பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 10
"ஆமா மித்து...இப்போலாம் கரடி சேட்ட பண்றதில்லையோ அமைதியா நீ இருக்காப்ல தெரியுதே..."அறையில் துணியை மடித்துவைத்துக்கொண்டே மது கேட்க,
"ஹீக்கும் அதெல்லாம் நிமிர்த்த முடியாதுடி ஆனா கொஞ்சம் குறைஞ்சிருக்கு வேணா சொல்லலாம்..."
"ம்ம்ம் நல்ல மாற்றம் தான் அப்படியே குறையட்டும்..."
" சரி வா போய் தூங்கலாம் மணியாச்சு...நான் இப்போ தூங்கினா தான் அட்லீஸ்ட் ஒரு 4 மணி நேரமாச்சும் தூங்க டிரை பண்ணுவேன்..."
"ஹேய் இந்த பழக்கம் உனக்கு விடவேயில்லயா மித்து...அங்க எப்படி தூங்குவ..."
"இப்படியேதான்...10 மணிக்கு தூங்குவேன் மறுபடியும் 12 மணிக்கு முழிப்பேன்...அப்புறம் ராஜா சார் பாட்டுதான் கேட்டுட்டே இருப்பேன்...மிருணா இருப்பா...அவளை பாத்துட்டே அப்படியே தூங்கப்போவேன் 3 மணிக்கு..."
"அடியேய் இப்படி தூங்குனா உடம்பு என்னத்துக்குடி ஆகும்...இதில நாள் பூரா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்கணும்...கண்ணு என்னாகுறது..."
"நான் என்ன செய்ய மது...என்னால முடியல...தூக்கம் வந்தா தூங்கமாட்டேனா"
"ம்ம்ம்ம்ம்ம்ம்....சரி வா போலாம்...தூக்கமே வரல்லாட்டியும் சும்மாவாச்சும் கண்ண மூடி படுத்துருடி..."
அவள் தலையை வாஞ்சையாய் தடவியபடி, உறங்கச்சென்றாள்...
மறு நாள் வழக்கமாய் தான் செல்லும் அதே காபிஷாப்பிற்கு மதுவையும் அழைத்துச்சென்றாள்...
அன்று இனியனை பார்த்த அதே டேபிள் இன்று வேறு யாரோ ஒருவரின் இருப்பால் நிரம்பியிருக்க அதே காப்பசீனோவை ஆர்டர் செய்துவிட்டு அமைதியாய் இருவரும் இருக்க தூரத்தில் ஏதோ பரிட்சியமான முகமாய் தெரியவும் மது எழுந்து சென்றாள்...
" ஹேய் சஞ்சய் நீயா...எப்படிடா இருக்க..."
அதான் எங்கயோ பார்த்த முகமா இருக்கேனு வந்தேன்...
" ஹேய் வாலு...எப்படி இருக்க...நான் நல்லா இருக்கேண்டா"
"ஆமா இனியன்ட்ட பேசினியா எப்படி இருக்கான்..."
" அவனுக்கென்ன ஜம்முனு இருக்கான்..."
" ஆமா தனியாவா மது வந்த..."
"இல்லடா மித்ரா தான் கூட்டிட்டு வந்தா"
"யாரு அவங்கதான் மித்ராவா..."
"ஆமா நீ பாத்தது இல்லையா...அழகா இருப்பா..."
"பாத்தது இல்லதான் ஆனா அவள பத்தி கேட்காம ஒரு நாள் தூங்கினதில்ல...இனியன் எங்க விடுவான் டெய்லி நடந்ததெல்லாம் சொல்லி உசுர வாங்கி கேட்டப்புறம் தான் அமைதியா போவான்..."
"ஆமா அவன பத்தி தெரியாதா சரி விடு...ஆனா அழகா இருக்காள் ல..."
" ம்ம்ம்ம் அழகா தான் இருக்கா..."
"நான் கொஞ்சம் பேசவேண்டி இருக்கே பேசலாமா..."
""என்க்கிட்ட பேச என்னடா பெர்மிஷன்லாம்...இனியன் எப்படியோ அப்படியே தான் நீயும் எனக்கு..."
"ஹல்லோ உன்க்கிட்ட இல்ல...அவங்கட்ட..."
"அவக்கிட்டயா டேய் வேணாம்டா...ஏதோ நல்ல மூட்ல கூட்டிட்டு வந்திருக்கா...நீ எதுவும் பேசி பிரச்சனையாக்கிடாத...சொன்னா கேளு "
"ஹேய் விடு நான் பேசியே ஆகணும் சில விசயங்களை...இப்போ நான் கூட சொல்லலாட்டி அப்புறம் அவளுக்கு எதுவுமே தெரியாம போயிடும்..."
"ஹாய் நீங்க தான் மித்ராவா"
"ஆமா நீங்க"
"நான் சஞ்சய்...இனியனோட பிரண்ட்..."
"ஓ...சொல்லுங்க என்ன விசயம்"
"நீங்க வேணா எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கலாம் என்னால அப்படி முடியாது...நான் சிலதை பேசியே ஆகணும்..."
"என்ன சொல்ல வர்றீங்கனு புரியுற மாதிரி சொல்றீங்களா..."
"ஒஹோ அப்படி...மேடமுக்கு தான் பண்ணதெல்லாம் மறந்துட்டுல..மனுசனோட பெரிய வரம் மறதி...சில நேரங்களில அது ரணமும் கூட எனக்கு எதுவுமே மறக்கல இன்னும்..."
"ஹல்லோ மிஸ்டர் கொஞ்சம் தெளிவா பேசுறதுனா பேசுங்க இப்படி உட்கார்ந்து லெக்சர் கொடுக்க வேணாம்..."
"அப்படி சொல்றீங்களா...செரிங்க சொல்றேன் கேளுங்க...நீங்க அவனை அவமானப்படுத்தி அனுப்பினதெல்லாம் நியாபகத்தில இருக்குங்களா...அவன் அந்த வலி தாங்க முடியாம பத்து நாளு எப்படி சுத்துனானு தெரியுமா உங்களுக்கு கூட இருந்து பாத்த எனக்கு அந்த வலி தெரியும்..."
"என்ன மது...அவங்களோட சேர்ந்து நீயும் சைலண்ட் ஆகிட்ட...ஓஹோ உனக்கு விசயமே தெரியாதுல...அவங்க எப்படி சொல்லுவாங்க நானெதுக்கு இருக்கேன் சொல்றேன் கேளு..."
" மேடமை ஒருத்தன் பிடிச்சிருக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமானு டீசெண்டா போய் கேட்டான்..."
"அதுக்கு மேடம் என்ன பண்ணனும் இல்லங்க எனக்கு இஷ்டமில்ல நீங்க வேற பொண்ண பாத்துக்கோங்க அப்படி சொல்லி அனுப்பவேண்டியதானே அத விட்டுட்டு அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா...
" என்ன இனியன் என்ன விசயம் சொல்லுங்க சீக்கிரம் சொல்லுங்க எனக்கு கேப்புக்கு டைம் ஆச்சு...இப்போ வந்திடும்"
" மித்ரா உனக்கு நல்லாவே தெரியும் உன்மேல எனக்கு ஒரு பாசம் நிறையவே இருக்குனு...அது காதலாகி இப்போ என்க்கிட்ட கல்யாணம் செஞ்சிக்கலாமானு கேட்குது...என்னய கட்டிக்கிறியா மித்ரா...நிச்சயமா நல்லா பாத்துப்பேண்டா..."
அத்துனை கணம் அமைதியாய் நின்றிருந்தவள் அவன் சொல்ல சொல்ல கோவத்தின் உச்சிக்கே சென்றாள்...பளாரென அவன் கன்னத்தில் ஓங்கியறைந்தவள்...
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இனியா...ஒரு நாள் உங்க கூட பீச்சுக்கு வந்திட்டேன் அப்படினு உடனே அட்வாண்டேஜ் எடுத்துக்கிடறதா...உங்களுக்கெல்லாம் எத்தன தடவை சொன்னாலும் புத்தி வராது...திறமை இருக்கு வேலை இருக்கு சொல்லுவீங்களே அந்த மனசு அத புரிஞ்சிக்க டிரை பண்ணி நாலு பேரை சிரிக்க வைங்க...என் லைப்க்குள்ள எண்டர் ஆகணும்னு நினைக்காத...நான் அதுக்கான ஆளு இல்ல...
எனக்கு கல்யாணத்தை பத்தியோ காதலை பத்தியோ யோசிக்க கூட முடியாது..."
"இப்போகூட நீ மனசார வேணாம்னு சொல்லவேயில்ல...உனக்கு ஏதோ தடுக்குது அது என்னனு சொல்லு நான் சரி பண்றேன் கூடவே இருக்கேன் கண்டிப்பா இருப்பேன்..."
நீங்க என்பது நீ என ஆகியிருந்தாலும் அக்கணம் அதை எதையுமே பிரித்தறியும் மன நிலையில் அவள் இல்லை என்பது அவள் வார்த்தையில் தெறித்தது" ஒஹோ எப்போயுமே ஜட்ஜ்மெண்டல் தான்ல அத விடுறதேயில்ல நீ இப்படித்தானு சொல்லி சொல்லியே என்னைய மெண்டல் ஆக்கிடுறீங்க...முடியல சாமி என்னய விட்டுருங்க...நான் எப்படியோ இருந்துட்டு போறேன் விடுங்களேன்...யாருக்குமே இல்லாத அக்கறை உங்களுக்கென்ன...உங்களுக்கு என்ன தெரியும் என்னய பத்தினு வந்து லவ் பண்றேனு சொல்றீங்க...தெரிஞ்சப்புறம் வருத்தப்படுவீங்க..நான் யாருக்கும் பாரமா இல்ல...எனக்குனு யாரும் வேணா எனக்குனு வர்றதும்.எப்போவுமே என்கூட இருக்காது எனக்குத்தெரியும்..."
" சொல்லு தெரிஞ்சிக்கிறேன்...நான் எதுக்கு விட்டுட்டு போகப்போறேன் சொல்லு...நீ வேணும்னு தான் மண்டியிட்டு நிக்கிறேன்...புரிஞ்சுக்க மாட்டியா..."
"உங்களுக்கு அடிச்சாலும் புத்தியே வராதா...இன்னொருவாட்டி என் முன்னாடி வந்து நின்னா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுப்பேன்...இல்ல என்னய ஏதாச்சும் பண்ணிப்பேன்...மரியாதையா போயிடுங்க...இல்ல அசிங்கமாகிடும்...என் கண் முன்னாடி நிக்காதீங்க..."
எதுவுமே பேச முடியாமல் உடைந்துப்போய் அவன் சென்றதை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாலும் கண்களை தாண்டி நீரை விட அவளுக்கு மனதில்லை...
அத்துனையும் கேட்டுக்கொண்டு நின்ற மது "ஹேய் என்னடி இப்படி பண்ணி வச்சிருக்க..."
"உனக்கே இப்படி இருக்குல மது...அப்போ எனக்கு...எனக்கு சொல்லு எப்படி வலிக்கும் சொல்லு..."
"வாழ்க்கையில உங்கள பாத்திரவே கூடாதுனு நினைச்சேன் ஆனா பாக்க வச்சுட்டான் அந்த கடவுள்...ஆனா இப்படி ஒரு வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்டு எப்படி நீ நல்லா இருக்கேனு நானும் பாக்கிறேண்டி...உன்னய மறக்கதான் அந்த இன்ஸ்டியூட்டுக்கே அவன் போனான் தெரியுமா...பாவம் அவன் இருந்த நிலைமலாம்...எப்போவுமே சிரிச்சிட்டே இருக்க ஒருத்தன் அழுறதெல்லாம் பாக்கிறப்போ என்னால முடியல..."
"சஞ்சய் விடு இதுக்குமேல நீ பேச வேணாம் போதும்...எல்லாரும் பாக்கிறாங்க"
"மன்னிச்சிடுங்க மித்ரா நான் எமோசனல் ஆகிட்டேன் என்கூட அத்தன வருசமா கூட இருக்கான் அவனுக்கு ஒண்ணுனதும் தாங்கிக்க முடியல அதான்...ஆனா இப்போ கூட அந்த கண்ணை தாண்டி ஏங்க கண்ணீரை விடமாட்டிறீங்க...என்ன தோணுதோ அழுதுருங்க தேக்கி வைக்க வைக்க வலிதான்...நான் போறேன் மது..."
அவன் சென்றப்பின்னும் இறுகி கிடந்த அந்த இடத்தின் மெளனம் மதுவை ஏதோ செய்ய அவள் அருகில் சென்றாள்...
" மித்து வா போலாம்..."
"ஹேய் அவன் ஏதோ லூசுடி பேசிட்டு போறான் நீ ஏன் இப்படி இருக்க வா போலாம்...எதையும் யோசிக்காதடா..."
"இங்க பாருடா...ஹேய் மித்து இப்படி இருக்காத எனக்கு பயமா இருக்குடி..."
பில்லை கட்டிவிட்டு , அவள் தோளோடு மெல்ல அணைத்து அவளை வெளியில் அழைத்துச்சென்றாள்...மனமெங்கும் ரணத்திம் சுவடுகள் நிரம்பி தவிக்க குற்ற உணர்ச்சி நெக்குறுக்க அவளோடு நடந்து சென்றாள்...
அங்கிருந்து மது புக் செய்த கேப் வந்ததும் இருவரும் உள்ளே ஏற அப்போதும் கூட ஏதும் பேசாமல் அமைதியாய் சென்றுக்கொண்டிருந்தது அந்த பரபரப்பான நகரத்தில் இவர்களின் கார் மட்டும்...
நீடித்த மெளனம் அவர்களின் அறை வரைக்கும் நீண்டது...அமொளண்டை கொடுத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றதுமே ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்து அவளிடம் நீட்டவும் வாங்கி முழு பாட்டிலையும் காலி செய்தவளை வியப்பாய் பார்க்க,
" மித்ரா"
"வேணாம் மது எதுவும் கேட்காத...நான் தூங்குறேன் நாளைக்கு ஆபிஸ் இருக்குல"
"மணி இன்னும் பத்து கூட ஆகல மித்து"
"எப்படியும் தூக்கம் வரப்போறதில்ல...இன்னைக்கு மட்டும் என்ன விதிவிலக்கா...இருக்கட்டும் மது நான் போறேன்..."
" குட் நைட் டா மித்து"
" அது தூங்குறவங்களுக்கு போய் சொல்லு எனக்கு சொல்லி ஏன் வேஸ்ட் பண்ற..."
தொடரும்...