நீயே நினைவாய் - 6
காருண்யாவும், சித்தார்த்தும் ஒரு சேர பொய் கூற தயாராயினர்.
காருண்யா, " நான் இங்க ஒரு ஆராய்ச்சி விஷயத்துக்காக வந்திருக்கேன் பெரியம்மா" என்றாள்.
"ஷ்ஷ்ஷ்! அவருக்கு நேரா மறந்தும் கூட பெரியம்மான்னு கூப்பிட்டுடாத, ஆன்டின்னே கூப்பிடு, சரியா. ரொம்ப அழகா தமிழ் பேசறம்மா, உங்கப்பா அந்த காலத்துலயே தமிழ் வல்லுநர் ஆச்சே, புலிக்கு பொறந்தது பூனையாகுமா?"
"ம்ம் ஆமாம் ஆன்டி, எனக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் கூட தெரியும். தமிழ்ல நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன். பொன்னியின் செல்வன் என்னோட ஃபேவரைட்" என்றாள் காருண்யா.
"சூப்பர் என்ன மாதிரியே இருக்கியே, எனக்கும் கதைன்னா உயிரு" என்று தேவயானியும் சிலாகித்து சொல்ல, அங்கே தன் தொண்டையை செருமிக் கொண்டே வந்தார் குமரன்.
"வணக்கம் சார்!" என்று பவ்யமாக வணக்கம் வைத்தாள் காருண்யா.
"ஆங் நீ சித்தார்த் ஃப்ரெண்ட்டோட தங்கச்சியா? இப்படி ஒரு வெளிநாட்டு நண்பன் இருக்கான்னு, அவன் இதுவரைக்கும் எங்கிட்ட சொல்லவே இல்லை" என்று கூறி காருண்யாவை ஏற இறங்க பார்த்தார்.
"அப்பா, அதான் நான் சொன்னேன்ல என் ஃபேஸ்புக் ப்ரெண்ட், கார்த்திகோட தங்கச்சி" என முந்தி கொண்டு வந்து சொன்னான் சித்தார்த்.
"ம்ம்ம், என்னம்மோ சொல்ற, ஆனா எதுவும் நம்பற மாதிரி இல்ல. சரி இந்த பொண்ணு பாக்க நல்ல பொண்ணா தெரியறா, உன் நண்பனின் தங்கச்சிய, உன் தங்கச்சியா பாக்கணும் சரியா, நம்ம வீட்டுக்கு வந்து தங்கிருக்கிற பொண்ண, நம்ம தான் நல்லா பாத்துக்கணும்" என சித்தார்த்தையும், தேவயானியையும் பாத்து சொல்லிவிட்டு சென்றார்.
"சூப்பர்! ஐடியா சக்ஸஸ்" என காருண்யாவின் கை பிடித்து குலுக்கினான் சித்தார்த்.
குமரன் பார்த்தவுடனேயே, காருண்யாவை கண்டுபிடித்து விட்டார். சித்தார்த்துக்கு மட்டும் தான் ஃபேஸ்புக் தெரியுமா என்ன, இவருக்கும் நவீன யுக பொருட்கள் எல்லாம் அத்துப்படி. ஃபேஸ்புக்கில், அவரின் தம்பி, முருகன் இட்ட புகைப்படங்கள் அனைத்தையும், யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்தவர் ஆயிற்றே. ஆசை ஆசையாய் வளர்த்த தம்பி, சொல்லாமல் கொள்ளாமல், வேறு நாட்டு பெண்ணை மணந்து கொண்டதில் மனக்கசப்பு இருந்தாலும், காலம் அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிட்டது. தனக்கு பெண் இல்லாத குறையை, காருண்யா தீர்க்க வந்ததாக நினைத்து மகிழ்ந்தார் குமரன். ஆனால் இதை தற்போதைக்கு வெளிக்காட்டி கொள்ளாமல் சித்தார்த்தின் போக்கு படியே போனால் சுவராஸ்யமாய் இருக்கும் என்று நினைத்தார்.
இது புரியாமல், தான் தன்னுடைய தந்தையை, வெகு சாமர்த்தியமாக ஏமாற்றியதாக நினைத்து மகிழ்ந்து கொண்டான் சித்தார்த்.
புதிய தங்கை வந்த மகிழ்ச்சியில், சித்தார்த் மாளவிகாவின் நினைவை, சிறிது ஒதுக்கி வைத்தான். காருண்யா வந்ததில் இருந்து, அவளிடம் கேட்டு கேட்டு சமைத்து தந்தாள் பெரியம்மா தேவயானி.
அவளுக்கு சென்னையை சுற்றி காட்டுவதிலேயே மும்முரமாக மூன்று நாட்கள் ஓடியது.
காருண்யா சென்னையை சுற்றி பார்க்க ஒப்புக் கொண்டதே, தன்னவனான யுவன் கண்ணில் பட மாட்டானா என்ற ஏக்கத்தில் தான். எங்கு நோக்கினாலும் யுவனின் பிம்பம் தெரிந்ததே தவிர, அவனின் நிஜ உருவம் கண்ணில் அகப்படவில்லை.
அவள் மனதில் உள்ளதை என்னவென்று கேட்க, சித்தார்த்தால் முடியவில்லை. சரி அவளா, எப்போது சொல்கிறாளோ சொல்லிட்டும் என்று விட்டுவிட்டான் சித்தார்த்.
அடுத்த நாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக சித்தார்த்தின் வீட்டிற்கு மாளவிகா வந்தாள். எப்போதும் நவீன உடையில் வருபவள், அன்று புடவை கட்டி பூச்சூடி அழகிய பதுமையாய் வந்திருந்தாள்.
"வாம்மா மாளு! பாத்து ரொம்ப நாளாச்சு, வீட்டுக்கு கூப்பிட்டா வரவே மாட்ட, இன்னிக்கு என்ன காலைலயே அட்டகாசமா புடவையில் தரிசனம் தந்திருக்க" என கிண்டலுடன் வரவேற்றார் தேவயானி.
அவர் கேள்வி கேட்ட அடுத்த நொடியே, ஓவென்று அழ ஆரம்பித்தாள் மாளவிகா.
"ஐயோ என்னம்மா நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். இப்ப ஏன் அழற?" என பதட்டத்துடன் கேட்டார் தேவயானி.
"நீங்க சொன்னதுக்காக அழல ஆன்டி, இந்த மூணு நாளா சித்து எங்கிட்ட பேசவே இல்லை. ஏன் ஒரு போன் இல்ல, மெசேஜ் கூட பண்ணல. அதான் என்ன ப்ரச்சனைன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்" என மூக்கை உறிஞ்சி கொண்டே கூறினாள்.
"ஓ இதுக்கு தான் இந்த அழுகையா? அவன் மூன்று நாட்களாய், என்னை கூட கண்டுக்கல, அதுக்காக நான் அழுதுகிட்டா இருக்கேன். சின்ன வயசுலேர்ந்து தனியா வளர்ந்த பய, அதான் புதுசா தங்கச்சி வந்தவுடனே இப்படி திரியுறான். அதுக்காக சின்ன வயசிலேர்நது உன் கூட பழகின ஃபிரெண்ட்ஷிப்ப மறக்க மாட்டான். நீ போய் அப்படி ஹால்ல உக்காரு, நான் காபி எடுத்துட்டு வரேன்" என்று கூறிவிட்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் சுடச்சுட காபி கொண்டு வந்து தந்தாள்.
"சித்து எங்க ஆன்டி?"
"அவன் காருண்யா கூட ஜாகிங் போயிருக்கான் மா, இப்ப வர நேரம் தான்".
"இந்த மங்குனி எப்பலேர்ந்து ஜாகிங் எல்லாம் போக ஆரம்பிச்சான். நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்குவானே!" என மாளவிகா யோசித்து கொண்டிருக்கும் போதே சித்தார்த்தும், காருண்யாவும் ஜாகிங் முடித்துக்கொண்டு வந்தார்கள்.
சித்தார்த், மாளவிகாவை கண்டும் காணாதது போல் உள்ளே செல்ல, காருண்யா இவளை அடையாளம் கண்டு கொண்டு இவள் அருகே வந்தமர்ந்தாள்.
"வாவ் மாளவிகா, வாட் எ சர்ப்ரைஸ்? என்ன காலையிலேயே வந்திருக்கீங்க?" புடவையில் செம்ம அழகா இருக்கீங்க. எனக்கே உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது" என சித்தார்த் காதில் விழும்படி வேண்டுமென்றே கத்தினாள் காருண்யா.
"சும்மா இந்த பக்கம் ஒரு வேலை அதான்" என்று கூறி உண்மையை தவிர்த்தாள் மாளவிகா.
"ஓகே மாளு, நீங்க இன்னிக்கு பத்து மணிக்கு ஃப்ரீயா? எனக்கு லேடீஸ் அயிட்டம்ஸ் நிறைய வாங்க வேண்டியது இருக்கு, அண்ணன் கூட போக முடியாது. அதனால என் கூட ஷாப்பிங் வர முடியுமா?"
"ம்ம், சரி காருண்யா வரேன்".
"அப்ப ஒகே, நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க, நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன். இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்" என்று துள்ளி கொண்டு ஓடினாள் காருண்யா. வெளியே போகும் சாக்கில் தன்னவன் கண்ணில் படமாட்டானா என்ற நம்பிக்கையே அந்த துள்ளலுக்கு காரணம்.
மாளவிகா பொறுத்து பொறுத்து பார்த்து, சித்தார்த் வெளியே வராததால் நேராக அவன் அறைக்கு சென்று அவன் அறையை தட்டினாள்.
"ஒரு நிமிஷம்" என்று கூறி ஒரே நொடியில் கதவை திறந்தான் சித்து, வெளியே நின்று கொண்டிருந்தவளை பார்த்து, "என்ன மாளு, எப்ப வந்த?" என்றான்.
"டேய் ஓவரா நடிக்காத, நான் ஹால்ல உக்காந்திருந்தத நீ பாத்த, அத நானும் பார்த்தேன். என்ன தங்கச்சி வந்தவுடனே என்னை மறந்துட்டியா?"
"மறக்கல்லாம் இல்லை. இது உனக்கு வெச்ச டெஸ்ட் மா, டெஸ்ட்!"
"டெஸ்ட்டா என்ன டெஸ்ட்? எதுக்கு?".
"எனக்கு இருக்கிறது, உனக்கும் இருக்கான்னு பாக்கத்தான்" என அவளுக்கும் தன் மேல் காதல் உள்ளதா என்பதற்காக, வெச்ச பரீட்சையே இது என மறைமுகமாக கூறினான்.
"ம்ஹூம், உன்கிட்ட இல்லாத மூளை எங்கிட்ட நெறையவே இருக்கு, சரி சீக்கிரம் கீழே வா, நாங்க சாப்பிட்டுட்டு கிளம்பணும்" என்று அவன் மறைமுகமாய் கூறியது, புரிந்தும் புரியாமலும் இருக்க, வழக்கம் போல் அவனை கிண்டலடித்து விட்டு கிளம்பினாள் மாளவிகா.
"நாங்களா? உன்கூட வேற யாரையும் நான் பாக்கலையே!"
"நானும் உன் அருமை தங்கச்சியும் ஷாப்பிங் போகப்போறோம், இப்ப கிளம்பினா தான் நைட் பத்து மணிக்கு வர முடியும்" என்றாள் மாளவிகா.
"அடிப்பாவி! இப்ப காலைல ஏழு மணி தான் ஆகுது. இப்பவே ஷாப்பிங்கா, உன்னெல்லாம் ஃப்யூச்சர்ல எப்படி சமாளிக்க போறேனோ" என மறுபடி தன் காதலை சொல்ல, "அதெல்லாம் நான் ஆன்டி கூட போய்கறேன்" என்று கூலாக பதில் சொல்லிவிட்டு, தோளை குலுக்கி சென்றாள் மாளவிகா.
ஒரு வழியாக, இரு பெண்களும் நகரில் உள்ள பெரிய பல்கடை அங்காடிக்கு சென்றனர்.
"காருண்யா இங்க எல்லாமே கொஞ்சம் காஸ்ட்லி தான், ஆனா க்வாலிட்டி நல்லா இருக்கும். எந்த கடைக்கு முதல்ல போகணும்னு சொல்லு, அங்க போலாம்".
"பொறுமையா போகலாம் மாளு, கொஞ்ச நேரம் சுத்தி பாக்கலாம்" என அவளையும் அழைத்து கொண்டு, அங்கிருந்த அங்காடிகளை ஒவ்வொன்றாய் வலம் வந்தாள் காருண்யா. அங்கிருந்த பொருட்களை பார்ப்பதாய் வெளியே காட்டிக் கொண்டாலும், எதிரில் தென்படும் மனிதர்களின் முகத்தையே உற்று உற்று பார்த்து கொண்டு வந்தாள் காருண்யா. அதுவும் யுவனின் வயதை ஒத்த இளைஞர்கள், முதுகு காட்டி கொண்டு நின்றிருந்தால், ஓடிச்சென்று அவர்கள் முகத்தை வேறு பார்த்து விட்டு வந்தாள்.
காருண்யாவின் பதட்டத்தையும் படபடப்பையும், மாளவிகா நன்றாக கவனித்து அவளை புரிந்து கொண்டாலும், அவள் மனதை மாற்ற "ஏம்மா காரு, ஏதோ பட்டிக்காட்டான், மிட்டாய் கடையை பாக்குறா மாதிரி, மறுபடி மறுபடி பாத்த கடைகளையே பாக்குறியே!" என்று கூறி அவள் சிந்தனையை கலைத்தாள்.
"என்னை என்னன்னு சொல்லி கூப்பிட்ட மாளு? காருன்னா கூப்பிட்ட? ஐயோ எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு, மயக்கமா வருது" என்று கூறி மாளவிகாவின் கையை அழுந்த பற்ற, "அதோ அங்க இருக்கிற காபி ஷாப் போலாம் வா" என காருண்யாவின் கையை பிடித்து மெதுவாக அங்கே அழைத்து சென்றாள் மாளவிகா.
அடுத்த சில நொடிகளில் காபி வந்ததும், அதை அருந்தி கொண்டே, கேள்விக்கணையோடு நோக்கினாள் மாளவிகா.
காருண்யாவின் இரு விழிகளிலும், நீர் திரண்டு, எப்போது வேண்டுமானாலும் மதகை உடைத்து வெளியே வர தயாராய் இருந்தது.
"காரு! ஐ நோ எவ்ரி திங். எனக்கு எல்லாம் புரியுது. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்யறேன்" என அவள் கையை ஆதரவாக பிடித்தாள் மாளவிகா.
எங்கே மாளவிகாவின் அன்பில் அனைத்தையும் சொல்லிவிடுவோமோ என அஞ்சி, கூட்டு புழுவாய் தன்னை சுருங்கி கொண்டாள் காருண்யா. தன் காதலை பற்றி, தனக்கே ஒழுங்காய் தெரியாத போது, இவளிடம் என்ன சொல்லி உதவி கேட்பது என்று வேறு யோசித்து, "சரி ஷாப்பிங் செஞ்சது போதும் வா வீட்டுக்கு போகலாம்" என்று மாளவிகாவை அழைத்து கொண்டு, புறப்பட தயாரானாள் காருண்யா.
"ஏய் காருண்யா, அங்க ஆன்ட்டிகிட்டயும் சித்துகிட்டயும் ஷாப்பிங்னு சொல்லிட்டு வந்து, இப்படி ஒண்ணுமே வாங்காம வெறுக்கையோட போனா, அவங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா. சீக்கிரம் ஏதாவது வாங்கிட்டு போகலாம்"
காருண்யாவிற்கும் அதுவே சரியென்று பட, அருகில் இருக்கும் வெள்ளி கடைக்கு சென்று, அங்கிருந்த பாண்டா உருவம் பதித்த பென்டன்ட் ஒன்றை வாங்கி கொண்டு புறப்பட்டாள். என்னவோ அந்த பென்டன்ட்டை வாங்கிய பிறகு, அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என அவள் மனசாட்சி எடுத்துரைத்தது.