கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 4- 55வது நாள்

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 4

உள்ள இருக்குற 15 பேரும் லாஸ்ட் பெஞ்சு ஸ்டூடண்ட்ஸ் போல. இருக்குற எல்லா கொஸ்டீனுக்கும் ஒரே பதில எழுதுற மாதிரி. என்னைக்கும் போல இன்னைக்கும் அதே பேசுன விஷயத்தையே பேசிப் பேசி சாவடிச்சுட்டானுங்க. என்ன ஒரு வித்யாசம்னா இன்னைக்கு ஆண்டவரும் இந்த கன்றாவிய கேட்டுட்டு இருந்தாரு, அவ்வளவுதான்.

அதே குரூப்பிஸம், ஃபேவரிஸம் பஞ்சாயத்து, அன்பே அல்லலூயா, நேர்மைக்கு பரிசு, ஸ்பேஸுக்கு கொறச்சல், தனியாதான் விளையாடுறேன்......கதை ! சுருதி மாறாம அதே டெம்போல இருக்கானுங்க.
சரி ஆண்டவராச்சும் அதிரடியா எதும் பண்ணுவாருன்னு பாத்தா கிட்ஸ் ஸ்கூல் வாத்தியார் மாதிரி “இனிமே இப்பிடில்லாம் பண்ணக்கூடாது”ன்னு இவனுங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்கார். இவனுங்க அவருக்கு முன்னாடியே கத்தி கூப்பாடு போட்டுட்டு இருக்கானுங்க. அவரும் கொட்டாவி விட்டுட்டு இருக்கார். “தயவு செஞ்சு இனியாச்சும் பழைய பஞ்சாயத்துகள விட்டுட்டு புதுசா விளையாடுங்க, குரூப்பா இல்லாம தனியா விளையாடுங்க, எதிரிங்க மாதிரி அடிச்சிகிட்டு நாறாதீங்க”ன்னுல்லாம் சொல்லியிருக்காரு. பாக்கலாம் இவனுங்க என்ன பண்றானுங்கன்னு.

பில்டரும், ஆரி ப்ரோவும் சேவ். மத்தபடி ஆரி ப்ரோ இப்ப ரம்யாவ டார்கெட் பண்ணியிருக்காருன்னு தோணுது.

எழுதுனதையே எழுதி எனக்கும் போரடிக்குது. இன்னைக்கு எதாச்சும் புதுசாவோ இல்ல சுவாரஸ்யமாவோ இருந்தா எழுதுறேன். இல்லேன்னா என்னைக்கு அப்பிடி இருக்கோ அன்னைக்கு எழுதுறேன். டயர்டாக்குறானுங்க.

டிஸ்கி : பிக்பாஸ் 4 பதிவுகள மொத்தமா படிக்க:

 
Top