"மேடம்.. மேடம்", என்ற குரலிலும் காலிங் பெல்லின் அழைப்பிலும் கிச்சனிலிருந்து வெளியே வந்த சத்யாவிற்கு அதிர்ச்சி..
அப்போதுதான் அவள் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கும் பொருட்டு அவசர மறதியாய் நேரடியாய் தொட்டுவிட்டாள்..
ஒரு பக்கம் பிளாஸ்டிக் பிடியையும் மறுபக்கம் நேரடியாயும் தூக்கி விட்டிருந்தாள்.. அந்தப் பக்கம் இருந்திருக்க வேண்டிய பிளாஸ்டிக் பிடி இல்லாதது கூட அவள் கவனிக்க மறந்துவிட்டாள் அவள்.
பழக்கமில்லாததால் கையைச் சுட்டுக் கொண்டு உதறியபடி 'ஆ', என்று அலறித் துள்ளி குதித்த போது தான் காலிங்க் பெல் ஒலித்தது..
ஒரு கணம் கண்களில் நீர் பொத்துக் கொண்டு ஊற்ற.. மனமோ' சே என்ன கருமம்டா இது.. இந்த வீட்டில் இருப்பதால் இத்தனை வேலையும் நம் தலையில் தான் வந்து விடிகிறது..
புருஷன் வீட்டிலோ இல்லை அம்மா வீட்டிலோ கூட நாம் இத்தனை மெனக்கெடவில்லை.. இங்கே என்னவென்றால், இந்த மாமி இப்படிப் பாடாய் படுத்துகிறாள்..',
என்று கையைக் குழாயை திறந்துவிட்டு தண்ணீருக்கு நேராய் நீட்டியவளுக்கு எரிச்சல் கொஞ்சமும் அடங்கவில்லை..
ஆனால் அதற்குள் இரண்டு மூன்று முறை காலிங்க் பெல் ஒலித்து நின்றது.. கூடவே யாரோ
"மேடம்.. வீட்டிலே யாரு?", என்ற குரலும் கேட்கவும் வெளியே வந்து பார்த்தவள் அப்படியே நின்றாள்.
அங்கே வேதா நின்றிருக்கக் கண்டாள்.
'இவள் எதுக்கு இப்போ இங்கே வந்திருக்கா..புரியலையே', என்று நினைத்தபடி அவளைப் பார்த்தவளுக்கு இன்னமும் கூட அவள் அடித்தது கன்னத்தில் வலிக்கிறார்போல் இருந்தது..
தன்னிச்சையாய் கைகள் மெல்ல உயர்ந்து கன்னத்தை லேசாய் தொட்டுப் பார்த்தன.. ஒருவழியாய் சுதாரித்தவளுக்கு வன்மம் தலையைத் தூக்கத் தொடங்கியது..
"ஏய் என்ன வேணும்.. யார் நீ எதுக்கு இங்கே வந்தே.. இப்போல்லாம்.. மேடம்னு வேற கூப்பிட்டு வீட்டுக்குள் நுழைந்து பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டிங்களா?..", என்று வேண்டுமென்றே அவளை அவமானப்படுத்தும் விதமாய்க் கேட்டாள்.
'சுறுக்' என்று மனது வலித்தாலும் இது எதையும் கண்டுகொள்ளவில்லை வேதா..
'ஓஹ்.. உனக்கு அன்னிக்குக் கொடுத்தது பத்தலை போலே.. அதான் இன்னமும் கூட அடங்காம பேசறே, இருடி உனக்கு இருக்கு.. இது போதாது.. உன்னைப் பெண்டை நிமிர்த்துகிறேன் பாரு..', என்று நினைத்தபடி
"மேடம் இங்கே ருக்மணி ராஜேந்திரன்கிறது..", என்று சுற்றும் முற்று பார்த்தவள்..
"உங்களைப் பார்த்தா கால் ஒடிஞ்ச மாதிரி தெரியலையே..", என்று நிறுத்த..
"ஏய், என்ன திமிரா.. உனக்கு அத்தையைத் தெரியாதா.. ஏதோ நடிக்கிறே ஒண்ணும் தெரியாத மாதிரி..", என்ற சத்யாவை ஏளனமாய்ப் பார்த்த வேதா..
"நல்லாத் தெரியும்.. ஆனா இப்போ நான் இங்கே வேலை விஷயமா வந்திருக்கேன்.. நீங்க ருக்மணி இல்லைன்னா. அவங்களைக் கூப்பிட முடியுமா.. சாரிம்மா.. மன்னிச்சுக்கோ.. அவங்களுக்குத்தான் கால் ஒடிஞ்சு போச்சே.. என்னை அவங்ககிட்டே கூட்டிட்டு போறீங்களா?..", என்று பவ்யமாய்க் கேட்டாள் வேதா,
"ஏய் நீ எதுக்கு அவங்களைப் பார்க்கணும்?.. அதைச் சொல்லு..", என்று படபடத்தாள்.
"சரி.. சொல்லறேன்.. இந்த வீட்டிலே ஒரு பெரியம்மாவுக்கு உதவிக்கு ஆள் வேணுமின்னு ஏஜென்சியிலே சொல்லி வச்சிருந்தாங்க.. அதான் ஏஜென்சியில் என்னை உதவிக்கு ஆளாய் அனுப்பினார்கள்",. என்று சொல்லி முடிக்கவும்
குரலெடுத்துச் சிரிக்க ஆரம்பித்தாள் சத்யா..
"பார்த்தியா வேதா.. கடைசியில் உன்னோட திறமை நிலைமை என்னன்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்குமே.. நீ.. இந்த வேலைக்காரி வேலைக்குத் தான் லாயக்கு.. ஒரு காலும் உன்னால் எந்த வீட்டுக்கும் உடமைக்காரியாய் எஜமானியாய் இருக்க முடியாது..
“பாவம்.. ஏன் உன்னைப் பெரியம்மா வீட்டில் சேர்த்துக்கலையா?. பெரிசா ஏதோ லெட்டர் எழுதி வச்சிட்டு போனே.. மலையைப் புரட்டுகிற மாதிரி.. அவ்வளவுதானா.. சோ எல்லாம் வெத்து வேட்டா?.." என்றாள் சத்யா இளக்காரமாக.
"இங்கே பாருங்க.. நீங்க யாருங்க என் பர்சனல் விஷயம் பேச..? நீங்க ருக்மணி இல்லைன்னா.. என்னை அவங்க கிட்ட கூட்டிட்டு போங்க.. இல்லை உங்களுக்கு உதவிக்கு ஆள் தேவையில்லையா.. இதோ நான் ஏஜென்சிக்கு ஃபோன் போட்டு உங்களுக்கு அசிஸ்டெண்ட் வேணாம்னு சொல்லறேன்.. சரியா..”
“எனக்கும் ஏஜென்சியிலே சொல்லித்தான் அனுப்பினாங்க இந்த வீட்டில் சத்யான்னு ஒரு அடாவடிக்காரி வாழாவெட்டியா புருஷனோட வெட்டிகிட்டு வந்து உட்கார்ந்து அழிச்சாட்டியம் செய்யுறதா..”
“இதெல்லாம் என் வேலைக்கு அவசியமில்லாதது.. உங்களுக்குத் தேவைன்னா சொல்லுங்க இல்லாட்டி நான் போயிகிட்டே இருக்கேன்", என்று செல்ஃபோனை எடுத்து யாரையோ கூப்பிடத் தொடங்க..
அதற்குள் பதறியபடி அங்கு வந்தார் ராஜேந்திரன்..
"வாம்மா வேதா வா.. எங்கேம்மா போயிட்டே இத்தனை நாளா..எப்படிம்மா இருக்க.. எங்க இருக்கேன்னாவது சொல்லியிருக்கக் கூடாது?..", என்று மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் அதை மீறிய பதட்டத்துடனும் விசாரித்தார் ராஜேந்திரன்.
"மாமா.. இல்லை.. சாரி சார்.. நான் இப்போ உங்கள் உதவிக்காக ஏஜென்சியிலிருந்து வந்திருக்கிறேன்.. இங்கே இந்த வீட்டின் மிசர்ஸ்.ருக்மணி ராஜேந்திரனுக்குக் கால் உடைந்து படுத்த படுக்கையானதால் அவருக்கு உதவிக்கு ஆள் தேவை என்று எங்கள் ஏஜென்சிக்கு விஷயம் கிடைத்தது.. அதனால் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.. பேஷண்டை காண்பித்தால் நன்றாயிருக்கும்..", என்றாள் மிகவும் அமர்த்தலாக.
சொல்ல முடியா வேதனை அவர் முகத்தில் அப்பியது, "ஏன்மா இப்படி என்னை வதைக்கிறாய்.. நீ என் தங்கை மகள், மேலும் இந்த வீட்டில் வாழ வந்த மஹாலஷ்மி.. நீ ஏன் இப்படிக் கஷ்டப் படுகிறாய்.. ஏன்மா உனக்கு.. அம்மா வீட்டுக்கு நீ ஏன் போகலை..",
அவருக்குப் பாவம் விவரம் தேவை.. ஆனால் வேதாவோ எதையும் சொல்லத் தயாராய் இல்லை..
"சார்.. முதலும் கடைசியுமாய்ச் சொல்லிவிடுகிறேன்.. நான் இப்போது இந்த ஏஜென்சியுடன் தொடர்புடையவள்.. என் வேலை உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவுவது.. மனிதர்களுக்கு உதவுவது தெய்வத்திற்கு நம் காணிக்கையாகக் கருத்தப் படுகிறது நம்முள்..”
“சர்விஸ் எதுவாக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் இல்லையா.. அதான் பணியாளாக இருந்தால் கூட ஏதோ ஒரு விதத்தில் பிறருக்கு நாம் உதவியாய் இருக்கிறோம் என்ற சந்தோஷம் எனக்குக் கிடைத்திருக்கிறது இந்த வேலையில்..
அதைத் திறம்பட என்னைச் செய்ய அனுமதியுங்கள்.. இப்போது.. உங்கள் வீட்டில் இருக்கும் பெரியம்மாவிடம் என்னைக் கூப்பிட்டு சென்றால் நன்றாயிருக்கும்..", என்று சொல்லிவிட்டு அவர் பதிலுக்காக அவர் முகத்தைப் பார்த்தவண்ணம் நின்றாள்.
ராஜேந்திரனுக்குப் புரிந்து போனது.. அவள் தீர்மானமாய் இருக்கிறாள் என்று.. மேலே விஷயத்தைக் கிளறாமல்.. எங்கே பேசினால் அவள் மீண்டும் காணாமல் போய்விடுவாளோ என்று பயந்து விட்டார்..
"இல்லைம்மா.. நீ நன்றாய் பாதுகாப்பாய் இருக்கிறாய் என்பது தெரிந்ததே போதும்.. மற்றபடி நாங்கள் இருபத்தி நாலு மணி நேரமும் ஒரு உதவி பெண்ணைக் கேட்டிருந்தோம் என் மனைவிக்காக.. நீ வா நான் காட்டுகிறேன்", என்று முன்னே சென்றார்..
அவரைப் பின் தொடர்ந்தாள் வேதா.. போகும் போது பல்லைக் கடித்தபடி நின்றிருந்த சத்யாவைப் பார்த்து ஒரு அலட்சியப் பார்வை வீசிவிட்டுப் போனாள் வேதா.
கீழேயே ஒரு அறையில் இருந்த ருக்மணியை வேதா பார்த்தபோது நிஜமாகவே வேதாவுக்கு அய்யோ பாவம் என்று தான் தோன்றியது..
இந்த ரெண்டு மூணு மாதத்திற்குள்ளாகவே இளைத்து போய் விட்டிருந்தாள் ருக்குமணி..சாப்பாடு சரியில்லை.. வீட்டில் எதுவும் சரியில்லை.. போதாதற்கு மன உளைச்சல் இதற்கு மேல் இப்போது கால் வேறு ஒடிந்து பிறரின் கையை எதிர் பார்த்திருக்கும் நிலமை அவளை ரொம்பவே பலகீனமாக்கிவிட்டிருந்தது.
அந்தப் பலவீனத்திலும்..அவளுக்கு வேதாவைப் பார்த்ததும் தன் மகனின் வாழ்வைக் கெடுத்தவள் என்ற எண்ணம் வராமல் போகவில்லை.. இத்தனைக்கும் சொந்த நாத்தி மகள் மேல் இவ்வளவு துவேஷம் இருக்கக் கூடுமோ என்று பிறர் யோசிக்கிற மனனிலையில் தான் இருந்தாள்..
இப்போது அவளை நேரில் பார்த்ததும் ஆத்திரம் பீறிட்டது ருக்குவுக்கு..
"ஏய் வேதா இங்கே எதுக்குடி இப்போ வந்தே.. நான் இருக்கேனா இல்லை செத்தேனான்னு பாக்க வந்தியா.. எவ்வளவு நெஞ்சழுத்தம்டி உனக்கு.. சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு ஓடிப் போனே.. இப்போ என்ன வந்துச்சு..”
அவளுக்கு உள்ளுக்குள், 'அப்பாடி இந்த ஏமாளி எப்படியோ விஷயம் கேள்விப்பட்டுப் பயந்து போய் வந்துடுச்சு போல.. எப்படியாவது கொஞ்சம் கெத்தா பேசிட்டு பெருந்தன்மையா மன்னிச்சு ஏத்துக்கிறா மாதிரி இவளை சேர்த்துகிட்டா..’
‘ஒரு நல்ல சமையல்காரி ப்ளஸ் வேலைக்காரி அதுவும் வீட்டோடு கிடைத்துவிடுவாள்.. அவளுக்குத் தண்டனையும் கிடைத்தாற் போல ஆயிற்று..இவளை மீண்டும் வெளியே போகாமல் இருக்க வைத்து விட வேண்டும்..', என்று நினைத்துத் தான் அதைச் சொன்னாள்..
ஆனால்..
ரஜேந்திரனுக்கு இப்போது ஆத்திரம் தலைக்கு மேல் போனது.. ஒர் பெரு மூச்செடுத்துத் தன்னை நிதானித்துக் கொண்டவர்.
"ருக்கு.. போதும்.. ஸ்டுபிட் மாதிரி பேசாதே.. வேதா உன்னுடைய மகனின் மனைவியா மருமகளா இப்போது இங்கே வரலை.. அவ ஏஜென்சி வழியா வந்திருக்கா.. உனக்கு உதவிக்கு ஆள் வேணுமின்னு கேட்டோமே.. அதுக்காகத் தான் வந்திருக்கா.. வேணாம்னா சொல்லு இப்பவே அனுப்பிடறேன்..”
“ஆனா இந்த மாதிரி இன்சல்டிங்கா பேசினா வேறு யாரையும் அனுப்பமாட்டோம்னு உனக்குப் போன முறையே அவங்க சொல்லிட்டாங்க நியாபகம் இல்லையா.. சோ.." என்று முடிக்காமல் நிறுத்தியவரை
வெறுப்புடன் பார்த்தாள் ருக்மணி.."ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆத்திரம் என் மேலே.. என்னைப் பற்றியோ நம் மகனைப் பற்றியோ இல்லை உங்களைப் பற்றியோ கூடக் கவலையில்லாமல் இவள் பாட்டுக்கு கம்பி நீட்டிவிட்டாள்..”
“நான் வேறு என்ன சொல்ல முடியும் இதில்.. என்னைப் போய்க் கோபித்துக் கொள்றீங்க.. இப்போ என்ன அம்மா தாயே மன்னிச்சிக்கோன்னு நான் இவ காலிலே விழணுமா.. அதானே உங்க ஆசை.." என்று கடுப்பாய் மொழிந்தாள்.
தன் மனைவியின் சீற்றத்தில் ஆயாசமாய் வந்தது ராஜேந்திரனுக்கு.. 'சே என்ன இவள் கண்ணாடிக்கும் வைரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்.. இவள் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று முடியவில்லை.. சத்யாவும் என் தங்கை மகள் தான்.. எனக்கென்ன அவள் மீது கோபமா இல்லை பகையா.. எதையும் புரிந்து கொள்ளாமல் நான் வேதாவுக்குச் சப்போர்ட் செய்கிறேன் என்று பொதுப்படையாய் எதையாவது பேசி குழப்பம் செய்கிறாள்', என்று நினைத்தவர்,
“இதோ பாரு ருக்கு.. நமக்கு இப்போ ஒர் உதவி தேவை.. அதுக்காக வந்திருக்கா வேதா.. நீ இவ வேண்டாம் சத்யாவே எல்லாம் மேனேஜ் செஞ்சிப்பான்னு தோணினா... இவளை அனுப்பிடறேன் என்ன சொல்லுறே..", என்று நயமாகவே கேட்டார் ராஜேந்திரன்.
'அய்யோ சத்யாவா.. ஏற்கனவே இவ சாப்பாட்டுலேந்து தப்பிக்க ஒரு வழியும் காணுமேன்னு நான் தவிக்கிறேன்.. இந்த அழகுலே இவ சிடு சிடுப்பை வேறு நாள் முழுக்கத் தாங்கனுமா?', என்று பயந்து போனாள் ருக்கு.. முகம் டென்ஷனை அப்பட்டமாய்க் காட்ட,
"இல்லங்க இல்லை டியர்.. ராஜ்.. இவளே செய்துட்டு போகட்டும்.. வேதாக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் நல்லா வரும்.. நல்லா சமைக்கவும் செய்வா....ஹி.ஹி.. இல்லை வேதா..", என்று நைச்சியமாய் வெட்கமில்லாமல் கட்சி மாறினாள்.
அதுவரை சும்மா நின்றபடி வேடிக்கை பார்த்தபடி இருந்த வேதா..
"மேடம்..கொஞ்சம் பொறுங்க.. என் வேலையை நான் சொல்லிடறேன்.. நான் இங்கே உங்களுக்கு உதவியாய் இருக்க வந்திருகிறேன்.. உங்களுக்குமட்டும் தான் என் உதவி இருக்கும்.. அதுவும் உங்களுக்குப் பாத்ரூம் ஹெல்ப், டாக்டர் சொல்லிய நடைபயிற்சியோ.. எக்சசைஸுக்கு உதவி செய்வது..”
“அத்துடன் மாத்திரை மருந்துகளை வேளாவேளைக்கு..கொடுப்பது.., உரிய நேரத்தில் தயாராய் இருக்கும் உணவைக் கொடுப்பது.. நன்றாய்க் கவனியுங்கள்.. நாங்கள் சமைக்க மாட்டோம்.. சமைத்து வைத்திருக்கும் உணவை உங்களுக்கு மட்டும் எடுத்துக் கொடுத்து அருந்த வைப்பதில் உதவி செய்வோம்..”
“அடுத்து உங்க வீட்டு வேலை எதையும் நான் செய்யமட்டேன்.. ஒரு பேஷண்டை எப்படிக் கவனிக்கணுமோ அதுக்கு எனக்கு டிரைனிங் குடுத்துருக்காங்க.. நீங்க டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் பிக்ஸ் செய்தா நான் கூட்டிட்டு போவேன்.. உங்க கூடவே காலை முதல் இரவு தூங்கும் வரை இருப்பேன்..
“ஞாயிறு விடுமுறை.. எனக்கு மூன்று வேளையும் நீங்க சாப்பாடு கொடுக்கணும்னு சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்", என்று சொல்லிவிட்டு ராஜேந்திரனையும் ருக்குவையும் பார்த்து
"சார் உங்களுக்கு ஓ.கேன்னா.. நான் வேலையை இன்றே தொடங்குறேன்.. நீங்க ஏஜென்சியில் சொல்லிடுங்க சர்வீஸ் ஸ்டார்ட் ஆயிடிச்சுன்னு", என்று சொல்லிவிட்டு மீண்டும் வாயை மூடிக் கொண்டாள் வேதா.
ருக்மணி செய்வதறியாமல் ஒரு கணம் திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டாள்..
'இவளையும் விட்டுவிட்டால் நம் கதி அதோ கதிதான்’ என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்,
"ராஜ்.. யாரோ செய்வதற்கு.. நம்ம வேதாவே இருக்கட்டும்.. அவளுக்கும் நம் வீட்டின் சட்டதிட்டங்கள் எல்லாம் தெரியும்.. எனக்கு ஓ.கே", என்று பெருந்தன்மையாய் ஒத்துக் கொண்டாள்.
ராஜேந்திரனுக்கா தன் மனைவியைப் புரியாது.. "ருக்கு இதோ பார் எனக்கும் ஒன்றும் அப்ஜக்ஷன் இல்லை ருக்கு.. என்ன ஒரு சின்னப் பிரச்சனை தான்.. இவளுக்கும் மூன்று வேளை நாம் உணவும் இருக்க இடமும் அளிக்க வேண்டும்....அதைத்தான் எப்படிச் செய்வது என்று யோசித்தேன்.. ஆனா என்ன பரவாயில்லை சத்யாதான் இப்போ சமைக்கிறாளே..", என்று சொல்லியவர் வேதாவிடம் திரும்பி,
"எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைமா.. நீ இன்னிக்கே ஸ்டார்ட் செய்துடலாம்.. என்ன சாப்பாடு தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டீருக்கும்.. பாருங்க இல்லாட்டி உங்களுக்கு மூணு வேளை சாப்பாட்டுக்கும் ஒரு அமவுண்ட் தனியா கொடுத்துடறோம் சரியா", என்றார்..
"எனக்கு ஓ. கே சார்.. இல்லாட்டி எனக்கு மட்டும் கொஞ்சம் போலக கிச்சனில் இடம் கொடுத்தா என் ஒருத்திக்கான உணவை நானே தயார் செய்து கொள்வேன்.. இதற்கென்று தனியாய் நீங்க பணம் கொடுக்கணும்னு இல்லை.. உங்க இஷ்டம்.. உங்களால் உணவு கொடுக்க முடியாவிட்டால் சொல்லிவிடுங்க ..பரவாயில்லை..", என்றாள் பெருந்தன்மையாய்..
இதற்காகவே காத்திருந்த சத்யா,
"மாமா என்னால் இவளுக்காகவெல்லாம் சமைக்க முடியாது.. இவளே இவள் சாப்பாட்டைப் பார்த்து கொள்ளட்டும் இந்த வாரம்.. அடுத்த வாரம் நம் அனுசூயா வந்துடுவா..", என்று சொல்லிவிட்டு கெத்தாய் வெளியே போனாள்.
"வாம்மா மத்த ஃபார்மாலிடீசை நான் செய்து முடிக்கலாம்..", என்று வேதாவைக் கையோடு கூடி சென்றார் ராஜேந்திரன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய உடைமைகளோடு வந்திறங்கினாள் வேதா..
அவளுக்கென்று ருக்மணியின் அறையை ஒட்டி ஒரு சிறு அறையைத் தயார் செய்து கொடுத்தார் ராஜேந்திரன்.. கூப்பிட்ட குரலுக்கு உடனடியாய் உள்ளே போகும்படி இரண்டு அறையையும் இனைத்து ஒரு கதவு வேறு இருந்தது வசதியாய் இருந்தது.. அங்கேயே பாத்ரூம் வசதியும் இருந்ததால் ஒரு பிரச்சனையும் எழவில்லை..
ருக்மணியும் அனாவசியமாய் வேதாவிடம் பேசவில்லை எல்லாம் ஒரு பயம்தான்.. இவளும் விட்டுவிட்டு ஓடிப் போனால் அவள் கதி?.
சுயநலமாய்த்தான் சிந்தித்தாள் ருக்கு.
முதல் இரண்டு நாட்கள் மெல்ல ருக்மணியைப் பிடித்துக் கொண்டு அவளை டாக்டரின் அறிவுரைப்படி காலை ஊன்றாமல் வாக்கர் உதவியுடன் மெல்ல பாத்ரூமிற்குத் தத்தித் தத்தி நடக்குமாறு கூறி அழைத்துச் சென்றாள்.. பாவம் ருக்மணி மிகவும் களைப்பாகித் தான் போனாள் அந்தச் சின்னத் தூரத்தை கடப்பதற்கே..
தனக்கு வேண்டும் என்பதைத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கிடைத்ததும்.. மெல்ல தன் சமையலைப் பார்த்து கொண்டாள் வேதா..
கிச்சன் உள்ளே நுழைந்தாலே ஏதோ போர்க்களத்துக்குள் போவது போல் இருந்தது அவளுக்கு.. கழுவிய பாத்திரங்களும் கழுவாத பாத்திரங்களும்.. உணவு சிந்திய கறைகளும்.. பார்க்கச் சகிக்கவில்லை அவளுக்கு..
பரபரவென்று அனைத்தையும் சுத்தம் செய்யக் கை துடித்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு தனக்கு மட்டும் ஒரு ஓரமாகச் சமைத்து எடுத்து வைத்துக் கொண்டாள்.. நல்ல வேளையாகச் சிங்கிள் பர்னர் காஸ் ஸ்டவ் ஒன்று தனியாக இருந்ததால் தப்பித்தாள்.
ருக்மணிக்குச் சத்யா தயார் செய்து வைத்திருந்த கஞ்சியையும் காய்ந்த ரொட்டியையும் உண்பதற்குக் கொடுக்கும் போது மனசு கனத்து தான் போனது வேதாவுக்கு..
'தினமும் இப்படித்தானே ஒவ்வொரு வேளையும் கொடுக்கிறாள்.. இதெல்லாம் செய்யக் கூடத் தெரியாமல் என்ன பெண் இவள்.. ருக்கு அத்தை பாவம்...இவள் சாதம்வைத்தால் குழைந்து கஞ்சி தங்குகிறது.. நீர் அளவு தெரியவில்லை..
காயைத் தீய்த்துவிடுகிறாள்.. குழம்பை அடி பிடிக்க வைக்கிறாள்.. இந்தச் சின்னச் சமையலுக்கே ஸ்டவ்வில் தீயைக் குறைத்து அளவான மிதமான தீ விஷயம் என்பது கூடத் தெரியவில்லை.. என்ன தான் அப்படி ஆஃபிசில் வெட்டி முறித்தாளோ..
'பாவம் அத்தை எப்படி இருந்தவர்கள்.. இப்படி ஆகிப் போனார்களே..’, என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை..
ஆனால்..இன்னமும் கூட அத்தை அவளை ஏற்கவில்லையே.. தான் கொடுத்தால் நிச்சயம் மறுக்கத்தான் போகிறார்கள்.. இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று யோசித்தபடியே.. தன்னுடைய உணவை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு அறைக்கு வந்தாள்..
அத்தையைப் பெட்டில் வாகாய் உட்கார வைத்துக் கையில் ஒரு புத்தகத்தையும் கொடுத்தவள், அவளுடைய தட்டில் இருந்த சாம்பார் சோறு மற்றும் ஒரு தொடுகறியின் மீது அத்தையின் பார்வை சென்று மீள்வதைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை..
"ம்ம்.. என்ன கறி அது?"
ஒரு வாய் உணவை வாயில் போட எடுத்துச் சென்ற வேதாவின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது..
"என்ன மேடம்?..", என்று கேட்டாள்
"இல்லை ஏதோ மொறுமொறுன்னு காணுதே அது என்ன.. உருளைக்கிழங்கா?..என்ன சாம்பார் வைத்தாய்?", என்று நாக்கில் எச்சில் ஊறக் கேட்டவளை பார்த்து பரிதாபமாய்த்தான் ஆகிப் போனது வேதாவுக்கு..
"மேடம் டேஸ்ட் செய்யறீங்களா?.. கொஞ்சம் கிண்ணத்தில் போட்டு எடுத்து வரவா.. என்று மனம் பொறுக்காமல் கேட்டே விட்டாள்..
"ம்.. இல்லை இல்லை வேண்டாம்..சும்மா கேட்கணுமேன்னு கேட்டேன்.. என்னதான் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களை விசாரிப்பது எஜமானியின் கடமை இல்லையா.. அதான் கேட்டேன்.. இந்த வீட்டின் வழக்கம் தான் உனக்குத் தெரியுமே..", என்று சொல்லிவிட்டு இன்னமும் கூட உன்னை மருமகளாய் ஏற்க எனக்கு மனம் இல்லை என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.
"ஓ.. சரிங்க மேடம்.. இதோ நான் சாப்பிட்டு முடித்துவிடுகிறேன் என்று நெட்டை விட்டுக் கொண்டு, ஒரு முருங்கைத் துண்டை எடுத்து உண்டவாறு,
"நம் தோட்டத்து காயா மேடம்.. நல்ல வாசம்.. சாம்பாரே சூப்பராயிடுச்சு இதாலே", என்று சொல்லி வயிற்றெரிச்சல் கொட்டி கொண்டாள்.
"சரி சரி சீக்கிரம் முடி.. என்னைக் கொஞ்சம் தோட்டத்து வாகிங்க் அழைச்சிட்டு போ..மெல்ல..", என்று கட்டளையிட்டாள் ருக்கு..
இன்னமும் கூட ருக்குவுக்கு மனம் வரவில்லை இவள் என் கணவனின் சகோதரி மகள்..என் மருமகள் .. என்று ஒரு கணம் நினைத்திருந்தால் கூட வேதா தன் உடலைச் செருப்பாய் தைத்துப் போட்டிருப்பாள் என்று அவளுக்குப் புரியத்தான் இல்லை..
விதி ஆடும் விளையாட்டில் ஆட்டம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது..