கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 20

Latha S

Administrator
Staff member
பொம்மலாட்டம்

அத்தியாயம் 20

"சுளீர்", என்று கன்னத்தில் விழுந்த அறையில் திணறித்தான் போனாள் வேதா....

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை ஏதோ 'ஞொய்' என்ற சத்தம் காதில் ஒலித்தது அவளுக்கு.. சித்தம் கலங்கி நின்றாள்.. கண்கள் வழக்கம் போல் அதிர்ச்சியில் தன் டேமின் கரையைத் திறந்துவிட நீர் வழிய உதடுகளைப் பற்களால் கடித்தபடி ஒன்றும் செய்ய அறியாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்..

"என்னடி.. சாந்தா சக்குபாய் மாதிரி, என்ன போஸா கொடுக்கறே.. உனக்கு எவ்வளவு திமிர்டி.. ஏதோ போனா போகுதுன்னு உன்னையும் ஒரு ஆளா மதிச்சு பார்டிக்கு வரச் சொன்னது தப்பாயில்லை போயிட்டது.. இதில் உனக்கு என் ஆபீஸ் ஸ்டாஃபை அதுவும் என் சத்யாவை வேறு அடிக்கிறாய்..", என்று வார்த்தைக்கு வார்த்தை சத்யாவை அடித்ததை ஒரு பெரிய உலக மகா குற்றம் போலப் பெரிதாக்கினான்..

"சொல்லுடி.. என்ன வாயிலே என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே.. இல்லை கை மட்டும் தான் வேலை செய்யுமா.. உனக்கு.. பட்டிக்காடு.. சத்யாவோட கால் தூசிக்கு நீ சமமா.. அவள் எவ்வளவு டைனமிக்.. அவ்வளோ நல்லா வேலை செய்யக் கூடியவ.. இந்தப் புராஜெக்டை அவள் தான் முடித்தாள்.. அதற்குத்தான் அவளுக்குப் பாராட்டு பரிசு எல்லாம்.. உனக்கு அதைப் பார்த்து ஏன் இவ்வளவு எரிச்சல்?.. அசிங்கமாய்ப் போய்விட்டது அங்கே.."

நிதானமாக அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தவள், வாயை மெல்லத் திறந்தவள்,

"மாமா.. நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்க.. சத்யா செஞ்சது நிச்சயம் தப்புதான் மாமா.. நீங்க என்ன அவளுக்கு மட்டுமா பரிசு கொடுத்தீங்க.. மீதி வேலை செய்யறவங்களையும் தான் பாராட்டினீங்க, பட்டம் கொடுத்தீங்க..

“வேறு யாரும் இந்த மாதிரி செஞ்சாங்களா.. இவ மட்டும் என்ன உங்களுக்கு ஸ்பெஷல்.. என்னமோ அவ உங்க கட்டின பொண்டாட்டி மாதிரி எல்லார் எதிரிலும் நடந்துக்கறா.. பதில் சொல்லுங்க", என்று நிதானமாய் ஆரம்பித்த வேதா முடிவில் கத்தத் தொடங்கினாள்.

முகத்தை அருவருப்புடன் சுளித்த பிரகாஷ்,

"இதோ இந்த மாதிரி கத்துறியே.. இது ரொம்ப அசிங்கமா இருக்கு.. இந்த மாதிரி இண்டீசெண்ட் பிஹேவியரெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. அப்படி என்ன அவ பெரிய தப்பு பண்ணான்னு நீ அந்த மாதிரி அடித்தாய்?.. ஏதோ என் உடன் வளர்ந்தவள் என்ற உரிமையில் தானே செய்தாள்.. கன்னத்தில் தானே முத்தமிட்டாள்..”

“என்னமோ லிப் டு லிப் கொடுத்தா மாதிரி கத்தி கலாட்டா பண்ணுற.. இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தைக் கூடச் சாதாரணமாய் எடுத்துக் கொள்ளும் மனம் உனக்கு இல்லை.. நீ எப்படி எனக்குப் பொருந்துவாய்.. சே.. என் தலை விதி.. எங்கப்பாவை சொல்லணும்..", என்று பற்களைக் கடித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய்,

"ஏய் இங்கே பாரு.. முடிவா சொல்லிட்டேன்.. நீ இந்த வீட்டில் இருக்கணும்னா.. சத்யாகிட்ட போய் மன்னிப்பு கேள்.. அவ இந்த வீட்டின் செல்லப் பெண்.. அவ கண் கலங்கினா எங்க யாருக்கும் பிடிக்காது..", என்றான் தீர்மானமாய்..

இப்போது வேதாவுக்கு அவளை மட்டும் அடித்தது தப்போ இவனையும் ரெண்டு மாத்து மாத்தியிருக்கனுமோ என்றே தோன்றிவிட்டது.. அவள் மேல் மட்டும் தப்பு இல்லை.. இவனும் அதை ஊதி விடுகிறான்..

'பெண்டாட்டியை ஒருத்தி கேவலமாய்ப் பேசுறா.. அவமானப் படுத்தறா.. அதெல்லாம் இவருக்குத் தாங்குமோ.. ஆனா அவளை நான் ஒரு சொல்லு சொல்லிட்டா இவருக்குத் தாங்காதாம்.. எந்த ஊரு நியாயம் இது?..’

‘இத்தனைக்கும் நான் மன்னிப்பு கேட்க தயாராய்த் தானே இருந்தேன்.. இப்போஅது நிச்சயம் முடியாது.. வருவது வரட்டும் இவனுக்குப் புத்தி கித்தி பிசகியிருந்தா சரி செய்யுறது பெண்டாட்டியான என் கடமையாச்சே.. பார்த்துடலாம்..', என்று வேதாவும் ஒரு முடிவுக்கு வந்து..

கைகளைக் குறுக்காய் கட்டிக் கொண்டு, நன்கு நிமிர்ந்து பிரகாஷைப் பார்த்து,

"மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. உண்மையில் மன்னிப்புக் கேட்காலம்னுதான் இருந்தேன்.. ஆனால் இப்போ நீங்க பேசினத்துக்குப் பிறகு..” தலையாட்டி மறுத்தவள்..

“ம்ம்.. அப்புறம்..", என்று நேராய் சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் நின்றாள்.

"ஏய் வேதா.. கொழுப்பா.. உன்னை.. இதோ பார் கடைசி முறையாய்க் கேட்கிறேன்.. இல்லை இல்லை.. உனக்கு வார்னிங் கொடுக்கிறேன்.. இதை நீ என் உத்தரவு என்று நினைத்தாலும் சரி.. நீ அவளிடம் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்..", என்றான் பிரகாஷ் கடினமான குரலில்.

அவன் முகத்தில் அனைத்து உணர்ச்சிகளும் துடைக்கப்பட்டுக் கல் போல் இறுகியிருந்தது.

வேதாவுக்கும் இப்போது எரிச்சல் மண்டத் தொடங்கியது..

'இதென்ன இவன்.. பெரிய மஹாராஜா போல் உத்தரவிடுகிறான்.. இதற்கு நான் அடி பணிய வேண்டும் என்று என்ன கட்டாயம்?.. நானாவது அவளைக் கையால் தான் அடித்தேன்.. ஆனால் நீ உன் வார்த்தைகளால் என் மனதில் அல்லவா அடிக்கிறாய்..', என்று வேதனையுடன் நினைத்தவள்,

"இங்கே பாருங்க மாமா அவ தப்பு செஞ்சான்னு எனக்குப் பட்டுச்சு அதான் அடிச்சேன்.. நீங்க என் சத்யா என் சத்யான்னு இப்போ வாய் கிழிய குரல் கொடுக்கறீங்களே.. அன்னிக்கு இதே குரலை உங்க அப்பா கிட்ட கொடுத்திருக்கலாமே.. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையாவது சரியா இருந்திருக்குமே..”

“எல்லாத்தையும் அன்னிக்கு மக்கு மங்குனி மாதிரி கோட்டை விட்டுட்டு இப்போ இந்த ஒரு சின்னக் கேடுகெட்ட விஷயத்துக்கு என்னய மிரட்டுறீங்க.. நீங்க என்னை என்ன நினைச்சீங்க.. நீங்க வான்னா வாரதுக்கும் போன்னா போறதுக்கும்.. நீங்க சொன்னபடி பேசிச் செய்ய நான் என்ன நீங்கக் காசுக்கு வாங்கிய ஆளா?.. இல்லை அடிமையா..", என்று ஆத்திரமாய்க் கத்தினாள்.

அவளுக்கு மேல் குரலெடுத்து கத்த விரும்பாத பிரகாஷ்,

"சீ.. முதலில் இப்படிப் பஜாரி மாதிரி கத்துவதை நிறுத்து.. நீ என்ன குழாயடி சண்டைக்காரி மாதிரி பேசுறே.. இதைத்தான் நான் சொன்னேன் உன்னோட லெவலுக்கும் எனக்கும் சூட் ஆகாதுன்னு.. காசு பணம் வீட்டில் இருந்தா மட்டும் போதாது.. அதை அனுபவிச்சு நடக்குறதுக்கும் ஒரு க்ளாஸ் இருக்கணும்..”

“நல்லா படிச்சுப் பட்டம் வாங்கி இருந்தா உனக்கும் நாலு நல்லது கெட்டது தெரிஞ்சிருக்கும்.. என்ன இருந்தாலும் நீ அன் எஜிகேடட் தானே.. அதான் உன் புத்தி லோ லெவலிலேயே இருக்கு.. ஆம்மாடி அவ தான் எனக்கு முக்கியம்...இப்ப அதற்கு என்ன?..” என்றான் கெத்தாக..

அவன் பேச்சில் உன்னால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம் ஒலித்ததோ.

இதற்கு மேல் இவன் என்ன சொன்னாலும் சத்யாவுக்குதான் சப்போர்ட் செய்வான் என்று நிச்சயமாய்த் தெரிந்து போனது வேதாவுக்கு..

"ஆமாம் மாமா நான் படிக்காதவ தான்.. ஆனாலும் வாழ்க்கைக் கல்விக்கு இதோ எங்களோட சத்யான்னு சொல்லி பீத்திகறீங்களே அவளோட இந்த நடத்தை உதவாது.. வெளியே போய்ச் சொல்லிப் பாருங்க என்னோட மாஜி காதலி என்னைக் கட்டி பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்தான்னும் அதை என் பெண்டாட்டி ரசிச்சு பார்த்தான்னும் சொல்லிப் பாருங்க.. அவனவன் காறி துப்பிட்டு போவான்..”

“என்னவோ படிப்பாம் படிப்பு.. அந்தப் படிப்பு தான் இப்படி இன்னொருத்தி புருஷனுக்கு அலையறதுக்குச் சொல்லிக் கொடுக்குதோ.. கிட்டாதாயின் வெட்டென மறன்னு, உங்களுக்குச் சொல்லி குடுக்கலையா..

“அது சரி நீங்க தான் கான்வெண்ட்டுப் படிப்பு படிச்சவங்களாச்சே.. நம்ம பாஷை, கலாச்சாரம் இதெல்லாம் எங்கே தெரியப் போகுது..", என்று நன்றாய் பதில் கொடுத்தாள் வேதா..

"இதோ பாரு வேதா.. நீ என்ன பேசினாலும் எனக்கு அருவருப்பா இருக்கு.. என்ன கேட்டே நீ உனக்கு அடிமையான்னு தானே கேட்டே.. இல்லை.. அப்படி நான் நினைக்கலை.. ஆனா உன்னோட தரம் என்னாங்கிறதை நீயே தான் சொன்ன.. வேலைக்காரின்னு.. உனக்கு என்னோட வீட்டுக்காரியா சரிசமமா இருக்குறதுக்கு நிச்சயம் தகுதி இல்லை.. புரிந்ததா..”

“அப்புறம் ஏன் உன்னை வீட்டிலே வச்சிருக்கேன்னு நினைக்கிறியா.. எல்லாம் செஞ்சு போட எப்படியும் ஒரு ஆள் தேவைதானே.. அதுவும் இந்த மாதிரி வீட்டுக் காரியம் செய்யுறதிலே நீ தான் எக்ஸ்பர்ட்டுப் பெருமை சொன்னாரே உன் அப்பா.. அதுக்காகத் தான் வெச்சிகிட்டு இருக்கேன்.. என்னைப் பொருத்தவரை உன் லெவல் இங்கே வேலைக்காரிதான்.."

என்று முகத்தில் துளியும் இளக்கமில்லால் வார்த்தைகளை விஷமாய்க் கக்கினான் பிரகாஷ்.. ஆத்திரத்தில் அறிவை இழந்து அவளை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திக் கொண்டிருந்தான்.

அடுத்த நொடி வேதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. அதுவரை இருந்த தன்னம்பிக்கை தைரியமெல்லாம் தவிடு பொடியாயின.

தன்னவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவள் மனதை ரத்தம் கசிய வைத்தன..கண்கள் குளமாகின..

'சே இப்படி என்னை வேலைக்காரி பட்டம் கொடுத்து மூலையில் உட்கார வைக்கத்தான் இவன் கல்யாணம் செய்தானா.. இதற்கு இவனே கல்யாணத்தன்று எனக்கு விஷம் கொடுத்திருக்கலாமே..’

‘கடவுளே.. இதென்ன சோதனை.. இந்த மாமா இப்படித் தப்பு கணக்கு போட்டுட்டாரே.. என் கதை இப்படிக் கந்தலில் கால் விட்ட மாதிரி ஆகி போச்சே..", என்று நினைத்தவள்

தலைக்கு மேலே போயாச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று நினைத்துக் கொண்டு,

"இதோ பாருங்க மாமா கடைசியா சொல்லுறேன்.. இந்த மன்னிப்பெல்லாம் என்னாலே கேக்க முடியாது.. இப்பவும் நான் உங்க மனைவின்னு நினைச்சு தான் பேசுறேன்.. இந்த மாதிரி நடத்தையெல்லாம் என்னாலும் தாங்க முடியாது.. ஒரு கால் உங்களோட மெத்த படிச்ச மேதாவி சத்தியாவுக்கு வேணா இதெல்லாம் சகஜமா இருக்கலாம்..”

“நான் கிராமத்துக்காரி..ரொம்பத் துள்ளுனா சரிதான் போய்யான்னு போயிகிட்டே இருப்போம்.. வேணுமின்னா நான் இதைப் பற்றித் திரும்ப அவ கிட்ட பேசலை.. அவ்வளவுதான் என்னால் செய்யமுடியும்", என்றாள் கறாராய்.

"ஒஹ்.. நீயெல்லாம் பெருந்தன்மையா அவளை மன்னிப்பியா.. அப்படி ஒண்ணும் தேவையில்லை வேதா.. புருஷன் சொல் கேக்காதவ எனக்கும் பொண்டாட்டியா இருக்கத் தேவையில்லை.. நான் சொன்னது சரிதான்.. உன் புத்தி இன்னமும் லோ லெவலிலேதான் இருக்கு.. உன்னால் எந்தக் காலமும் மாற முடியாது.. இங்கே இருக்கணும்னா என் சொல் கேட்டு இருந்தா சோறு நிச்சயம் போடுவேன்.. இல்லாட்டி உன் வழியை நீ பார்த்துக்கோ..", என்று தன் முடிவை அடித்துப் பேசினான் பிரகாஷ்.

என்ன பேசிகிறோம்.. யாரோ ஒருத்திக்காக.. அவள் அவனது சொந்த அத்தை மகள் என்றாலும், கட்டின பெண்டாட்டிக்கு முன் அவள் அடுத்தபடி தானே.. அதைப் புரிந்து கொள்ளத் தவறினான் பிரகாஷ்.

தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டான்.. அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியம் எதில் கொண்டு போய் முடியப் போகிறதென்று உணர மறந்தான்.

இனி வேலைக்கு ஆகாது இவனிடம் பேசி என்று ஆயாசமாய் உணர்ந்த வேதாவுக்குத் தலை வலி வேறு மண்டையைப் பிளக்கத் தொடங்கியது.. ஆத்திரத்தில் அவளும் நிதானம் இழந்தாள்..

"மாமா.. இதுக்கு மேல் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது.. காமாலைக் கண்ணோட நீங்க பாக்கறீங்க..எல்லாம் அப்படித்தான் தெரியும்.. அப்படியெல்லாம் நீங்களும் எனக்குப் பெருந்தன்மையா வாழ்க்கை கொடுக்கத் தேவையில்லை..”

“சாப்பாட்டுக்காகத்தான் உங்க வீட்டிலே இருக்கேன்னு நினைச்சிங்களா.. சரிதான் வெளியே பரந்த உலகத்தில் என் ஒருத்தி சாப்பாட்டுக்கா பஞ்சம் வந்துடப் போகுது.. நீங்களா உங்களை உணர்ந்து உங்க செயல் தப்புன்னு வர வரைக்கும்இனி இந்த வீட்டில் ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.. சாப்பிடவும் மாட்டேன்..”

“என் வழியை நான் பார்த்துக்கறேன்.. உங்களை நீங்க பார்த்துக்கோங்க.. சே சே அதைக் கூட நான் ஏன் சொல்லணும் அதான் ஒருத்தி காத்துகிட்டு இருக்காளே நான் எப்ப கிளம்புவேன்னு.. சன்யாசி எப்ப இடத்தைக் காலி பண்ணுவான்னு.. அவ பார்த்துப்பா உங்களை.. நாளைக் காலையில் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.. உங்க அப்பா அம்மாகிட்ட நீங்க என்ன சொல்லணுமோ சொல்லிக்கோங்க..", என்று சொல்லிவிட்டு, துக்கம் தொண்டையை அடைக்க, மிகப் பிரயத்தனத்துடன்,

'இவன் எதிரில் நான் அழக் கூடாது.. என் அழுகை அவனுக்குப் பலமாகிடும்.. நான் பலவீனமானவள்னு நினைச்சுத் தானே என்னை இப்படியெல்லாம் பேசுறான்.. இவனை ஒரு வழி செய்யாமல் விடக் கூடாது, போதும் நமக்கு இந்தப் பந்தம்’, என்று எண்ணியபடி தன் தனிப்பட்ட அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள்..

பிரகாஷும் அதன் பிறகு அங்கு நிற்கவில்லை.. மனதுள், 'விட்டது சனி..இந்த நாட்டுபுறத்துக்கே இவ்வளவு வாய் இருக்கு.. இது இன்னமும் படிச்சு நல்ல நிலையில் இருந்தா என்னென்ன பேசியிருப்பாளோ..’

‘ஆனா இந்த வேதா எங்கே போவா?.. மிஞ்சிப் போனாஅப்பன் வீடு.. ஆனா திரும்பிப் போக இதுக்குத் தைரியம் இருக்கணுமே..சும்மா உதார் விட்டுட்டு போற.. இவளை அப்படியே இக்னோர் செய்யனும்.. தானா வழிக்கு வந்துவிடுவா..’

என்று நினைத்தபடி அவனும் தன்னறைக்குச் சென்று எதைப் பற்றியும் கவலையில்லாமல் உறங்கும் வழியப் பார்த்தான்..

மறு நாள் எப்போதும் போல் விடிந்தது..

காலை உணவிற்காக மேஜைக்கு வந்த பிரகாஷ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் உணவை உண்டுவிட்டு ஆஃபிசுக்குப் போய்விட்டான்..

ராஜேந்திரன் மேஜைக்கு வந்தவர் வழக்கம் போல் தனது கஞ்சி இல்லாததை கண்டு சுற்றும் முற்றும் பார்த்தார், பின்னர் ஏதோ நினைவுக்கு வந்ததது,

'சே பாவம் வேதா பார்ட்டி முடிந்து லேட்டாய் வந்ததால் மறந்துவிட்டாள் போலே.. அவளை எதற்கு டிஸ்டர்ப் செய்யணும்.. சமையல்காரி செய்து வைத்ததை உண்போம்..' என்று நினைத்தபடி மேஜையில் இருந்த உணவை அருந்தியவர் பின்னர் அவரும் அவளை மறந்துதான் போனார்..

ருக்மணியோ கேட்கவே வேண்டாம்.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் லேட்டாய் வந்து தன் டிபனை முடித்துக் கொண்டு விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர ஆரம்பிக்கும் பொருட்டு மாடி ஏறி தன்னறைக்குச் சென்றுவிட்டாள்.

அவ்வளவுதான் அந்த வீட்டில் நிலமை.. யார் வந்தாலும் போனாலும் யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.. கொலை நடந்தால் கூடக் கவனிப்பார்களா தெரியாது.. அந்தளவுக்கு வேகமான வாழ்க்கை.. அவரவர் வழி தனி வழியாக இருந்தது.. இந்த அழகில் பட்டிக்காட்டு வேதாவைப் பற்றி இதில் கவலைப்பட யாருக்கு நேரம் இருக்கு?..

மதியம் சுமார் மூன்று மணியளவில் ஓயாமல் ஹாலில் ஒலித்தது ஃபோன்..ருக்மணி.. தன்னறையில் படுத்தவாறு ‘அட ஏன் இன்னமும் யாரும் காலை அடெண்ட் செய்யலை.. எங்கே போனார் மணி..’

‘இந்த வேதா ஏன் எடுக்கலை.. ஒரு வேளை கும்பகர்ணி மாதிரி தூங்குகிறாளோ.. காலையிலும் வெளியே தென்படலை..ஃபோன் எடுக்கறதை விட என்ன பெரிய வேலை அவளுக்கு..என்னத்தைக் கிழித்துப் புரட்டுகிறாள்.. சோம்பேறி..', என்று மனதுள் வைதபடி மெல்லக் கீழே போனாள்..

இப்போதெல்லாம் மொபைல் ஃபோன் தான் அதிகம் உபயோகப்படுகிறதாதலால் லேண்ட் லைனில் ஃபோன் பேசுவோர் மிகக் குறைவே.. ஏதாவது விசாரணையோ இல்லை டொனேஷனோ இருக்கும்', என்று நினைத்தபடி ஃபோன் அருகில் போனாள்.. வெகு நேரம் அடித்ததால் கால் கட் ஆகி போனது.. செ என்று நொந்தபடி திரும்பப் போனவளுக்கு அதன் கீழே மடித்து வைக்கப்பட்டிருந்த கவர் கண்களில் பட்டது..

'என்னதிது..புதுசா கவர்.. ஏதாவது பில்லோ..யார் வைத்தார்கள்', என்று யோசித்தபடி பிரித்துப் படித்தவளுக்கு முகத்தில் ஈயாடவில்லை..

படித்து முடித்தவுடன் படபடப்பாய் வந்துவிட்டது ருக்மணிக்கு..'அய்யோ ஆண்டவனே என்ன செஞ்சித் தொலஞ்சிச்சு இந்தப் பொண்ணு.. ஏற்கனவே இந்த மனுஷன் பேயாட்டம் ஆடுவார்.. இப்போ இது இந்த மாதிரி செஞ்சது தெரிஞ்சால் அவ்வளவுதான்..’

‘நேத்திக்கு ரெண்டும் பார்டி போயிட்டு வந்துதுங்களே.. நல்லாத்தானே போனா.. ஏதாவது கலாட்டா அகியிருக்குமோ.. ஏன் நம்ம கிட்ட பிரகாஷ் ஒண்ணும் சொல்லலை', என்று எண்ணமிட்டபடி மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்தாள்..

அதில்..

பொதுவாக யாரையும் குறிப்பிடாமல்,

‘இந்த வீட்டினர் அனைவருக்கும் வேதா எழுதிக் கொள்வது.. இந்த வீட்டில் மருமகளாய் வாழ்க்கைப் பட்ட நானும் என் கணவனின் மனதிற்கு உடமைக்காரி ஆக வேண்டும் என்று எவ்வளவோ முயன்று பார்த்தேன்.. ஆனாலும் கூட என் நிலை?, எனக்கு இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி அந்தஸ்து தான் கிடைத்திருக்கு...

யாரையும் குறை சொல்லவும் எனக்குப் பிடிக்கவில்லை.. ஆளாளுக்கு என் வாழ்வில் முடிவு செய்து என்னைத் துளியும் பிடிக்காத பிரகாஷ் மாமாவிடம் ஒப்படைத்தீர்கள். பாவம் உங்களைச் சொல்லியும் என்ன செய்யமுடியும்..

பிடிக்காத துணையுடன் வாழ்வதை விட ஒரு கொடுமை வேறு என்ன இருக்கக் கூடும்.. இங்கே நான் உண்ணும் உணவும் நீரும் விஷமாய் மாறி என் கழுத்தைப் பிடிக்கிறது..என் வாழ்வை அவரவர் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு நூல் பொம்மையாய் ஆட்டி வைப்பதை என்னால் இனிமேலும் ஏற்க முடியவில்லை..

என் வழியை நானே பார்த்துக் கொள்கிறேன்.. என் வாழ்வை நானே பகடையாக்கி உங்கள் அனைவர் கையிலும் கொடுக்க எனக்கு இதற்கு மேல் துளியும் விருப்பமில்லை.. என்றாவது ஒரு நாள் பிரகாஷ் மாமா என்னை மனப்பூர்வமாய்ப் புரிந்து கொண்டால் மகிழ்வேன்.. இல்லாவிட்டாலும் கூடப் பரவாயில்லை..

அவர் தனக்குப் பிடித்த மாதிரி வேறு ஒருவருடன் இணைவதற்கும் எனக்குத் தடையில்லை..நான் எந்த விபரீத முடிவும் எடுக்கமாட்டேன்.. அதனால் என்னைத் தேட வேண்டாம்.. என் பெற்றோரிடமும் சொல்லிவிடுங்கள்.. தேடினால் வேறு உலகிற்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை..இத்துடன் சில வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறேன்..உங்கள் உபயோகத்திற்காக’

இப்படிக்கு

வேதா..

என்று எழுதியிருந்தது..

முகத்தில் வியர்வைத் துளிர்க்க முதலில் தன் கணவனுக்கு இதைத் தெரிவிக்கும் பொருட்டு ஃபோனை எடுத்தாள் ருக்மணி.

*****************************************************************************************************
 
Last edited by a moderator:

Kothaisuresh

Well-known member
அய்யய்யோ என்ன இவ இப்படி ஒரு முடிவெடுத்துட்டா?
 
Jothiramar

Moderator
Staff member
இப்ப வந்த தைரியம் முன்னாடியே வந்திருக்கலாம்... அடுத்து என்ன ஆக போகுதோ
 
Mohanapriya M

Vedha nalla mudivu eduthuruka pirinjurunthatan un value enanu prakash ku puriyum 😎😎😎
 
Chellam

Well-known member
வேதா புத்திசுலி நல்ல படியாக இருப்பாள் என்று நம்புகிறேன்.
 
Top