கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 19

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 19

'பளார்'.. என்று கன்னத்தில் அறை வாங்கிய சத்யா பொறி கலங்கி நின்றது ஒரு நொடிகள் தான்..

வேதாதான் அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

"யூ..ப்ளடி.. ஹௌ டேர் யூ .." வேதாவின் கன்னத்தில் திரும்பி அடிக்க ஒங்கிய சத்யாவின் கைகளைப் பற்றித் தடுத்தது அந்த உறுதியான கரம்.

"சத்யா.. போதும்.. நிறுத்து.." கர்ஜித்தான் கதிர்.

யார் அது தன் கைகளைப் பற்றித் தடுத்து நிறுத்துவது.. ஆத்திரத்துடன் திரும்பினாள் சத்யா.

அங்கே கண்கள் ரௌத்திரத்தில் ரத்தமெனச் சிவக்க அவள் கைகளைப் பிடித்திருந்தான் கதிர்.

"கதிர்.. யூ.. என்னை விடு.. அவளுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் பப்ளிக்ல என்னை அடிப்பா.. அவளை.. சும்மா விட மாட்டேன்.." அவன் கைகளை உதறி பல்லை கடித்தவள் மீண்டும் வேதாவை நோக்கி கையை வீச..

"சத்யா..போதும் நிறுத்து.. முதல்ல நீ பப்ளிக்குல இப்படி நடந்திட்ட முறை சரியா.. உனக்கு இது வேண்டியதுதான்.. நான் கொடுக்க வேண்டியதை என் தங்கச்சி செய்திருக்கா.. அவ்வளவுதான்.." என்றான் அமைதியாகத் தன் உள்ளடக்கிய கோபத்துடன்.

“என்னது……யூ.. கதிர்.. உன்னை...” குரலை உயர்த்திய சத்யா இப்பொழுது அவனை அடிக்கக் கைகளை உயர்த்த.. சட்டென அவள் கைகளை மடக்கிப் பிடித்தான் கதிர்.

“சத்யா.. இது உனக்கே அசிங்கமா இல்லை..” மீண்டும் குரலை உயர்த்தினான் கதிர்.

அதற்குள் பிரகாஷ் சுதாரித்துக் கொண்டான்.. வேதாவை கையைப் பிடித்தவன்..

"ஏய் வேதா.. திஸ் இஸ் அட்ராஷியஸ்.. உன் மனசுல என்ன நினைச்சே?.. நீ என்ன பெரிய இவளா?.. இப்படித்தான் நடத்துப்பியா?.. இப்ப எதுக்கு அவளை அடிச்சே?.. கொஞ்சமாவது புத்தி இருக்கா?.. பட்டிக்காடு.. பட்டிக்காடு.. எதுக்குடி அடிச்சே?.. முதல்ல அவகிட்ட மன்னிப்பு கேளு.. கமான்.." என வேதாவை திட்டத் தொடங்கினான் பிரகாஷ்.

பாவம் வேதா.. மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்..

'அய்யோ.. நானா.. ஏன் இப்படி நடந்து கொண்டேன்?.. பிரகாஷ் மாமா கோபமா இருக்காங்களோ?.. ஏற்கனவே என் மேல காண்டாதான் இருக்காங்க.. நான் தத்து பித்து நடந்துக்கறதை பார்த்து.. இப்போ சத்யாவை வேறு அடிச்சி தொலஞ்சிட்டேனே?.. இப்ப என்ன சொல்லுவாங்களோ?.. ஆனா அவ எப்படி என் மாமாவுக்கு முத்தம் கொடுக்கலாம்..அது தப்பில்லையா?.."

‘ஆனா நான் எதுக்கு இவகிட்ட மன்னிப்பு கேட்கணும்.. இவ தானே தப்பு செஞ்சா?..’

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல முழித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட பிரகாஷுக்கோ இன்னும் இரு மடங்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

அதற்கேற்ப சத்யாவும் கதிரிடம் முறைத்துக் கொண்டிருந்தாள்..

"என்னை விடுங்க.. அப்படி என்ன செய்தேன்னு இவ என்னை அடிச்சா?.. நானும் பார்க்கிறேன் வந்ததிலிருந்து இவ பிஹேவியர் சரியாவே இல்லை.. நான் என்னமோ இவ ஹஸ்பெண்ட் கிட்டச் சம்பளம் வாங்கறனாம்.."

"வேதா.. வாட் இஸ் திஸ்.. உன் மனசுல நீ பெரிய இவன்னு நினைப்பு வந்திடுச்சோ?.. என்னெல்லாம் பேசினே சத்யாகிட்ட.. இது சரியில்லை.. முதல்ல சத்யா கிட்ட சாரி கேளு.." என பிரகாஷ் வேதாவைக் கண்டிக்க..

"விடுங்க சகலை.. வேதா மேல எந்தத் தப்பும் இல்லை.. யாரா இருந்தாலும் தன் புருஷன் மேல இன்னொருத்தி இப்படி நடந்து கொண்டா சீறத்தான் செய்வாங்க.. இந்தப் புள்ள அடிச்சததோடு விட்டுச்சு.. இதே எங்க ஊரா இருந்தா இத்தனை நேரம் கத்தியை தூக்கி இருப்பாளுங்க.." எனப் பிரகாஷை சமாதானப் படுத்தினான் கதிர்.

"சாரி கதிர்.. நான் இவ இப்படி நடந்துப்பான்னு எதிர்பார்க்கலை.. சத்யா மேல எந்தத் தப்பும் இல்லை.. இட்ஸ் ஜஸ்ட் சுமால் அபெக்ஷன்.. இப்படிக் காமிச்சிட்டா.. இதெல்லாம் இங்க சிட்டி லைஃப்ல சகஜம் தான்.. அதைப் புரிஞ்சிக்காம எதையோ நினைச்சி.. சே.. ஐயாம் சாரி கதிர்.. நான் வேதாவை கண்டிக்கிறேன்.. யூ டே கேர் ஆப் சத்யா.." என்ற பிரகாஷ்..

"ஒன்ஸ் அகெய்ன் சாரி கதிர்.. நீங்க இந்தப் பார்ட்டிக்கு வந்ததுல ரொம்பச் சந்தோஷம்.. உங்களை முறையா வரவேற்கலை இந்தக் களேபரத்தில்.. நீங்க வருவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலை.. வந்ததுக்கு ரொம்ப நன்றி.. வாங்க டின்னர் சாப்பிடலாம்.." என அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் பிரகாஷ்.

"பரவாயில்லை சகலை.. எனக்கும் சந்தோஷம்தான்.. விருந்து சாப்பிட்டுத்தான் போவோம்.. நீங்க மற்றவங்களைக் கவனியுங்க.." என்றவன்..

கூட்டம் விழிப்பதை பார்த்தவன்.. ”சாரி கைஸ்.. சின்ன கன்ஃபியூசன்.. டோன்ட் பாதர்.. கேரி ஆன் டின்னர் ரெடி.. ப்ளீஸ்..”, என்று பொதுவாக மன்னிப்பு மன்னிப்பு கேட்டுவிட்டு,

"வா சத்யா.. கொஞ்சம் நாம் அங்கே உட்காருவோம்.." என அவள் கைகளைப் பற்றினான்.

"சாரி சத்யா.. ரிலாக்ஸ்.. நான் அவளுக்காக மன்னிப்பு கேக்கறேன்.. நீ கொஞ்சம் கதிரை கவனி.."

'அய்யோ மாமா எனக்காக மன்னிப்பு கேக்கறாங்களே?.. நாமத்தான் தப்பா புரிஞ்சிகிட்டோம் போல.. நாமும் மன்னிப்பு கேட்கலாமா?.. ஆனால் நான் தப்பு செய்யவில்லையே.. சரி பிரகாஷ் மாமாவுக்காக இவளிடம்……'

சட்டெனச் சத்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுதலாகப் பார்த்த வேதாவை, முறைத்த சத்யாவோ அவளைப் பேசவே விடாமல்..

"ஏய்.. நிறுத்துடி.. உன்னோட டிராமாவை.. செய்யறதையும் செய்துட்டு இப்போ திரும்பவும் ஒரு ரொம்ப நல்லவளாக நடிக்க வேண்டாம்.. என் கையை எதுக்குப் பிடிக்கறே?.. உன்னை நான் மன்னிக்கத் தயாரா இல்லை.. பிரகாஷை கை பிடிச்சிட்டேன்னு தானே உனக்கு இவ்வளவு கர்வம்.. இருக்கட்டும்.. இதுக்கு ஒரு நாள் நீ வருத்த படப் போறே.." என்றவள்

"பிரகாஷ்.. நான் கிளம்புறேன்.. இதுக்கு மேல இங்க இருந்து நான் உன் பெண்டாட்டிகிட்ட அவமானப்பட விரும்பலை.." எனப் பட்டென்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகரப் போனாள் சத்யா.

"ஹேய் சத்யா.. பி ஸ்பொர்டிவ் யா.. விடு.. நான் தான் மன்னிப்பு கேட்டாச்சுல்ல.. அதுவே நாட்டுபுறம்ன்னு உனக்குத் தெரியும்.. ப்ளீஸ்.. நீ இப்போ பார்ட்டியை க்விட் பண்ணிட்டுப் போனா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க.. உன்னால தானே இந்த ப்ராஜக்ட்டே சக்சஸ்ஸாச்சு.. நீ இல்லைன்னா எப்படிம்மா?.. வா டின்னர் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. நீதானே.. இங்க ஹோஸ்ட்.. போய் எல்லாரையும் இன்வெய்ட் பண்ணுவியாம்.. எனக்காக ப்ளீஸ்.." கெஞ்சுதலாகப் பார்த்தான் பிரகாஷ்.

ஏற்கனவே இந்த இரண்டு பெண்கள் அடித்த கூத்தில் கம்பெனி ஊழியர்களின் ஏளனப் பார்வையைக் கண்டவன், இன்னும் சத்யா வேறு கிளம்பி போனால் அதைப் பற்றி விமர்சிக்கத் தொடங்குவார்கள் என்று எண்ணியே சத்யாவை போக விடாமல் தடுத்தான்.

இதற்கெல்லாம் மூல காரணமான வேதாவை அதற்கு மேல் அவன் கண்டு கொள்ளவே இல்லை.. இருக்கட்டும்.. இப்போதைக்கு இந்தப் பட்டிக்காடு பயந்து போய் இருக்கிறது.. அவளை வீட்டில் போய்ப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன் அவளை மன்னிக்கத் தயாராக இல்லை.

இப்போதைக்குத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டவன் மற்றவர்கள் முன்னால் காட்சி பொருளாக விரும்பாமல்.., கொதித்திருந்த சத்யாவை கெஞ்சியாவது குளிர்விக்க முயன்றான்.

தலை குனிந்து நின்றிருந்த வேதாவை ஏளனமாகப் பார்த்த சத்யா.. "ஓ.கே.. பிரகாஷ்.. உனக்காக.. நம்ம கம்பெனி ஸ்டாஃப் எல்லாம் ஏமாற்றம் ஆகக் கூடாதுன்னு இப்போ ஸ்டே பண்ணறேன்.. ஆனாலும் உன்னோட வொய்ஃபை நான் மன்னிக்கத் தயாரா இல்லை.." என்றவள் கம்பெனி ஊழியர்கள் பக்கம் திரும்பினான் மீண்டும் கெத்தாக.

அவளையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்த கதிரையும் கண்டு கொள்ளாமல் சென்றவளை கண்ட பிரகாஷ்.. பெருமூச்சு விட்டவன்..

"வாங்க கதிர்.. டின்னர் ரெடி.. சத்யாவுக்குக் கோபம் வந்தால் அதைச் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம்.." எனச் சிரித்தவன்.. ஒரு தலையாட்டிவிட்டு.. "எக்ஸ்கியூஸ்மீ.. நான் போய்ச் சீஃப் கெஸ்ட்டை கவனிக்கறேன்.. நீங்க உட்கார்ந்துக்கங்க..ஃபீல் ஃப்ரீ.." என்றபடி அவனும் நகர்ந்தான்.

அய்யோ பாவமாக நின்று கொண்டிருந்த வேதாவின் மேல் பரிதாபமே சுரந்தது கதிருக்கு.

"வேதா.. வாம்மா.. ரொம்ப மனசைப் போட்டு உழைப்பிக்காதே.. நடந்தது நடந்து போச்சு.. இதுக்கு மேல எதுக்கு அதைப்பத்தி ஆராய்ச்சி.. விடும்மா.."

"இல்லை கதிர் மாமா.. என் மேலத்தான் தப்பு.. நானும் இப்படிப் பொது இடத்துல கையை நீட்டி இருக்கக் கூடாது.. பாருங்க என்னால பிரகாஷ் மாமாக்கு எவ்வளவு அவமானம்.. ஏற்கனவே நான் லூசு மாதிரிதான் நடந்திட்டேன்.. அவங்க சரியாத்தான் சொன்னாங்க.. நான் நாட்டுப்புறம்.. சரியான பட்டிக்காடுன்னு.. பாவம் சத்யா.. அப்படி என்ன தப்பு செஞ்சுது?.. அவரு பரிசு கொடுத்ததுல மகிழ்ந்து போய்ச் சந்தோஷத்துல முத்தம் வைச்சிருச்சு..”

"சின்னப் புள்ளைங்கதானே இப்படித்தானே தங்களோட அன்பை காண்பிக்கும்.. அவ சின்னப் பொண்ணுதானே.. நான் ஒரு படிக்காத கூதரை.. அதைப் போய்ப் பெரிசு பண்ணி.. கையை நீட்டி.. அய்யோ.. பிரகாஷ் மாமா என் மேல கோபமா இருக்காங்க.. பாருங்க ஒரு வார்த்தை கூட எங்கிட்ட பேசாம போயிட்டாங்க..”

“ஆனாலும் நான் தப்பு பண்ணலையே?.. அவகிட்ட மன்னிப்புக்கூடக் கேட்கப் போனேனே?.. அவதானே கோவிச்சிக்கிட்டா..”

என்று புலம்பியபடி கண்ணீர் விடத் தொடங்கினாள் வேதா.

"அய்யோ.. என்னம்மா வேதா.. நீ முதல்ல கண்ணைத் துடை.. எல்லோரும் உன்னைத்தான் பார்க்கிறாங்க.. நீ இப்படி அழுதா இன்னும் தானே சகலைக்கு அவமானமா இருக்கும்.. இன்னும் கோபம்தான் வரும்..”

"முதல்ல நீ ஒண்ணைப் புரிஞ்சிக்கணும்.. சத்யா செஞ்சதும் தப்புதான்.. இப்படிப் பொது இடத்துல ஒரு கல்யாணமான பொண்ணு இப்படி நடந்துக்கலாமா?.. நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு.. இப்படித் தலை விரிச்சி ஆடறது, முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தறது எல்லாமே இப்போ ரொம்பச் சகஜமா இருக்கு..”

"நம்ம நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்குன்னு தெரியலை.. நாகரீகம்ங்கற பேர்ல இப்படிக் கூத்தடிக்கிறதுக்குப் பேர் புதுமை இல்லை.. நாங்க முற்போக்கா இருக்கோம்.. மாடர்ன் சொசையிட்டின்னு சொல்லிட்டு இப்படிக் கீழ்தரமா இறங்கிகிட்டு இருக்கோம்.."

"அப்போ கதிர் மாமா.. நீங்க பார்தீங்களா?.. அவரும், அவளும் டான்ஸ் ஆடினதை.. உங்களுக்குக் கோபமே வரலையா?.. உங்களை வேற அடிக்கக் கையைத் தூக்கிட்டா.."

"இல்லைம்மா.. எதுக்குக் கோபம் வரணும் சொல்லு.. அவங்க இரண்டு பேரும் குழந்தைங்க இல்லை.. வளர்ந்து ஒரு பொறுப்புல இருக்கிறவாங்க.. அவங்க செய்யற செயல்களுக்கு அர்த்தம் அவங்களுக்கும் தெரிஞ்சிதான் இருக்கும்..”

“புரியாமால் செய்தால் நாம் எடுத்துச் சொல்லலாம்.. ஆனால் தெரிஞ்சே செய்தால் அப்போ அவங்களே உணர்ந்துதான் திருந்தனம்.. கட்டிக் கொடுத்த சோறும், சொல்லித் தந்த வார்த்தையும் எத்தனை நாளுக்கு நிலைக்கும் சொல்லு..”

“என்ன கேட்டே.. நான் அப்பவே வந்துட்டேன்மா.. இரண்டு பேரும் டான்ஸ் ஆடறதையும் பார்த்தேன்.. இந்த ஆட்டம் அவங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் எப்படித் தடுக்க முடியும்.. இதெல்லாம் பட்டிணத்துல சகஜம்ன்னு எனக்குத் தெரியும்..”

“நான் தப்பா எடுத்து கொள்ளவில்லைன்னாலும் இப்படி எத்தனை பேரோடு பார்வை விகல்பமில்லாமா இருக்கும் சொல்லு.. அதுக்குத்தான் சொன்னேன்.. இதெல்லாம் தானா தெரிய வேண்டுமென்று..”

“சத்யாவுக்குப் பிரகாஷ் மேல் விருப்பம் இருந்தது.. சரிதான்.. ஆனாலும் அவளுக்கும் இப்போ கல்யாணமாயாச்சு.. அவனுக்கும் இப்போ உன்னோடு திருமணம் முடிஞ்சாச்சு.. பிரகாஷ் மேல எந்தத் தப்பும் இல்லைம்மா..”

“சத்யாவும் தப்பா நடந்துக்கலை.. அவ சின்னப் பொண்ணு.. இன்னும் பக்குவம் வரவில்லை.. பிரகாஷை தன்னோட கை நழுவி போன பொம்மையாத்தான் அவ பார்க்கிறா.. அந்த இழப்புல.. தனக்குக் கிடைக்காத பொருள் அடுத்தவங்களுக்கும் கிடைக்கக் கூடாதுங்கற ஒரு சின்னப் பொறாமை உணர்ச்சி.. அதுல தான் அவ இப்படி நடந்துக்கறா..”

“கட்டாயம் அவ புரிஞ்சிக்கிற காலம் வரும்.. அதுக்கு என்னாலான எல்லா முயற்சியையும் செய்யத் தயாரா இருக்கேன்.. என்னை அவ அடிக்க வந்தது கூட நான் அவளுக்குச் சப்போர்ட் பண்ணலைங்கற கோபத்தோடு வெளிப்பாடு தான்.. அதனால தான் எனக்கு வந்த கோபத்தை நான் அடக்கிக் கொண்டு விட்டேன்..”

“இப்படி ரெண்டு பேருமே யோசிக்காமல் கோபப்பட்டா அப்புறம் அதுக்கு முடிவே இல்லை.. அதனாலதான் நான் கொஞ்சம் தழைன்சி போக நினைச்சி என்னை அடக்கிக்கிட்டேன்.. அதுக்காக நான் அவளைத் தட்டி கேட்க மாட்டேன்னு நினைக்காதே.. சமயம் வரும்.. பார்க்கலாம்”

என நம்பிக்கையுடன் சொன்ன கதிரின் மேல் அளவுக்கதிகமான மரியாதை தோன்றியது.

சத்யாவின் வாழ்க்கை இனி மலரும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்தது.

இனி தானும் பிரகாஷை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.. அவனுக்கேற்றவாறு தானும் இனி மாற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் வேதா.

சத்யாவின் கணவன் கதிர் என்று அறிந்தவுடன் அவனுடன் பேச விருப்பப்ட்ட சத்யாவின் தோழிகளுக்கு வேறு வழியில்லாமல் அறிமுகப் படுத்தி வைத்தாள் சத்யா.

கதிருமே அவர்களுக்கு ஈடாகப் பேசி சத்யா பயந்தது போல இல்லாமல் அவள் மானத்தைக் காப்பாற்றினான்.

அதிலும் அவளது ஆண் நண்பர்கள் கதிரின் அஜானுபாகுவான கட்டுமஸ்தான தோற்றத்தில் மயங்கிப் போய் அவனை நேரடியாகவே பாராட்டினர்.

சத்யாவுக்குத்தான் வியப்பாக இருந்தது.. இந்தக் குண்டனைப் போய் இவங்க என்னவோ ஆணழகன் ரேஞ்சுல பாராட்டுறாங்க.. போதாதகுறைக்கு உங்க சிக்ஸ்பேக்குக்குக் காரணம் என்னன்னு கேட்டு டிப்ஸ் வேறு கேட்குதுங்க.. இவங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே.

ஆனாலும் அவளுக்கும் உள்ளுக்குள் அதைக் குறித்து மகிழ்ச்சியே.. முதல் முறையாகக் கதிரை சரியாக உற்று உற்று பார்த்தாள்.

பரவாயில்லை.. ஆள் நல்ல ஹெயிட்தான்.. கட்டாயம் சிக்ஸ் ஃபோர் இருப்பான்.. பிரகாஷை விட நல்ல உயரம் தான்..

ஆறடி உயர பிரகாஷ் இப்போது அவள் கண்களுக்குச் சற்றுக் குள்ளமாகத் தெரிந்தான்.

கலர் கூட அவ்வளவு கருப்பு இல்லை.. இதுதானே நம்ம ஊர் பசங்களோடு நிறம்.. அந்த முகத்துல அவன் கண்கள் தான் எவ்வளவு பெரிசு.. எவ்வளவு தீட்சண்யமா.. மூக்கைப் பார்.. மூக்கை.. எவ்வளவு நீளம்.. ஆனாலும் அவன் முகத்துக்குப் பொருத்தம் தான்.. இவனுக்கு இந்த முறுக்கு மீசைதான் கம்பீரத்தை தருதோ.. கிராமத்து காரங்களுக்கே உரிய பெரிய மீசைதான்.. பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறான்.

‘ஹேய் சத்யா.. என்னடி உங்காளை இத்தனை நாள் பிரிஞ்சிருந்த சோகமா?.. இப்படி உத்து உத்து பார்க்கறே.. ஆனாலும் சொல்லக் கூடாதுடி நல்ல ஸ்ட்ராங்கான பார்ட்டிதான்.. அவரோடு ஒவ்வொரு கையும் பாரு.. எப்படி மசில் டெவல் பண்ணி.. வாவ்.. அந்த முரட்டு கையால அப்படியே கட்டி பிடிச்சா…”

ரசனையோடு கிசுகிசுத்த தீபாவை முறைத்தாள் சத்யா.

“போய்க் கட்டி பிடி.. அப்படியே ஒண்ணு ஓங்கி முதுகில வைச்சேன்னா.. ச்சீ.. அடங்குடி.. முதல்ல தட்டுல இருக்கிறதை பார்த்து முழுங்கித் தொலை..”அவளை அதட்டினாள் சத்யா.

“ஏய்.. சத்யா ஆனாலும் நீ ரொம்ப மோசம்டி.. நீ மட்டும் கல்யாணம் ஆனாலும் உன் முறை மாமன்னு சொல்லிட்டு பாஸோடு ஜல்ஜா பண்ணுவே.. ஆனா சும்மா உன் புருஷனை கட்டி பிடிக்கறேன்னு சொன்னதுக்கே அடிக்க வர்றீயே.. நான் என்ன உன்னை மாதிரி முத்தாவா கொடுத்தேன்.. இந்தக் கல்யாணமான பொண்ணுங்களை ஃப்ரெண்டாவே வைச்சுக்கக் கூடாதுப்பா.. சைட் அடிக்கவே விடமாட்டாங்க..” தீபா சலித்துக் கொண்டாள்.

உண்மையிலேயே சத்யா இப்பொழுது அதிர்ந்துதான் போனாள்.. என்ன இது நான் ஏன் கதிருக்காகப் பரிந்து வருகிறேன்.. ஒரு பேச்சுக்கு கூட அவனைக் கட்டி பிடிப்பேன்னு சொன்னதற்கே எனக்கு ஏன் கோபம் வருகிறது..

அப்படியானால் நான்.. கதிர்.. நினைக்கவே பிடிக்கவில்லை சத்யாவிற்கு.. தனக்குக் கதிரை பிடிக்கிறதா என்று யோசிக்கக்கூடக் கசந்தது அவளுக்கு..

‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது..’ தேவையில்லாமல் இப்பொழுது எதற்கு எனக்கு இது தோன்றுகிறது.

தன் மனதை இன்று நினைத்து ஆராய்ந்திருந்தால் இனி வரும் விளைவுகளைச் சத்யா தடுத்திருக்கலாமோ?..

ஆனால் ஆண்டவனின் விளையாட்டை யார் அறிவார்?..

ஒரு வழியாகப் பார்ட்டியும் ஒரு முடிவுக்கு வந்தது.

பிரகாஷின் மனைவி என்ற முறையில் வேதா பிரகாஷ் அருகே நின்று கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தாள்.

ஸ்பூனையும், ஃபோர்க்கையும் கையில் பிடித்துச் சாப்பிடத் தெரியாத வேதா.. யார் தப்பாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று.. பிளேட்டை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையால் உணவருந்திக் கொண்டிருந்தாள்..

கையால் எடுத்து உண்டாலும் நாசூக்காகவே உண்டவளை பிரகாஷ் முகம் சுளிக்கப் பார்த்தவன் பின்னர் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஜென்னி அவளுடன் எதையோ பேசிக் கொண்டிருக்க.. பாவம் வேதாவும் தனக்குத் தெரிந்த வரையில் சமாளித்துக் கொண்டுதான் இருந்தாள்.

“வாதா.. ஐ அப்ரிஷேட் யூ.. யூ ஆர் டூ பொசசிவ் வாதா.. ஐ லைக் யுவர் லவ் டுவட்ர்ஸ் யுவர் ஹப்பி.. வாட் யு டிட் வாஸ் பெர்ஃப்க்ட்லி கரெக்ட்.. ஐ அன்டர்ஸ்டான்ட் இண்டியன் வுமன்ஸ் பீலிங்க்ஸ்.. யு ஷுட் கம் டு அமெரிக்கா வித் யுவர் ஹஸ்பென்ட்..”

என வேதாவை அணைத்துக் கொண்டு அவளிடம் விடை பெற்றாள் ஜென்னி.

“ஹே.. வாதா.. ஐ ரிமெம்பர் யுவர் அப்டா ஆயில் டூ.. வில் கெட் இட்.. தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க்.” என மறக்காமல் சொல்லியவளை வேதாவுக்குப் பிடித்து விட்டது.

“தாங்க்ஸ் மேடம்.. ஐ கம் டு அமெரிக்கா பிரகாஷ் பிரிங்க்ஸ் மீ..” என ஓட்டை ஆங்கிலத்தில் புரிய வைத்து அவர்கள் வழக்கப்படி அவள் கைகளைக் குலுக்கி தலையாட்டி விட்டு பிரகாஷை பார்த்தாள்.

‘நான் இப்போ சரியா நடந்துக்கிறேனா..’ என்று அவள் பார்வையின் கேள்வியில் முகத்தைத் திருப்பிக் கொண்ட பிரகாஷுக்குச் சிரிப்பு வந்தாலும் இந்த லூசு என்னத்தை ஜென்னியிடம் சொல்லி வைத்ததோ.. என்னவோ ஆயில் என்கிறாள்..’

அதைப் பற்றித் துருவாமல் அவர்களைக் கார் வரை கொண்டு விட்டுவிட்டு வழியனுப்பியவன்.. அவன் பின்னால் நின்று கொண்டிருந்த வேதாவை கண்டான்.

ஏற்கனவே கம்பெனி ஊழியர்கள் அனைவரும் சென்றிருக்க.. கதிரும், சத்யாவையும் வேறு ஒரு காரில் அனுப்பி வைத்திருந்தான் பிரகாஷ்.

எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளைக் கண்டு கொள்ளாமல் தன் காரை எடுத்தவன் பின்னால் ஓடினாள் வேதா.

முன் கதவை திறந்து கொண்டு ஏறி உட்கார்ந்த வேதாவை கண்டு கொள்ளவே இல்லை ப்ரகாஷ்..

‘கடவுளே.. ஆரம்பிதிலேர்ந்தே இன்னிக்கு சரியில்லையே.. மாமாவுக்குக் கோபம் இன்னும் குறையலை போல இருக்கு.. கொஞ்சம் நேரம் முன்னால அந்த ஜென்னிகிட்ட நல்லாதானே பேசினேன்..

‘அய்யோ.. சத்யாவை அடிச்சதை மனசில வச்சிட்டு இருப்பாங்களோ?.. அதான் நான் மன்னிப்பு கேட்க போனேனே?..’

வேதாவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.. இன்று எதோ ஒண்ணு வேண்டாதது நடக்கு போகுதுன்னு என் மனசு சொல்லுதே..

என்னதுக்கு இப்படி வேகமா காரை ஓட்டுறாங்க.. அவ்வளவு கோபமோ?.. பிரகாஷின் முகத்தைப் பார்த்தவளுக்கு அச்சமாக இருந்தது.. இதென்ன இவர் மூஞ்சி பிடிச்சி வைச்ச பாறாங்கல்லை போல இருக்கு..

வேகமாகச் சீறி பாய்ந்த காரின் வேகத்தைப் போல அவள் மனமும் பறந்தது.. கண்களில் நீர் மல்க இலக்கின்றி வெறித்தாள் வேதா.

வீட்டை அடைந்தவன் காரை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கிய பிரகாஷ்.. அவனைத் தொடர்ந்து இறங்கிய வேதாவின் கைகளைத் தரதரவெனப் பிடித்து இழுத்துக் கொண்டு தங்களறைக்குள் நுழைந்தான்.

“மாமா.. என்னாச்சு மாமா.. நானே வர்றேன்.. கையை விடுங்க வலிக்குது..”

“ம்.. இன்னும் என்ன நடக்கலை.. எத்தனை நாளா என் மானத்தை வாங்கணும் நினைச்சே?.. உன்னை.. என்ன தைரியம் இருந்தால் என் சத்யாவின் மேல் கையை நீட்டுவே..”

என்றவன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான் பொறி கலங்கும்படி..

*************************************************************************************

Kothaisuresh

Well-known member
கதிர் செம்ம மெச்யூர்ட். எப்போ சத்யாக்குப் புரியும்?
 
Mohanapriya M

Oru pakkam kathir, innoru pakkam vedha rendum rombs pavam 🙄
 
Chellam

Well-known member
என் சத்யாவா வேதா இந்த ப்ரகாஷ்க்கும் ஒரு அடி கொடுத்து இருக்கலாமோ.
 
Top