கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 5❤

ஞாயிற்றுக்கிழமை மகாபலிபுரம் செல்வதற்கு இரண்டு மினி பேருந்துகள் தயாராக வந்து நின்றது...



ஒருவர் பின் ஒருவராக அனைவரும் ஏறுகையில் மித்ரா ஏற நிற்கையில் அடுத்த வண்டியில் இனியன் ஏறுவதை கண்டவுடன், "மது இவரும் வர்றாரா நம்மளோட..."



"ஹேய் ஆமா மித்து சொல்ல மறந்துட்டேன் அவங்க டீமே வருது...எம்டியோட பெர்சனல் இன்வைட்டாம்...சொல்லிக்கிட்டாங்க"



"ஒஹோ அந்தளவுக்கு ஆகிட்டுல...இருக்கட்டும்..." புருவத்தை கோவமாய் உயர்த்தியப்படியே உள் நுழைந்தாள்...



ஆட்டம், பாட்டம் என அமர்களமாக சென்றுக் கொண்டிருந்த வண்டியில் இவள் மட்டும் தனக்கென தனி சீட் வாங்கி அதில் அமைதியாய் ஜன்னலோரம் இயற்கையை சைட்டடித்து வந்து கொண்டிருந்தாள்...செழியனோ அவளை நோக்கிக்கொண்டே இருப்பதை மது கவனிக்காமல் இல்லை...



"ஹேய் மது ஒண்ணு கேட்கணுமே...பட் தப்பா எடுத்துக்க மாட்டீங்க தானே...".



" இல்ல சொல்லு கீர்த்திமா..என்ன விசயம்"



"மித்ரா வை கண்டு எல்லாரும் பயப்படறாங்க...அவங்க எது பண்ணாலும்.யாரும் எதுமே சொல்றதில்லை...அன்னைக்கு இனியன்கிட்ட அவங்க நடந்துக்கிட்ட மாதிரி நாம யாராச்சும் நடந்திருந்தா யோசிச்சிப் பாருங்க, அவ்ளோதான் எம்டி நம்மள வசவு உரிச்சிருப்பாரு...ஆனா அவங்கன்றப்போய் யாரும் எதுமே பேசல..."



"ம்ம்ம்ம்ம்"



"அது மட்டுமில்ல உனக்கொரு விசயம் தெரியுமா..."



"சொல்லு"

"இந்த டூர் அரேன்ஞ்மெண்ட் பண்ணது இனியன்..."



"ஆமாடா...அவரு சொல்லித்தான் இப்போ போறோம்...இங்க இருக்கிற நிறையபேருக்கு வொர்க் பிரஷரோட மனசு ரொம்ப ஸ்ரெஸ் ரொம்ப இருக்கு...சோ ஒரு ரிலாக்சஷேனுக்காக இப்படி டூர் கூட்டிட்டுப்போனா நல்லாயிருக்கும்னு சொன்னாராம்...ஆனா பிளேஸ் என்னனு சொன்னது நம்ம கரடிதான்..."



"ஒஹோ இவ்ளோ நடந்திருக்கா எப்படிடி இதெல்லாம் உனக்குத்தெரியும் நானும் இங்கதான் இருக்கேன் ஒண்ணு தெரியமாட்டேக்குது"



" அதுவா எங்க டீம் சரவணா இருக்கான்ல அவனும் இனியன் டீம் பையனும் பிரெண்ட்ஸ் போல ஏற்கெனவே...அவண்ட்ட சொல்லிருப்பான் போல அந்த பையன் சோ அவன் எங்ககிட்ட சொன்னான்..."



புருவத்தை உயர்த்தியப்படியே "சரிடி"



"ஹேய் நான் கேட்டதுக்கு பதில் இல்லயே மது...ஏன் மித்துவுக்கு மட்டும் இவ்ளோ கரிசனை..."



" அதாவது எப்போயுமே உழைக்கிற மக்களுக்கு ஏதாச்சும் அங்கீகாரம் எப்போனாலும் கிடைச்சிட்டே தான் இருக்கும் அது போல , ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவ மித்ரா...ஆனா அழகினால இல்ல திறமையினால முன்னேறி வந்திருக்கா...அவ பண்ற வேலையை கத்துக்க நம்மாலும் செய்வோம் இல்லனு சொல்லல அதையும் தாண்டி ஒரு பக்குவம், எந்த சூழ் நிலையை எப்படி சமாளிக்கணும்னு அவளுக்குத்தெரியும்...அது மட்டுமில்ல அவளுக்கு எத்தனையோ கம்பெனியில ஆபர் வந்துச்சு அவ போக விருப்பபடல...அவ சின்சியாரிட்டிக்கு கிடைச்ச, கிடைச்சிட்டு இருக்க பரிசு தான் இங்க அவளுக்கு இருக்க மரியாதை...புரிஞ்சிதா...மறுபடியும் இத பத்தி வேற யார்ட்டயும் பேசிறாத சரியா..."



"சாரி மது"



"ம்ம்ம்" தவிர எதையும் உதிர்க்க மனமில்லாமல் அமைதியாய் இருந்தாள் மது...



ரிசார்ட்டில் சென்று இறங்கியவுடன், அனைவரும் குழுவாக பிரிந்து புக் செய்யப்பட்டிருந்த அறைகளில் தஞ்சம் புகுந்தனர்...



மதுவும், மித்துவும் ஒரே அறையில் முடங்கிக்கொள், கீர்த்தியும் நித்திலாவும் ஒரு அறைக்கு சென்றனர்...



சிறிது நேரத்திலயே செழியனின் அழைப்பு கரடி என்ற பெயருடன் மின்னியது " மது அத எடுத்து பேசு டா..நான் போயி ரெப்ரஷ் ஆகிட்டு வந்துடுறேன்..."



"சரி மா என்றப்படியே எடுத்து காதில் வைத்தாள்..." மித்ரா... எல்லாரும் ரெடி ஆகி சீக்கிரமே வந்துடுங்க டிலே பண்ணாதீங்க...கேம்ப் பயரிங் இருக்கு..."



"என்னடி பேசிட்டியா..."



"அட என்ன மித்து...இந்த மனுசன் யாருனே தெரியாம பேசிட்டு பதிலுக்கு கூட வெயிட் பண்ணாம வைக்கிறாரு..."



" அவர பத்தி உனக்கு தெரியும்தானே மது...பிரீயா விடு...சரி என்ன சொன்னாப்ல..."



"ம்ம்ம் சீக்கிரமே வந்து சேரணுமாம் கரடி வேற ஏதோ பிளான் வச்சிருக்குனு நினைக்கிறேன் "



"அப்படின்ற சரி பாத்துடலாம் வா..."



மதி செறிந்த பெளர்ணமி இரவில் , கடல் காற்றுடன், சில்லிட வைக்கும் மார்கழியின் குளிரில் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்...



கேம்ப் பயரிங் எல்லாம் தயாராக இருக்க சுற்றி அனைவரும் வட்டமாக அமர்ந்து ஆடல் , பாடல் என உற்சாகமாக சென்று கொண்டிருந்தது...



உண்டு முடித்து கொஞ்சம் கொஞ்சமாக கிளம்புகையில் , திடீரென கரண்ட் கட்டாகிவிட, " ஏண்டா அறிவில்ல மேல கை வைக்கிற மனுசனடா நீ" என திட்டிக்கொண்டே யாரையோ அடித்த சத்தம் கேட்டு பதறி வந்த மது செல்போனின் வெளிச்சத்தில் அவளை பார்க்க அடி வாங்கியது இனியன் என்றறிந்ததும் பதைப்புடன் நின்றாள்...



" ஹேய் என்னடி ஆச்சு ஏன் இப்படி கத்துற..."



" உனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது நீ பேசாம இரு.."



தூரத்தில் சலனமின்றி அன்பு செல்வதை கவனித்துக்கொண்ட இனியன் என்ன நடந்தது என புரிந்துக்கொண்டே அமைதி காத்தான்...



" மித்து இங்க பாரு கரண்ட் இல்ல...என்ன நடந்துச்சுனு தெரியாது...நீ போன் வேற கொண்டு வராம ரூம்ல விட்டுட்ட...உன் மேல இவரு தான் கை வச்சாருனு உன்னால சொல்ல முடியுமா சொல்லு"



" என்னடி இவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வர்றியா வந்தவுடனே உன்னயவும் கவுத்துட்டானா .."



"மித்து வார்த்தையை பாத்து பேசு இது சரியில்ல"



"உன்ன தொட்டா நீ இப்படித்தான் நிப்பியா சொல்லு"



"நான் இப்படி இருக்கமாட்டேன் தான் ஆனா அதுக்காக ஏனோ தானோனு யாரு மேலயும் பழியை தூக்கி போட மாட்டேன்..."



"ஒஹோ அப்படி...சரிங்க மேடம் நான் தற்குறி தான் அப்படித்தான் பண்ணுவேன் சரிங்களா...நீங்க இப்படியே இருந்துக்கோங்க நான் போறேன்..." இருவரையும் முறைத்து விட்டு விருட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள் மித்ரா...



"என்னாச்சு இனியன்"



"ஹேய் மது சத்தியமா நானெதும் பண்ணல...அவ ஏன் இப்படி கத்திட்டுப்போறா..."



"உட்காருங்க இனியன் பேசலாம்"



மணல் தரையில் காற்று வாங்க இருவரும் அமர்ந்ததும் " மது ஏன் அவ இப்படி இருக்கா..."



"சரி அத விடுங்க அப்புறம் சொல்றேன் இப்போ என்னாச்சு...உண்மையை சொல்லுங்க..."



"ஏங்க என்னய அவ்ளோதான் நம்புறீங்களா...அப்போ அவங்க முன்னாடி எனக்காக பேசினதெல்லாம் பொய்யா..."



"அட ஏன் நீங்க வேற அதெல்லாம் உண்மைதான் இருந்தாலும் தெரிஞ்சுக்கணும்ல அதான் கேட்டேன் சொல்லுங்க என்னாச்சு..."



" நான் அப்படி எதுவுமே பண்ணலங்க...ஆனா அப்போ அன்பு அங்க கிராஸ் ஆகி போறத பாத்தேன்...நான் அதுக்கப்புறம் தான் வந்தேன்...இவங்க இருக்காங்கனு தெரியாது...நான் பாட்டுக்கு வந்துட்டு இருந்தேன்...கிட்ட வந்து பாத்தப்போ தான் மித்ரானு தெரிஞ்சது..."



" இத நீங்க அவக்கிட்ட சொல்லிருக்கலாம்ல இனியன்"



"ஏங்க நீங்களே பாத்தீங்களே கேட்கிற மன நிலைலயா அவங்க இருந்தாங்க...ஏற்கெனவே அவங்களுக்கு என்னய பிடிக்காது இதுல நான் எதும் சொல்லி, அத வேற விதமா எடுத்துக்கிட்டா சங்கடம் அதான் பேசாம நின்னேன்...ஆனா வருத்தம் தாங்க...நான் இதுவரைக்கும் போன எந்த இடத்திலும் இப்படிலாம்.ஏச்சு வாங்கினதில்ல..."



"ம்ம்ம்ம் புரியுதுங்க...அவளுக்காக நான் சாரி கேட்டுகிறேங்க..."



"நீங்க ஏங்க சாரிலாம்...விடுங்க அவங்களுக்கு எப்போயுமே என்னய பிடிக்காது சோ இத பெருசா எடுக்கல... ஆனா ஏன் அவங்க அப்படி இருக்காங்கனு புரியல"



"அவ அப்படித்தான் இனியா...கூடவே இருக்கேன் தான் பேரு... எனக்கே அவள சரியா தெரியாது...திடீர்னு நல்லா பேசுவா..ஆனா சடார்னு அமைதியாகிடுவா சில நேரம்...அப்புறம் திடீர்னு அழுவா ...திடீர்னு சம்மதமேயில்லாம தனியா சிரிப்பா...பெரும்பாலும் தனியாவே இருப்பா...அவ அப்படித்தானு நினைச்சிட்டு நானு அப்படியே விட்டுருவேன் பெருசா எதுவுமே கேட்டதில்ல..."



"ஒஹோ சரிங்க..." ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தவனை எழுப்பி சரி போலாமா...



"வாங்க போலாம்..."



அறைக்கு சென்றவுடன் மித்துவிடம் நடந்ததை கூறியவுடன்..."ஹேய் அப்போ அவரு பண்ணலயா.."



"நான் தான் சொன்னேனே மித்து கொஞ்சம் பொறுமையா இரு பாத்துக்கலாம்னு கேட்டியா...கோவம் மட்டும் அவ்ளோ வருது...என்ன ஏதுனு யோசிக்காம வார்த்தையை விடுற...அடுத்தவங்களை எவ்ளோ காயப்படுத்தும்னு யோசிக்கறதேயில்லையா டி..."



" ஹேய் மது சாரிடா வேணும்லாம் பண்ணல...நான் இப்போ அவர பாக்கணுமே முடியுமா..."



" ஏண்டி பேசுறதெல்லாம் பேசிட்டு பாக்கணும்னா எப்படி..."



"இல்ல நான் திமிர் பிடிச்சவ தான் அப்படியே வச்சுக்கோ...ஆனா தப்பு அவர்மேல இல்லன்றப்போ சாரி கேட்கிறது தானே நான் வேற ரொம்ப பேசிட்டேன்..."



"மித்து இப்போ போனா சரியா இருக்காது...நேர்ல வேணாம் நீ போன்ல கேளு போதும்"



" ஹேய் அதெப்படிடி..."



"அதெல்லாம் ஒண்ணுமில்ல...இப்போதான் ரூம்க்கே போயிருப்பாப்டி...சோ நீ டிரை பண்ணு..."



அவளிடம் இனியனின் எண்ணை வாங்கி அவனுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் டயல் செய்தாள்...

தொடரும்.....
 
Top