நீண்ட நிசப்தத்திற்குப்பின் சதாசிவத்தின் அருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அதில் இனியனை அமரவைத்து கேட்கத்தொடங்கினார்..."என்ன யோசிக்கிறீங்க இனியா...செழியனையா அவன் எனக்கு புள்ள மாதிரிதான் நான் பாத்துக்கிறேன் நீங்க பேசுங்க என்னதான் ஆச்சு சொல்லுங்க..."
"இல்ல சார்...அது வந்து..."
" என்க்கிட்ட எதுனாலும் தயங்காம சொல்லுங்க..."
" இல்ல சார்...மித்ராக்கிட்ட நான் ஜெனரலா தான் பேசிட்டு இருந்தேன் அவங்க ஏன் அவ்ளோ கோவப்பட்டாங்கனு எனக்கு இன்னும் புரியல...அவங்களுக்குள்ள ஏதோ ஒரு சலனம் இருக்கு சார்...அவங்கள பாக்கும் போது எனக்கு ஒண்ணு தான் நியாபகம் வந்துச்சு... எல்லா புன்னகையும் புன்னகை அல்ல... அவங்களுக்குள்ள ஏதோ வலி இருக்கு , அத தெரிஞ்சிட்டு என்னால முடிஞ்சத சரி பண்ணலாம்னுதான் யோசிச்சேன்...ஆனா அவங்க தான் பிடி கொடுக்கவேயில்லையே...கத்திட்டுப் போயிட்டாங்க..."
"ம்ம்ம்ம்ம்ம்ம்.....நீண்டா ஆலோசனையில் ஆழ்ந்த சதாசிவத்தை நோக்கியவன்
" சார் எனக்கு ஒண்ணு தோணுது சொல்லவா..."
"சொல்லுங்க இனியா"
"பேசாம ரெப்ரஷிங் டூர் அப்படினு ஒண்ணு போட்டு எங்கயாச்சும் எல்லா ஸ்டாபஸையும் அப்பப்போ கூட்டிட்டுப் போலாமே சார்...சில நேரங்களில பேசி மாற்ற முடியாத பல விசயங்களை இயற்கை நிமிசத்தில மாத்திடும்..."
"நீங்க சொல்றது ரொம்ப சரிதான் இனியா...நானும் இத யோசிப்பேன் எங்க பீல்டில நிறைய இடங்களில இது உண்டு...சொன்னமாதிரியே செஞ்சிடலாம்..."
"ஓகே சார்... அப்போ நான் வறேன் நாளைக்கு மீட் பண்ணலாம்..."
மங்கியொளியும் மதியும் , இராக்களின் கூடுகளில் தஞ்சம் புகும் சின்னஞ்சிறு சிட்டுக்களின் ஒலி காதில் ரீங்காரமிட விடுதி அறையின் பால்கனியில் வழக்கம் போல இசையில் லயித்து நின்றிருந்தவளை உலுக்கிய மிரு " மித்து சாப்பிடலயா..நான் உனக்குத்தான் எடுத்துட்டு வந்தேன் சாப்பிடுறியா...வெறும் வயித்தோட படுக்க கூடாதாம் அம்மா சொல்லும்...நீ வந்து சாப்பிட்டு படுத்துக்கோ எனக்கும் சொக்குது..."
"மித்து உன்னயத்தான் கூப்பிடுறேன்..."
"எனக்குத்தெரியும் சாப்பிடணுமா வேணாமா நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...உன் வேலையை பாத்துட்டு போ...எனக்குனு யாரும் கரிசனம் காட்ட வேணாம் புரிஞ்சதா..."
"ஏன் மித்து இவ்ளோ கோவப்படுற...நான் சாப்பிடத்தானேடா சொன்னேன்..."
"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது போய் தூங்கு போ..."
விழிகள் கலங்க மிரு சென்றதை பார்த்தும் கூட துளியும் சலனமில்லாமல் எங்கோ வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்...'உங்க கண்ணு ஏதோ மறைக்குது...அந்த சிரிப்பு உண்மையில்ல...'அவளுக்கு இனியன் கூறிய வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது...
விடியலை நோக்கி நகரும் நடு இரவின் நீட்சியில் மிரு கொண்டு வந்து வைத்த சாப்பாடை பார்த்துக்கொண்டே நின்றவளுக்கு அதை வீணடிக்க மனம் ஒப்பாமல் மனம் கடந்த காலத்தை ஓட்டிக்கொள்ள அமைதியாய் முடிந்தவரை சாப்பிட்டு தட்டை காலி செய்தாள்...தாமதமாகிப்போனதால் ருசியற்று கிடந்த சோறும் , வத்தக்குழம்பும் அவளுக்கு பெரிதென படவில்லை...கோவக்கனல் தெறிக்க கத்தியதில் சுணங்கி கிடந்த விழிகளை பாத்தவளுக்கு அக்கணமும் மனம் ஏதும் சொல்ல விரும்பவில்லை...அவளை எழுப்பி மன்னிப்பு கேட்க தோன்றியவளை ஈகோ கட்டிப்போட அமைதியாய் தட்டை கழுவி வைத்துவிட்டு வந்து தூங்கச்சென்றாள்...
வழக்கம் போல திடுக்கிட்டு எழுந்தமர்ந்து இருள் கவ்வி நிற்கையில் பிரம்ம முகூர்த்த வேளையில் மார்கழியின் பஜனைகள் வழக்கத்திற்கு மாறாய் 4 மணிக்கே ஆரம்பிக்கும் சப்தம் கேட்க...3 மணி நேரம் தூங்கிய விழிகள் ஏகமாய் அவளை வைது தீர்த்துக்கொண்டிருந்தன...
அலுவலகம் செல்லும் முன் மிருவை எழுப்பி பார்க்க நினைத்தவளுக்கு அவள் நன்றாக தூங்குவது அறிந்ததும் நிசப்தமாய் நகர்ந்து விட்டாள்...
" செழியா..."
"சார் வாங்க சார்...நீங்களே ஏன் சார் என்னோட கேபினுக்கு...சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே...
" இல்ல உன்னய ரொம்ப பேசிட்டே நேத்து...அதா மனசு கேட்கலனு வந்தேன்..."
"அட விடுங்க சார் நீங்கதானே பேசுனீங்க...ஒண்ணும் பிரச்சனையில்ல சார்... ஆனா புதிசா வந்த அவன் முன்னாடி பேசுனதுதான் கொஞ்சம் வருத்தம்..."
"இனியனை சொல்றீயா செழியா...அவன் எப்படிப்பட்டவனு உனக்குத்தெரியாது...நேரம் வர்றப்போ நீயே புரிஞ்சிப்ப... அது இருக்கட்டும்...அவன் சொன்ன ஒரு யோசனை ரொம்ப நல்லா இருந்துச்சு..."
"என்ன சார் யோசனை..." மோவாயை விரலால் தடவியப்படியே அவரை நோக்கினான்...
" நாம எல்லா ஸ்டாப்ஸீம் சேர்ந்து ஒரு ரெப்ரஷிங் கேம்ப் போனா என்ன..."
"வாவ் சார் சூப்பர்ப் ஐடியா. போலாமே...ஒன் டே நைட் ஸ்டே , கேம்ப் பையர், எல்லாமே ஜாலியா இருக்கும்..."
"ஹான் போலாம்...எந்த ஏரியானு நீங்களே சொல்லிடுங்க செழியா"
"சார் பக்கத்தில நா மகாபலிபுரம் தான் பெஸ்ட் . இண்டர்காண்டினெண்டல் ரிசார்ட்டுக்கு போயிடலாம் பக்கத்தில பீச்...நைட் வியூவ் வேற லெவல இருக்கும்..."
" ரொம்ப நல்ல யோசனை செழியா...டூர் அரேஞ்மெண்ட்ஸ்லாம் ரெடி பண்ணுங்க...ஆமா இனியன் எங்க.."
" எனக்குத் தெரியாது சார் நான் பாக்கல..."
"இல்ல அவரையும் கூட கூட்டிட்டு போலாமேனு யோசிச்சேன்...அவரோட டீமையும் சேர்த்தே"
" அவங்களலாம் எதுக்கு..."
"இந்த யோசனை சொன்னதே அவரு தான் செழியா...அவரு இல்லாம எப்படி சொல்லுங்க..."
"என்ன முழிக்கிறீங்க செழியா...ஆமா இயற்கை நமக்கு சொல்லிக்கொடுக்கிற பாடம் முன்னாடி மனுசங்கள் லாம் ஒண்ணுமே இல்ல...சோ அப்பபோ இப்படி ஏதாச்சும் பண்ணுங்கனு சொன்னாரு...அதான் இது பத்தி உங்கிட்ட பேச வந்தேன்..."
"ஓஹோ சார் அவரு வந்த வேலையை எதுவுமே பாக்கமாட்டாரா அதத்தவிர எல்லாமே பாக்கிறாரு...அன்னைக்கு என்னடானா மித்துவை அழவைச்சாரு....இப்போ இது...என்னதான் நினைச்சுட்டு இருக்காரு..."
"சீ செழியா அவர நீங்க வேற யாரோனு பாக்கிறதாலதான் அப்படி...நம்மல ஒருத்தருனு யோசிங்க எதுவுமே தெரியாது...அது மட்டுமில்ல நல்லத யாரு சொன்னா என்ன...ஏத்துக்க வேண்டித்தானே..."
செழியனின் முகம் இறுகிக்கொண்டு நின்றதை கவனித்தவாறே இனியனை தேடிச்சென்றார் சதாசிவம்...
இனியன் காபிடேரியாக்கு அருகில் நின்றிருப்பது அறிந்ததும் அவனை தன் அறைக்கு வர சொல்லி, சொல்லியனுப்பினார் சதாசிவம்...
கதவை திறந்தப்படியே "எக்ஸ்கியூஸ் மீ சார்"
"வாங்க இனியா...பிளீஸ் பீ ஸீட்டட்"
" சொல்லுங்க சார் கூப்பிட்டிருந்தீங்களே..."
"ஆமா இனியா நீங்க சொன்ன யோசனையை இம்பிளிமெண்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்...ஆனா அதோட இன்னொரு விஷ்...வொய் காண்ட் யூ அண்ட் யூயர் டீம் ஜாயின் வித் அஸ்"
"சார் நான் எதுக்கு அங்க...நீங்க கொலிக்ஸா போறீங்க...நாங்க எப்படி..."
"ஸீ இனியா...நான் அப்படி பிரிச்சிப்பாத்திருந்தா நான் கூப்பிட்டுருக்கவே மாட்டேன். நான் எங்களில ஒருத்தரா பாக்கப்போயி தான் உங்கள இங்க கவுன்சிலிங் பண்ணக்கூட வாங்கனு கூப்பிட்டதே...நீங்க வந்தா நல்லா இருக்கும்னு தோணுது...நான் போர்ஸ் பண்ணல உங்க விருப்பம்"
"சார் நீங்க இவ்ளோ சொன்னமட்டும் வராம இருந்தா நல்லா இருக்காது...எனக்கு பிரச்சனையில்ல நாங்க வர்றோம் சார்..."
"தேங்க்யூ சோ மச் இனியா"
"தேங்க்யூ ஃபார் இன்வைட்டிங் அஸ் சார் .." பார்மலாக அவரோடு கைகுலுக்கி விட்டு நகர்ந்தான்...
'நான் நினைச்சமாதிரி இது நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்...ம்ம்ம்ம்ம்' இனியன் சென்ற பின் எண்ண அலைகளில் ஆழ்ந்த சதாசிவத்தை ஆபிஸ் லேண்ட்லைன் விழிப்புக்காட்டிட, இயல்புக்கு திரும்ப ரீசிவரை காதில் வைத்தார்..." சார் ரிசார்ட் செக் பண்ணிட்டேன்...எக்ஸாட்டா கோவளம் பக்கம்...வியூ பாயிண்ட் நல்லா இருக்கு...நீங்க எப்போனு சொன்னா உடனே புக் பண்ணிரலாம்..."
"செழியா இந்த வாரமே புக் பண்ணிடுங்க...பர்ஸ்ட் அஃப் ஆல் எல்லாருக்கும் அனொன்ஸ் பண்ணிடுங்க மதுக்கிட்ட சொல்லி..."
"சார் இந்த வாரமே வா...வாவ்...ஸீயூர் சார் சொல்லிடுறேன் இப்போவே"
போனை வைத்ததும் , மனம் எண்ணங்களில் தறிக்கெட்டு ஓடியது செழியனுக்கு, இனியனின் வருகை ஒரு புறம் கடுப்பை ஏற்றினாலும், மித்துவோடு நேரம் செலவிட சந்தர்ப்பம் என்பது ஒரு புறம் மகிழ்ச்சியை தரும் என எண்ணி தானே தேற்றிக்கொண்டான்..
மதுவை அழைத்து விசயத்தை கூறிவிட்டு வேலையில் ஆழ்ந்தான்...
"ஹாய் பிரெண்ட்ஸ்...எல்லாருக்கும் ஒரு சந்தோசமான விசயம்...நாம எல்லாரும் டூர் போறோம் ஆபிஸ்ல இருந்து...வீக்கெண்டை செம்மையா செலிபிரேட் பணா ரெடியாகிக்குங்க..."
"ஹேய் மது செம்ம ஆமா எங்க போறோம்..."
"அதானே நீ எதுவும் கேள்வி கேட்காம இருந்தாத்தான் ஆச்சர்யம்...இண்டர்காண்டினெண்டல் ரிசார்ச்ட்ல ஸ்டே...பக்கத்தில கோவளம் பீச்...கேம்ப் பயரிங் இருக்கு அவ்ளோதான் ராஜேஷ் போயி பாத்துட்டு ஒண்டே இருந்துட்டு ரிடர்ன்..."
" அவ்ளோதானா...இங்க தானா...நான் கூட ஏதோ கோவானு நினைச்சிட்டேன்.."
அவன் முதுகில் மெதுவாக அடித்தப்படியே வந்த பிரபா"டேய் ராஜேசு...நாம போட்ட கோவா டிரிப்பே எக்ஸீக்யூட் பண்ணாம பல வருசமா கிடக்கு...ஆபிஸ்ல மட்டும் உடனே ஆகிடுமா என்ன...அது கோவாக்கும் நமக்குமுள்ள ராசி டா மச்சான்...பீரியா விடு..."
"ஆமா சரக்கு உண்டா" கண்களை சுருக்கியப்படியே கேட்ட ராஜேஷின் கேள்விக்கு "ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கும்" முகத்தை திருப்பிக்கொண்டே சென்ற மதுவை பாத்ததும்..."டேய் பிரபா நான் என்னமோ அடிக்கபோற மாதிரி இப்படி திருப்பிக்கிட்டு போறா...அப்படி என்ன கேட்டுட்டாங்க..."
" டேய் கொஞ்சம் சும்மாத்தான் வாயை வச்சிட்டு இரேன்..."
"கீர்த்திமா நோக்கு தெரியாது...இந்தப்பிள்ளை ரொம்பத்தான் பண்ணுது..."
"இப்போ நீ என்க்கிட்ட அறைதான் வாங்கப்போற...ஒழுங்கா சீட்டுக்கு போயிடு"
"மித்ரா..."
" வாங்க செழியன் சார்..."
'ஏதோ நல்ல மூட்ல இருக்கா போல பவ்யமா இருக்கா..அப்போ இப்பவே சொல்லிட வேண்டிதான்'
" மித்ரா ஆபிஸ்ல இருந்து எல்லாரும் டூர் போக எம்டி பிளான் பண்ணிருக்காரு..."
"சரிங்க சார்..."
"உங்கிட்ட நான் சரியா இல்லயா கேட்கல மித்ரா நீ வரணும்னு சொல்லத்தான் வந்தேன்..."
" நீங்க சொன்னா நான் கேட்கணும்னு எந்த அவசியமுமில்லையே சார்..."
"நீ நான் சொன்னா கேட்பேனு நான் நினைக்கவேயில்லை மித்ரா...கேட்கமாட்டானு தெரியும்...ஆனா எல்லாரும் போறப்போ நீ மட்டும் வராம இருந்தா நல்லா இருக்குமா சொல்லு...அத டூர்க்கான மைண்ட்செட்டை ஸ்பாயில் பண்ணும்...உன்னால எல்லாரும் கஷ்டப்படணுமா 'நான் தான் கஷ்டப்படுவேன் வேற ஒருத்தனும் சங்கடப்பட போறதில்லை'
ம்ம்ம்ம் சோ நீ வர்ற..."
"யோசிச்சி சொல்றேன் சார்...பை எனக்கு வேலை இருக்கு சார்..."
'என்னைக்குத்தான் ஒழுங்கா பேசப்போறாளோ தெரியல...ம்ம்ம்ம் கத்தாமவாச்சும் இருந்தாளே அது வரைக்கும் சந்தோசம்'
ஏதும் பேசாமல் தலையசைத்துவிட்டு விருட்டென்று சென்றான்...
சாயங்காலம் கிளம்புகையில் மித்துவிடம் , மது" டூர் வர்றீங்க தானே மித்து"
"ம்ம்ம்ம் வர்றேன் மது"
"சூப்பர்" அவளை இறுகி அணைத்துக்கொண்டவளை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை அதரம் நீள படரவிட்டு வெளியே சென்றாள்...
தொடரும்...