கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 5

siteadmin

Administrator
Staff member
எல்லாருக்கும் வணக்கம் !

ஊருக்குள்ள எவ்வளவோ சேனல், எவ்வளவோ ஷோ இருந்தாலும் நாம இழுத்துபோட்டு உரண்டை இழுக்க ஏதுவான ஷோ நம்ம பிக்பாஸ் மட்டுந்தான். இதோ பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிச்சாச்சு.
ஆண்டவர் எப்பவும் போலவே கலக்கலா ஆரம்பிச்சு வச்சுட்டார். இன்னும் மூணு நாலு வாரத்துக்கு ஆண்டவர் விக்ரம் பட ஷூட்ல இருந்து ஆன் தி வேல வருவாரு போல. சோ அண்டர்கிரவுண்டு கெட்டப்லதான் கொஞ்ச நாளைக்கு தரிசனம். ஆனாலும் நேத்து ட்ரெஸ்ஸும், ஷூவும் கட்டடத்துக்கு கலவை பூசுற ஆளு மாதிரிதான் இருந்துச்சு.

டொனால்டு ட்ரம்ப்புல ஆரம்பிச்சு டோல் கேட் செக்கர் வரை எல்லாரையும் அவங்க வராங்க, இவங்க வராங்கன்னு சொல்லி இப்ப உண்மையா யாரு யாரு உள்ள போயிருக்காங்கன்னு நமக்கு தெரியும்.

இசைவாணி
ராஜு
மது
அபிஷேக்
நமிதா
பிரியங்கா
அபினய்
பவனி
சின்னப்பொண்ணு
நடியா
இமான் அண்ணாச்சி
வருண்
ஷ்ருதி
அக்ஷரா
ஐக்கி பெர்ரி
சிபி
தாமரைசெல்வி
நிரூப்

இந்த 18 பேருதான் நம்மள என்டெர்டேயின் பண்ணப் போறதா நெனச்சு உள்ள வந்திருக்கானுங்க. இந்த தடவ ரொம்பவும் தெரிஞ்ச செலிபிரிட்டியா யாரும் வரல. பிரியங்கா, இமான் அண்ணாச்சி மட்டுமே பரவலா எல்லாருக்கும் தெரிஞ்ச ஆட்கள். காலியான பஸ்ஸுல ஜாலியா போலாம்ன்ற மாதிரி ஜன்னல் சீட் கிடச்சதும் ஏறி உக்காந்த மாதிரிதான் வந்திருக்கானுங்க. இங்கயெல்லாம் ஆளுங்களே இல்லாத மாதிரி ஜெர்மனி, மலேஷியான்னு கோபால் பல்பொடி விக்குற நாட்ல இருந்தெல்லாம் வலுக்கட்டாயமா வண்டி கட்டி கூட்டிட்டு வந்திருக்கானுங்க.

எது எப்பிடியோ உள்ள வந்து பாலக் காச்சிட்டானுங்க. வந்த ஆட்களையெல்லாம் பாத்தா அலப்பறையாத்தான் இருக்கு. கண்டென்ட் குடுப்பானுங்களா இல்ல நம்மள கண்டம் பண்ணுவானுங்களான்னு பொறுத்திருந்து பாப்போம். குறிப்பா அபி உள்ள வந்திருக்குறது அன்லிமிட்டெட் கண்டென்ட்டுக்கான அப்சல்யூட் அறிகுறி. (நேத்து முடியுறப்ப அபி ஐக்கிகிட்ட உன் பேர சரியா சொல்லுன்னு சொன்னதுக்கு அது ஐ-கி ன்னு பிரிச்சு சொல்ல, அபி அதுக்கு கண்ண தொறக்குற ஆளு நீன்னு கவுண்டர் குடுத்தத கித்னா பேர் நோட் செஞ்சீங்க?)

வீட்டப் பொறுத்தவரை கண்ணுக்கு குளிர்ச்சியா கலர் ஃபுல்லா தான் இருக்கு. ஜிம் இல்லேன்னு ஆண்டவர் வருத்தப்பட்டார். ஆனா ஸ்மோக்கிங் ரூம காமிக்கலையேன்னு நமக்கு வருத்தம். லான் ஏரியால புல் இருக்கோ இல்லையோ புதுசு புதுசா டேபிளும் சேரும் இருக்கு. பொரணி பேசுறதுக்கு ஃபுல் ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கானுங்க.

அடுத்து 2 சீசனா தண்ணியிலாம கிடந்த ஸ்விம்மிங்க் பூல். ஏரிய ஆக்கிரமிச்சு அப்பார்ட்மென்ட் கட்டுறாப்ல....சும்மா இருந்த ஸ்விம்மிங் பூல ஆக்கரமிச்சு அண்டர் கிரவுண்ட் ஜெயிலா மாத்தி வச்சிருக்கானுங்க.

கடைசியா கன்ஃபெஷன் ரூம். அது கன்ஃபெஷன் ரூமா இல்ல ஹாலிடே இன் சூட் ரூமான்னு தெரியல. அழுது பொலம்பப் போற ரூமுக்கு ஏன் இவ்வளவு அலங்காரம்னு தெரியல. இருக்கட்டும்.
மத்தபடி உள்ள கொஞ்சம் மராமத்து பாத்து அங்க, இங்கன்னு சிறுசும், பெருசுமா சில மாற்றங்கள் அவ்வளவுதான். ஆளுக கூட கூட கிச்சன் ஏரியா சுருங்கிப்போறதுக்கான வாஸ்து ரகசியம் என்னன்னுதான் தெரியல.

மைக்குல இந்த தடவ பேர் பொறிச்சிருக்குறத பாக்கும்போது போன தடவ மைக்குல ஏதோ மொள்ளமாறித்தனம் நடந்திருக்குன்னு தெரிய வருது.

ஆக....சீசன் 5 வெற்றிகரமா ஆரம்பிச்சாச்சு. இனி இவனுங்கள நம்பி வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். ஏறுறவங்க ஏறிக்கங்க. பிடிக்காதவங்க ஏறாதீங்க. பாதியில இறங்குறதுன்னாலும் இறங்கிக்கலாம். இல்ல கடைசி ஸ்டாப் வரைக்கும் பயணத்த தொடரலாம். ரோடு சரியில்லன்னா வண்டிய நிப்பாட்டிட்டு எல்லாருமே இறங்கிடுவோம். ஆனா முதல் மற்றும் 3 வது சீசன் மாதிரி கலகலன்னு போகும்னு நம்புவோம்.

இது யார் மேலையும் எந்த சார்பும், விரோதமும் இல்லாத, ஷோவுல கண்டெஸ்டுகளின் குணாதிசயம் மற்றும் இங்க அவங்க நடவடிக்கைகளின் அடிப்படையில மட்டுமே எழுதப்போற ஸ்பூஃப் வகைதான். சோ இத சீரியஸா எடுத்துக்காம நல்லா ஜாலியா டைம்பாஸ் பண்ண மட்டும் இங்க வந்தா போதும்.

ஓகே ! சாவியப் போட்டாசு....வண்டி ஸ்டார்ட் ஆகிடுச்சு....போலாம் ரைட் !
 
Top