தன்னுடைய மனதிற்கு இனியவனின் கை பற்றி இருந்தவளும், பெங்களூர் வந்தது கூட தெரியாமல், அப்படியே தன் பின்புற சீட்டில் சாய்ந்து உறங்கி விட்டாள்.
விமானம் தரை இறங்கும் குலுக்கலில், மித்ரன் கண் விழித்து பார்க்க, காருண்யாவின் விரல்கள், அவன் கைகளுக்குள் சிறை பட்டு இருந்ததை அறிந்தான். உடனே சட்டென்று அவன் அவளது கைகளை விடுவிடுவிக்க, அந்த அசைவில் கண் திறந்தவள் அவனை பார்த்து குழப்பமாய் விழித்தாள்.
"சாரி காரு! சின்ன வயசுலேர்ந்தே உடம்புக்கு முடியலைன்னா, இப்படி தான் என் அம்மாவோட கையை கோர்த்து தூங்குவேன். அதை எல்லாம் தொலைச்சு பதினைந்து வருசங்கள் ஆச்சு. இப்ப ஏன் நான் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியலை வெரி சாரி!"
"இட்ஸ் ஓகே மித்ரன்! நீங்க ஜுர வேகத்தில் இருந்ததால், நான் தப்பாக எடுத்துக்கலை. தூக்கத்தில் 'தாங்க்யூ அம்மா'ன்னு கூட சொன்னீங்க. ஆமாம் உங்க அம்மா இப்ப எங்க இருக்காங்க?"
"அப்படியா சொன்னேன். சரி விடுங்க, நாம முதல்ல இறங்கலாம், மீதி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு விமானத்தில் இருந்து இறங்குவதில் முனைப்பை காட்டினான் மித்ரன். அவர்கள் இறங்கும் போதே, மாலை நான்கு மணி ஆயிற்று.
நான்கு பேரும் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினர். பெண்களுக்கு ஒரு அறையும், ஆண்களுக்கு ஒரு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் தயாராகி, மித்ரன் சொல்லும் அடுத்த வேலைக்காக காத்திருந்தனர்.
"ஃப்ரெண்ட்ஸ்! இப்ப நம்ம எல்லோரும், பெங்களூரில் சிறிய அளவில் தனியார் ஜூ அமைத்திருக்கும் நபரான, மணிகண்டனை சந்திக்க போகிறோம். நம் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதோடு இல்லாமல், ஆலோசனையும் தரப் போகிறார். ரொம்ப கஷ்டப்பட்டு, அவரோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன். அதனால அத நல்ல விதமா யூஸ் பண்ணிக்கோங்க"
"டபுள் ஓகே மித்ரன்" என மாளவிகா மகிழ்ச்சியுடன் சொல்ல, மற்ற இருவரும் ஆமோதிப்பதாய் தலையாட்டினர்.
மணிகண்டன் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த, ஆறு மணிக்கு சரியாக அவரை சந்திக்க சென்றனர்.
"வாங்க உட்காருங்க! அய்யா இப்ப வந்திடுவார்" என்று கூறிவிட்டு உள்ளே ஓடினார் அவர் வேலையாள் ஒருவர்.
அங்கே காத்திருந்த சமயத்தில் அவர்கள் நால்வரும், மணிகண்டனின் வீட்டை ஆராய்ந்தனர். வீடு பழங்கால முறைப்படி கட்டப்பட்டிருந்தது, முழுவதும் மரத்தாலான தரையும், ஓடுகள் வேய்ந்த கூரையும், நிலாமுற்றமும், முற்றத்தின் மேலே சிறுசிறு கம்பிகள் பொருத்தப்பட்டு, மழைநீர் முற்றத்தில் விழுந்து, ஒரு துளை வழியாக மண்ணிற்கு அடியில் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவற்றில் ஆங்காங்கே, பழந்தமிழரின் பண்பாடுகள் வரையப்பட்டிருந்தது. மற்றொருபுறம், பல வகை விலங்குகளின் படங்களும் அலங்கரித்து இருந்தது. இவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சிறிது நேரத்தில், தூய வெள்ளை வேட்டி சட்டையில் மணிகண்டன் அவர்கள் முன்னே தோன்றினார்.
"வாங்க மித்ரன்! வாங்க!" என எல்லோரையும் கை கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றார். அவரின் வீட்டை போலவே அவரும் பழம் பெருமை வாய்ந்தவராகவே இருந்தார்.
"அட நீங்களா? மன்னிச்சுக்குங்க நான் உங்கள் முதல்ல கவனிக்கல. வாங்க காருண்யா! உட்காருங்க" என மணிகண்டன் கூறவும், அனைவரும் திகைப்புடனும், ஆச்சர்யத்துடனும் காருண்யாவை பார்த்தனர். அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.
"என்ன மேடம் மறந்துட்டீங்களா? நான் ஆஸ்திரேலியாவில் இருந்த 'நியூ வேர்ல்டு பில்லபாங் ஜூ'விற்கு வந்திருக்கேன் . உங்களின் பேச்சுத்திறமையால கவரப்பட்டு, உங்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கிட்டேன். இதோ பாருங்க, அந்த புகைப்படத்தை கூட பெரிது செய்து மாட்டியிருக்கேன்" என சுவற்றில் உள்ள புகைப்படம் ஒன்றை காட்டினார். அதில் காருண்யா, சிவப்பு நிற பாண்டா குட்டியோடு, இவருக்கு அருகில் நின்று சிரித்து கொண்டிருந்தாள்.
"நீங்க பல பேரை பார்த்திருப்பீங்க, அதனால உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. ஆனா உங்கள பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் தான், நான் என்னோட ஜூவிலும் நிறைய மாற்றங்கள் செஞ்சிருக்கேன். மிஸ்டர் மித்ரன்! இவங்க உங்க கூட இருக்கும் போது, என்னோட ஆலோசனை, உங்களுக்கு தேவையே இல்லை" என்று காருண்யாவை மனதார புகழ்ந்தார் மணிகண்டன்.
"இல்ல சார், எல்லோருக்கும் எல்லாமும் தெரியாதில்ல. அதனால உங்க இந்தியா க்ளைமேட் பத்தியும் விலங்குகளுக்கு அதனால வரும் நல்லது, கெட்டது பத்தியும் சொல்லுங்க. அது மட்டுமில்லாம, நாளைக்கு காலைல உங்க ஜூவை பார்க்க நாங்க எல்லோரும் வரோம் சார். எங்களுக்கும் நிறைய ஐடியா கிடைக்கும்" என அலட்டி கொள்ளாமல், பாந்தமாக கேட்டு கொண்டாள் காருண்யா.
காருண்யாவை நினைத்து சித்தார்த் பெருமையுடன் நிற்க, மாளவிகா அவளை தோளோடு அணைத்து கொண்டாள். இந்த சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல், மித்ரன் தனியே நின்று, அந்த பில்லபாங் ஜூவில் எடுத்த புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
"என்னாச்சு மித்ரன்?" என சித்தார்த் கேட்கவும், "இல்லை சித்து, இந்த இடத்தையெல்லாம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கு, அது மட்டுமில்லாமல் உங்க தங்கச்சியின் பூனை கண், அந்த ரெட் பாண்டா எல்லாத்தையுமே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு!"
"அட! உங்களுக்கு தேஜாவூ மித்ரன். அதாவது இப்போது நடக்கும் விஷயம், முன்னாடியே நடந்தா மாதிரி ஒரு பிரம்மை தோன்றும் அது தான் இது" என்றான் சித்தார்த்.
"அப்படித்தான் இருக்கணும். நானும் ஆஸ்திரேலியா போனதில்லை, உங்க தங்கச்சியும் இங்கே வந்ததில்லை அதனால் தேஜாவூவாக இருக்க தான் வாய்ப்பிருக்கு" என்று கூறி, தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டான் மித்ரன்.
இதை கேட்ட காருண்யா தான், ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள்.
இவ்வளவு நாளா என் நினைவுகளை மறந்துட்டான், இல்லன்னா என் மேல் கொண்ட காதலில் கண்ணாமூச்சி ஆடுறான்னு நினைச்சிருந்தேன். ஆனால் இது இரண்டுமே இல்ல, அவனுக்கு மனதளவில் ஏதோ பிரச்சனை இருக்கு, முதல்ல அதை கண்டுபிடிக்கணும். அது தான் முதல் வேலை" என்று நினைத்து கொண்டாள் காருண்யா.
"சரி வாங்க எல்லோரும் போயிட்டு நாளைக்கு வரலாம். சாரை ரொம்ப நேரம் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று கூறிவிட்டு அனைவரையும் கிளப்பினாள் மாளவிகா.
"நில்லுங்க என்ன எல்லாரும் ஒண்ணுமே சாப்பிடாம போறீங்க?" என மணிகண்டன் கவலையுடன் கேட்க, "நாளைக்கு மதியம் விருந்தே சாப்பிட்டுக்கலாம் சார்!" என்று கூறி விடைபெற்றான் மித்ரன். அவனுடன் மற்ற மூவரும் கிளம்பினர்.
மாளவிகா, "சரி அடுத்தது என்ன ப்ளான்?"
"ம்ம், நீயும் சித்துவும் ஒரு வேலை விஷயமா வெளியே போறீங்க, நானும் காருண்யாவும் உங்களுக்காக ஹோட்டலில் காத்திருக்கோம்".
மாளவிகா, "அப்படி என்ன வேலை?"
"அத நான் சொல்றேன். முதல்ல கிளம்பு, டைம் ஆச்சு!" என அவளை கிளப்பி கொண்டு சென்றான் சித்தார்த்.
மாளவிகாவும், சித்தார்த்துடன் கிளம்பி செல்ல, காருண்யாவும், மித்ரனும் தனியே ஹோட்டலுக்கு திரும்பி சென்றனர்.
மித்ரன், "நம்ம ரெண்டு பேரு மட்டும், தனியே ரூம்க்கு போய் என்ன செய்ய போறோம். அதனால கீழ ஹோட்டல் ஸ்விம்மிங் பூலுக்கு, பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு, அங்க போய் காத்திருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் இப்ப வந்துடுவாங்க".
"அப்படி அவங்க இரண்டு பேருக்கு மட்டும் ஸ்பெஷலா என்ன வேலை கொடுத்திருக்கீங்க?"
"ஒரு வேலையும் இல்லை எல்லாம் கப்ஸா. இன்னிக்கு மாளுவோட பிறந்தநாள், அதனால் இரண்டு பேருக்கும் சேர்த்து, பக்கத்துல இருக்குற நதில ஒரு பௌர்ணமி இரவை உருவாக்கி தந்திருக்கேன். அப்படியாவது இந்த சித்தார்த் அவன் காதலை சொல்றானான்னு பார்ப்போம்".
காருண்யா, "என்ன சொல்றீங்க மித்ரன்?"
"ஆமாம்! சித்தார்த்தும், மாளவிகாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பது வெட்ட வெளிச்சமா தெரியுது. இன்னும் சொல்லாம மறைச்சு வெச்சு, என்ன பண்ணப்போறாங்க? அதான் இரண்டு பேரும், மனசு விட்டு பேசட்டும்னு ஏற்பாடு பண்ணேன். காதலை ரொம்ப நாள் சொல்லாம, மனசுல வெச்சிருந்தா ஒரு நாள் அது நமக்கு கிடைக்காமலே போய்டும்!"
"ம்ம், நல்லா பேசுறீங்க, உங்களை பத்தி ஏதாவது சொல்லுங்க" என்று அவன் வாயை கிளறினாள் காருண்யா.
"இருங்க அதுக்கு முன்னாடி ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்" என பேரரை கூப்பிட்டு வறுத்த இளஞ்சோளம், பாலாடைக்கட்டி கபாப் இரண்டையும் ஆர்டர் செய்தான். "உங்களுக்கு இந்த டிஷ் ஓகே தானே!" என அவளிடம் ஆர்டர் கொடுத்து முடித்து தான் கேட்டான்.
"இந்த ரெண்டுமே என்னோட ஆள் டைம் ஃபேவரெட்.சோ ஐ ஆம் வெயிட்டிங்!" என்றாள் காருண்யா. இந்த மித்ரனுக்கு ஏதோ மெமரி லாஸ் இருக்கு போல, அதான் என்னை பத்தி மறந்துட்டான், ஆனால் எனக்கு பிடித்த விஷயங்கள் மட்டும் அவன் அடிமனதில் ஞாபகம் இருக்கு என தப்பும் தவறுமாக யூகித்தாள் காருண்யா.
"ஆங் என்ன கேட்டீங்க? என்னை பத்தியா. நான் மித்ரன் எனக்கு ஒரே அப்பா சுந்தரம். நான் படிச்சது பி.பி.ஏ, என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் கவின். வரையறது எனக்கு மிகவும் பிடிச்ச விஷயம், சோஷியல் மீடியா சுத்தமா பிடிக்காது. அவ்ளோ தான்!" என்று கூறி அவனுடைய அக்மார்க் சிரிப்பொன்றை சிரித்தான் மித்ரன்.
"நீங்க பீஜி ஏதும் படிக்கலையா?"
"இல்லைங்க ரொம்ப நாளா உங்க ஆஸ்திரேலியால தான் பீஜி படிக்கணும்னு ஆசை. ஆனா படிக்க நேரம் அமையல. அப்பாவ தனியா விட்டுட்டு போய் படிக்க விருப்பமில்லை".
"இவன் அண்ட புளுகனா இல்லை அப்பாவியா?" என குழப்பத்தில் ஆவென வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தாள் காருண்யா.
"காரு கமான்! இப்ப உங்கள பத்தி சொல்லுங்க?"
"நான் காருண்யா, தமிழ் அப்பா, ஆஸ்திரேலியா அம்மா, இரண்டும் சேரந்த கலவை நான். அனிமல்ஸ்னா அவ்வளவு பிடிக்கும். பொய் சொன்னாலோ, கேலி செய்தாலோ சுத்தமா பிடிக்காது. தமிழ் பையனை தான், காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு, ஒரு காலத்தில் லட்சியம் வெச்சிருந்தேன்" என நைசாக அவன் மனதை கீறி பார்த்தாள்.
"ஏன் இப்ப அந்த லட்சியத்துக்கு என்னாச்சு?"
"இல்ல, இப்ப அது செட்டாகும்னு தோணலை".
"இல்லங்க, சீக்கிரமே நல்ல தமிழ் பையன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள். சீக்கிரம் சூடு போகறதுக்குள்ள இந்த பன்னீரும் பேபி கார்னும் சாப்டுடுங்க!" என தட்டை அவள் முன்னே நகர்த்தினான்.
"ரொம்ப நன்றி மித்ரன்!" என்று கூறி ஒரு பாலாடை துண்டை எடுத்து கடித்தாள்.
"நல்ல வேளை, எங்க நீங்க வீகன் உணவு முறையை பின்பற்றுறேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்" என்றான் மித்ரன்.
"என்னோட கருத்தே வேற மித்ரன். கண்ணுக்கு தெரிகிற தெரு நாய்க்குட்டியின் மீது இரக்கம் காட்டுற நாம, எங்கோ ஒரு மூலையில் நாம் செய்யும் வேலைகளால், அவஸ்தை பட்டு கொண்டிருக்கும் பனிக்கரடிகளை பற்றி யோசிப்பதில்லை மித்ரன். நம் முன்னோர்களுக்கு தெரியாததா? எளிதில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களை, பசிக்காக சாப்பிட்டால் அது தப்பு இல்லைங்கறது அவங்க கோட்பாடு. அதே தான் நானும் சொல்றேன், எத்தன அரிய வகை விலங்குகள் நம்மால் அழிக்கப்பட்டிருக்கு தெரியுமா? இதோ ரீசண்ட்டா கூட, ஒற்றை கொம்பு காண்டாமிருகம் மொத்தமா அழிஞ்சுபோச்சே, எத்தனை யானைகள் ரயில் தண்டவாளத்துல அடிபட்டிருக்கு, யானையா நம்ம வழில குறுக்க வருது? நம்ம தானே யானையோட இடத்தில தண்டவாளம் போடறோம்.
சின்ன சின்ன விஷயங்களை பத்தி அக்கறை எடுத்துக் கொள்ளும் நாம, பெரிய பெரிய விஷயங்களில் கோட்டை விடுகிறோம். நீங்க ஆரம்பிக்க போற ஜூவில் இவற்றையெல்லாம் பத்தி நிச்சயம் சொல்ல வேண்டும்" என்று தன் நீண்ட உரையை முடித்து, தன் முன்னே இருந்த ஒரு குவளை தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தாள்.
"ஏங்க இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க? நான் ஒரு சாதாரண கேள்வி கேட்டதுக்கு இந்த போடு போடறீங்க? அதான் மணிகண்டன் சார் உங்களை புகழ்ந்து கொண்டாடுறார். நீங்க கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கிங்க" என்றான் மித்ரன்.
"இதோ ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்!" என்று கூறி சென்றவள் கழிவறை கண்ணாடி முன் நின்று மௌனமாய் கண்ணீர் சிந்தினாள். அவள் கண்ணீர் அங்கே உள்ள மார்பிள் தரையில் பட்டு சிதறின.
"இவன் உண்மையிலேயே தெளிவா இருந்து, நம்மளை குழப்பறானா? இல்லை குழம்பி போய் இருக்கிறானா?" இதற்கான விடையை விரைவில் மாளவிகா மூலமாக கண்டுபிடிப்பேன் என சபதம் எடுத்து கொண்டு, மறுபடியும் மித்ரன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
அடுத்த சில நொடிகளில் மாளுவும், சித்துவும் வந்தனர். இருவரும் ஜோடி புறாக்களாய் திரும்பி வருவார்கள், என்று நினைத்த மித்ரனுக்கு, இருவரும் சண்டைக் கோழிகளாய் திரும்பி வந்ததை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.