அத்தியாயம் 30
தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையில் வேதா சன்னலருகே நின்று கொண்டு ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்..
சற்று நேரம் முன்புதான் அவளுடைய அன்றாடப் பணிகள் முடிந்திருக்க அத்தை ருக்மணி தான் உறங்கப் போவதாகச் சொல்லி அவளை அனுப்பி விட்டார்.. இப்பொழுதெல்லாம் ருக்மணி அனாவசியமாக வேதாவிடம் பேசுவதில்லை..
முன்பு இருந்த குத்தல் பேச்சுக்களோ, இல்லை அவமதிக்கும் வகையிலான எள்ளலோ அவர் வார்த்தைகளில் இல்லை.. இந்த மாற்றம் கூட என்றிலிருந்து வேதாவின் உதவியை ஏற்க ஆரம்பித்திருந்தாரோ.. அன்றிலிருந்து அனாவசியமான பேச்சுக்களைக் குறைத்திருந்தார்.
ஆனாலும் தேளின் இயல்பு கொட்டுவதுதானே.. சமயம் கிடைத்தால் தன்னையறியாமல் வார்த்தைகளால் புண்படுத்திக் கொட்டுவது நடந்து கொண்டுதான் இருந்தது..
மனித சுபாவத்தை அறிந்திருந்ததால் அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை வேதாவுக்கு.. தனக்கு ஒன்று கிடைக்கவில்லையென்றவுடன் அதற்காக ஏங்குவதும், அது கிடைத்து விட்டாலோ பழையபடி தலை தூக்குவதும் உலகத்தில் என்ன நடக்காதா ஒன்றா.
ருக்மணியின் குணத்தை நன்கு புரிந்திருந்த வேதாவுக்கு அவரது செய்கையை இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிந்தது.. ஆனாலும் அவரது பலவீனத்தைத் தனக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள விருப்பப்படாமல் எப்பொழுதும் போலத் தன் போக்கில் போவது சுலபமாய் இருந்தது.
பாசத்தைக் கொண்டு பார்ப்பவர்களுக்கு மற்றவர்களின் குற்றம் குறை கண்ணில் படாது.. அவர்களின் மனம் தான் முதலில் படும்.. மனதைப் பார்ப்பவர்களுக்கோ வேறு எதுவுமே பிரதானமாக இருக்காது..
அதே பணத்தைக் கொண்டு எடை போடுபவர்களுக்கு முதலில் அவர்களது ஏழ்மை கண்ணில் படும்.. அதை வைத்து அவர்களை எள்ளி நகையாடத் தோன்றும்.. அவர்களின் இயலாமையைப் பரிகசிக்கத் தோன்றும்.. அவர்களைக் குத்த தோன்றும்..
அதனால் தான் பணமும், பாசமும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது என்பது கடினமாக இருக்கிறதோ..
இரண்டாம் வகையைச் சேர்ந்த ருக்மணி பணத்தைப் பெரிதாக மதிப்பவள்.. பாசமாக, அன்புடன் வேதா பார்த்து பார்த்துச் செய்யும் செயல்கள் அனைத்தையும் பணம் இருந்தால் இதையெல்லாம் பெறமுடியாதா என்ற ஆணவத்தில் அவளைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் இன்றும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்..
தன் வீண் கௌரவம் பெரிது என்ற மனப்பான்மை.. பணத்தால் அனைத்தையும் பெறமுடியாது என்று தெரிந்த போதும் அதை ஒப்புக் கொள்ளப் பிடிக்காமல் தன் வீண் பிடிவாதத்தால் தன் மருமகளின் அன்பைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாரோ?..
ருக்மணியைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கி சன்னலருகே நின்று கொண்டு அந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்த வேதாவின் கண்களில் தேய்பிறை நிலவு பட.. இப்பொழுது தன் வாழ்க்கையும் இப்படித்தான் தேய்ந்து போனதோ..
'இப்படித் தேய்ந்து அமாவாசையாய் இருளில் தன்னைத் தொலைக்கப் போகிறேனா.. இல்லை என்னவனின் அன்பில் முழுநிலவாய் பிரகாசிக்கப் போகிறேனா..ம்.. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..'
எங்கோ சாமக்கோழி கூவும் குரலில் நேரத்தைப் பார்த்தவளுக்கு ஆயாசமாக வந்தது.. மெல்ல தன் படுக்கையில் விழுந்தவளுக்குள் என்னென்னவோ ஞாபகங்கள்.. பெற்றவர்களைப் பற்றிய சிந்தனை.. தன் அன்னையிடம் தான் இங்கே இருப்பதைச் சொல்லிவிடலாமா என்று தோன்ற..
வேண்டாம்.. இன்னும் இங்கே எத்தனை நாட்களோ?.. அதன் பின்?... எதற்கு அவர்களுக்குத் தேவையில்லாமல் மனகஷ்டத்தைக் கொடுக்க வேண்டும்.. நான் எங்கேயோ சுகமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளட்டும்..
விடியலில் தன்னை மறந்து சற்று கண்யர்ந்தவள்.. காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்தாள்.. மணி எட்டாகி விட்டதே என்று பரபரக்க காலைக் கடன்களை முடித்துத் தயாராகி அத்தை ருக்மணியின் அறைக்கு விரைந்தாள்.
"குட்மார்னிங்க் மேடம்.. சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. உங்களுக்கு பாத்ரூமுக்கு ஹெல் பண்ணட்டுமா?.."
"உன் குட்மார்னிங் இருக்கட்டும்.. உன் டூயூட்டி நேரம் மறந்து போச்சா.. இங்க ஒருத்தி கால் உடைஞ்சி கிடைக்கிறேன்..இவளால என்ன பண்ண முடியுங்கற கொழுப்பு.. அந்த அவசரத்துக்குப் பாத்ரூமுக்குக் கூடப்போக முடியாமல் தவிச்சிட்டு இருந்தா நீ ஆடி அசங்கி வர்றே?..
“ம்.. முதல்ல என்னைப் பாத்ரூமுக்கு அழைச்சிட்டு போ.. எத்தனை நேரம் நீ வருவேன்னு அடக்கிக் காத்திருக்கிறது?.. செய்யறே வேலையில பொறுப்பு இருக்கணும்.. ஏதோ ஒப்புக்குக் கடன் இழவேன்னு செய்தா..” சுள்ளென எரிந்து விழுந்தாள் ருக்மணி.
தன் நாக்கை சாட்டையாய் சுழட்டினாள் ருக்மணி.
முகம் சுருங்கினாலும் வேதாவோ தன் கடமையைச் செய்யத் தொடங்கினாள் இதமாக.
“சாரி மேடம்.. கொஞ்சம் தூங்கிட்டேன்.. இதோ.. வாங்க..” என அவரை மெல்லத் தாங்கி கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தவள்.. அடுத்து மற்ற எல்லாவற்றிற்கும் உதவி செய்து அவரைத் தயார்படுத்தி நல்ல அகன்ற சோபாவில் அமரவைத்து விட்டு காலை எதிரில் போடப்பட்டிருந்த டீப்பாயில் இதமாகத் தூக்கி வைத்தாள்.
“சரி சரி.. முதல்ல எனக்கு எத்தையாவது கொண்டு வா.. பசி வயத்தை இழுக்குது.. காப்பியைக் கொடு.. அப்படியே ஏதாவது டிபன் ரெடியா பாரு.. இல்லைன்னா சத்யா கிட்டச் சொல்லி எடுத்து வா.. ஜல்தி..”
தேள் கொட்டத் தொடங்கியாயிற்று…
சமையலறைக்குள் நுழைந்தவள் கண்ணில் எதையோ செய்து கொண்டிருந்த சத்யா கண்ணில் பட்டாலும் அவள் கருத்தில் நிற்கவில்லை.. அடுத்த அரை மணியில் ராகி இட்லியை வெங்காயச் சட்னியுடன் செய்தவள் அவள் மாமாவிற்கு டேபிளில் எடுத்து வைத்து விட்டு, ருக்மணியின் அறைக்குள் விரைந்தாள்..
“மேடம்.. சாப்பிடுங்க.. சுடச்சுடக் காப்பியும் தயாரா ஃப்ளாஸ்கில் கொடுத்து இருக்காங்க..” என எடுத்து வைத்தவளுக்குப் பதில் சொல்லாமல் தன் டிபனை முழுங்கும் பணியில் ருக்மணி இருக்க..
“என்ன டிபன்..” தட்டைத் திறந்தவளின் கண்களில் காய்ந்து போன ரொட்டி துண்டுகள் நாலும் அலங்காரமாய் அதை சுற்றி சாலட் என்ற பெயரில் பச்சை காய்கறிகளும் வைக்கப்பட்டிருந்தன.
நாக்கு ஏங்கினாலும் வீம்பு இருக்கிறதே.. பேசாமல் ரொட்டியைக் கடித்தாள்.
“ருக்கு.. குட்மார்னிங்க்.. எப்படி இருக்கே?.. ஓ.. ப்ரட்டா.. சாப்பிடிறீயா?.. சாப்பிடு சாப்பிடு.. குட்.. மாத்திரை எடுத்துட்டியா?.. இப்போ பெயின் குறைஞ்சி இருக்கா..”
“உம்.. பரவாயில்லை ராஜ்.. இன்னிக்கு டாக்டர்கிட்ட அப்பாயின்மெண்ட் இருக்கு.. மதியத்துக்கு மேலே வரச் சொல்லியிருக்கிறார்கள்.. சத்யாகிட்ட சொல்லி வைக்கணும்..”
“சாரிம்மா.. எனக்கு இன்னிக்கு முக்கியமான மீட்டிங்க் இருக்கு.. இல்லைன்னா நானே உன்னோடு வருவேன்.. நீ சத்யாவையோ இல்லை பிரகாஷையோ அழைச்சிட்டு போ.. ஹெல்ப்க்கு வேதாவை கூட்டிக்கோ.. டிரைவர்கிட்ட சொல்லிடறேன்..”
“வேதா எதுக்கு.. அவளுக்கு டாக்டர் கிட்ட பேசி இதெல்லாம் எங்கே பழக்கம் இருக்கும்.. இது என்ன அவங்க ஊரு கம்பௌன்டரை பார்க்க போகணும் நினைச்சீங்களா?.. பெரிய ஹாஸ்பிட்டல்.. அந்தப் பார்மாலீடிஸ் எல்லாம் இவளுக்குப் புரியாது.. அவ இங்கேயே இருக்கட்டும்.. சத்யாவுக்குக் கொஞ்சம் சொல்லிடுங்க.. அவளுக்கு எல்லாம் தெரியும்?..”
எப்பொழுதும் போல அகந்தையுடன் பேசும் தன் மனைவியின் குணமறிந்தவர் ஆகட்டும் எனத் தலையாட்டி விட்டு..
“வேதா.. நீ சாப்பிட்டாச்சாம்மா.. இல்லைன்னா வா.. நீயும் இன்னிக்கு என்னோடு சாப்பிடேன்..” என இதமாகத் தன் மருமகளைப் பார்த்தார்.
“இல்லை சார்.. நான் மேடமுக்கு இன்னும் மாத்திரை எல்லாம் கொடுக்கலை.. எனக்கு பாக்ஸ்ல எடுத்து வந்திட்டேன் சார்.. நான் அப்புறமா சாப்பிட்டுக்குவேன்.. நீங்கள் போய் சாப்பிடுங்க.. டேபிளில் எல்லாம் தயாரா வைச்சிருக்கேன் உங்களுக்கு..”
தன்னைத் தள்ளி நிறுத்தி வைக்கும் மருமகளை எப்பொழுதும் போல ஒருவித நிராசையுடன் பார்த்தவர் அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்து மௌனமாக வெளியேறினார்.
‘ஆமாமாம்.. அப்படியே என் மேல பாசம் உருகுது?.. மாத்திரை கொடுக்கணுமாம் மாத்திரை.. அப்படியே அக்கறை.. இந்தச் சாப்பாடு ஒண்ணை வைச்சிக்கிட்டு எல்லாரையும் மயக்கி தன் கைக்குள்ள போட்டுக்கப் பார்க்கிறாளோ?..’
“என்னைத் தோட்டத்துப் பக்கம்மா கூட்டிட்டு போ வேதா.. ரூமுக்குள்ள அடைஞ்சி இருக்கற மாதிரி இருக்கு..”
சரி எனத் தலையாட்டிய வேதா, ருக்மணியை வீல் சேரில் மெல்ல அமர வைத்து வெளியே அழைத்து வர.. அங்கே சாப்பாட்டு மேஜையில் பிரகாஷ் என்னவோ சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“வேதா.. நீ போ.. உன் டிபனை முடி.. அப்புறம் தோட்டத்துக்குப் போகலாம்.. கொஞ்சம் நேரம் நான் இவர்களோடு நான் இருக்கேன்..” என்றவர் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போலத் தன் வீல்சேரை தானே நகர்த்திக் கொண்டு அகன்றார் வேதா.
வேதாவும் தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.
“சத்யா.. இன்னிக்கும் இந்தக் காஞ்சு போனா தானா?.. உனக்கு வேற எதுவும் பண்ணவே தெரியாதா?..” சலித்துக் கொண்டான் பிரகாஷ்.
“ஏன் பிரகாஷ்.. ப்ரட்டுக்கு என்ன குறைச்சல்.. பாரு இன்னிக்கு சைட்ல கார்ன்ஃப்ளேக்ஸ் ஐ மீன் மூஸ்லீ வைச்சிருக்கேன்.. எவ்ளோ டிரை ஃப்ரூட்ஸ் எல்லாம் ஆட் பண்ணிருக்கு.. நல்ல ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட் பிரகாஷ்.. ம் .. பாரு.. இன்னிக்குப் பிரட் கூட ஃப்ரென்ச் டோஸ்ட் பண்ணிருக்கு.. டெய்லி வெரைட்டியாதான் பண்ணி தரேன்..”
“ம்ப்ச்.. இது வெரைட்டியா?..அது சரி ஏன் சொல்ல மாட்டே.. ஒரு நாள் காஞ்ச பிரட்.. இன்னொரு நாள் தீஞ்ச பிரட்.. அது இல்லைன்னா.. கருகின ரொட்டி.. நல்ல வைரட்டிதான்.. ஒத்துக்கறேன்.. தாயே..உன்னை.. உனக்குச் சமைக்கவே வராதா?.. வெரைட்டி பண்ணராலாம்.. வெரைட்டி.. அதோ அப்பா சாப்பிடுறார் பார்.. தினமும் விதம் விதமா.. வேதா சமைக்கிறா பாரு..” என அலுத்துக் கொள்ள..
“என்ன நீ இப்படிச் சொல்லிட்டே?.. போ.. ப்ரகு.. நீ சுத்த மோசம்.. நான் சூப்பரா தயிர் சாத்தை தாளிச்சி வைப்பேனே?.. கதிர் கூட ரொம்ப நல்லா இருக்குன்னு சாப்பிட்டான்.. அவனுக்குத் தயிர்சாதம் ரொம்பப் பிடிக்குமாம்.. நாளைக்கு வேணா காலையில பண்ணி வைக்கட்டுமா?..” ஆவலுடன் கேட்டாள் சத்யா.
“ஏன் நல்லா ஆபிஸ்ல இழுத்து போர்த்திட்டு தூங்கவா?.. உனக்குப் புத்தி இருக்கா சத்யா?.. இப்போதான் புரியுது அந்தக் கதிர் ஏன் இப்படி இருக்கான்னு.. மந்த புத்தி.. நல்லா மூணு வேளையும் இப்படித் தச்சி மம்முவை சாப்பிட்டா ஆளு கழுக்கு மொழ்க்குன்னுதான் இருப்பான்.. இடியட்.. ஆனாலும் அங்கே போய் நீ ரொம்பதான் மாறிட்டே சத்யா..” என்றான் இடக்காக.
சட்டென ராஜேந்திரன் சிரித்து வைக்க.. சத்யாவோ இப்பொழுது கொதிநிலைக்குப் போனாள்.
‘ஒரு பேச்சுக்குக் கதிருக்குத் தயிர்சாதம் பிடிக்கும் எனச் சொன்னால்.. அவனைக் கிண்டலடித்து.. அவனைக் கிண்டல் அடித்தால் பரவாயில்லை.. என்னமோ அங்கே போனவுடன் தனக்கும் மந்த புத்தி வந்து விட்டது போல இவனுக்கு என்ன பேச்சு.. இதில் அந்த வேதா வேறு சிரித்துக் கொண்டு போகிறாள்?..’
“பிரகாஷ்.. போதும் நிறுத்து.. நான் மாறலை.. நீதான் மாறிட்டே.. எப்போதிலிருந்து நீ இப்படிச் சாப்பாட்டுக்கு இம்பார்டென்ஸ் கொடுக்க ஆரம்பிச்சே?.. நானும் பார்த்திட்டு தான் இருக்கேன்..
“அது என்ன வேதா மாதிரி வெரைட்டி.. அவளுக்கு உருப்படியா தெரிஞ்சதே சமையல் ஒன்றுதான்…… இது சரியில்ல பிரகாஷ்..” தன் குரலை சத்யா உயர்த்த
“ஷ்.. என்ன சத்யா.. எதுக்கு இப்படிக் கத்தறே?.. சமைக்கத் தெரியலைன்னா ஒத்துக்கோயேன்.. அதை எதுக்கு ஒரு பெரிய விஷயமா நினைச்சி சீன் போடறே?..”
ஏற்கனவே ஆத்திரத்தில் தான் இருந்தாள் சத்யா.. அதிலும் தான் செய்த தயிர் சாதத்தை விரும்பி உண்ட கதிர் குடும்பத்தின் நினைவு வேறு கோபத்தை அதிகரிக்க, தன்னை போய் இவன் ஒன்றுக்கும் உதவாத வேதா ரேஞ்சில் வைத்து பேசுவது பொருக்காமல், “பிரகாஷ்.. திஸ் இஸ் டூ மச்.. சீன் அது இதுன்னு என்ன பேச்சு இது?.. இதை நான் உங்கிட்ட எதிர்ப்பார்க்கலை.. ஆப்ட்டர் ஆல் ஒரு சாப்பாட்டு விஷயத்துக்காக என்னை இப்படி எடுத்தெறிஞ்சி பேசறே?..”
“முதல்ல நீ எனக்குப் பதில் சொல்லு.. நான் சொன்னேனா நான் ஒரு நல்ல குக்குன்னு.. என்னிக்கு அப்படிச் சொன்னேன்.. எனக்கு இதெல்லால் இன்ட்ரெஸ்டு இல்லைன்னு ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன்..
“ஏதோ போனாப் போகுதுன்னு அத்தைக்கு ஹெல் பண்ணாலும் நான் செஞ்சா கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம என்னைக் குத்தம் சொல்ல வர்றது நல்லா இல்லை பிரகாஷ்..” என்று சத்யா எரிச்சலாகப் பேச..
“இதோ இதைத்தான் சொன்னேன் சத்யா.. ஜஸ்ட் ஒரு சின்ன விஷயம்.. அதுக்கு எப்படிப் பேசறாப் பாரு.. உன்னை நாங்க என்ன எங்க வீட்டு என்னிக்காவது குக்குன்னு சொன்னோமா?.. இல்லை அப்படித்தான் டிரீட் பண்ணி இருக்கோமா?.. ஒரு சில்லி விஷயம் அதைக்கூடப் புரிஞ்சிக்காம பேசினா?..” பிரகாஷும் விடாமல் தொடர..
“டேய் பிரகாஷ்.. எதுக்குடா இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசறே?.. சத்யா என்ன சொல்லிட்டான்னு அவ மேல் பாயறே?.. யார் மேலோ இருக்கிற நம்ம வீட்டு பொண்ணு மேல காட்டறதே நான் ஒத்துக்க மாட்டேன்..”
நடந்து கொண்டிருந்த விவாதங்களைக் கேட்டுக் கொண்டே வந்த ருக்மணி சத்யாவுக்குப் பரிந்து கொண்டு நடுவில் வர..
“மாம்.. ப்ளீஸ்.. இப்போ இப்போ நடுவில எதுக்குச் சந்தில சிந்து பாடறீங்க?.. இது எனக்கும் சத்யாவுக்குமான சின்ன ஆர்கியூமெண்ட்.. இதுல நீங்க வேற குட்டையைக் குழப்பாதீங்க..” என்று தன் தாயை அடக்கிய பிரகாஷ்..
“சத்யா.. ப்ளீஸ்.. ஆர்கியூமென்ட் சேக்குக்கு பேசணும்னு பேசாதே.. எங்களுக்கும் தெரியும்.. சொல்லலை.. அதுக்காக உனக்குச் சமைக்க வரலைன்னு நான் குத்தம் சொல்ல வரலை.அம்மாவுக்கு முடியலை.. நீ செய்யறது டைம்லி ஹெல்ப்தான்.. தாங்க்ஸ்..”
“நமக்கு ஒரு விஷயம் வரலைன்னா ஒண்ணு ஒதுங்கிக்கணும்.. இல்லை அதைக் கத்துக்க முயற்சியாவது எடுக்கணும்.. இரண்டையும் விட்டுட்டு நீயே சமைச்சி எதுக்கு உனக்கு இதெல்லாம்..”
“ஆக்ச்சுவலி பார்த்தா.. ஒரு லேடியா கொஞ்சமாவது பேசிக்கா குக்கிங் கத்துக்கறது நல்லதுதானே..” என்றவன் சத்யாவின் முறைப்பில்..
“அம்மா தாயே.. திரும்பவும் ஆரம்பிக்காதே.. எனக்குக் காய்ஞ்ச ரொட்டி தெரியும்.. இல்லை தாளிச்ச தயிருசாதம் வைக்கத் தெரியும்ண்ணு.. தாங்கலைடா சாமி.. நீ டிரை பண்ணே.. வெல் அன்ட் குட்.. பட் ஒர்க் அவுட் ஆகலைன்னா என்ன பண்ணியிருக்கணும்.. வேறு யாரையாவது அப்பாயிண்ட் பண்ணியிருக்கலாமே?.. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிச் சாக்கு போக்கு சொல்லறது?.. சொல்லு..” என்றான் பிரகாஷ்.
“பிரகாஷ்.. எனக்குத் தெரியாதுன்னா நினைக்கறே.. ஆல்ரெடி டிரை பண்ணியாச்சு.. ஒருத்தரும் ஒர்க் அவுட் ஆகலை.. வர்றேன்னு சொன்ன அந்தப் புகையில பார்ட்டியும் டிலே பண்ணி தொலைக்குது.. என்னைச் சொன்னா?.. இஸ் இட் மை ஃபால்ட்?..”
“யெஸ்.. இந்தத் தப்பு முழுசும் உன் பேர்ல தான் சத்யா.. ஏன் யாரும் வரலை.. உன்னோடு அரெகென்ட் பிஹேவியர்னாலத்தான்.. நம்ம வீட்டில ஒருத்தரும் நிலைச்சி நிக்காம போனதுக்குக் காரணம் நீதான்.. இதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் எதுக்குப் போனாங்க?.. உன்னோடு ருட் பிஹேவியர் பிடிக்காமல் தான்..முரட்டுத்தனம் இங்கெல்லாம் உதவாதுன்னு உனக்குத் தெரியாது போலே..”
“பிரகாஷ்.. திஸ் இஸ் டூ மச்..” பிரகாஷின் தன்னை அவமானப் படுத்தியதில் சத்யா இப்பொழுது கோபமாகக் கத்த தொடங்க..
“ஷ்.. எந்த த்ரீ மச்சும் இல்லை.. முதல்ல சொல்ல வர்றதை புரிஞ்சிக்கோ.. நீ ஏன் இப்படி மாறினேன்னு தெரியலை.. ஆனா நீ முன்னாடி இருந்த சத்யா இல்லை.. எதற்கெடுத்தாலும் கோவம், கூச்சல்.. யார் யாரை எங்க வைக்கணும் உனக்குத் தெரியலை.
“லேபர்ஸ் கிட்ட அழகா தட்டி கொடுத்து வேலை வாங்கத் தெரியணும்.. அப்படி இல்லாமல் உன்னோடு கோபத்தை அவங்க மேலே காமிச்சா.. இப்படி ஒருத்தரும் நிலைச்சிதான் நிக்க மாட்டாங்க..
“நீ அம்மாவை பார்த்து படிக்க வேண்டியது நிறைய இருக்கு சத்யா.. அம்மா எங்க கண்டிக்கணுமோ அங்கே கண்டிப்பாங்க.. அதே சமயத்தில அவங்களுக்கு ஏத்தா மாதிரி பேசி வளைஞ்சி கொடுப்பாங்க.. அதுனால தான் இத்தனை நாளா இந்த வீட்டில ஒர்க்கர்ஸ் நிலைச்சி நின்னாங்க..”
“சரி அதை விடு.. அந்தப் பட்டிக்காட்டு வேதா கூட வேலைக்காரங்கன்னு வந்த போது அவங்களைக் கைக்குள்ள போட்டுக்கிற வித்தையைப் படிச்சி வைச்சிருக்கா.. அவ இருந்த போது வேலைகள் எல்லாம் ஒழுங்காதான் நடந்தது..”
“நீ இன்னும் நிறையக் கத்துக்க வேண்டியது இருக்கு சத்யா…” என்றான் பிரகாஷ் கடுப்புடன்.
“போதும் பிரகாஷ்.. இது மாதிரி யாரும் என்னை இன்சல்ட் பண்ணது இல்லை.. கடைசில என்னை அந்த வேதா கூடக் கம்பேர் பண்ணற அளவுக்கு வந்தாச்சு இல்லை.. ஆப்ட்டர் ஆல் சரியா சமைக்கத் தெரியலைங்கிற ஒத்தை விஷயத்துக்கு இப்போ அவளோடு கம்பேர் செய்யறே நிலைக்கு வந்தாச்சு..”
“ஏன் பிரகாஷ்.. இவ்வளவு பேசறீயே அப்போ ஏன் அவளை வெறுத்தே?.. ஏன் பொண்டாட்டியா ஏத்துக்கலை?.. படிக்காத வேதாவோட ப்ளஸ் பாயிட்ன்ஸ் அன்னிக்கு கண்ணுல படலையா?.. இல்லை இப்போ அதுவே பெட்டர்ன்னு தோணிப் போச்சா?.. இதை நான் உங்கிட்ட எதிர்பார்க்கலை பிரகாஷ்..” முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகரப் போனவளை தடுத்தது பிரகாஷின் குரல்.
“ஹௌ ஸ்டுபிட் சத்யா.. எவ்வளவு படிச்சி என்ன பிரயோஜனம்.. கடைசில ஒரு பொண்ணுன்னு நீருபிக்கிறே பாரு.. அந்த வேதா மேலே உனக்குப் பொறாமை.. உன் பிஹேவியர் அதைத்தான் சொல்லுது..”
“நான் இப்பவும் சொல்லறேன்.. வேதாவும் உன்னை மாதிரி என்னோடு இன்னொரு கசின்தான்.. உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை அவளுக்கும் என் மேல இருக்கு.. அது ஜஸ்ட் அப்பாவோடு தங்கை பெண் என்கிற உறவு முறைங்கிற உரிமைதான்.. அதுக்கு மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.. என்னோடு வாழ்க்கை முறையும் அவளோடு வளர்ப்பு முறையும் பொருந்தாதுன்னு தான் சொன்னேன்..”
“எங்களுக்குள் கல்யாணம் நடந்திருந்தாலும் என்னால் அதை ஏற்க முடியலைன்னு சொல்லிதான் அவளை ஒதுக்கினேன்.. அது வேறு இது வேறு.. என்னோடு காலிபரும் அவளோடு எண்ணங்களும் ஒத்து போகாதுன்னு தான் அவளிடம் தள்ளி நின்னேன்..”
“பாரு நான் அன்னிக்கு அவளை வீட்டுக்காரி இல்லை வேலைக்காரிக்கு தான் லாயக்கின்னு சொன்னதை சரியா புரிஞ்சிட்டு தனக்கேத்த மாதிரி இப்போ அந்த லைன்ல வேலையைப் பார்க்கத் தொடங்கிட்டாள்.. அவளுக்கு அந்த லைன் நல்லா வருதுன்னு பாசிடிவா .. அவளுக்குத் தெரிஞ்சிருக்கு.. தட்ஸ் தெ ஸ்பிரிட்.. அதுக்கு நாம பாராட்டித்தான் ஆகணும்..
“ஆனா.. கொஞ்சம் நாளா நீ என்ன பண்ணறே?.. புத்திசாலியான நீ உன் வேலையைக் கோட்டை விட்டுடுவே போல இருக்கே?.. உன்னைப் பத்தி ஆபிஸ்ல நிறையக் கம்ப்ளைன்ட்ஸ்.. உன் வேலையில கவனத்தை வைக்கலையாம்.. நிறையக் கால்ஸ் நீ எடுக்கறதே இல்லைன்னு புகார் வேறு எனக்கு வந்திருக்கு..”
“பட்டிக்காட்டு வேதாவுக்கு நீ போட்டின்னு நினைச்சி இப்போ நீ உன் லெவலை தாழ்த்திக்காதே..” எனக் கடுமையாகச் சொன்ன பிரகாஷுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சத்யாவிற்கு.
அத்தனை நேரமாக அமைதியாக அமர்ந்திருந்த ராஜேந்திரன் இப்பொழுது வாயைத் திறந்தார்.
“எல்லாம் சரிதான் பிரகாஷ்..அப்போ நீ சொல்லறதை பார்த்தால் உனக்குப் பட்டிக்காட்டு வேதாவும் ஒத்து வரலை.. இந்தப் பட்டிணத்து சத்யாவும் இல்லை செட்டாகாது போல இருக்கு.. சோ முதல்ல உனக்கு என்ன வேணும்ன்னு புரிஞ்சிக்கோ மை சன்..”
“ராஜ்.. என்ன பேச்சு இது.. என் பிள்ளை சொல்ல வர்றதை கொஞ்சமாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.. அவன் தனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா தான் இருக்கான்.. நீங்க குட்டையில குழப்பி மீன் பிடிக்காமல் இருந்தால் சரிதான்..”
“ம்.. நான் வாயை திறக்கக் கூடாதே.. பையனுக்குப் பரிஞ்சி வந்திருவியே?.. என்னவோ செய்யுங்க.. ஆளாளுக்கு ஆட ஆரம்பிச்சாச்சு.. எவ்வளவு பட்டாலும் புரியாது.. ஆனாலும் ருக்கு நீ உன் பையனை தனிச்சையா கொஞ்சம் யோசிக்க விடு..” என்றவர்..
“இனிமேல் தேவையில்லாமல் யாரும் வேதாவை பற்றிப் பேச வேண்டாம்.. அவளும் கிளம்பி போனா தெரியும் உங்க லட்சணமெல்லாம்..” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
சத்யாவிற்கும் தெரிந்து தான் இருக்கிறது, இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று.. தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புக்களைச் சரியாக எடுக்க முடிவதில்லை.. எப்பொழுதும் வீட்டு பிரச்சனைகளைப் பற்றி நினைத்துக் கொண்டு வேலையைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்தாள்..
இதில் வேதா மீண்டும் அந்த வீட்டுக்கே வந்து மெதுவாக ஒவ்வொருவர் மனதிலும் இடம் பெற்று விடுவாளோ என்ற பயம் வேறு அவளுக்கு வந்திருந்தது.. மெல்லச் சமையல்கட்டை வேறு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..
‘என்னாலே முடியாதுன்னு இவங்க யார் சொல்வது.. இந்த மாமா வேறு ஏதேதோ பேசி மனதை குழப்பி விட்டுவிட்டார்.. கதிரோட ஒத்து போகலைன்ன இவனோட வீட்டுலே வேலை செய்து என்னை நான் புரூவ் செய்யணும்னு எனக்கு என்ன தலையெழுத்து..எனக்கு என்ன வேணும்கிறது எனக்கே சரியா புரியலையா?’, என்று யோசித்தவள் குழம்பித்தான் போனாள்.
அப்பத்தா சொன்னது போல நல்லா சமைச்சி வயத்தை ரொப்பி, இவ மனசுல நுழைந்து விடுவாள் போல இருக்கிறதே என்று அந்தச் சமயத்தில் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இப்பொழுது பிரகாஷ் அதையே குத்தி காண்பிக்கவும் மிகவும் அவமானமாக உணந்தாள்.
இவன் உதவிக்கரத்தை நீட்டியதால் தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. இல்லாவிட்டால் அவன் இல்லை என்றானவுடன் இவன் என்று நான் யோசிக்கவில்லையே.. என்றைக்கும் பிரகாஷ் என் தோழனாயிற்றே.. இதை எப்படி மறந்துப் போய் என்னை இப்படி காய்த்தெடுக்கிறான்?
ஆனாலும் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியுமா என்ன?.. மெல்ல தழைந்து போக எண்ணினாள்.
“என்ன செய்யறது பிரகாஷ்.. ஐ நோ.. வர்ர வர எனக்கு நேரம் கிடைக்கவே மாட்டேங்குது.. உங்க வீட்டு வொர்க் பிரஷர்ல நான் என்னோடு ஆபிஸ் வேலையைக் கான்சென்ட்ரேட் பண்ண முடிய மாட்டேங்குது?..”
இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் என்று சொல்லாமல் சொன்னாள்.
“ம்.. அதைதான்மா நானும் சொல்ல வந்தேன்.. உன்னால வீட்டையும், வேலையும் ரெண்டையும் அட் எ டைம் கவனிக்க முடியலேன்னு.. உனக்கு எதுக்கு இரட்டை குதிரை சவாரி எதுக்கு?.. ஆபிஸ் வேலையைப் பார்க்கிற அளவுக்கு உனக்கு இதெல்லாம் சரியா வராது.. பேசாமல் சீக்கிரம் இதுக்கு வேறு ஏதாவது ஏற்பாடு பண்ணு.. எப்போதும் போல ஆபிசுக்கு வருவியாம்.. எக்கச்ச வேலை நமக்கு இருக்கு.. என்ன சத்யா..”
பிரகாஷும் சமாதானம் ஆனான்.. அவனுக்கும் சத்யாவின் இந்த குறைபாடுகள் தெரிந்துதான் இருந்தது.. ஆனாலும் ஒரு காலத்தில் தன் மனம் கவர்ந்தவள் அல்லவா?.. இந்தச் சின்னச் சின்னக் குறைகளைப் பெரிது படுத்தாமல் ஒதுக்கித் தள்ளி மீண்டும் அவளுடன் நட்பு பாராட்டினான்.
இருவரும் சிரித்தபடி அலுவலகத்திற்குச் செல்ல.. ருக்மணியும் மனம் குளிர்ந்தாள்.. எங்கே இன்று பெரிய சண்டையாகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்தவர், பாலில் தெளித்த நீர் போல் புஸ்ஸெனச் சின்னதாகி அணைந்தே போனதும் நிம்மதியாகப் பெருமூச்சை விட்டார்.
“வேதா.. என்னைத் தோட்டத்துக்கு அழைச்சிட்டு போ..” அதிகாரமாகக் குரலை உயர்த்தினார்.
தன்னறைக்குள் சென்ற வேதாவோ காலை உணவை எடுத்துக் கொண்டிருக்க.. நடுவில் தண்ணீருக்காகத் தேடி மறந்து விட்டதைக் கண்டு.. மீண்டும் சமையலறைக்குள் செல்ல யத்தணித்தவள்..
அங்கே பிரகாஷ் அவளை வேலைக்காரியாகத்தான் பார்க்கிறேன்.. வீட்டுக்காரி இல்லை என்று சொன்னதைக் கேட்டவளுக்கு அதற்குமேல் அங்கே செல்லவே பிடிக்கவில்லை.. வேகமாகத் திரும்பியவள் செவியில் தனக்கு ஏற்ற வேலைக்காரி வேலையை அந்தப் பட்டிக்காடு செய்கிறது என்றதும் விழுந்து வைக்க.. மனம் கனக்க அறைக்குள் திரும்பியவள் கண்களில் கண்ணீர்..
இவன் மாறமாட்டான்.. இவனைப் பொருந்தவரை நான் வேலைக்காரி நிலையில் தான் இன்றும் இருக்கிறேன்..
இனியும் இங்கு இருக்க வேண்டுமா.. பேசாமல் போய் விடலாமா என்று நினைக்கையில்.. ருக்மணியின் அதிகாரமான அழைப்புக் காதில் விழ..
“இதோ வருகிறேன் மேடம்..” கால்கள் தனிச்சையாக நகர்ந்தன..
இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை…..
**************************************************************************************