கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பாகற்காய் தொக்கு

Rajasree Murali

Moderator
Staff member
பாகற்காய் தொக்கு

தேவையான பொருட்கள்:
பாகற்காய் 1/2 கிலோ
புளி பெரிய லெமன் சைஸ்
நல்லெண்ணெய் 100 கிராம்
‌மிளகாய் தூள் 4 சிறிய டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் சிறிதளவு
வறுத்து பொடி செய்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு உப்பு தேவையான அளவு

செய்முறை: பாகற்காயை நன்றாக அலம்பி துடைத்து பொடியாக Vegetable Chopperல் நறுக்கவும்.(கீழே படம் பார்க்க) இல்லையெனில் கத்தியால் நறுக்கி கொள்ளவும். அதில் உள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் கடுகு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வெடித்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் பொறித்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து நன்றாக கெட்டியானவுடன் வெந்தய பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பாகற்காய் தொக்கு தயார் சாதத்துடன் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்
 

Attachments

  • IMG-20200719-WA0031.jpg
    IMG-20200719-WA0031.jpg
    143.8 KB · Views: 1
  • IMG-20200719-WA0030.jpg
    IMG-20200719-WA0030.jpg
    114.2 KB · Views: 1
  • IMG-20200719-WA0029.jpg
    IMG-20200719-WA0029.jpg
    175 KB · Views: 1

Latha S

Administrator
Staff member
செய்து பார்க்கணும்.. நான் செய்ததில்லை but சாப்பிட்டு இருக்கிறேன். Good one. Thanks for posting.
 
Top