அத்தியாயம் 7
தமிழ்ச்செல்வனுக்கும் வீட்டில் கடமை அழைக்கத் தான் செய்தது. அஜய், "அண்ணே! எப்ப வரீங்க? தாத்தா-பாட்டி ப்ராஜெக்ட் தவிர வேற நிறைய ஆர்டர் வருதுண்ணே! கட்சிக்காரங்க, அந்த சங்கம் இந்த சங்கம்னு அங்கங்க சமையல் பண்ணிப் போடுறதுக்குக் கேக்குறாங்க. எப்ப தான் வருவீங்க?" என்று போன் பண்ணி தொண தொணத்துக் கொண்டிருந்தான். "டேய்! மெஸ்ஸுக்கு நான் ஓனரா நீ ஓனரான்னே தெரியலடா… வந்துருவேன்டா... டார்ச்சர் பண்ணாத!" என்று சலித்துக் கொண்டான் தமிழ்ச்செல்வன்.
பிரியங்காவுக்கு அறுவை சிகிச்சை விரைவில் செய்து விட்டால் நல்லது என்று அவளது அம்மா நினைக்கவே, அதற்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என்று பார்த்துக் கொண்டிருந்தனர் அஷோக்கும் தமிழ்ச்செல்வனும். தமிழ்ச்செல்வனின் எண்ணை நாகராஜனிடம் வாங்கியிருந்த பார்கவி, தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் எடுப்பாரோ மாட்டாரோ என்று சற்று யோசனையுடனே அழைத்தாள். தமிழ்ச்செல்வன் அழைப்பை ஏற்கவும் "சார்! நான் பார்கவி பேசுறேன். இங்க க்வாரண்டைன் சென்டர்ல பார்த்தோமே!" என்றாள். நாகராஜன் புண்ணியத்தால் அந்தப்பெயர் இப்போது பரிச்சயமாகி விட்டது தமிழ்ச்செல்வனுக்கு. குரல் கூட நன்றாக ஞாபகம் இருந்தது. முகம் மட்டும் சரியாக நினைவில்லை.
"சொல்லுங்க மேடம்!"
"சார்! நீங்க எப்பத் திரும்பி வருவீங்க?" கேட்டுப் முடித்த பிறகு தான் யோசிக்காமல் கேட்டு விட்டோமே, தெரியாத ஆளிடம் போய் இப்படியா கேட்டு வைப்பது என்று தன் தலையில் தட்டிக் கொண்டாள் பார்கவி. அவன் பதில் கூறும் முன்னரே, "இல்ல, ஒரு ஹெல்ப் சார்!" என்று ஆரம்பித்து கடகடவென்று சுமித்ரா விஷயம், இப்போதைய நிலவரம் எல்லாவற்றையும் கூறினாள். "சாரி சார்! ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல.." என்றாள். அதன் பின்னும் தமிழ்ச்செல்வனிடம் பதில் இல்லாமல் போகவும்,
"நீங்க ரொம்ப ஹெல்பிங் டெண்டன்ஸி உள்ளவருன்னு நாகராஜ் அண்ணே சொன்னாரு…" இந்தக் கடைசி வரியைச் சொல்லும்போது குரல் உள்ளேயே போய்விட்டது.
"யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மேடம்... கொஞ்சம் பேருக்கு ஏதோ ஹெல்ப் பண்ணி இருக்கேன். அவ்வளவு தான். நான் வர்ற கார்ல ரிட்டன் அனுப்பனும் அவ்வளவுதானே மேடம்? இங்கே கோவையில ரிசீவ் பண்ணிக்குவாங்கல்ல? நாகராஜ் அண்ணன் காரையே வேணா கூட்டிட்டு வந்துர்றேன்"
"யாரு ரிசீவ் பண்ணிக்குவாங்க, என்ன பிளான்னு இன்னும் கன்ஃபார்ம் ஆகல சார்... நாகராஜ் அண்ணனுக்கும் கூட இன்னும் நாலஞ்சு நாளாவது வேலை பிசியா இருக்கும். ஒரு ஐடியா திடீர்னு வந்துச்சு. உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டேன்" யோசிக்காமல் போன் பண்ணி விட்டோமோ என்ற தயக்கம் இன்னுமே இருந்தது அவளுக்கு.
"ஒரு சஜஷன் சொல்லலாமா மேடம்? காதல் விஷயத்துல பாத்து ஹெல்ப் பண்ணுங்க. முதல்ல லவ்வர்ஸ் ரெண்டு பேரும் ஸ்ட்ராங்கா இருக்கணும். நீங்க சொல்றத வச்சுப் பாத்தா எதிர்ப்பு பலமா இருக்கும் போல. சிலபல சேதாரங்கள் ரெண்டு பக்கமும் வரலாம். எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்" அவன் பேசிய தொனியிலேயே பார்கவிக்கு சற்று இலகுத்தன்மை வந்திருந்தது.
"பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் போல இருக்கு சார் உங்களுக்கு.." என்று லேசான கிண்டலுடன் கூறினாள்.
"இல்ல... சில உதவிகள் பண்ணப் போனப்போ, ஏண்டா போனோம்னு பல சமயம் தோணியிருக்கு. ஆனா இதுவரை காதலுக்கு மட்டும் உதவி செய்யப் போனதில்ல…"
"அப்படி என்ன சார் பிரச்சனை வந்திருக்கு? ரத்ததானம் தவிர வேறு என்னென்ன பண்ணுவீங்க?" ஆர்வமிகுதியில் கேட்டு வைத்தாள்.
"நான் என்னங்க, இவ்விடம் சமூக சேவை செய்யப் படும்னு போர்டா வச்சிருக்கேன். இல்ல, மெனு கார்டு போட்டு இந்த சர்வீஸ், அந்த சர்வீஸ்னு வச்சிருக்கேனா? இப்படிக் கேக்குறீங்க?" என்றான் தமிழ்ச்செல்வன். மறுபடி மறுபடி உளறி வைக்கிறோமோ என்று தோன்றினாலும், "உதவிக்குப் போன இடத்தில் பாராட்டத் தானே செய்வாங்க? எப்படிப் பிரச்சனை வரும் அப்படின்னு ஒரு சந்தேகம் அதான். ஸாரி!" என்றாள் பார்கவி.
"ஹாஹா! சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மேடம்.. சென்னை வெள்ளத்தப்ப மாட்டிட்டு இருந்தவங்களை மீட்கப் போறப்ப ஒரு பெரியவரு ஏதோ பொருளை காணோம்னு எங்களை காச்சு மூச்சுன்னு கத்தினாரு.. ஏதோ நாங்க இதை பயன்படுத்தி திருடப் போனதா நினைச்சுக்கிட்டாரு. அப்புறம் அதே சமயம் என் ஃப்ரண்டு ஒருத்தன் தண்ணீரில் விழுந்த ஒரு பொண்ணக் காப்பாத்தப் போயி 'நீதான் அவளோட லவ்வரா? சமயம் பார்த்து வந்திருக்கியா?' அப்படின்னு ரெண்டு அடியப் போட்டுட்டாங்க. அதான் சொன்னேன்"
"ஓ! இப்படி எல்லாம் நடக்குமா சார்? ஆச்சரியமா இருக்கு.. சரிங்க சார்! நீங்க கிளம்புற ப்ளான் கன்ஃபர்ம் ஆன உடனே ஒரு ஃபோன் பண்ண முடியுமா? தனியா வண்டி ஏற்பாடு பண்ணி இவளை அனுப்புறது கஷ்டம். அதைவிட ரிட்டர்ன் வண்டின்னா ஈஸியா இருக்கும்னு தான்…" இப்போது நினைத்ததைச் சொல்வது கொஞ்சம் இலகுவாக இருந்தது அவளுக்கு.
"கண்டிப்பாச் சொல்றேன் மேடம்!"
"தேங்க்யூ சார்.. வச்சிரவா? ஆனா சார், வேற எதோ கேக்கனும்னு நெனச்சேன் மறந்துட்டேன்"
"என்ன அது மேடம்?"
"சட்டுன்னு ஞாபகம் வரல... வந்தா மெசேஜ் பண்றேன். சாரி சார்!"
"சார், சார்னு ஒரே வயசான ஃபீலிங். தமிழ் அல்லது தமிழ்ச்செல்வன்னே கூப்பிடுங்க மேடம்"
"ஓகே சார்! நீங்களும் பார்கவின்னே கூப்பிடலாம்" என்று போனை வைத்தாள் பார்கவி. அவள் அந்த அறையின் ஜன்னல் அருகே நின்று பேசி விட்டு திரும்பி வரவும், இங்கே கையை உதறியபடி "அச்சச்சோ! அச்சச்சோ! போச்சு! போச்சு!" என்று சுமித்ரா சொல்லிக்கொண்டிருந்தாள்.
"சும்மா இருடி!" என்று அவள் கையைப் பிடித்து இழுத்து சிரிப்பை அடக்க ரேணுகா படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள். ரேணுகாவின் முகத்தில் எங்கே பார்கவி கோபித்துக்கொள்வாளோ என்ற பதட்டமும் சேர்ந்தே காணப்பட்டது.
"என்ன அச்சோ? என்ன போச்சு?" தமிழ்ச்செல்வனிடம் சொல்லாமல் விட்டது என்ன என்று யோசித்தவாறே கேட்டாள் பார்கவி.
"இல்ல, நீ போன்ல பேசும்போது வழக்கமா வர்ற எல்லா அறிகுறியும் தெரியுது" என்றாள் சுமித்ரா.
"என்ன அறிகுறி?" இன்னும் எதைக் கேட்க மறந்தோம் என்ற யோசனையிலேயே இருந்த பார்கவி இவள் கூறியதைப் பெரிதாக எடுக்கவில்லை. சொல்லப் போனால் இப்பொழுதெல்லாம் சுமித்ரா பேசும் பல விஷயங்களை அவள் முக்கியமானதாகக் கருதுவதில்லை. சுமித்ராவின் விளையாட்டுத்தனம் அப்படி. வாட்ஸ் அப்பில் வந்த செய்திகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்த பார்கவிக்கு சட்டென மறந்த விஷயம் நினைவுக்கு வந்து விட,
"உன் ஆளு பெயர் என்ன? உங்க கம்பெனி பேரு என்ன?" என்று கேட்டாள்.
"அவர் பேரு விஸ்வநாதன், ஆர். எம். ஃபேப்ரிக்ஸ்" என்று சுமித்ரா கூற, "இரு வரேன்" என்றபடி மீண்டும் தமிழ்ச்செல்வனுக்கு அழைத்தாள் பார்கவி. அதற்குள் ரேணுகாவும் சுமித்ராவும் ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்க, சத்தம் சரியாகக் கேட்காததால் பேசியபடியே வெளியே நடந்தாள் பார்கவி.
"சொல்லுங்க மேடம்!" தமிழ்ச்செல்வன் சொல்ல,
"சார்! சாரி சாரி, தமிழ்ச்செல்வன் சார்.."
"சொல்லுங்க மேடம், இல்ல சொல்லுங்க பார்கவி" அவளைப் போலவே தமிழ்ச்செல்வனும் கூற,
"திருப்பூர்ல உங்க பிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?"
"இருக்காங்களே? என்ன விஷயம் மேடம்?"
"என் கூட இருக்கிற பொண்ணைப் பத்தி சொன்னேனே? அவ லவ்வரைப் பத்தி விசாரிச்சு நல்ல பையன் தானா, சின்சியரா இருக்காரா, வேறு எதுவும் பழக்கவழக்கம் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டா நிம்மதியா அனுப்பலாமே சார்… அதான்"
"புதுசாப் பார்த்த பொண்ணுக்காக இந்த அளவு யோசிக்கிறீங்களே? கிரேட் மேடம்!"
"இந்த மேடமை விட மாட்டீங்களே... நீங்க கூட தெரியாத ஆளுக்கு ப்ளட் குடுக்க எவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க?"
"தெரியாத ஆளுன்னு என்னங்க... அவசரத்துக்குத் தான் நம்ம குரூப் தேவைப்படும். அப்ப அந்த ஆளைத் தெரிஞ்சுக்க வேண்டியது தான். நல்லா யோசிச்சு பாருங்க, இதுவரை நமக்கு பழக்கப்பட்டவங்க நிறைய பேரு ஏதாவது அவசரத்துல அறிமுகமானவங்களா தான் இருப்பாங்க. இப்ப உங்களையே எடுத்துக்குங்க.. நீங்க இருக்கிற சூழ்நிலையில அந்தப் பொண்ணோட பொறுப்பை தட்டிக் கழிச்சாப் போதும்னு இல்லாம, அது போற இடம் சரியா இருக்குமான்னு யோசிக்கிறீங்களே! அதுதான் பெருசு"
"முன்னப் பின்ன ஹெல்ப்னு நான் யாருக்குமே பண்ணதில்லை தமிழ் சார். அதான். சொதப்பிடக்கூடாதுல்ல…" என்று பார்கவி சொல்ல,
"என் அனுபவங்களை சொன்னதுல வேற கொஞ்சம் ஜெர்க்காயிருப்பீங்க. அப்படி தானே?"
"சேச்சே! நீங்க சொல்ல முன்னாடியே நல்லா விசாரிச்சுட்டுத் தான் அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டேன் தமிழ் சார்"
"நம்பிட்டேன்!"
"நிஜமா சார்"
"நிஜமாவே நம்பிட்டேன் மா!" அதிகம் பேசி விட்டோமோ என்று யோசிப்பது இப்போது தமிழ்ச்செல்வனின் முறையாகியது. ஆனால் பார்கவி அதைக் கண்டு கொள்ளாது,
"சரி தமிழ் சார்! இன்னொரு விஷயம் கேட்டாத் தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?"
"என்ன மேடம்?"
"இல்ல... நாளைக்கு எங்களுக்கு ரிப்போர்ட் வந்துரும்.. நெகடிவ்னா அனுப்பிடுவாங்க. நாளைக்கு மதியத்துக்குள் கிளம்ப வேண்டியதிருக்கும். அதுக்குள்ள…"
"அந்த டைமுக்குள்ள நான் வந்துருவேனான்னு கேக்க வரீங்க. அப்படித்தானே?"
"ஆமா சார்!"
"அதுக்கு ஏன் தயங்குறீங்க? நான் வர ரெடி தான். ஆனால் நாகராஜ் அண்ணன் கூட ரிட்டர்ன் வந்தாத் தானே அந்தப் பொண்ணுக்கு சேஃப்? நான் வேணா வேற வண்டி புடிச்சு என் ஃப்ரெண்டு அஷோக்கையும் கூட்டிட்டு வரவா.. திரும்பிப் போகும்போது அஷோக் கூட அந்தப் பொண்ண தைரியமா அனுப்பலாம். செக்போஸ்ட்ல கேட்டாங்கன்னா ஏதாவது சொல்லிக்கலாம்"
"உங்களுக்கு அங்க இன்னும் வேலை இருக்கா? ஐ மீன், கோவைல?" ஒருவேளை தான் சொல்வதால் தன் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு வருவானோ என்ற தயக்கத்தில் பார்கவி கேட்டாள்.
"இல்லை.. அங்க தான் வேலை இருக்கு ஐ மீன்.. எங்க ஊர்ல" என்றவன், அதன்பின் தன்னுடைய குடும்பம், ஹோட்டல், அண்ணனின் உடல்நிலை, தனக்கு இருக்கும் பொறுப்புகள், அஜய், வா வா என்று அவன் கொடுக்கும் நெருக்கடி என்று எல்லா விஷயத்தையும் பேச்சுவாக்கில் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல பார்கவிக்கு ஒரு கணம் சுமித்ராவைத் தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றியது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று இருந்திருப்பாள் போல, கேள்விப்படும் இடங்களுக்கு எல்லாம் சுமித்ராவை அனுப்பலாமா என்றே இப்பொழுது அவளுடைய சிந்தனை ஓடியது.
"இன்னொன்னு கேட்கவா சார்?"
"கேளுங்க…" தமிழ்செல்வன் சொல்வதற்குள் 'ஐயோ ரொம்ப உரிமை எடுக்கிற மாதிரி இருக்கே' என்று தோன்ற, கேட்க வந்ததைக் கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள் பார்கவி.
"ஏதோ கேக்க வந்தேன் சார். அதுக்குள்ள மறந்துட்டேன்" என்றாள்.
"எப்பவுமே ஏதாவது ஒண்ணை மறந்திடுவீங்களோ? சரி, ஞாபகம் வந்தாக் கூப்பிடுங்க! பை!" என்று இயல்பாக கூறித் தொடர்பைத் துண்டித்தான்.
பார்கவிக்கு இதென்ன சுமித்ரா குறித்த பதட்டத்தில் இருக்கிறேனா, ஏன் இப்படி பேசும்போது சொதப்பி வைக்கிறேன் என்று தோன்றியது.
அசடு வழிந்த முகத்துடன் பார்கவி அறைக்குள் வர, சுமித்ரா,
"ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு!
ஓ ஓ பெண்ணே!" என்று பாடிக்கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். ரேணுகாவும் ஏதோ செய்வதாகப் பெயர் பண்ணிக்கொண்டு சிரிப்பும் தர்மசங்கடமும் கலந்த ஒரு வினோத உணர்ச்சியை வெளிக்காட்டியபடி இருந்தாள்.
'இவ ஏன் வித்தியாசமா சீன் போடுறா?' என்று பார்கவி ரேணுகாவைக் குறித்து யோசித்த போது தான் சுமித்ரா அப்பொழுது சொன்னதும் இப்பொழுது பாடுவதும் தன்னைப் பற்றித்தான், ஏதோ கிண்டல் செய்கிறாள் என்று புரிந்தது.
"என்ன சுமித்ரா? என்ன பாட்டு இது? அப்பவும் ஏதோ சொல்ல வந்த, இவ ஏன் இப்படி முழிக்கிறா?" என்று பார்கவி அதட்டினாள்.
அதேசமயம் அஷோக்கின் அறையிலிருந்த பால்கனி போன்ற பகுதியிலிருந்து தமிழ்ச்செல்வன் போன் பேசிவிட்டு புன்னகையுடன் வர, அஷோக்,
"டேய்! ஏதோ கருகுற வாசனை வருதுல்ல?" என்றான்.
"அடுப்புல எதுவும் வைக்கலையே டா?" என்று தமிழ்ச்செல்வன், வெள்ளந்தியாக மூக்கை உறிஞ்சிப் பார்க்க,
"இல்ல... ரொம்ப நேரமாக் கடலை வறுத்தா சட்டி கருகிடும்ல, அதைச் சொன்னேன்" என்று நக்கலாகக் கூறினான்
அஷோக். தமிழ்ச்செல்வன் தன் சக்தி அனைத்தையும் தன் முகத்தில் தேக்கி அஷோக்குக்கு ஒரு பெரிய முறைப்பைப் பரிசாகக் கொடுத்தான்.