கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 33

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 33

"வாம்மா.. எதுக்குத் தயங்கி நிற்கிறே?.. நீ வாக்கப்பட்ட வீடும்மா.. இது உனக்கு உரிமைப்பட்ட இடம்.. தைரியமா உள்ளே வாம்மா.. ஏலேய் பாண்டி.. பேத்தியோட பொட்டியை கொண்டு மேல வைய்யி.." கண்ணாத்தா குரல் கொடுத்தபடி உள்ளே நுழைய..

"வாம்மா சத்யா.. இது உன்னோடு வீடுடா.. வா வா.. முதல்ல குளிச்சி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ.." என்று பாசமாகச் சொன்ன சக்திவேலின் அன்பில் எந்தவித பொய்மையும் இல்லை.

"அண்ணி.. வந்திட்டீங்களா.. ஹப்பா இப்போதான் வீடு யூத்ஃபுல்லா இருக்கு.. இந்தப் பெரிசுகளோடு பழகிப் பழகி என் காலமெல்லாம் முடிஞ்சி நான் ஓல்டியா மாறிடுவேனோன்னு இருந்தேன்.. இப்போதான் எனக்கு நிம்மதியாச்சு.. வெல்கம் பேக்.." என்று சிரித்த வெற்றி..

"வாங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க?.. உங்க வேலையெல்லாம் முடிஞ்சிதா?..", என உற்சாகமாகவே சத்யாவை வரவேற்றான்.

"டேய் சின்னவனே.. நாங்க பெரிசுகளா?.. எங்களோடு பழகி இவருக்கு வயசாயிடுச்சாமா?.. எல்லாம் நேரம்டா.. உன் காதோர நரையைப் பாரு.. அப்படியே நல்லா கண்ணைத் திறந்து என் தலையைப் பாரு.. ஒத்தை முடி கூட இன்னும் நரைக்கலை.. இதுல என்னைய வயசனாவ ரேஞ்சுக்கு பேசுதே?.. அது எதுக்குடா உங்க அப்பனோட என்னைய சேர்க்கறே?.. உங்கப்பனுக்கு வேணா வயசாயிருக்கலாம்.. நானெல்லாம் எந்தக் காலத்திலும் யூத்துதான்.. இரு இரு.. உன்னையே தனியா கவனிச்சிக்கறேன்.."

"டேய்.. மவனே.. உனக்கு எதுக்குடா என் மேல இந்தக் காண்டு.. இப்படி என் மருமவ புள்ள முன்னாடி மானத்தை வாங்க வைச்சிட்டியே?.. ஆத்தா.. ஆனாலும் உனக்கே இது அதிகப்படின்னு தோணலை.. எல்லாம் என் நேரம்.. இதை நான் சொல்லணும்.."

"ஷ்.. அடங்குங்கடா.. அப்பனும்.. மகனும்.. சும்மா எதையோ பிணாத்திட்டு.. வந்த மருமவளுகு ஒருவாய் தண்ணியைக் கொடுக்கலை.. சும்மா கதை அடிச்சிட்டு.. நீ உள்ளே வாம்மா சத்யா.. போய் உடுப்பை மாத்திக்கோ.. உன் ரூமுக்கே நான் பலகாரத்தை அனுப்பி வைச்சிடுறேன்.."

அவர்களின் பாசத்திலும், பெருந்தன்மையிலும் வெட்கமடைந்த சத்யா தலையைக் குனிந்து கொண்டாள்..

"போம்மா.. உங்க ரூமுக்கு போ.. தயங்காதே.. நீ வைச்சிட்டு போன சாமான் எல்லாம் அப்படியே இருக்கு.. அய்யே.. என்ன நீ.. தயங்கித் தயங்கி நிக்கறே.. சரி சரி வா.. நானும் வாரேன்.." என்ற அப்பத்தா சத்யாவின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு கதிரின் அறைக்குள் போனார்.

அவள் தயக்கத்தின் காரணத்தை அறிந்திருந்த கண்ணாத்தாவோ உள்ளூர சிரித்தபடி.. "சத்யாம்மா.. நீ எதுக்கு இவ்வளவு தயங்கினேன்னு எனக்குப் புரியாமல் இல்லை.. நானும் உன் வயசை கடந்து வந்தவதான்.. என் பேரன் கதிர்.. அதான் உன் புருஷன் இருப்பானான்னு தானே யோசிச்சே?.. அவன் என்ன சொல்லுவான்னு தயங்கினியா?.."

தலையை மீண்டும் குனிந்து கொண்டாள் சத்யா.

"இங்க பாரு.. இதுல நீ தலை குனியற அளவுக்கு அப்படி என்னா நடந்து போச்சு.. புருஷன் பெண்டாட்டின்னா அவங்களுக்கு நடுவில ஆயிரம் இருக்கும்.. நானும், உங்க தாத்தனும் போடாத சண்டையா?.. இல்லை உங்கப்பாவும் அம்மாவும் பார்க்காத சண்டையா?.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இன்னிக்கு அடிச்சிக்கறதும், நாளைக்கு அணைச்சிக்கிறதும் இல்லற வாழ்க்கையில் சகஜம் தான் கண்ணு.. அதையெல்லாம் அப்படியே ஒதுக்கி தள்ளிடணும்..”

"உனக்கும், கதிருக்கும் நடுவில அப்படி என்ன நடந்திச்சின்னு நீ எதுக்குக் கிளம்பிப் போனையோ, அதைப் பத்தியெல்லாம் நாங்க இங்க கேட்க தயாரா இல்லை.. அது நீங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்க வேண்டியது.. இப்போ நீ இங்க வந்தாச்சு.. இனி அதை மட்டும் பாரு எங்களுக்கு..”

"இந்த நாலு மாசத்தில ஒரு நாள் கூடக் கதிர் உன்னைப் பத்தி எங்ககிட்ட ஒரு குறையும் சொல்லலை.. நீங்க இப்படித் தனித்தனியா இருப்பதற்கான காரணத்தையும் தானா சொன்னதில்லை..”

"அப்படியும் ஒரு நாள் நான் தான் தாங்கமுடியாமல் சின்னசிறுசுங்க எத்தனை நாளுக்குத் தனியா இருப்பதுன்னு கதிர் கிட்ட சத்தம் போட்டேன்.. உடனே போய் உன்னைய கூட்டிட்டு வந்திடலாம்னு சொன்னேன்.. என் தொல்லை தாங்காமல் உனக்கும் அவனுக்கும் சரிப்பட்டு வராதுன்னு சொன்னான்.. அவன் உனக்குப் பொருத்தமில்லைன்னு சொன்னான்..”

"படிச்ச பொண்ணை அது சம்மதம் கேட்காமல் பெரியவங்கலெல்லாம் முடிவு செய்து கட்டி வைச்சது தப்பென்னும், உன்னோடு இஷ்டத்துக்கு வாழட்டும்னு, உன் சந்தோஷம் தான் முக்கியம்னு சொல்லிட்டதாகச் சொல்லி எங்க வாயை அடைச்சிட்டான்..”

“உங்கிட்ட நியாயம் கேட்கப் போறேன்னு நான் கிளம்பின போது கூட.. அவள் வாழ்க்கையை அவளாகவே பாரத்துக்கத் தெரியும்னு எங்களை அடக்கி வைச்சிட்டான்.. நேத்திக்கு உங்க மாமா ராஜேந்திரன் விஷயத்தையெல்லாம் சொன்னதும் எனக்கு ஆடி போச்சு..”

“இந்தப் பொண்ணு படிக்காத வேதா இப்படி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு போயிருக்குன்னா.. அதே தப்பைத் தான் படிச்ச நீயும் செஞ்சிருக்கே.. என் பேரனோடு வாழப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு உங்க அம்மா வீட்டுல இருந்த நீ இப்படி அங்கிருந்து வெளியே போகலாமா?.. தப்பில்லையா?.. இரண்டு பேருமே இந்த விஷயத்தில் தப்புதான் பண்ணீயிருக்கீங்க..”

“சரி விடு.. ஆனது ஆயாச்சு.. திரும்பித் திரும்பி பேசி என்ன பிரயோஜணம் சொல்லு.. வேதாவை பார்த்துக்க இனி அவங்க குடும்பம் ஆச்சு.. அவங்க வீட்டு விஷயத்தையும் அந்தப் பெரிய மனுஷன் சரிபடுத்தி விடுவாரு..”

“ஆனால் உன்னைய பத்தி.. அவரு உங்க வீட்டுப் பொண்ணைக் கூட்டிட்டு போங்கன்னு சொன்னதும் எனக்கு உள்ளுக்குள்ள கோபம் வந்தாலும்.. அவர் சொன்னதில இருக்கிற நியாயம் புரிஞ்சுது.. அதுக்குப் பின்னால இருந்த அவரோடு ஆதங்கம் வெளிபட்டது.. அவர் உன் மேல வைச்ச பிரியமும் தெரிஞ்சது..”

“யாராய் இருந்தாலும்.. இருக்க வேண்டிய இடத்தில இருந்தாதான் மரியாதை ராசாத்தி.. அதை நீயே இத்தனை நாள்ல புரிஞ்சிட்டிருப்பே..”

“உனக்கு என் பேரனுக்கும் எதிர்பாராத திருமணம் முடிஞ்சி போச்சு.. சரி.. உனக்குப் பிடிக்கலை.. அதுவும் சரிதான்.. நீ நினைச்ச அளவுக்கு உன் எதிர்பார்ப்புக்கு அவன் இல்லைன்னு உனக்குள்ள ஆதங்கம்..”

“ஆனா.. என்ன பண்ண முடியும் சொல்லு.. ஆன கல்யாணம் ஆனது தானே.. நீ தான் அவன் பொஞ்சாதி.. அவன் தான் உன் புருஷன்.. இதைத்தானே இந்த உலகம் சொல்லும்.. அதை யாரால மாத்தமுடியும் சொல்லு.. இது உனக்கு ஆண்டவன் போட்ட முடிச்சும்மா.. அதைப் பிரிக்க முடியுமா?.. இல்லை மாத்தத்தான் முடியுமா?..”

“சரி.. அப்படியே உனக்கு அந்தப் பந்தம் பிடிக்கலைன்னாலும்.. நீ என்ன செய்திருக்கணும்.. இங்கேயே இருந்து போராடி இருக்கணும்.. ஆனால் போராடுவதற்கு முன்னால என்னம்மா செய்திருக்கணும்.. நீ தான் சொல்லேன்..”

இப்பொழுது கண்ணாத்தா சத்யாவை கேள்வியாகப் பார்த்தார்.. நேற்றிலிருந்து நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் மனதெல்லாம் காயமடைந்து இருந்தவளுக்கு இப்பொழுது அப்பத்தா கேள்வி மேல் கேள்வியாய் கேட்கவும் என்ன பதில் சொல்லுவதென்றே உண்மையில் தெரியவில்லை

“எனக்குத் தெரியலை அப்பத்தா.. நிஜமாகவே நான் என்ன செய்திருக்கணும்.. என் வாழ்க்கையை நான் என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு எனக்கு ஒண்ணும் புரியலை..” என்றாள் பாவமாக.

அவள் முகமெல்லாம் சோர்ந்து இருப்பதைக் கண்ட கண்ணாத்தாவோ.. இதைப் பற்றி மேலும் பேசி குழப்ப வேண்டாம் என்று தீர்மானித்தவர்..

“சரி நடந்தது நடந்து போச்சு.. விட்டுடு.. ஆனால் என்ன சொல்ல வரேன்னு மட்டும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு..”

“எப்பவுமே நமக்குப் பிடிச்சதெல்லாம் எல்லோருக்கும் கிடைச்சிடாது.. அப்படிக் கிடைக்கலைங்கறத்துக்காக கிடைக்காததைப் பத்தி யோசிச்சு நம்ம வாழ்க்கையை வீணாக்கி முட்டாளாவதற்குப் பதில், நமக்குக் கிடைச்சதை எப்படித் தக்க வைச்சிக்கணும் வாழறதுதான் புத்திசாலித்தனம்..”

“நீயே யோசி.. நீ புத்திசாலியா இருக்கப் போறீயா இல்லை.. முட்டாளா கோட்டை விடப் போறீயான்னு..”

“உனக்கென்ன குறைன்னாலும் அதை எப்படி உனக்கு ஏத்தமாறி நிறையா மாத்திறது உன்னோடு கையில தான் இருக்கு.. உன் கையில கிடைச்சிருக்கிற பொருளை உனக்குப் பிடிச்சதா மாத்து..”

“என்ன புரியலையா?.. உன் புருஷனை உனக்கு ஏத்தா மாதிரி மாத்திடு.. முயற்சியே எடுக்காமல் ஒதுங்கிப் போவதில் என்ன பலன் சொல்லு.. முதல்ல வாழ்ந்து பாரு.. எப்படிச் சரிபடுத்தலாம் என்று யோசி.. அப்புறம் பிடிக்கலையா அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்ன்னு பொறவு முடிவை எடு..”

“அதை விட்டுட்டு.. கொஞ்சம் கூட அதுக்கு முயற்சி எடுக்காமல் நீ அவனை விட்டுட்டுப் போனது தப்பும்மா.. எங்களுக்கு உன் மேல கோபம் இருக்கு.. எடுத்தேன், கவிழ்த்தேன்னு எப்படி நீ அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்தேன்னு..”

“ஆனாலும்.. உன் பக்கத்து நியாயத்தையும் என் பேரன் எங்களுக்குச் சொன்னான்..அப்போ பெரியவங்கன்னு நாங்கலெல்லாம் எதுக்கு இருக்கோம்.. இப்படி நீங்க வெட்டிட்டு போவதைப் பார்ப்பதற்கா?..”

“சரி போனது போகட்டும்.. எதுவா இருந்தாலும் நாலையும், யோசிச்சு இனியாவது ரெண்டு பேரும் நல்ல முடிவெடுங்க…. உனக்குப் பலகாரத்தை அனுப்பி வைக்கிறேன்.. சாப்பிட்டு ரெஸ்ட் எடு..” என்றவர் அதற்கு மேல் அவள் யோசிக்கட்டும், இன்னும் பேசி குழப்ப வேண்டாம் என அங்கிருந்து சென்றார் கண்ணாத்தா.

ஏற்கனவே.. கதிரின் அறையை ஒட்டிய மற்றொரு அறையில் தங்கியிருந்த சத்யாவிற்கு மீண்டும் அங்கே தங்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றாலும், எப்படிக் கதிரை நேரடியாகச் சந்திப்பது என்ற தயக்கம் இருந்தது.

தான் திரும்பி வந்ததை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் அவமானமாகவே இருந்தது.

‘உன்னைப் பிடிக்கவில்லை.. உன் உருவம் பொருத்தமில்லை.. உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை.. உனக்கும், எனக்கும் சரிபடாது.. என்றெல்லாம் சொல்லிவிட்டு.. இப்பொழுது மீண்டும் அவன் வீட்டுக்கே அவன் அறைக்குள்..’ நினைக்கவே என்னவோ மாதிரி இருந்தது.

விஷயம் அனைத்தும் அறிந்திருந்தவன் அவன்.. அவனை ஒதுக்கித் தள்ளி விட்டு.. தன் பெற்றோர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு.. அதுவும் இத்தனை நாட்களாக.. பிரகாஷின் வீட்டில் நாலு மாத காலமாக இருந்து கொண்டு.. என்ன நினைப்பான் கதிர்.

அவன் இல்லையென்றால் இவனா?.. நினைக்கவே தன்னைப் பற்றியே அருவெறுப்பாக இருக்க.. அதை ஒதுக்கித் தள்ள நினைக்க.. அதைப் பற்றி எண்ணவே கசந்தது.

அதற்குள் அவளுக்கு இரவு பலகாரத்தை எடுத்து வந்த எழிலரசியுடன் பொதுவாக நலம் விசாரித்து விட்டு.. குளித்து வந்து உணவை உண்டவள் தன் அறைக் கதவை மூடி விட்டு கட்டிலின் படுத்தவளுக்கு ஏனோ மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.. வீடு வந்த நிம்மதி.

அவள் மனமோ நேற்று நடந்ததை எண்ணி அசை போட்டது..

கால் டாக்சிக்கு சொல்லிவிட்டு தன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த சத்யாவை.. டாக்சியில் ஏற எத்தணிக்க..

ராஜேந்திரனோ அதைக் கட் பண்ணி அனுப்பி விட்டார்.

“சத்யா.. போதும்.. எதையும் எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று நடப்பதே உன்னோடு வேலையா போச்சு.. முதல்ல உள்ளே போ.. இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ பாட்டுக்கு உன் பெட்டியை எடுத்திட்டு கிளம்பிட்டே.. இதை நான் சுத்தமா உங்கிட்ட எதிர்பார்க்கலை..” என்றார் கோபமாகச் சத்தமிட்டார் ராஜேந்திரன்.

“மாமா.. ப்ளீஸ்.. இப்போ எதுக்குக் காரை அனுப்பிச்சீங்க.. எனக்கு இதுக்கு மேல இங்கே இருப்பது சரிபடாது.. நான் தான் என் வழியைப் பார்த்துக்கறேன்னு தானே சொன்னேன்.. என்னை எதுக்குத் தடுக்கிறீங்க?.. இனி மேல் எனக்கு யாரும் வேணாம்..” சத்யாவோ பிடிவாதம் பிடிக்க..

“சத்யா.. முதல்ல உள்ளே போ.. பிரகாஷ்.. அவ பெட்டியை அவ ரூம்ல வை..” என்றவர்..

“இங்க பாரு சத்யா.. இதே தப்பைத்தான் நீ அன்னிக்கும் செஞ்சிருக்கே.. கதிரை பிடிக்கலைன்னு சொல்லிட்டு உங்க அம்மா வீட்டிக்கு வந்தே.. உங்கம்மாப்பா உன்னை அதட்டிக் கேட்டவுடன் பொறுக்காமல் அங்கிருந்து கிளம்பத் துணிஞ்சிட்டே.. பிரகாஷ் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தான்.. உன்னுடைய தாய் மாமானா நானும் உனக்காக இப்போது பொறுப்பை ஏற்றிருக்கும் போது உன்னை எப்படி வெளியே அனுப்ப முடியும்?..”

“ஒண்ணு நீ இங்கே இரு.. உங்கப்பாம்மா இன்னும் ஒரு மாசத்தில் வந்து விடுவார்கள்.. நான் அவர்களிடம் பேசுகிறேன்.. இல்லை உனக்கு இங்கே இருப்பது பிடிக்கலைன்னா.. உன் புருஷன் வீட்டுக்குப் போ.. நான் ஏற்பாடு பண்ணுகிறேன்.. அதை விட்டுட்டு இப்படி நடு ராத்திரியில் வீட்டை விட்டுப் போக நீ என்ன யாருமில்லாதவளா?.. அப்படி நீ போகிறேன் என்றாலும் நான் பார்த்திட்டு சும்மா இருப்பேனா?..”

“முதல்ல உன் ரூமுக்கு போ.. எதுவாயிருந்தாலும் காலையில் பேசிக்கலாம்..” என ராஜேந்திரன் கோபத்தில் கர்ஜித்தார்.

அத்தனை நாட்களாக அமைதியாக நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருப்பவர் இன்று சத்யாவை கண்டிக்கத் துவங்கியவுடன் அவளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இப்பொழுது திகைத்தாள்.

ருக்குவும் தத்தி தத்தி பின்னே வந்து, “சத்யா.. ப்ளீஸ்.. உள்ளே போம்மா.. எதோ உன் நல்லதுக்குச் சொன்னோம்.. உனக்குப் பிடிக்கலைன்னா இனிமேல் நாங்க யாரும் பேச மாட்டோம்.. ஒரு வாட்டி வீட்டுக்கு வாழ வந்த பெண் வெளியே போனதே போதும்.. நான் ஏதோ இரண்டு வார்த்தை கோபத்தில சொன்னா உடனே நீ போய் விடுவியா?..”

“உன் அத்தைதானே.. நீ எங்க பொறுப்பில் இருக்கேம்மா.. நான் உன்னை அப்படி என்ன சொல்லிட்டேன்?.. டேய் பிரகாஷ்.. என்னடா பார்திட்டு நிக்கறே?.. எடுத்து சொல்லுடா?..” ருக்மணியும் சத்யா எடுத்த முடிவில் பதறித்தான் போய் இருந்தார்.

என்னதான் இருந்தாலும் சத்யா அவளது செல்ல மருமகள் ஆயிற்றே?..

“அம்மா.. சத்யாவின் வாழ்க்கை அவள் இஷ்டம்.. அவள் எங்கே தங்குவது என்பது அவளே தீர்மானிக்கட்டும்.. நான் இதில் தலையிட விரும்பவில்லை.. ஆனால் எதுவாக இருந்தாலும் காலையில் அவளே முடிவெடுக்கட்டும்..” என்றவன் வேறு எதுவும் பேசாமல் அவள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் வைத்து விட்டு தன்னறைக்குப் போய் விட்டான்..

அவனைப் பொருத்தவரை சத்யா முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்று நினைத்து ஒதுங்கிச் சென்றான்.

பிரகாஷ் அங்கிருந்து நகர்ந்தவுடனே வேதாவும் எதுவும் பேசாமல் தன்னறைக்குள் சென்று விட்டாள்.

பிரகாஷின் பதிலில் அடிபட்ட சத்யாவோ, “மாமா.. அத்தை.. உங்களுடைய கரிசனத்துக்குத் தாங்கஸ்.. பட்.. நான் இங்கிருந்து போக முடிவு பண்ணியது பண்ணியதுதான்.. உங்க விருப்படி இன்று இரவு இங்கே தங்குகிறேன்.. நாளை காலையில் நான் லேடீஸ் ஹாஸ்டெலுக்கு போகத் தீர்மாணித்து விட்டேன்.. எப்படியும் எனக்கு வேலை இருக்கிறது.. என்னால் சமாளிக்க முடியும்..”

“ப்ளீஸ் தப்பாக நினைத்துக் கொண்டு என்னைத் தடுக்காதீங்க.. எனக்குத் தனிமை வேண்டும்.. என்னைப் புரிந்து கொள்ளுங்கள்..” என்றவள் அடுத்த நொடி வேகமாகத் தன்னறைக்குள்.. தனக்கு இத்தனை நாட்களாக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.

“ராஜ்.. என்ன இது இந்தப் பொண்ணு புரிஞ்சிக்க மாட்டேங்கிறாளே?.. அது எப்படித் தனியா அனுப்ப முடியும்?..”

“ஷ்.. விடு ருக்கு.. நேரம் வந்தாச்சு.. நான் பார்த்து கொள்கிறேன்..” என்ற ராஜேந்திரன் ருக்மணியின் வீல் சேரை நகர்த்திக் கொண்டு தங்களறைக்குள் சென்றார்.

எதுக்கு நேரம் வந்தது என்று குழப்பத்துடன் ருக்மணி இருக்க.. காலையில் அதன் அர்த்தம் புரிந்தது.. காலை எட்டு மணியளவில் அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த காரை கண்டு.

கதிரின் தந்தை சக்திவேலும், அப்பத்தா கண்ணாத்தாவும் இறங்கி வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர்.

“ராஜேந்திரா, ருக்மணி சௌக்கியமா?.. எங்கே என் பேரன் பிரகாஷ்?.. வேதா குட்டி எப்படி இருக்கே?.. ருக்கு.. எங்க என் பேத்தி சத்யாவை காணம்.. சத்யா.. சத்யா..” எனக் குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார் அப்பத்தா.

திகைத்துப் போய் நின்றிருந்தவர்களைக் கண்டு கொள்ளாமல், “என்ன அப்பு.. வீட்டுக்கு வந்திருக்கேன்.. வான்னு கூடக் கூப்பிட மாட்டியோ?.. வேதா குட்டி அப்பத்தாக்குச் சொம்பு தண்ணியைக் கொண்டா போ.. கருக்கல்ல புறப்பட்டது நா வரட்டுது..”

முதலில் சுதாரித்துக் கொண்ட வேதா, “வாங்க அப்பத்தா.. மாமா.. நல்லாயிருக்கீங்களா?.. வாங்க.. உட்காருங்க.. இதோ தண்ணி எடுத்து வாரேன்.. அப்படியே காலை பலகாரமும் எடுத்து வைக்கிறேன்.. இருந்து சாப்பிட்டுட்டு தங்கிட்டு போகணும்..”

"அதுக்கென்ன ஆத்தா.. செஞ்சிட்டா போச்சு..” எனச் சிரிக்க..

“வாங்க அப்பத்தா.. வாங்கண்ணா.. எல்லாரும் நலம்தானே?..” எனச் சுதாரித்துக் கொண்டு ருக்மணியும் விசாரிக்க அவளுடன் ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.. வேதா தடபுடலாகக் காலை உணவுக்கு ஏற்பாடு செய்ய.. பிரகாஷும் கீழே வந்து அவர்கள் நலம் விசாரித்து அவர்களுடன் உணவருந்த.. எல்லாம் வேகமாக நடந்தது..

“பேத்தியை கண்ணுலேயே காணலையே?.. இன்னும் தூங்குதா?..” எனக் கண்ணாத்தா கேட்டுக் கொண்டிருக்க.. தன் பெட்டிகளுடன் இறங்கி வந்தாள் சத்யா.

“அட.. இதோ பேத்தியே வந்தாச்சு.. பாரு.. நாங்க வரப் போறோம்ன்னு ரெடியா பொட்டி படுக்கையோடு தயாரா கீழேயே வந்து விட்டது..” என்ற கண்ணாத்தா.. தன் வயதையும் பொருட்படுத்தாது ஓடிப் போய் அவளைச் சேர்த்தணைத்துக் கொண்டார்.

“என் தங்கம்.. என்னாத்தா.. இம்புட்டு இளைச்சி போயிட்டே.. என்ன வேலையோ போ.. இப்படிச் சோறு தண்ணியில்லாமே.. உடம்பை கெட்டுத்திட்டு.. போதும் போதும்.. இனி உன்னை இங்க விட்டுவிட்டு போகலை.. கிளம்பும்மா.. நம்ம வீட்டுக்குப் போகலாம்..”

லேடீஸ் ஹாஸ்டல் போவதற்காகத் தயாராகிக் கீழே வந்த சத்யாவுக்கோ அங்கே அப்பத்தாவையும், கதிரின் தந்தையும் கண்டு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர்களுடன் ஒருவேளை கதிரும் வந்திருப்பானோவென்று தன்னையறியாமல் கண்களைச் சுழற்றி பார்வையிட..

“என்ன மருமகளே?.. எப்படிம்மா இருக்கே?.. கதிரால் வர முடியவில்லைம்மா.. அதான் நாங்க வந்திருக்கோம்.. ரொம்ப இளைச்சி தெரியறே?.. முதல்ல சாப்பிடும்மா.. அப்புறம் எல்லாருக்கும் சொல்லிட்டுக் கிளம்பலாம்.. இப்போ கிளம்பினாத்தான் ராவுக்குள்ள ஊருக்குப் போக முடியும்..”

அவள் பார்வையை அறிந்த சக்திவேல் அவள் நலம் விசாரித்தபடி அவள் கேட்காத கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர்களைக் கண்டு தன்னையறியாமல் கதிரை தேடிய சத்யாவிற்கு அப்பொழுதுதான் நிலமை புரிந்தது.. இப்பொழுது எதற்காக அவனைத் தேடினோம் எனத் தன் மடத்தனத்தை நொந்தபடி,

“அப்பத்தா.. மாமா நீங்கள் சௌக்கியமா?.. நீங்க சாப்பிட்டாச்சா?.. எனக்கு டிபன் வேண்டாம்..” என உளறியவள்..

“எங்கே போகணும் அப்பத்தா.. நான்.. ஹாஸ்ட்டல்..” மேலும் உளர..

“ஷ்.. பேத்தி.. நீ எதுவும் பேச வேண்டாம்.. முதல்ல சாப்பிடு.. நம்ம ஊருக்கு போறோம்.. நம்ம வீட்டுக்கு நீ கிளம்பி வாரே?.. இந்த அப்பத்தாவின் பேச்சை கொஞ்சமாவது மதிச்சேன்னா.. நீ எங்களுடன் இப்ப கிளம்பு.. எல்லாத்தையும் அப்புறம் பேசலாம்.. நேரமாயிட்டு இருக்கு பாரு..”

“வேதா குட்டி.. உன் தங்கச்சிக்கு டிபனை எடுத்து வை..” என

அடுத்துக் கொஞ்சம் நேரத்தில் வேதாவின் கையால் செய்த காலை உணவைப் பேசாமல் உண்டுவிட்டு.. மற்றவர்களிடம் தன் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு.. பாசத்துடன் தலையாட்டி விடை கொடுத்த மாமாவையும், அத்தையையும், மௌனமாக நின்றிருந்த பிரகாஷையும், போய் விட்டு வா சத்யா என்று எப்பொழுதும் போல அமைதியாகப் பேசிய வேதாவையும் பார்த்தபடி அப்பத்தாவுடன் காரில் ஏறி அமர்ந்தாள் சத்யா.

இப்பொழுது இதையெல்லாம் நினைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தவளுக்கு எதற்காகத் தான் அப்பத்தா கூப்பிட்டவுடன் அவருடன் கிளம்பி வந்தோம் என்று இன்னும் புரியவில்லை..

காலையில் ஏதாவது லேடீஸ் ஹாஸ்டலுக்குச் சென்று தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தவள்.. அவர்களைக் கண்டவுடன் ஏன் தன் முடிவை மாற்றிக் கொண்டோம் என்று யோசித்தாள்.

எப்படி அவ்வளவு சீக்கிரம் அங்கே அவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள் என்பதை அறியாத முட்டாளில்லையே.. மாமா ராஜேந்திரன் அழைத்திருப்பார் எனத் தெரிந்தாலும், அவர்கள் வந்தவுடன் எந்தத் தைரியத்தில் அவர்களுடன் வர ஒப்புக் கொண்டாளோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம்..

இதில் கதிர் அவர்களுடன் வரவில்லையே என்ற பைத்தியக்காரத்தனமான எதிர்பார்ப்பு வேறு..

அவள் மனம் எதை எதிர்பார்க்கிறது என்பது இப்பொழுது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது..

தன் இடம் வந்து சேர்ந்த இனம் புரியா மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தன்னையறியாமல் உறங்கத் தொடங்கினாள்.

வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கியவள் சற்று தாமதமாகவே எழுந்தாள்.. காலை மணி ஒன்பது என்பதைப் பார்த்து விட்டு.. அய்யோ அப்பத்தா என்ன நினைப்பார்களோ எனத் தோன்றினாலும்..

இத்தனை நாட்களாக வேகவேகமாக எழுந்து அந்த வீட்டில் சமையல்கட்டில் திண்டாடி விட்டு அலுவலகத்திற்கும் பறந்தோடியது நினைவில் வர, அதில் மனம் சுணங்கினாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டுக் குளித்துத் தாயாராகித் தன்னறையில் இருந்து வெளியே வந்தாள்.

ஒருவேளை கதிர் தன்னறைக்குள் இருப்பானோ.. இந்த நேரத்தில் எப்படியும் தன்னுடைய காலை வயல் வெளிக்குச் சென்று சுத்தி விட்டு வரும் பணியை முடித்து விட்டு வந்திருப்பானே..

பராவாயில்லை அவன் செயல்கள் எல்லாம் நினைவில் இருக்கிறதே.. இதழ்களில் தவழ்ந்த புன்னகையுடன் ஒரு வித எதிர்பார்ப்பும், அவனை இத்தனை நாட்கள் கழித்துச் சந்திப்பதில் சிறுது படபடப்பாக வந்தவளுக்கு அங்கே காத்திருந்ததோ ஏமாற்றமே.. கதிர் அவள் கண்ணிலேயே படவில்லை.

அதற்குள் கிளம்பி போய் விட்டானா…..

“வாம்மா சத்யா.. நல்லா தூங்கினியா?.. பிரயாண அலுப்பெல்லாம் போச்சா?.. வா..உனக்காகத்தான் காத்திருக்கோம்..”

ஒருவேளை இங்கே இருப்பானா கதிர் எனச் சாப்பாட்டு அறை பக்கம் பார்த்தவளுக்கு அங்கேயும் கதிரை காணாமல் ஏமாற்றமாகவே இருந்தது.. சட்டெனத் தன் ஏமாற்றத்தை சமாளித்துக் கொண்டு.. இனி வாழ்க்கை எப்படிக் கொண்டு போகிறதோ அதன் பாதையில் நடப்போம்.. எந்தவித எதிர்பார்ப்புக்களோ.. இல்லை ஏமாற்றங்களோ வேண்டாம் என முடிவெடுத்தாள்.

“குட்மார்னிங்க்.. நல்லா தூங்கினேன் அப்பத்தா.. அதான் நேரம் போனதே தெரியலையா?.. சாரி ரொம்ப நேரமாச்சோ..”

“அதுக்கென்னம்மா.. உன்னோடு வீடு.. உன் இஷ்டப்படி இரு.. நிம்மதியான தூக்கம் இல்லாமல் எத்தனை பேர் கஷ்டப் படராங்க தெரியுமா?.. தூக்கம் வந்தா தூங்கு.. இதுக்கெல்லாம் சங்கோஜப் படாதே..” என்று அவளுக்கு ஆறுதலாகச் சொன்ன கண்ணாத்தா..

“வாம்மா.. நீ சாப்பிட்டுட்டு உங்க மாமாவோடு கிளம்பு.. உனக்காகத்தான் சக்தி காத்திட்டு இருக்கான்.. வெற்றியும் இருக்கான் பாரு..”

எதுவும் பேசாமல் தலையாட்டிய சத்யா உணவருந்தி விட்டு அவர்களுடன் கிளம்பினாள்.. தவறாமல் அப்பத்தாவிடம் விடை பெற்று கொண்டாள்.

அது என்னவோ எங்கே போக வேண்டும் என்று அவளுக்குக் கேட்க தோன்றவில்லை.. இனி தன் வாழ்க்கை எப்படிப் போகிறதோ அப்படிச் செல்லட்டும் என்று சற்று முன் முடிவு செய்திருந்தவள் அதன் படி நடக்கத் தீர்மானித்தாள்.

கார் பிரயாணம் முழுவதும் தந்தையும், மகனும் பேசிக் கொண்டே வர.. சத்யாவோ.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அரை மணி நேரப் பயணத்தின் முடிவில் சத்யாவை அந்தக் கல்லூரியின் கான்ஃரென்ஸ் ரூமில் நிறுத்தி வைக்கப் பட்டவள்..

“இந்தக் கல்லூரியின் புதிய பொறுப்பாளராக.. அடிமினிஸ்ட்ரேட்டராக மிஸர்ஸ்.. சத்யா கதிர்வேலை நியமிப்பதில் நான் பெருமை அடைகிறேன்..” என்று சக்திவேல் அறிமுகப் படுத்தியதில் திகைப்படைந்த சத்யா.. அடுத்து சில நொடிகளில் கையெழுத்திட்டுப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அந்தக் கல்லூரியின் முக்கிய அங்கத்தினர் ஆனாள்.

******************************************************************

Chellam

Well-known member
அனுபவப் பட்ட பெரியவர்கள் இருந்ததால் சத்யா செய்தது கவனிக்கப்படாமல் தானாகவே போய் விட்டது.
 
Mohanapriya M

Paati always ultimate decision maker tan 😍😍😍 epudiyo sathya sariyana ok tan
 
Top