கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பரிசு பெற்றவர்கள்

Aathisakthi

Well-known member
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா🌹🌹🌹🌹
 

Jeyakumar S

Member
ஸ்ரீ பதிப்பகம்

சங்கமம் நாவல்ஸ்

சிறுகதைப் போட்டி முடிவுகள் – கரு - தனிமை


சிறுகதைப் போட்டி என்று அறிவித்ததும் இவ்வளவு ஏகோபித்த வரவேற்பைக் கண்டு சங்கமம் குழுமம் மிகவும் மகிழ்வுற்றிருக்கும் இந்த தருணத்தில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்கிறோம்.

பங்கேற்ற அனைத்து எழுத்தாளப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனிமை என்கிற தலைப்பே சற்றுக் கடினம் தான். இருப்பினும் கொடுக்கப்பட்ட தலைப்புக்கேற்ப பல வித்தியாசமான கோணங்களில் தங்கள் எண்ணங்களை வண்ணமயமாக பரிமாறி வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள் என்பதே நிஜம்.

அனைத்து படைப்புகளுமே ஒவ்வொரு விதத்திலும் சர்வ நிச்சயமாய் தனித்தன்மையுடன் தான் இருந்தன. . எதை விடுப்பது எதை எடுப்பது என்று தீர்மானித்துத் தேர்வு செய்வதும் கடினமாகத்தான் இருந்தது. இருப்பினும் ஒரு சில கதைகள் நிச்சயமாய் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்ததால் பரிசுகளும் கூடுதலாகவே அறிவித்திருக்கிறோம்.

இதோ போட்டி முடிவுகள்.


வெற்றி பெற்றவர்கள்

முதல் பரிசு ரூ–2000 – திருமதி/செல்வி. மின் மினி – படிகட்டில் அமர்ந்திருக்கிறேன்.


இரண்டாம் பரிசு ரூ.1500/– திரு. அப்பு சிவா - பாலைவெளி

மூன்றாம் பரிசு- தலா ரூ.1000 -
திரு.சேதுபதி விசுவநாதன் ,.உயிரோடு (சு)வாசமாய் & திருமதி.கமலி ஐயப்பா – தனிமை (ஆளி)


ஆறுதல் பரிசாக ஐந்து நபர்களுக்கு என்று அறிவித்ததை மாற்றி, மேலும் ஆறு நபர்களை சேர்த்து மொத்தம் 11 பேருக்கு சிறப்புப் பரிசாகத் தலா ரூ 500/- வழங்கப்படுகிறது.

சிறப்புப் பரிசு பெறுபவர்கள் :

 • திருமதி/செல்வி. சஹா - பூஞ்சிட்டின் புதுமலர்
 • திருமதி. சுசி கிருஷ்ணமூர்த்தி – திருநங்கை முழுமங்கை ஆகமுடியுமா?
 • திரு. வேல்முருகன் – தனிமை இனிமை
 • திருமதி பூர்ணிமா கார்த்திக் – செகப்பி
 • திருமதி/செல்வி. சுபஸ்ரீ – ஆப்(பு)
 • திருமதி. பிரவீணா தங்கராஜ் – அனுவும் டினுவும்
 • திருமதி./செல்வி. கனவு காதலி ருத்திதா-தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே
 • திருமதி/செல்வி. அம்மு – மதலையின் (தத்தையின்) தனிமை
 • திருமதி.ராஜலட்சுமி நாராயணசாமி. – கறையடி பெருந்துயர்
 • திருமதி சங்கரி அப்பன். - தனிமை
 • திருமதி ஜெயலட்சுமி கார்த்திக் – காரிருளில் கண்டறிந்தேன்.

 • பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
 • உங்கள் பரிசுத் தொகை 26/10/2020 க்குள் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
 • பரிசு பெற்றவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை 7038304765 / 8050785817 என்கிற மொபைல் எண்ணில் உவாட்ஸப்பிலோ, குறுஞ்செய்தியிலோ தெரியப்படுத்தவும்.
 • நன்றி
 • சங்கமம் குழுமம்.
பரிசு பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுக்கள்
 
Top