பிக்பாஸ் – 5
நாள் – 25 & 26 (28 & 29.10.21)
ரெண்டு நாள் எபிசோட். ஆனா ரெண்டு நாளும் ஒரே கண்டென்டுதான்.
புதங்கிழமை நைட்டு இசைவாணி மேடம் மறுபடியும் ஒரு கூட்டத்தக் கூட்டி பக்கத்துல மதுவ நிப்பாட்டி வச்சுக்கிட்டு
இசை : பாத்திரம் கழுவுறவங்க பாத்திரத்த கழுவி கமுத்தி வைக்காம கையோட சமைக்குற டீம்கிட்ட குடுத்துருங்க
ராஜூ : அப்ப அவங்க சமைக்கலேன்னா ?
இசை : அது ஏன் எங்கிட்ட மட்டும் இந்த கேள்விய கேக்குறீங்க ?
பாவனி : நீதான சொன்ன ? உங்கிட்டதான கேக்கனும்?
இசை : ஆமா எங்கிட்ட மட்டுந்தான் கேப்பீங்க...இதோ இந்த மது இருக்காளே இவதான் தலைவர் ஆனா இவகிட்ட கேக்க மாட்டீங்க
ப்ரியாங்கா : இந்த ரூல் போடுறது நீதான ?
இசை : அது பிக்பாஸ்ல போட சொன்னாரு
அண்ணாச்சி : சரி.....அவரு சொன்னத நீதான செய்யுற ?
இசை : அவரு சொல்றத எல்லாருந்தான் செய்யுறோம்....
சிபி : சரி அப்போ நாங்க மது சொல்றத கேக்கவா ?
இசை : ம்ம்ம்ம் கேளுங்க...ஆனா நான் சொன்னாதான் செய்யனும்
மத்தவங்க : இவ இசை இல்ல இம்சை //
நாள் 25
சும்மா திரியுற இவனுங்களுக்கு “யாக்கை திரி” பாட்டு அலாரம். யாருக்கோ போலருக்குன்னு தெசைக்கு ஒருத்தனா திரிஞ்சானுங்க.
இந்த வீட்ல இப்ப பெரிய குழப்பம் என்னன்னா...யாரு இந்த வீட்டோட தலைவர் ? மதுவா ? இல்ல இசையா ?
ஏன்னா பிக்கி மதுவ தலைவர்னு சொல்லிட்டு...இசைய கூப்ட்டு நீ கிச்சன் குயின் ஆனா வீட்டுக்கே ராணின்னு கலந்து பேசி விட்டிருக்காப்ல. மேடம் அவங்க சம்பந்தமான வேலைக்கு மத்தவங்கள யூஸ் பண்ணிக்கலாமா? இல்ல ஒட்டு மொத்த வீடும் மேடம் கண்டிரோலான்னு யாருக்கும், முக்கியமா இசைக்கே புரியல.
கேப்டன்னு ஒரு பச்ச மண்ண செலெக்ட் பண்ணி நிப்பாட்டுனா அது எப்பப் பாத்தாலும் இ.பி.எஸ் பேசும்போது பின்னாடி இருக்குற அம்மா போட்டோ மாதிரியே நிக்குது. அது அதிகபச்சமா பண்ற கேப்டண்ஸியே “தூங்காதீங்கடா தொயரம் பிடிச்சவனுங்களா”ன்னு கதறுரதுதான்.
அது சொல்றத ஒருத்தனும் கேக்கலன்னு கண்ண கசக்குற அதே இசைதான் மது சொல்றத கேக்காம இருக்குன்னு மது பிராது. அத எது கேட்டாலும் என்னய மட்டும் எல்லாரும் சொல்றீங்கன்னு சொல்லுது.
கக்கூஸ்ல வெளிக்கதவ இசை சாத்த
பாவனி : இசை....கதவப் பூட்டாத....தாப்பாழ ஆட்டாத !
இசை : இத நீங்க பிக்பாஸ்கிட்ட சொல்ல முடியுமா? ஆனா நான்றதால சொல்றீங்க!
பாவனி : எதே....பிக்பாஸ்கிட்ட சொல்லவா? அவர்தான் இங்க இல்லயே ! நீதான் இங்க இருக்க. நீதான் சாத்துன அப்ப உங்கிட்டதான சொல்ல முடியும்
இசை : இதோ நீங்களே சொல்லிட்டீங்க எங்கிட்டதான் சொல்லுவேன் பிக்பாஸ் கிட்ட சொல்ல முடியாதுன்னு
பாவனி : அட ராமா ! யம்மா சொல்ல முடியாதுன்னா அவரு இங்க இல்ல அதனால சொல்ல முடியாது...
இசை : எல்லாம் ஒண்ணுதான்....சொல்ல முடியாதுன்னா சொல்ல முடியாததுதான்
சுருதி : வர வர எத சொன்னாலும் நீ இப்பிடிதான் சொல்லுற....இனி அப்பிடி சொல்லாத
இசை : இத நீ பாவனிகிட்ட சொல்ல முடியுமா?
மாட்ட....எங்கிட்டதான் சொல்லுவ
சுருதி : ஆத்தீ....இவ இன்ஸ்டன்ட் இம்சையா இருக்காளே
மது : நீ சொல்றத நான் கேக்குறேன்...ஆனா நான் சொல்றத நீ கேக்க மாட்டேங்குற
இசை : இத நீ சி.பொண்ணு அக்காகிட்ட சொல்லமுடியுமா ? //
கக்கூஸ்ல உக்காந்திருந்த எல்லாரும் கடைய காலி பண்ணிட்டு ஓடிட்டாங்க.
சரி என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமில்ல அதனால இசை மேட்டரையே என்டெர்டெயின்மென்ட் பண்ணிக்கலாம்னு சொல்லி வட்ட மேஜையில உக்காந்து பேச ஆரம்பிச்சானுங்க.
அண்ணாச்சியும் சொல்ல ஆரம்பிச்சு....என்னென்னவோ பல்டி அடிச்சுப் பாத்தும் அது “இத நீங்க இளையராஜா கிட்ட சொல்ல முடியுமா?” அத நீங்க அர்னால்டுகிட்ட சொல்ல முடியுமா? “ன்னு ரிப்பீட் அடிக்கவும், அண்ணாச்சி “சர்தான் இனி ஒப்பனா சொல்ல வேண்டியதுதான். நீ ஒரு சார் பதிவாளார் அதிகாரியா இருப்பன்னு பாத்தா சர்வாதிகாரியா இருக்க”ன்னு சொல்லிட்டார்.
அவ்வளவுதான் இதுக்குத்தான் காத்திருந்தேன்ற மாதிரி இசை ஹெவியா ஹர்ட் ஆகிடுச்சு. இதத்தான் காலையில மது வந்து நீ ரொம்ப ஹர்ட் ஆகுறன்னு சொன்னதுக்கு “நான் ஹர்ட் ஆகுறதே இல்ல....ஆனா நான் ஹர்ட் ஆகுறேன்னு சொல்லி சொல்லி என்னய ஹர்ட் ஆக்குறீங்க”அப்டின்னு 82 தடவ ஹர்ட்டுன்ற வார்த்தைய யூஸ் பண்ணி எக்ஸ்ப்ளேயின் பண்ணுச்சு.
இங்குட்டு மது ஒப்பாரி ! “சும்மா சந்துக்குள்ள உக்காந்துட்டுருந்த என்னய கூப்ட்டு கேப்ட்டனாக்குனானுங்க. கூடவே அந்த புள்ளயையும் கூப்ட்டு தலைவர்ன்றானுங்க. கடசியில நானே அது சொல்றத கேக்க வேண்டியதா இருக்கு”ன்னு இது பொலம்பல்.
அபி போனதுக்கப்பறம் ப்ரியாங்கா அண்ணாச்சி & ராஜூ கூட ஜாயிண்ட் அடிக்கிறது அதிகமாகியிருக்கு. அப்பறம் ஒரு விவாத மேடை நடத்துனானுங்க. எல்லாமே இங்க நடந்த கிராமமா ? நகரமா டாஸ்க்க பேஸ் பண்ணி இந்த வீட்ல இவங்க நடவடிக்கைய மையமா வச்சு பேசனும். இசை நடுவர். 2 நாளுமே இது நடந்துச்சு.
ராஜூ வழக்கம் போல ரகளை. மத்தவங்களும் கொஞ்சம் நஞ்சம் பேசுனாலும். தாமரை தேர இழுத்து தெருவுல விட்டுருச்சு. தாமரைய பொறுத்தவரை அது வெள்ளந்தித்தனத்துக்கும் வினயத்துக்கும் நடுவுல நாட்டியமாடுற ஆளா இருக்கு. நகரத்து ஆளுகளப் பத்தி நெகட்டிவ் சொல்ல சொன்னா
“சின்னப்புள்ளைகளாவே இருந்தாலும் சின்ன வயசுல வாங்குன ட்ரெஸ்ஸப் போட்டுக்கிட்டே திரியுறது கொஞ்சம் தெகட்டலாத்தான் இருக்கு. அதுவும் சுருதிக்கு சுத்தமா அடக்கமில்ல”ன்னு சொல்லிருச்சு. இதுக்கு பதில் சொல்றேன்னு சிபி எந்திரிச்சு அடக்கத்தப் பத்தி பேசுற ஆளுக்கு அதுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?”னுட்டு உக்காந்துட்டான். இது சிபிய “அப்பிடி நான் என்ன அடக்கமில்லாம திரியுறேன்?”னு கேக்க, “அத நீயே உங்கிட்ட கேட்டு நீயே பதில் சொல்லிக்கோ”ன்னு சொல்லிட்டு தட்ட நக்கிட்டுப் போயிட்டான்.
இருக்குற பஞ்சாயத்துல அய்க்கி வேற “இந்த வீட்ல கந்த ஷஷ்டி கவசம் ஓடுதோ இல்லையோ ஆனா கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டு காது ஜவ்வு கிழிய ஓடுது. ப்ரியாங்காலாம் எவனக் கண்டாலும் கட்டிப்பிடிக்க ஓடியாறுது”ன்னு சொல்ல, ப்ரியாங்கா வேற அதுக்கு பதில் சொல்ல.....ஹப்பா !
ரெண்டாவது நாளும் இப்டித்தான் ப்ரியாங்கா தாமரை காயின் மேட்டர இழுக்க “இது கமல் சார்கிட்ட போக வேண்டிய பஞ்சாயத்து. நீ கடைய சாத்து”ன்னு சொல்லிருச்சு தாமரை. இப்பிடியே ரெண்டு நாளுமா 10 டாப்பிக்க குடுத்து நேரத்த ஓட்டியாச்சு.
ராஜு வந்து தாமரைய “போற போக்கப் பாத்தா நீ வெளிய போறதுக்கு சாவிய நீயே செஞ்சுக்குவ போல”ன்னு ஒப்பனாவே கண்டிச்சிட்டுப் போனான்.
இங்குட்டு அதே கும்பல், அதே பஞ்சாயத்து, அதே ஆலோசனை.....! பொழுது போகலேன்னா இதுங்க காயின் மேட்டர ஆரம்பிச்சுடுதுங்க.
பாவனி : காயின எடுக்குற அவசரத்துல கொஞ்சம் கவனம் செதறிட்டோம் அதுக்காக இப்பியாடி நம்மள கதற விடுவானுங்க ?
சுருதி : லைட்டா துண்ட மறச்சு எடுத்ததுக்கு தலையில குண்ட போடுறானுங்க
பாவனி : காயின குடுத்தாலும் வாங்க மாட்டேங்குறா....கையெடுத்து கும்புட்டாலும் பாக்க மாட்டேங்குறா
சுருதி : ஆனா நீயும் கொஞ்சம் தெளிவா பேசு....! பொம்பள பல்ராம் நாயுடு மாதிரி தெலுங்கு தூக்கலாப் பேசி அவ என்னடான்னா அதையும் கெட்ட வார்த்தைன்னு நெனைக்குறா
பாவனி : தேவதாண்டி.....கூட்டு சேந்து வந்ததுக்கு நாக்கு இதி காவாலி !
சுருதி : இதோ சொல்லிட்டேல்ல காவாலின்னு....
பாவனி : தேவுடா...! காவாலி அண்ட்டே வேணும்....
சுருதி : வேணும்னா வச்சுக்க...எங்கிட்ட வந்து சொன்னா ?
பாவனி : காயின எங்கிட்ட குடு....நானே கேஸ் வாங்கிட்டு வெளிய போறேன் //
அப்பறம் மெத்த கம்பேனி ஒரு டாஸ்க். அதுல ஒரு நிரூப்பு குரூப்பு வின்னு.
வரட்டும் ஆண்டவர். போன வாரம் மாதிரி போட்டு வாங்குவாறான்னு பாப்போம்.