கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 3❤

"முதல்லயே சொல்லிடுறேன் நான் உங்களுக்கு நல்லா பரிட்சயமானவர்னு நினைச்சிட்டே பேசுங்க சரியா...ஹாய் ராஜேஷ்...சொல்லுங்க எப்படி இருக்கீங்க..."



"நீங்க சொல்லலாட்டியும் நான் அப்படித்தான் யாரும் நல்லா இருக்கீங்கனு கேட்டாலே எல்லாம் உளரக்கூடிய ஆளு என்க்கிட்ட நீங்க விசயத்தை கறக்கிறது ஈசி...ம்ம்ம்ம் என்ன கேட்டீங்க...ஹான்...பொறந்துட்டோம்னு இருக்கேன் சார் ஏதோ..."



"ஏன் Dude இவ்ளோ விரக்தி..."



"அத விடுங்க இனியா..."



"ஹேய் சில் ப்ரோ பாத்துக்கலாம் என்ன விசயம் சொல்லுங்க...வேலைலாம் பிடிச்சிருக்கா..."



" ம்ம்ம்ம்ம்ம் இல்ல ப்ரோ என்னதான் பிரச்சனை சொல்லுங்க..."



"ஐடி வேலைனா எல்லாருக்குமே கனவுதான் ப்ரோ...நிறைய பேரு பி.இ முடிச்சிட்டு சம்பந்தமேயில்லாத எத்தனையோ வேலையை செய்றப்போ நான் ஆசைப்பட்ட வேலையை செய்றேனு திருப்திதான் இருந்தாலும், என்னையும் மீறி மனசில ஏதோ இருந்துட்டே இருக்கு...



இப்போ பாருங்களேன் என் பக்கத்துவீட்டுப்பையன் அவனும் என் வயசு தான் ஆனா பிரபசரா இருக்கான் ...அவன் பாட்டுக்குப்போனானா 6 மணிக்கு வீட்டுக்கு வந்தானானு ஜாலியா இருக்கான்...சம்பளம் என்னய விட கம்மிதான் ஆனா அவங்கிட்ட இருக்க நிம்மதி என்க்கிட்ட இல்லயே...அது ஏன்னு புரியலயே..."



அவன் கூறிய விடயத்தை ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டே அவனருகில் எழுந்து வந்து அமர்ந்துக்கொண்ட இனியன் அவன் தோள் தொட்டு..."ப்ரோ ஒண்ணு சொல்லவா...நீங்க செம்ம கியூட்டா இருக்கீங்க..."



"யாரு நானு நீங்க பாத்தீங்க..."விருட்டென்று அவனையும் மீறி மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டதை பார்த்துக்கொண்டே இனியன் பேச்சை தொடர்ந்தான்...



" இங்க பாருங்க ப்ரோ...நம்ம மனசு அப்படித்தான்..."



"ஹேய் வெயிட் அது ஒரு குரங்கு மாதிரி அதானே சொல்லப்போறீங்க இதெல்லாம் கேட்டு சலிச்சிப்போச்சு வேற எதும் சொல்லுங்க ப்ரோ..."



"நான் என்ன சொல்ல வரனு கேட்கறதுக்குள்ள அவசரம்... சிரித்துக்கொண்டே தொடர்ந்தான்..." இல்ல ப்ரோ அத சொல்ல வரல...எப்போயுமே சில விசயங்கள் நாம ரொம்ப வெறித்தனமான ஆசைப்படுறப்போ ரெண்டு மனித மனம் இருக்கு...ஒண்ணு அதான் ஆசைப்பட்டது கிடைச்சிருச்சில போதும் இதுக்குமேல என்ன வேணும் அப்படினு... இன்னொன்னு என்னனா ஆசைப்பட்டது கிடைச்சாலும் திருப்தியடையாத நிலை அதில இருந்து சே இத விட பெட்டரா இருந்திருக்கலாம் ஆனா இதே தான் வேணும்னு ரெண்டுங்கெட்டான் மன நிலை... இப்போ நீங்க சொல்றது ரெண்டாவது ஸ்டேஜ்..."



"வெயிட்...நான் சொல்லி முடிச்சிக்கிறேன் அவசரம் வேணாமே..."



"இப்போ இருக்க யங்க்ஸ்டர்ஸ்க்கு இருக்க பிராப்ளம் தான் இது...அப்போ நான் வயசானவானானு நீங்க கேட்க கூடாது நானும் அதே 90's தான் சாமி...சரி நீங்க சொன்ன அதே பிரபசரை எடுத்துப்போம் அவர்ட்ட என்னைக்காச்சும் பேசி பாத்திருக்கீங்களா ப்ரோ..."



"இல்லயே..."



"அப்போ பேசி பாருங்க...இங்க பாதி பேரு சிரிப்பில தான் மறைச்சிட்டு வாழ்றாங்க...அவரு சிரிச்சிட்டே இருக்கதால அவரு படுற வலி உங்களுக்குத்தெரியல அவ்ளோதான்...பாக்கிற வேலை முக்கியமில்லை ப்ரோ...சந்தோசமா பாக்கிறோமானு தாம்...நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிடுவ நான் தான் பாடா படணும் உனக்கென்னனு நீங்க நினைக்கிறது இங்க கேட்குது ப்ரோ...ஆனா அது இல்ல...பீச்சில நைட் நேரம் லாங்க் டிரைவோ இல்ல...கொஞ்ச நேரம் அந்த கடற்கரைல உட்கார்ந்து நிலாவை சைட் அடிச்சிருக்கீங்களா...அந்த குளிர்காத்துல பீச் சவுண்ட் கேட்டுட்டே அங்க நடக்கிற எல்லாத்தையும் உத்து கவனிச்சி பாத்தீங்கனா வாழ்க்கையில பிரச்சனைனு எதுவுமே இல்லனு தோணும்...சீ ப்ரோ எந்தளவுக்கு வேலை பார்க்கிறோமோ அந்தளவுக்கு மைண்டை பீரியா வச்சிருக்கணும்...உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கனா யாரு ..."



"இந்த ஆபிஸ்ல என்க்கூட ஒரு எரும சுத்துதுல அந்த பிரபாதான் ஆனா அவனுக்கே இது தெரியாது...சொன்னாத்தானே..."



" ஏன் சொன்னதில்லை..."



"சொல்லணும்னு தோணலயே ப்ரோ...அவன் என்ன என் லவ்வரா சொல்றதுக்கு...பிரண்ட் தானே அவனே புரிஞ்சுப்பானு தெரியும் அதென்னத்தை போய் சொல்லிக்கிட்டு அசிங்கமா..."



"இல்ல ப்ரோ அப்படியில்ல நீங்க வார்த்தைல சொல்லணும்னு இல்ல செயல்ல காட்டுங்க அவர் கூட நிறைய பேசுங்க மனசு விட்டு ஒரு அரை மணி நேரம் டெய்லி...எல்லாம் சரியாயிடும்...மனசு விட்டு பேச ஒருத்தரையாச்சும் கூட வச்சிருக்கணும்ல ப்ரோ...அதான்..."



"ம்ம்ம்ம்ம்ம் சரி ப்ரோ பாக்கலாம்" மோவாயை தடவியப்படியே அவனை பார்த்த ராஜேஷிடம் "பார்ரா தாங்க்ஸ் ப்ரோ...போயிட்டுவாங்க ப்ரோ...சிரிச்சிட்டே..."



மெல்லிய புஞ்சிரிப்பை உதிர்த்தப்படி வெளியேறினான்...



அடுத்து "மித்து நீ உள்ள போ"



"மது நான் எதுக்குடி..."



"இல்ல மித்து போங்க..."



"ஹேய் ஹாய் மித்ரா ரைட்...உங்கள பத்தி நிறைய சொன்னாங்க சதாசிவம் சார்...ரொம்ப ஜெனியூன், பெர்பக்சனா இருப்பீங்கனுலாம்..."



பார்மலாக அவனோடு கைகுலுக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள் மித்து...



"ஏன் டென்ஸ்டா இருக்கீங்க..."



"யாரு நானா...அப்படிலாம் இல்லயே..."



"மித்து உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..."



"அறிமுகமாகி ஒரு 30 நிமிஷம் இருக்குமா...அதுக்குள்ள இந்த மித்துனு கூப்பிடுற வேலைலாம் வேணா ஒகே ஆமா என்னய பத்தின டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க..."



"சரிங்க மித்ரா...நான் உங்களோட பெர்சனல் எதுமே கேட்கல மித்ரா...அது எனக்கு வேணாம்...பேசிக்கா உங்கள பத்தி கேட்டேன்...என் வேல கவுன்சிலிங் தான் அதுக்கு மனச புரிஞ்சா தான் பேச முடியும் அதான் கேட்கிறேன்...நீங்க சொல்றத வச்சு கொஞ்சம் நான் யோசிச்சு அதுக்கான தீர்வை சொல்ல முடியும்..."



"மிஸ்டர். இனியன் நான் சொல்லணும்னு எந்த அவசியமுமில்லை...உங்களுக்கு என் முகத்த பாத்து என்ன தெரியுதோ அத வச்சு சொன்னா போதும் என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க...எனக்கு நிறைய வேல இருக்கு..."

"ஆனா எனக்கு வேலையே இதான் மிஸ். மித்ரா...ஆமா மிஸ் தானே இல்ல மிஸஸா..."



"ஹலோ மிஸ்டர்"



"ஜஸ்ட் கிளாரிஃபிக்கேஷனுக்காக கேட்டேன் அதுக்கு ஏங்க கோவப்படுறீங்க...சரி நான் கணிச்சது வச்சு சில விசயங்கள் சொல்றேன் சரியா இல்லயானு மட்டும் நீங்க சொல்லுங்க போதும்..."



அவளின் மொளனத்தை சம்மதமாய் எடுத்துக்கொண்டு மேலும் முன்னேறினான்..." மித்ரா...உங்க கண்ணு எதையோ மறைக்குது...எனக்கு உங்க சிரிப்பு கூட எதோ பொய் சொல்ற பீல் கொடுக்குது...சிரிப்பை வச்சு தான் ஈஸியா நடிக்கலாம்னு அந்த ஆயுதத்தை கையில எடுத்துட்டீங்களோனு தோணுது...நான் வந்ததில இருந்து உங்கள பாத்துட்டு தான் இருக்கேன்...உங்க கண்ணு ஒரு நிலயில இல்ல...எதையோ ரொம்ப வருசமா கேட்டு ஏங்கினது போல இருக்கு... என்ன மித்ரா எல்லாம் சரியா..."



" ஹலோ...நீங்க கவுன்சிலிங் கொடுக்க வந்தீங்களா...இல்ல மனசை படிக்கிறேன்...கண் , சிரிப்புனு சும்மா உடான்ஸ் விட வந்தீங்களா...சும்மா எதாச்சும் சொல்லிட்டு டைவர்ட் பண்ண வேணாம் உங்க வேலை என்னவோ அத பாத்துட்டு கிளம்புங்க...அதான் இவ்ளோ நேரம் பேசியாச்சுல என் கவுன்சிலிங் ஓவர் தானே நான் கிளம்புறேன்.."



அவன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவள் அருகில் நின்றுக்கொண்டே "ஏன் பயந்து ஓட பாக்கிறீங்க...எதுவும் உளறிடுவீங்கனு பயமா..."



"நான் எதுக்குங்க உங்கள பாத்து பயபடணும்... எனக்கு வேலை நிறைய கிடக்கு புரியுதா..."



"மித்ரா இருங்க...நான் இன்னும் பேசி முடிக்கல...அதுக்குள்ள போனா எப்படி..."



"சீ...பேசுறதுக்கு கூட எதிரில இருக்கவங்க நல்ல மன நிலையில, பேசணும்னு நினைக்கணும்...நான் அப்படி உங்கள்ட்ட பேசணும்னு நினைக்கலயே அப்பறம் ஏன் பேசிட்டே இருக்கீங்க...விருப்பமில்லாத காதல் போல, விருப்பமில்லாத பேச்சும் கூட உரிமை மீறல் தான்...டோண்ட் டேக் அட்வாண்டேஜ் ஓவர் மீ..."



" ஹேய் நான் இப்போ என்ன அப்படி அட்வாண்டேஜ் எடுத்தேனு கொஞ்சம் சொல்ல முடியுமா..."



" உங்கள்ட்ட எதையும் சொல்லணும்னோ பேசணும்னோ எனக்கு அவசியமில்லை...அது மட்டுமில்ல என்னய பேசுனு சொல்ற உரிமைய நான் உங்களுக்கு கொடுக்கல...இஸ் தட் கிளியர்..." சடாரென கதவை தள்ளிவிட்டு சென்ற அவளை நோக்கியப்படியே சென்றவளை அலுவலகமே அதிசயத்துப் பார்த்தது அறையை தாண்டிய அவள் கோவத்தை பார்த்த அனைவரின் பார்வையிலும் ஒரு மிரட்சி தெறித்தது...சலனமேயில்லாமல் புருவம் தூக்கி ஒரு பார்வையை படரவிட்டு தன் கேபினுக்குள் நுழைந்தாள்...



விரைந்து அங்கு வந்த அன்புச்செழியன் நேரே இனியனின் அறைக்கு எம்டியுடன் சென்றான்..."சார் இதான் சொன்னேன் புதிசாலாம் வேணாம்னு , ஆனா நீங்க தான் யங்க்ஸ்டர்ஸ்னு சொல்லிட்டு இவன இங்க கூட்டிட்டு வந்தீங்க...அந்தப்பொண்ணு இவ்ளோ கோவப்பட்டு நான் பார்த்ததேயில்ல...ஏட்டிக்கு போட்டியா பேசுவா ஆனா இப்படி அவ ரியாக்ட் பண்ணி நான் பாக்கல...நானும் இங்க அவளோட 2 வருசமா வேலை பாக்கிறேன் ஆனா இது எனக்கு புதிசா இருக்கு..."



"செழியா அமைதியா இரு...மித்ரா ஏன் இப்படி பண்ணானு உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ரெண்டு பேருமே சம்பவ இடத்தில இல்ல...சோ இனியனே சொல்லட்டும் அப்போதான் தெரியும்...நம்மளாவே ஒரு கற்பனை செஞ்சு பேச வேணாமே..."



" உங்களுக்கு என்ன சார் அப்படி இவன் மேல அவ்வளவு கரிசனம் சொல்லுங்க எனக்கு புரியவே இல்லை..."

"செழியா அவன் இவன்லாம் சொல்ற வேலை வேணா..."



"ஓகே சார் நீங்க பேசுங்க இதெல்லாம் என்னால கேட்கமுடியாது சாமி நான் போறேன்"



"நீங்க சொல்லுங்க இனியா...என்ன தான் பிரச்சனை ஏன் அப்படி மித்ரா போனா..."



"சார் மன்னிச்சுடுங்க சார்...நான் அன்பு சொல்ற மாதிரி சரியான ஆளு இல்ல போல அதான் இப்படி...ஆனா ஒண்ணு சார் எந்த தப்பும் பண்ணல அவங்கக்கிட்ட பேசி புரிஞ்சிக்க தான் ட்ரை பண்ணேன் அவங்க நான் சொல்ற எதயுமே கேட்கிற மனநிலல இல்ல அது மட்டும் தெரியுது..."



"அவக்கிட்ட நீ ஏண்டா பேசி தெரிஞ்சிக்கணும் அப்படி என்ன அவசியம் இருக்கு சொல்லு" கிளம்பாமல் கதவருகில் நின்றுக்கொண்டே இருந்தவனை நோக்கி ,



" செழியா நீ இன்னும் கிளம்பலயா"



"ஒஹோ சார் இவன் முன்னாடி என்னய மட்டந்தட்டிருங்களா...இருக்கட்டும் சார் " விருட்டென்று அடைத்துச்சென்ற சத்தத்தை தவிர அந்த அறையில் இருவரின் மூச்சுக்காற்று மட்டுந்தாம் விரவிக்கிடந்தது...


தொடரும்...
 
Top