கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 2 ❤

பரபரப்பாய் வேலைகள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்க...மறு நாள் நித்திலாவும் இவர்களோடு சேர்ந்து வேலையை தொடர,



"ஹேய் நித்தி நான் அல்ரெடி உன்னோட வொர்க் பாதி முடிச்சிட்டேன்டா நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காத...ஐ கேன் ஹாண்டில் இட் டா"



"அடப்பாவி...நேத்து அந்தப்பேச்சு பேசின இன்னைக்கு இப்படி பேசுறீயேடா..."



"டேய் பிரபா கொஞ்சம் சும்மா இரேண்டா..." சைகையால் இவன் கூறுவதை கேட்டதும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான்...



"பரவாயில்ல ராஜேஷ் நான் வந்துட்டேன்ல நானே பாத்துக்கிறேன்...நேத்து பீவர் அதான் வரல...வேற ஒண்ணுமில்ல..."



" அச்சோ இப்படி எப்படிமா இருக்கு..."



"ரொம்ப அக்கறை காட்டாத...நான் பாத்துக்கிறேன்...என்னோட வேலையை சேர்த்து பாத்ததுக்கு மிக்க நன்றி..."



"அடி சக்கை அப்படி பேசுடா என் செல்லக்குட்டி..."பிரபாவின் குரல் கேட்டதும்



"டேய்"



" ரைட்டு விடு நான் போய் வேலையை பாக்கிறேன்..."



"பிளீஸ் அதை பண்ணுங்க மொதல..."



"சரிங்க மிஸ் நித்திலா அவர்களே..."



குறிப்பிட்ட இடைவெளியில் குறித்த நேரத்தில் அத்துனையும் பிசிறில்லாமல் முடித்து அன்புவின் சிஸ்டத்துக்கு சென்றுவிட, மித்துவும் மரியாதைக்கு போய் அவனிடம் சொல்லிவிட சென்றாள்...



"ஹான் வாங்க மித்ரா...பரவாயில்லயே என் கேபினுக்குலாம் வந்திருக்கீங்க..."



"பிராஜெக்ட் ஓவர் ஆகிட்டு சார்...உங்க சிஸ்டம்ல பிங்க் ஹோல்டர்ஸ் பிராஜெக்ட் அப்படின்ற நேம்ல இருக்கு நீங்க பாத்துட்டு சொல்லுங்க சார்...நா வரேன்..."



"ஹல்லோ"



"சொல்லுங்க ஹல்லோ...என்ன முறைப்பு சார்... மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்"



"ஒண்ணுமில்ல நீங்க போலாம்..."



"ம்ம்ம்ம்ம்ம் மச் பெட்டர்" முறைத்தப்படியே திரும்பிய அவளின் திமிர் கலந்த பார்வையில் மையல் அவனுக்கு சற்று தூக்கலாகிக் கொண்டே சென்றது...அவன் எண்ண அலைகள் போன் அடித்ததும் மாறியது...



"ஹல்லோ சொல்லுங்க சார்..."



" செழியா...பிராஜெக்ட் ரிப்போர் ஸ்டேஜ் என்ன..."



"சார் இட் இஸ் அண்டர் மை ரிவ்யூ "



" ஒகே மேக் ஷீயூர் இட் வில் பி செண்ட் வித்தின் தி டைம்லிமிட்..."



"கண்டிப்பா சார்....



"அப்புறம்...ஒவ்வொரு பிராஜெக்ட் முடிஞ்சப்புறமும் நம்ம ஸ்டாப்ஸீக்கு கவுன்சிலிங் அரேன்ஜ் பண்ணுவோம்ல..."



"ஆமாங்க சார்...கம்மிங் மண்டே அத ஸ்டார்ட் பண்ணிடலாம்"



"ம்ம்ம் ஆனா அதில ஒரு சேஞ்ச் இந்த டைம் நம்ம எப்போவுமே பண்ற டீம்மை மாத்தி முழுசாவே யங்க்ஸ்டர்ஸை இறக்கிருக்காங்க அந்த கம்பெனி...நான் கொஞ்சம் யோசிச்சேன்...அப்புறம் அதுவும் சரிதானு தோணுச்சு..."



"ஏன் சார்..."



"இப்போ இருக்க யங் ஜெனரேசனை புரிஞ்சுக்க இன்னொரு யங்கஸ்டர் தானே வேணும் அதான் அவங்க மன நிலையை அவங்க ஏஜ் குரூப்ல இருக்கவங்களை தவிர வேற யாராலும் அவ்வளவு நல்லா புரிஞ்சுக்க முடியாது...ஒரு சிலர் புரிஞ்சிக்கிட்டாலும் ஜெனரேசன் கேப் இருக்கும்...அதான் இப்படி பண்றது சரினு தோணுச்சு..."



"சார் யூ ஆர் ரியலி கிரேட் சார்...நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சார்...பண்ணிடலாம் சார் அப்படியே..."



" ஹான் செழியன் சொல்ல மறந்துட்டேனே அந்த டீம் ஹெட் பேரு மிஸ்டர். இனியமொழியான்... அழகான தமிழ் பெயரா இருக்குல...அதுலயே ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டேன்...டிரெடிஸன் மீட்ஸ் மாடர்ன் மாதிரி இருந்தாரு...அவ்வளவு வாஞ்சையான பேச்சு அவரோடது...பாத்த உடனே பிடிச்சிப்போச்சு செழியா..."



"சார் நீங்க இவ்ளோ சொல்றது பாக்கிறப்போ எனக்கே பாக்கணும் போல இருக்கே சார்..." முகம் அஷ்டகோணலாய் போனது அன்புவிற்கு...



"ஹான் மண்டே பாருங்க செழியா கண்டிப்பா உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..."



"அப்படியா பாக்கிறேன் சார் "



இடியுடனான மின்னல் போல, மிடுக்குடன் தோரணை ததும்ப,



மழைச்சாரல் மேல் பட்டது கூட அறியா அப்பேதை மனம் எங்கோ வெறித்தப்படியே தனிமையை அலாதியாக்கி லயித்துக்கொண்டேயிருக்கையில், தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் மிருணாளினியின் குரல் கேட்டும் செவி மடுக்கா மித்துவின் விழிகள், அவள் கைத்தொட்டு தோளைப்பற்றுகையில் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தது கண்கள் ஓரம் மழைக்கு ஈடுக்கொடுத்து நிற்கும் இரண்டு சொட்டு நீரோடு அது தெரியாமல் இருக்க அவ்வபோது கண்ணாடி அணிந்துக்கொள்வாள்...அதையும் மீறி கண்டுப்பிடிக்கும் சிலரைத்தான் அவள் மனமும் நீண்ட நாளாய் தேடி தவித்தது...



"சொல்லு மிரு...என்னாச்சு..."



"அத நான் கேட்கணும் மித்து...ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் கேட்கவேயில்லையா உனக்கு என்னாச்சு...மழைப்பெஞ்சா, இல்ல பெரும்பாலும் நைட் ஆனாலே இப்படி டல் ஆகிடுறியே ஏன்மா...நானும் கூட 6 மாசமா இருக்கேன் இதுவரைக்கும் உன்னய புரிஞ்சுக்கவே முடியல..."



"யாரையும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க...சில சமயம் நான் நினைக்கிற மாதிரியான பிம்பம் எல்லார்ட்டயும் இருக்கதில்லை...அதத்தாண்டி எதுவும் இருந்தா நம்ம மனசு அத ஏத்துக்கவும் செய்யாது...அதுவா தெரியுறப்போ, தெளியுறப்போ தான் அது நல்லா இருக்கு...." விழிகளை தாண்டி தெறிக்க நிற்கும் கண்களை கவ்வும் அந்த நீரை தொண்டைக்குழியோடு சேர்த்து விழுங்கிக்கொண்டவளை ஏக நினைவுகளோடு மழை மட்டும்.வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தது அதே இனிய மண் வாசனையோடு....



நித்திரை வர மறுக்கும் இரவோடு அவள் கடக்கும் நினைவுகளை கடக்க இயலாமல் இருக்கும் மனமும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கையில், எந்த சலனமுமின்றி மிரு தூங்கிக்கொண்டிருந்தாள் அவள் தூங்குவதையும், தனிமைக்கு துணை நிற்கும் தோழனாய் இசையை எடுத்துக்கொண்டு மழையை ரசித்தப்படி பால்கனியில் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு ஏனோ ஒரு பாடலின் வரிகள் அவள் மனதை நெருட



"முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்முடிவென்பதும் ஆரம்பமே..."



நா.முத்துக்குமாரின் வரிகள் அவளுள் ஊடுருவி, அவள் கடந்த காலத்தை நினைவூட்ட அதற்குமேல் ஏதும் யோசிக்க இயலாதவளாய் காலையில் அவள் அலுவலகத்தில் கடந்த சிரிப்புக்களையெல்லாம் தன்னோடு கொய்து கொண்ட நினைவுகளை திட்டி தீர்த்துக்கொண்டே, தூங்கச்சென்றாள்...



கண்கள் மட்டும் மூடிக்கொண்டு தூக்கம் வர திணறிக்கொண்டு இருக்கும் பலரில் அவளும் சேர்ந்து வருடங்கள் பல ஆனது...சோர்வு உடலை வருத்தாலும் மனம் ஏனோ விடுவதாய் இல்லை எண்ணங்களொடு அலைப்பாய்ந்து பிபியிலயே அவளை வைத்துப்பார்ப்பதில் அத்துனை சந்தோசம் அதற்கு...



'ஏன் மித்து இப்படி இருக்க தூங்குடி'



'கண்கள் சிவந்துப்போய் கிடந்தாலும் உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ஏந்தான் இப்படி படுத்துறியோ தெரியல' மனதை வசவு உரித்தப்படியே கண்களை மூடியப்படி தூங்க முயற்சி செய்தாள் மணி 3 யை தொடுகையில் அவள் தூக்கமும் எட்டிப்பார்த்திட மறுபடியும் 5 ற்க்கே பதறியடித்து எழுந்தவளின் முகம் வெளுத்துப்போயிருக்க, வழக்கம் போல தூக்கம் தொலைத்து எழுந்து அன்றாட வேலையில் மூழ்கினாள்...



அன்று திங்கள் கிழமை அவர்களின் அலுவலகமே பரபரப்பாய் இருந்தது... மழை நின்றாலும் தூரல் நிற்கவில்லை என்பது போல வேலைகள் முடிந்தாலும் பேச்சுக்கள் குறைவில்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது...



"பிரச்சனைகள் ஆயிரம் சூழ்ந்தாலும் சிரித்துக்கொண்டேயிருக்கும் மனப்பக்குவம் எல்லாருக்கும் அமைவதில்லை...அதுவும் தகவல் தொழில் நுட்பத்தில் கவலைகள் பல சூழ்ந்து முதுகெலும்பு தேயும் அளவுக்கு வேலை பெண்டை நிமிர்த்தினாலும், சிரிப்பு ஏதாவது ஒரு சூழலில் வந்துக்கொண்டே தான் இருந்தது அவர்கள் முகத்தில் அத நல்லாவே கவனிச்சேன்...அதைத்தாண்டிய மனக்குறைகள் மனச போட்டு பிசையுறப்போ, யாராச்சும் கேட்க மாட்டாங்களானு மனசு கிடந்து தவிக்கும்...சிலர்ட்ட நம்ம நெருக்கமாவே இருந்தாலும் , சொல்லத்தோணாது...அந்த Bonding சிலர்ட்ட மட்டுந்தான் வரும்..நான் உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வரல...பேசத்தான் வந்திருக்கேன்...



ஒரே நாளில பாத்ததுமே என்க்கிட்ட எல்லாம் சொல்லணும்னு உங்களுக்கு தோணிடாது...ஆனா இந்த கவுன்சிலிங்கோட முக்கிய நோக்கமே எங்கயாச்சும் தேங்கி கிடக்கிற எண்ணங்கள் வெளிப்பட்டு மனசை சீர்ப்படுத்திராதானு தான்...உங்கள் எண்ணம் என்ன...கோல் என்ன, எல்லாத்தையும் நம்ம மனசு சரியா இருந்தா தான் உணர முடியும்...அது தன் பாட்டுக்கு இருந்துச்சுனா எதுவுமே முடியாது...



மனசு ஒருநிலையில இருக்க தியானம் பண்ணனும்னு அவசியமில்லை, மனசு விட்டு பேச நாலு பேர சம்பாதிச்சு வச்சாலே போதும்...உங்க கேரியர் இதானா நம்ம போற பாதை சரியா...எந்தளவுக்கு நம்ம கோவம், மன உளைச்சல் இதெல்லாம் வீட்டுல உள்ளவங்கள பாதிக்குதுனு சமயங்களில நமக்குத் தெரியுறதேயில்ல...தெரியலனு சொல்றது விட புரிஞ்சுக்க நம்ம மனசு முயற்சி பண்ணாது இயந்திரத்தனமான வேலை...அதிலயே ஆயிரத்தெட்டு சிக்கல்...இதுல நம்ம மனசு சொல்றது கேக்குறதெல்லாம் எங்க பாஸ்....அதானே யோசிக்கிறீங்க...



ஆனா இது தான் உனக்கு ரெண்டு மணி நேரத்துக்கு, இங்க இருந்துதான் ஆகணும் வேலையை பத்தின சிந்தனை அங்க இல்லன்றப்போ, மெயினா மொபைல் நம்ம கூட இல்லங்கறப்போ, மனசு அத தாண்டி நிறைய யோசிக்கும்...அப்படி என்ன யோசிக்கீறீங்கனு தெரிஞ்சுக்கத்தான் இங்க வந்திருக்கேன்...நான் சிகிச்சை பண்ண வரல அது என் வேலையும் இல்ல...மனச படிக்க வந்திருக்கேன் அதுல கிடைக்கிற பாடத்தை என் மூளை அதுக்கு ஏதாச்சும் மாற்று வழி வச்சிருந்தா அத உங்களோட பகிர்ந்துக்கத்தான் வந்திருக்கேன்... வேற பெருசா எதுமில்ல..."



"என்னடி இவரு வந்த நேரத்தில இருந்து ஆத்து ஆத்துனு ஆத்துறாரு...எப்போதான் முடிப்பாரு...மனசு, எண்ணம், பாடம்னு இதுக்கு மீட்டிங்க்னு வரசொல்லிட்டு உசுர வாங்குறாங்க...இந்த நேரத்தை கொடுத்திருந்தா கேண்டி கிரஷாச்சும் ஆடிருப்பேன்..."



"அடியேய் மது சேட்டடி உனக்கு " மித்துவின் காதில் கிசுகிசுத்ததை பார்த்துக்கொண்ட இனியன்...



"என்ன மிஸ்.மது இவன சைக்காலாஜி பேச சொன்னா பிரசங்கம் பண்றானே இதுக்கு சும்மாவேவாச்சும் விட்டுருக்கலாம் நிம்மதியா இருந்திருப்பேன் அதானே யோசிக்கிறீங்க..." சிரித்தப்படியே பேசிய அவனை பார்த்ததும் அனைவரும் சிரித்து விட மித்து மட்டும் ஏனோ புன்னகையை தேடிக்கொண்டிருந்தாள்...



"என்ன செழியன் சார் அவங்களை ஏன் முறைக்கிறீங்க...அவங்க பேசுறதுல தப்பில்லையே...கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் பொது..."அவள் மதுவைப்பற்றி பேசுகையில் அவன் பார்வை மித்துவின் மீது இருந்ததை கவனிக்காமல் இல்லை செழியன்...



சதாசிவமும் இனியனின் மொழியை ஆமோதித்து அமைதி காட்ட...அனைவரின் பார்வையும் குவியமாய் இனியனின் மீது திரும்பியது...மதுவும் அவன் ஏசியதை கூட பெரிசா எடுத்துக்கிடாம அவன் முகம் பார்த்தாள்...அவ்வபோது இனியனின் விழிகள் கூறிட்டு கிழிப்பது போல இரு விழிகளை நோக்கியப்படியே இருப்பதை செழியன் கவனிக்க தவறவில்லை...



அவன் பேசி முடித்ததும், வழக்கமாய் கவுன்சிலிங்குக்கென வைத்திருக்கும் கேபினுக்குள் அவன் நுழைய முதலில் ராஜேஷ் உள் நுழைந்தான்...




தொடரும்...

 
Top