கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 32

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 32

"ஏய்.. வேதா உன்னைத்தாண்டி கேட்கிறேன்.. யாரைக் கேட்டுட்டு இந்தச் சப்பாத்தி குருமா எல்லாம் அத்தைக்குக் கொடுத்தே?..", என்று மீண்டும் குரல் கொடுத்தாள் சத்யா

அவளை நிதானமாய் பார்த்தபடி, "இப்போத்தானே அத்தை உன் காது பட சொன்னாங்க.. மருமகளை மாமியார் கேட்டாங்க இதில் நீ என்ன தப்பு கண்டுபிடிச்சே?.." என்றாள் ஏளனமாய்

கோபத்தில் முகம் சிவந்தது சத்யாவுக்கு.

"என் அத்தையைக் கவனிக்க எனக்குத் தெரியும்டி.. இத்தனை நாளா எங்கே இருந்தே.. நாலு மாசமா நான் தானே எல்லாம் செய்தேன்.. அப்போ எங்கேடி போனே மருமகளே?", என்று கிண்டலாய் கேட்டாள்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அலட்சியமாய் அவளைப் பார்த்த வேதா..கோலெடுக்காவிட்டால் இந்த குரங்கு பணியாது என்று நினைத்து "இதோ பார் இது எங்க குடும்ப விஷயம் இன்னிக்கு நாங்க சண்டை போட்டுப்போம் நாளைக்கு சேர்ந்துப்போம்.. நீ யார் இதில் தலையிட.. நீயே இங்கே அதிகப்படி.. உன் பாஷையிலே எக்ஸ்டிரா.. இந்த வீட்டில் உன் அளவு என்னன்னு புரிஞ்சிகிட்டு நடக்குற வழியைப் பாரு.. முடிஞ்சா தொலஞ்ச உன் வாழ்க்கையை எப்படித் தேடி எடுக்கறதுன்னு வழி தேடு", என்றாள்.

அவ்வளவுதான் இப்போது கோபம் அத்தை பேரிலும் மாமாவின் பேரிலும் திரும்பியது..

"அத்தை இவ என்ன சொல்லறா.. எனக்கு இந்த வீட்டில் உரிமை இல்லையா.. உங்க நல்லதுக்குத்தானே நான் சொல்லறேன்.. ராத்திரி நேரத்தில் இப்படி ஹெவியாவெல்லாம் சாப்பிட்டா உங்களுக்கு வெயிட் போட்டு நடக்கக் கஷ்டப் படுவீங்கன்னு தெரியாதா.. உங்க மேலே இருக்கற அக்கறையிலே தானே சொன்னேன்.. அதுக்குப் போயி இவ இப்படி பேசரா.."

அதற்குள் ருக்மனியும் சற்று சுதாரித்தாள்.. 'அய்யோ இப்போதான் வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்கப் போகுது.. இவ ஏதாவது நடுவில் புகுந்து கெடுத்து விட்டுடப் போறா..மகராசி', என்று நினைத்து,

"சது.. உனக்கு பொறுமையே இல்லைடா.. இப்போ என்ன நடந்துதுன்னிட்டு குதிக்கறே.. வேதா நல்லா சமைச்சு வெச்சிருக்கா.. டாக்டர் என்னை நல்ல சத்தான ஆகாரம் சாப்பிட சொல்லியிருக்காரு.. அதிலும் கேல்சியம் ரொம்ப குறைபாடா இருக்குன்னாரு.. இப்படியே போனா எலும்பு தேய்மானம் ஏற்பட்டு பொடிப் பொடியா போயிடுமாம்.. அதான்.."

"அப்போ நான் உங்களுக்கு சத்தான சமையல் தரலைன்னு சொல்லறீங்களா.. இன்னிக்கு கூட தயிர் சாதம் திராட்சை மாதுளையெல்லாம் போட்டு செஞ்சிருந்தேனே.. அது தெரியலையா உங்களுக்கு?", என்று சின்ன பிள்ளைத்தனமாய் போர்க் கொடி பிடித்தாள்..

"இல்லைம்மா நானப்படி சொல்ல வரலை.. கொஞ்சம் பொறாமை அவசியமின்னு தான சொன்னேன்.. நீ ஏன் அதைத் தப்பா நினைக்கிறே.. அடுத்தது.. தினம் தினம் தயிர் சோத்தை தின்ன முடியுமா.. உனக்கு தெரியலைன்னா கேட்டுச் செய்யலாமே.. இல்லையா நமக்குத்தான் வரலையேன்னு ஒதுங்கவாவது கத்துக்கணும்.. அதை விட்டுட்டு சும்மா நொய் நொய்ன்னு இர்ரிடேட் செய்யக் கூடாது.." என்றாள் அவள் அன்பு அத்தை.

"அத்தை..", என்று கத்தியவள், அத்தை உண்பதில் கவனமாக இருக்கக் கண்டு, அனைத்தையும் பார்த்தபடி வந்த பிரகாஷை நோக்கி,

"பிரகாஷ்.. என்ன இது அத்தை என்னை இப்படி இன்சல்ட் செய்யுறாங்க நீங்க பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க.. இது தான் நீங்க என்னை பார்த்துகிற லட்சணமா? அவ அவ என்னை வாய்க்கு வந்தபடி பேசறா?..", என்றாள் கண்ணிர் ததும்ப.

ஒரு கணம் பிரகாஷுக்கு அய்யோ பாவம் இவள் இப்படி அனைவர் வாயிலும் அரைபடுகிறாளே என்று தோன்றியது உண்மைதான்.. ஆனால்.. அதைப் பார்த்தால் செய்தது இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

ஒரு தீர்மானத்திற்கு வந்தவன், "இதோ பார் சது, வேதா சொன்னதுலே இல்லை செஞ்சதுலே என்ன தப்பு கண்டே.. இவ்வளவு பேசறவ இன்னிக்கு அம்மாவுக்கு அப்பாயின்ட்மெண்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னே ஆனா என்ன செஞ்சே?..", என்று நிதானமாய் ஆனால் அழுத்தத்துடன் கேட்டான்.

அடுத்த நொடி சர்வமும் பதரியது சத்யாவிற்கு.. 'அய்யோ நேற்றே சொன்னாங்களே மாமா.. காலையில் கூட நியாபகம் இருந்தது.. அப்புறம் எப்படி மறந்தேன்.', என்று தன் விதியை நினைத்து வருத்தம் உண்டானது..

"அது.. அது.. பிரகாஷ் நான் ஆஃபிஸ் டென்ஷனில் மறந்து விட்டேன்..அதனால் என்ன அதான் வேதா கூட்டிட்டு போயிட்டா இல்லை, அண்ட் இட் இஸ் அ பார்ட் ஆஃப் ஹெர் ஜாப்", என்றாள் தன் பிழையைக் குறைத்து காட்டும் பொறுட்டு.

இப்போது ராஜேந்திரனுக்கும் சிரிப்பு வந்து விட்டது, "சத்யா..இது டூ மச்.. நீ மறந்து போனாய் என்பதைக் கூட ஒத்துக் கொள்ள உன் ஈகோ இடம் கொடுக்கலை பார்த்தியா.. ஆனா என்னாலே அப்படி விட முடியுமா என் மனைவியை.. என் மருமகள் பொறுப்பா கூட்டிட்டு போயிட்டு வந்துட்டா தெரியுமில்லை.. அதுவும் தானே காரை ஓட்டிக் கொண்டு", என்று பெருமையடித்தார்.

வேதாவைப் புகழ்வதைத் தாங்கமுடியவில்லை சத்யாவுக்கு..'சே இந்த ரூரல் டால், இப்படி காரெல்லாம் வேறு ஓட்டுமோ?.. எப்போ கத்துகிட்டிருப்.பா?..', என்று யோசித்தபடி,

"மாமா இதில் என்ன இருக்கு பெருமைப்பட?.. இந்தக் காலத்தில் எல்லோரும் தான் வண்டி ஓட்டுறாங்க.. என்னமோ இவ ராக்கெட்டுலே சந்திர மண்டலத்துக்கு போயிட்டு வந்த மாதிரி பெருமையடிக்கிறீங்க?..", என்று எரிச்சல் பட்டாள்.

அவரும் விடாமல், "வேதாதானே, நிச்சயம் ஒரு நாள் ராக்கெட்டுலே போனாலும் போவாள்.. ஷி ஹேஸ் தெ கேபபிலிடி.. உன்னை மாதிரி இங்கே இருக்குற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதுக்கே உனக்கு துப்பில்லாம மத்தவங்களை குறை சொல்லிட்டு திரியலை அவள்.", என்றார் கடுமையாய்.

அதற்கு மேல் பொறுமை குறைந்து தான் போனது சத்யாவுக்கு.. பிரகாஷ் பக்கம் திரும்பி,

"பிரகாஷ் நல்லா எனக்கு ஹெல்ப் செஞ்சே நீ.. பாரு ஆளாளுக்கு ஃபுட் பால் மாதிரி என்னை கிக் செய்யறாங்க.., என்னைப் பார்த்துக்கறேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்படி அவமானப்படுத்தறது கொஞ்சம் கூட நல்லாயில்லை, போயும் போயும் ஒரு வேலைக்காரியா வந்தவளுக்கு சப்போர்ட் செஞ்சி என்னை கார்னர் செய்யுறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை, ஜஸ்ட் ஒரு சின்ன மறதி இதுக்கு போயி இப்படியா?", என்று பொரிந்து கொட்டினாள்.

ருக்குவோ ஒரு படி மேலே போய், "ஏய் சத்யா.. நீ என் அண்ணன் பெண், அடுத்து அவர் தங்கச்சி மகள்.. இந்த உரிமையில் தான் இந்த வீட்டுலே வளைய வரே.. இதுலே உன்னை நாங்க எங்க அவமானப்படுத்தினோம்.. நீயா எல்லாத்தையும் எடுத்தெறிஞ்சு பேசினா எல்லாம் கேட்டுட்டு நாங்க சும்மா இருப்போமா..”

“அதுவும் என் வீட்டிலேயே என் மருமகளிடம் இப்படிப் பேச உனக்கு என்ன தைரியம் வேணும்.. நீயும் உறவுதான்.. அதுக்கு மேலே இன்னொரு பெரிய உறவு வேதாவோட இல்ல எங்களுக்கு ஏற்பட்டிருக்கு.. அவ என் பையனோட பெண்டாட்டிங்கிறது உனக்கு நியாபகம் இல்லைன்னா தெளிவு படுத்திக்கோ.. அப்புறம் இன்னொன்னு அவளை என்ன சொன்னே வேலைக்காரின்னா சொன்னே..”

“இனி இப்படி பேசினா நான் பொல்லாதவளா ஆயிடுவேன் தெரிஞ்சிக்கோ.. வேலைக்காரங்களைத்தானே நாம எல்லோரும் இப்போ நம்பி இருக்கோம் எல்லாத்துக்கும்.. நம்மாலே முடியலைன்னு தானே அவங்களை நாம உதவிக்குக் கூப்பிட்டோம்.. அவங்க செய்யுற வேலையிலே கால் பங்கு கூட உன்னாலே சரியா செய்யமுடியுமா?.. இந்த வீட்டில் நீ இருக்கணும்னா இந்த வீட்டோட சட்ட திட்டத்துக்கு கட்டுப்பட்டு இருந்தா இரு.. இல்லாட்டி..", என்று சொல்லாமல் சொல்லி நிறுத்தினாள் ருக்மணி.

ராஜேந்திரன் நிச்சயமாய் ருக்குவிடமிருந்து இந்த மாதிரி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை..அப்பாடி என் ருக்கு ஒருவழியா விஷயத்தை புரிஞ்சிகிட்டா..என்று ஆன்ந்தப்பட்டுப் போனார்.. மெல்ல மகிழ்ச்சியுடன் சத்யாவைப் பார்த்தார்..

வெளியே போ என்று சொல்லாமல் சொல்லிவிட்ட அத்தையின் வார்த்தைகளால் ஏற்பட்ட அதிக பட்ச அவமானத்தால் சத்யாவின் கண்களில் இருந்து நீர் சர்ரென்று இறங்கியது.. உதட்டைப் பற்களால் கடித்து தன்னை கட்டுப் படுத்த முயன்றவள், முடியாமல் போக பிரகாஷை இறைஞ்சுதலாகப் பார்த்தாள், மெல்ல..

"பிரகாஷ்", என்று அவள் உதடுகள் உச்சரிக்க,

ராஜேந்திரனுக்கே என்னவோ போல் ஆனது இப்போது என்ன இருந்தாலும் தங்கை மகள் தன் மகள் போல் ஆயிற்றே, மனம் பொறுக்காமல்,

"சது குட்டி அத்தை அப்படி சொல்லலேடா, புரிஞ்சிக்கோ.. எங்களுக்கு நீ மகள் மாதிரி..அந்த உரிமையில் தான் அத்தை உன்னை அப்படிச் சொல்லிவிட்டாள். நீயும் இனி கொஞ்சம் பொறுப்பாய் இன்னொரு வீட்டில் மருமகளாய் இருக்க வேண்டாமா?.. இப்படி எதுகெடுத்தாலும் கோபம் கண்ணை மறைத்தால் அப்புறம் முடிவு தான் என்னம்மா..

“ரேவதியும் ராஜ் மச்சானும் எவ்வளவு வருத்தப்பட்டார்கள் தெரியுமா?..இந்தப் பொண்ணு தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறதேன்னு?..புரிஞ்சி புத்தியோட நடந்துக்கோன்னு தான் நாங்க எல்லோரும் சொல்லறோம்", என்றார் தன்மையாய்.

ஆனால் சத்யாவா இதற்கெல்லாம் மசிபவள்,.. இன்னமும் அகங்காரமும், தான் என்கிற பிடிவாதமும் ஈகோவும் அவளிடமிருந்து எள்ளளவும் குறையவில்லையே.. அந்தக் காமாலை கண்ணைச் சரி செய்து பார்த்தால் தானே அவளுக்குப் புரியும் பெற்றது என்ன இழந்தது என்ன என்று?.. இது எதையும் செய்யாமல் அவளுக்குத் தான் பட்ட அவமானமும் வலியும் தான் பெரியதாய்ப் பட்டது..

"மாமா நீங்க எல்லோரும் இப்போ ஒண்ணு நான் வேறு அதானே.. உங்களுக்கு சாப்பாடு மட்டும் தான் இப்போ பிரதானமாப் போயிடுச்சு இல்லை.. உங்க ரூல்ஸ் படி சமைக்கத் தெரியாதவ எல்லாம் வாழவே தகுதி இல்லாதவங்கங்கிற மாதிரி இருக்கு.. இது நாள் வரை செல்ல மருமகளா இருந்த நான் தேவையில்லை இப்போ.. ஏன்னா எனக்கு எதையும் சரியா செய்யத் தெரியாது.. அதானே.. சரி பரவாயில்லை.. ஆனா பிரகாஷ் நீ கூடவா இப்படி மாறிப் போனே?", என்று பிரகாஷை பார்த்தாள்.

ஒரு மாதிரி திணறித்தான் போனான் பிரகாஷ்.. ஒரு பக்கம் முன்னாள் காதலி சத்யா.. மறு பக்கம் தன்னை மட்டும் நம்பி வந்த மனைவி.. அவளை ஏற்கப் பிடிக்கவில்லை என்றாலும்.. யார் பக்கம் பார்ப்பது.. முடிந்து கடந்து போன காலத்தையா இல்லை எதிர்காலத்தையா?.. இருதலைக் கொள்ளி எறும்பானான்..

ஆனாலும் அவன் மனதளவில் சத்யா தன் பிடிவாதத்தால் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துக் கொள்வதைப் பார்க்க தாங்க முடியாததாகத்தான் இருந்தது. இவளை இப்படியே விட்டால் சரிவரமாட்டாள்.. பாவம் அத்தையும் மாமாவும்.. எவ்வளவு வேதனை எல்லோருக்கும் இவளால்..

கதிரும் நல்லவர்தான்.. இவள் தான் அவரை சரிவரப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை..இப்போது இவளுக்கு இணக்கமாக நான் பேசினால் அவ்வளவுதான் அதைப் பிடித்துக் கொண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிடும் என்று நினைத்தவன்,

"ஹேய் சத்யா.. உனக்கு ஒண்ணை நான் ஃபைனலா சொல்லறேன்.. ஒரு காலத்தில் உன்னை நான் மணம் செய்ய நினைத்தது காதலித்தது எல்லாம் உண்மைதான்.. ஆனால் கல்யாணம் வேறு விதமாக முடிந்ததும் நான் மனசால் கூட உன்னை நினைக்கவில்லை.. நீ கதிரின் மனைவி என்கிற எண்ணம் தான் எனக்கு..”

ஏமாற்றம் இருந்தாலும் அது நடந்து முடிந்த கதை.. சோ நீ என் அத்தையின் மகள், மாமன் மகள் என்ற உரிமை மட்டும் தான் உனக்கு இங்கு.. தட்ஸ் ஆல்.. சீக்கிரம் உன் வாழ்வைச் சரி செய்து கொள்கிற வழியைப் பார்.. அனைத்தையும் பாஸிடிவாக பார்த்தால் பாஸிடிவாகத்தான் நடக்கும்.. இல்லை குதிரை கண் மறைப்பு கட்டினார் போல் ஒரே திசையாக நீ பார்த்தபடி நின்றால் நஷ்டம் உனக்குத்தான்.. எங்களுக்கு அல்ல..", என்றான்.

"அப்போ பிரகாஷ்.. உனக்கு வேதா தான் முக்கியமா நான் இல்லையா?..", என்று குழந்தைத்தனமாய் கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தவன்..

"இனி எந்த நாளும் நீ எனக்கு என் அத்தை மகள் சத்யா மட்டுமே.. அதை மீறி எந்த முக்கியத்துவமும் நான் எப்படிக் கொடுக்க முடியும்.. நீ என் கஸின்.. மற்றும் மிஸ்டர் கதிரின் மனைவி என்ற முக்கியத்துவம் மட்டும் தான் இங்கே உனக்கு என்னளவில்..

“உனக்கு யாரும் இல்லை.. என்று அனாதையாய் தெருவில் நின்றுவிடக் கூடாதே என்று நீ எண்ணி வேறு முடிவு எடுத்து விடக் கூடாதே என்று தான் நான் உன்னை இங்கு அழைத்து வந்தேன்..”

“ஒரு விதத்தில் உன் வாழ்வு கெட நாங்கள் காரணம் என்ற எண்ணமும் இருந்ததால் அதைச் சரி செய்ய வேண்டித் தான் இங்கே கூப்பிட்டு வந்தோம்.”

“அடுத்து என்ன கேட்டாய் வேதா தான் முக்கியமா? என்று கேட்டாய் அல்லவா.. அதுவும் எனக்குத் தெரியாது.. அவளும் என் கஸின்.. ஆனால் என் மனைவி.. இந்த வீட்டில் வாழ வந்தவள்.. அதற்கான இடம் அவளுக்கு இங்கே உண்டு.. அதை நாங்கள் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும்.. இதில் மற்றவர்கள் தலையீடு எதற்கு?..”

“அவளுக்கும் எனக்கும் ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. இருந்தாலும் கூட பகை பாராட்டாமல் நாம் ஏதோ சொன்னோம் என்று அதையே ஒரு சேல்லஞ்சாக எடுத்துக் கொண்டு தன்னை நிரூபிக்கத் துவங்கியிருக்கும் வேதா எங்கே.. இல்லை கண் வாய் காது அனைத்தையும் மூடிக் கொண்டு புதிதாக எதையும் கற்க மாட்டேன்.. எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஈகோவில் அனைவரையும் எடுத்தெறிந்து பேசும் நீ எங்கே..”

“நீ இனி அவளைக் கேவலமாக பேசுவதை நான் இல்லை வேறு யாரும் கூட இனி இந்த வீட்டில் பொறுக்கமாட்டார்கள்.. உன் இடம் இங்கே என்ன என்பதை அறிந்து இருக்க முயற்சி செய்.. இல்லாவிட்டால் அம்மா சொன்னது தான் எனக்கும் சரி என்றுப் படுகிறது..", என்று தன்னுடைய தரப்பை ஆணித்தரமாகச் சொல்லிவிட்டான்.

அவ்வளவுதான் இனி இங்கே நம் வார்த்தை எடுபடாது என்கிற உண்மை அவள் முகத்தில் அறைவது போல் இருந்தது..

'அம்மா, அப்பா, மாமா, அத்தை, பிரகாஷ் இவர்கள் எல்லோரும் தன்னை நயவஞ்சகமாய் நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டார்கள் போல் பிரமை உண்டாகியது அவள் மனதுள்.. உள்ளம் கொதிக்கத் தொடங்கியது.. இதன் சூத்திரதாரி என்று வேதாவை அவள் மனம் குற்றம் சாட்டியது..

இவையனைத்தும் அவள் பேரில் உள்ள அக்கறையினால் சொல்லப்படுகிறது என்பதை நினைக்க மறந்தாள்.. ஆனாலும் மனதின் ஒரு மூலையில் அவங்கவங்க இருக்குற இடத்தில் இருந்தாத்தான் மரியாதை என்று போகும் போது கதிர் சொல்லிவிட்டுப் போனது ஒரு சின்ன ஃப்ளாஷ் ஆக மின்னியது..

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே என்று, அவள் தன் முடிவில் உறுதியாய் தான் இருந்தாள்.

அவ்வளவுதான் இனி பல வருஷத்துச் சொந்தம், தோழமை அனைத்தும் பிரகாஷுடன் ஒரு முடிவுக்கு வந்தது என்ற அவசரத் தீர்மானத்திற்கும் வந்தாள்.

மெல்ல நிமிர்ந்தவள், "போதும் பிரகாஷ்.. போதும்.. எனக்கு என் உரிமை நிலமை எல்லாம் நன்றாகவே தெரிந்துவிட்டது.. இனி இந்த வீட்டில் இருக்க எனக்கு அவசியமும் இல்லை.. நீ என் ஃப்ரெண்ட், உறவுக்காரன் என்பதெல்லாம் இனி என் வாழ்க்கையில் மறக்க வேண்டிய பக்கங்கள்..”

“போதும்டா சாமி.. உங்க வீட்டுப் பஞ்சாயத்தில் என்னை நீங்களெல்லாம் பகடையாக்கி உருட்டி விளையாடியது.. என் அம்மா அப்பா இப்போது நீங்கள் அனைவரும் எல்லோரும் ஒரு விதத்தில் என்னை முதுகில் குத்தி விட்டீர்கள்.. இனி என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்..”

மாமா, இத்தனை நாள் என்னை ஆதரித்ததற்கு தாங்க்ஸ்.. அண்ட் குட் பை டு ஆல்.. சீ யு நெவர்..", என்று சொல்லிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு அந்த இரவு நேரத்தில் ராஜேந்திரன் தடுக்கத் தடுக்க ஒரு கால் டாக்சியை கூப்பிட்டு போயே விட்டாள்.

****************************************************************************

Jothiramar

Moderator
Staff member
இவ இன்னும் என்னனென்ன படப்போறாளோ? வெளியுலகத்துல தனித்து இருக்கும் போது தான் உறவுகளோட அருமை புரியும்
 
Chellam

Well-known member
சத்யா இன்னும் வளராத சின்னபிள்ளையாகவே தெரிகிறாள்.
 
Mohanapriya M

Ava nalathukagatan solrangunu purinjuka therila intha sathya ku ena ponno iva 🤦🏻🤦🏻🤦🏻
 
Top