அத்தியாயம் 34
அடுத்து வந்த ஒரு மாத காலமும் ரெக்கை கட்டாத குறையாய் பறந்தது.. தினமும் காலையில் கிளம்பி கல்லூரிக்கு சத்யா போனால் இரவாகிவிடும்.. அவ்வளவு வேலைகள் அங்குக் காத்திருந்தன.
அந்த காலேஜின் உரிமையாளரின் மனைவி என்ற அந்தஸ்தும் இப்போது புதிதாக கிடைத்த அட்மினிஸ்டிரேட்டர் என்ற அங்கீகாரமும் அவளுக்கு நிறையவே உதவின..
என்ன தான் கதிரைப் பிடிக்காமல் இருந்தாலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலும் சரி காலேஜிலும் சரி அவன் சுவடே காணவில்லை.. யாரையும் கேட்க முடியாத ஒரு நிலை அவளுக்கு..
'அதான் உனக்கு அவனைப் பிடிக்கவில்லை வெட்டி விடறேன்னு சொல்லிட்டே.. அப்புறம் அவன் என்ன பண்ணா உனக்கென்ன என்று யாராவது கேட்டுவிட்டால்.. முகத்தை எங்கே கொண்டு போய் ஒளித்து வைத்துக் கொள்ள முடியும்', என்று நினைத்து வாயை மூடிக் கொண்டாள்..
வீட்டிலும் அவளை ஒரு வேலையையும் செய்ய விடுவதில்லை ஆச்சி.. போதாதற்கு சக்தி வேல் வேறு..
“எல்லோருக்கும் எல்லாமே வரணும்கிற கட்டாயம் எதுவுமில்லை கண்ணு. நீ உனக்கு எது பிடிக்கிதோ அதைச் செய்.. எங்களுக்காகன்னு.. எதையும் மெனக்கெட வேணாம்.. நம்ம வீட்டிலே எல்லத்துக்கும் ஆள் இருக்கு.. இதெல்லாம் ஒரு விஷயமா.. மனசுலே விருப்பம் இருந்தாக்கா சித்திரமும் கைப்பழக்கம் தானே..", என்று நாகரீகமாய் சொல்லிவிட்டார்.
அதற்கு மேல் சத்யாவும் இதை எதையும் மனதில் எடுத்துக் கொள்ளவில்லை..
அவளுக்கு மனம் முழுக்க புண்ணாகித்தான் போயிருந்தது.. அது நாள் வரை பிரகாஷ் வீட்டின் செல்ல மருமகளாய், இருந்தவளை ஒரே நொடியில் நீ வெறும் அத்தைப் பெண் என்று அவன் தூக்கி எறிந்ததே தாங்க முடியாமல் போனது.. போதாதற்கு.. கதிர் நல்லவர் என்ற சர்டிஃபிகேட் வேறு..
பாவம் அவளுக்குச் சிறு வயது முதலே பிரகாஷ் மற்றும் மாமா குடும்பத்தை தன் குடும்பமாகவே எண்ணியதால் இயல்பாய் வந்த உரிமை பாராட்டும் பொசசிவ் குணம் அவளை அறியாமல் வெளிப்பட்டு விட்டது அந்தத் தருணத்தில்..
அதை அவளும் உணர்ந்ததால் அந்த அதிர்ச்சி வேறு அவளுக்கு.. 'நானா?.. எதற்கு நான் அப்படி உரிமை பாராட்டினேன்?..அதனால் என்ன சாதித்துவிட நான் நினைத்தேன்?.. என்ற சுய பரிசோதனை வேறு நேரங்கெட்ட நேரத்தில் வந்து தொலைத்தது அவளுக்கு..
அனைத்தின் முடிவிலும் தன் பிரச்சனைக்களுக்காக ஒரே விடையாக, கதிர் விஸ்வரூபமெடுப்பதைத் தான் அவளால் தாங்கவே முடியவில்லை.. அவளை அறியாமல் அவள் மனதுள் புகுந்தவன், ஓசைப்படாமல் அவள் எண்ணங்களையும் செயலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டிருந்தான்..
அதனால் தானோ என்னவோ பிரகாஷிடம் கதிரின் விட்டுக் கொடுத்து அணைத்துச் செல்லும் குணத்தையும், அவளை எப்போதும் எதற்கும் கைவிடாத பண்பையும் எதிர்பார்த்தாள் போலும்.. முடிவுதான் கடைசியில் அவள் எதிர்பாரா விதமாய் அமைந்துவிட்டது.
அதிலும் இப்போது அனைவரும் அந்த வீட்டில் தன்னை எப்போதும் தலையின் மேல் வைத்துக் கொண்டாடியதையே அனுபவித்தவளுக்கு அவள் சட்டென்று தங்கள் வீட்டின் மருமகளுக்கு சப்போர்ட் செய்து இவளாய் தூக்கி எறியா குறையாய் உதாசீனப்படுத்தியது அவளை ரொம்பவே பாதித்து விட்டது..
இது தான் போலும் விருந்தும் மருந்தும் மூணு நாள் என்பது.. தான் தான் அளவு மீறி உரிமை எடுத்துக் கொண்டுவிட்டோமோ என்று அவள் மனம் அவளை தட்டிக் கேட்கவும் செய்தது..
இயல்பில் சத்யாவும் ஒன்றும் கெட்டவள் இல்லையே.. ஏதோ கொஞ்சம் பிடிவாதம் அதிக செல்லம் கொடுத்ததினால் எல்லாம் தனக்கே என்கிற உரிமை பாராட்டும் குணம் இயல்பாய் அமைந்தது..
இவர்கள் அனைவரும் தன் மனிதர்கள்.. அவர்களுக்குத் தான் தான் எல்லாமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு.
அந்தக் குணம் இப்போது ஆட்டம் கண்டுவிட்டது.. எதற்கும் ஒரு அடித்தளம் இருக்க வேண்டாமா?.. அந்த வீட்டில் தனக்கு யார் மேல் பிடிப்பு இருக்க வேண்டுமோ அவனே நமக்கில்லை என்றானவுடன். நான் தானே அவனை மறந்து தன் பாதையை வேறு விதமாக அமைத்துக் கொண்டிருக்கவேண்டும்..
அப்படியே அமைந்த பாதையில் பயணிக்காமல் வந்த வழியே திரும்புவேன் என்று பிடிவாதம் பிடிப்பது மூடத்தனம்.. என்று அவளுக்குச் சற்று தாமதமாய் இப்போது புரிய ஆரம்பித்தது..
அவள் பெற்றோரும் இதைத்தானே படித்து படித்துச் சொன்னார்கள் என்று இப்போது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து வாட்டி வதைத்தது..
அவள் தாயோ தந்தையோ அன்றைக்குப் பிறகு ஒரு ஃபோன் கால் கூட அவளுக்குச் செய்யாதிருந்ததே அவர்கள் எந்த அளவுக்கு வருத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவளுக்குத் தெளிவாக விளக்கியது.
அன்றைக்கும் அப்படித்தான் ஏதோ எண்ணக் கலவையில் கல்லூரியை அடைந்தவள்..அங்கே ஒரு மரத்தின் கீழ் அங்கே பணி புரியும் ஒரு ஆசிரியை சுஜாதா கண்கள் கலங்க நின்று யாருடனோ தர்க்கம் செய்தபடி நின்றிருந்ததைக் கண்டாள்.
கூட யார் அது என்று பார்த்தவளுக்கு அடையாளம் தெரியவில்லை.. சரிதான் ஏதாவது லவ் அஃபயர் போலே என்று நினைத்தபடி மேலே வேறு புறமாய் நடக்கத் தொடங்கினாள்..
சிறிது நேரம் கழித்து மெல்ல அதே பக்கம் போய்ப் பார்த்தால் அந்த ஆசிரியை அங்கிருந்து கேண்டீன் பக்கம் விரைந்து செல்வதைப் பார்த்தாள்..
அங்கே அவர் ஒரு மேஜையில் தலையில் கை வைத்தபடி ஏதோ டென்ஷனாய் அமர்ந்திருப்பதையும் பார்த்தாள்..
சரி ஏதோ குடும்பத் தகராறு போல என்று நினைத்தபடி வெளியே வேறு பக்கமாய் தனிப்பட்ட இடத்தில் ரவுண்ட்ஸ் வந்தவளின் கவனத்தை ஒரு குரல் கலைத்தது.
சுஜாதாவுடன் நின்றிருந்த அந்த ஆள் வேறு ஒருவனிடம் ஏதோ சீரியசாய் பேசிக் கொண்டு இருந்தான்.. அது ஒரு லேப் பகுதியின் ஸ்டோரேஜ் இடம் என்பதால் கல்லூரியின் லேப் சம்பந்தப்பட்ட பொருட்களை அங்கே தனியாக பாதுகாத்து வந்தனர்.
பெரிய குடவுன் மாதிரி தனியாய் நின்றிருந்தது அந்த இடம்.. எப்போதும் அதில் பூட்டு போட்டே வைத்திருப்பார்கள்.. மாணவர்கள் அங்கே அனுமதியின்றி செல்ல முடியாது. இவர்கள் எப்படி இங்கே..
‘எங்கே போனான் காவலாளி?’ என்று யோசித்தபடி சற்று சுவர் புறம் மறைந்து நின்று கவனித்தாள் சத்யா.
"டேய் கிரி.. அவளுக்கு இன்னிக்கு ஃபைனல் வார்னிங்க் குடுத்துட்டேன்.. இனி வேலைக்காவாது.. என் பேகிரவுண்ட் தெரிஞ்சும் முடியாதுன்னிட்டா.. எவ்வளவோ பேரை மடக்கியிருப்பேன்.. இவ எனக்கு ஜுஜுபி.. மார்க் பண்ணியாச்சு.. இனி.. மேட்டரை ஃபினிஷ் செஞ்சிட வேண்டியதுதான்.."
"சுதாகர்.. என்னவோடா பார்த்து நடந்துக்கோ.. இப்படித்தான் அந்த ராதாவை தூக்கினே.. அப்புறம் என்ன ஆனான்னு கூட தெரியாது.. காலேஜுக்கு வந்ததுக்கு ஆதாரமே இல்லாம செஞ்சோம்.. ஆனாலும் கூட நீயே விளையாடிட்டு என்னைக் கழட்டி விட்டே பார்த்தியா?.. அது தாண்டா.. எனக்கு பிடிக்கலை.. அப்ப அப்ப மத்தவங்களையும் கவனிக்கணும் இல்லை?..", என்று விகாரமாய் கேட்டான் அந்த கிரி.
"அடங்குடா.. மொதல்லே நான் பிராகெட் போட்டு மடக்குறேன் அப்புறம் மத்தவங்கல்லாம்.. ரிஸ்க்கு எனக்குத்தானே.. அந்த ராதா வெளியே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம ஊரை விட்டே ஓடிட்டா.. அதைவிடு இன்னும் ஆறே மாசம் அப்புறம் இந்த காலேஜுக்கு குட்பை?"
"அப்படியாவது ரிஸ்க் எடுக்கணுமா மச்சி.. நமக்குத்தான் திகட்ட திகட்ட நிறைய குலோப்ஜாமூன்கள் இருக்குதே.. அதிலே ஒண்ணைக் கொண்டாடலாமே..” என்று கிரி சொன்னவுடன்..
ஹஹா என்று சிரித்தவன், "அடங்காத மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுறதிலே தாண்டா த்ரில்லே.. சரி வா போகலாம்.. இனி.. சீக்கிரம் ஸ்கெட்ச் தான் அவளுக்கு..", என்று சொல்லிவிட்டு வேறு திசையாய் நடந்து போனார்கள்.
சர்வாங்கமும் பதறத் தொடங்கியது சத்யாவுக்கு.. 'அடப்பாவிகளா.. இவ்வளவு மோசமானவங்களா இவங்கள் என்று..', பயம் தலை தூக்கியது.. இருந்தாலும்.. ஏற்கனவே இவன் இந்த மாதிரி செய்திருக்கிறான் என்றால்..
இந்தக் காலேஜுக்கு வந்த ஒரு பெண் காணாமல் வேறு போயிருப்பது மிகக் கவலைக்குரிய விஷயமாய்த் தான் தோன்றியது அவளுக்கு.. அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் அனைத்தும் இருந்தும் அவளின் வருகை ஏன் பதிவாகாமல் இருந்திருக்கிறது என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள் சிறிது நேரம்.. ஆனால் அதையும் மீறி இந்த சுஜாதாவை இவன் ஏதோ செய்ய திட்டமிட்டுவிட்டான் என்பதே கிலியை வர வழைத்தது..
ஒரு வழியாய் தன் கேபினுக்கு வந்தவள்.. அந்த காலேஜில் படிக்கும் மாணவ மாணவிகளைப் பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் கவனமாக பார்க்கத் தொடங்கினாள்..
சுதாகர் என்ற பெயரில் நான்கு ஐந்து மாணவர்கள் இருந்தாலும் ஃபோட்டோவை வைத்து அடையாளம் கண்டு அவனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தாள்
அந்த சுதாகர் அருகிலிருந்த ஒரு டவுனின் முக்கிய பிரமுகர்.. அரசியல்வாதி.. அதிலும் ஒரு முக்கிய பொறுப்பிலிருப்பவர்.. அந்த அதிகாரத்தில் அவன் ஏதோ அரசாங்கமே தன் கையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டு சுற்றி வந்த படி இருக்கிறான்..
இவன் தான் இப்படியே தவிர மற்றபடி அவன் தந்தை ஒரு நேர்மையாளி.. இவன் தான் அவர் பெயரை சொல்லிக் கொண்டு அனைவரையும் மிரட்டித் திரிகிறான் என்றும் தெரிய வந்தது.
இவன் மூன்று வருடங்களுக்கு முன் இதே கல்லூரியில் யு.ஜி. முடித்தவன் தற்போது மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இங்கேயே மேனேஜ்மெண்ட் படிப்பதற்காக வந்திருக்கிறான்..
இந்த சுஜாதாவும் மூன்று வருடம் முன்னால் இங்கிருந்து சென்றவள் தான் வெளியே பி.ஜி முடித்துக் கடந்த ஒரு வருடமாக இதே கல்லூரியில் லெக்சரராக சேர்ந்திருந்தாள்.
மேலும் சுதாகருக்கு படிப்பதில் ஆர்வமும் இல்லை.. அந்த நாட்களிலேயே இவளைக் காதலித்திருப்பான் போலும்.. ஆனால். அப்போதே அவள் அவனை நிராகரித்ததும் விசாரித்ததில் தெரிய வந்தது..
இதை எப்படி கையாள்வது என்று யோசித்தபடியே இருந்தவள், சட்டென்று ஒரு சில தீர்மாணங்களைக் கொண்டு வந்தாள்.
அதன்படி சுஜாதாவிடமும் எதையும் கேட்காமல், அவளுக்கு எந்த விதமான தகவலும் சொல்லாமல் அவள் அறியாமலேயே ஒருவரைப் பின் தொடர வைத்தாள்.. அதேபோல் சுதாகரையும் குளோசாய் வாட்ச் செய்து தகவல் கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்து கொண்டாள்.
மேலும் ஒரு முக்கிய நபரிடம் அனுமதி பெற்று சுதாகரின் ஃபோன் கால்களை டிரேஸ் செய்யும்படியும் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டாள்.
இதற்கிடையே சென்னையை சேர்ந்த ஒரு செகியூரிடி கம்பனியை அணுகி தங்கள் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்புக்காக சில பாதுகாப்புத் திட்டங்களை கொண்டு வந்தாள்..
அதன்படி அனைவரும் கல்லூரியில் நுழையும் போதே ஒரு அடையாள அட்டையை ஒரு டிவைசில் உபயோகித்து அவர்கள் வருகை போகையில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்து செயலாக்கினாள்..
கல்லூரி பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கும் அந்த அட்டையைக் கட்டாயம் உபயோகப்படுத்தி அவர்கள் பஸ்ஸில் தான் சென்றார்கள் என்பதை உறுதிப் படுத்தி கொள்ளவும் வைத்தாள்.
ஒரு ட்ராகிங்க் சாஃப்ட்வேர் எனப்படும் இருக்குமிடத்தைத் தெரிவிக்கும் ஒரு மென்பொருளைத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தினாள்.
இப்படியே சில பல நாட்கள் ஊர்ந்து கிட்டதட்ட ஒரு மாத காலம் முடியும் தருணமும் வந்தது.. அன்றைக்கு நல்ல மழை நாள்.. காலையிலிருந்தே வானம் இருட்டிக் கொண்டு இருந்தது..
அந்த நாளை தான் சுதாகரும் தேர்ந்தெடுத்து இருந்தான் சுஜாதாவை கடத்த..
ஆளரவமற்ற அந்த குறுக்குத் தெருவில் வேக வேகமாய் நடந்து தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள் சுஜாதா..
திடீரென்று மூன்று பேர் அவளைத் தொடர்ந்தனர்.. இருவர் ஒரு காரை எடுத்துக் கொண்டு வர. சுதாகர் காரிலிருந்து இறங்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலுடன் அவள் முன்னே சென்றவன், அவன் பாட்டிலைத் திறந்து ஸ்ப்ரேயை அழுத்துமுன் அவன் கண்களிலும் மூக்கிலும் ஏதோ காரமாய் அப்பியது.. எரிச்சல் தாங்க முடியாமல்,
"ஓ மைகாட்.. அய்யோ", என்று அலறினான்.. அடுத்த இருவர் காரை விட்டிறங்க என என்று பார்ப்பதற்குள் அவர்கள் மூக்கிலும் கண்ணிலும் ஸ்ப்ரேய் அடிக்கப்பட்டது..
அடுத்த சில வினாடிகளில் அவர்கள் காரிலேயே அந்த மூன்று பேரின் கையும் காலும் கட்டப் பட்டு ஒரு தனி வீட்டின் முன் சென்று நின்றார்கள்.
கார் நின்றதும் வீட்டுக்குள்ளிருந்து வந்த இரண்டு பேர் அவர்களை இழுத்துச் சென்று ஹாலில் தள்ளினர்.. கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ஒரு மூலையில் உட்காரச் செய்தனர்.
அங்கே இருந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் சத்யா.. அவள் கையில் சில பேப்பர்களையும் ஒரு பேனாவையும் வைத்திருந்தாள்,
சுதாகரை அருகிலிருந்த சேரில் உட்கார வைத்துக் கட்ட செய்தவள்,
"என்ன பிரதர்..என்னமோ பெரிய திட்டமெல்லாம் போட்டீங்க போலிருக்கு..?", என்று கிண்டலாய் கேட்க,
ஆத்திரத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்த சுதாகர் முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவன், இந்தப் பெண் காலேஜ் அட்மினிஸ்டிரேடராச்சே.. இது எங்கே இங்கே?..
"ஏய் நீ ஏன் என் வழியில் குறுக்கே வருகிறாய்?.. ஏதோ காலேஜில் வேலை செய்கிறாய் அதோடு நிறுத்திக் கொள் உன் ஆட்டத்தை.. என்னிடம் துள்ளினால் ஒட்ட நறுக்கிவிடுவேன் தெரிஞ்சிக்கோ..", என்று கூவல் விட்டான்..
"எப்படி.. அந்த ராதாவை காணாமல் போக வைத்தாயே அப்படியா?.. இல்லை சுஜாதாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கத் தானே நினைத்தாய்.. ஆனால் நான் உன்னை தூக்கிட்டேன் பார்த்தியா?.. எப்படி?..", என்று சிரித்தாள்..
தன் திட்டம் தவிடு பொடியாகிவிட்டது என்ற ஆத்திரத்தில் "ஏய் என்னடி சிரிக்கிறே நான் யாருன்னு தெரியாம துள்ளறே.. நான் நினைச்சா ஒரே ஃபோன் காலில் உன்னை காலி பண்ணிடுவேன்..", என்றான் கித்தாய்ப்பாய்..
"யாருன்னு எனக்கு நிஜமாவே தெரியும்டா.. முட்டாள்.. உனக்குச் சந்தேகம் இருந்தா கூப்பிடட்டா உங்கப்பாவை..", என்று சொல்லியவள்,
"சார், சார்", என்று உள் பக்கமாய் குரல் கொடுக்க,
அங்கே அவன் தந்தை நல்லமுத்து இன்னும் சிலருடன் வெளியே வரக் கண்டான்..
அவ்வளவுதான் தொடை நடுங்கி விட்டான் சுதாகர்..
"அப்பா", என்றவனை ஓங்கி முகத்தின் மேலேயே அறைந்தார் நல்லமுத்து..
"சீ அப்படி சொல்லாதேடா நாயே.. உன் ஆட்டத்தை இத்தனை நாளாய் நானும் கண்டும் காணாமல் சகித்துத் தான் வந்தேன்.. ஏதோ வம்புக்கு இழுக்கிறாய்.. டீஸ் பண்ணுகிறாய்.. வயசுக் கோளாறு என்று நினைத்து உன்னை அதிகம் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை..”
“ஆனால் எப்போ சத்யா மேடம் உனக்கு ஷேடோ போடு கண்காணிக்க ஆரம்பித்து அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் சொன்னாளோ.. அன்றே நான் தீர்மானித்துவிட்டேன்.. உன்னைச் சரி செய்யாவிட்டால் மேலும் மேலும் குற்றவாளியாகிப் போவாய் என்று.."
"அப்பா நான் ஒண்ணும் பண்ணலைப்பா.. ஏதோ இந்த மேடம் தான் பழிவாங்க நினைத்து இப்படியெல்லாம் என் பேரைக் கெடுக்கிறாங்க", என்றான் சுதாகர் விடாமல்..
"அப்படியா சரி.. அப்படியே இருக்கட்டும்.. அந்த பொண்ணு ராதாவை நீ என்ன செஞ்சேங்கிறதை உன் ஃப்ரெண்டு போட்டு கொடுத்துட்டானே.. அது உனக்குத் தெரியுமோ?, இப்போ ஒழுங்கு மரியாதையா அந்தப் பேப்பரிலே கையெழுத்துப் போடு", என்று அவர் கட்டளையிடவும் சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது சுதாகருக்கு..
அதற்கு மேல் அவன் அதிகம் பேசாமல் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டு சத்யா தயாரித்திருந்த பத்திரங்களில் கையெழுத்திட்டவன் மனதில் அவள் மேல் இனம் புரியா ஆத்திரம் கொப்பளிக்க சட்டென்று அருகிலிருந்தவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி சத்யாவை குத்தும் பொருட்டு அவள் பக்கம் பாய்ந்தவன் கையை ஓங்கிக் குத்துவதற்காக தூக்க, அந்த கை அந்தரத்திலேயே நின்றது நின்றபடி இருந்தது..
அவன் கையை ஒரு வலிய கரம் இறுக்கிப் பிடித்து முறுக்கி முதுகின் பின் திருப்பியது.. பயத்துடன் திரும்பிப் பார்த்தவன் அங்கே ஆஜானுபாகுவாய் கதிரைக் கண்டான்..
பாவம் சத்யா இதை எதிர்பார்த்திருக்கவில்லை..இவர்கள் வருவதையும் சுஜாவை பெப்பர் ஸ்ப்ரேய் பாட்டிலை தயாராய் கையில் வைத்துக்கொள்ளவும் தாங்களும் பின் தொடர்வதை ப்ளூ டூத்தில் சுஜாவுக்கு சொல்லியபடியே வந்தவள்..
இவனின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.. முகமெல்லாம் வியர்க்க தன் தைரியமெல்லாம் மெல்ல விலகுவதைக் கண்டாள்..
கையை நன்றாய் முறுக்கியபடி.. மீண்டும் ஆட்களை அழைத்து அவனை கட்டிப் போடச் செய்தான் கதிர்.
"ஐயா.. உங்க பையனாச்சேன்னுதான் நான் பார்க்குறேன்.. இல்லாட்டி.. அவ்வளவுதான்.. பொம்பளை மேலே கையை வைக்கிற அளவுக்கு இவன் தைரியமாயிட்டான்னா இவனை நாம சும்மா விடக் கூடாதுங்க.. நீங்க என்ன சொல்லறீங்களோ அதுப்படி செய்துடலாம்..", என்றான் பணிவாகவே..
நல்லமுத்து அதற்குள் சுதாரித்தவர், "கதி.. என்னப்பா.. நீ.. உனக்குத் தெரியும் நான் ஒருகொள்கையோடு வாழறவன்னு.. எனக்குப் போயி இப்படியாபட்ட தறுதலை பிள்ளையா பிறந்திருக்கு..இதை நிச்சயம் சரிசெய்துடுவேன்.. இவனை லாக்கப்பில் வெச்சு லாடம் கட்டினா சரியாயிடுவான்..”
“நீ புள்ளைய கூட்டிட்டு வீட்டுக்கு போ அப்பு.. இந்த தறுதலையை நாங்க கவனிக்கிறோம்..அம்மாடி சத்யா.. அந்தப் பேப்பரையெல்லாம் நீ முறைப்படி போலீசில் பதிவு செஞ்சிடு.. அடுத்து காப்பியை வெச்சிக்கோ.. இவன் ஏதாவது ராங்க் காட்டினா அவ்வளவுதான்.. என்கவுண்டருக்கு தயார் செஞ்சிடலாம்..", என்று காட்டமாய் தன் மகனைப் பார்த்தார்.
அதன் பின் கதிர், "நாங்க கிளம்பறோம் ஐயா" என்றவன்,
சத்யாவின் புறம் திரும்பி,
"வா" .. என்றான் ஒற்றைச் சொல்லாக.
அவனின் இந்தக் கடுமையான முகம் சத்யாவிற்கு அச்சத்தைத் தருவதாக இருந்தது..ஆறு மாதத்திற்குப் பின் அவனை இன்று தான் பார்க்கிறாள். ஏதோ ஒன்று நிச்சயம் அவனிடம் மாறியிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது..
அது என்ன?..
**************************************************************