குடுத்துவிட்டேன். லஞ்சுக்கு வேற ஏதாவது செஞ்சுருப்பேனே?" என்று ஜெபா பதட்டமடைய,
"கூல் கூல்! நீங்க பாப்பாவை மட்டும் கவனிங்க. ஏற்கனவே ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் அலைஞ்சு அலைஞ்சு டயர்டா இருப்பீங்க. இன்ஃபெக்சன் ஆயிடாமப் பாத்துக்கோங்க. எங்கே, பாப்பாவைக் காட்டுங்க பாப்போம்" என்று தமிழ்ச்செல்வன் கேட்க, "இதோ!" என்றபடி பிரியங்காவை நோக்கி ஃபோனைத் திருப்பினார் ஜெபா.
பிரியங்கா வழக்கத்தை விட சோர்வாகக் காணப்பட்டாள். லேசாகக் கையசைத்து சிரித்தாள்.
"ஹாய் பிரியங்கா! நாளைக்கு சரியாயிடும். இப்ப ரெஸ்ட் எடு. அப்புறம் பேசுவோம் சரியா?" என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினர் தமிழும் அஷோக்கும். அப்போது தமிழின் அலைபேசியில் இன்னொரு அழைப்பு வர, வீடியோ கால் கட்டானது. டிரைவர் நாகராஜ் என்று திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும்
"அண்ணன் ஏன் ஃபோன் பண்றாரு?" என்றபடியே அழைப்பை ஏற்றான்.
"தமிழ் தம்பி! ஓய்ஃபுக்கு வலி வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சு. ஓ நெகட்டிவ் பிளட் தேவைப்படுதுங்க. யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெண்டு பேரைக் கூட்டிட்டு வரச் சொல்றாங்க. நீங்க ஹெல்ப் பண்ண முடியுங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?" என்று அவர் கேட்க,
"டேய் அஷோக்! ஓ நெகட்டிவ் யாராவது இருக்காங்களா டா?" என்று அஷோக்கைக் கேட்டான் தமிழ்ச்செல்வன்.