நீரோட்டம்
அத்தியாயம்---12
கடற்கரை மணலில் அமர்ந்தார்கள். கடலின் அலைஓசை சங்கீதம் போல் கேட்டுக்கு கொண்டிருந்தது. அலையோடு விளையாடும் சிறுவரும் சிறுமியரும் எழுப்பிய குதூகலக் குரல் இன்னிசை கச்சேரி போல் இருந்தது. முறுக்கு சுண்டல் விற்பனைப் பையனிடம் இரண்டு பொட்டலம் சுண்டலும், நாலு முறுக்கும் வங்கிக் கொண்டு, அவளிடம் கொடுத்தார் வசந்தி. “சாப்பிடு மரகதம்....சின்ன வயதில் இந்தக் கடற்கரைக்கு வந்திருக்கிறேன்....அப்பவெல்லாம் கடற்கரை எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? நிறைய மணல்...கால் புதையப் புதைய நடப்போம்...மணல் எல்லாம் சிறுத்துவிட்டது...டயடிங் பண்ணிய பருத்த மனிதன் இளைத்த மாதிரி...” மரகதம் சிரித்துவிட்டாள். “மேம்...நீங்க கதை எழுதலாம்....” வசந்தியும் சிரித்தாள். “ட்ரை பண்ணேன், சரி வரலை...ஒவ்வொருடைய வாழ்க்கையும் ஒரு நாவல் தான்...மரகதம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு தான்...வந்து உனக்கு அதை புரிந்து கொள்கிற மனப் பக்குவம் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்....” வசந்தி அவளைக் கூர்மையாகப் பார்த்தாள். “சொல்லுங்க மேம்...நான் சரியான படி நீங்க சொல்றதை ஏத்துக்கறேன்...” வசந்தி மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
“நான் வைத்தீஸ்வரனைக் காதலித்தேன். இந்த மணல் குவியல் நடுவே தான் அமர்ந்து தான் என் விருப்பத்தைச் சொன்னேன்.” வசந்தி எங்கோ பார்த்தபடி சொன்னாள். முகம் கன்றி சிவந்திருந்தது. மரகதம் இதை எதிர்பார்கவில்லை. பிரமை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்தாள்.. இன்னும் என்னென்ன அதிசயங்களை கேட்க நேரிடுமோ. அவள் பதிலேதும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதிர்ச்சியா இருக்கா? அது ஒரு காலம். கனவு மாதிரி இருக்கு. நான் என் விருப்பத்தை சொன்னதும் அவர் என்ன செய்தார் தெரியுமா? விக்கி விக்கி அழுதுவிட்டார்...ஏன் தெரியுமா?....இப்போ நான் சொல்லப்போவது தான் கிளைமாக்ஸ்...” என்று சொன்னாள் வசந்தி. நீல வானம் ஆரஞ்சு நிறமாக மாறிக் கொண்டிருந்த சாயங்கால நேரம்...பொன்னொளி பரப்பிய சூரிய ரேக்குகள் கடற்கரையை அழகாக்கி விட்டிருந்தது. “வாழ்க்கை சத்தியமாக ஒரு விசித்திரம் நிறைந்த விளையாட்டு தான். சாதகமாக இருந்தால் மகிழ்கிறோம், பாதகமாக இருந்தால் விதியின் விளையாட்டு என்கிறோம். அந்த விதியின் விளையாட்டு ஒரு கொலைகாரன் செய்த கொலை மாதிரி கோரமாக இருந்தது. எஸ்...வைதீஸ்வரனின் அழுகையின் காரணம் புரிந்தபோது நான் அப்படித்தான் நினைத்தேன்....அவர் ஒரு இரும்புச் சங்கிலியால் கட்டி போடப் பட்டுவிட்டார். அதுவும் அவர் அப்பாவால். மரகதம்...வைத்தீஸ்வரனின் அப்பா செல்வரத்தினம் ஒரு செல்வந்தர். அந்தக் காலக் கட்டத்தில் அவர் தான் பெரிய பண்ணை வீடு வைத்திருந்தார்...கார் பங்களா என்று மிடுக்கான மரியாதையாகப் பார்க்கப்பட்டக் குடும்பம். பண்ணையில் வேலை செய்தவள் தான் அலமேலு. அவள் மகள் தான் கல்யாணி. வைதீஸ்வரனின் அப்பா ரத்னம் மனைவியை இழந்து இருந்த நேரம் அது. பண்ணை வீட்டில் அவர் ஓய்வு எடுக்க வரும் போது அலமேலு தான் சமையல் செய்து தருவது வழக்கம். கல்யாணி ஒரு நாள், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் நான் சமையல் செய்ய வந்திருக்கேன் என்று சமையலை ஆரம்பித்தாள். பிறகு அடிக்கடி வந்தாள் கல்யாணி. ரத்னம் அவளின் இளமையில் மையல் கொண்டு அவளை வசப்படுத்தி விட்டார். அறுபதும் இருபதும் எப்படி ஒத்தப் போயிற்று என்று கேட்காதே...அது தான் விதியின் விளையாட்டு. மனைவியை பறிகொடுத்த நிலையில் அவர் சேட்டை....வைதீச்வரனின் வாழ்வில் ஹிம்சையாகி விட்டது. ஒரு நாள் அப்பாவைத் தேடிக் கொண்டு அங்கு வந்த வைதீஸ்வரன்...அவரை அங்கு காணாமல் சுற்று முற்றும் தேட....மாந்தோப்பு அருகில் உள்ள சின்ன ஷெட்டில் அப்பாவையும் கல்யாணியையும் காணக் கூடாத நிலையில் கண்டுவிட....அவசரமாக எழுந்த ரத்னம்....பித்தளை குணமாக மாறிவிட்டார்...கல்யாணி கத்தியதில் பண்ணை ஆட்களும் அலமேலுவும் வந்துவிட...அந்த தகர டப்பா ரத்னம் “டேய்...என்ன காரியமடா செய்திருக்கே...சின்னப் பெண்ணோட...ச்சே...அதுவும் வேலைக்காரி...நம் அந்தஸ்து என்ன..கவரவம் என்ன...இப்படி பண்ணிடியே...” என்று மகன் மேல் பழியைப் போட்டு சத்தம் போட்டார். ஒரே களபரம். அலமேலு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி...தன் ஆட்களை கூட்டி பஞ்சாயத்து பண்ணி...இங்கே தான் விதி விளையாடவில்லை கொலை பண்ணிவிட்டது....அப்பா செய்த தவறுக்கு மகன் அவளுக்கு தாலி கட்ட நேர்ந்தது....” சொல்லும்போதே வசந்தி இப்பொழுது நடந்தது போல் அதிர்ச்சி அடைந்து மௌனித்தாள்.
மரகதம் மளுக்கென்று ஒடிந்து போனாள். உடம்பே ஆடியது. என்ன காரியம் இது! தன் மதிப்பை காப்பாற்ற மகனை குற்றவாளி ஆக்க எப்படி மனசு வந்ததோ! அம்மாடி...இது வசந்தி மேம் சொன்னது போல் விதியின் கொலைதான்... கேட்கவே நாராசமாக இருந்தது...”மேம்...வைதீஸ்வரன் சார்...மறுத்திருக்கலாமே...”
“நானும் அப்படித்தான் சொன்னேன்...அப்பாவின் முகத்தைப் பார்த்து பயந்து விட்டதாகச் சொன்னார். மின்சார ஷாக் அடைந்தால் எப்படி உயிர் போகிற வலி இருக்குமோ அப்படி இருந்ததாம். பேச முடியவில்லையாம். அதிர்ச்சியில் முளை வேலை செய்யவில்லையாம்...அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது...பழியை அவர் மீது போட்ட அப்பா ரத்னம் ரொம்ப நாள் உயிரோடு இருக்கவில்லை. கல்யாணியும் ஒரு குழந்தையை பெற்று விட்டாள். அந்தக் குழந்தை தான் சொக்கலிங்கம். தம்பியை மகன் என்று சொல்ல வேண்டிய நிலை.. கல்யாணியை மனைவி என்று சொல்ல வேண்டிய நிலை...சமுதாயத்துக்குப் பயந்து ஒரு முள் போர்வையை மகன் மீது வீசிவிட்டு மரணித்தார் ரத்னம்....சுருக்கமா சொல்லவேண்டுமென்றால் வைதீஸ்வரன் ஒடிந்து போவிட்டார். அப்ப போய் நான் என் காதலை சொன்னேன்...கதறி அழுத அவரை சமாதானப் படுத்தி உண்மையை தெரிந்து கொண்டேன். சரி நடந்தது நடந்து விட்டது...இது எனக்கு பிரச்சனை இல்லை..நான் உங்களை மணந்து கொள்கிறேன் என்றேன். உனக்கு பைத்தியமா? நானே என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்...இதில் நீ வேறா? என்றார். குழப்பமான மனநிலையில் நான் இனி வற்புறுத்தக் கூடாது என்று விட்டு விட்டேன். காலம் காத்திருக்குமா..எனக்கு என் அப்பா திருமணம் பேசி முடித்துவிட்டார்...நான் என் கணவரோடு சந்தோஷமாகதான் வாழ்ந்தேன். வைதீஸ்வரன் மேல் உள்ள காதல் நட்பாக மாறியது. அப்பப்ப வைதீஸ்வரனின் பரிதாப நிலைமை நியாபகம் வரும். பீஷ்மர் அப்பாவின் காதலுக்காக தன்னையே அர்ப்பணம் செய்த மாதிரி வைதீஸ்வரன் தன்னை அப்பாவின் கவுரவம் காக்க பழி சுமந்து நின்றார். “வசந்தி..அந்த நேரம் அப்பா கூனிக் குறுகி நின்ற போது செத்துவிட்டேன். அப்பா மிகவும் மதிக்கப்பட்ட மனிதர். அறுபது வயதில் கேவலப்பட்டு நிற்கிற போது எனக்கு அந்த அவமானம் வந்ததில்....அது இள வயதின் வேகம் என்று ஒரு வகை நியாயம் கற்பிக்கப்பட்டது.” என்றார். சிக்கல் நிறைந்த அவர் வாழ்வில் சிக்கலான நிலைமையில் உள்ள சாந்தா வந்து சேர்ந்தாள்....”
“இந்த தகவல் அதிர்ச்சியை விட அநியாயம் நிறைந்த தீர்ப்புன்னு தோணுது. வைதீஸ்வரன் சார் உண்மையை சொல்லி இருக்கணும். அறுபது வயதில் இளம் பெண் கேட்கிறதோ? அவரை சந்தி சிரிக்க வைத்திருக்கணும். தப்பு பண்ணிட்டார்...பழியை எதுக்கு சுமக்கணும்?” அந்தி வானம் போல் முகம் சிவக்க கோபக் கனல் வீச வெடித்தாள் மரகதம். வசந்தி பெருமூச்சுடன் சொன்னாள். “ நானும் அதே தான் சொன்னேன்...எனக்கு மனசே ஆரலை. பிள்ளைகள் நல்லா இருக்கணும்னு பெற்றோர் கவசமா இருப்பாங்க. இங்கே பிள்ளை கவசமா இருக்கார். என்ன சொல்ல முடியும்? அவர் வாழ்கை அவர் முடிவு....கல்யாணி வெந்து வெந்து செத்தாள் என்பது உண்மை. குமறிக் குமறி அழுதாள்.....அதுவே அவளுக்கு வியாதியாகப் போயிற்று. சொக்கலிங்கத்திற்கு நாலு வயது ஆனா போது அங்கு இருக்க விரும்பாமல் கல்யாணி, அம்மா அலமேலு வீட்டிற்கு போய்விட்டாள். போகும் பொழுது. “ஐய்யா...உங்களுக்கு தீராத பழியை கொண்டு வந்துட்டேன்...என்னை மனிச்சுக்கோங்க என்று கேக்ற அருகதை கூட எனக்கு இல்லேங்க...ஒரே ஒரு வேண்டுகோள்...புள்ளையே உங்க பிள்ளையா பார்த்துகிடுங்க....உங்களை கை எடுத்து கும்பிடறேன்....” என்று சொல்லி வைதீஸ்வரன் காலில் விழுந்து கும்பிட்டுப் போய்விட்டாள். பிறகு அவளுக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கை ஆகிவிட்டாள். மகளை துரத்திவிட்டதால் தான் அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று என்று ஒப்பாரி வைத்தாள் அலமேலு. கடும் கோபம் கொண்டாள். வைதீஸ்வரனுக்கு பெண் பார்கிறார்கள் என்று கேள்விப்பட்டு....எல்லா சம்பந்தத்தையும் கலைத்தாள். பிறகு வந்தது தான் உங்க அம்மாவோட வரன்....அலமேலு போய் அதையும் கலைத்தாள். சாந்தாவின் அம்மா கோமதியிடம் “நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை ஏற்கனவே என் பெண்ணைக் கெடுத்து குழந்தையும் கொடுத்து...பெரியய்யா புண்ணியத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டார்...அவர் இறந்ததும் என் மகளை துரத்திவிட்டார்...உங்க பொண்ணைக் கொடுக்காதீங்க...” என்றாள். கோமதி தயங்கினார். கல்யாணியிடமிருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்கி வந்து காண்பித்தால் மகளைத் தருகிறேன் என்று கண்டிஷன் போட்டார். வைதீஸ்வரன் வேறு வழி இல்லாமல் “என் கணவர் திருமணம் செய்து கொள்ள எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை..”.என்று கோமதி கேட்ட படி கல்யாணியிடம் கையெழுத்து வாங்கி சாந்தாவின் அம்மாவிடம் காண்பித்த பிறகு தான் கல்யாணம் நடந்தது...”
“வைதீஸ்வரன் சார், அம்மா கேட்டபோது குழந்தையை வைத்துக் கொள்ள அவர் சம்மதித்திருக்கலாம்...அவருக்கு பீஷ்மர் மாதிரி அப்பாவின் நலம் தான் பெரிதாக இருந்திருக்கிறது போலும்...அப்படி அவர் பெருந்தன்மையாக இருந்திருந்தால் அம்மா இப்படி கஷ்டப் பட்டிருக்க மாட்டாள்...”
“நானும் அவரிடம் அந்த யோசனையை தான் சொன்னேன்....அவர் சொன்ன பதில் கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...’
“அப்படி என்ன சொன்னார்?”
“வசந்தி...ஏற்கனவே என் குடும்பம் பழி சுமந்து நிற்கிறது. போகிற இடமெல்லாம் வருஷங்கள் கடந்தாலும் வேலைக்காரியை கல்யாணம் பண்ணி ஒதுக்கி வைத்துவிட்டு நாகரிக படித்த பெண்ணை மணந்து கொண்டுவிட்டார் என்று இடித்துக் காட்டுகிறது. இதில் வந்த பெண் ஏற்கனவே குழந்தை பெற்றவள் என்று தெரிந்தால்...அவனுக்கு நன்றாக வேண்டும் பெண் பாவம் பொல்லாதது அது தான் இப்படி ஆகிவிட்டது என்று கிண்டலும் கேலியும் வலுக்கும்...அதை சந்திக்கும் திராணி எனக்கு இல்லை என்றார்...அடிபட்டவர்களுக்கு தானே தெரியும் அதன் தாக்கம்....நீங்க ஒரு கோழை என்று அடிக்கடி சொல்வேன்...ஆனால் பாவமாக இருக்கும். போகப் போக எங்கே சாந்தா தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்று பயந்துவிட்டார். அவர் அன்பானவர் தான்....என்ன செய்வது அது தான் விதி...”
“விதி...பொல்லாத விதி...எங்க அம்மா மட்டுமா கஷ்டப்பட்டாங்க நாங்களும் தான்...”
“புரியுது மரகதம்...என்ன செய்வது இரு துருவங்கள் இணையுமா? அவரால் சாந்தாவை சமாதானப் படுத்த முடியவில்லை...என்னிடம் அறிமுகப் படுத்தினார்...நான் அவளிடம் நிறைய பேசி இருக்கேன். மகளை கொண்டு வந்து உன் தோழியின் மகள் என்று சொல்லி வளர்கலாமே என்றேன்...உன் மனம் ஆறும் என்றேன். அவள் மறுத்து விட்டாள்...குழந்தைக்கு நான் தான் அம்மா என்று தெரியணும்...எல்லோருக்கும் தெரியணும் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாள். அதற்கு வைதீஸ்வரன் ஒப்புக் கொள்ளவில்லை..போராட்டம், கோபம், பழி உணர்வு, விரக்தி என்று வாழ்கையை இருவரும் வீணடித்துக் கொண்டார்கள்...அதை விடு...மரகதம் இதை நான் ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால் சென்ற தலைமுறை செய்த தவறுகளால் உங்கள் வாழ்க்கையும் தேங்கிய குட்டை போல் ஆகிவிட்டது....இனிமேல் அப்படி ஆகக் கூடாது....போனது போகட்டும்...நீயும் சொக்கலிங்கமும், அருந்ததியும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். உங்கள் தலைமுறையினரின் வாழ்க்கை நீரோட்டம் போல் இருக்க வேண்டும். தனி தனித் தீவுகளாக பிரிந்து இருப்பது நல்லவா இருக்கு?”
“அப்ப சொக்கலிங்கத்திடம் நான் தான் சாந்தாவின் மகள் என்று சொல்லிவிட வேண்டுமா?”
“அவனுக்குத் தெரியாது என்று நினைத்தாயா? கல்யாணி சாந்தாவின் காதல் பற்றியும் அவளுக்கு குழந்தை இருப்பது பற்றியும் தன் அம்மா அலமேலுவிடம் சொல்லிவிட்டாள். அவள் கர்ம சிரத்தையாக சொக்கலிங்கத்திடம் சொல்லிவிட்டாள்...உன் அம்மா வைதீஸ்வரன் தான் சொல்லிவிட்டார் என்று அவரிடம் சண்டை பிடித்தாள்....அவர் எவ்வளவோ மறுத்தும் அவள் நம்பவில்லை. மேலும் மேலும் விரோதம் பாராட்டினாள். மறப்பதும் மன்னிப்பதும் எல்லோருக்கும் சாத்தியப்படாது மரகதம். சொக்கலிங்கம் விஷயம் தெரிந்து தான், நீயும் கொள்ளி போட சம்மதித்தான்...”
“அப்படியா...பெருந்தன்மையானவர் தான். அது சரி அவர் ஏன் அம்மாவை மட்டும் புரிந்து கொள்ளவில்லை?”
“சாந்தா....வைதீஸ்வரன் மேல் கோபமாக இருந்தாள். என் குழந்தையை நான் பார்த்துக்கொள்ள அவர் தடை போட்ட போது, அவர் குழந்தையை நான் ஏன் பார்த்துக்கணும் என்று பகை கொண்டாள். ஒரு முறை சொக்கலிங்கம் உடம்பு சரியில்லாமல் டைப்பாய்ட் ஜுரம் வந்து ஒரு மாதம் கஷ்டப்பட்டான். அவள் திரும்பிக் கூடப் பார்கவில்லை. அந்த கோபம் அவனுக்கு இருந்தது. அப்பொழுது அவனுக்கு பதினாறு வயது. விவரம் தெரிந்த பையன். அவன் கோபத்திலும் நியாயம் இருக்கிறது. சாந்தாவையும் குற்றம் சொல்ல முடியாது.” மரகதம் முத்துவை நினைத்து கொண்டாள். எல்லோரும் அவள் போல் ஆக முடியுமா? ஆனால் அம்மா
பாவம் அவளுக்கு இருந்த வலி முத்துவிற்கு இல்லையே. பெற்ற பிள்ளையை பார்க்கக் கூடாது என்று தடை போட்டால்....யாருக்குத்தான் கோபம் வராது? எல்லோரும் சூழ்நிலை கைதிகள் தான், என்று மரகதம் நினைத்தாள். பிறகு அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“கல்யாணி அம்மாவிடம் ஏது நகைகள்? தன் அம்மாவின் நகைகளை நான் திருடிக் கொண்டதாக சொக்கலிங்கம் பழி சுமத்தியது என்ன நியாயம்?’
“எல்லாம் அறியாமை தான். அந்த நகைகள் செல்வரத்தினத்தின் மனைவியின் நகைகள். கல்யாணிக்கு அவர் கொடுத்துவிட்டிருந்தார். தன் அம்மாவின் நகைகள் என்று எண்ணி சொக்கலிங்கம் கேட்டிருக்கான். நகைக்காக ஆசைப்படவில்லை அது தன் அம்மாவின் நகைகள் என்ற செண்டிமெண்டில் அப்படிக் கேட்டுவிட்டான். நீ தப்பாக எடுத்துக் கொள்ளாதே. நீங்கள் எல்லோரும் வளர்ந்த சூழ்நிலை ஆரோக்கியமானது இல்லை. சந்தேகங்கள்....நம்பிக்கை இன்மை...சுயநலம் என்று பல வட்டங்களுக்குள் சிறைபட்டு நசுங்கி போனது நிஜம். மரகதம்...உறவுகள் முக்கியம்...ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள்...போட்ட கோலம் மேல் தூசி படிந்து அழகு போய்விட்டது...புதிதாக கோலம் போடுங்கள். மன வாசலில் அழகு கொஞ்சும். நம்பிக்கை பிறக்கும். மனம் விட்டுப் பேசுங்கள்...ஜான் ஒருவர் தான் என் கணக்குபடி நடந்து கொண்டவர். சோகம் கோபம் எல்லாம் தாண்டி நடு நிலைமையில் நின்று உன்னை ஆளாக்கி இருக்கிறார்...உலகுக்கு தெரியாத தந்தையாக இருக்கலாம், ஆனால் என்ன கெட்டுப் போயிற்று? உன் வலி புரிந்து உன் உணர்வு புரிந்து...நீ கோபப்பட உரிமை கொடுத்து இப்போ உனக்கு நல்ல வாழ்க்கைத் துணையையும் கொடுத்திருக்கார். சரிதானே?” மரகதம் புரிந்து கொண்டாள். அவரும் அம்மா போல் கைவிட்டிருந்தால்...அவள் நிறையவே கஷ்டப்பட்டிருப்பாள்.
“நான் சொக்கலிங்கத்தை வரச் சொல்லி இருக்கேன்...அவனிடம் பேசு...” மரகதம் திடுக்கிட்டு மறுப்பு தெரிவித்து எழுவதற்குள் சொக்கலிங்கமே வந்து விட்டான். மரகதம் திகைத்துப் பார்த்தாள் பேசத் தோன்றாமல் தடுமாறினாள். “ஹாய்...லேட்டா வந்துட்டேனா?” என்று சிரித்தான். அந்த சிரிப்பு, அலையின் நுரை போல் வெண்மை நிறைந்ததாகப் பட்டது மரகதத்திற்கு. வசந்தி அம்மா சொக்கலிங்கத்திடமும் பேசி இருப்பாரோ என்ற ஐயப்பாட்டுடன் அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள் மரகதம். “சொக்கலிங்கம் சிறு வயதில் என் மகன் கூட விளையாட வருவான். பாசமாக இருப்பான். என்னிடம் அவனுக்கு மரியாதை உண்டு.” என்றாள் வசந்தி.
“எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று மரகதம் விசாரித்ததும் சொக்கலிங்கம் கூச்சத்துடுன் சிரித்தான்.
“நல்லாயிருக்கேன்....மரகதம் ஸாரி...உன்னை உன்னை...”
“திருடின்னு சொல்லிட்டேங்க....விடுங்க....மறப்பதும் மன்னிப்பதும் தானே வாழ்க்கை. என் கல்யாணத்திற்கு நீங்க அண்ணியோடு வரணும்...”
“அது முடியாது...”
“என்னப்பா....நான் அவ்வளவு சொல்லியும் பகை பாராட்டணுமா?”
“அண்ணியோடு வாங்கன்னு சொல்றா...அப்படி வரமாட்டேன் குடும்பத்தோடு வருவேன்னு சொல்ல வந்தேன். அத்தையின் கல்யாணத்தை என் குழந்தைகள் பார்க்கவேண்டாமா?” வசந்தி பூரித்து சிரித்தாள்.
“அது போதும் சொக்கு...நீங்க மூன்று பெரும் இனி ஒற்றுமையாக இருக்கணும். சொந்த உறவுகள் தான் தாங்கிப் பிடிக்கும்...மற்ற உறவுகள் அனுதாபமும் சில சமயம் தூற்றியும் போகும். சகோதரிகள் அன்பு என்பது வாழ்க்கையில் வைட்டமின் மாதிரி...உடல் நலம் பாதுகாக்கும். உனக்கு புரியாதது இல்லை....அருந்ததியும் மரகதமும் உன் பொறுப்பு. அவர்களை நீ யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி. நீ சற்று இறங்கி வந்தால் உனக்குப் புரியும்...அவர்கள் உன்னை பத்து மடங்கு தாங்கிப் பிடிப்பார்கள். சாந்தாவின் மேல் உள்ள கோபத்தை இவர்கள் மேல் காட்டாதே. முடிந்து போன அத்தியாயத்தை மூடிவிடு. புதிதாக ஆரம்பி...அவர்களிடமும் சொல்லி இருக்கேன்....”
மரகதம் பிரமித்துப் போனாள். வசந்தி, அம்மாவிடமும் வைதீஸ்வரனிடமும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்று தெரிந்தது. “சரி...வருகிற வெள்ளிக் கிழமை உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்...எல்லோரும் மதிய சாப்பாட்டிற்கு வந்து விடுங்கள்...சரியா?”
சொக்கலிங்கம் மகிழ்ச்சி அடைந்தான். ”வாவ்....உங்க கை மணத்தை அப்பா புகழ்ந்துகிட்டே இருப்பார். எனக்கும் பிடிக்கும்....மெனுவில் புளி சாதம் உண்டா? நீங்க போளி ஸ்பெசலிஸ்ட் ஆச்சே....அதுவும் உண்டா?”
“நீ சரியான சாப்பாட்டு ராமன். கண்டிப்பா எல்லாம் உண்டு.”
“ரைட்...அப்ப வெள்ளிக் கிழமை சந்திக்கலாம். மரகதம்....இது வரை நடந்ததை மனதில் வைத்துக் கொள்ளாதே. உனக்கு ஒண்ணுன்னா இந்த அண்ணன் இருக்கேன்னு மறந்துடாதே. வரட்டுமா?” என்று விடைபெற்று கொண்டான். மரகதம் ஆச்சர்யத்துடன் பார்த்தாள். “மேம்...நீங்க கிரேட்...எப்படி இரும்பை வளைத்தீர்கள்? இந்த மாதிரி நீங்க வைதீஸ்வரன் சாரையும்...”
“ரொம்ப ட்ரை பண்ணேன் மரகதம். இருவரும் தங்கள் கருத்தையே நான் ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இருவரிடமும் உள்ள தப்பை சொன்னதால் இருவரும் என்னை எதிரி போல் பார்த்தார்கள். அவர்கள் நடப்பை இழக்காமல்...ஓரளவு நிலமையை சரி கட்டிப் போனேன்....கத்தி மேல் நடப்பது மாதிரி தான். சாமளித்தேன். சொக்கலிங்கத்தை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அம்மாவின் அன்பிற்கு ஏங்கினவன். சாந்தா வைதீஸ்வரன் மேல் உள்ள கோபத்தை இவனிடம் காட்டிவிட்டாள். பிஞ்சு மனதில் அது ஆழப் பதிந்து விட்டது....என்னத்தை சொல்ல...அவனும் இறுதியில் சாந்தா மேல் கோபமாக இருந்து விட்டான். என்ன இருந்தாலும் அவளின் கடைசி காலத்தில் ஆதரவாக இருந்திருக்கலாம். அதற்கு பெருந்தன்மை வேண்டும். எல்லோரும் சாதாரண மனிதர்கள் தானே! மகாத்தமாக்கள் இல்லையே.”
“அது சரி மேம்....அவருக்கு தான் வைதீஸ்வரனின் மகன் இல்லை என்கிற உண்மை தெரியுமா?”
“தெரியாது. அப்பா தன் மேல் சுமத்திய பழியை வைத்தீஸ்வரன் என்னிடம் தவிர யாரிடமும் சொல்லவில்லை. குடும்ப கவுரவம் முக்கியம். வயதான அப்பாவை காமுகனாக உலகம் பார்க்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. தன் மேல் விழுந்த பழியை அவர் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டது அதனால் தான். அவர் ஒரு கூட்டில் வாழ்ந்தார். ஷாந்தா வேறு ஒரு கூட்டில் வாழ்த்தாள். இருவரும் ஒரே கூட்டில் வாழவேண்டும் என்பதற்கு பதில், என் கூட்டிற்கு நீ வா...என்று அவரும்....என் கூட்டிற்கு நீ வா என்று அவளும் ஒருவரை ஒருவர் அழைத்து பிடிவாதம் பிடிக்க நீங்கள் எல்லோரும் அன்பில்லா கூட்டிற்குள் தள்ளப் பட்டீர்கள். இனி அப்படி நடக்கக் கூடாது....ஊரில் உள்ளோரின் அங்கீகாரம் கிடைக்க அவர்களின் அன்பு கிடைக்க பாடுபடுவதை விட உங்கள் உறவை நீங்கள் மதித்து விட்டுக் கொடுத்து வாழ்ந்து காட்டுங்கள்....அப்ப ஊரே மெச்சும். ஒற்றுமையாக வாழ்கிறவர்களை உலகம் மதிக்கும்.” வசந்தி மெல்ல எழுந்தாள். மரகதம் ஒரு புதிய உலகத்தை கண்டுகொண்டது போல் மனம் பூரித்தாள். கடல் அலைகளில் சற்று நேரம் கால் நனைய நின்றார்கள். மரகதம் நினைத்தாள். “இந்தக் கடல் அலைகள் ஆவேசமாக கரைக்கு வருகிறது பிறகு சாதுவாக உள்வாங்கி கடலிடமே சேர்கிறது. அது தோற்றுப் போய் பின் வாங்குகிறதா? இல்லை...நிச்சயமாக இல்லை. கடல் அதை விளையாட விட்டு ரசிக்கிறது. குழந்தைகளை விளையாட விட்டு பெற்றோர் ரசிப்பது மாதிரி. பிறகு தங்களுடன் அழைத்துப் போவது மாதிரி. கடவுள் அப்படித்தான் மனிதர்களின் உணர்வுகளில் திளைத்து, ரசித்து விளையாட விட்டு ஒரு மோட்சத்தையும் காட்டி பாதுகாக்கிறார். கடல் கரை தாண்டாமல் அலைகளை இழுத்து பூமியை காப்பது போல், மனிதர்களை எல்லை தாண்டாமல் பாதுகாக்க நல்ல மனமுடயவர்களை...சிந்திக்கத் தெரிந்தவர்களை காட்டி இழப்பையும் வலியையும் தாங்க வழி காட்டுகிறார்....அப்படி ஒரு வழி காட்டுபவராகவே அவள் வசந்தியைப் பார்த்தாள். “என்ன யோசனை மரகதம்? எப்படி சமாளிப்பதுன்னு மலைப்பா இருக்கா? பயப்படாதே அதோ உன் சூரியன் வருகிறார்...அவர் உன்னை வழி நடத்துவார்...” வசந்தி சுட்டிக் காட்டிய திக்கில் பார்த்தாள் மரகதம். அங்கே பிரபு வந்து கொண்டிருந்தான். அட பிரபுவிடமும் பேசி இருக்கிறார்களா வசந்தி மேம்....”சரி நான் வரேன்...உங்க இரண்டு பேர் நடுவில் நான் ஏன் நந்தி மாதிரி...” பதிலுக்கு காத்திராமல் வசந்தி சென்று கொண்டிருந்தாள். ஒரு கண் வசந்தியை பாராட்டி நெகிழ மறு கண் காதலித்தவனை ரசிக்க....என்று மரகதத்தின் கண்கள் இரெண்டும் இரண்டு வேலை பார்த்தது. “ வாங்க சார்....எப்போ கடல் உங்களுக்கு அனுமதி கொடுத்தது? வந்து ஒரு வாரம் ஆகிறது, இந்த பேதையை பார்க்க இப்ப தான் பாதை தெரிந்ததோ?” என்று பிரபுவை வரவேற்றாள் மரகதம்.
“பெண்களுக்கு பின் புத்தி என்று சொல்வார்கள், சரியாத்தான் இருக்கு. மாலை போட்டு வரவேற்க வேண்டாம்..குறைந்த பட்சம் நக்கீர பரம்பரை என்று நிருபிக்க வேண்டுமா?”
“ம்ம்...இப்பவும் சொல்றேன் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே...வந்து ஒரு வாரம் வரை என்ன பண்ணீங்க? கப்பல் பிரயாணத்தில் அங்கங்கே நின்ற துறைமுகத்தில் பல நாட்டு பெண்களின் கூட்டத்தில் கிருஷ்ணன் போல் காதல் மன்னனாக பொழுது போக்கினால் எப்படி ராதையின் நினைப்பு வரும்?” கடல் அலைகள் அவர்கள் இருவரின் காலையும் நனைத்து திரும்பிற்று. பிரபு சிரித்தான்.
“பார்...நீ சொல்வது எவ்வளவு அநியாயம் என்று பதறி கடல் அலை கூட பின் வாங்கிப் போகிறது...மரகதம் நான் தான் வசந்தி அம்மாவிடம் சென்று உங்க அண்ணன் சொக்கலிங்கத்திடம் பேசச் சொன்னேன். எப்படியாவது உடன் பிறந்தவர்களை ஒன்று சேர்த்து வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்....”
“ ஒ...நிசமாவா?....பிரபு நீங்க ஒரு வள்ளல். என் மனசு நிறைய சந்தோஷங்களை டெபாசிட் பண்றீங்க. நீங்க அல்லவோ கணவர்....எவ்வளவு பெரிய தொகை என் மன பாங்கில் போட்டிட்டீங்க!...” ஆர்பரித்தாள் மரகதம். உறவுகளே இல்லாமல் வாடி தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு இதை விட பெரிய பொக்கிஷம் வேறு என்னவாக இருக்க முடியும்? மனம் தித்திக்கத் தித்திக்க என்னென்னவோ பேசி முடித்து அவர்கள் கிளம்பும் போது நட்சத்திரங்கள் கண்சிம்மிட்டி வானத்திற்கு ஒளியும் உயிரும் கொடுத்துக் கொண்டிருந்தது.
நதி ஓடும்