பிக்பாஸ் – 5
நாள் – 16 (18.10.21)
சென்னை சிட்டி கேங்க்ஸ்டா பாட்டு அலாரம். எப்பவும் செரிமானம் ஆகாத செனைப்பசு மாதிரி நகண்டுட்டு திரிவானுங்க. இன்னைக்குதான் ஓரளவு ஒரு நாலஞ்சு பேரு லைனா நின்னு குலசை திருவிழாவுல ஆடுன மாதிரி குனிஞ்சு நிமிந்து ஆடுனானுங்க. அதுலையும் இந்த ஆம்பள தடிமாடுங்க பூரா சைடு ஸ்டாண்டு போட்டு ஸ்டைலா வேடிக்கைதான் பாக்குறானுங்க.
இப்ப இந்தவார தலைவர் தேர்வு. ஆனா அதுக்கு கேண்டிடேட்ஸ் வேணுமே ? “அய்யையோ அத மறந்துட்டேன”ன்ற மாதிரி கடைசி நேரத்துல யோசிச்ச ஐடியா போல இது. கதை சொல்ற டாஸ்க்குக்கு பெல் அடிக்குறதுக்கு முன்னாடியே வந்து ரூமுல உக்காந்த 4 பேரும் தலைவர் கேண்டிடேட்ஸாம். ஏண்டா அவனுங்களே போறதுக்கு போக்கிடம் இல்லாம அங்க வந்து உக்காந்திருந்தானுங்க. இதெல்லாம் ஒரு பெருமையாடா ? பாவனி, ராஜூ, இசை, சிபி & அழுமூஞ்சி அபி இவனுங்கதான் கீழ்படிந்த மாணவர்களாம். அது போக ஜொலிப்பவரா தேர்வு செய்யப்பட்ட அண்ணாச்சியும். இவனுங்கள ஊர் சந்தியில தனித்தனியா நிப்பாட்டி ஒரு நேரத்துல ஒருத்தர பஸ்ஸர் அடிக்கிற வரை எதையாச்சும் சொல்லி, செஞ்சு அவனுங்க முகத்துல உணர்ச்சிய கொண்டு வரனுமாம். ஆமா பூராம் சிவாஜி கணேசனுக்கு சித்தப்பா வகையறா அப்டியே நவரசத்தையும் ஊத்துவானுங்க. பூராம் தவுட்டு ரசம் குடிச்ச ஆளுங்க மாதிரி தடவுற ஆளுங்க. நல்ல வேலை அபினய் இல்ல இதுல...! வெளக்கெண்ணை குடிச்ச வெள்ளை ஆந்தை மாதிரி ஒரே உணர்ச்சிதான். எடுத்ததுமே அன்ணாச்சிய அவுட் ஆக்குனானுங்க.
யப்பா வீட்ல ஒரு நல்லது கெட்டது நடந்தா இந்த ப்ரியாங்கா & அபிஷேக்கு வாய மொத தைங்க...இல்ல அதுகள கட்டி வைங்க ! வீடான வீட்டுல எப்பப் பாத்தாலும் சச்சரவு பண்றதே வேலையாப் போச்சு. வீட்ல எவன் பேச்சும் நமக்கு கேக்குறதில்ல...இதுகளும் எவன் பேச்சையும் கேக்குறதில்ல. இந்த அபிஷேக்கா, பைத்தியம் பிடிச்சவனுக்கு பைல்ஸ் வந்த மாதிரி எப்பப் பாத்தாலும் பாக்க கண்றாவியான பாடி லேங்குவேஜுல பேசிட்டு திரியுறான். இந்த டாஸ்க்குலையும் இப்பிடித்தான் அவனுங்க முன்னாடி போயி மூஞ்சிய காட்டிகிட்டு கத்திகிட்டு இருந்துச்சுங்க ரெண்டும்.
இதுல இசைய டார்கெட் பண்றப்ப வருண் தண்டம் அந்த பொண்ணு ட்ரெஸ்ஸுக்கு கஷ்டப்பட்டத சொல்லிக் காட்டுனதுக்கு அண்ணாச்சி பர்சனல பேச வேணாம்னு கண்டிச்சாப்ல. ஆனா ரூல்ஸ் படி எத வேணும்னாலும் பண்ணலாம்தான். ஆனாலும் இதப் பண்ணனுமான்னு யோசிச்சு பண்ணியிருக்கலாம். அது சரி உருப்படியா யோசிக்க தெரிஞ்ச ஆளா இருந்த இந்த கிறுக்கன் எதுக்கு உள்ள வந்திருக்கப்போறான். ஆனாலும் இசை அசரல.
ஆனா இப்பிடி சண்டை போடுறதும் ஒரு வழிதான்னு எந்த மரமண்டையில பூத்துச்சோ தெரியல. சம்பந்தம் இல்லாம சும்மா சண்டை போட்டுட்டு இருந்தானுங்க. ஆனா அதுலையும் அபிஷேக்கு ஸ்கோர் பண்ண நெனச்சதுதான் நம்ம கெட்ட நேரம். ஒரு பத்து நிமிஷத்துக்கு கரண்டு கம்பிய பிடிச்சு அவன் கக்கத்துல விட்ட மாதிரி கதறிக்கிட்டே இருந்தான்.
அதுவுமில்லாம ஒரு டீவி ஷோவுல எப்பப் பாத்தாலும் அடியே, வாடி, போடி, ஏண்டின்னு ஏன் கூச்சல் போடுறான்னு புரியல. என்னைக்காச்சும் ஒரு பொண்ணு பொடனியில சாத்தப்போகுது.
அப்பறம் இசைய பயமுறுத்தி அவுட்டாக்குனானுங்க. பொம்பளை வேஷங்கட்டி வில்லங்கமா ஆடுனா அசைக்கலாம்னு அறிவாளித்தனமா முடிவு பண்ணி அபிஷேக்கும், மூடுமுனியும் பொம்பள ஸ்கர்ட்ட போட்டுட்டு வந்தானுங்க. அபிஷேக்கு பரவாயில்ல பொண்ணு மாதிரியே இருந்தான். ஆனா மூடு முனிதான் முழுசா மனுஷனா மாறாத மலையளவு கிங் காங் மாதிரி இருந்தான். ஆனாலும் பாவனி, சிபி, ராஜூ 3 பேரையும் அசைக்க முடியல.
இப்ப ஆளுக்கொரு மாலைய போட்டு யாருக்கு அதிக மாலையோ அவங்க தலைவர்னு சொன்னதும். அபிஷேக்கு அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி அவசர அவசரமா போயி எல்லாரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ண ஆரம்பிச்சான். ஆனா இவன் இன்ஃப்ளூயன்ஸ் பண்றதுல ப்ரியாங்கா பங்கும் பாதிக்குப் பாதி இருக்கு. ஆனா கேஸுல மாட்டுறது என்னமோ இந்த அரைக்கிறுக்கன் அபிதான். இப்பவும் “ராஜூக்கு பதவி மேல ஆசையில்ல, அவனுக்கு 10 வயசுல மீசையில்ல, பாவனியோ போனவாரம் முழுக்க சமையக்கட்டுல வெந்தா...தாவு தீந்திடும் அவ தலைவரா வந்தா.....சிபி மாதிரி பாத்ததில்ல ஆள.....எல்லாரும் அவனுக்கு போடுங்க மாலை”ன்னு வாசிச்சிட்டு இருந்தான். ப்ரியாங்கா நைஸா வந்து ஆனாலும் இது அபிஷேக்கோட கருத்துதான்ன்னு ரிஜிஸ்டர் பண்ணிட்டுப் போச்சு.
இப்ப 3 பேருக்கும் சரி சமமா மாலை விழுந்ததும் சட்டுன்னு எல்லாரும் மாலைகள மாத்திப் போட ஆரம்பிச்சு சிபிய ஜெயிக்க வச்சானுங்க. ராஜூவுக்கு இதுல உண்மையாவே பெரிய வருத்தம் இல்லாம இருக்கனும் இல்லேன்னா அத வெளிய காட்டாம இருக்கனும்.
என்னமோ ஜோ பைடன அமெரிக்க ஜனாதிபதி ஆக்குன மாதிரி அபிஷேக்கு அந்தக் குதி குதிச்சிட்டிருந்தான். இவன் கண்டிப்பா அமாவாசைகிட்ட பல்பு வாங்குன மாதிரி வாங்கப் போறான். சிபி டீம் பிரிச்சான்.
அடுத்து இந்த வார நாமினேஷன். எதிர்பார்த்தமாதிரி அபிஷேக்கு அதிக ஓட்டு வாங்கி நாமினேஷனுக்கு வந்தான். இந்த வாரம் 8 பேரு நாமிநேஷன். அபிஷேக், அபிநய், பாவனி, சின்னப்பொண்ணு, அக்ஷரா, அய்க்கி, இசை, நிரூப். முக்கி முக்கி பேசி முன்னனியில கொண்டு வந்த சிபி அபிஷேக்கும், ப்ரியாங்காவும் எல்லாரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்றாங்கன்னு சொல்லி நாமினேட் பண்ணான். ராஜூ ப்ரியாங்கா பேரக் கேட்ட டைமிங் செம்ம !
இப்ப பாவனியும், ராஜூவும் உக்காந்து போன வார கிச்சன் பஞ்சாயத்த பேசுனாங்க. “நீ குத்தம் சொல்ல வேண்டியா ஆளு நானு ஆனா என்னயத் தவிர இந்த வீட்ல இருக்குற 15 பேர்கிட்டையும் போயி பொரணி பேசியிருக்க அதுவும் இந்த தமிழ்ல. அத வேற அவிங்க்ய புரியாம எங்கிட்டயே வந்து என்னன்னு விளக்கம் கேட்டுட்டு போறாய்ங்க”ன்னு சொன்னான். பாவனி “மைண்ட் வாய்ஸ்ல (சொல்லிட்டானுங்களா? ரெண்டு நாளைக்கு முன்னாடி ஃபீலிங்க்ஸ் பிரச்சனையில பீலிங்க் ஆகி கண்ணக் கசக்கிக்கிட்டு இருந்தேன்...ஒருத்தன் அண்டல....ஆனா இதப் போயி பத்த வச்சிருக்கானுங்க)
“யப்பா ராஜூ....இவனுங்களோட ரோதனை ரோஜு ரோஜு...! அக்கட போனாலும் பிரச்சன இக்கட கூச்சுன்னாலும் பிரச்சனை பண்றானுங்க. ராஜூ சிக்கன் தின்னலேதான்னு கேட்டேன்...உங்கிட்ட வந்து ராஜூ கிச்சன்ல வேலை பண்ணலேதுன்னு நான் சொன்னதா மாத்தி விட்டானுங்க. செந்தமிழ் செல்வன் நீயி....இந்த சுந்தர தெலுங்கு சுந்தரிய மன்னிச்சிடக் கூடாதா.... ! தேவுடா இங்க கொஞ்சம் சூடுடா”ன்னு கேட்டுப்பாத்துச்சு. ஆனா ராஜூவோ “மொழி பிரச்சனையில இப்பிடி முழி பிதுங்கி திரியுறதுக்கு சைலண்டா இருக்குறதே சாலபாகவா இருக்கும்”னு பாவனிய பத்தி விட்டான்.
அடுத்து மூடுமுனி, ப்ரியாங்கா & அபிஷேக்கு யார நாமினேட் பண்ணோம்னு பப்ளிக்கா பேசிட்டு இருந்தானுங்க. அந்தப்பக்கமா வந்த ராஜூவ இழுத்து அபிஷேக்கு “ப்ரியாங்காவ நாமினேட் பண்ணியா?”ன்னு கேக்க, ராஜு “அதெல்லாம் சொல்லக்கூடாது....ரூல்ஸ்ல இருக்கு”ன்னு சொன்னான். “உனக்கு எங்கிட்ட சொல்ல விருப்பமில்லன்னு சொல்லு ஆனா ரூல்ஸ்ல இருக்குன்னு பொய் சொல்லாத”ன்னு சொன்னான். யப்பா டேய் இவன என்னமாச்சும் பண்ணுங்கடா.
வருண் பய பாவனிகிட்ட பெட்ல உக்காந்து “ப்ரியாங்கா குரூப் எல்லாரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்றாங்க”ன்னு சொன்னான். தம்பி இப்பத்தான் முழிச்சிருக்காரு யாரச்சும் காபி குடுங்க. இதோட முடிஞ்சிருக்கு