அத்தியாயம் 29
வேதா வேலையைத் துவங்கி மூன்று நான்கு நாட்களாகியும் அவள் கண்ணில் பிரகாஷ் தென்படவில்லை.. மனதுள் என்ன ஏது என்று அறிய ஆவல் இருந்தாலும் தன்னை உதாசீனப்படுத்தியவனின் காலடியில் போய் விழ அவள் மனம் இடம் கொடவில்லை.
வாயைத் திறக்காமல் மறந்தும் அவன் அறைப் பக்கம் கூடப் போகாமல் முடிந்த அளவுக்கு ஒதுங்கி இருக்கவே தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
ரேவதி சித்தியையும் காணவில்லை என்பது மட்டும் அவள் மனதுக்குச் சிறு வருத்தத்தை அளித்தது..
தன் வரையில் சமைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு யார் வம்புக்கும் போகாமல் இருக்கப் பழகிக் கொண்டாள்,
அடுத்த ஒரு சில தினங்களிளேலேயே அவள் கேள்விக்கு விடைத் தானாய் வந்தது.
ஒரு வாரமாக வெளியூர் சென்றிருந்த பிரகாஷ் அன்று காலையில் தான் வீடு வந்து சேர்ந்தான்.. அதிகாலையிலேயே வந்துவிட்டவன் சிறிது ரிலாக்ஸ் செய்து கொள்ளும் பொருட்டுத் தோட்டத்திலேயே வாக் செய்தபடி இருந்தான்..
அவனுக்குமே கடந்த சில மாதங்களாகக் கடுமையான மன உளைச்சல் இருக்கத்தான் செய்தது.. ஆனாலும் கூடத் தான் சரியான முடிவு எடுத்ததாகத்தான் நினைத்திருந்தான்..
சத்யாவின் வாழ்க்கை தங்களால் கேள்விக்குறி ஆகிப் போனதே என்ற கவலையும் மனதுள் இருக்கத்தான் செய்தது.. ஆனால் அதையும் மீறி தற்காலப் பழக்க வழக்கங்கள் அதையெல்லாம் சுத்த பிரமை என் பின்னே தள்ளச் செய்தது...
'நாம் என்ன செய்தோம்.. பிடிக்கலை என்று சொல்பவளை கை காலைக் கட்டியா அனுப்பமுடியும்?.. அதே தான் வேதாவுக்கும்.. எனக்குச் சரி வரலை.. அதை டீசண்டாகச் சொல்லிவிட்டேன் இனி அவள் பாடு..', என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாலும் அதையும் மீறி எங்கோ ஏதோ தவறு இருக்கத்தான் செய்கிறது என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த மனநிலையில் யாரைப் பற்றி நினைக்கக் கூடாது என்று பிடிவாதமாய்த் தன் கவனத்தைத் திசை திருப்பினானோ அவளே வீட்டுக்குள்ளிருந்து வெளியே தோட்டத்திற்கு வரக் கண்டான்.
அதிகாலை வேளையில் குளித்து அழகாய் மஞ்சள் நிற சேலையுடுத்தி நல்ல துடைத்து வைத்த குத்து விளக்கு போல் நின்றவளைப் பார்த்தான்..
வேதா தான் வந்து கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட பிரகாஷ் வியப்பின் உச்சிக்கே போனான்..
'இவள் எப்படி இங்கே.. பெருசா எழுதி வச்சிட்டு போனாள்.. இப்போ என்ன?’, என்று நினைத்தவனுள் மெலிதாய் ஒரு சின்ன நிம்மதியும் பிறந்தது..
'அப்பாடி இனி கவலை இல்லை.. வீட்டையும் அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேதா வந்துவிட்டாள் போலும்.. என்ன தான் இருந்தாலும் ரத்த பந்தமாயிற்றே.. அதான் போலே, நான் ஒன்றும் அவளிடம் சண்டை போட்டு விரட்டவில்லையே.. அவளாகத்தானே போனாள்..கருத்து வேறுபாடு கொண்டு..', என்று நினைத்தவன் அருகில் வந்த வேதா ஒன்றும் பேசாமல் அவனைக் கடந்து செல்ல முற்பட்டாள்.
அவள் சட்டை செய்யாமல் போவதைக் கண்டு திகைத்தவன்,
"ஏய் வேதா.. எப்படி இருக்கே? நீ எங்கே இங்கே.. சரி போகட்டும் ஆல் ஓ.கே..? எதாவது பிரச்சனையா.. பணம் கிணம் வேண்டுமென்று வந்தாயா?", என்று ஏதோ அவளிடம் நயமாய்ப் பேசுவதாக நினைத்துத் தான் கேட்டான்.. அதற்கு மேல் அவனால் வேறு யோசிக்க முடியவில்லை..
அடுத்த கணம் வேதாவுக்கு பேயறைந்தார் போல் ஆனது.. ’இவனை நான் கேட்டேனா?..இப்படியும் கூடத் தன்னலம் பார்ப்பவனா என் கணவன்’ என்று வேதாவுக்குக் கசந்து தான் போனது.
'சே இவனும் இவன் லைஃபும்.. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை.. இவ்வளவு திமிரா.. நான் என்ன ஒண்ணும் இல்லாதவளா.. என் அப்பாகிட்டே இல்லாத பணமா இல்லை நான் கேட்டால் மாமா தான் தரமாட்டாரா? திமிர் பிடித்தவன், இவனுக்கு சூடு கொடுக்காமல் விட்டதால் தான் இப்படித் திரிகிறான்..இவனை..', என்று நினைத்துக் கொண்டு,
"என்ன கேட்டீங்க, பணமா?.. யாருக்கு வேணும்?.. நீங்க யாரு இதெல்லாம் என் கிட்ட பேச?..என்னமோ உங்க கிட்ட கையேந்தி நான் வந்தா மாதிரி இதென்ன பில்டப்பு.. வேலையைப் பாத்துட்டு போங்க சொல்லிட்டேன்.. இல்லாட்டி மரியாதை கெட்டுடும்..", என்று கோபமாய்ச் சொல்லிவிட்டு அவனைக் கடந்து போக முற்பட்டவளின் கையை அழுத்தமாய்ப் பிடித்து நிறுத்தினான் பிரகாஷ்.
"வேதா, நீ என்ன இப்படிச் சில்லியா பேசறே.. நான் நார்மலா தானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு இந்த ஓவர் ரியாக்ஷன்?.. அப்ப எதுக்கு இங்கே வந்தே.. அஃப்கோர்ஸ் உனக்கு நிச்சயம் இந்த வீடு உரிமையானதுதான்.. உன் மாமாவின் வீடு.. அந்த உரிமையின் பேரில் நீ வரலாம் போகலாம்.. யு ஆர் மை கஸின்"
இப்போது வேதாவுக்கு கோபம் போய் நன்றாகவே சிரிப்பு வரத் தொடங்கியது.. 'சே இவனும் இவன் மூளையும் மியூசியத்தில் தான் வைக்கணும்.. பெரிசா வியக்கியானம் பேசறான்..’ என்று நினைத்தபடி..,
"ஓ.. மாமா வீடா சரி சரி.. ஆனா இதெல்லாம் விட ஒரு பெரிய உரிமை எனக்கு இன்னமும் இருக்கத்தான் செய்யுது.. ஏன் அது மறந்துடுச்சுங்களா உங்களுக்கு.. அதாங்க இந்த வீட்டோட மருமகள்.. உங்க மனைவிங்கிற உறவு..இன்னமும் நமக்கு விவாகரத்து ஆகலைங்கிறது மறந்து போச்சா உங்களுக்கு.. எனக்கு வேணுமின்னா மாமா அத்தனை சொத்தையும் என் பேரிலே மாத்திடுவார்.. அப்புறம் எதுக்கு வாயை விடுறீங்க..", என்று கேலியாய் கேட்டவளை..
இப்போது நிஜமாய்க் குழப்பமாய்ப் பார்த்தான் பிரகாஷ்.
"வேதா இங்கே பாரு உனக்கும் எனக்கும் பர்சனல் வெஞ்சன்ஸ் ஒண்ணுமில்லை.. நடைமுறைக்கு உதவாத பொருந்தாத நம் திருமணப் பந்தம் நமக்கு வீண் கால்கட்டு என்று தான் நான் இன்னமும் நினைக்கிறேன்.. இதில் எனக்கு இப்போதும் கூட எந்த மாற்றுக் கருத்துக் கிடையாது..”
“இது அனைத்தையும் மீறி நீ என் கஸின்.. என் அத்தை மகள்..அது மாறாதே?.. சத்யாவுக்கு என்ன உரிமை இங்கு உண்டோ அதே தான் உனக்கும்.. ஒரு சின்ன விசாரிப்புக்கு ஏன் நீ இவ்வளவு ரியாக்ட் செய்கிறாய்?..", என்று நேரிடியாய்க் கேட்டவனிடம் முகம் காட்ட முடியவில்லைதான் வேதாவுக்கு..
'ஒருவேளை இவன் பாவம் தானோ.. அவன் சொல்லுவதில் என்ன தப்பு இருக்கு.. அவனுக்குப் பிடிக்காத கொள்கைகளையும் பழக்கங்களையும் உடைய என்னை அவன் தலையில் கட்டிவிட்டு வாழச் சொல்லி வற்புறுத்தினால் எப்படி ஏற்க முடியும்.. அவரவர் நியாயம் இருக்கிறதல்லவா?..", என்று நினைத்தபடி,
ஒருவாறு சுதாரித்தவள், "சாரி பிரகாஷ் மாமா.. நான் நல்லா தான் இருக்கேன்.. நான் இங்கே உங்க கஸினா வரலை.. இந்த வீட்டில் உங்க அம்மாவுக்கு அஸிஸ்ட் செய்ய ஒரு நர்சாய் வந்திருக்கிறேன்.. இப்போது நான் ஒரு சர்வீஸ் கம்பனியுடன் இருக்கிறேன்..”
“அங்கே இந்த மாதிரி உதவியாளர்களை யாருக்குத் தேவையோ அதற்கு ஏற்றவாறு அனுப்புவார்கள்.. அதனால் தான் இங்கு வந்தேன்.. மற்றபடி எந்த உறவை முன்னிட்டும் நான் வரலை.. ஓ.கே.. எனக்கு நேரமாகிவிட்டது நான் போகிறேன் ", என்று சொல்லிவிட்டு தன் கரத்தை உதறிவிட்டுச் சென்றவளை இப்போது நிஜமாய் வியப்புடன் தான் பார்த்தான் பிரகாஷ்.
**************
பிரகாஷிடம் பேச்சை முடித்துக் கொண்டு பின் தோட்டத்திற்குச் சென்றவள் அங்கே களைப்பாய் அமர்ந்திருந்த தன் மாமாவைப் பார்த்தவுடன் மனம் பதைக்கத் தான் செய்தது..
ஏதோ யோசனையில் தன் தலையைக் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தவரைப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் தன் பிடிவாதத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
"மாமா", என்று மெல்லக் குரல் கொடுத்தாள்.
குரலால் கவனம் கலைந்தவர், சுற்றும் முற்றும் பார்த்தபடி,
"வேதா என்னையா கூப்பிட்டாய்?", என்று கேட்க,
"பின்னே எனக்கு இருப்பது ஒரு மாமாதானே.. அப்புறம் உங்களைக் கூப்பிடாம நான் யாரை அப்படிச் சொல்ல முடியும்..? இதென்ன மாமா கோலம்.. ஏன் இப்படி இருக்கீங்க.. ரொம்பக் களைப்பாத் தெரியுறீங்களே..", என்று படபட வென்று மனதில் அடைந்திருந்த அனைத்துக் கேள்விகளையும் கேட்கத் தொடங்கினாள்..
ஒரு கணம் ஆழ்ந்து அவளைப் பார்த்த ராஜேந்திரன்,
"சரிம்மா.. நீ என் மருமகள்ங்கிற உரிமைலே கேட்கிறாய் என்று நான் எடுத்துக் கொள்ளட்டுமா?", என்று நேரடியாய் கேட்க,
"மாமா நான் பிரகாஷின் மனைவியாய் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நான் மருமகள் தான்.. அதனால் எங்கிட்டே நீங்க தயங்க வேண்டாம். இது என் டியூட்டி டைமும் இல்லை.. சோ…என்ன ஆச்சு.. இப்பல்லாம் நீங்க அடிக்கடி சோர்வா இருக்குற மாதிரி தான் எனக்குத் தெரியுது.. சரியா சாப்பிடறது இல்லை.. சொல்லுங்க மாமா?", என்று பிடிவாதமாய் அவரைக் கேட்டாள்..
"ம்ம்.. ஒண்ணும் இல்லைம்மா.. கொஞ்ச நாளாவே நம்ம வீட்டில் எல்லாம் தலை கீழ் என்பது உனக்கும் தெரிந்து தான் இருக்கும் ஆனால் என்ன செய்ய முடியும் இப்போ உன் அத்தையும் காலொடிந்து கிடக்கிறாள்.. உதவிக்கு ஆள் இல்லை.. சமையல் அறைக்கு அவள் போயே பல நாள் இருக்கும்.. உனக்குத் தெரியுமா? உன்னோட இந்த அத்தை எவ்வளவு நல்லா சமைப்பான்னு.. அதெல்லாம் ஒரு காலம்.. இப்போ பணம் பகட்டுன்னு அவ ஆளே மாறித்தான் போயிட்டா..", என்று பழைய நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்..
"அது சரி மாமா.. அப்ப இருந்த அத்தையா இப்போ இருக்காங்க.. ஏதோ அவங்களுக்கு இதெல்லாம் தான் பிடிச்சிருக்கு.. என்ன செய்ய முடியும்....மாமா இன்னமும் கூட விஷயத்தை நீங்க சொல்லலை..", என்று விடாப்பிடியாய் அவள் கேட்டாள்.
"அது.. ரெண்டு நாள் முன்னாடி நான் ஆஃபிசிலே கொஞ்சம் லோ சுகர் ஆகி மயங்கிட்டேன்.. யாருக்கும் தெரியாது.. எப்படியோ என் செகரட்டரி பார்த்து தக்க நேரத்துக்கு ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனா....டாக்டர் செக் செஞ்சிட்டு.. சரியான சாப்பாடு இல்லை.. ஏன் டென்ஷன் எடுத்துக்கறீங்க வேளா வேளைக்கு ஒழுங்கு முறையுடன் சாப்பாடு எடுத்துக் கொள்ளாதது தான் காரணம் என்று சொல்லிவிட்டார்..
எப்படியோ மருந்து மாத்திரைன்னு தான் ஆயிடுச்சு.. அதைத்தான் நினைத்துக் கவலைப்பட்டபடி இருந்தேன்.. உன் அத்தை ஒரு எடுப்பார் கைப்பிள்ளை.. அவளுக்கு ஒண்ணும் தெரியாது.. எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா.. அவள் கதி.. என்னாகுமோன்னு நினைச்சு கவலையாயிடுச்சு.. அடுத்துப் பிரகாஷ் இப்படித் தன் தலையில் மண்ணைப் போட்டுக்கறானேன்னு வருத்தமா இருக்கு.. ஏதாவது ஏடாகூடமா செய்யப்போறனேன்னு இருக்கு", என்று சொல்லி ஆதங்கப்பட்டார் ராஜேந்திரன்.
மனதில் ஏனோ ஒரு இனம் புரியா பதட்டம் சேர்ந்து கொண்டது வேதாவுக்கு..
'அய்யோ என்ன மாமா இப்படிச் சொல்ல்லுறாங்க.. அத்தை வேறு இப்போ கால் ஒடிஞ்சு கிடக்காங்க.. இதில் பிரகாஷ் மாமாவுக்கு இவர் மேலே கோபம் வேறு துளியும் குறைந்தார்போலத் தெரியவில்லை.. இதில் அவர் எங்கே இவரைக் கவனித்து இருக்கப் போகிறார்.. இவரை எப்படியாவது நல்ல முறையில் காக்க வேண்டும்..', என்று நினைத்தபடி..
"மாமா போதும் நீங்க ஏன் இப்படிக் கஷ்டப்படறீங்க.. உங்க மருமகள் இருக்கேன். உங்களைக் கண்ணும் கருத்துமா கவனிப்பேன்.. எங்களோட சண்டை இவ்வளவு உங்களைப் பாதிக்க வேணுமா?.. விட்டுடுங்க மாமா.. விதிப்படி எல்லாம் நடக்கட்டும் அதுக்காக நீங்க விசனப்பட்டுக் கிடந்தா உங்க உடல் நலம் தான் பாதிப்படையும்..இனி இதைப் பற்றி யோசிக்காதீங்க..", என்றவள்,
"இங்கே பாருங்க எத்தனை நாளானாலும் சரி வருஷமானாலும் சரி பிரகாஷ் மாமா தான் என் புருஷங்கிறதை எந்தக் கொம்பனாலும் மாத்த முடியாது.. என்ன அவருக்கு நான் இல்லாம இருக்கறது சந்தோஷத்தை குடுக்குதுன்னா அதையும் அவர் அனுபவிக்கட்டுமேன்னு தான் நான் ஒதுங்கினேன்..”
“ஆனா.. உங்களோட தங்கச்சி மகளா எனக்கு எப்போதும் இந்த வீட்டில் இருக்க எனக்கு இல்லாத உரிமையா.. இனி உங்க ஆரோக்கியம் கெட நான் அனுமதிக்க மாட்டேன்.. இதை நான் உங்க மருமகளா சொல்லுறேன்..", என்று சொல்லிவிட்டு
வீட்டிற்குள் நுழைந்த வேதா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
***********
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் தன் மாமனுக்கு மணக்க மணக்கக் காலை உணவைத் தயாரித்தவள் அவர் டேபிளுக்கு வந்ததும் தயாராய் பரிமாறவும் செய்தாள்.
ஏற்கனவே கிட்டதட்ட ஒரு மாதமாகவே சத்யாவின் சமையலை உண்பதை நிறுத்தியதால் டைனிங்க் பக்கம் வருவதைக் கூட நிறுத்தியிருந்தவர்..அன்றைக்கு வேதாவின் வற்புறுத்தலால் அனைவரும் டேபிளில் கூடியிருந்த வேளையில் தானும் வேதா தனக்குச் செய்து வைத்த உணவை மெல்ல உண்டார்.
அவர் தட்டில் வீற்றிருந்த உணவைப் பார்த்த ருக்குவுக்கு வியப்பாய் இருந்தது.. 'அட ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் சமைத்து அவருக்கும் தந்து இருக்கிறாளே.. என்ன சொன்னாலும் சமத்து தான் இந்த ஒரு விஷயத்தில்.. மத்தபடி அவ பட்டிக்காடுதானே..', என்று மனதுள் ரகசியமாய்ப் பொருமினாள்.
அடுத்தச் சில தினங்கள் இப்படியாகக் கழிந்தது.. தினம் தினம் விதவிதமாய் ஆரோக்கிய உணவினை தன் மாமனுக்கும் கொடுத்து தானும் உண்டாள் வேதா..
பிரகாஷும் எந்த விதத்திலும் அவளைச் சீண்டவோ இல்லை அவமதிக்கவோ இல்லை.. அவனுக்குமே வேதாவின் இந்தப் புது அவதாரம் வித்தியாசமாய்க் கவனத்தை ஈர்க்கத்தான் செய்தது..
'பரவாயில்லை இவள் நாம் சொன்ன வேலைக்கார புத்தி என்ற ஒரு வார்த்தையை மனதில் வைத்து அதையே தன் வாழ்க்கைக்கு மூலாதாரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.. பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்..’
‘எத்தனை பேருக்கு மனம் வரும்.. இந்த மாதிரி வேலையில் இறங்க.. அழுத்தக்காரி தான் போலும் வேதா.. இவளின் இந்த முகம் சற்று வித்தியாசமாய் இருக்கிறது..', என்று நினைத்தவன் அதற்குமேல் அவளைக் கண்டு கொள்ளவில்லை..
அன்றைக்குக் காலையில் ஒரு சின்ன சம்பவம் நிகழ்ந்தது அது அவன் மனதில் ஒரு சின்னச் சலனத்தையும் உண்டு செய்தது..
காலையில் அவர்கள் அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு எப்பொழுதும் துணிகளை இஸ்திரி செய்பவர் பெட்டி போட்ட சலவைத் துணிகளைக் கொண்டு வந்திருந்தார்.. யாரும் அதை வாங்கி வைக்க முடியாத நிலையில் வேதா உதவிக் கரம் நீட்ட வேண்டியது ஆயிற்று.
துணிகளை வாங்கிய வேதா எண்ணிக்கை சரிபார்த்த போது அதில் இருந்த ஒரு சட்டையைத் தணியே எடுக்கச் சொன்னாள்.
அவளுக்குப் பிரகாஷின் அனைத்து சட்டைகளும் மனதளவில் அத்துப்படி.. அதனால் அந்த நீல சட்டையைப் பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது அது அவனுடையது அல்ல என்று.
அதற்கு இஸ்திரிக்காரர், "அம்மா அது நம்ம பிரகாசு தம்பியோடது", என்றார்..
"இல்லண்ணே.. இது வேறு ஒருத்தர் சட்டை போல இருக்கு.. கலந்துடுச்சுன்னு தோனுது..கொஞ்சம் காமிங்க” என்று அந்தச் சட்டையை வாங்கியவள்.. அதன் தோள் அளவைச் சரிபார்த்தவள், சட்டென்று சட்டையின் உள்ளே பக்கவாட்டு தையல் இருக்குமிடத்தைப் பார்த்தாள்..
அங்கே அவள் எதிர் பார்த்த ஏதோ இல்லை போலும்,
"அண்ணே.. இது மாமாவோட சட்டை இல்லைண்ணே.. அவரோட சட்டை எல்லாத்துலேயும் நான் உள் பக்கமா ஒரு சின்னப் 'பி" இன்னு நூல் வேலை செய்து வச்சிருந்தேன்.. ஏன்னா இப்போ எல்லாரும் இதே மாதிரி சட்டைகளைத் தானே போடுறாங்க..அதான்.. இது அதிலே இல்லை பாருங்க..", என்று வேறு ஒரு சட்டையையும் எடுத்து பிரித்து அங்கே அடையாள குறி இருப்பதைக் காண்பித்தாள்..
தலையைச் சொறிந்தபடி, "ஹி ஹி..தங்கச்சி சூப்பரு போ..எப்படியோ மாறித்தான் போயிடுச்சு போலே.. இப்போ நான் போயி என் கடையிலே பார்க்குறேன், தம்பி சட்டை எங்கேன்னு", என்று சொல்லிவிட்டு இளித்தபடி போனார் கடைக்காரர்.
இவை அனைத்தயும் பார்த்தபடி தான் இருந்தனர் வீட்டினர்..
ராஜேந்திரன் சூசகமாய்த் தன் மகனைப் பார்த்தபடி, "இதைத்தான் பெரியவங்க சொல்லுவாங்க கண் பார்க்க கை காரியம் செய்யணும்னு.. மனசுலே நிஜ அக்கறை இருந்தா எது நம்மைச் சார்ந்ததுன்னு பதிஞ்சிடும்.."
"அப்பா இதென்ன கம்பச் சித்திரமா.. சும்மா எதாவது சொல்லாதீங்க.. சின்ன விஷயம் அதுக்குப் போயி ஆஹா ஓஹோன்னு.. எப்படியும் நான் கண்டுபிடித்திருப்பேன் அது என்னோடது இல்லைன்னு.. இதெல்லாம் ஒரு விஷயம்னு சொல்லறீங்க பாருங்க, ஏன் ரெக்கமெண்டேஷனா உங்க மருமகளுக்கு?..", என்றபடி தோள்களைக் குளுக்கிவிட்டு அங்கிருந்து போக எத்தனித்தவனை நிறுத்தியது அவர் குரல்,
"இல்லே கண்ணா.. ஒவ்வொரு சின்ன விஷயம் கூடச் சில விஷயங்கள்ளே பெரியதா மாறிடும்.. நீயும் பிசினஸ் செய்யறே.. சின்ன விஷயம்னு எதையும் விட்டுடுவியா.. இல்லை பொதுப்படையாகத்தான் சொன்னேன்..", என்று சொல்லிவிட்டு அவரும் கிளம்பினார்.
"மாமா.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் போலப் பேசாதீங்க.. அப்புறம் உங்க மகன் தப்பா நினைச்சுக்கப் போறார்.. ஏதோ இதெல்லாம் நான் செஞ்சி அவரோட மனைவியா இங்கேயே இருந்துடப்போறேன்னு பயந்துடப் போறார்.. அடுத்து புருஷன் பெண்டாட்டிக்கு நடுவில் ரெகமண்டேஷனெல்லாம் எடுபடாது.. என் வேலை முடிஞ்ச போயிகிட்டே இருப்பேன் நான்..", என்றபடி ருக்குவை கைத் தாங்கலாக அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள் வேதா..
அங்கிருந்து அவள் சென்றதும் தன் தந்தையை ஒரு வெற்றுப் பார்வை பார்த்த பிரகாஷின் மனதில் ஏனோ அன்று இனம் புரியா சலனம்,
'ஒரு சின்ன விஷயத்தைக் கூட நறுவிசாகச் செய்கிறாள்.. என்னைச் சார்ந்த விஷயங்கள் இவள் மனதில் இவ்வளவு பதிந்திருக்கிறதா?.. இவள்.. ஆனாலும் கூட இதெல்லாம் ஒரு மனைவியின் கடமையாகத்தான் அவள் எண்ணி செய்திருப்பாள்.. ஆனால் எனக்கு மனைவியாக இருப்பவள் இந்த மாதிரி விஷயங்களில் மட்டும் திறமையானவளாக இருந்தால் போதாதே..’
‘இதற்கு மேலும் என்னுடன் பேசி கதைத்து ஒரே எண்ண அலைவரிசையில் இருப்பவளாகத் தானே நான் எதிர்பார்த்தேன்.. இவள் எண்ணங்கள் வேறு பாதையில் தான் இருக்கு.. இவளுக்கெல்லாம் தான் தன் கணவன் குழந்தை குடும்பம் என்று ஒரு சிறு வட்டத்தில் சந்தோஷமாக வாழ்பவன் தான் ஏற்றவன்.. நான் அவன் இல்லை..', என்று பிடிவாதமாக நினைத்து தன் மனதை வேறு விஷயத்தில் திசை திருப்பினான்.
அவன் அறியாததும் ஒன்று இருந்தது வேற்றுத் துருவங்கள் தான் ஈர்க்கும்.. ஆப்போசிட்ஸ் அட்டிராக்ட் என்ற இயற்பியல் விதியை மறந்து தான் போனானோ?.
விதியின் வழியில் அதன் ஆட்டத்தின் பிடியில் தானும் ஒரு நூல் பொம்மையாகித்தான் போவான் என்பதை அவன் அறியும் வேளையும் விரைவில் வரும்..