கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 6 - நாள் 8 - 11.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 8 (11.10.21)

“வலி மாமே வலி” பாட்டு அலாரமா அலற...துக்கத்துக்கு போயிட்டு வந்த மூஞ்சியோட தூக்கத்துல எந்திரிச்சு நடந்து வந்தானுங்க. இப்ப ஏன் இந்த பாட்டு ஓடுது? எதுக்கு இப்ப நாமல்லாம் இங்க இருக்கோம்ன்ற மாதிரியே ஃபீல் பண்ணிட்டு இருந்தானுங்க. நாமளுந்தான். எதுக்குடா நீங்கள்லாம் உள்ளா இருக்கீங்கன்னு கேட்டுட்டு இருக்கோம். ஏதொ பிரியங்கா கொஞ்சம் ஆக்டிவா இருக்குறதால சைடுல ரெண்டு ஸ்கூட்டி தாமரையையும், நாடியாவையும் வச்சுகிட்டு குத்து டான்ஸ் போட்டுட்டு இருந்துச்சு. மத்தவனுங்கள பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல
.
கக்கூஸ் பெஞ்சுல அண்னாச்சி & தாமரை

அண்னாச்சி : என்ன தாமரை வாடிப்போயிருக்காப்ல இருக்கு?
தாமரை : நானே இவனுங்க பண்ற கூத்துல ஆடிப் போயிருக்கேன் நீங்க வேற

அண்ணாச்சி : அதான் பாத்தேனே பிரியங்கா கூட நல்லா ஆடுனியே

தாமரை : என்னங்க லூசுத்தனமா பேசிட்டு இருக்கீங்க? எல்லாரும் நான் அப்பாவியா நடிக்கிறேன்னு சொல்றாய்ங்க

அண்ணாச்சி : நடிப்பு நல்லாயிருக்கான்னு கேளு....இருந்தா சான்ஸ் நிறையா கிடைக்கும்

தாமரை : பல வருஷமா காமெடியன் மாதிரி நடிக்கிற....உன்னையெல்லாம் எவனும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறான். இங்க பாருங்க நான் அப்பாவி இல்லையாம் அப்பாவி மாதிரி நடிக்கிறேனாம். அதான் பிரியங்கா அட்வைஸ் படி இனி கவனமா இருக்க முடிவு பண்ணிட்டேன்

அண்ணாச்சி : ஓ அப்பாவியா நடிக்கிறத விட்டுட்டு கவனமா நடிக்கப் போற அப்டித்தான?

தாமரை : மை:வா : எனக்கு எதிரி பக்கத்துலையே தான் இருக்கான் //

இந்த வீட்டோட முதல் தலைவருக்கான போட்டி. ஆளுக்கொரு பலூன பின்னாடி கட்டிக்கனும். ரெண்டு ஊசி இருக்கும். பெல் அடிச்சதும் ஊசி எடுத்தவங்க தலைக்கு ஒருத்தர் பலூன உடைக்கனும். பலூன் உடைபட்டவங்க ஓரமா போயி உக்காந்துக்கனும். இப்பிடியே ஒடச்சிட்டு இருந்தா கடைசியா யாரு பலூன் உடையாம இருக்கோ அவர் தலைவர். என்ன ஒரு புத்திசாலித்தனமான தேர்வு முறை....நைஸ்ல !

மாறி மாறி ஒவ்வொருத்தர் பலூனா உடைய....திடீர்னு ஆரம்பத்துல அவன் பலூன அவனா உடச்சுக்கிட்டு அவுட்டான அபினய் ஊசி எடுத்து கைல வச்சுக்கிட்டான்.

நிரூப் : நீ ஏண்டா எடுக்குற? நீ அவுட்டான ஆளுடா

அபினய் : பலூன் தான் உடஞ்சுச்சு அதனால நான் அவுட் இல்ல பலூன்ந்தான் அவுட்

நிரூப் : எதே பலூன் அவுட்டா ? என்னடா பிக்காளித்தனம் இது?

அபினய் : அப்பிடி அவுட்டானவன் பலூன உடைக்ககூடாதுன்னு சட்டமா?

நிரூப் : இப்பிடி பேசுறானே மட்டமா....யாராச்சும் கேக்குறது இல்லையா இவன?

வருண் : குத்தலாம்....அப்டியே போட்டு தாக்கலாம். இத சொல்லியே ஆகனும் இங்க அவ்ளோ பெருசா பலூன யாரும் பாத்திருக்க மாட்டாங்க...

நிரூப் : கவுதம் மேனன் படத்துல நடிச்சுட்டு வந்து நம்ம தாலியறுக்குறான் //

ஆனாலும் ஃப்ளோவுல கெட்டை வார்த்தையல்லாம் வரும்னு யாரும் எதிர்பாக்கல....மூடு முனி "ஃபக்கிங்க் கேம்"னு சொல்லிட்டான்! ஆண்டவர் கிட்ட இருக்குடி உனக்கு.

அபினய் இப்பிடியே பேசிட்டு இருக்கவும், அவனுக்கு சப்போர்ட்டா வருணும், சிபியும் களத்துல குதிச்சானுங்க. இந்த 3 இடியட்ஸ் ஒரு டீமாம்.

ஆளில்லாம அண்ணாச்சி கிட்ட உரண்டையிழுத்துட்டு இருந்தானுங்க. அவரு “அமைதியா பேசாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்கன்னு சொன்னத அபினய் சீரியஸா எடுத்துகிட்டு கோச்சுக்கிட்டான். பாக்குறதுக்கு பூரா படிச்ச ஆளு மாதிரி இருக்கானுங்க. ஒருத்தனுக்கு கூட குருவிக்கு இருக்குற அறிவு கூட இல்ல. அந்த ரூல் புக்க எடுத்து படிச்சா தெரிஞ்சிரும். கடைசில அந்த வேலைய நம்ம அய்க்கிதான் பாத்துச்சு.
அவுட்டானவனெல்லாம் அன்டார்டிகாவுல போயி உக்காரனும்னு சொன்னதும் அமைதியா போயிட்டானுங்க.
ஊருக்கே போக்கு காட்டிட்டு இருந்த மூடு முனி பலூன தாமரை உடச்சிடுச்சு. கடைசியா களத்துல நின்னது தாமரையும், சின்னப் பொண்ணும். பிரியங்கா சும்மா இல்லாம நாடகமா, நாட்டுபுற பாட்டான்னு பாத்துரலாம்னு எடுத்துகுடுக்க அத கெட்டியா பிடிச்சிகிச்சு தாமரை. அதையே தாமரை சொல்லவும் சினப்பொண்ணுக்கு பெத்த கோவம். அதுவே பலூன உடச்சிகிச்சு. உண்மை என்னன்னா கண்டிப்பா அது தோத்துதான் போயிருக்கும். ஆனா தமாரை கிட்ட தோக்க அதுக்கு விருப்பமில்ல அதனால ஹிட் விக்கெட்டாகிடுச்சு. அது வரைக்கும் கூட சரி. ஆனா அத தமரைகிட்ட நான் விட்டுகுடுத்ததாலதான் நீ ஜெயிச்சன்னு சொன்னதுதான் விஷக்கிருமி வேலை. இதக் கேட்டதும் தாமரைக்கும் ஈகோ தட்டுப்பட்டுடுச்சு.

இந்த சீசனோட முதல் தலைவர் தாமரை. வழக்கம்போல டீம் பிரிச்சிச்சு. இந்த தாமரை பத்தலேன்னா சொல்லு சட்னி தரேன்ற மாதிரி எப்பப் பாத்தாலும் கிட்னி தரேன்னு சொல்லிட்டு திரியுது. வாங்கிப்போடுங்கப்பா பின்னாடி நல்ல வெலைக்குப் போவும்.

ரைட்டுடா....உங்கள உசுப்ப எங்கிட்ட இருக்குறது ஒரே ammunition நாமிநேசன் பிராசஸ்தான்னு சொல்லி வாங்கடான்னு உள்ள கூட்டாப்ல. உள்ல போயிட்டு இங்க எல்லாரும் நல்லவங்கதான்னு நல்லவன் வேஷம் போடாதீங்கன்னு சொன்னார் பிக்கி (ஆமா...இது நான் எழுத வேண்டியதுல்ல?!)

நாமிநேஷன் லிஸ்டுல தலைவர் தாமரை, பாவப்பட்ட பாவனிய தவிர எல்லாரும் இருக்கானுங்க. தலைவரா இல்லேன்னா தாமரையும் கவுண்ட்ல இருந்திருக்கும்.

பொதுவான காரணம்னு பாத்தா இசை யரோடையும் சரியா பேசல, மூடு முனி ஸ்டிராங் கண்டெஸ்டன்ட், நாடியா அமைதியா இருக்கு இப்பிடித்தான் போச்சு. இதுல பெர்சனலா சில பேருக்கு சிலர பிடிக்கலன்னு போயிட்டிருக்கு. ஆக நமக்கு ஒரு விடியல் பொறக்குது.

கடைசியா மதுரக்குரல் மது வந்து இசைகிட்ட

மது : உங்கள தேடி நான் வந்தனனான்....ஆனா நீங்க பேசலனான்

இசை : (கானா) வந்து வந்து பேசுனாலும் பேசமாட்டியா...ரோட்டுல நீ வண்டியத்தான் பாத்து ஓட்டுயா

மது : இப்ப எதுக்கு பாடுதிணா?

இசை : நீதானா எடுத்துகுடுத்த....அப்ப நீ பாடுனது பாட்டு இல்லையா?

மது : நான் வந்து பேசுனனான்....

இசை : நல்லது நல்லது....! ஆனா அத கொஞ்சம் புரியுற மாதிரி பேசிட்டா இன்னும் நல்லது

மது : உங்களனான் எனக்குதான் பிடிக்குதிணா....

இசை : உண்மையாவா? ரொம்ப சந்தோஷம். ஆனாலும் உடன்பிறப்புகள விட அதிகமா அண்ணா அண்ணான்னு சொல்றது நீ மட்டுந்தான் போல....தமிழ்நாட்டுல உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு //


இதோட முடிஞ்சது.
 
Top