கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பைனாப்பிள் ரசம்

SudhaSri

Moderator
Staff member
பைனாப்பிள் ரசம்:

பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும்...

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.

1. மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம்
2. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது
3. காயங்களை விரைவில் ஆற்றுகின்றது
4. எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது
5. அதிகமான நார்ச்சத்து - இதனால் செரிமான பிரச்சனை நீங்கும்
6. உடல் எடையினை குறைக்க உதவும்
7. இரத்த அழுத்தம் குறையும்

8. கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.

அன்னாசிப் பழத்தை சமையலிலும் பயன்படுத்தலாம்.
திருமணங்களில் பரிமாறப்படும் ஒரு சுவையான ஸ்பெஷல் ரசம் பைனாப்பிள் ரசம் பற்றி பார்ப்போம். திருமணங்களில் பரிமாறப்படும் ஒரு சுவையான ஸ்பெஷல் ரசம் பைனாப்பிள் ரசம்.

தேவையான பொருட்கள்:
வேகவைத்து நன்றாக மசித்த துவரம்பருப்பு: 3 டீஸ்பூன்
பைனாப்பிள் பொடிப்பொடியாக நறுக்கியது : 1 கப்
பைனாப்பிள் ஜுஸ் : 1 கப் ( 1 கப் பைனாப்பிளை சிறிதளவூ தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டாமல் வைத்துக் கொள்ளவும்)
நெய் : 1 - 2 டீஸ்பூன்
தக்காளி : 3 ( பொடிப்பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் : 2
மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
லெமன் : 1/2
வெல்லம் : சிறிதளவு
கொத்தமல்லி : சிறிதளவு
தண்ணீர் : தேவையான அளவு

IMG_20200606_132143.jpg


வறுத்து அரைக்க:
சீரகம் :1 டீஸ்பூன்
மிளகு: 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு: 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்: 3
கொத்தமல்லி விதை (தனியா): 1/2 டீஸ்பூன்

IMG_20200606_125917.jpg

தாளிக்க :
எண்ணெய் : 1-2 டீஸ்பூன்
கடுகு : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிது
IMG_20200606_132830_1.jpg

கவனத்தில் கொள்க:
ஆரம்பத்திலேயே பைனாப்பிளை சுவை பார்த்துக் கொள்ளவும். இனிப்புச் சுவையுடன் இருந்தால் மட்டுமே லெமன் சேர்க்கவும். பைனாப்பிள் புளிப்பாக இருந்தால் லெமன் தேவை இல்லை.

செய்முறை: ( 10 - 15 நிமிடங்கள்)
முதலில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து கரகரப்பாக பொடி செய்யவும்.

வாணலியில் நெய் விட்டு
1. பச்சை மிளகாயை (பாதியாக நறுக்கி) சேர்த்து வதக்கவும்.
2. நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
2. தக்காளி வதங்கியதும் அதனுடன் நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை ( சிறிதளவு வைத்துக் கொண்டு மீதியை) சேர்த்து வதக்கவும்.
3. வேகவைத்து மசித்த துவரம்பருப்பைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வாணலியில் சேர்க்கவும். (ரசத்துக்கு தேவையான அளவு தண்ணீரை இப்போதே சேர்த்து விடவும்)
4. ரசப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
5. ரசம் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
6. வெல்லத்தையும், பைனாப்பிள் ஜுஸையும் சேர்க்கவும்.
8. மீதமுள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்கவும்.
7. வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலையை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லி தழை தூவி மூடி வைக்கவும்.
8.சிறிது ஆறிய பிறகு லெமன் தேவையானால் சேர்க்கவும்.

பின் குறிப்பு:

தாளிக்க நெய் பயன்படுத்த வேண்டாம், பின்னர் நெய் வாசனை தூக்கி, பைனாப்பிள் வாசனை தெரியாமல் செய்து விடும்.
பைனாப்பிள் ஜுஸ் சேர்த்த பின் கொதிக்க வைக்க வேண்டாம்.
சுவையான ஆரோக்கியமான
பைனாப்பிள் ரசம் தயார்.
இதனை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் தனியாக சூப் போலவும் சாப்பிடலாம்..

IMG_20200606_134135.jpg
 
Top