"அம்மா ஆபீஸ் கிளம்புறேன். டிஃபன் வேண்டாம்" சொல்லியபடி கார் சாவியை சுழற்றிக் கொண்டே வாசல் நோக்கி சென்றான் அர்ஜுன்.
அர்ஜுன். அன்னை சாவித்ரியின் ஒரே மகன். BE முடித்து அன்னை தனியாளாய் வளர்த்த எக்ஸ்ப்போர்ட் கம்பனியை தொடர்ந்து தனது பொறுப்பில் நடத்தி அதில் 3 வருடமாக வெற்றியும் பெற்று வரும் அழகுடன் பொறுப்புள்ள ஆண்மகன்.
"அஜூ! சாப்பிட்டு போடா" அவன் பின்னாலேயே சாவித்ரி சென்றார்.
"ப்ச்! அம்மா நீங்க ஏன் வர்றீங்க? மூட்டு வலி இருக்குல்ல?"
"நீ சாப்பிட்டு போனா நான் ஏன்டா உன் பின்னாடி வர போறேன். இன்னும் ஒரு வாரம் தான். அப்புறம் எனக்கு ரெஸ்ட் தானே. அதான் உன் பொண்டாடி வந்திடுவாளே!" அன்னை சொல்ல, அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் விடைபெற்று கிளம்பினான்.
காரில் சென்று கொண்டிருந்தவன் மனமோ ரணமாய் கொதித்து கொண்டிருந்தது.
ஸ்ரீஜா.. கல்லூரியில் அர்ஜுனின் ஜூனியர். அவள் முதல் வருடம் சேர்ந்ததில் இருந்தே அவளின் கிரஷ் அர்ஜுன் தான். ஒரே தெருவில் தான் இருவர் வீடும். யாரிடமும் எதையும் மறைக்கும் குணம் அவளுக்கு இல்லை. அதனால் தானோ என்னவோ, அவன் வீட்டை தெரிந்து கொண்டு, அவனிடம் பேசும் முன் அவன் அன்னை மனதில் அப்போதே இடம் பிடித்திருந்தாள்.
மகன் மனதில் இருப்பது தெரியாமல் ஸ்ரீஜாவை அவனுக்கு நிச்சயமும் செய்துவிட்டார், சில நாட்களுக்கு முன் அவன் வேலை காரணமாய் லண்டன் சென்றிருந்த போது.
வந்தவன் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்து அன்னையிடம் இப்பொழுது திருமணம் வேண்டாம் என போராடி பார்த்தான். ஆனால் காரணத்தை சொல்ல முடியவில்லை அவனால்.
யாரென்றே தெரியாத பெண்ணிற்காக திருமணத்தை நிறுத்த சொல்வாயா? முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும். அதற்கு என்ன பதில் சொல்வது?
"ஸ்ரீஜா ப்ளீஸ்! நான் எவ்வளவோ எங்க அம்மாகிட்ட சொல்லி பார்த்துட்டேன். ஒரு லெவல்க்கு மேலே செண்டிமெண்ட்டா பேசி பிளாக்மெயில் பன்றாங்க. அவங்களை எதிர்த்து என்னால பேசவும் முடியாது. அப்பாவும் இல்லாம, அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டதால தான் இன்னைக்கு இந்த ஒரு நல்ல நிலைமையில் இருக்கோம்.
அவங்களை எப்படி நான்.. ப்ச்! தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நீ நிறுத்திடு. நீ நம்புறியோ இல்லையோ நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அது தான் நிஜம். கல்யாணத்தை நிறுத்த என்னையே காரணமா என்ன வேணா சொல்லிக்கோ! நிறுத்திடு ப்ளீஸ்"
சண்டைகாரன் காலில் விழுவதை விட சாட்சிகாரன் காலில் விழலாம் என்ற நினைவில் தான் அன்று அன்னை ஸ்ரீஜாவை பார்க்க அழைத்ததும் சென்றான். அவளிடம் பேசவும் தனிமை கிடைத்தது. ஆனால் பலன்?
அதை நினைக்க நினைக்க கோபம் தலைக்கேற, அதை அப்படியே தன் காரின் வேகத்தில் காட்டினான். அப்போது மொபைல் மெசேஜ் வந்ததற்கான ஒலியை எழுப்பியது.
"உன் பயணத்தில் நானும் இருக்கிறேன்!
அதன் முடிவில் உன்னோடு பயணிக்க..
அறிந்துதான் இந்த வேகமோ? இல்லை
தொலைதூரம் செல்வதேயுன் நோக்கமோ?"
காலை வணக்கம் டாம்!.
மனம் இன்னும் சோர்ந்து போனது அர்ஜுனிற்கு.
'யாருடி நீ? ஏன்டி என்னை இப்படி மாத்தின?' மனம் புலம்பினாலும் காரின் வேகம் கட்டுக்குள் வந்தது.
"அத்தை! என்ன பண்றீங்க?" அர்ஜுன் செல்லவும், அவன் வீட்டினுள் நுழைந்தாள் ஸ்ரீஜா.
"வாடி என் மருமகளே! அது எப்படி கரெக்ட்டா அஜூ கிளம்பவும் வந்துடுற?" யாரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் ஸ்ரீ, தனக்கு பிடித்த அர்ஜுனின் அன்னை சாவித்ரியிடமும் எளிதில் நெருங்கி விட்டாள். அதற்கு சாவித்ரியின் குணமும் காரணம் என்றால் மிகையில்லை.
"எனக்கும் உங்க மகனை வழியனுப்ப வரணும்னு ஆசைதான். ஆனால் பாருங்க, இந்த கிளைமாட்க்கு காலையில் 10 மணிக்கு எழுந்துக்குறதே கஷ்டமா இருக்கு. நான் என்ன பண்றது?" ஸ்ரீ வம்பிழுக்க,
"அடிப்பாவி! அடுத்த வாரம் இதே நாள்ல நீ அர்ஜுன் பொண்டாட்டியா இந்த வீட்ல இருக்கனும் ஞாபகம் இருக்குல்ல?" என்றார்.
"அதை எப்படி மறப்பேன்! அதுக்காக தான் 10 மணிக்கெல்லாம் எழுந்து பழகிட்டு இருக்கேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சீக்கிரம் எழுந்து ஒரு, ஒரு வருஷத்துல எழுந்து படிச்சிடமாட்டேன்?"
"ஹ்ம்ம் சரியா போச்சி போ! நீ வா, உன்னை எப்படி எழுப்பி வேலை வாங்குறேன்னு பாரு!" மாமியார் சொல்லில் சிரிப்புதான் வந்தது ஸ்ரீக்கு.
"ம்ம் பார்க்கலாம் அத்தையாரே! எனக்கு பசிக்குது" என்றவாறு கிட்சேன் சென்று தட்டில் இட்லிகளை போட்டுக் கொண்டு மொபைலுடன் அமர்ந்து விட்டாள்.
சாவித்ரியை பார்த்த உடனே அவளுடன் ஒட்டிக் கொண்ட ஸ்ரீக்கு இது எப்போதும் வழக்கமான ஒன்று தான்.
அர்ஜுனிற்கு கல்லூரி நாட்களில் நண்பர்கள் மூலம் ஸ்ரீ அவனை விரும்புவதும், ஆங்காங்கே நின்று பார்ப்பதும் தெரியும். ஆனால் கண்டு கொள்ளமல் விட்டுவிடுவான்.
அவள் இவன் வீட்டிற்கு வர ஆரம்பித்த போது கூட தன் அன்னையிடம் மறைமுகமாக ஆரம்பித்து ,நேராகவும் அவளை வர வேண்டாம் என சொல்லி பார்த்தான். ஆனால் பெண்கள் கூட்டணியே வெற்றி பெற்றது.
அதற்காக இப்படி தன் நிலைமை இதுவரை வந்து நிற்கும் என அவன் நினைத்தும் பார்த்ததில்லை.அதுவும் ஒரு பெண்ணிற்காக அன்னை சொல்லை கேட்க முடியாமல் தவிப்பான் என நினைத்தும் பார்த்திருக்கமாட்டான்.
"குட் மார்னிங் சார்... குட் மோர்னிங் சார் .."
கம்பெனியில் ஒவ்வொருவராய் எழுந்து வணக்கம் வைக்க, அதை கவனிக்கும் நிலையில் எல்லாம் அர்ஜுன் இல்லை.
"பேட் மார்னிங் ஜெர்ரி!"
தன் மனம் கவர்ந்தவளுக்கு தன் அறை வந்ததும் அந்த நாளின் முதல் மெசேஜை அனுப்பி வைத்தான்.
"ஏன் டாம், இப்பல்லாம் தினமும் கோபம், டென்ஷன்னு உன் முகமே டல்லா இருக்கு?" ஜெர்ரியின் மெசேஜில் இவனுக்கு இன்னும் கோபத்தில் பிரஷர் தலைக்கு ஏறியது.
"உனக்கு தெரியாதா?" ஒரே கேள்வி தான் கேட்டு அனுப்பினான். அதற்கான பதில் என்ன வரும் என தெரிந்தே!
"உன்னை புரிந்த என்னால்,
என் வலிகள் சொல்ல
வார்த்தையில்லை!"
கவிதையின் அர்த்தமும் ஒன்று தான். நான் எதுவும் செய்ய போவதில்லை என்பதே அது.
"ப்ச்! போடி" அனுப்பிவிட்டு மொபைலை தூக்கி போட்டான் அர்ஜுன். என் கண்முன் நடமாடும் அவளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேனா என்ற பயத்தில்.
தினமும் அவன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என அனைத்தும் அவள் அறிந்து வைத்திருப்பாள். அதுவும் அவனுக்கு தெரியாமலே!.
அதையும் அவனிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். இப்படியே நாட்கள் நகர ஒருநாள் அதுவே அவனை அவள் பக்கம் சாய வைத்தது.
3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது கண்முன் நிழலாய் விரிந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம்..
பைக்கில் நண்பனுடன் சென்று கொண்டிருந்தான் அர்ஜுன்.
"டேய் மச்சி! ஏன்டா இவ்வளவு ஸ்லோவா போற? கொஞ்சம் வேகமாதான் போயேன்! சைக்கிள்ல போறவன்லாம் முந்தி போறான் டா" நண்பன் ஆதி சொல்ல,
"உனக்கு வேணும்னா நீ நடந்து போ! இதுக்கு மேலே வேகமா போனா அம்மா திட்டுவாங்க மச்சி!"
அர்ஜுன் வாய் நண்பனுக்கு பதில் கூறினாலும், சில நாட்களாக அவனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வந்து கொண்டிருக்கும் குறுஞ்செய்தியை நினைத்து கொண்டிருந்தது.
"மித வேகம் மிக நன்றாம்!
இப்படியே தொடரவும்"
சில நாட்களுக்கு முன் வந்திருந்தது அந்த மெசேஜ். யார் என்றே தெரியவில்லை. யார் என்று கேட்டாலும் பதில் இல்லை.
"டேய் டேய்! வேகமாக போக கூடாதுனு மட்டும்தான் அம்மா சொன்னாங்களா? முன்னபின்ன பார்த்து போக சொல்லலையா டா?" ஆதியின் கலவர பதறலில் கவனத்துடனே சென்றான் அர்ஜுன்.
"மச்சி கொஞ்ச நாளா தெரியாத நம்பர்லேர்ந்து மெசேஜ் வருது டா. யாருன்னு தெரியல. ஓவரா கேர் எடுத்து அனுப்புறாங்க. யார்னு கேட்டாலும் சொல்லமாட்றாங்க. யாரா இருக்கும் டா?" நண்பன் ஆதியிடம் அர்ஜுன் சொல்ல,
"மச்சி இப்பலாம் பிராங்க் பண்றதை ஒரு பொழப்பாவே வச்சிட்டு சுத்துறாங்க. பத்திரம் டா! தெரியாம பொண்ணுனு வழிஞ்சு வச்சிடாத! ஆமா நீ தான் பொண்ணுனு சொன்னாலே காத தூரம் ஓடுவியே! உன்கிட்ட யாரு டா விளையாடுறா?"
ஆதி கேட்கவும் தான் அப்படியும் இருக்கலாம் என்ற நினைப்பில் இவன் கண்டுகொள்ளாமல் விட்டது.
ஆனால் மெசேஜ் வருவதும் இவன் மேல் கொண்ட அக்கறையுமாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையுடன் காலை வணக்கம் தொடங்கி இரவு வணக்கம் வரை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அவனிடம் வழியவில்லை, கெஞ்சவும் இல்லை, அன்பும் அக்கறையும் மட்டுமே ஒவ்வொரு எழுத்திலும் தெரிய, அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாக காத்திருக்க ஆரம்பித்து, பேசவும் செய்து அது காதலாய் இந்த 3 வருடத்தில் வளர்ந்தும் விட்டது.
இவன் காதலை சொல்லியும் விட்டான் ஆனால் பதிலுமில்லை, அன்பும் அக்கறையும் குறையவுமில்லை.
மாலை நேரம் கடந்து செல்ல, மெதுவாக எழுந்து வீடு நோக்கி பயணித்தான் அர்ஜுன்.
இதற்கிடையே முன் எல்லாம் எவ்வளவோ உரையாடல்கள் இருக்கும் குறிஞ்செய்தி மூலம் இருவருக்கும்.
திருமணத்தை சொல்லியபின் அவளும் அதிகம் பேசுவதில்லை, இவனுக்கும் திருமணத்தை நிறுத்தும் வழி தெரியாமல் பேச முடியவில்லை.
"ஸ்ரீ எப்பவும் அஜூ வர்ற நேரம் கிளம்பிடுவ! இன்னைக்கு என்னவோ இங்கேயே தங்குற மாதிரி இருந்து டிவி பாக்குற?" சாவித்ரி கேட்க,
"அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க அத்தை! வந்ததும் போன் பண்ணுவாங்க" என்று சொல்லிக்கொண்டு இருக்க அங்கு வந்தான் அர்ஜுன்.
அதுவரை டீப்பாயில் கால்களை வைத்து சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் அவன் வந்ததும் எழுந்து நின்று ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். அவனும் அவளைத்தான் முறைத்து பார்த்துவிட்டு தனதறைக்கு சென்றான்.
"அஜூ சாப்பிட வா" அம்மாவின் குரலுக்கு வேறு வழி இல்லாமல் சென்றான்.
"இவ்வளவு நேரம் இருந்தவ சாப்பிடாம போறா. அவ அம்மா என்ன நினைப்பா? என்ன பொண்ணோ!" சாவித்ரி தனியாய் புலம்ப அவள் இல்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி அர்ஜுனுக்கு.
"ஏன்மா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி உட்கார வச்சு சாப்பாடு போடுறீங்களே, இதுக்கு எல்லாம் யாரும் அவங்க வீட்ல கேட்க மாட்டாங்களா?" ஒரு கோபத்தில் அர்ஜுன் கேட்டுவிட,
"டேய் என்ன பேச்சு பேசுற? வாயிலேயே போடுவேன். எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா டா. நீ குடுத்து வச்சிருக்கணும்" அம்மா அடுக்கி கொண்டே செல்ல, ஏன் தான் கேட்டோம் என்றாகிவிட்டது அவனுக்கு.
"சீனியர்! உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா நீங்க தான் சொல்லணும். நான் எப்படி உங்களை, அதுவும் எனக்கு புடிச்ச உங்களை வேண்டாம்னு சொல்லுவேன்?
இந்த ஏரியா முழுக்க நான் உங்களை விரும்புறேன்னு தெரியும். நான் போய் கல்யாணத்தை நிறுத்துவேன்னு நினைக்குறீங்களா? நீங்கள் விரும்புற பொண்ணு உங்களை விரும்பி... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னா கண்டிப்பா நான் எந்த தொல்லையும் பண்ணாம விலகிடுவேன். ஐ ப்ரோமிஸ்!
நான் உங்க பேச்சை கேக்கணும்னு தான் நினைக்குறேன் . பட் சாரி சீனியர்! நீங்க முதல் முதல்ல ஒன்னு கேட்டு என்னால செய்ய முடியாம போச்சு"
அன்று அவன் கெஞ்சி கேட்டும் கிண்டலில் ஆரம்பித்து பாவமாய் பார்த்து அவள் சொல்லி முடிக்க, கோபம் கோபம் கண்மண் தெரியாத கோபம் மட்டுமே அவனுக்கு.
யாரிடம் காட்டிட, எப்படி காட்டிட என தெரியாமல் அன்று விட்டவன் தான் இதுவரை ஸ்ரீயிடம் பேசவில்லை அவன்.
இதோ திருமண நாளும் வந்துவிட்டது. இனி என்ன செய்திட முடியும். ஒரு சிறுகுறிப்பு கூட தெரியாதவளை நினைத்து அழவா, எல்லாம் தெரிந்தும் திருமணத்திற்கு ஒத்து கொண்டவளை நினைத்து அழவா? தெரியவில்லை. ஆனால் அர்ஜுன் கண்களில் கண்ணீர்.
பெண்களுக்கு கண்ணீர் சிந்தும் உரிமையை கொடுத்த ஆண்டவன் ஆண்களுக்கும் கொடுத்திருந்தால் வாய்விட்டு கதறி அழுதிருப்பானோ என்னவோ!
இப்போது கண்கள் சிவந்து கண்ணீரை உள்ளிழுத்து கொண்டிருந்த வேளையில் அவன் மொபைலின் குறுஞ்செய்தி ஒலி.
"காத்திருந்த நன்னாள்..
பெண்ணவளின் பொன்னாள்!
இவள் எங்கும் செல்லவில்லை
உன்னோடும் உயிரோடும்
என்றும் உன் வாழ்வில்!
நன்றாய் பார்த்துக்கொள்..
நலம் வாழ்ந்திடுவோம்! நன்றாகவே!"
முழுதாய் புரிந்தும் புரியாமல் படித்தவன் அதை தூக்கி எறிய, நான்கைந்து பாகமாய் நொறுங்கி விழுந்தது. அதற்கும் காரணமும் உண்டே!
இவளை கைப்பிடிக்கத் தான் ஸ்ரீயை வேண்டாம் என்றான். ஆயிற்று இன்னும் சில நிமிடங்களில் மொத்தமாய் முடிந்தாயிற்று! இனியும் பேசி இருக்கும் உயிரையும் விட்டுவிட முடியாது.
ஸ்ரீயின் கணவன் என்று ஆனபின் அவளுக்கு உண்மையாய் இருந்து தானே ஆக வேண்டும். அப்படித் தானே ஆண்மகனாய் அன்னை வளர்த்தார்!.
ஆதி துணை மாப்பிள்ளையாய் வந்து அர்ஜுனை அழைத்து வந்தான் மணமேடைக்கு.
பெண்ணை அழைத்து வர சொல்லவும் பெண்கள் சூழ, மணப்பெண்ணாய் தலைகுனிந்து மேடைக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீ.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்.." என்ற சத்தத்தில் தாலியை கையில் எடுத்து அன்னையை பார்த்தவன் அவர் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பார்த்து, ஸ்ரீயின் முகத்தை கூட பார்க்காமலே அதை அவள் கழுத்தில் கட்டியிருந்தான்.
மஞ்சள் கயிற்றையும் அவனையும் மாறிமாறி பார்த்த ஸ்ரீக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
அனைத்து சம்பிரதாயங்களும் முடிய மாலை நேரம் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் பெண் வீட்டாருடன்.
ஒரு மாதத்தின் பின் ரிசெப்ஸன் ஹோட்டலில் வைக்கலாம் என ஸ்ரீயின் வீட்டில் சொல்ல, இப்போதிருக்கும் மனநிலைக்கு அதுவே சரி என்று விட்டான் அர்ஜுன்.
இரவு 8 மணி.
"ம்மா! தலை வலிக்குது. நான் போய் தூங்குறேன்" சாவித்ரியிடம் அர்ஜுன் சொல்ல, அங்கிருந்த பெண்கள் கூட்டம் மொத்தமும் அவனைத் தான் பார்த்தது.
"ஒன்னும் இல்ல! இன்னைக்கு ஃபுல்லா நின்னுட்டே இருந்த டையர்டு" அனைவரையும் சமாளித்து அர்ஜுனை தனியாய் அழைத்து வந்தார் சாவித்ரி.
"அஜூ! என்னாச்சு உனக்கு?"
"ஏன்மா?"
"அஜூ இன்னைக்கு என்ன நாள்? ஏன் இப்படி இருக்க? தலைவலிக்குதுன்னு அவ்வளவுபேரு முன்ன வந்து சொல்ற? எல்லாரும் என்ன நினைப்பாங்க?" அம்மாவின் கேள்வியில் மேலும் சோர்ந்தான்.
"சரி நீ ரூம்க்கு போ. நான் ஸ்ரீகிட்ட பால் குடுத்து விடுறேன்" என்கவும் ,மேலும் ஏதோ சொல்ல வந்தவன் எதுவும் சொல்லாமல் மேலேறி சென்றான்.
"சீனியர்! பால்" ஸ்ரீ நீட்ட, அவளை முறைத்து பார்த்தான்.
"உங்க போன்ல..." மேலும் பேச வந்தவளை கைநீட்டி தடுத்தான் அவன்.
"நினைச்சதை முடிச்சிட்டிங்க இல்ல? சந்தோசமா இருங்க! எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருங்க!"
"சீனியர் என்ன சொல்றீங்க? நான் தான் .."
"ஸ்டாப் இட் ஸ்ரீ! அம்மாவே என்னை புரிஞ்சுக்கல. நீ யாரு எனக்கு. ப்ச் போ!" என்றவன் அப்படியே படுத்துக் கொண்டான்.
நடுஇரவில் பசியிலோ தலைவலியிலோ முழிப்பு வர, எழுந்தவன் அங்கிருந்த பாலை எடுத்து குடித்துவிட்டு திரும்பி பார்க்க அவள் அங்கு இல்லை.
ஏனோ பயம்! லைட்டை எரியவிட, அங்கு ஒரு மூலையில் அமர்ந்தவாறே தூங்கியிருந்தாள்.
"ஏய்!.. ஏய் எழுந்திரு!.. ஸ்ரீ எழுந்திரு!" அவன் எவ்வளவு அழைத்தும் பயனில்லை.
"ஓஹ் அதான் நீ நினைச்சது நடந்துடுச்சு இல்ல. அந்த சந்தோஷத்துல நிம்மதியா தூங்குறியா?" தூங்குபவளிடம் பேசியவன்,
"எனக்கென்ன உனக்கு தான் கஷ்டம். அப்படியே தூங்கு!" என்றுவிட்டு போய் படுத்து கொண்டான்.
முழித்து பார்த்த ஸ்ரீயோ, "என்ன இவன்! அவன் பாட்டுக்கு போய்ட்டான். ச்ச! தூக்கிட்டு போய் பெட்ல போடுவான்னு நினச்சேன். போச்சா! கூப்பிடும் போதே பேசாமல் எழுந்திருக்கலாம்" என நினைத்தவள், சத்தம் போடாமல் எழுந்து அவனருகே படுத்துக் கொண்டாள்.
காலையில் அர்ஜுன் எழும்போது ஸ்ரீ அவனருகே நல்ல உறக்கத்தில் இருந்தாள். இவனும் எதுவும் சொல்லாமல் கிளம்பி கீழே வந்தான்.
"ம்மா நான் ஆஃபீஸ் கிளம்புறேன்" என்றவனை எதுவும் சொல்லாமல் முறைத்து பார்த்தார் சாவித்ரி.
"ம்மா! டிபன் எங்கே?" டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாய் திறந்து ஒன்றும் இல்லை என்றதும் மூடிவிட்டு கேட்டான்.
"இப்ப எங்க டா கிளம்புற?"
"இதென்ன மா கேள்வி? ஆஃபீஸ் தான்!"
"அர்ஜூன் எனக்கு புரியல. நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க? உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு. மறந்துட்டயா?"
"அதுக்கும் நான் ஆஃபீஸ் போறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?"
"தப்பு அஜூ! நீ இவ்வளவு சீக்கிரம் எழுந்து கிளம்பி வர்றதுலயே என்னால ஓரளவு யூகிக்க முடியுது. ஆனாலும் நான் அதை பத்தி பேசல. ஆனால் நீ போற ரூட் ரொம்ப தப்பு. எதனால உனக்கு ஸ்ரீயை புடிக்கல?" நேராய் கேள்விக்கு வந்தார் சாவித்ரி.
"நான் எப்பம்மா புடிக்கலனு சொன்னேன்? அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க தேவை இல்லாமல் குழம்புறீங்க. சரி நான் கிளம்புறேன். பை மா" என்றவன் நிற்காமல் கிளம்பினான்.
"குட் மார்னிங் அத்தை? அவர் கிளம்பிட்டாரா?" என்றவாறு வந்தாள் ஸ்ரீ.
"ஸ்ரீ உங்களுக்குள்ள என்ன தான்மா பிரச்சனை? எனக்கு என்னவோ பயமா இருக்கு?" சாவித்ரியின் பயம் அவர் முகத்திலேயே தெரிந்தது.
"அய்யோ அத்தை! நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? அஜூ கொஞ்சம் குழப்பத்துல இருக்காங்க. எல்லாம் சரி ஆகிடும் அத்தை"
ஸ்ரீயின் இந்த பொறுப்பான குணம் நினைத்து சாவித்ரிக்கு ஆறுதலாய் இருந்தாலும் மகனை நினைத்து கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.
"ஹெலோ கேன் ஐ ஸ்பீக் டூ அர்ஜுன்? ஐம் மிஸ்ஸஸ் அர்ஜுன்" ஸ்ரீ அர்ஜுன் ஆபீஸ்ஸிற்கு அழைத்திருந்தாள்.
"எஸ் மேடம் ஒன் மினிட்!" என்ற பெண்ணின் குரலுடன் சில நொடிகளில் அர்ஜுன் இணைப்பில் வந்தான்.
"ம்மா!"
"அம்மா இல்ல.. நான் ஸ்ரீ பேசுறேன்"
"ப்ச் உன்னை யாரு ஆஃபீஸ்க்கு கால் பண்ண சொன்னா? என் பர்சனல் நம்பர்க்கு கூப்பிட வேண்டியது தானே?"
"உங்க போன் உங்ககிட்ட தான் இருக்கா?" என்று கேட்டபின் தான் அவன் மொபைலை தேடவே செய்தான்.
"சரி சொல்லு. எதுக்கு கூப்பிட்ட?"
"அது... அது வந்து.. சாப்டிங்களா?" கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன் "அத்தை கேட்க சொன்னாங்க" என்று சேர்த்து கூறினாள்.
"ப்ச்! அம்மாகிட்ட நான் பேசுகிறேன்" என்றவன் அமைதியாகிவிட,
"அப்புறம் உங்ககிட்ட.. உங்ககிட்ட.. ஒன்னு சொல்லனும்" என்றாள் ஸ்ரீ.
"சீக்கிரம் சொல்லு!"
"நான்.. நான்.." அவள் இழுத்து இழுத்து சொல்ல, இவன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்தது.
"நீ யோசிச்சு வை. அப்புறமா சொல்லு" என்றவன் வைத்தும் விட, பெண் அவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே பயம் வந்தது அவள் நிலை எண்ணி.
இதுவரை ஏங்கும் எதற்கும் பேசுவதற்கு மட்டும் அஞ்சாதவள், இதோ வார்த்தைக்கு பஞ்சமாகி பயந்து நிற்கிறாள்.
"அஜூ! இது ஸ்ரீ அம்மா கொடுத்து விட்ருக்காங்க. ஸ்ரீ மேலே தான் இருக்கா. நீயே கொடுத்திடு" மாலை சோர்ந்து போய் வந்த மகனிடம் ஒரு பிக் ஷோப்பேர் பையை நீட்டினார் சாவித்ரி.
'இந்த எடுபுடி வேலையும் நான் தான் பார்க்கணுமா?' முனகலுடன் வாங்கி சென்றான்.
அறை கதவை தள்ள அதுவும் சத்தம் இல்லாமல் திறந்து கொண்டது.
ஸ்ரீ சரியாய் புடவையை கட்டி முடித்திருந்தாள். மாராப்பை அவள் தோளில் போடும் நேரம் தான் அவனும் வந்திருந்தான்.
"இடியட்! டோர் லாக் பன்னிட்டு என்ன வேணா பண்ண வேண்டியது தானே!"
இதற்கும் திட்டா என்றானது ஸ்ரீக்கு.
அதையும் மீறி "கையில என்ன?" என கேட்டாள்.
"உங்க அம்மா குடுத்தாங்களாம்" என சொல்லி கீழே வைக்க அது அப்படியே சாய்ந்து அனைத்தும் கீழே விழுந்தது.
"அய்யோ!" என அதை பார்த்த ஸ்ரீ பதறி அருகே வர, அதை பார்த்தவனுக்கோ கோபத்தில் முகமும் சிவந்தது.
"என்ன இது?" கண்கள் சிவந்து கோபத்தில் அவன் கேட்க ,இதை பார்த்தும் உனக்கு புரியவில்லையா என அவனை பார்த்து நின்றிருந்தாள் அவள்.
"கேக்கறேன்ல என்ன இது? இதெல்லாம் என்னோடது தானே?"
சிதறி கிடந்தது அவனின் கூலர்ஸ், அவன் உபயோகித்த பெர்ஃபியூம், சீப்பு, இன்னும் இன்னுமாய்.
"இதுக்காக தான் அடிக்கடி வீட்டுக்கு...." என்றவனின் பேச்சு பாதியில் தடைபட்டது அவளின் பேச்சில்.
"இந்த பொருட்கள் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுதா? வேற எதுவும் ஞாபகத்தில் இல்லையா டாம்?"
நான் கேட்டது நிஜமா? இவள் என்ன சொல்கிறாள்? டாம்! டாம்!
"ஸ்ரீ!" என்ன பேச என தெரியவில்லை. அழைத்தவன் அந்த பொருட்களை பார்த்தான்.
"உன் தலைமுடி கோதிடும் பொருளாய்
என்னை மாற்றிட ஆசை!
உன் விரல் தீண்டிட என் உயிர் சிலிர்க்குமே!"
ஜெர்ரி அனுப்பிய வரிகள்.. இன்று அவள் வாயிலாய், அவள் கைகளில் அவனின் சீப்பு. இப்போது ஞாபகம் வருகிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கவிதை ஜெர்ரி அனுப்பிய ஞாபகம்.
ஆணி அடித்தார் போன்று உண்மை நெற்றி பொட்டில் அடிக்கிறது அர்ஜுன் மேல். ஜெர்ரி... உதடுகள் அசைய வார்த்தைகள் விழவில்லை அதிர்ச்சியில்.
"ஜெர்ரி... நீ என் ஜெர்ரியா?" என்ன பேச எப்படி பேச தெரியவில்லை. தலை சுற்றுவது போல உணர்வு.
"ஏன் டாம்? உடல் வேறு மனம் வேறு தான்! என் மனச புடிக்கும் ஆனால் முகத்தை பிடிக்கல இல்ல? எனக்கும் தெரியுமே! என்னை பார்த்தாலே உங்களுக்கு புடிக்காதுனு தெரியுமே!
காலேஜ்ல நான் உங்க பின்னாடி சுத்தினது காலேஜ்க்கே தெரியும்போது உங்களுக்கு தெரியாதா என்ன? அப்பவும் நீங்க என்னை திரும்பியே பார்க்கல"
என்ன சொல்கிறாள்? உண்மை! இவள் தான் என் ஜெர்ரி! ஆனால் ஏன்? பல கேள்விகளுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
"அத்தை என்னை ஒரு பிரண்ட்டா ஏத்துக்க ஆரம்பிச்சதும் நீங்களும் என்கிட்ட பிரண்ட்லியாவாச்சும் பேசுவிங்க நினச்சேன்! ஆனால் அவமானப்படுத்துனீங்க!
அன்னைக்கு சொன்னிங்க இல்ல! நான் இந்த வீட்டுக்கு வர்றது பிடிக்கலைனு.. அதை நானும் கேட்டுட்டேன். ஆனால் அத்தை அடுத்த நாளே என் வீட்டுக்கு வந்து கவலைப்பட்டாங்க. அதனால தான் 3 வருஷம் முன்னவே அத்தைகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
என் மனச சொல்லிட்டேன். அவங்க விருப்பப்படி அவங்க மருமகளாவே இந்த வீட்டுக்கும் வந்து போய் இருந்தேன். அன்னைக்கு தான் உங்களுக்கு இன்னொருத்தியா என் மனசை உங்களுக்கு புரியல வைக்க முயற்சி எடுத்தேன். உங்ககிட்ட சொல்லவேண்டாம்னு எல்லாம் நான் அத்தைகிட்ட சொல்லல. அத்தையும் என்னை மாதிரியே உங்களுக்கே என்னை பிடிக்கணும்னு நினச்சுருக்காங்க"
"ஓஹ் மை காட்! ஸ்ரீ நீ என்ன சொல்ற? எனக்கு.. எனக்கு ஒன்னும் புரியல? ஆஹ்ஹ்..." அவன் மன வேதனையை கத்தி தீர்க்கப் பார்த்தான்.
"புரியும் டாம்! உங்களுக்கு என்னை, என் மனசை புடிக்கும் ஆனால் இந்த உருவத்தை தான் புடிக்காது. ஆனால் அதை மாத்த என்னால முடிலயே! அதனால் தான் என் மனசை உங்களுக்கு புரிய வைக்க ஜெர்ரியா டெய்லி உங்களுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சேன் அத்தை சம்மதத்தோட.." என சொல்லிக்கொண்டு அவன் முகத்தை பார்க்க, தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.
"ஒவ்வொரு நாளும் நீங்க வெளில கிளம்பும்போது நான் எங்க வீட்ல இருந்து பார்த்துட்டு இருப்பேன். காலேஜ்ல நீங்க போகும் போதும் வரும்போதும் உங்க பின்னாடியே தான் என் ஸ்கூட்டில வருவேன். உங்களுக்கு இதெல்லாம் புடிக்கல. பைத்தியக்காரதனமா தெரிஞ்சிருக்கும்..
ஆனால் என் உலகம் நீங்க மட்டும் தான் டாம். அதை இந்த உருவம் உங்களுக்கு உணத்தல.. அதனால தான்.. அதனால் தான்..." வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கி கொள்ள அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
"ஸ்ரீ...." என்று அதே அழுகையோடு அவளை அணைத்துக் கொண்டான் அவளவன்.
"சாரி டி... ரியல்லி சாரி! உன்னை நான்... நான் எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்.. சாரி ஸ்ரீ" அதே அணைத்த நிலையில் அவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தான்.
"ஸ்ரீ" என்று அவள் முகம் பார்க்க, அவன் வாயில் விரல் வைத்து "ஜெர்ரி" என்றாள்.
தலையை இடவலமாக ஆட்டியவன் "ஜெர்ரியா என் மனசுல வந்த உன்னை ஸ்ரீயா பார்க்காமல் விட்டுட்டேன் டா.. என் தப்புதான். மன்னிச்சுடு டி" மனதில் தோன்றிய சந்தோஷத்துடன் அவள் நெற்றி வகிட்டில் முத்தமிட, அவள் கண்மூடி அந்த நேர இதத்தை அனுபவித்தாள்.
"இந்த ஸ்ரீ எப்பவும் அர்ஜுனோட ஸ்ரீ" என்றவன் தன் மனதின் அனைத்து பாரமும் தீர அவளை அணைத்து நின்றான்.
நிழலுடன் இணைந்த நிஜமாய் அர்ஜுன்ஸ்ரீ...
சுபம்.