கதிரின் முகம் கருக்கக் கண்ட ரேவதிக்கு அடி வயிற்றில் பயப் பந்து உருண்டது.. 'அய்யோ இந்தப் பொண்ணு என்ன இப்படியெல்லாம் பேசுது.. நான் தான் இவளை இப்படித் திமிர்தனமா வளர்த்தார்போல அல்லவா தோன்றும்..', என்று வியர்வை பதற்றத்தில் முத்து முத்தாக நெற்றியில் அரும்ப,
தர்மசங்கடமாய், "மாப்பிள்ளை....அவ ஏதோ தெரியாம..", என்று ஆரம்பித்தவளைப் பேசவிடாமல் முந்திக் கொண்ட கதிர்,
"இல்லை அத்தை தெரிஞ்சிதான் பேசறா.. இப்போ அமெரிக்காவிலேயே, நம் பழைய சோறு தான் அமிர்தம் என்று யாரோ கண்டு பிடிச்சிருக்காங்களாம்.. இதான் இப்போ புதுசா என்ர்ஜி பானம்னு நம்ம பழைய சோத்துத் தண்ணியைத்தான் சொல்லுறாங்களாம்.. அவ்வளவு சத்து இருக்கு அதுலேன்னு.. ஏற்கனவே நாங்க பேசிட்டு இருந்தோம்.. அதைத்தான் சத்யா சொல்லுறா..", என்றவன் சத்யாவை கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்,
"சரிதானே சது.. எப்படிப் பிடிச்சேன் பாரு.. நீ தான் நல்லா படிச்சுருக்கே..ஃபாரீனெல்லாம் போயிட்டு வந்திருக்கே.. நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்னு நான் சொல்லிடறேன் சரியா?..", என்று தலையை அவள் புறம் சாய்த்து கொஞ்சலாகக் கேட்டவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலானது சத்யாவுக்கு..
"ம்ம்.. சகிக்கலை.. மூஞ்சியைப் பாரு..", என்று பல்லை கடித்தபடி வெளியே முறுவலாய் காட்டியபடி மென் குரலில் வார்த்தைகளைத் துப்பினாள் சத்யா..
"என்ன சொன்னே.. சரியா சொல்லு.. அத்தைக்குக் கேக்கலை போலே.. இல்லத்தை..", என்று, தைரியமிருந்தால் நேரடியாய் சொல்லித்தான் பாரேன் என்று சவால் விடும் தோரணையில் கேட்டவனைப் பார்த்து அரண்டு தான் போனாள் சத்யா..
'அய்யோ இதென்ன கிணறு வெட்டினா பூதம் புறப்படுது.. இப்போ ஏதாவது சொன்னா அவ்வளவுதான் அதுவும் நம்ம அம்மா பேசிபேசி நம்மை ரத்தம் கக்க வெச்சிடும்..சத்யா சும்மாயிரு..', என்று தன் மனதை அடக்கியபடி..
"என்ன.. ஒண்ணுமில்லையே.. உங்களுக்குப் பழக்கம் தானேன்னு சொன்னேன்.. அதோட மருத்துவக் குணம் தான் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கே.. சரி சரி.. அம்மா டிபன் சாப்பிட்டானதும் மதியம் மாமா வீட்டுக்கு போகணும்.. அங்கே தான் லஞ்ச் எல்லோருக்கும்.. நேத்தே அத்தை சொல்லிட்டாங்களே.. நினைவிருக்கில்லை..", என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று டைனிங்க் ஹால் பக்கம் ஓடினாள் சத்யா..
பின்னாலேயே கதிரும் ரேவதியும் சிரிக்கும் ஒலி அவளைத் துரத்தியது..
அவள் போய் மறைவதைப் பார்த்த கதிர், "நீங்க வாங்க அத்தை.. நாமும் போகலாம்", என்று ரேவதியை அழைத்தான்..
"தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை.. அவள் பேசியது எனக்கும் நல்லாவே கேட்டுது.. ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு இருக்கா.. அதிகச் செல்லம் அதான்.அதிலும் என் மாமியாரின் செல்லம் ரொம்ப அதிகம் அவளுக்கு.. என்னாலும் ஒரு அளவுக்கு மேல் அவளைக் கண்டிக்க முடியவில்லை.. அதான் இப்படிச் சட்டுன்னு யோசிக்காம எடுத்தெறிஞ்சி பேசிடறா..", என்று வருந்தியவரை
"அத்தை இதெல்லாம் ஒரு சமாசாரமே இல்லை.. ஏதோ அவளுக்குத் தெரிஞ்சதை பேசறா.. குழந்தைத்தனம் மாறாம இருக்கா.. சீக்கிரம் மாத்திடலாம்.. இப்போ நீங்க நமக்கு டிபன் காப்பி தாரதை பாருங்க..", என்றான் பதவிசாய்..
தன் மாப்பிள்ளையின் இந்தத் தெளிவான மனப்போக்கு ஏன் தான் பெற்ற மகளுக்கு இல்லை.. என்று விதியை நொந்தபடி டைனிங்க் ஹாலுக்குச் சென்றாள் ரேவதி..
அடுத்தச் சில மணிநேரங்களில் இங்கிருந்த நால்வரணி பக்கத்து வீடான பிரகாஷின் வீட்டிற்கு விருந்தாட சென்றது..
"வாங்க வாங்க..", என்று வந்தவரை வாயார அழைத்து அமர வைத்தார் ராஜேந்திரன்..
"மாமா இருங்க.. ஆலம் சுத்த ஏற்பாடு செஞ்சிருக்கு.. இந்த வீட்டுக்கும் சத்யா பேத்தியாச்சுதே.. சொந்த வீடு மாதிரி தானே..", என்று சொல்லியபடி ஆரத்தி தட்டோடு வந்தாள் வேதா..
கதிரையும் சத்யாவையும் சேர்த்து நிக்க வைத்து ஆலம் சுற்றி.. வீட்டினுள் அழைத்துச் சென்றனர்..
முகத்தில் பெருமிதம் பொங்க "என் மருமக.. இல்லை இல்லை இந்த வீட்டு மகா லட்சுமிக்குத் தெரியாததே இல்லை..", என்று சொல்லிவிட்டுப் பிரகாஷைப் பெருமையாய் பார்த்து தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார் ராஜேந்திரன்..
முகத்தில் ஒரு கணம் அலட்சியம் தாண்டவமாட, "அப்பா.. கட் தெ க்ராப்.. போதும் இதெல்லாம் ஒரு மேட்டரா.. இந்தக் காலத்தில் சடங்கு சாங்கியம் திருஷ்டின்னு.. ஸ்டுபிட்..", என்று சொல்லிவிட்டு,
"வா சத்யா, வாங்க கதிர் மச்சான்..", என்று நயமாகவே கதிரை உள்ளே அழைத்து வந்தான் பிரகாஷ்..
"இதோ பிரகாஷ் மச்சான்", என்று அவனுடன் சேர்ந்து நடந்தபடி உள்ளே சென்றான்..
இருவரும் கிட்டதட்ட சம உயரம் இருந்தாலும், கதிரின் சற்று தாட்டியான உடல் வாகால் அவன் இன்னமும் கம்பீரமாய் நல்ல ஆகிருதியுடன் பெரிய ஆளாத் தான் தெரிந்தான்..
ஆனால் அவர்கள் பின்னால் நடந்த சத்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..
‘நல்லா ரோட் ரோலர் மாதிரி உருட்டி விடலாம். அவன் வயதுதானே ஏறத்தாழ பிரகாஷுக்கும்.. எப்படி நன்றாய் ஜிம் எக்சர்சைஸ், டென்னிஸ் என்று ஃபிட்டாக உடலை வைத்துக் கொண்டிருக்கிறான்..
இவன் என்னடாவென்றால் வெயிலில் திரிந்து வேலை செய்து கருத்து முறுக்கேறிப் போன முரட்டு ஆளாய்த் தெரிகிறான்.. சே.. என் நேரம்.. இப்படி மாமா சதி செய்து தொலைந்தார்..
இல்லாவிட்டால் என் ஆசைப்படி ஐ. டி. கம்பனியில் பிரகாஷும் நானும் பார்ட்னராக வலம் வந்திருப்போம்.. எவ்வளவு கனவுகள் இருவருக்கும்.. எல்லாம் போச்சு..', என்று மனமார தன் மாமனை சபித்தபடி உள்ளே சென்றாள்..
"வாங்க மச்சான் வீட்டை சுற்றிக் காண்பிக்கிறேன்..", என்று பிரகாஷ் கதிரைக் கூட்டி சென்றான்.. மற்ற அனைவரும் பார்த்து பழகிய இடம் தானே என்று ஹாலில் அமர்ந்து பொதுவாக அரட்டை அடித்தபடி இருந்தனர்..
கதிருக்கே ஒரு கணம் சந்தேகம் வந்துவிட்டது.., 'இவன் ஒரு வேளை நல்லவன் தானோ என்று.. நிச்சயம் நல்லவனாகத்தான் இருப்பான் ராஜேந்திரன் மாமாவோட பிள்ளையாச்சே.. அவரின் பெருந்தன்மை நிச்சயம் கொஞ்சமாவது இருக்கும்..', என்று நினைத்தபடி அவனுடன் சென்றான்..,
எங்கே எதைப் பார்த்தாலும் பணத்தின் ஆடம்பரம் தெரிந்தது அந்த வீட்டில்.. ஹோட்டலுக்குப் போகலாம்தான்.. அதையே வீடாக்கிக் கொள்ள முடியுமா என்ன?..
'பாவம் வேதா கிராமத்தில் நிலம் நீச்சு கம்மாய்க்கரை ஊஞ்சல் தோப்பு துறவுன்னு வளர்ந்தவள்.. இங்கே என்ன செய்யுறாளோ.. பொருந்துவது கஷ்டம்தான்..’, என்று நினைத்துக் கொண்டான் கதிர்..
அதிலும் பிரகாஷின் அறையின் பால்கனியிலும் அங்கே சத்யா வீட்டில் இருக்கிறார்போல் ஊஞ்சலைப் பார்த்தவுடன் புரிபட்டுப் போனது கதிருக்கு,
'தன் வீடு மாதிரியே வேணும்னு நினைச்சுச் சத்யா தான் இந்த ஊஞ்சலைப் போட்டிருக்கிறாள் போலே', என்று நினைத்தவனுக்குப் பிரகாஷைப் பார்த்துப் பரிதாபம் தோன்றியது..
'பாவம் இவனும் எவ்வளவு ஆசையாய் இருந்திருப்பான்.. கஷ்டப்பட்டு மனதை ஒரு முகப் படுத்தி வைத்திருக்கான் போலே..', என்று நினைத்துக் கொண்டு..
"வாங்க மாப்பிள்ளை.. கீழே போகலாம் எல்லோரும் காத்திருப்பாங்க..", என்று சொல்லி பிரகாஷையும் அழைத்துச் சென்றான்.
சிறிது நேரம் அனைவரும் பொதுப்படையாய் பேசியிருந்து விட்டு உணவருந்த சென்றனர்..
அங்கே உணவு மேஜையில் வித விதமாய்ச் சமைத்து அழகாய் எடுத்து வைத்திருந்தார்கள்.. கைக்கும் வாய்க்கும் பலத்த வேலை.. ஆனால் ராஜேந்திரன் தனியாய் ஏதோ சாப்பிடுவதைப் பார்த்த கதிர் அதென்ன என்று கேட்கவும்..வேதா அவனுக்கும் பரிமாறினாள்..
அதற்குள் ரேவதி, "பார்த்தியா வேதா நான் மறந்தே போயிட்டேன்.. எங்கே உன் ஸ்பெஷல் ஐட்டங்களை இப்படித் தள்ளு.. இன்னிக்கு என்னம்மா புதுசா?.. மாப்பிள்ளை இதையெல்லாம் மிஸ் செய்யாதீங்க..", என்று சொன்னபடி..
அடுத்தச் சில நிமிஷங்களில் மத்த அனைத்து அயிட்டங்களையும் ஒதுக்கிவிட்டு நன் அக்கா மகளின் கைப்பவத்தில் சமைக்கப்பெற்றிருந்த உணவு வகையினைத் தன் அண்ணனுடனும் மாப்பிள்ளை கதிருடனும் பகிர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்..
தன் மாமியார் பரிமாறிய அயிட்டங்களை உண்ட கதிருக்கு அப்படியே எங்கேயோ போய்விட்டது மனசு.. ‘தன் அன்னை இப்படித்தான் விதவிதமாய் ஆரோக்கியமாய்ச் சமைத்து பரிமாறுவார்.. அந்த வீட்டுப் பெண் வேதா மட்டும் என்ன விதிவிலக்கா.. அப்படியே இருக்கு பெரியாத்தாவின் கைபக்குவம்', என்று நினைத்தபடி.. பிரகாஷ் கொடுத்துவைத்தவன்.. என்று நினைத்து பெருமூச்சுவிட்டான்..
அதோடு "சூப்பர் வேதா, பிரகாஷ் மச்சான்.. இப்படிச் சமைக்கப் பரிமாற ஆள் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்", என்று கமெண்ட்டும் கொடுத்தான்.
இவன் இப்படி மெய்மறந்து உண்பதைக் கண்ட சத்யாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது..நல்லா மாடு புல்லை மேயுறா மாதிரி தின்னுகிட்டு.. கமெண்ட்டாடா கொடுக்கறே.. இரு இப்ப..' என்று நினைத்து,
"பிரகாஷ் அதை விடுங்க.. என்ன இந்தச் சமையல்லாம் இப்போ கொஞ்ச காலமா பிரபலமாயிட்டு இருக்கு.. இதோ சென்னையிலே கூட ரெண்டு மூணு இடத்திலே இப்படி ஸ்பெஷல் கிராமப்புற சாப்பாடு ரெஸ்டாரெண்ட் இருக்காம்.. எப்பவோ ஒர் வேளை சேஞ்சுக்குச் சாப்பிடலாம்.. அதுக்குன்னு தினம் தினம் இதையே தின்னா.. அய்யோ.. டூ மச்', என்று முகத்தைக் கோணிக் கொண்டாள்.
அவள் மனம் புரிந்தாலும், அதை ஒதுக்கி நாசூக்காகப் பேச்சை மாற்ற எண்ணி, "சொல்லு சத்யா அங்கே உனக்கு எப்படிப் பொழுது போகுது..", என்று பொதுப்படையாய் கேட்டான் பிரகாஷ்..
"அதை ஏன் கேட்கறீங்க.. சுத்த பட்டிக்காடு என்னோட கேலிபருக்கு அங்கே ஒரு வேலையும் இல்லை.. கஷ்டமாத்தான் இருக்கு.. இங்கே எவ்வளவு சேலெஞ்சிங்கா என்னோட திறமைக்கு வேலை இருந்துச்சு.. அங்கே என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கு.. ஏதோ காலேஜ் இருக்கு இவங்க வீட்டுக்கு.. அதிலே டீச்சிங்க் போகலாமான்னு நினைக்கிறேன்..
‘மத்தபடி ரைஸ் மில்லு சூளை. இதெல்லாம் என்னோட லைன் இல்லை.. பேசாம அப்படியே ஒரு டுடொரியல் காலேஜ் ஆரம்பிச்சுடலாம்னு கூட ஐடியா இருக்கு.. அப்படி ஆரம்பிச்சா.. நம்ம் வீட்டிலேயே ரெண்டு காண்டிடேட்.. ரெடி", என்று ஜோக்காய் சொல்லுவது போல் வினையாய் குத்தினாள் கதிரையும் வேதாவையும்
சமையல் செய்வதெல்லாம் ஒரு வேலையா?.. மொதல்லே படிச்சுப் பட்டம் வாங்கிக் காமிங்க', என்கிற பொருள் படி அவள் பேசியது வேதாவை நிச்சயம் தாக்கித்தான் விட்டது..
வாயைத் திறந்த வேதாவை ராஜேந்திரனின் கெஞ்சுதல் பார்வை அடக்கியது..
அதற்குள் பிரகாஷ், "நிச்சயம் சத்யா.. உனக்கு இங்கே நல்ல எதிர் காலம் இருந்தது.. பரவாயில்லை.. அங்கே காலேஜ் இருக்கே உனக்கு.. அதில் கான்சன்டிரேட் செய்.. ஆனா இங்கே நீ அரைகுறையாய் விட்ட பிராஜெக்டெல்லாம் வேறு யாரையாவது நான் ஹேண்டில் செய்யச் சொல்லிடறேன்..", என்று மீண்டும் பேச்சின் திசையைத் திருப்பினான் பிரகாஷ்..
நாசூக்கு பார்க்கும் பிரகாஷை, விருந்துக்கு என்று கூப்பிட்டு விட்டுத் தேவையில்லாமல் கதிரை வருத்தப்பட வைக்க நினைக்கவில்லை.
அதைக் கண்டு கொள்ளாமல் "இல்லை பிரகாஷ்.. இதென்ன சமையலா.. இதில் உப்புத் தூக்கல்னா புளியைப்போடு.. உறைப்பை போடுன்னு சொல்லிட்டு சமாளிச்சிட்டு போறதுக்கு.. என்னோட ரெஸ்பான்சிபிலிடியை நானே முடிப்பேன்.. அதிருக்கட்டும்..
“வேதா உனக்கு எப்படி இங்கே பொழுது போகுது.. நீயே ஒரு ஹோம் பெர்ட்.. என்னதான் செய்யுறே நாள் முழுக்க.. சமைக்கிறேன்னு சொல்லிடாதே தாயே..இதெல்லாம் ஒரு வேலையா.. இதெல்லாம் ஒரு ஆள் போட்டுச் செய்ய இந்த வீட்டில் வசதி இல்லையா என்ன.. நீ ஏன் உன் டைமை படிச்சுப் பட்டம் வாங்குறதுலே யூஸ் செய்யக் கூடாது?..", என்று அப்பாவியாய் கேட்பது போல் கேட்டாள் வேதாவைப் பார்த்து. அவளுக்கா தெரியாது எங்கே குத்தினால் எங்கே வலிக்குமென்று.
தர்மசங்கடமாய் உணர்ந்தாள் வேதா.., “இல்லை சத்யா.. எனக்கு இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை.. இங்கே வீட்டிலே ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.. அடுத்து எனக்கு இந்தப் படிப்பிலெல்லாம் அதிக இண்டிரெஸ்ட் என்னிக்குமே இல்லை", என்றாள் நேர்மையாய்..
அவ்வளவுதான், ஹா ஹா ஹா என்று சிரிக்கத் தொடங்கினாள் சத்யா.."குட் ஜோக்.. இண்டிரெஸ்ட் இல்லையாமே உனக்கு.. அது வரணுமே..ஏய் .. ப்ளீஸ்டீ திரீ அட்டெம்ப்டுடி நீ.. இதை இப்படி வேற ஸ்டைலா சொல்லறியா..”
“பரவாயில்லை பரவாயில்லை.. வேற என்ன தான் செய்ய முடியும் நீயும்.. உன்னோட கேலிபர் என்னன்னு தான்.. எல்லோருக்கும் தெரியுமே..” என்று சமையலறைப்பக்கம் பார்த்தாள் விசமமாய்..
"சத்யா.. வெறும் கல்லூரிப் படிப்பு மட்டும் வாழ்க்கைக்குப் பத்தாதும்மா.. அனுபவக்கல்வி தான் ரொம்ப வேணும் மனுஷங்களுக்கு.. மத்தவங்க ஏதாவது நல்லதா செஞ்சா பாராட்டவும் ஒரு நல்ல மனசு வேணும்.. அது இப்ப உனக்கில்லை..”
“பரவாயில்லை.. நீயும் ஒரு நாள் இதை உணருவே.. அதுவரை எனக்கு நம்பிக்கை இருக்கு கதிர் மாப்பிள்ளை பொறுமையா இருப்பார்னு.. பார்த்து.. எதுவும் டூ லேட்டாகாம பார்த்துக்கோ.. உன் வாழ்க்கையைக் காப்பாதிக்கோ..” என்றவர்..
“பிரகாஷ்..உன் மனைவியை வேறு ஒருத்தி இன்சல்ட் செய்யறாங்கிறது கூட உனக்குப் புரியலையா.. நான்சென்ஸ்..", என்றார் ராஜேந்திரன் பூடகமாய்..
"அப்பா.. அன்னிக்கே நான் சொல்லிட்டேன் உங்களுக்கு.. இப்பவும் அதேதான் என் பதில்..ஐ டோண்ட் கேர்.. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க அவங்க இஷ்டம்..", என்று சொல்லிவிட்டு தன் உணவை முடிப்பதில் தீவிரமானான் பிரகாஷ்.
"அண்ணா..", என்று கண்களில் நீருடன் ஆரம்பித்த ரேவதியை.. தன் ஒரு பார்வையால் நிதானிக்கும்படி சைகை செய்தவர், ராஜ்குமாரைப் பார்த்து,
"ராஜா.. என் தங்கை கலக்கமா இருக்குறாளே.. இதை நீ முதலில் கவனி.. இப்பவும் நான் சொல்லறேன்.. அன்றைய தினத்தில் நாம் எடுத்த முடிவு நிச்சயம் சிறந்தது.. இது கடவுளின் சித்தம்.. யாரும் யாரையும் கம்பேர் செய்வது தப்பு..", என்று கடுமையாய் சொல்லவும், இப்போது வேதா, களத்தில் குதித்தாள்,
"மாமா.. பாராட்டெல்லாம் முதலில் தானாக மனசு வந்து வெளியே வரணும்.. பாராட்டணுங்கிறதுக்காகச் செய்கிற காரியமெல்லாம் என்ன கதியில் இருக்கும்.. அதுனாலே நான் இதெல்லாம் எதையும் மனசுலே போட்டுக்கறதில்லை..”
“என் படிப்பையும் தான் சொல்லறேன்.. யானைக்குத் தும்பிக்கையிலே பலம்.. அதுபோலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கத்தான் செய்யுது..”
“என்ன சில சமயம் அது மத்தவங்க கண்ணுக்குத் தெரியுறது இல்லை.. அதனாலே சத்யா ஏதோ சின்னப் பிள்ளைத்தனமா உளருகிறதையெல்லாம் நீங்க மனசுலே போட்டுக்கிடாதீங்க", என்று சொல்லிவிட்டு உணவு பரிமாறும் வேலையைத் தொடர்ந்தாள்.
சத்யாவுக்கு அவள் பேச்சு உறுத்தினாலும், அந்தச் சமயத்தில் திருமணமான அன்று கதிர் குடத்துக்குள் மோதிரம் விட்ட பொழுது அவள் யானை தும்பிக்கையைப் போடற மாதிரி எனக் கிண்டலடித்தற்கு, கதிர் பதிலடி கொடுத்த மனுஷனின் நம்பிக்கை அது எனச் சொன்னது சமய சந்தர்ப்பம் இல்லாமல் இப்பொழுது நினைவுக்கு வந்து முகத்தைச் சுளிக்க வைத்தது.
அதற்குள் உண்டு முடித்து கைகழுவ எழுந்த கதிரைப் பார்த்து "கதிர் மாமா.. இருங்க.. அந்தப்பக்கமா இருக்கு வாஷ் பேசின்.. நான் காமிக்கிறேன்..", என்று அழைத்துச் சென்றாள்..
அங்கே கைகழுவும் இடத்தில் இருவரும் ஏதோ பேசியதை ஆத்திரத்துடன் கவனித்தன சத்யாவின் கண்கள்..