- நெருங்கிடுமோ தனிமை
- ஆதிசக்தி
- "பாட்டி பாட்டி , ஃப்ரண்ட்! என ஏலம் விட்டுக் கொண்டு வந்தனஅந்த தெரு வாண்டுகள் ,எல்லாம் பத்திலிருந்து பன்னிரண்டு வயது நிரம்பிய சிறுவர்கள்".
- "வாங்க ..வாங்க,எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருக்கறது.
- அந்த உணவு மேசையில நிலக்கடலை உருண்டை வச்சிருக்கேன் ஆளுக்கு ஒன்னு எடுத்துக்கங்க" நான் ஆட்டோவுக்கு அழைப்பெடுத்துவிட்டு
- வரேன் என்று சென்றார்..
- உருண்டையை கையில எடுத்து வண்ணம், "இன்னைக்கு எங்க பாட்டி போகிறோம் என ஆர்வமாக கேள்வி எழுப்பிக்கொண்டே" எனகொறிக்க ஆரம்பித்தன..
- "போன பிறகு தெரிஞ்சுக்கங்க ஆனா, சாயுங்காலம் தான் வருவோம். எல்லோரும் வீட்டில சொல்லிட்டு தான வந்தீங்க"..என்று கேட்டு அவர்களின் ஆமாம் என்ள பதிலையும் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்.
- "அந்த ஓரமா ரெண்டு கட்டபை இருக்கு,அதை "எடுத்துட்டு வாங்க இரண்டு பேரா சேர்ந்து தூக்குங்க"..
- "பாத்து பத்திரம் பசங்களா",என பைகளை வாங்கி ஆட்டோ வந்தவுடன் அதில் எடுத்து வைத்துக்கொண்டு சென்றனர்…
- அந்த வளாகத்தில் ஒரு 25 குழந்தைகள் அமர்ந்து ஆசிரியர் கூறும் கதையைஎ கேட்டுக் கொண்டு இருந்தனர்..அவர்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கவனம் ஆசிரியரை நோக்கியிருந்தாலும் ஏதோ ஒன்று இடை சொருகலாக அவர்களை பார்க்கையில் நம் வாண்டுகளுக்கு தோன்ற,"ஏன் ஃப்ரண்ட் அவங்கிட்ட எதோ வித்தியாசம் தெரியுது,ஆனா என்னனு புரியலை" என்றனர்.
- "அதை நீங்க தான் கண்டுபிடிக்கனும்,ஆனா "எங்கிட்ட வந்து சத்திமில்லாம சொல்லனும்,யாரும் கத்த கூடாது" ...என்று அழைத்து கொண்டு சென்றார்.
- "சரி சரி சத்தம் போடாதீங்க அங்க வகுப்பு நடந்துட்டு இருக்கு", எனவும் சத்தமில்லாமல் தலைமையாசியர் அரை நோக்கி நடந்தனர்.
- "வணக்கம் ஐயா,உள்ளே வரலாமா", என அனுமதி வாங்கி உள்ளே சென்றார் குழந்தைகளுடன்...
- "வணக்கம்மா,இவங்க தான் படை உங்க தளபதிகளா" என்று சிரித்தவர் வாங்க பசங்களா "என்று வரவேற்று அவர்களது முகமன்களையும் பெற்று கொண்டார்.
- "ரொம்ப சந்தோஷம்…இப்ப வகுப்பு முடிஞ்சி அவங்க சாப்பிடற நேரம் தான் ,நீங்களும் அவங்களோடு சேர்ந்துக்கங்க"…என்றார்.
- "இது பசங்களுக்காக எங்க தெருவுல இருக்கறவங்க கொடுத்த அன்பளிப்பு, அதை இந்த குட்டி வாண்டுங்க கையால கொடுக்கனும்னு ஆசைப்படறேன் ,நீங்க அனுமதிக்கனும்" என்றதும் "தாராளமாக"...என்றார் அவரும் உற்சாகமாக.
- மணியடித்ததும் குழந்தைகளை வரிசையில் நிற்க வைத்து ஒருவர் முன்னே கூட்டி செல்ல …,அனைத்து குழந்தைகளும் வரிசை மாறாமல் ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் மற்றவரை கவனிக்காமல் முன்னே பார்த்து சென்றனர்.
- அனைத்து குழந்தைகளையும் உணவு உண்ணும் அரைக்கு அழைத்து அமர ..கூடவே நமது வாண்டுகளும் அங்கு சென்று நிற்க்க வைத்தனர்...பதார்த்தங்களை அனைத்தையும் இலையில் பரிமாறியதும், கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்..
- அதுவரை அவர்களின் செயல்கள் சாதரணமாக தெரிய, அவர்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தனர்…
- ஒவ்வொரு குழந்தையும் இதை தான் சாப்பிட வேண்டுமெனமில்லாமல்,கைகளில்
- கிடைத்ததை எடுத்து சாப்பிட்டனர்.
- ஒரு சிலர் ஆங்காங்கே நின்று கொண்டு அப்பளம் பாயசம் வடையை எடுத்து அவர்கள் கைகளில் உண்ண கொடுக்க ,புரிந்தும் புரியாமலும் நின்றிருந்த குழத்தைகள் ,தங்களை அறியாமலே ஒவ்வொருவரிடம் சென்று அவர்கள் செய்ததை போல வடை,அப்பளம் பொறியல் வகைகளை அவர்கள் கைகளில் பிடித்து காண்பித்தனர்.
- அவர்கள் தங்கள் ஃப்ரண்ட் முகத்தை நோக்க …"அப்புரம் பேசலாம்" , என சைகை செய்ய அவர்கள் மௌனமாக உதவி செய்து நின்று கொண்டிருந்தனர்.
- அவர்கள் உணவு முடித்ததும் இவர்களும் அங்கேயே தங்களது உணவை முடித்துகொண்டு ,சிறிது நேரம் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தவர்கள் விளையாட சென்றனர்.
- அவர்கள் பைகளில் கொண்டு வந்த விளையாட்டு பொருட்களை எடுத்து வந்து விளையாட ஆரம்பித்தனர்.
- 4 அல்லது 5 பேர் என குழுக்களுக்காக பிரித்து நமது வாண்டுகளையும் ஒவ்வொரு குழுக்கு ஒருவராக பிரித்து வேண்டும் விளையாட விட்டனர்.
- அவர்களின் குறைப்பாட்டடை கணக்கில் கொண்டு சாதரணமாக விளையாட ஆரம்பித்த வாண்டுகள்,அவர்களின அசாதரண விளையாட்டு திறனையும் அவர்களின் ஆற்றலையும் கண்டு ஆச்சிரியத்தில் வாய்பிளந்தனர்..
- ஒவ்வொரு விளையாட்டிலும் தனக்கென அக்குழந்தைகள் தனி நுணுக்கங்களை கையாண்டு வெற்றிகளை தங்கள் வசப்படுத்தினர்.
- ஆனால் அது பற்றி பாட்டியிடம் சொல்ல நாக்கு துடித்தாலும் ,அவர்களுக்கு, இருவருக்குமான தனிமை கிடைக்காது போனதால் அமைதியாக விளையாண்டனர்.
- இவர்களின் விளையாட்டை சற்று தள்ளி அமர்ந்து வேடிக்கை பார்த்து பேசி கொண்டிருந்தனர்.
- அந்த மையத்தின் செயல்பாடுகள்,அதற்கு வரும் உதவி தொகைகள்,அங்கு தேவையான பொருட்கள் என பேச்சு சென்று கொண்டிருந்தது…
- கூடுதலாஇ அவரது குடும்ப நலத்தையுப் விசாரித்தார்..
- " மா பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.பேரன் பேத்தியெல்லாம் என்ன சொல்றாங்க"..என்று பேச்சு குடும்பத்தின் பக்கம் திரும்பியது.
- "ம்ம்ம் அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க.அவங்களுக்கு விடுமுறை கிடைச்சா வரலாம் இருக்கனு சொன்னாங்க",எனறார் குரலில் வருத்தம் இழையேடியதோ.
- "வருத்தமில்லையா?"என முகம் பார்க்க
- ".ம்ம்ம்…இருந்துச்சு
- அவங்களுக்கு வேலை, கல்யாணம், பிரிஞ்ச புதுதில் வீடே உலகம்னு வாழ்ந்த எனக்கு அந்த தனிமை கொஞ்சம் படுத்திடுச்சி,ஆனா அந்த தனிமைய போக்கறதுக்காக வெளியில வர ஆரம்பிச்சு ,கேள்விபட்டாலும் கடந்து போன நிகழ்வுகள் சிலது எனக்கு அனுபவமா கிடைக்க ஆரம்பிச்சது".
- "இப்ப கொஞ்சம் கொஞ்சமா என்ன இந்த பக்கம் திருப்பிகிட்டு ,இப்ப இந்த தனிமையை நான் வரப்பிரசாதமா நினைக்கிறேன்"..
- "நான் அவங்களோட இருந்திருந்தா ,என் பேரன் பேத்தினு, என் உலகம் அப்படியே சுழன்று முடிஞ்சு போயிருக்கும்.
- அவங்க கூட இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கு.ஆனா,அதையும் தாண்டிய சந்தோஷமும் நிம்மதியும் ஒரு பக்கம்.இந்த வயசிலையும் எனக்கு நான் தான் தலைவி...நான் நினைச்ச வாழ்க்கையை சுதந்திரமா வாழ முடியுது..என்னால மத்தவங்களுக்கு உபயேகமா இருக்க முடியுது என்ற நிறைவை தாண்டி என்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்?"...சொல்லுங்க என்றார் அவர் முகம் பார்த்தார்..
- மௌனமாக புன்னகைத்து சிறு தலையாட்டலே பதிலாக தந்தார்.
- "இதோ இந்த குழந்தைங்கவிளையாட்டு, படிப்பு ,பெத்தவங்கனு இருப்பாங்க".இப்ப ,அதையும் தாண்டிய ஒரு உலகம் இருக்கு,.அவங்களுடைய தேவை எந்த அளவுக்கு மத்தவங்களுக்கு தேவைனு அனுபவ பூர்வமா உணருவாங்க.அந்த
- வாய்ப்பு என்னால அவங்களுக்கு கிடைச்சிருக்கு"…என்றாய் நெகிழ்வுடன்.
- "இப்ப இங்க அவங்க என்ன பார்க்கறாங்களோ ,செய்யறாங்களோ ,அது அப்படியே மனசுல பதிஞ்சிடும்".
- "அவங்க வீட்டுல பெற்றோர்கிட்ட,பள்ளிக்கூடத்துல ஆசிரியர்,சக தோழமைகிட்ட பகிர்ந்துப்பாங்க".இதன் மூலமா, அந்த குழந்தைகளுக்கும் இவர்களைப் பற்றி தெரிய வரும்.விதை ஒன்று தான் விருட்சத்தின் கிளைகள் பல,அதன் பலன்கள்,நம்மால் கணித்திட முடியுமா" என்னுடைய சின்ன முயற்சி.
- "நா ரொம்ப ரசிச்சு பிடிச்சு செய்யறேன்,அது கண்டிப்பா எங்குழந்தைங்க மனசுல ஆழமா பதியும்.அவங்க வளர வளர அவங்களுடைய செயல்ல அது தெரியும் .அதனை பார்க்கறத விட பெரிய சந்தோஷம் இருந்திட முடியுமா என்ன.எனக்கு பிடிச்சத செய்யறதால இந்த வயதிற்கே உரிய பிணிகள் கூட என்னை நெருங்கினாலும் ,நீரின் மேல் எழுதும் எழுத்து போல காணாம போய்டுது.மனசளவிலும் உடலளவிலும் அடுத்த நாளைக்கு உண்டான உத்தவேகத்தோடவே என் இரவுகள் கழிகின்றது. ஒவ்வொரு நாளும் எனக்கு புது நாளே.இந்த போனஸ் வாழ்க்கை முடிஞ்சளவு சிற்ப்பானதா மாத்திக்க முயற்சிக்கிறேன்,ஓடறவரைக்கும் ஓடட்டும்" அவரின் முகத்தில் நிறைவின் சாயல்.
- "இன்னைக்கு இங்கே நாளைக்கு வேற இடம் வேறு மனிதர்கள் புதிய சொந்தங்கள் இப்படி என பொழுதை கழிக்கிறேன் .பிடிச்சத செய்யும் பொழுது மனசுக்குள்ள சங்கடங்கள் வரதுக்கான வாய்ப்புகள் குறைஞ்சிடுது ...என்னை நானே நிறைவான மனுஷியாவும்...இந்த வாழ்க்கையை நிறைவோடும் வாழ்வதற்கான முயற்சியையும் எடுத்துகிட்டு இருக்கேன்...உங்களையெல்லாம் சந்திக்கறதால நானும் ஏதோ சாதிக்கிறேன் உணர்வு"…நிறைவின் பூரிப்பு வதனத்தில்.
- "அதோடு என் வாண்டு பட்டாளங்கள் ,என் பொழுதுகளை களவாடும் சித்தெரும்புகள்,இந்த அரும்புகளில் நாளை பூத்து மணம் வீசம் பொழுது கிடைக்கற சந்தோஷம் ,அதை என்னை விட அதிகமா அனுபவிச்ச உங்களுக்கு சொல்லனுமா என்ன" என்றார் அழகாக இதழில் இளநகையை தவழவிட்டுகொண்டு.
- "எங்க உதவி எப்ப தேவை பட்டாலும் கண்டிப்பா நீங்க எங்கள அணுகலாம்.இந்த சந்தோஷமான மனநிலையோடு நாங்க கிளம்பறோம்.குழந்தையை கூப்பிடுங்க அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பறோம் என பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்",அந்த "பார்வையற்றோர்க்கான மாற்றுதிறனாளி பயிற்சி மையத்திலிருந்து".. மனதில் களிப்புடன்.
- திரும்பும் வீடு வழியெங்கும் அவரை கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டனர் அவரது படை பட்டாளங்கள்."அவர்கள் எப்படி சரியாக பந்தை பிடிக்கின்றனர,படிகளில் ஏறுகின்றனர்.அவரவர் இருப்பிடத்தை கண்டுகொள்கின்றனர்...பக்கத்தில் இருப்பவர் யார் என உணருகின்றனர்…
- இவர்கள் பெரியவர்கள் ஆனால் இவர்களை எப்படி வேலைக்கு செல்வார்கள்".கேள்வியின நாயர்களாக.
- "ம்ம்ம் என்று மெதுவாக சிரித்தவர்,அவர்ளால் இது எல்லாம் முடிய காரணம், தன்னம்பிக்கையும் ,விடா முயற்சி கடின உழைப்பு,இத்தனைக்கும் மேலாக பயிற்சி".
- "அவர்களுக்கு ,பார்வை குறைப்பாடு மட்டுமே.மற்ற புலன்கள் நம்மை விட கூர்மையாக சிறப்பாக செயல்படும்"
- "அவங்களுடைய உலகம் தனித்துவமானது,அதை அவங்களே வடிவமைச்ச சக்தியும் உறுதியும் அவங்களுக்கு
- இருக்கு.அவங்களுக்கு நம்மால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும் அவங்க இன்னும் சிறப்பா செயல்பட்டு பெரிய அளவுல முன்னுக்கு வந்துடுவாங்க.அவங்க போற பாதையில கூட போகனும்னு அவசியமில்லை.அந்த பாதையில் அவங்க கைபிடிச்சி அந்த வழிய காட்டி விட்டா போதும்.அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வந்துடுவாங்க"..சிறப்பான அடையாளத்தை அவங்களே உருவாக்கிடுவாங்க..
- "அவங்க எப்படி படிப்பாங்க" ,என்று கோரஸ் பாடினர்
- "அவங்களுக்குனு ப்ரெய்லி எழுத்து முறை தனி எழுத்து முறை இருக்கு.அதை தொட்டு, உணர்ந்து படிப்பாங்க,அட்டகாசம் ப்ரண்ட்,ஜாலியா இருந்தது,அடுத்த வாரம் எங்க போறோம்".
- அதை அப்பொழுது பார்க்கலாம்,இப்ப போய் சம்ர்த்த ஓய்வெடுங்க.நாளைக்கு பள்ளிகூடம் போகனுமில்ல.வீட்டுக்கு கிளம்புங்க"…அவர்களை அனுப்பி வைத்தார்.
- "தனிமையும் இனிமையே அதை நாம் அணுகும் முறையினிலே"...
- "பயணங்கள் தொடரும்...தனிமைகள் தொரத்திவிடப்படும்".
Last edited: