நான் கஷ்டப்பட்ட காலத்தில எனக்கு ஒரு வாய் சோறு கொடுக்க வழியில்லாம இருந்திருக்கேன்...அந்த வீட்ல இருந்தப்போ சாப்பாட்டே கிடையாது எச்சி சோறு கூட பொறுக்கி சாப்பிட்டிருக்கேன் அதான் இன்னைக்கும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணவே மாட்டேன் எவ்ளோ முடியலனாலும் சாப்டுருவேன் அந்த கஷ்டம் எனக்குதான் புரியும்...
இன்னைக்கு நான் விதவிதமா என்ன வேணா டிரெஸ் வாங்கிக்கலாம் ஆனா நான் வாங்க மாட்டேன் எனக்குள்ள அந்த அகம்பாவம் வந்திடுமோனு ஒரு பயம் இருக்கும் அதுனால சம்பளத்தில முக்கால்வாசியை ஆசிரமத்துக்குதான் கொடுத்துட்டு இருக்கேன்...
எனக்கு எப்போலாம் டல்லா தோணுதோ அப்போலாம் ஆறுதல் அந்த காபிஷாப் தான் அன்னைக்கு நீங்க என்னய பாத்தீங்கள் ல அப்போக்கூட கேப் டிரைவர் ஒரு சின்ன பொண்ணு கற்பழிப்பு பத்தி நியூஸ்ல வந்துச்சுனு சொன்னாரு தாங்கிக்க முடியல எனக்கு என்னோட நியாபகம் வந்துட்டு அதான் அங்க போய் கொஞ்ச நேரம் இருந்தேன்...அப்போதான் நீங்க வந்தீங்க...எனக்கு அப்போ யாரும் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு...அதான் நீங்க கூப்பிட்டப்போ கூட உடனே வந்தேன்...
என்னய பாக்கிறவங்களுக்கு நான் ரொம்ப ரூடா தான் தெரிவேன்...யாருக்குமே என்னோட முழுக்கதை தெரியாது...சொல்லவும் விருப்பபட்டதில்ல...
எனக்காக என்னய ஒருத்தன் தொட்டானு நீங்க சண்டை போட்டப்போவே பிடிச்சது...எனக்குனு ஒருத்தன் இருக்காரு எனக்கு எதுவும்னா அவரு கேட்பாருனு முழுசா நம்பினேன் ஆனா எனக்குள்ள ஒரு பயம்.இருந்துட்டே இருக்கும் யாரையும் என்னோடவரா ஏத்துக்க ஒரு தயக்கம் இருக்கு...முதல்ல அவங்களுக்கு என்னோட முழுக்கதையும் தெரியணும் அப்புறம் என்ன சொல்றாங்களோ அப்புறம் தான் மத்ததெல்லாம்னு நினைச்சேன்...அதான் உங்கள அவ்ளோ அவாய்ட் பண்ணேன்...
குட் டச் , பேட் டச் சொல்லிக்கொடுத்து வளர்க்க எனக்குனு யாருமேயில்லங்க...ஆனா என் பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிஞ்சி வளக்கணும்னு ஆசைப்படுறேன்...
தூரமா இருந்து பாக்கிறப்போ என்னோட சிரிப்பு மட்டுமே தான் எல்லாருக்கும் தெரியுது...நான் அவ்ளோ வலியை அனுபவிச்சிருக்கேன்...இப்போயும் பிரெண்ட்ஸ் என்மேல தெரியாம கைவச்சா கூட கைகால் லாம் நடுங்குது...
நான் எல்லார்ட்டயும் கோவமா இருக்கது கூட என்னய தற்காத்துக்கத்தானே தவிர வேற ஒண்ணுமேயில்ல...
இதெல்லாமே சொல்லணும்னு தோணுச்சு அதான் இனியன் சொன்னேன்...முதல் முறையாய் இவ்வளவு அருகில் அவளது கண்ணை அதுவும் மிகத்தெளிவாய் பார்த்ததுமே சற்று தன்னையையே அறியாது அவளது பேச்சில் வலியில் இருந்த அத்துனை மனோபாவத்தையும் வெளிப்படுத்திய அக்கண்களுக்குள் அதனை அழகாய் மறைக்கும் வித்தையை எங்கடி கற்றுக்கொண்டாய் என கேட்கவேண்டும் போல இருந்தது அவனுக்கு...அவள் பேச பேச விழியெங்கும் தனக்கு கண்ணீர் ஊற்றெடுப்பதை அறிய மறந்தவனாய்,
அவள் அருகில் இன்னும் நெருங்கி சென்றான்...அவள் இரு கைகளையும் எடுத்து கன்னத்தில் ஒற்றிக்கொண்டான்...எதிர்பாரா அவன் செயலால் சற்று தடுமாறிப்போனவள்
"சொல்லு இப்போயும்.நடுக்கம் இருக்கா"
"இல்ல இனியா"
"நீ எனக்கானவ மித்ரா அதான் அப்படி...எவ்வளோவோ வலிகளை பாத்திருக்க...இனிமே அதுலாம் இருக்காது...இருக்கவும் விடமாட்டேன் எப்போதுமே நானிருக்கேன்...அன்னைக்கு சொன்னது தாண்டா நான் இருப்பேன் இந்த உடம்பில மூச்சி இருக்கவரைக்கும்...இதே மாதிரி என் உள்ளங்கைக்குள்ள வச்சு பாத்துப்பேன் ஒரு தடவை என்னய நம்பி உன்னோட லைப்பை கொடு நான் பாத்துக்கிறேன் அப்புறம்..."
ஏதுமே பேசாமல் கதறி அழுதப்படியே அவளிருக்க அவள் முன் அமர்ந்து தன்னோடு அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்...விடுபட வேண்டாமென்று தோன்றும் வரையில் அணைப்பை தொடர்ந்தான்...
முதல்முறையாய் ஒரு ஆடவனின் அணைப்பில் தான் பட்ட மொத்த வலியும் நீர்த்துப்போவது கண்டு வியந்து போனாள்...
அப்போதுதான் தற்செயலாக என்ன செய்கிறார்கள் என பார்க்க வந்த மதுவிற்கு கண்கள் கீழே விழாத குறையாக பிதுங்கி நின்றது...
ஆனாலும் அத்துனை சந்தோசம் அவள் முகத்தில் இருவரையும் நெட்டி முறித்தப்படியே ஒரு போட்டோ எடுத்து சஞ்சய்க்கு அனுப்பினாள்...
இவர்கள் வெளியே வருவதற்குள் அங்கே அனைவரும் வட்டமேசை மாநாடு நடத்திக்கொண்டிருந்தனர்...வெட்கப்பட்டு அவள் தலைகுனிய தன் தோளோடு அவள் தலையை கைகளால் அணைத்துக்கொண்டான்...
அனைவரின் கேலி கிண்டல்களுக்கும் சலிக்காமல் பதிலளித்த அவளை புதிய பரிணாமத்தில்.பார்த்த மதுவிற்கு மட்டுமல்ல இனியனுக்கே அவள் அன்று தான் புதிதாய் பிறந்தது போல உணர வைத்தாள்...நிம்மதி கலந்த புன்னகை அவள் முகத்தில் பார்க்க அத்துனை அழகாய் இருந்தது...பொறுப்பு கூடியவனாய் உணர்ந்தான் அவளை நோக்கி தீரா காதலுடன்...
நாட்கள் அத்துனையும் காதலோடு அவர்களுக்கு கடக்க,
"டேய் காலையில போன் போட்டு வரசொல்லிட்டு ரெடியாக சொன்ன சொல்லுடா எங்க நாம போறோம்..."
" ஆஹான் மேடமுக்கு அவ்ளோ அவசரமா..."
"நீ அறை தான் வாங்கபோற..."
"சரி வண்டியில ஏறு நான் உன்னய ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்...அங்க போனா எல்லாம் சரியாகும்"
"எங்கனு சொல்லு..."
"பிடிவாதம் பண்ணாம வா ஒழுங்கா.."
"ஹீக்கும்..."
"கொஞ்சம் பிடிச்சிக்கலாமே..."
"எதுக்கு அதெல்லாம் ஒண்ணும் வேணா..."
"ஒரு கிரிப்புக்காகதான்..."
"நான் ஒண்ணும் கீழ விழமாட்டேன் ஏற்கெனவே நிறைய இடத்தில விழுந்துட்டேன் இனிமே புதுசா விழலாம் எதுவுமில்ல..."
" ம்ம்ம்ம்ம் சரிங்க மேடம்..."
போற வழியெங்கும் காதல் தீண்டி செல்ல அவனது போன் அடித்தது...
"என்னடி சிரிக்கிற..."
"அதே ரிங்டோந்தான் போல..."
"புரியலடி..."
"நீங்க தான் எல்லாத்தையுமே மறந்துருவீங்களே..."
" மகாபலிபுரம் போனது நியாபகம் இருக்கா..."
"ஹேய் சே செம்ம மெமரி பவர்ப்பா உனக்கு..."
"ம்ம்ம் அதான் சில நேரம் பிரச்சனையே..."
" ஹேய் என்னடி எல்லாம் சரியாயிடுவனு பாத்தா அப்பப்போ இப்படி ஆகிடுற...சரி விடு பாத்துக்கலாம்..."
என்னடா ஏதோ தெரியாத ஊருக்குள்ளலாம் போற. இந்த ரூட்லம் எங்க இருந்து பிடிச்ச...".
தூரத்தெரிந்த ஒரு குடிசையின் முன் ஒருவர் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்திருந்தது தெரிந்தது...
" என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க "
"இறங்கு மித்ரா" அவள் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்...
"என்ன இனியா இவளோ இறுக்கமா பிடிக்கிற..."
"நீ விட்டுறக்கூடாதுனு தான்..."
தொலைச்ச இடத்தில தான் சந்தோசத்தை தேடணும்... அதே சந்தோசத்தை வலியா மாத்தின இடத்திலதான் அந்த வலியையும் தொலைக்க முடியும்...
"ஏண்டா நீயும் சரி உன்னோட பிரெண்டும் சரி புரியுற மாதிரியே பேசமாட்டீங்களாடா..."
" இங்க வா எல்லாம் சொல்றேன்..."
அவன் கையை பிடித்துக்கொண்டே படுத்திருந்த பெரியவர் அருகில் வந்து நின்றான்...
அவரை பார்த்ததுமே கண்களில் கோவம் கொப்பளிக்க... "இதுக்குத்தான் விட்டுறமாட்டியானு கேட்டீயா...நான் தொலைச்ச சந்தோசமே அதானேடா..அப்புறம் ஏண்டா இங்க கூட்டிட்டு வந்த சொல்லுடா...என்னய அழவைச்சு பாக்கணும் அதானே சொல்லு...இப்போ நான் சிரிக்கிறது உனக்கு பிடிக்கல..."
"ஹேய் மித்து என்னடா பேசுற...நீ முழுசா சரியாகணும்னு தாண்டி இங்க கூட்டிட்டே வந்தேன் மறுபடியும் உன்னய பாக்கவா நான் இப்போ கூட இருக்கேன் சொல்லு..."
" இல்லடா உனக்கு இவரு யாருனு தெரிஞ்சித்தான் கூட்டிட்டு வந்தியா சொல்லு..."
"மித்து "அவள் கையை பிடித்துக்கொண்டு
"பாப்பா நான் உன்க்கிட்ட சில விசயங்கள் சொல்லணும்..."
அவன் பேசுவதில் பொதிந்து வைத்த அர்த்தங்கள் ஏதோ அவளை உள்ளூர தைக்க, புருவம் உயர்த்தி கூர்மையாய் கவனிக்கத்தொடங்கினாள்...
" நான் உன்க்கிட்ட சில விசயங்களை மறைச்சிட்டேண்டா அத இப்போ கூட சொல்லலாட்டி நான் மனுசனேயில்ல அதான் சொல்ல நினைச்சேன்..."
" என்ன பீடிகைலாம் போடாத ஏற்கெனவே என்னால முடியாம சுத்திட்டு இருக்கேன்..."
"நான் எந்த விசயத்தை மறக்கணும்னு நினைச்சு சொன்னேனோ அதெல்லாம். திரும்பவ நியாகப்படுத்துறாப்ல ஏண்டா இங்க கூட்டிட்டு வந்த...வாழ்க்கையில் யார் முகத்தில முழிக்கவே கூடாதுனு நினைச்சேனோ பார்க்க வச்சுட்ட...தினம் தினம் நான் தூக்கம் வராம நொந்தததுக்கெல்லாம் பதிலா நீ இருக்க இருப்பனு நினைச்சு மொத்தத்தையும் இன்னைக்கு முடிச்சிவிட்டுட்டியேடா ஏண்டா இப்படி...இன்னும் என்னலாம் என்னய கதறடிக்கப்போற சொல்லு தெரிஞ்சிக்கிறேன்...எவ்ளோதான் தாங்குறானு செக் பண்றீயாடா.."
" ஹேய் மித்து பிளீஸ்டா நான் சொல்ல வரது கொஞ்சம் கேளு..."
"சொல்லு கேட்கிறேன் என்னலாம் சொல்லணுமோ சொல்லு..."
" நான் மூணு வருசத்துக்கு முன்னாடி ஹைதரபாத் சுத்திருக்க நிறைய ஏரியாவுக்கு கேம்ப் போனப்போ தான் இவர பத்தி தெரிஞ்சது. சென்னையோட எல்லையில இருக்க இவரு இடத்துக்கு வந்தோம் இங்க எத்தனையோ பேருக்கு ஆலோசனை வழங்கினோம்...
ஆனா அங்க இவரு மட்டும் நடக்க முடியாம பக்கவாதம் வந்து நின்னுட்டு இருக்கத பாத்ததுமே நானே கிட்ட போய் என்ன பிரச்சனை ஏன் இவ்ளோ முடியாமயும் நிக்கிறீங்கனு கேட்டேன்...
"தம்பி நான் பண்ண தப்புக்கு தான் இப்படி அனுபவிக்கிறே சாகக்கூடிய முடியாம என்னைத்தயாச்சும் வாங்கி தின்னுட்டு போயிரலாம்னு பாத்தா தொண்டைக்குழி அடைக்குது நான் மன்னிப்பு கேட்டாத்தான் என் உசிரு அடங்கும்..."
" அய்யா என்ன இப்படிலாம் பேசுறீங்க...அதெல்லாம் ஒண்ணுமில்ல அப்படி என்ன தப்பு பண்ணீங்க சொல்லுங்க..."
"நான் ஒரு பொண்ணை தத்தெடுத்துட்டு வந்தேன் தம்பி என்ன கொடுமைலாம் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணிருக்கேன்...அதுக்கெல்லாம் பிரதிபலனா தான் இப்படி கெடக்கேன்...மகன் சொத்தப்பூரா வாங்கிட்டு அடிச்சி பத்திட்டான்...என் வீட்டில தோட்டக்காரரா இருந்தவரு தான் இரக்கப்பட்டு ஒரு குடிசை போட்டு என்னய பாத்துட்டு இருக்காரு...நான் அந்த பிள்ளைய பாக்கணும் ஒருக்கவாச்சும் அது காலில விழுந்து மன்னிப்பு கேட்கணும்...மனசார மன்னிப்பு கேட்கணும் எனக்கு ஏதாச்சும் பண்ணுயா...புண்ணியமா போவ..."
" அதுக்கப்புறம் நான் இத மறந்தே போயிட்டேன் அவருக்கிட்ட உன்னய பத்தின டீடெய்ல்ஸ் கேட்டேன் மித்ரா அப்படினு சொன்னாரு..."
அலட்சியப்பார்வை பார்த்தப்படியே பேச்சை கவனித்தாள்...
"நீ வொர்க் பண்ற கம்பெனியோட சேர்மன் நான் தான்..."
"வாட்ட்ட்ட்ட்ட் இன்னும் எத்தனை தான் சொல்லி என்னய கலங்கடிக்க போறீங்க"
" ஆமா இது யாருக்குமே தெரியாது எம்டியை தவிர...அப்பா தான் பாத்துட்டு இருந்தாங்க...அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு நினைச்சுதான் என்னய பாத்துக்க சொன்னாங்க...நான் தான் CEO அப்படினு யாருக்குமே தெரியக்கூடாதுனு நினைச்சேன்...அதுனால தான் நான் படிச்ச சைக்கலாஜிய இங்கயும் கொண்டுவரலாம்னு ஆரம்பிச்சேன்...நான் வளர்ந்தது பூராவே கலிபோர்னியாவில தான் படிச்சி முடிச்சப்புறம் இந்தியா வர ஆசைப்பட்டேன்...
கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் பண்ணவங்க நேம் லிஸ்ட்லாம் எம்டி என்க்கிட்ட சொன்னப்போதான் எனக்கு அந்த வயசானவர் சொன்ன நேம் ஸ்ட்ரைக் ஆச்சு..அப்புறம் உன்னய பத்தின டீடெய்ல்ஸ் கேட்டேன் எல்லாமே ஓரளவுக்கு மேட்ச் ஆச்சு...
அப்புறம் தான் உன்னய நேர்ல பாக்கணும் பேசணும்னு நினைச்சேன்...
ஆனா நான் நினைச்சத விடவும் நீ ரொம்ப போல்டா இருந்த பாத்ததுமே பிடிச்சுப்போச்சு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்...
செழியன் உன்மேல ஒரு கண்ணோட இருக்கது தெரிஞ்சி அவருக்கிட்ட பேசி சரி பண்ணேன்...
ஆனா ரிசார்ட்டில உன்னய தொட்டது நான் தாம் வேணும்னுலாம் பண்ணல ஏதோ நடந்திருச்சி மன்னிச்சிடு...
" நீங்க அப்படி தொட்டீங்களா...கொஞ்சம் கொஞ்சமா உங்க மரியாதை போய்ட்டே இருக்கு...".
"அவசரப்படாத மித்து கேளு..."
"நீ அவர தப்பா நினைக்கணும்னு நான் கேம் பிளான் பண்ணி அப்படி பண்ணல நிஜமாவே தெரியாம பட்டது தான் அப்போவே சொல்லிருக்கலாம் அடுத்த நிமிசம் நீ என்னய அவ்ளோ வெறுத்திருப்ப சுத்தமா பேசிருக்கமாட்ட...இன்னொன்னு அப்போ நீ என்மேல இருந்த கோவத்துக்கு நான் தெரியாம பட்டுச்சினு சொன்னாலும் அத நம்புற மன நிலை உனக்கு இருந்திருக்காது..."
" அது மட்டுமில்ல மது என் கூட பிரெண்ட் ஆனதும் அப்போதான் என்னோட உண்மையான நோக்கம் உன்னய நல்லா பாத்துக்கணும் சிரிக்க வைக்கனும் இதான் இத சொன்னப்போ அவ நல்லா இருந்தா போதும் இனியா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா நான் கொஞ்சம் கூட இருந்த அனுபவத்தில சொல்றேன் அப்படினு என்னக்கு அப்போ இருந்து தான் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சா...."
நான் அவருக்காக உன்னய தேடி கண்டுபிடிக்கல மித்து என் காதல் உண்மை நீ அவர நேர்ல பாத்தா அந்த கில்ட்டி குறையும் நீ சரியாவனு நம்பினேன்டா அதான் கூட்டிட்டு வந்தேன்...
நீ அன்னைக்கு எல்லாம் சொல்றப்போ எனக்குத்தெரியும்னு நான் சொல்லிருந்தா நீ மனசு விட்டு அவ்ளோ அழுதிருக்கமாட்டா...எனக்கும் என் மித்து கிடைச்சிருக்கமாட்டா...
இப்போயும் உன் முன்னாடி மண்டியிட்டு கேட்கிறேன் மித்து "என்னய ஏத்துக்கோ... நான் தப்பு பண்ணலடா...இது நம்பிக்கை துரோகம் இல்லடாமா...பிளீஸ் மித்து எனக்கு நீ வேணும்..."
" உன்னை நினைக்காமல் கழிந்த பொழுதுகளென்று ஏதுமில்லை அன்பென்னும் மொளனத்தில் , காதலின் துடிப்பு மட்டும் மெல்லிய ஓசையாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...
விடாது தெறிக்கும் தூறல் போல, உன் அன்பு சாரலில் நனைவது எப்போதடி...
ஒருமுறையேனும் அந்த மஞ்சத்தில் தலை சாய்த்து உறங்கிட மாட்டேனா...
வலிசூழ்ந்த இதயத்தில் காதலென்னும் முத்தத்தால் ஒற்றி எடுத்துவிட ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுக்கமாட்டாயா கண்ணம்மா...
விழிகள் உறக்கம் கண்டு நாளாகிற்று...உன் விழிகளில் நல் உறக்கம் காணும் வரை நானென்வாறடி நித்திரை கொள்வது...
சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலியனைத்தும் மொத்தமாய் சரிசெய்ய பேரவா கொண்டு தவிக்கிறது...நெஞ்சோடு அள்ளி அணைத்து ஆறுதல் அளிக்க...நான் இருக்கிறனேடி என உணர வைக்க சந்தர்ப்பம் அளிக்கமாட்டாயா இறைவா...
நிசப்தத்தின் பிடியில் அழுகிறது மனம்...ஆற்றுவது எப்போதடி...
கைவிரல் பிடித்து, பேதை மனம் கொண்ட காதலை உணர்த்திடவே முடியாமல் போவேனோ உடைந்து சில்லு சில்லாகிறேன்...ஒட்ட வைக்கும் மருந்தாய் காதலை கொஞ்சம் கடன் தருவாயா"
............பூங்கதவே தாழ்திறவாயோ.....