அத்தியாயம் 6
"என்னடி? இவ பாட்டுக்கு ஜாலியா போய் வரிசையில நின்னுக்கிட்டா.. அடுத்து என்ன பண்றதுன்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?" சுமித்ரா உணவு பொட்டலங்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்க, இரவில் இதுகுறித்து எதுவும் பேசியிராததால் ரேணுகாவிடம் கேட்டாள் பார்கவி.
"காலையிலேயே அவ ஆளு கிட்ட பேசிகிட்டு இருந்தா. நானும் ஃபோனை வாங்கி, 'என்ன சார்? நீங்க சொன்னீங்கன்னு நான் பாட்டுக்கு யோசிக்காம கூட்டிட்டு வந்துட்டேன். சுமி வீட்லருந்து என் வீட்டு வரை விசாரிக்க ஆள் அனுப்பிட்டாங்க. மேற்கொண்டு என்ன ஐடியா வச்சுருக்கீங்க?'ன்னு கேட்டேன். அவர் இன்னும் திருப்பூர்ல தான் இருக்காராம். ஏற்கனவே மூணு ஃபிரெண்ட்ஸ் கூட தான் வீடு எடுத்து தங்கியிருக்கார். அங்கேயும் போலீஸ் வந்து சுமித்ராவைப் பத்தி விசாரிச்சுதாம். இவளுக்கு ஒரே ஆச்சரியம். 'திருப்பூர்ல போலீஸைப் பிடிக்கிற அளவுக்கு எங்க அப்பாக்கு ஏது டப்பு?' அப்படிங்கறா.."
"ஊர்ப் பெரியவங்க யாராவது இன்ஃப்ளுயன்ஸ் பண்ணியிருப்பாங்க"
"ஆமா! காதலைப் பிரிச்சி கூட்டிட்டுப் போறதுக்குன்னு தான் ஊர் ஊருக்கு கமிட்டியே இருக்குல்ல?" ரேணுகா ஆமோதித்தாள்.
"கடைசியா என்ன தாண்டி முடிவு பண்ணிருக்கீங்க?"
"திருப்பூர்லயும் கெடுபிடியா இருக்கு. ஒரு வாரம் சமாளிங்க.. வேற ஏதாவது ஊர்ல இடம் பாத்துட்டு வந்து கூப்பிட்டுக்கிறேன், அப்படிங்கிறார்"
"இந்த டைம்ல போயிட்டு வர்றது, வீடு பாக்குறது எல்லாம் ஈசியா என்ன?"
"சென்னையில வேலை தேடிட்டு இருக்காராம். ஃப்ரண்ட்ஸ் மூலமா அங்கே வீடு பாக்கவும் சொல்லிருக்காராம்"
"ஏற்கனவே இருக்கிறவனுக்கே இங்கே வேலை இல்லையாம். சென்னையிலும் கம்பெனிகளை அடைச்சதால நம்மள மாதிரியே எல்லாரும் ஊருக்குத் தானே கிளம்பி வராங்க? இப்ப எப்படிப் புதுசா வேலை கிடைக்கும்? பிராக்டிகலா யோசிடி"
"எனக்கும் அதுதான் தோணுது. முயற்சி பண்ணிப் பாக்குறேன்கிறாரு அவரு"
"அப்படிக் கிடைக்கலேன்னா என்னதான் செய்வாங்க?"
"ஒன்னும் ஒத்து வரலைன்னா ரெண்டு பேரும் சேர்ந்து செத்துப் போயிடுவோம்னு சொல்லிருக்காரு. இது அப்பவும் விளையாட்டுத்தனமா, 'மாம்ஸ்! ஒரு ரெண்டு பேரைக் கொலை பண்ணிட்டு சாவோமே? ப்ளீஸ், ப்ளீஸ்!" அப்படிங்குது. எனக்கு அழவா, சிரிக்கவான்னு தெரியல"
"இது ஒரு அரை லூசா இருக்கு. அது முக்கால் லூசு போல.. இதுக ரெண்டும் எப்படி கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தப் போகுதுகளோ... போயும் போயும் கொரோனா காலத்துல தானா வீட்ல மாட்டணும்? ஒரு ஓடிப் போக வழி இருக்கா, கோயில்ல கல்யாணம் பண்ண வழி இருக்கா, தனிக்குடித்தனம் போக வழி இருக்கா" என்று பார்கவியே சலித்துக் கொண்டாள்.
"'ஐயகோ! இந்தப் பொல்லாத, மதிகெட்ட, நயவஞ்சக உலகத்துல நான் என்ன செய்வேன், நாதா!' அப்படின்னு டயலாக் பேசிக்கிட்டு இருக்கா" என்று ரேணுகா சொல்லவும், பார்கவிக்கு சிரிப்பு வந்தது.
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆமா உங்க வீட்டில பேசினியா? என்ன சொன்னாங்க? உன் கிட்டல்ல நேரடியா பேசிருக்கணும்? ஏன் எங்க வீட்ல போய்ப் பேசினாங்களாம்?" என்று பார்கவி ரேணுகாவைக் கேட்க,
"சுமித்ரா ஊரக்காரங்க அனுப்பிவிட்ட ஆளுங்க, ஒரு சந்தேகத்தோட தான் போய், 'உங்க பொண்ணு கூட வேலை பாக்குற ஒரு பிள்ளையக் காணும், இங்கே வந்துச்சா, லவ் மேட்டர்?' அப்படின்னு கேட்டுருக்காங்க. எங்க அம்மாகிட்ட நான் ஏற்கனவே இன்னொரு பொண்ணக் கூட்டிட்டு வரேன்னு சொல்லி வச்சிருந்தேன். அதனால இவங்களே அந்தப் பொண்ணு தான்னு முடிவு பண்ணிட்டு உங்க வீட்டுக்குப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன். இங்கே தனிமைப்படுத்தி இருக்கிறதால தான் தப்பிச்சோம். ஆனா, எங்க அம்மா, அப்பா பிடிவாதமா அந்தப் பொண்ண எப்படியாவது அனுப்பிரு. வீட்டுக்குக் கூட்டிட்டு வராத, அப்படின்னு என்கிட்டயும் சொல்றாங்கடி"
"இந்த இடமும் ரொம்ப எல்லாம் சேஃப் கிடையாது. நீ இங்கே தான் இருக்கேன்னு விசாரிச்சு இங்கே வந்துட்டா என்னடி செய்றது?"
"அதான் எனக்கும் பயமா இருக்கு. ஏதாவது ஐடியா சொல்லேண்டி…"
"இதுவரை நான் இப்படி எந்த சிட்டுவேஷனும் பார்த்ததில்லை. குறிப்பா காதலுக்கு ஹெல்ப் பண்ணதே இல்லை. காலேஜ்ல எல்லாம் லவ்க்கு சப்போர்ட் பண்றவங்களப் பார்த்தா திட்டுவேன்டி. எனக்கு என்ன தெரியும்?" பார்கவி சொல்ல,
"ப்ளீஸ்டி, நீ தான் ரொம்ப விவரம், பொறுப்புன்னு எங்க அம்மா அப்பா உன்னையே பெருமையா சொல்றாங்க. நீதான் தம்பி படிப்புக்கு ஹெல்ப் பண்றியாம், எஜுக்கேஷனல் லோன் கட்டறியாம். உங்க வீட்ல ஏதோ மராமத்து பண்றதுக்கும் லோன் போட்டு செலவழிக்கிறியாம்"
"அடிப்பாவி! என் வீட்டுக்கு நான் செய்யாம வேறு யாரு செய்வா? இப்படி வேற பேசுவாங்களா உங்க வீட்டில? நீ அஞ்சு வருஷமா உழைச்சுப் போடுறியே? அது யாரு கணக்கு? உனக்கு இருக்கிற அறிவுக்கு, உன்னைப் படிக்க வச்சிருந்தாங்கன்னா நீ என்னை விட நிறைய சம்பாதிச்சிருக்கப் போற"
"அதை விடு பாரு! எங்க வீட்டு சூழ்நிலை அப்படி. முடிஞ்சு போனதைப் பத்தி பேசிக்கிட்டு.." என்றாள் ரேணுகா.. இருந்தும் அவள் குரலில் சில நிறைவேறாத ஆசைகளின் ஏக்கம் தெரிந்தது.
பார்கவி வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்த போதும் அவளது வீட்டு நிலை மாறியிருக்கிறது என்பதே உண்மை. அவளது குடும்பம் கீழ் மத்தியத்தர வகுப்பினர் தான். அவளது அப்பா சிறிய பலசரக்குக் கடை வைத்திருந்தார். அம்மா டெய்லர். அந்தச் சிறிய குடும்பத்தின் பல நாள் கனவுகள் பார்கவி மூலமாக நிறைவேறிக் கொண்டிருந்தன என்பதும் உண்மை.
"நாம இங்க மண்டைய ஒடச்சிக்கிட்டிருக்கோம். அங்கே அவ ஒரு தாத்தாக் கிட்ட பிளேடு போட்டுட்டு இருக்கா பாரு" என்றாள் ரேணுகா, சுமித்ராவைக் கைகாட்டி. அங்கு ஒரு பெரியவரிடம் கையை ஆட்டி ஆட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.
"தனிமைப்படுத்தத் தான் இங்க வச்சுருக்காங்க. இப்பப் போய் ஒவ்வொருத்தர் கிட்டயும் பேசிகிட்டு இருக்கா. யாருக்கு என்ன வியாதி இருக்கோ? சுமி! சுமி! இங்கே வாடி!" ரேணுகா கூப்பிட,
"தாத்தா! டாட்டா பை!" என்ற அந்தப் பெரியவரிடம் கூறிவிட்டு சுமித்ரா அருகில் வந்தாள்.
"இந்தாங்க.. நானே மூணு பொட்டலம் சாப்பாடு வாங்கிட்டேன். எதுக்கு வீணா எல்லாரும் லைன்ல நிக்கணும். ரிஸ்க்கு தானே?"
"அப்படி அறிவு இருக்கிறவ ஏண்டி புதுசு புதுசா ஆளுங்க கிட்ட பேசிகிட்டு இருக்க?"
"அந்தத் தாத்தா லேசாய் இருமினாரு. அதான் பக்கத்துல போய் நின்னேன்" என்றபடியே கிடைத்த இடத்தில் அமர்ந்து சுவாரசியமாக பொட்டலத்தைப் பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.
"நீ இப்படித்தான் எப்பவுமேயா? இல்ல எப்பவுமே இப்படித்தானா?" பார்கவி கேட்க,
"அறிவோட தான் பேசுறியா சுமி? இருமுறாருங்கிற.. அப்போ அவர் கிட்டயே போயி ஏன் நிக்கிற?" ரேணுகா அவளது தலையில் குட்டப் போக, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் சுமித்ரா.
"இல்லடி! நீங்க ரெண்டு பேரும் என்னை எங்க தங்க வைக்கிறதுன்னு குழம்பிக்கிட்டு இருக்கீங்களா.. அதனால கொரோனா வந்துருச்சுன்னா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் பதினஞ்சு நாள் வச்சிருப்பாங்கள்ள? அதான்!" என்று சீரியஸாகக் கூறினாள் சுமித்ரா.
"முட்டாள் முட்டாள்! அவருக்கு எதுவும் இல்லாம இருந்து உன் கிட்ட இருந்து ஏதாவது கிருமி அவருக்கு வந்துருச்சுன்னா?"
"ஓ! அப்படி வேற இருக்கோ?"
"என்ன நொப்படி வேற இருக்கோ? அதுவும் போக முந்தா நேத்தே டெஸ்ட் எடுத்துட்டாங்க, அந்த ரிசல்ட் நெகட்டிவ்னா வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க இல்ல? இன்னைக்கு வியாதியை வாங்கி என்ன செய்யப் போற?"
"ஆமால்ல? அறிவாளி ரேணு நீ! உன் அறிவுக்கு நீ எங்கேயோ இருந்திருக்க வேண்டியவ... உன் கிரகம் என் கிட்ட வந்து மாட்டிக்கிட்ட!" இழுவையோடு சுமித்ரா சொல்ல,
"விளையாட்டுத்தனமா இருக்கிறது நல்லது தான் சுமித்ரா. எப்ப விளையாடனும்னு கணக்கு இருக்குல்ல? எனக்குத் தெரிஞ்ச சர்க்கிள்ல ஹாஸ்டல் ஏதாவது இருக்கான்னு விசாரிக்கிறேன்" என்றாள் பார்கவி. சொன்னபடியே உணவை முடித்தவுடன் பலரிடம் விசாரிக்கவும் ஆரம்பித்தாள்.
அன்றைய பகல் பொழுது பார்கவிக்கும் ரேணுவுக்கும் பலரிடம் தொலைபேசியில் பேசவும் அவர்கள் முன்னிருக்கும் பல வாய்ப்புகளை அவசுவதிலும் கழிந்தது என்றால், சுமித்ராவுக்கு வேறு வகையில் சுறுசுறுப்பாகவே கழிந்தது.
"பேசாம ரூம்ல இரு! அங்கே போய் ஏதாவது வியாதியை இழுத்து வச்சுடாதே" என்று ரேணுகாவும் பார்கவியும் கூறியிருந்தாலும் அவள் கேட்பதாக இல்லை.
காலை உணவு விநியோகம் முடியும் வரை அங்கு நின்று ஏதோ உதவிக் கொண்டிருந்தாள். அதற்குப் பின் மருத்துவக்குழு வந்து இறங்கியது. மூன்று நாட்களுக்கு முன்பாக பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட முடிவுகள் வந்திருக்க, கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். தொற்று இருப்பதாக முடிவு வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவர்களை சமாதானப்படுத்தி அனுப்புவது பெரிய வேலையாக இருந்தது. சிகிச்சை என்பதை விட, அங்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சிலர் அழுதே விட்டார்கள்.
'நான் என்ன பாவம் பண்ணுனேன்? எனக்கேன் இப்படி வருது?'
'இங்கேயே கூட தங்க வச்சுக்கோங்க டாக்டர். ஹாஸ்பிடல் போனா தெருவெல்லாம் அடைச்சுடுவாங்களாமே..'
'என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் பாவம், அவங்களையும் எல்லாரும் ஒதுக்குவாங்க' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சிலர் 'இதெல்லாம் கார்ப்பரேட் சதி. வாட்ஸ்அப் ல வந்துருக்கு. அப்படி ஒரு நோயே கிடையாது' என்று சண்டையும் போட்டார்கள்.
அந்த நோயாளிகளும் சரி, மருத்துவக் குழுவினரும் சரி, அந்தப் பொழுதைக் கடக்கப் பெரும்பாடு பட்டார்கள். எல்லாரையும் பார்க்கப் பாவமாக இருந்தது சுமித்ராவுக்கு.
ஒரு மரத்தடியில் மருத்துவக் குழு அமர்ந்திருக்க, சற்றுத் தள்ளி இன்னொரு மரத்தடியில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காரின் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி ஒரு சிறு பெண், "அப்பா அப்பா!" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவரின் மகளாக இருக்கவேண்டும்.
"அப்பா! தம்பி உச்சா போய்ட்டான்"
"அப்பா! தண்ணி பாட்டில் எங்க இருக்கு?"
"என்னோட பொம்மையைத் தம்பிக்குக் குடுக்கவா?" என்று ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அப்பாவை அழைத்துக் கொண்டே இருந்தாள். இங்கெல்லாம் வரக்கூடாது என்று மருத்துவ குழுவினர் கூறியதையும் மீறி சுமித்ரா அந்தப்பக்கம் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
மெதுவாகக் காரின் அருகில் சென்று அந்த குழந்தையிடம் "பாப்பா உன் பெயர் என்ன, என்ன படிக்கிற?" என்று கேட்டாள். காருக்குள் எட்டிப் பார்த்ததில் ஒரு சிறிய குழந்தை- ஒரு வயதுக்குள் இருக்கும், அதுவும் படுக்க வைக்கப் பட்டிருந்தது. குழந்தையைப் படுக்க வைப்பதற்காக கார் சீட்டை சற்று மாற்றி அமைத்திருந்தார்கள்.
குழந்தைகளுடன் சற்று நேரம் பேசிய பின், மருத்துவர் ஓய்வாக அமர்ந்திருந்த நேரம் அவரின் அருகில் வந்தாள் சுமித்ரா.
"என்ன சார் குழந்தைகளையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டீங்க?" என்று அவரிடம் கேட்க, "வீட்ல ஆள் இல்லம்மா, என் ஒய்ஃப்பும் டாக்டர். ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் கூட்டிக்கிட்டு வருவோம். அவங்க இன்னிக்கி போயிருக்கிற இடம் மலைப்பகுதி. அதான் நான் கூட்டிட்டு வந்துட்டேன்" என்றார்.
"வீட்ல பெரியவங்க இல்லையா சார்?" என்று அவள் கேட்க,
"இல்லம்மா.. வேலைக்காரம்மா லீவு. அப்படியே சமாளிக்க வேண்டியது தான். என்ன செய்ய, எங்களுக்குப் பழகிடுச்சு" என்றார் மருத்துவர்.
"ஏன் சார்? நீங்க லவ் மேரேஜா? அதான் வீட்ல யாரும் வர மாட்டேங்கிறாங்களா?" என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் சுமித்ரா.
"நீங்க சொன்னதுல பாதி கரெக்ட். பாதி தப்பு. லவ் மேரேஜ் தான். ஆனா பெரியவங்க வேற ஊர்ல இருக்காங்க. அவங்களுக்கு வர விருப்பம் தான். ஆனா நாங்க தான் இந்த சூழ்நிலையில வர வேண்டாம்னு சொல்லிட்டோம்"
அவர் கூறியும் அங்கிருந்து போகாமல் அவர் அடுத்து ஒரு நோயாளியிடம் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள் சுமித்ரா. "சார், நான் வேணா உங்க வீட்டுக்கு வரட்டுமா? குழந்தைகளைப் பாத்துக்கிறேன். நம்பிக்கையா என்கிட்ட விட்டுட்டுப் போகலாம் சார்! எனக்குக் கை சுத்தம்" என்றவளை மருத்துவர் வித்தியாசமாக பார்த்தார்.
"ஏன்மா இப்படி திடீர்னு கேக்குறீங்க?" என்று அவர் கேட்க, "உங்களைப் பாத்தா பாவமா இருக்கு சார், என்னைப் பாத்தாலும் பாவமா இருக்கு சார்.. அதனால தான் சார் ரெண்டு பேத்துக்கும் பொதுவா ஒரு ஐடியா சொல்றேன்" என்றாள்.
சிரித்துக் கொண்ட மருத்துவர், "நான் எப்படி வேணாலும் சமாளிச்சுக்குவேன்மா.. உங்களுக்கு என்ன பிரச்சனை? லவ் மேட்டரா?" சுமித்ரா கேட்டதைப் போலவே அவரும் சரியாக கேட்டுவிட்டார்.
"நீங்களும் அறிவாளி தான் சார்!" என்று சொன்ன சுமித்ரா, "சார் எங்களுக்கு முந்தாநாள் டெஸ்ட் எடுத்தீங்க, எப்ப ரிப்போர்ட் வரும்?" என்று கேட்டாள்.
"நாளைக்கு வரும்"
"நெகட்டிவ்னா வீட்டுக்கு அனுப்பிடுவீங்களா சார்?" என்றாள்.
"ஆமா. அதுக்கு தானேம்மா எல்லாரும் தவம் கிடக்கிறாங்க?" அவள் கேட்ட தொனியில் மருத்துவர் சந்தேகமாக எதிர்க்கேள்வி கேட்க, "ஆனா எனக்கு மட்டும் பாசிட்டிவ்னு போட்டு ஏதாவது ஹாஸ்பிடல்ல சேர்த்து விடுங்க சார்.. பதினஞ்சு நாள் பிரச்சினை இல்லாம ஓட்டிடுவேன். எங்கேயும் போக முடியாம மாட்டிக்கிட்டு இருக்கேன்" என்றாள் சுமித்ரா.
"அம்மா! என்னம்மா இப்படிப் புதுசு புதுசா பிரச்சனையைக் கொண்டு வரீங்க? உலகமே இந்தக் கிருமியைப் பாத்து பயப்படுது. நீங்க அதோடயே போய் இருக்கணும்னு நினைக்கிறீங்க.. உங்க கூட யார் இருக்கா? வரச் சொல்லுங்க!" என்று மருத்துவர் சற்றுக் கோபமாகவே கூறினார்.
"அய்யோ, அதெல்லாம் வேண்டாம் சார், நான் சும்மாக் கேட்டேன். போறேன் சார்!" என்று சுமித்ரா கூறியும் கேட்காமல் அவரது உதவியாளரை அழைத்து, "இந்தப் பொண்ணு கூட இருக்கிறவங்களை கூட்டிட்டு வாங்க" என்றவர் சுமித்ராவின் கோரிக்கைகளை பார்கவி, ரேணுகா இருவரிடமும் கூறிவிட்டு,
"இந்தப் பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க. ஒன்னு கிடக்க ஒன்னு பேசிக்கிட்டுக் கெடக்குது" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
அவர் பேசியதைக் கேட்டவுடன் ரேணுகா கோபத்தில் சுமித்ராவை அடித்துவிட்டாள்.
பார்கவிக்கோ தனக்குப் பொறுப்பு இன்னும் கொஞ்சம் அதிகரிப்பதான உணர்வு வந்தது. முடிவெடுப்பதிலும் விசாரிப்பதிலும் இன்னும் தீர்மானமாக செயலாற்றிக் கொண்டிருக்கையில் மாலையில் அழைத்தார் நாகராஜன்.
"பாப்பா பார்கவி! மகன் பிறந்திருக்கான்மா!" என்று மகிழ்ச்சியுடன் ஒலித்தது அவர் குரல்.
"சூப்பர்ணே! வாழ்த்துக்கள். அக்கா நல்லா இருக்காங்களா? நார்மல் டெலிவரி தானே?"
"இல்லங்கம்மா. ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிடுச்சு. கடைசில கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டா.. அவசரமா ப்ளட் தேவைப்பட்டு, நம்ம தமிழ் தம்பி தான் ஹெல்ப் பண்ணுச்சுங்க"
'யாரு தமிழ்?' தமிழ்ச்செல்வன் பார்கவியை யார் என்று யோசித்தது போலவே இப்போது பார்கவியும் யோசித்தாள்.
"கடைசி நேரத்தில் போன் பண்ணினேன். ப்ளட் குடுக்க ரெண்டு பேரைக் கூட்டிட்டு வந்துட்டாரு. ரொம்ப நல்ல மாதிரிம்மா. உனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்"
"எனக்கு ஏன் தேங்க்ஸ்? யார்ணே அது, தமிழ்?"
"நீ அனுப்பி வச்சியே என் கூட கார்ல.. அவர் தான். ஆமா, உனக்கு அவரை தெரியாதாம்ல.. ரொம்ப நல்ல பையன்"
"ஓ அவரா?" சுமித்ராவின் விஷயத்தில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே இருந்தவளுக்குச் சட்டென்று ஒன்று தோன்றியது
"அண்ணே! அவர் திரும்பி எப்ப, எப்படி வரார்னு ஏதாவது தெரியுமா? நீங்க எதுவும் கொண்டு வந்து விட வாய்ப்பு இருக்கா?"
"தெரியலையேமா? அவர் அதைப் பத்தி எதுவும் சொல்லலையே? ஆனா பிளட் குடுத்துட்டு உடனே திரும்புறதாத் தான் பேசிட்டிருந்தார். அவர் கேட்டாக் கொண்டு வந்து விடுவேன்மா. ஆனால் எனக்கு இங்கே ஹாஸ்பிடல்லயே நாலஞ்சு நாள் ஆயிடுமே? ஏன்மா?
"ஒன்னும் இல்லண்ணே... அவர் நம்பர் இருந்தா அனுப்பிவிடுங்க. நான் அவர்கிட்ட கேட்டுக்குறேன். நீங்க மகனைக் கவனிங்க. பாவம் ஹெல்ப்புக்கு ஆள் இல்லாம கஷ்டப்படுவீங்க"
நாகராஜ் அண்ணன் தமிழ் என்பவருடன் வர நேர்ந்தால் அவர் திரும்பும் போது காரில் அவருடன் கூடவே சுமித்ராவை கோவைக்கோ, திருப்பூருக்கோ அனுப்பி விடலாமே என்று தீவிரமாக யோசித்தாள் பார்கவி.
"சுமித்ரா உன் ஆளை, உன்னை வந்து கோவைல பிக்கப் பண்ணிக்க சொல்றியா? ஒரு நாலஞ்சு நாள்ல உன்னத் திருப்பி அனுப்ப முயற்சிக்கலாம்?" என்று சுமித்ராவிடம் கேட்டாள் பார்கவி.