கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புளி இஞ்சி

Poornima Karthic

Moderator
Staff member
வணக்கம் நண்பர்களே!

குளிர் காலத்திற்கு இதமாக காரசாரமான ஒரு சிம்பிளான ரெசிப்பி பார்க்கப் போறோம். புளி இஞ்சி கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தம். இது ஒரு ஊறுகாய் வகை ஆகும். தோசை, சப்பாத்தி போன்றவற்றோடு நன்றாக ஜோடி சேர்ந்தாலும், தயிர் சாதத்திற்கு இதை விட அருமையான ஜோடிப் பொருத்தம் வேறு எதுவுமில்லை.

தேவையான‌ பொருட்கள்

புளி- எலுமிச்சை அளவு (சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்)
இஞ்சி - 100கிராம் ( பொடியாக நறுக்கியது)
மிளகாய் - 100 கிராம். (பொடியாக நறுக்கியது)
நல்லெண்ணெய் - 50ml
வெல்லம் (பொடி செய்தது) - ஒரு மேஜைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
காய்ந்த மிளகாய்- இரண்டு

செய்முறை

கடாயில் எண்ணொய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு போடவும்.
கடுகு பொறிந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி தாளித்து, சிறிதளவு பெருங்காயப் பொடி போடவும்.
பிறகு நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு கெட்டியாக கரைத்து புளித் தண்ணீரை அதில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாக கொதிவந்ததும் வெல்லப் பொடியை சேர்த்து இறக்கி வைக்கவும்.

அடுத்த நாள் இஞ்சியும் மிளகாயும் புள்ளியில் நன்றாக ஊறி, நாவில் பட்டதும் ஆஹாஹாவென்று இருக்கும்.

செஞ்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றிகள் 🙏
 

SudhaSri

Moderator
Staff member
இன்னைக்கு என் கசின் கல்யாணத்துல சாப்பிட்டேன்... Wow... yummy 😋😋😋😋

கண்டிப்பா செஞ்சு சாப்பிடணும் 😁😁😁😁
 
Top