பிக்பாஸ் – 5
நாள் – 9 (12.10.21)
“ஒரு சின்னத் தாமரை” பாட்டு அலாரம். ஏன்னு யாருமே கேக்கல ஆனா கேட்டா தாமரை தலைவரானதுக்குன்னு சொல்றதுக்கு ரெடியா இருந்தானுங்க. டேய் நீங்கதான் இந்த தடவ கிரியேட்டிவ் டீமா? புரிஞ்சு போச்சுடா உங்க ஊழலு ! எங்க ஊர்ல வயசுக்கு வந்ததுக்கு கூட வகை வகையா அதுக்குன்னு நறுக்குன்னு பாட்டு வச்சிருப்பானுங்க. இவனுங்களுக்கு இந்த மூளை கூட இல்ல....! இதயும் கண்டுபிடிச்சு பெருமையா பேசிட்டு இருந்துச்சு பிரியங்கா. (இது இதோட பேரு சொல்லும்போதெல்லாம் ப்ரியாங்கான்னு சொல்லுதே ? எழுதும் போது நியூமராலஜி ஓக்கே...சொல்லும்போது கூடவா நியூமராலஜி? சம்திங் ராங் !)
நோலன், ஸ்டான்லி குப்ரிக், டேவிட் காமரூன் மூணு பேரும் “ குப்புற படுத்த சினிமாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம்” பத்தி பேசிட்டிருந்தானுங்க. அதாங்க நம்ம வருண், சிபி & அபிஷேக்கு. ஷோ முடியுறதுக்குள்ள எப்பிடியும் மல்லாக்க திருப்பி போட்டுருவானுங்க.
அக்ஷரா பேபி கதை சொல்ல வந்துச்சு. இவனுங்க அழுகுற மாதிரி கதை சொல்லனுமா? இல்ல சிரிக்கிற மாதிரி சொல்றதா? எப்பிடி சொன்னாலும் மாத்திதான் செய்யப்போறானுங்க செத்த மூதிங்க ! பேசாம ஃப்ளோவுல வரத சொல்லுவோம். மத்தத கரம்பேச்சி மாரியாத்தா பாத்துக்கும்னு சொல்லிட்டு ஆரம்பிச்சுச்சு !
என்ன வெள்ளாவியில வச்சு வெளுத்த அப்பா, அம்மான்னு சந்தோஷமா இருந்தேன். அண்ணன் ஒருத்தன் இடையில பொறந்தான். கட் பண்ணா அப்பா கொட்டாவி அப்பறம் அண்னந்தான் எனக்கு பட்டாபி. அம்மக்கு கொஞ்ச நாளா கிட்னி ப்ராப்ளம். அதுனால வீட்ல சட்னி ப்ராப்ளம். அப்பிடி இப்பிடின்னு இழுத்து பாத்துச்சு. வராத கண்ணீரையெல்லாம் கையால தொடச்சு கதை சொல்லி முடிச்சு இறங்குச்சு.
வழக்கம் போல இந்த சில்ரப்பயலுக டிஸ்லைக்கப் போட்டு சில்மிஷம் பண்ணிடானுங்க. டிஸ்லைக் குடுத்தது கூட கஷ்டமில்ல “இந்த கதையில் சோகமில்லை, சோகமிருந்தாலும் சோத்துக்கில்லாத கதையில்லை, கதையில்லை என்றாலும் காரமாயில்லைன்னு 3 ரோஸஸ் விளம்பரம் மாதிரி வீம்புக்கு சொல்லிட்டுப் போயிட்டானுங்க. அப்பறம் என்ன அடுத்த ரவுண்டு அழுகைதான்.
இந்த அக்ஷரா அழுகும்போது மட்டும் சவுண்ட ம்யூட் பண்ணி அது அழுகுறத பொறுமையா காமிக்கிறானுங்க அது ஏன்னு புரியல. இன்னைக்கும் டீவிய செக் பண்ணேன்.
நம்ம ப்ரியாங்கா இருக்கே ப்ரியாங்கா அது ஒரு வீரியம் கம்மியாயிருக்குற விஷ பாட்டில் போல. சமாதானப்படுத்துறேன்னு அன்னைக்கு நமிதாவ ஏத்திவிட்டு எரிய வச்சது. அப்பறம் அபிஷேக்கு வாய பிடுங்கி அவன அப்ரூட்டா கட் பண்ண பாத்துச்சு. இப்ப அது டார்கெட்டு ராஜு பாய்.
இந்த வீட்லயே கொஞ்ச நஞ்ச அறிவோட இருக்குற ஒரே ஆளு ராஜு பாய்தான். அவன் அக்ஷராவுக்கு லைக் குடுத்தத பாத்துட்டு “ஊரே அழுகுற மாதிரி ஒப்பாரி கதை சொன்னா சின்னப் பொண்னுக்கு டிஸ்லைக் குடுப்ப, ஆனா லைட்டா கண் மை கலஞ்சா மாதிரி கலங்குனதுக்கு லைக்கா? என்னா ஜோக் காட்றியா?”ன்னு மடக்க பாத்துச்சு. அதாவது இவன் காரணம் சொல்லி லைக், டிஸ்லைக் குடுக்குறதால அறிவாளியெல்லாம் இல்லை. இவனும் சராசரி சில்லறைதான்னு ரிஜிஸ்டர் பண்ண முயற்சி பண்ணுச்சு. சமாளிச்சுப் பாத்த ராஜூ அப்போதைக்கு எதுவும் சொல்லலேன்னாலும் வெளிய அண்ணாச்சி கிட்ட “நான் லைக் குடுத்தத வச்சு என்னய புரிஞ்சுக்க முடியுதுன்னு சொல்ற ஆள நாமளும் எப்பிடி வேணும்னாலும் புரிஞ்சுக்கலாமே” அப்டின்னு சொல்லிட்டு “யோவ் அரிசி மூட்டை அண்ணாச்சி...பாக்கத்தான போற இந்த ராஜூவோட ரங்குதே பஸந்திய”ன்னு சொல்லிட்டு நேரா ப்ரியாங்காகிட்டயே போனான். “நீ சொன்னது சரிதான்...இனி அப்பிடியே நடந்துக்குறேன்”னு சொல்லிட்டு போனான். அபிஷேக்கு இன்னைக்கு கழுத்த சேத்த மாணிக்க அப்பு ஒண்ணு வாங்கியிருக்கனும் ராஜூகிட்ட ஜஸ்ட் மிஸ்ஸு. சீக்கிரம் நடக்கும்னு நாடி ஜோஸ்யம் சொல்லுது.
இப்ப ப்ரியாங்கா கதை...
எப்பவும் பாஸிட்டிவா இருக்குற ஆளுதான்னாலும் ப்ரியாங்கா மேடம் பல இடத்துல அப்பிடி இருக்குறா மாதிரி நம்ப வைக்குது. இதுனாலையே அது சொன்ன கதை விஜய் சேதுபதி நடிப்பு மாதிரி செயற்கையா போயிடுச்சு. அப்பா இறந்தாரு அம்மா வளத்தாங்கன்னு வளவளன்னு பேசுச்சு. கதை சொல்லி முடிச்சதும் வந்து உக்காந்துச்சு. அதிகமா லைக் வாங்கித்தான் இருந்துச்சு.
இப்பதான் ராஜூ பாயோட ரஃப் அண்ட் டஃப் என்ட்ரி ! மனிதன் பட கிளைமாக்ஸ் ரஜினி மாதிரி வந்த வெடிகுண்ட வாங்கி திருப்பி அனுப்புனான்.
அக்ஷராவுக்கு லைக் போட்டது தப்புன்னு சொல்லிட்டு அதுக்கு என்ன காரணம் சொல்லுச்சோ அதே காரணத்த சொல்லி அதுக்கு டிஸ்லைக் குடுத்தான் ராஜூ. அவன் குடுத்ததும் குடுகுடுப்பைக்காரன பாத்த மாதிரி குடுகுடுன்னு ஓடிப்போயி லைக் குடுத்த ஆளெல்லாம் டிஸ்லைக் குடுத்துட்டு வந்தானுங்க. மாஸ் சீன் இது. ப்ரியாங்காவுக்கு மூஞ்சி மர்கயா.
இத மறுபடி மறுபடியும் “உங்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். நீ சொன்னத எல்லாம் ஓத்துக்கிட்டேன்”னு சீரியஸா மூஞ்சிய வச்சுட்டு ப்ரியாங்காவ ஓட்டிட்டு இருந்தான். அண்ணாச்சி இவனப் பாத்து கொஞ்சம் மெர்சலானாரு. இனி பிக் பீரோ ப்ரியாங்கா ராஜூகிட்ட எப்பிடி நடந்துக்குதுன்னு பாக்கலாம்.
சிபி கதை...
அவனே டிஸ்லைக்குதான் குடுத்த்திருப்பான் அவன் கதை கூந்தலுக்கு !
எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ள அழுகை என்னும் அருவியில் நனையுறது நம்ம அக்ஷரா பேபி தான். இவனுங்களும் எதையாச்சும் சொல்லி அத அழ வச்சு இவனுங்க சிரிக்கிறானுங்க. இதுவும் இத திருவாரூர் பார்ட்டியில கூப்டுவாக, பொன்னமராவதி பார்ட்டியில கூப்டுவாக....இவ்வளவு காரக்குடி பார்ட்டில கூட கூப்டுவாகன்னு நம்புச்சு ஆனா இது கெரகம் தனியா கம்பத்த பிடிச்சு கண்ணீர கசையவிட்டுகிட்டு இருக்கு. ! கடைசியில தாமரை கிட்ட வந்துச்சு நட்பு நாத்து நட்டுகிட்டு இருக்கு. அதாச்சும் புட்டுக்காம இருந்தா சரிதான். இல்லேன்னா இன்னொரு சத்தமில்லாத சோக கண்ணீர் காட்சி கிடைக்கும்.
நாள் 10 (13.10.21)
அய்க்கியும் அண்ணாச்சியும் பேசிகிட்டு இருந்தாங்க. அய்க்கி “ஸ்டார்டஜி என்ன ....ஸ்டார்டஜி என்னன்னு கேக்குறானுங்க சனியனுங்க.....கேக்கூறவந்தான் ஸ்டார்டஜி போடுற ஆளுன்னு புரிஞ்சிக்க வேண்டியதா இருக்கு “ஏய் தமிழா...ஸ்டார்டஜி இல்லாம ஆடு.....ஸ்டார்ட் சொல்லிட்டா நீ ஓடு”ன்னு ராப் அடிச்சிச்சு.
ரவுடி பேபி பாட்டு அலாராம். இருந்த இடத்துல இருந்து இடுப்ப அசச்சிட்டு அத டான்ஸுன்னு வேற சொல்லிக்கிறானுங்க. இசை கிட்ட வந்து இம்சைய கூட்டிட்டு இருந்தான் அபிஷேக்கு. பிலாசபி பேசுறேன்னு இவன் பேசுறதெல்லாம் பினாயில் மாதிரிதான் இருக்கு.
இப்ப அபிஷேக் கதை
அபிஷேக் : எங்க அப்பா பாத்தீங்கன்னா எனக்கு அப்பாவா இருந்தாரு....
நான் எப்பிடிப்பட்ட பையன்னா....
எங்க அப்பா பாத்தீங்கன்னா எனக்கு அப்பாவா இருந்தாரு...
நான் எப்பிடிப்பட்ட பையன்னு பாத்தீங்கன்னா...
அவன் வாழ்ந்தான் செத்தான், யோவ் என்னயா இப்பிடி பேசுற? உன்னயெல்லாம் அடிச்சு, சும்மா இருயா யோவ்....
பப்ளிக் : யார தம்பி இப்பிடி திட்டுறீங்க?
அபிஷேக் : திட்டுறேனா ? ஹலோ எங்க அப்பாவ செல்லமா கொஞ்சிட்டு இருக்கேன்...! அதாவது நான் எப்பிடிப்பட்ட பையன்னு பாத்தீங்கன்னா....
ஒரு வழியா கதைய முடிச்சு.....கேமராவுக்கு முன்னாடி மாரல் ஆஃப் த ஸ்டோரி சொல்லி, கீழ வந்து உக்காந்தான். அதிக லைக்குகளும், ஆர்டிங்களும்.
பிக்கி தாமரைய உள்ள கூப்ட்டு
பிக்கி : தாமரை இந்த வீட்டுக்கு நீதான் தலைவர்
தாமரை : ரொம்ப நன்றிங்கய்யா ! நான் இப்பவே வெளிய போயி சொல்றேன்
பிக்கி : அப்பிடியே வெளிய போயிரு...! கிறுக்கே நீ ஏற்கனவே தலைவர்தான்
தாமரை : அது யாரு ஏற்கனவே ?
பிக்கி : உன் இன்னசென்ஸ்ல இரும்பக்காச்சி ஊத்த...! சொல்றத கேளு அவனுங்கள மெரட்டு, போர்வை மடிக்கலன்னா வெரட்டு, இன் இஷ்டத்துக்கு சட்டம் போடு, அடிக்கடி என் கூட வந்து தீடம் போடு
அப்டின்னு சொல்லி வெளிய அனுப்புனாரு. அதுவும் வெளிய வந்து பிக்கி சொன்னத பிசிறாம சொல்லுச்சு. எவனும் கேட்ட மாதிரி தெரியல.
அடுத்து தாமரை கதை
வறுமை, ரெண்டு கல்யாணம், குழந்தை பிரிவு, ஓவெனெ அழுகை !
நம்ம பாவப்பட்ட பாவனி அண்ணாச்சிக்கிட்ட உக்காந்து பேசிட்டு இருந்துச்சு. என்னத்த சொல்றது. எதக்கேட்டாலும் அது சூசைட் கதையத்தான் கமாவ கூட விடாம சொல்லுது.
இப்ப வருண் கதை
என்னமோ சொல்ல ஆரம்பிச்சான் 7வது வார்த்தை வந்ததுமே “ஆத்தாடி இவ்வளவு பெருசா பேசிட்டோமே, மம்மி தீடுவாங்களே”ன்னு போயிட்டான்.
ப்ரியாங்கா தட்டு கழுவுற பிரச்சனைய தட்டி விட்டுப் பாத்துச்சு ஆனா இன்னைக்கு செல்ஃப் எடுக்கல.
உங்கள் வீட்டு சோக நிகழ்ச்சிகளுக்கு அட்மாஸ்பியரில் நிக்க சோக மூஞ்சி ஆள் வேண்டுமா ? இன்றே அணுகவும் : அபினய் ! பாட்டி வடை சுட்ட கதை சொன்னா கூட பாட்டிக்காக சோகப்படுவான் போல....!