நீயே நினைவாய் - 22
மித்ரனின் பிறந்த நாளிற்காக, ஆவலுடன் காத்திருந்தாள் காருண்யா. எப்போது தான் விடியுமோ என்றிருந்தாள். "பரவாயில்லையே, உன் பயத்தை எல்லாம் விட்டுட்டு, இப்ப பழையபடி கலகலப்பா மாறிட்டியே" என்று அவள் மனசாட்சி கிண்டல் செய்தது. "நீ கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கியா, நானே நாளைக்கு சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி நல்லா போகணுமேன்னு நெனச்சிகிட்டு இருக்கேன், ஒரே டென்ஷனா இருக்கு. நாளைக்கு நான் என்னோட காதல சத்தமா, அவர் காதுக்கு மட்டும் கேட்க மாதிரி சொல்லப் போறேன்".
"ஹா ஹா அது என்ன, சத்தம் அவர் காதுக்கு மட்டும் கேட்கிறது?"
"இதெல்லாம் உனக்கு புரியாது, நீ பேசாமல் இரு!" என்று அவள் மனசாட்சியை தட்டி விட்டு உறங்க சென்றாள்.
மித்ரன் தன்னுடைய பிறந்த நாளிற்கு, காருண்யாவிற்கு ஏதேனும் சிறப்பு பரிசு கொடுக்க எண்ணி காத்திருந்தான்.
அடுத்த நாள் காலையில், வழக்கம்போல காருண்யா ஜாகிங் செல்ல, மித்ரன் காருண்யாவிற்காக ஆசையாய் வாங்கி வந்த வைர அட்டிகையை, பேக் செய்து காருண்யாவின் கப்போர்ட்டில் ஒளித்து வைத்தான்.
"இத பாத்த உடனே, காருண்யா எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ தெரியலையே" என்று யோசித்து, அவன் அடுத்து அடுத்து வாங்கிய இருபத்தி ஒன்பது பரிசு பொருட்களை, அவள் கப்போர்ட்டில் ஆங்காங்கே அடுக்கினான்.
இருபத்தி ஒன்பது பரிசு அவன் இருபத்தி ஒன்பது வயசிற்கான சான்று. அவளை மணம் முடித்ததே, அவன் பிறந்ததற்கான பலன் என்பதற்காக இந்த சஸ்பென்ஸ் பரிசுகளை ஏற்பாடு பண்ணியிருந்தான்.
"கனவில் வந்து
காதலை தந்தவளே
நினைவில் வந்து
நெஞ்சத்தை பறித்தவளே
காதல் மொழிகளை
கன்னி உன் வாயால் கேட்கவே
காத்திருக்கிறேன் நான் !!!"
என்று ஒரு வாழ்த்து அட்டையில் கவிதை எழுதி, அதையும் அவள் துணிகளின் இடுக்கில் அடுக்கி வைத்தான்.
எல்லாவற்றையும் செய்துவிட்டு, "காருண்யா உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது, அதை தெரிந்து கொள்ள என்னை ஆராய்ச்சி செய் - இப்படிக்கு உன் கப்போர்ட்"
என்று ஒரு குறுஞ்செய்தியை, அவள் அலைபேசிக்கு அனுப்பி வைத்தான்.
இவன் ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்க, அவன் அடுக்கி வைத்த வைர அட்டிகை சரியாக வைக்காததால் பெட்டியுடன் கீழே விழுந்தது. அதை மறுபடி எடுத்து வைக்கும் போது ஒரு சிறிய மர பெட்டியை பார்த்தான். ஆர்வ மிகுதியில் அதை திறந்து பார்த்தவன், பேரதிர்ச்சிக்கு உள்ளானான்.
அந்த அட்டை பெட்டியில், மித்ரன் கவின் மற்றும் காருண்யா ஆஸ்திரேலியா மாணவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படமும், மித்ரன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது காருண்யாவிற்காக எழுதிய கடிதமும் கிடைத்தது.
அதை பார்த்தும் மித்ரனின் தலைக்குள் யாரோ ஓ வென்று கத்தும் ஓசை கேட்டது, பழைய நினைவுகள் மாறி, மாறி அவன் மூளைக்குள் பளிச் பளிச்சென்று புகைப்படம் போல் வந்தது.
சில நினைவுகள் ஞாபகம் வந்தது, பல நினைவுகள் வராமல் போனது. ஒன்றும் புரியாமல், தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தவன் நேராக கிளம்பி எங்கோ பேனான்.
ஜாகிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த காருண்யா, தன் அலைபேசியில் மித்ரன் அனுப்பிய செய்தியை பார்த்து, வந்ததும் வராததுமாய், ஆர்வத்தில் தன் கப்போர்ட்டை ஆராயத் தொடங்கினாள். வைர அட்டிகை, உடையில் ஆரம்பித்து பல பரிசுகளை அடுக்கி இருந்தான் மித்ரன்.
இதை பார்த்து மலைத்து போன காருண்யா, "நியாயமா பார்த்தா நான் தான் மித்ரனுக்கு கிஃப்ட் கொடுக்கணும். எல்லாத்துலயும் இப்படி முந்திரி கொட்டை மாதிரி முந்திகிட்டா என்ன செய்வது" என மகிழ்ச்சியுடன் அலுத்து கொண்டவள், குளித்து முடித்து மித்ரன் தந்திருந்த கரு நீல புடவையை கட்டி, நகையை பூட்டி, கண்ணாடியில் தனக்கு தானே அழகு பார்த்து கொண்டாள். ஈரம் சொட்டும் தன் கார் கூந்தலை துடைத்து கொண்டிருக்கும் போது, காற்றில் ஏதோ காகிதம் பறக்கும் ஒலி அவள் காதில் விழுந்தது.
என்னவென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். மித்ரனோடு எடுத்த புகைப்படமும், கடிதமும் இருந்தது. "ஐயோ இது எப்படி வெளியே வந்தது, ஒரு வேளை மித்ரன் இதை பார்த்திருப்பாரோ?" என நினைத்தவளுக்கு பூமி தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது.
"மித்ரன்! மித்ரன்!" என அழைத்து பார்க்க எந்த பதிலும் வராததால், பதறி அடித்து தன் மாமனாரை பார்க்க ஓடினாள்.
"மாமா மாமா அவரை பாத்தீங்களா? ரூம்ல காணும்" என்றாள் பதட்டத்துடன், "தினமும் உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு, மாத்தி மாத்தி தேடிக்கிட்டு இருக்கீங்க, இங்க தான் இருப்பான் நல்லா தேடிப் பாரும்மா" என்றார் சுந்தரம்.
இவளும் வீடு முழுக்க தேடி விட்டு, அவன் அலைபேசிக்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மித்ரன் வராததால், அனைத்தையும் தன் மாமனாரிடம் கூறினாள் காருண்யா.
"ஐயோ! நான் எது நடக்க கூடாது என நினைச்சிருந்தேனோ, அது நடந்துடுச்சு. உன்னை யாரும்மா அந்த பழைய போட்டோ, பழைய லெட்டர் எல்லாம் கொண்டு வந்து இங்க வைக்க சொன்னது. இப்ப அவன் எங்க இருக்கான்? என்ன ஆனான்னு எப்படி தெரியும்? எல்லாம் என் தலையெழுத்து, நான் அப்பவே சொன்னேன் சித்தார்த்கிட்ட, இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்னு, ஏன் தான் இப்படி பண்றீங்களே?" என்று காருண்யா கடும் கடிந்து கொண்டு, பூஜை அறையை நோக்கி ஓடினார் சுந்தரம்.
"ருக்மணி! நீதாம்மா, நம்ம பையன எப்படியாவது நல்லபடியா திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கணும்" என்று பூஜை அறையிலேயே அமர்ந்து மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார்.
காருண்யாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தன் அண்ணனான சித்தார்த்திற்கு போன் செய்து நடந்ததை எல்லாம் கூறினாள்.
சித்தார்த் ஒரு பக்கம், குமரன் இன்னொரு பக்கமும் தேட, மாளவிகாவும் அவளால் முடிந்த அளவு அனைத்து இடங்களிலும் தேடிக் கொண்டிருந்தாள்.
சுந்தரம் பூஜை அறையிலிருந்து, மித்திரன் வரும்போதுதான் வெளியே வருவேன் என்று கூறி அங்கேயே தவம் இருந்தார்.
காருண்யா மட்டும் அவளுடைய அனைத்து கவலைகளையும், மேலே இருக்கும் சக்தியிடம் ஒப்படைத்துவிட்டு மிக தைரியமாக இருந்தாள்.
காலை பதினொரு மணிக்கு சுந்தரத்தின் வீட்டு தொலைபேசி அடித்தது. காருண்யாவே அதை எடுக்க, "மேடம் நாங்க 'சுகப்ரியா மருத்துவமனை'யில் இருந்து பேசுறோம். கொஞ்சம் பதட்டப்படாமல், பயப்படாமல் உடனே வாங்க!" என்று செவிலியர் ஒருவர் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
சுந்தரத்திடம் இதைப்பற்றி இப்பொழுது கூறினால், மனமுடைந்து விடுவார் என்றும், மருத்துவமனை சென்று மித்ரனை பார்த்துவிட்டு அவரிடம் தகவல் சொல்லலாம் என்று முடிவெடுத்து, முதலில் காருண்யா மட்டும் மாளவிகாவின் துணையோடு அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு போய் சேர்ந்தாள்.
நேராக வரவேற்பறைக்கு ஓடியவள் தன்னுடைய தகவல்களைக் கூறி மித்ரனை தேடினாள்.
"ஓ! நீங்கதான் மித்ரனோட வைஃப், அவருடைய பர்ஸில் இருந்த விசிட்டிங் கார்டு மூலமாகத்தான், உங்கள் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம். உங்களுக்காகத்தான் சீஃப் டாக்டர் காத்திருக்கார். நீங்க உள்ள போலாம்" என அந்த வரவேற்பறையில் இருக்கும் பெண்மணி தெரிவித்தார்.
காருண்யாவோடு சேர்ந்து மாளவிகாவும் மிகவும் பதட்டத்தோடு அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு, மருத்துவரை சந்திக்க சென்றாள்.
"உக்காருங்க மிஸஸ் மித்ரன், முதல்ல அவருக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க, அவர் எங்க மருத்துவமனையில் இருந்து சிறிது தூரம் தள்ளி இருக்கிற, பார்க்ல மயக்கம் போட்டு விழுந்து இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைச்சது. உடனே எங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, அவரை மீட்டு எடுத்து வந்து முதல் உதவி செய்துட்டோம். அவருக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு, ஆனாலும் என்னல்லாமோ சொல்லி கத்தி கதறுறார். அவர் கத்துவதை எங்களால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. அதனால இப்ப, அவருக்கு தூக்க மருந்து ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறோம். தயவுசெய்து அவருக்கு என்ன ஆச்சுன்னு, அவருடைய பழைய ஹிஸ்டரியை சொல்லுங்க" என்றார் அந்த மருத்துவர்.
காருண்யாவும் காலம் தாழ்த்தாமல் மித்ரன் பற்றிய அனைத்து விவரங்களையும் கூற, "சாரிமா! நான் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர். உங்க ஹஸ்பண்ட் கேசை விசாரிக்க, நரம்பியல் நிபுணரும், உளவியல் நிபுணர் தான் சரிவரும். நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் அவங்க ரெண்டு பேரையும் வர சொல்றேன்" என்று கூறிவிட்டு காருண்யாவையும், மாளவிகாவையும் வெளியே காத்திருக்க சொன்னார் மருத்துவர்.
"என்ன காருண்யா என்ன எல்லாமோ நடந்துருச்சு? நீயாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க கூடாதா? மித்ரனை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்ன பண்ண போற நீ?" என்று பயத்துடன் கேட்டாள் மாளவிகா.
"இல்ல மாளவிகா, மித்ரனுக்கு எதுவும் ஆகாதுன்னு, ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு. மித்ரனுக்கு உண்மை தெரியவரதும் ஒரு விதத்தில் நல்லதுதான். எத்தனை நாளைக்கு தான், எல்லாத்தையும் பூட்டி வைத்து, மறைத்து வைப்பது. இன்னிக்கு இல்லனாலும், என்னிக்காவது ஒருநாள் அவருக்கு தெரிஞ்சிடும். எல்லாத்துலயும் நம்ம நல்லதையே பார்ப்போம், நிச்சயம் நல்லதே நடக்கும்" என்று புது நம்பிக்கையுடன் சொன்னாள் காருண்யா.
பொதுவாக நிறைய பெண்கள், பிரச்சனை வருவதற்கு முன் அதை எப்படி சமாளிக்கப் போகிறோம், என்று தெரியாமல் பீதி அடைவார்கள் அல்லது கவலை கொள்வார்கள். ஆனால், அதுவே பிரச்சனை வந்த பிறகு, எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல், அதை மிக நேர்த்தியாக சமாளித்து விடுவார்கள். இது பெண் இனத்திற்காக, இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். அது போல்தான் காருண்யாவிற்கும் நிகழ்கிறது. மித்ரனுக்கு உண்மை தெரிந்து விடுமோ, என்று பயந்து திருமணத்தையே வேண்டாம் என்று கூறியவள், இப்பொழுது மித்ரனிற்கு உண்மை தெரிந்துவிட்டது என்று அறிந்தவுடன், அதை எப்படியாவது சமாளித்து, மித்ரனை பழைய மித்ரனாய் ஆக்கவேண்டும் என்று உறுதி கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து நரம்பியல் நிபுணரும் உளவியல் நிபுணரும் வந்தனர். காருண்யா அவர்களிடம் மறுபடியும் அனைத்து விவரங்களையும் கூற 'சினாப்டிக் ப்ரூனிங்' சில நேரங்களில் சில மனிதர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதனுடைய பக்கவிளைவுகளை, இதுவரை சரியாக ஆராய்ந்து இல்லை. தேவையில்லாத நினைவுகளை அழிப்பதை இயற்கையாகவே நமது மனிதமூளை செய்துவிடுகிறது. ஆனால் மிகவும் முக்கியமான விஷயங்களை, தேவைப்பட்ட மனிதர்களை, மிக மகிழ்ச்சியானதோ அல்லது மிக துக்கமான சம்பவங்களையோ, மனித மூளை எக்காரணம் கொண்டும் மறப்பதில்லை. அது அதனுடைய டேட்டா பேஸில், நன்றாக ஸ்டோர் செய்து வைத்து விடுகிறது. அந்த நினைவுகளுக்கு ஏற்றவாறு சம்பவங்கள் நிகழும்போது, அது அனைத்து டேட்டாக்களையும், மறுபடி நம்முடைய நினைவுக்கு கொண்டுவரும். அதுபோலத்தான் இப்போது மித்ரனுக்கும் நிகழ்ந்துள்ளது".
"என்னதான் நம்ம மருத்துவ முறைப்படி நினைவுகளை அழிக்க நினைத்தாலும், சில விஷயங்களை அழிக்க முடியாது. மித்ரனிற்கு அந்த கடிதத்தையும், அந்த புகைப்படத்தையும் பார்த்தவுடன் ஏதோ சில பல நினைவுகள் வந்து விட்டது. ஆனால் இன்னமும் அவருக்கு முழுதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை" என்று கூறினார் நரம்பியல் நிபுணர்.
"ஆக்சுவலி, இந்த மாதிரி புதுசு புதுசா டெக்னிக் யூஸ் பண்ணி, ஞாபகங்களை மறக்கடிக்க செய்கிறது இயற்கைக்கு புறம்பானதாக நான் பாக்குறேன். இப்ப காருண்யா, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான், நடந்த விஷயம் அனைத்தையும் தெள்ளத் தெளிவா மித்ரனுக்கு புரிய வைக்கணும். அதுக்கு அவர் எப்படி வேணா ரியாக்ட் பண்ணட்டும், அவர் அழட்டும், கத்தட்டும் இல்ல மௌனமா இருக்கட்டும். அதை அவர் போக்கிலேயே விட்டு விடுங்கள். அவருக்கு அதனால் மன உளைச்சல் ஆகும் அல்லது டிப்ரஷன் வரும் என்றெல்லாம், நாம் கவலைப்பட வேண்டாம். இந்த பழைய விஷயங்கள் நடந்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது, அதனால் அவருடைய மூளையோ உடலோ அதிகமாக ரியாக்ட் பண்ணாது. அந்த நேரத்திற்கு, அந்த மருத்துவ உதவி மித்ரனுடைய அப்பாவிற்கு சரியானதாக பட்டிருக்கலாம், ஆனால் அது தற்காலிகம் ஆனது தான். இப்போதைக்கு மித்ரனுக்கு தேவையானது உண்மை மட்டுமே வேறெதுவுமில்லை".
காருண்யாவும் இரண்டு மருத்துவர்களிடமும் சம்மதம் தெரிவித்து விட்டு, மித்ரனின் அறைக்கு சென்று அவன் கண் முழிக்க காத்திருந்தாள்.
காருண்யா சென்று 15 நிமிடத்திற்கு எல்லாம் மித்ரன் கண்திறந்து, காருண்யாவை பார்த்தான்.
"காரு எனக்கு உன்னை பத்தி சில விஷயங்கள் தான் ஞாபகம் இருக்கு, ஒரே குழப்பமா இருக்கு, ஏதோ பெரிய தப்பு பண்ண மாதிரி இருக்கு. என்னால நிம்மதியா இருக்கவே முடியல, எப்படி நீ கவின் கூட சேர்ந்து, என் கூட சேர்ந்து போட்டோ எடுத்து இருக்க, அதெல்லாம் எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லு!" என்று மித்ரன் காருண்யாவிடம் மன்றாடினான்.
காருண்யாவும் எதையும் மறைக்காமல், அவளுக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும், மித்ரனிடம் கூறினாள். இவை அனைத்தையும் கேட்ட மித்ரன், ஓவென்று கதறி அழ தொடங்கினான். "நானே என் நண்பன் கவினை கொன்னுட்டேனே. நான் மட்டும் அவன கம்பெல் பண்ணி, அந்த ஃபாரஸ்டிற்கு கூட்டிட்டு போகாமல் இருந்திருந்தால், அவன் இப்ப எல்லாம் நல்லா இருந்திருப்பான். இது தெரியாம அவன் எங்கேயோ காணாம போயிட்டான்னு, அவனைத் திட்டிக்கிட்டு இருந்திருக்கேன். நான் வாழவே தகுதியற்றவன்" என்று கதறி அழ தொடங்கினான் மித்ரன்.
"ஐயோ மித்ரன்! அப்படி எல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஆஸ்திரேலியா ஜூவில், அந்த குட்டி பாண்டா கரடி செத்து போன உடனே, நீங்க என்கிட்ட சொன்னீங்கல்ல, அந்த உயிர் அது வந்ததற்கான கடமையை முடித்து விட்டு சென்றது அப்படின்னு, அதே மாதிரிதான் மித்ரன், கவினுக்கும் நடந்தது. கவின் வந்ததன் நோக்கம் என்னவோ அது முடிஞ்சிருக்கும். அதனால்தான் அவருடைய உயிர் பிரிந்து விட்டது" என்று கூறினாள் காருண்யா.
"காருண்யா! அது இயற்கை மரணம். கவினுக்கு நடந்தது கொலை, நான்தான் கொலை பண்ணிட்டேன். ஒன்னு என்னையும் கொன்னுடுங்க இல்ல ஜெயில்ல தூக்கிப் போடுங்க. எனக்கு இங்க இருக்க பிடிக்கல" என்று மறுபடியும் கத்தினான் மித்ரன்.
"அப்படிப் பார்த்தால் நானும் ஜெயிலுக்கு போகணும் மித்ரன். நீங்க நினைக்கிற மாதிரி அந்த குட்டி பாண்டா கரடி தானா சாகல, அன்னைக்கு என்ன நடந்ததுன்னா, எப்போதும் போல இந்த குட்டி பாண்டா கரடி, என் காலை பிடித்து, என் உடையை பிடித்து வாலுத்தனம் செஞ்சிகிட்டு இருந்துச்சு. நான் கையில ரொம்ப கனமான ஒரு இரும்பு பெட்டியை வைத்து இருந்தேன், அது வந்து என் காலை பிடித்து இழுத்து, என் காலை நக்கியவுடன் எனக்கு கூசியதால், நான் பட்டென்று அந்த பெட்டியை கீழே போட்டுட்டேன், சரியாக அந்த நேரத்தில் இந்த சின்ன கரடியின் தலை, அதன் அடியில் மாட்டிக் கொண்டது. அந்தப் பெட்டி விழுந்தவுடன், அந்த பாண்டா இறந்து விட்டது" என்று கூறி காருண்யாவும் அழுதாள்.
"இல்லை காருண்யா! நீ என்ன சமாதானம் செய்தாலும், நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கவினை நான் தான் கொலை செய்து விட்டேன்" என தன் கன்னத்தை தானே அரைந்து கொண்டான்.
காருண்யா பதட்டத்துடன் செவிலியரை அழைக்க ஓடினாள். செவிலியர் வந்து மயக்க ஊசி போட்ட உடன் தான் அடங்கினான்.
இப்படியே பல மாதங்கள் தூக்கத்திலும், அழுகையிலுமே மித்ரனுக்கு கடந்தது. காருண்யாவின் அன்பும், நம்பிக்கையும் மற்றும் சுந்தரத்தின் வேண்டுதலும் மித்ரனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. தொடர்ந்து எடுத்த உளவியல் சிகிச்சையும், சிறிது முன்னேற்றம் கொடுத்தது.
"மித்ரன் நீங்க வேண்டுமென்றே கவினை கொல்லவில்லை, அன்று அப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு விதி இருந்தது. இதுக்கெல்லாம் பரிகாரமாக, நம்ம ஜூவில் கவின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்" என காருண்யா கொடுத்த அறிவுரை சிறிது வேலை செய்ய ஆரம்பித்தது.
மூன்று மாத கால சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்தான் மித்ரன். வீட்டிற்கு வந்தவுடன் நேராக, பூஜையறைக்கு சென்று, தன் தாயின் புகைப்படத்தை கட்டிபிடித்து அழுதான். "இத்தன நாள் உங்கள பத்தி தப்பா நினைச்சிட்டு, நான் தான் உண்மையில் தப்பா இருந்திருக்கேன்" என்று அழுதான்.
"இல்லப்பா, நான் அன்னிக்கே உனக்கு இப்படி ஒரு சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால், இந்த மாதிரி பிரச்சனை வந்திருக்காது. இப்போ உன்னோடு சேர்ந்து, அந்த பொண்ணும் நரக வேதனை அனுபவிக்கிறா. நடந்ததெல்லாம் நடந்துருச்சு, அவன் விதி அப்படி இருந்ததால, கவின் போய் சேர்ந்துவிட்டான். இங்க இருக்கிற காருண்யாவையாது நீ நல்லா பாத்துக்கோ! உனக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்து இருக்கா. அந்த பொண்ணு. நீ அவ மேல கொண்ட காதலையும் ,அவள் நினைவுகளையும் மறந்தாலும், உன்னை தேடி வந்து, உனக்கு அந்த காதலை மறுபடியும் கொடுத்தவ. நீ பழசெல்லாம் மறந்துட்டேன்னு தெரிஞ்ச உடனே, அவ உன் நல்லதுக்காகவும், பழைய நினைவுகள் உன்னை வந்து தொல்லை தரக்கூடாதுன்னும் நினைத்து, தன் காதலையே தியாகம் பண்ணிட்டு திரும்பி ஆஸ்திரேலியா போக இருந்தா, இப்ப கூட உனக்காக தான் ஒவ்வொரு நிமிஷமும், கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கா. முதல்ல போய் அவளைப் பாரு, அவ கூட சந்தோஷமா இரு. மறுபடியும் என்னால் இன்னொரு இழப்பையும் இன்னொரு மனச்சிதைவையும் தாங்க முடியாது" என்று அறிவுரை கூறி அனுப்பினார் சுந்தரம்.
அதுவரை கவினை பற்றியே நினைத்துக்கொண்டிருந்த மித்ரனுக்கு, அப்போதுதான் காருண்யாவின் காதலும், அவளுடைய தியாகமும் நினைவிற்கு வந்தது. காருண்யா நம்ம மேல எவ்வளவு காதல் கொண்டிருந்தால், இத்தனையும் நமக்காக செய்திருப்பாள். நாம் அவளுக்காக என்ன செய்திருக்கோம். ஒவ்வொரு முறையும் அவள் காதலை சொல்ல வரும்போது, ஏதாவது ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. காதலை சொல்வதற்கு, எதுக்காக நல்ல நாள், நல்ல தேதி எல்லாம் பாக்கணும், எப்போ தோணுதோ அப்போ சொல்ல வேண்டியதுதானே. மனதுக்குள் பூட்டி வைத்த காதலை சொல்வதை, தள்ளிப்போட்டால் தேவையில்லாத பிரச்சனை தான் வரும்" என்று அவன் மனசாட்சி வேற அவனுக்கு எடுத்துரைத்தது.
மித்ரன் தன் அறைக்கு சென்று பார்க்க, அங்கே காருண்யா கட்டிலில் அமர்ந்து கொண்டு, தன் முகத்தை முழங்காலில் புதைத்த படி உட்கார்ந்திருந்தாள்.
"காருண்யா" என்ற மித்திரன் அழைத்ததும் சடாரென்று நிமிர்ந்தாள். அப்போது தான் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருப்பதை கவனித்தான்.
"என்னாச்சு காருண்யா எதுக்காக அழற?"
"இல்ல மித்ரன், எல்லா பிரச்சினை என்னாலதான். நீங்க எனக்கு பெருமை ஏற்படுற மாதிரி, ஏதாவது செய்யணும்னு செய்யப்போய் தான், கவின் இறந்துபோனான். அதுவுமில்லாம அந்த பழைய நினைவுகளை மறந்து போன உனக்கு, என்னோட அஜாக்கிரதையால் தான் மறுபடியும் அந்த நினைவுகள் உனக்கு வந்துடுச்சு. எல்லா தப்பும் என் மேல் தான். பேசாம நான் மறுபடியும் ஆஸ்திரேலியாவிற்கே போகலாம்னு முடிவெடுத்துட்டேன்".
"காருண்யா ஐ லவ் யூ" என்றான் மித்ரன்.
"என்ன மித்ரன் சொல்றீங்க? நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க?"
"நான் எல்லாம் சரியா தான் சொல்றேன் காருண்யா, ஐ லவ் யூ. வாட் அபௌட் யூ? எனக்கு இப்ப இந்த கேள்விக்கான பதில் உடனே இப்பவே தெரிஞ்சாகணும், உன் பதிலை சொல்லு" என்று சொல்லிவிட்டு காத்திருந்தான் மித்ரன்.
"இல்ல மித்ரன், நான் உனக்கு ராசி இல்லை அதனால் நான் போறேன்"
"என் கேள்விக்கான பதில் இதில்லை காருண்யா, ஒழுங்கா என் கேள்விக்கான பதில சொல்றியா, இல்ல நான் மறுபடியும் கோவிச்சுக்கிட்டு, அந்த மனநல ஆஸ்பத்திரிக்கு போயிடவா?"
"அய்யோ மித்ரன் வேண்டாம் வேண்டாம் சொல்லிடறேன், ஐ டூ லவ் யூ" என்றாள் காருண்யா.
"இல்லையே, இது பதட்டத்தில் சொன்ன மாதிரி இருக்கு, நிறுத்தி நிதானமா வெட்கப்பட்டுகிட்டு சொல்லு பாக்கலாம்" என்று கேட்டான் மித்ரன்.
காருண்யாவிற்கு அவன் கேலி புரிய, சட்டென்று வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. நிலத்தை பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே, "ஐ லவ் யு மித்ரன்" என்றாள்.
உடனே அவளை இழுத்து அணைத்து, "ரொம்ப சாரி காருண்யா. ஏற்கனவே ஒரு மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேல் தெரிந்தோ, தெரியாமலோ யாரோட மனசையும், உடம்பையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைச்சிருக்கேன். தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை காயப்படுத்தி இருந்தால், மன்னிச்சுடு. நான் உன்னை மறந்துட்டேன்னு நெனச்சு, நீ எவ்வளவு கவலைப்பட்டு இருப்ப. ஐ ஆம் வெரி சாரி"
"யார் சொன்னா நீங்க என்ன மறந்ததுட்டீங்கன்னு? தினமும் கனவுல என்னோட கண்ண பாத்திருக்கீங்க, காருண்யாங்கற என் பெயரை மறக்கல, என் நினைவுகளால தான் இந்த ஜூ ஐடியாவே உங்களுக்கு வந்தது, அதனால் உங்கள் காதல் தான் கிரேட்!" என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
"நீயே நினைவாய்
நீங்காமல் இருந்தால்
நினைவெல்லாம் சர்க்கரை தான்!"
என்று அவள் காதோரத்தில் கிசுகிசுத்தான் மித்ரன்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு
நிலாச்சோறு உணவகத்தில் அன்று, மாளவிகா சித்தார்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பாரம்பரிய முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை சித்தார்த்தும், மணமகள் மாளவிகாவும் தேங்காயை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இடையில் புகுந்த ஒரு இரண்டு வயது சுட்டிப்பையன் அந்தத் தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடினான்.
"ஐயையோ! என்னங்க, கவின் இந்த தேங்காய் எடுத்துவிட்டு ஓடிட்டான்" என காருண்யா மித்ரனை பார்த்து கத்தினாள்.
"என் செல்ல குட்டில்ல, கவின் தங்கம்ல"
அந்த தேங்காயை கொடுத்திருப்பா" என்று மித்ரன் கெஞ்ச, "தரமாட்டேன் போங்கப்பா!" என்று கூறி தேங்காயை எடுத்து கொண்டு ஓடிப்போய், சுந்தரத்தின் மடியில் அமர்ந்தான், காருண்யா மித்திரனின் செல்லக்குட்டி கவின்.
------------ சுபம் --------------
இந்தக் கதை மனிதர்களிடத்தில் மட்டுமல்லாது மிருகங்களிடம் நாம் அன்பு செலுத்துவது முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தவே எழுதப்பட்டது ஆகும். அன்பு என்றால் ஒவ்வொரு மனிதரிடமும் போய், அவர்களை கொஞ்சி குலாவுவது அல்ல. உண்மையான அன்பு என்றால் நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கு தீங்கு நினைக்காமல் இருந்தாலே போதுமானது. தெரிந்தோ தெரியாமலோ நிறைய மனிதர்களையும் உயிர்களையும் தினமும் காயப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். முடிந்தவரை நாம் அதை தவிர்க்க முயற்சிப்போம். அன்பே அனைத்தும்.