மெல்லிய அதிகாலை அவர்களை எழுப்ப நேரமாகியும் எந்திக்காத மித்ராவை பாத்து பதறிய மது" ஹேய் எந்திரிடி...என மேலே கை வைக்கவும் நெருப்பாய் கொதித்தது மேனி..."
" ஹேய் என்னடி ஆச்சு இப்படி இருக்கு...வா ஹாஸ்பிட்டல் போலாம்..."
" இல்ல மது பிராஜெக்ட் இருக்கு..."முனகிய குரலிலும் அவள் கூறியது தெளிவாய் கேட்டது...
" போதும்டி நீ கம்பெனி கம்பெனினு சுத்துனதெல்லாம்...உடம்ப கவனிக்கணும் முதல்ல வா "
டாக்டரிடம் போய் செக்கப் முடித்துக்கொண்டு பிரெஸ்கிரிப்சனில் இருந்த மாத்திரைகளை வாங்கச்சென்றாள்...
"மது நீ இங்கயே இரு நான் இப்போ மாத்திரை வாங்கிட்டு வந்திடுறேன்...கொஞ்சம் சாய்ஞ்சு உட்கார்ந்துக்கோ"
கவுண்டரில் நீட்டிவிட்டு இனியனுக்கு போன் செய்தாள்...இனியா போன எடுடா...
"ஹேய் மது வாட்டட சர்ப்ரைஸ் அதிசயமா கால் பண்ணிருக்க என்னாச்சு"
நடந்த அத்துனையும் விவரிக்க " ஹேய் வாட் என்ன சொல்ற நீ இவ்ளோ நடந்திருச்சா...எதுவுமே என்க்கிட்ட சஞ்சய் சொல்லலடா...நான் ஒருவேளை அவள பாத்தாலும் எதையுமே பேசாதனு சொல்லிட்டுதானே வந்தேன் அப்புறம் ஏன் இப்படி பண்ணான் டேம் இடியட் நெற்றியில் கைவைத்து அவன் புலம்பிக்கொண்டிருக்க " ஹேய் மித்ரா எப்படி இருக்கா..."
"அவளுக்குத்தான் இப்போ காய்ச்சல் ரொம்ப முடியல அவ்ளோ டயர்டா இருக்கா அதான் ஹாஸ்பிட்டல் வந்தேன்...சரி உனக்கு சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன்...".
" ஹேய் பிளீஸ் மது அவ கூட இருந்து பாத்துக்கோ...எனக்கு இங்க கிளாஸ் நெக்ஸ்ட் வீக்கோட முடியுது நான் கண்டிப்பா பாக்க வருவேன் தயவுசெஞ்சு அவக்கிட்ட எதுவும் சொல்லிடாத...இப்போ அவன் பேசி வச்சிருக்க மன நிலைக்கு கண்டிப்பா பாக்க விரும்பமாட்டா ...அதனால தா சொல்றேன்..."
"சரிடா நான் எதுவும் சொல்லல..."
" நீ அவள கவனிச்சிக்கோ அதுபோதும்"
"சரி நான் வைக்கிறேண்டா அவ வந்திடப்போறா"
"மித்து மெடிசின்லாம் வாங்கியாச்சு வர்றீயா போலாம்..."
"ம்ம்ம்ம் அத வாங்க இவ்ளோ நேரமா..."
'உடம்பு சரியில்ல அப்போயும் அந்த டிடெக்டிவ் மைண்ட விடுதா பாரு..."
" அது ஒண்ணுமில்லடி கவுண்டர்ல கூட்டம் அதான் லேட்....சரி நீ பாத்துவா..."
அங்கிருந்து அனைத்தையும் மறக்காமல் பேக் செய்து முடித்து கிளம்புகையில் ஏனோ சிறு கூட்டை விட்டு செல்லும் பறவை போல தினமும் தன்னோடு பயணித்த இயற்கையோடு இயைந்த வாழ்வில் , தான் கற்றுக்கொண்ட பாடங்கள் பலவற்றோடு அந்த அறையின் ஜன்னலோரத்தில் தான் மிகவும் நேசித்த பெண்ணின் உருவத்தை நிலவில் பாத்து சிலாகித்த நொடியெல்லாம் வந்து மறைந்தது...
பிரொசீஜர்ஸ் அத்துனையும் முடித்து விட்டு கதவருகே நின்று சிறுபிள்ளையாய் ஏக்கத்துடன் பாத்துக்கொண்டே நடந்தான்...
35 கிமீ கடந்து டேராடூன் விமான நிலையம் அடைந்தவுடன் டாக்ஸி டிரைவரிடம் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான்...
விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஆயிரம் கனவுகள் சூழ்ந்து நின்றாலும் ஒற்றை பெருங்கனவாய் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்...
"மேகம் தட்டும் தூரம் நின்றாலும் உன் நினைவுகள் தட்டுவது அதை விட அருகில்...என்றென்னுயிர் இன்னுயிர் ஆவதன்பே"
3 மணி நேர பயணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்தான் அவனுக்காய் ஏர்ப்போர்ட்ல் காத்துக்கொண்டிருந்த சஞ்சயுடன் அறைக்கு விரைந்தான்...
விக்கிக்கு ஹாய் சொல்லிவிட்டு சிறிது நேரத்திலயே கிளம்பி வெளியில் செல்ல எத்தனித்தான்...
"டேய் அதுக்குள்ள எங்கடா கிளம்புற...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவேண்டி தானே..."
"இல்லடா எனக்கு நேரமில்ல நீ பைக் கீ கொடு நான் போணும்..."
"நான் சொன்னா கேட்கவா போற...என்னமோ பண்ணு போ இந்தா என சாவியை தூக்கியிந்தான்"
"பை டா மச்சான்..."
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மித்து இருப்பாள் என அறிந்து மதுவிடம் லோகேஷனை வாட்ஸப் செய்ய சொல்லி சரியாய் அங்கு சென்று சேர்ந்தான்...
மதுவிற்கு போன் செய்து அட்ரெஸை உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களின் அறைக்கு முன் நின்றான்...
" டேய் எப்படிடா இருக்க மெலிஞ்சிட்டியே..."
"அதெல்லாம் இல்ல நீ ரொம்ப நாள் கழிச்சி பாக்கிறேல அதனால அப்படி இருக்கு...சரி மித்து எங்க..."
"அதானே இனிமே நம்மளலாம் கண்ணுக்குத் தெரியுமா...உள்ளதான் இருக்கா வா...ஆனா என்ன சொல்லப்போறானு தெரியலடா...எதுனாலும் கொஞ்சம் அவ பேசுறதுக்கு பொறுமையா இருந்துடுடா..."
"நான் பாத்துக்கிறேன் மது...பயப்படாத..."
மெதுவாய் பூனை போல அடியெடுத்து வைத்து அந்த அறைக்குள் நுழைந்தான்...
"ஹேய் மது இங்க வாயேன்...எங்கடி போன..."
இவனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தவள்...
"இவரு ஏன் இங்க வந்திருக்காரு மது..."
" ஹேய் சும்மா உன்னய பாக்கலாம்னு தான் வேற எதுவுமே இல்ல..."
"ஒஹோ பாத்தாச்சுல போக சொல்லு...எனக்கு யாரையுமே பாக்க பிடிக்கல..."
" மித்ரா...பிளீஸ் நான் பேசணும்..."
" மித்து...அடம்பிடிக்காத அவரு பேசிட்டு போட்டுமே..."
" மது நீ கம்முனு இரு...இதில தலையிடாத.."
"சரி விடு நான் போறேன் எனக்கென்ன..."
" இனியா நீ பாத்துக்கோ என்னமும் பண்ணு...ஆள விடுங்க ரெண்டு பேரும்..."
அவளருகில் சென்று பயம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் போய் அமர்ந்துக்கொண்டான்...விலகி விலகி சென்றவள் அதன் பின் அமைதியானாள்..மறுப்பேதும் சொல்லவில்லை தான் அருகில் அமர்ந்ததுக்கு என்பதே அவனுக்கு அப்போது பெரிய ஆறுதலாய் இருந்தது...
" மித்து இங்க பாரேன்..."
அவள் கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு பேச நினைத்தவன் அவளுக்கு பயந்து கண்களை மட்டும் பாத்து பேசலாமென நிறுத்திக்கொண்டான்...
"மித்ரா...பிளீஸ் என்னய பாத்து பயந்து போகாத...எனக்கு நீ வேணும் அதான் திரும்ப திரும்ப வந்துட்டே இருக்கேன்...புரிஞ்சிக்கோ மா..."
"ஆனா எனக்கு யாரும் வேணாம் யாரோட பரிவும் பாசமும் எனக்கு வேணாம் நான் யாருக்கிட்டயும் எதுவுமே எதிர்ப்பாக்கல..."
" ஆனா நான் எதிர்ப்பாக்கிறேன் மித்ரா உன்க்கிட்ட இருந்து நிறைய அன்பு, காதல் எல்லாமே..."
"என்க்கிட்ட அப்படி எதுவுமே இல்ல..."
"இல்லாமயா மித்ரா அன்னைக்கு சஞ்சய் சொல்றப்போ கண்ணு கலங்கின...ஏன் என்னய திட்டிட்டு கூட கலங்கினத நான் பாத்தேன் "
"ஒஹோ சார் பக்கா பிளானோட தான் வந்திருக்கீங்க..."
"அதெல்லாம் இல்ல மித்ரா"
" என்னய பத்தி என்னத்தெரியும் உங்களுக்கு"
" சொல்லும்மா தெரிஞ்சிக்கிறேன்..."
" வாழ்க்கையில சிரிச்சிட்டே இருந்தா நல்லா இருக்கோம்னு இல்ல இனியன்"
"எனக்கே சொல்றியா மித்ரா உன்னய முத டைம் உங்க ஆபிஸ்ல பாத்தப்போ நான் சொன்னது இதேதான் நியாபகம் இல்லல..."
" இனியன் வேணாம் விடுங்க..."
" ஆனா எனக்கு நீ வேணும்...பேசு என்னலாம் தோணுதோ பேசு ஆனா கூட இரு..."
" இனியன் உங்களுக்கு தெரியாது...வாழ்க்கையில எனக்குனு யாருமே இல்ல...நான் ஒரு அனாதை ஆசிரமத்தில வளர்ந்த பொண்ணு...
எனக்கு 5 வயசு இருக்கப்போ அப்பா அம்மா ரெண்டி பேருமே கார் ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டாங்க...அதுக்கப்புறம் நிலை தெரியாம சுத்திட்டு இருந்தேன்...
தெரிஞ்சவங்க ஒருத்தவங்க பாத்துதான் இங்க உள்ள ஆசிரமத்துல சேர்த்து விட்டுருக்காங்க...
நல்லாதாம் போயிட்டு இருந்துச்சு...எனக்குனு யாருமில்லன்ற கவலயவிட வேறெதுமே எனக்கு அப்போ பெருசா தெரிஞ்சதேயில்ல...
திடீர்னு ஒரு நாள் மதர் கூப்பிட்டு " மித்ரா உன்னய பார்க்க ஒருத்தவங்க வந்திருக்காங்கனு சொன்னாங்க"
நானும் நம்மள பார்க்க யாரதுனு ஆசையா போனேன்...அங்க எதோ ஊரில இருந்து ஒருத்தர்வந்து நின்னாரு...
"சொல்லுங்க மதர்..."
"இவரு உன்னய அவரோட கூட்டிட்டுப்போணும்னு நினைக்கிறாரு உனக்கு இஷ்டம்னா போயிட்டுவா மா"
" மதர் எனக்கு இங்கயே நல்லா இருக்கேன் இருந்துடுறேனே..." அப்போ எனக்கு ஒரு 10 வயசுதான் ஆனா ஓரளவுக்கு நல்லா விவரம் தெரியும்...
" மித்ரா என்கூட வா மா நான் பாத்துக்கிறேன்..."அவரு ரொம்ப பாசமா கூப்பிடதும் கையில டெய்ரி மில்க் கொடுத்தாரு நானும் சரினு கிளம்பிட்டேன்...
ரெண்டு மூணு நாளைக்கு நல்லா கவனிச்சாரு...அப்புறம்.அவரோட வேலை அத்தனையும்.பாக்க வச்சாரு...
துணி துவைக்கிறது, பாத்திரம் கழுவுறது சமையல் கூட கையை சுட்டிட்டு செஞ்சிருக்கேன் நான் பண்ணலாட்டி அவரு எனக்கு சுருட்டால கைல சூடு வைப்பாரு...அதுக்கு பயந்துட்டே எல்லாம் பண்ணேன்...கண்கள் கலங்கத்தொடங்கியதை கவனித்தாலும் ஏதும் கவனிக்காதவாறு இருந்துக்கொண்டான் இனியன்...
அவருக்கு ஒரு பையன் இருந்துச்சு...ஆனா அவங்க வைப் கூட இல்ல போல...அதுனால என்னய சம்பளமில்லாத வேலைக்காரி மாதிரியே அந்தாளு வச்சிருந்தான்...
ஒரு நாள் நான் அசந்து தூங்கிட்டு இருந்தேன் என்னனே தெரியல என் மேல முழுக்க ஒரு கை படர்ந்துட்டே இருந்துச்சி...ஏதோ நெஞ்சு வயித்துல லாம் ஏதோ ஊறிறாப்ல இருந்துச்சு...பயந்தடிச்சி எந்திச்சேன் யாருமேயில்ல...அடுத்த நாளும் இதே தான் எனக்கு ஒண்ணுமே புரியல...
மூணாவது நாள் நான் கண்டுபிடிச்சே ஆகணும்னு முழிச்சிட்டே இருந்தேன்...அடுத்து பாத்தேன் அது என்னய கூட்டிட்டு வந்தவரோட கை வாயை பொத்திக்கிட்டேன்...அதில இருந்து தான் என்னால நைட் தூங்கவே முடியல எப்போ தூங்கினாலும் சரியா அதே டைம்க்கு பத்றி எந்திக்கிறேன்...விழியை தாண்டி சொட்டிய கண்ணீரை முதன்முதலாய் அவளிடம் பாத்தான்...அவள் கதறுவது தாங்க இயலாமல் தன் தயக்கம் விடுத்து அவள் தோளோடு சேர்த்துக்கொண்டான்..."பேசு மித்து என அவளின் கையோடு கோர்த்துக்கொண்டே அவளை பேச விட்டான்..."
அப்புறம் எனக்கு அங்க இருக்கவே முடியல அவரு அடிக்கடி என்னய சீண்டுறதாவே இருந்தாரு எனக்கு மேலாம் ஏதோ ஊறிறாப்ல இருந்துட்டே இருந்துச்சு...அங்கிருந்து தப்பிச்சி போயிரலாம்னு முடிவெடுத்தேன்....
எதாச்சும் பண்ணனுமேனு அந்த வீட்டு தோட்டக்கார தாத்தாட்ட சொன்னேன்...அவரு கைல பணத்தையும் கொடுத்து என்னய இவரு இல்லாத நேரத்தில பஸ்ஸீம் ஏத்தி விட்டாரு...
"இவன்க்கிட்ட நீ இருந்தா உன் வாழ்க்கையை நாசமாக்கிருவான் மா நீ போய்டு எங்கயாச்சும்னு சொன்னாரு..."
"நான் மறுபடியும் அதே ஆசிரமத்துத்துக்குத்தான் வந்தேன்...எனக்கு வேற இடம் தெரியாது...
அந்த மதர் என்னாச்சுனு கேட்டாங்க எல்லாமே சொல்லிட்டு அடுத்து ஒரு வார்த்தை பேசல என் இடத்துக்கு போய்ட்டேன்...அத விட இப்போயும் என் உடல் பாகத்தில நான் கை வச்சாலே கூச்சப்படுற நிலைமைக்கு அவன் என்னய ஆக்கிட்டானு நினைக்கிறப்போ என்னால முடியல...அது எப்போலாம் நியாபகத்துக்கு வருதோ அப்போலாம் தான் நான் அமைதியாகிடுறேன்...கண்ணீர் மட்டும் பிரவாகமாய் ஊற்றெடுத்து வார்த்தை தழுதழுத்தது அவளுக்கு...
அதுக்கப்புறமும் என்னய தேடி அவன் வந்தான் அந்த மதர் அவன் மேல புகார் கொடுத்துவேனு சொல்லவும் முறைச்சிட்டே போயிட்டான்...
என்னால இந்த நிகழ்வுகள்ல இருந்து வெளிய வரணும்னு எவ்ளோ நினைச்சாலும் முடியவே இல்ல...நல்லா படிக்கணும்னு வெறி மட்டும் இருந்துட்டே இருந்துச்சு...10ம் வகுப்பில மாவட்டத்தில முதலிடம் வந்தேன் அதனால படிப்பு செலவு பூரா கலெக்டர் நிதியில இருந்து கொடுத்தாங்க...
நான் என்ஜினியரிங் படிச்சேன் சென்னையில அப்புறம் கேம்பஸில கிடைச்சது தான் நான் இப்போ பாக்கிற வேலை...இங்க வந்தப்புறம் மாறும் எதுவும்னு தான் மதர் என்னய வெளியூர் போக சம்மதிச்சாங்க...ஆனாலும் அவங்களுக்கு அவன் வந்திடுவானோனு பயம் இருந்துட்டே இருந்துச்சு...நான் இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சப்புறம் அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் பண்ண ஆரம்பிச்சாங்க...
தொடரும் ...