அத்தியாயம் 36
அன்று ஞாயிற்றுக்கிழமை.. விடியல் காலையிலேயே ஒரு முக்கியமான பிரமுகர் வீட்டுக் கல்யாணத்திற்காக ராஜேந்திரனும், ருக்மணியும் சென்றிருந்தனர்.
ருக்மணி தன் உடல் நிலையைக் காட்டி முதலில் மறுத்திருந்தாலும், கடைசியில் வேறு வழியில்லாமல் ராஜேந்திரனுடன் கிளம்பிச் சென்றிருந்தார்.. இப்பொழுதெல்லாம் வீல் சேர் உதவியில்லாமல் மெல்ல ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கி இருந்தது அவருக்குச் சற்று வசதியாய்ப் போனது.
வேதாதான் அத்தையிடம்.. வீட்டிலேயே இத்தனை நாட்களாக அடைந்து கிடப்பவருக்கு இப்படி வெளி இடத்துக்குப் போவதில் சற்று மாறுதலாக இருக்கும் என்று அவரை வற்புறுத்தி, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பி வைத்திருந்தாள்.
ருக்மணிக்கும், வேதாவுக்கும் இப்பொழுது நல்லதொரு புரிதல் வரத் தொடங்கி இருந்தது.. பெரிதாக ஒட்டி உறவாடவில்லையென்றாலும், முன்பு போல வார்த்தைகளால் அவளை வேதனைப் படுத்தவில்லை.
அவ்வப்பொழுது அவள் அன்னையைப் பற்றியும், அவள் வளர்ந்த விதம் பற்றியும் அவரிடம் பேசுவது வேதாவுக்கும் சற்று இலகுவாக இருந்தது.. அவள் தன் வீட்டில் சின்ன வயதில் அடித்த லூட்டிகளையும், குறும்புகளையும் நகைச்சுவையுடன் அவள் பேசும் பாங்கையும் ருக்மணி அவளிடம் கேட்டு சிரித்து மகிழ்ந்தார்.
அவர்களிடையே இப்பொழுது தோழமையான உறவு மலர்ந்திருந்தது.
சத்யா அந்த வீட்டை விட்டுப் போய் ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் மீண்டும் சமையலாள் அனுசுயா வேலைக்குச் சேர.. வேதாவுக்கு இப்பொழுது நேரம் சற்று அதிகமாகக் கிடைத்ததில் மதிய நேரத்தில் வெளியே செல்லத் தொடங்கி இருந்தாள்.
ருக்மணி அவளைக் காலத்திற்கேற்ப கொஞ்சம் கம்ப்யூட்டர் கல்வியைப் படிக்கச் சொல்லி வற்புறுத்த, ராஜேந்திரனும் அதற்கு ஒத்து ஊத, இப்பொழுது வேதா மதிய நேரத்தில் அதற்குரிய வகுப்புக்களுக்குச் சென்று கொண்டிருந்தாள்.
ஏற்கனவே வேதாவும் அதைப் பற்றி யோசித்து வைத்திருந்ததும் இப்பொழுது வசதியாகப் போனது.
ராஜேந்திரனும், ருக்மணியும் அவளுடன் சகஜமாக உரையாடினாலும் பிரகாஷ் மட்டும் எப்பொழுதும் போல அவளிடத்தில் இருந்தான்.. சத்யா அந்த வீட்டை விட்டு போன அன்று வேதாவின் சார்பில் பேசியவன்.. அதன் பின்னர் அவள் வாழ்க்கை அவளிஷ்டம் என்று தான் இருந்தான்.
ஆனால் அவளை முன்பு போல அறவே ஒதுக்கவில்லை.. ஒரேடியாக அவளிடம் ஒட்டி உறவாடவில்லையென்றாலும், அவளைக் கண்டால் தன் உறவினள் என்ற முறையில் இரண்டு நிமிடம் நலம் விசாரிக்கத் தவறவில்லை..
மற்றபடி வேதாவின் இல்லற வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாவிட்டாலும்.., அந்த வீட்டில் நிறைய மாறுதல்கள் வந்திருந்தன..
முக்கியமாகச் சமையல்காரி அனுசூயாவை வேதா நிறைய மாற்றி இருந்தாள்.. அவள் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் உடல் நலக் கேடும்.. சுற்று சுகாதார விழிப்புணர்ச்சியையும் அவளுக்கு எடுத்துச் சொல்லி.. அவளின் அந்த வேண்டாத பழக்கத்தைக் கொஞ்சம் என்ன வெகுவாகக் குறைத்திருந்தாள்.
அனுசுயாவுக்கோ வேதாவை ரொம்பவே பிடித்து விட்டது.. அவளது கனிவான பேச்சும், அன்பான அனுசரணையும் அவளைக் கவர்ந்திருந்தது.. அதுவும் சொல்கிற விதத்தில் புரியும்படி சொல்லியதும் அவள் சொற்படி நடந்து கொண்டாள்.. இப்பொழுதெல்லாம் இஞ்சி முரப்பாவை வேதாவின் ஆலோசனைப்படி வாயில் அதக்கிக் கொண்டு புகையிலை பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தாள். முடியாத நேரத்தில் ஒரு துணியினால் வாயை மூடி கட்டிக் கொண்டு வேலை செய்தாள்..
காலை உணவு முடிந்து அனுசுயாவுக்கு மதிய உணவுக்கு வேண்டியதைப் பற்றிச் சொல்லி விட்டு வேதா தன் வகுப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அன்று விடுமுறை நாள் என்பதால் காலை பத்து மணிக்கு தன்னுடைய சிறப்பு வகுப்புக்காகக் கிளம்பி கொண்டிருந்தாள் வேதா.
திடீரென்று மாடியில் இருந்து ஏதோ சத்தம் கேட்க.. என்னவென்று பார்க்க தன்னறையில் இருந்து வெளியே வந்தாள் வேதா..
ருக்மணிக்கு ஓரளவு கால் குணமாகி இருந்ததால் ராஜேந்திரன் ருக்மணியின் அறையில் மீண்டும் தங்கிக் கொள்ள.. பிரகாஷ் அறைக்குப் பக்கத்து அறையை வேதா உபயோகித்துக் கொண்டிருந்தாள்.
ராஜேந்திரனும், ருக்மணியும் எடுத்துச் சொல்லியும் வேதா அதை நாசூக்காக மறுத்து விட்டு எப்பொழுதும் போல ஒரு ருக்மணிக்கு ஒரு உதவியாளாகக் கொஞ்சம் நாட்கள் அங்குத் தங்குவதாக அழுத்தமாகச் சொல்லி விட்டாள் வேதா.
தன்னறையில் தலையைச் சீவிக் கொண்டிருந்தவள் பக்கத்து அறையில் இருந்து வந்த குரலிலிருந்து அந்தச் சத்தம் பிரகாஷின் அறைக்குள் இருந்து வருகிறது என்று கண்டு ‘எதற்கு இவன் கத்துகிறான்’ என வேகமாக அவன் அறையை நோக்கிச் சென்றாள்.
‘உ..ம்.. உள்ளே போகலாமா?.. வேண்டாமா.. இத்தனை நாட்களாக அவன் அறைக்குள் செல்லாதவள் மீண்டும் எப்படி அவன் அறைக்குள் செல்வது?.. ஒரு வேளைத் தப்பாக எடுத்துக் கொண்டால்’ என்று தயங்கி அவன் அறை வாசலில் நிற்க,
“ஏய் யாருமே இல்லையா?.. எங்கே போனீங்க எல்லோரும்?.. மாம்.. டாட்..” எனக் கத்திக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
‘அய்யோ.. அத்தையும் மாமாவும் வீட்டில் இல்லையே?.. என்ன அவசரமோ?.. சரி ஆபத்துக்குப் பாவமில்லை..’ என்று எண்ணியவள் எதற்கும் இருக்கட்டும் நாசூக்காகக் கதவை தட்டி விட்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் வேதா.
அதே சமயத்தில் வேகமாக அறைக் கதவை திறந்து கத்தியபடியே வந்த பிரகாஷின் மேல் மோதி நின்றாள் வேதா.
“என்னாச்சு மா….. பிரகாஷ்… என்னா…….” கேட்டபடி நுழைந்தவளின் வார்த்தைகள் அதற்கு மேல் தப்பித் தாளம் போட்டன.
அங்கே பிரகாஷ் நின்றிருந்த கோலத்தில் திகைத்து விழித்தவள் உளறிக் கொட்டினாள்.
பிரகாஷ் அன்று விடுமுறை நாள் என்பதால் நேரம் கழித்து விழித்தவன்.. அப்பொழுதுதான் குளிக்கச் சென்றிருந்தான். உடம்பு முழுவதும் சோப்பை குழைத்து பூசிக் கொண்டவன் தலையில் தண்ணீரை கொட்டிக் கொண்டு, ஷாம்பூ போட்டுக் கொள்ளலாம் என எண்ணி தலையில் தேய்த்து விட்டு குளிப்பதற்காகக் குழாயை திறக்க அது சரியாகச் சதி வேலை செய்தது.
இரண்டு மக் தண்ணீர் வந்தவுடன் மெல்லிய சத்தத்துடன் மொத்தமாக நின்று விட.. கடுப்பானான் பிரகாஷ்.
“ஷிட்.. சே.. டேங்கில் தண்ணி இல்லையா என்ன?.. என்ன பார்க்கிறார்கள் இந்த வீட்டில்.. ஒருத்தரும் சரியில்லை.. வேஸ்ட்.. இப்போ எப்படிக் குளிக்கிறது..”
மெல்ல வெளியே பாத்ரூம் கதவை கொஞ்சமாகத் திறந்து.. “மாம்.. டாட்..” எனச் சத்தமிட்டான்.
பத்து முறைக்கு மேல் கத்தியும் யாரும் வருவதற்கான அறிகுறி இல்லை என்று தெரிந்ததும்.. வெறுத்துப் போனவன்.. கண்கள் எரியத் தொடங்க.. இருந்த அரை மக் தண்ணீரில் முகத்தை மட்டும் ஓரளவுக்குக் கழுவிவிட்டு அங்கிருந்த டவலை உடலில் சுற்றிக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் தன் அறைக் கதவை திறக்க..
சரியாக அந்த நேரத்தில் தான் வேதாவும் அங்கே வந்தாள்.. என்னவாயிற்று என்று கேட்டுக்கொண்டே வந்தவள் மேல் பிரகாஷ் மோதி நிற்க..
“ஏய்.. என்ன….” சட்டென அவளைத் தாங்கி பிடித்த பிரகாஷ்..
சோப்பு நுரையில் கைகள் வழுக்க.. தன் மேல் மோதிய உருவத்தை அதற்கு மேல் பிடிக்க முடியாமல் கால் சறுக்கி.. அவளை சேர்த்துக் கெட்டியாகத் தன்னுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டவன் அப்படியே தரையில் சாய்ந்தான்.
“மாமா என அழைக்க முயன்று என்னாச்சுப் பிரகாஷ்” என்று திணறிய வேதா வாயைத் திறந்த நிலையில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரகாஷ் கீழே விழுந்திருக்க.. அவன் மேல் படுத்திருந்த நிலையில் வேதா.. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
முதலில் சுதாரித்தவன் பிரகாஷ்தான்.. தன் மேல் கவிழ்ந்திருந்த வேதாவின் மென்மையான உடல் அவன் உடலை அழுத்த.. அவள் விரித்திருந்த தலை முடி அவன் முகத்தின் மேல் விழுந்து குடை போல மூட.. திறந்திருந்த வாயோ என்னை கவனியேன் என்று அழைப்பு விட..
முதல் முறையாக அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவனுக்கோ இனம்புரியா என்னவென்று தெரியாத ஒரு வித பரவச நிலை.. மஞ்சளோ, இல்லை எதுவோ ஒன்று அவள் மீதிருந்து கமழ்ந்து வந்த நறுமணத்தை அவன் நாசி நுகர்ந்து அவனைச் சொர்க்கத்துக்குச் சென்று கொண்டிருந்தது.. அது தந்த கிளர்ச்சியில் அவனையறியாமல் அவன் கைகள் அவளை தன்னுடன் இறுக்க அழுத்தின.
சட்டென்று பயத்துடன் கண்களை மூடி விட்டாள் வேதா..
‘அய்யோ.. திட்டப் போரானோ.. இப்படி இவன் மேல் விழுந்து வைத்து விட்டோமே?.. ஏற்கனவே என்னைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது.. இதில் நான் வேறு அசட்டுத்தனமாக அவன் மேல் மோதி.. என்ன சொல்லப் போகிறான்..’
மெல்ல எழுந்திருக்க நினைத்தவள் உடல்.., அவனது இறுக்கமான அணைப்பில் மேலும் அவனுடன் அழுத்த.. செய்வதறியாமல் மெல்ல கண்களைத் திறந்தாள் வேதா.. அவன் கண்கள் எதற்குச் சிரிக்கிறது?..
“உன்னோடு கையை என் கழுத்தில் இருந்து எடுக்கிறீயா?.. அப்போதான் உன்னால எழுந்திருக்க முடியும்..” என்ற பிரகாஷ் குறும்புடன் கண்ணைச் சிமிட்டினான்.
அவளுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.. அய்யோ இப்படியா கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இவன் மேல் படுத்து…….
சட்டென அவன் கழுத்திலிருந்து கைகளை பட்டென எடுத்த வேதாவின் முகம் கன்றிச் சிவந்தது.. அவளே அறியாமல், தான் விழாது இருக்கும் பொருட்டு அவன் கழுத்துத்தை இறுக்கப் பிடித்திருந்ததை.. பதட்டத்துடன் எழுந்து கொண்டவள் அவன் படுத்திருந்த கோலத்தைக் கண்டு மேலும் முகம் சிவக்க திரும்பி நின்று கொண்டாள்
“மெல்ல மெல்ல.. வேதா.. எதுக்கு இந்த அவசரம்..”
பிரகாஷும் மெல்ல எழுந்து கொண்டவன் மனமோ உல்லாசத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.. அவன் பெண்களை அறியாதவன் இல்லை.. பெண்களுடன் நட்புடன் பழகுபவன் தான்..
மற்றபடி அத்தை மகள் சத்யாவை காதலித்த போதும் இத்தனை நெருக்கத்தில் அவளுடன் இருந்ததில்லை.. சின்ன அணைப்பு.. சிறு முத்தம் கன்னத்தில் என்று இருந்திருந்தவன்.. இன்று இத்தனை நெருக்கத்தில் ஒரு பெண்ணுடன்.. இருந்ததில்லை.. ஆனாலும் அந்த நெருக்கம் தந்த சுகம் அவனுக்குப் பிடித்திருந்தது.
இது சரியா?.. ஏன் சரியில்லை.. இவள் என் மனைவி.. எனக்கு உரிமையானவள்.. தான் என்ன எண்ணுகிறோம்.. என் மனம் எந்தப் பாதையில் செல்லுகிறது?..
சட்.. ஒரு சின்ன அணைப்பு.. அது கூட எதிர்பாராமல் நடந்த நிகழ்வு.. உடனே அதற்குள் என்னென்னவோ நினைத்துக் கொண்டு.. இவள் நிலமையை பயன்படுத்திக் கொண்டு.. இது தப்பு..’ சட்டென சுதாரித்துக் கொண்டு எழுந்தவன் இப்பொழுது தன் இயல்புக்கு திரும்பினான்.
“சாரி வேதா.. தண்ணி வரலை.. பாரு நான் அறைகுறையா குளிச்சிட்டு.. அதான் அம்மாவைக் கூப்பிட்டேன்.. கொஞ்சம் டேங்கில் தண்ணி போட சொல்லறீயா?..” நிகழ்வுக்குத் திரும்பி விட்டான் பிரகாஷ்.
“இதோ பார்க்கிறேன் பிரகாஷ்.. நீங்க வேணா என் ரூம்ல அதுக்குள்ள குளிச்சிக்கங்க.. பக்கெட்டுல தண்ணி இருக்கு.. எப்படியும் டேங்க் நிறைஞ்சி தண்ணி வர நேரம் ஆகலாம்..” என்றாள் வேதா.
அவளும் அதற்குள் சுதாரித்துக் கொண்டிருந்தாள்.
“சரி..” என்று தலையாட்டி விட்டு அவளது அறைக்குள் பிரகாஷ் சென்றுவிட, வேதாவும் கீழே இறங்கிச் சென்றாள் அடுத்ததைப் பார்க்க..
அவள் மனம் பட்டாம் பூச்சியாய்ப் பறந்தது.. அவன் இறுகிய அணைப்பு.. அவளை என்னென்னவோ நினைக்கத் தூண்டியது.. அவன் கண்களுடன் அவள் கண்கள் கலந்த அந்த இனிமையான தருணம்.. அவள் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தோன்றியது.
‘எப்படிப் பார்த்தான்.. விட்டா அப்படியே விழுங்கிவிடுவான் போல.. என்னமோ இவன் என்னை இறுக்க அணைத்திட்டு நான் அவன் கழுத்திலிருந்து கையை எடுக்கணுமாம்.. லொள்ளைப் பாரு.. கண்ணை வேறு சிமிட்டறான்.. விட்டாள் முத்தம் கொடுத்திருப்பானோ..’
இப்பொழுதும் அவள் கன்னங்கள் சூடானது போல ஓர் உணர்வு.
‘ஆனாலும் எதுவுமே நடக்காதது போல எழுந்து போனானே?.. ஒரு வேளை என்னைத் தப்பா எடுத்திருப்பானா?.. சீ சீ.. இருக்காது.. அப்படித் தப்பா நினைத்திருந்தால் எதையாவது திட்டி இருப்பான்.. சாரி வேறு கேட்டானே?.. அப்போ அவன் இதை பெரிதாக நினைத்திருக்க மாட்டான்..’
‘எது எப்படியோ.. அவன் அணைத்திருந்தது பிடித்துத் தான் இருக்கிறது..’
“என்னம்மா.. என்னாச்சு.. உடுப்பெல்லாம் ஈரமா இருக்கு.. உங்க கிளாசுக்கு போகலியா?..” அனுசுயா கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள்.
“ஹாங்க்…. என்ன அனுசுயாம்மா..?”.. கனவில் மிதந்து கொண்டிருந்தவள் நனவுக்கு வந்தாள்.
“இல்லைம்மா.. டிரஸ் நனைஞ்சிருக்கேன்னு கேட்டேன்..”
“குழாயில தண்ணி சரியா வரலையா.. டேப்பை திறந்தேனா.. தண்ணி அடிச்சி ஈரமாச்சு.. தோட்டக்காரனுக்கு டேங்கை திறந்து பார்க்க சொல்லிவிட்டு வந்தேனா.. இல்லையே.. பாரு அதுக்குள்ள டிரஸ் காய்ஞ்சி போச்சே..” உளறி கொட்டிக் கொண்டிருந்தாள்.
‘இந்தாம்மாக்கு என்ன ஆச்சோ.. இப்படி எத்தையோ உளறுது..’.. நினைத்த அனுசுயாவும் தண்ணீர் எங்கும் வரவில்லை என்று சொல்ல..
அதற்குள் தோட்டக்காரன் அங்கே வந்தவன்.. காலையிலேயே டேங்கு ஃபுல்லா ரொப்பிட்டேன் மா.. தொட்டியில் தண்ணி இருக்கும்மா.. என்னாச்சுன்னு தெரியலை.. ஏதாவது அடைப்பா.. என்னன்னு புரியலை.. யாராவது ப்ளம்பரைத்தான் கூப்பிடணும்..” எனத் தலையைச் சொறிந்தான்.
வேதா அனுசுயாவிடம் உளறும் பொழுதே கீழே வந்து விட்டான் பிரகாஷ்.. அவள் பொய் சொல்லிச் சமாளித்த விதத்தைக் கண்டு அசந்து போனான்.. அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன்.. ‘இவள் இப்படியெல்லாம் கூடச் சமாளிப்பாளா?..’ எனத் தோன்ற..
‘பின் எப்படிச் சொல்லுவாள்.. இந்த மாதிரி என் ஹஸ்பெண்டுடன் கட்டி பிடிச்சி விழுந்தேன் என்று..’ தன் எண்ணப் போக்கை கண்டு சிரித்தபடி..
“வேதா.. என்னாச்சாம்.. எதுக்குத் தண்ணி வரலையாம்.. ஏதாவது தெரிஞ்சதா?.. உன் டிரஸெல்லாம் ஈரமா இருக்கே.. போ.. டிரஸ் மாத்திக்கோ..” அவளிடம் அக்கறையுடன் சொன்னவன் பார்வையோ அவள் பாதிக் காய்ந்தும், காயாததுமாக இருந்த அவள் ஈர உடலை நோட்டம் விட்டுக் கொண்டு மேய்ந்து கொண்டிருந்தது.
அவன் பார்வையை அறிந்தவளோ மீண்டும் முகம் சிவக்க.. “என்னான்னு தெரியலை.. ஏதோ ப்ளம்பர் வரணுமாம்.. நீங்களே கூப்பிட்டு சொல்லிடுங்க.. அதெல்லாம் என்னோடு வேலை இல்லை.. நான் டிரஸ் சேஞ் செய்திட்டு வந்திடறேன்..” சட்டென இடக்காகச் சொன்னவள்.. வேகமாக மாடிப்படிகளைக் கடந்து தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் அலட்சியமான பதிலில் முகம் கருத்தான்.. அத்தனை நேரமாக இருந்த இன்பவலை அறுந்தது.
பிறகு தோட்டக்காரனிடம் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்து ப்ளம்பரின் எண்ணை வீட்டுக் குறிப்புகள்.. முக்கியமானவர்களின் இத்தகைய சேவைக்கான எண்களில் இருந்து எடுத்து அவர்களை அழைத்தான்.
எடுத்தவன் என்ன சொன்னானோ இங்கே ஏற்கனவே வேதாவின் ஒதுக்கத்தில் பொங்கிக் கொண்டிருந்த பிரகாஷுக்கு இப்பொழுது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“நீ என்னப்பா சொல்ல வர்ரே?.. உன்னோட வேலை ப்ளம்பிங்க் தானே?.. எப்பவும் இந்த வீட்டுக்கு வர்ரவன் தானே?.. அப்புறம் என்ன இப்போ பிகு பண்ணிக்கறே?..”
“என்னது இத்தனை நாளா தனியா வேலை செஞ்சியா?.. சரி அதுக்கென்ன இப்போ.. எப்பவும் போலச் செய்ய வேண்டியது தானே?.. ஏன் இன்னிக்கு முடியாது?..”
“சன்டேன்னா என்ன பெரிசா?.. ஏம்ப்பா.. எமெர்ஜென்சின்னா கூட வர மாட்டீங்களா?.. வேணுமானால் எக்ஸ்ட்ரா அமௌண்ட் வாங்கிக்கோ..”
“இப்ப என்ன தான் சொல்ல வர்ரே?.. நீங்க தனியாள் இல்லையா?.. என்ன உங்களுக்கு அசோசியேஷனா?.. சங்கமா?.. அவங்க மூலம் தான் வருவீங்களா?..”
“யூ இடியட்ஸ்.. இதென்ன எதற்கெடுத்தாலும் ஒரு சங்கம்ன்னு.. உன்னால முடியுமா முடியாதா?.. சரி வைச்சி தொலை.. நான் அவங்களை முதல்ல காண்டாக்ட் பண்ணறேன்.”
அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனுசுயாவும், தோட்டக்காரனும்..
“சின்னய்யா.. அதாங்க நானும் சொல்ல வந்தேன்.. நான் ஏற்கனவே ப்ளம்பர் நம்பருக்கு போன் பேசலாம்ன்னு நினைச்சேனுங்க.. அவன் சகலைதான்.. ஆனாலும் அவன் வரமாட்டாங்க..”
“இந்த ஏரியாவுக்குன்னு தனியா இப்படியாப்பட்ட வேலைகளுக்குன்னு ஒரு சங்கம் இருக்குங்க.. உங்களுக்கும் தெரிஞ்சிக்குமே?.. நானும், அனுசுயாம்மாவும் கூட அப்படித்தானே இங்கே வேலைக்கு வந்தோம்.. நீங்க அவங்களுக்கே நேரா போனை போடுங்கன்னு சொல்ல வந்தேன்.. நான் அவங்களோடு நம்பர் தரேன் சின்னய்யா.. வேதாம்மாக்குக் கூடத் தெரியும்..” எனத் தோட்டக்காரன் என்னவோ புதிய விஷயத்தைச் சொல்லுவது போலப் பவ்யமாகச் சொல்ல..
இன்னும் எரிச்சலானான் பிரகாஷ்.. சற்று முன்னால் இருந்த சந்தோஷ மன நிலை மாறி வெறுப்பில் இருந்தவன்..
“அதைத்தான் அவனும் சொன்னான்.. நல்லா வந்திடும் வாயில.. எங்கேர்ந்து இப்படியெல்லாம் கிளம்பி வந்திருக்கீங்களோ?.. சமைக்க ஆள் கேட்டா சங்கம், வீட்டு வேலைக்குன்னா சங்கம்.. தோட்டக்காரன், வாட்ச்மேன்.. இப்படி எல்லாத்துக்கும் சங்கம் சங்கம்..”
“சே.. வெறுப்பா இருக்கு.. சரி சரி நீ போ.. நான் பார்த்துக்கறேன்.. இங்கே
யே நம்பர் இருக்கு..” என்றவன் தன் செல் போனில் அந்த நம்பரை ஒத்தி விட்டு அப்படியே தன்னறைக்குச் செல்ல மாடிப் படிகளில் ஏறியவன்..
தன் அறைக்குள் நுழைய சரியாக அந்தச் சங்கத்தின் பொறுப்பாளர் அவன் அழைப்பை ஏற்றிருந்தார்.
“ஹலோ.. குட்மார்னிங்க் சார்.. சொல்லுங்க சார்.. எதற்காக எங்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள்..”
இந்தக் குரல்.. சட்டெனத் திரும்பிப் பார்த்தவன்..
சரியாக அதே சமயத்தில் வேதா தன்னறையில் இருந்து வெளிப்பட்டாள் யாருடனோ தன் செல்போனில் பேசிக் கொண்டு.. அவனைக் கடந்து சென்று விட்டாள்.. அவளை அழைக்க நினைத்தவனை..
“ம்.. ஹலோ.. ஹலோ.. என்னாச்சு சார்.. உங்களுக்கு என்ன உதவி வேண்டும் சார்..” அந்தப் பெண்ணின் குரல் மீண்டும் அழைத்தது.
“மேடம்.. எங்களுக்கு உடனடியாக ஒரு ப்ளம்பரின் செர்வீஸ் தேவை.. இதற்கு முன் எங்கள் வீட்டில் ரெகுலராக வருபவர்.. இப்பொழுது உங்கள் சங்கத்தின் உறுப்பினராம்.. வரத் தயங்குகிறார்.. நீங்கள் தான் அனுப்ப வேண்டுமாம்.. இது ரொம்ப அர்ஜென்ட் மேட்டர் மேடம்.. வீட்டில கொஞ்சம் கூடத் தண்ணி இல்லை.. சம் பராப்ளம் வித் தெ லைன்..”
“எஸ் சார்.. எனக்குப் புரிகிறது.. உங்கள் வீட்டு முகவரியை உடனே எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்.. நான் வெளியில் இருக்கிறேன்.. இல்லையென்றால் ஆட்டமெடிக்காக உங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணை வைத்து நானே உங்கள் அட்ரெஸ் பார்த்திருப்பேன்.. அத்தோடு இது என்னுடைய பெர்சனல் நம்பர் எப்படி உங்களுக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை..”
“பட் ஒன் திங்க்.. சார் நீங்கள் அவசரம் என்பதற்காகத்தான் அனுப்புகிறேன்.. இன்னிக்கு சன்டே.. அதனால் லேபர்ஸ் கொஞ்சம் ஷாட்டேஜ்.. அத்தோடு ஆள் கிடைத்தாலும் அவர்களுக்கு விடுமுறை நாட்களில் வேலையைச் சொன்னால் நாங்கள் டபிள் பேமெண்ட் கொடுக்க வேண்டி வரும்.. உங்களுக்குப் பரவாயில்லைன்னா.. உடனே உங்கள் தேவையைப் பூர்த்திச் செய்கிறேன்..”
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மேடம்.. உடனே ஆளை அனுப்புங்கள்.. ம்.. உங்க நம்பர் தான் எங்க வீட்டில் இருந்தது..மே பி எங்க மதருக்கு வேறு நம்பரும் தெரிந்திருக்கலாம்.. அவசரத்திற்கு இதில் அழைத்து விட்டேன்.. சாரி அன்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்..” என்ற பிரகாஷ் அந்தக் காலை துண்டிக்க..
“இட்ஸ் அவர் ஃப்ளஷர் அன்ட் ஏனிவேஸ் தாங்க்ஸ் ஃபார் ஆப்டிங்க் அவர் செர்வீசஸ்” என அந்தப் பக்கமும் காலைத் துண்டித்தார்கள்.
பிரகாஷுக்கு தலையைச் சுற்றியது.. ‘ஹப்பா ஒரு சின்ன ப்ளம்பிங்க் வேலைக்கு இத்தனை ஃபார்மாலிடீசா?.. இருக்கட்டும்.. இவர்களை எல்லாம் சும்மா விடக் கூடாது..’ என்று நினைத்தவன்.. தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.
வேதா யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.
இத்தனை நாள் பழக்கத்தில் அவள் குரலை உயர்த்திப் பார்த்ததில்லை.. யாரை இப்படி அதட்டிக் கொண்டிருக்கிறாள்..
அவனைக் கண்டவளோ சட்டெனப் போனை கட் செய்தாள்.
“வேதா.. நான் வெளியே போகிறேன்.. பிளம்பருக்கு சொல்லியாச்சு.. சங்கத்திலிருந்து ஆள் அனுப்புவாங்களாம்.. முடிந்தால் நீ பார்த்துக் கொள்.. இல்லையென்றால் தோட்டக்காரனிடம் சொல்லிவிடு..” அவளைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தவன்.., அடுத்த நொடி அவன் அங்கே இல்லை.. காரை எடுத்தவன் வேகமாகச் சென்று விட்டான்.
என்ன இவன் என்னவோ ஆர்டர் போடுற மாதிரி சொல்லிட்டுப் போறான் என்று யோசித்தவளுக்கு முதல் முறையாகத் தான் வெளியே போவதாகத் தகவல் சொன்னது உரைக்க.. அதில் உச்சி குளிர்ந்து நின்றவளை மீண்டும் அவள் செல்போன் அழைத்து எரிச்சல் படுத்தியது.
சிறிது நேரத்திலேயே ராஜேந்திரனும், ருக்மணியும் வெளியே சென்றிருந்தவர்கள் வீட்டுக்குத் திரும்பி விட, அதே சமயத்தில் ப்ளம்பரும் வந்து சேர்ந்தான்.
வேதா அவனிடத்தில் குழாயில் தண்ணீர் வரவில்லையென்றும், அடைப்பு ஏதாவது இருக்குமாறு பார்க்க சொல்ல..
ராஜேந்திரனோ விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு..
"வேதா.. சாரிம்மா.. நான் தான் காலையில் கிளம்புவதற்கு முன்னால் தண்ணீர் செல்லும் பொதுப் பைப்பை மூடி வைத்தேன்.. காலையில் மாடிக்குச் சென்றேனா?.. நம்ம ரூஃப் கார்டன் பக்கத்தில ஏதோ சத்தம் வந்ததா?.. என்னவென்று பார்த்தால் ஒரு சின்னப் பூனைக்குட்டி டேங்குக்குத் தண்ணி வரும் பைப்புக்குப் பக்கத்தில் மாட்டிக் கொண்டு இருந்தது.. நான் அதை வெளியே எடுத்து விடலாம்னு நினைச்சி டிரை பண்ணி முடியலை..”
"அதான்.. இந்தக் குட்டி பூனை எங்கேயாவது எம்பி டேங்கில விழுந்துட்டா செத்து போயிடும் இல்லையா.. தண்ணி டேங்க் வேறு அரைகுறையா திறந்து இருந்திச்சு.. அதான் டேங்க்கையும் நல்லா மூடிட்டு, தண்ணி சப்ளையைக் கட் பண்ணிட்டு, அந்தப் பைப்புக்கு கீழே ஒரு கோணிப் பையைக் கட்டி வைச்சிட்டு போனேன்.. அப்படியே எகிறி குதிச்சாலும் அதில் விழுந்தா அதுக்கு அடிகிடி படாதுன்னு.. போகிற அவசரத்தில் அப்படியே சொல்லாமல் மறந்து போய்ப் போயிட்டேன் மா..”
"அச்சச்ச்சோ மாமா.. முதல்ல என்னாச்சுன்னு பார்க்கணும்.. பாவம் பூனைக்குட்டி.. இப்போ எப்படி இருக்கோ தெரியலையே.." பதறியடித்து மொட்டை மாடிக்கு ஓடிய வேதாவை பின் தொடர்ந்தார் ராஜேந்திரன்.
ஏற்கனவே தோட்டக்காரனுடன் சென்றிருந்த பிளம்பரும் எதற்குத் தண்ணீர் வரவில்லை என்று குழாய்களைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
"தள்ளுங்க.. முதல்ல அந்தப் பைப் லைன்ன செக் பண்ணுங்க.. அதுக்குள்ளதான் பூனை குட்டி மாட்டி இருக்காம்.." என்று அவனுக்கு விஷயத்தைப் புரிய வைத்துவிட்டு வேதாவும் மெல்ல எட்டிப் பார்த்தாள்.
அங்கே வெள்ளை நிற பூனைக்குட்டி ஒன்று.. தலை பாதிக் குழாய்க்குள்ளும் மீதி வெளியேவும் என்றும் வர முடியாமல் போராடி களைத்துச் சத்தமில்லாமல் இருந்தது..
"அய்யோ மாமா.. குட்டி உசிரோடு இருக்கான்னு தெரியலையே.." எனப் பதற தொடங்கினாள் வேதா.
"மேடம்.. பயப்படாதீங்க.. நல்லா உத்து பாருங்க.. மெல்லிசா வால் ஆடுது.. பயந்து போயிருக்கும் அவ்வளவுதான்.. வெளியே எடுத்துடலாம்.. நான் சன் ஷேடுல குதிச்சி.. பைப்புல பிடிச்சி ஏறி எடுக்கப் பார்க்கிறேன்.." பிளம்பர் சொல்லிவிட்டுச் சன்ஷேடில் இறங்க..
"பார்த்து பார்த்துப்பா.. ஏணி வேணா எடுத்து வரச் சொல்லறேன்.." ராஜேந்திரன் குரல் கொடுக்க..
உண்மையில் பூனைக்குட்டி மழை நீர் வெளியே போகும் குழாயில் மாட்டிக் கொண்டிருந்தது.. அதை ஓட்டி மேலே டேங்க்குங்கு தண்ணீர் செல்லும் குழாய் இருந்தது..
அந்தக் குழாயில் தலையை உள்ளே விட்டிருந்த பூனைக்குட்டி வெளியே குதித்தால் கீழே விழுந்துவிடும் என எண்ணியே ராஜேந்திரனும் அங்கே கோணிப்பையைக் கட்டி விட்டுச் சென்றிருந்தார்.
ப்ளம்பர் மெல்லப் பூனைக்குட்டியின் வால்பகுதியைப் பிடித்து இழுக்கச் சரியாக அதுவும் குதித்துப் பைக்குள் விழுந்தது..
"அப்பாடி பூனைக்குட்டி வெளியே வந்தாச்சு.. ஹேய் பார்த்துப்பா.. ஒழுங்கா பையைப் பிடி.. நீயும் மெதுவா ஏறி வா.. முதல்ல குட்டியை எங்கிட்ட கொடு.." குதுகலமாகக் கத்திக் கொண்டிருந்தாள் வேதா.
"யெஸ்.. பூனைக்குட்டி வெளியே வந்தாச்சு.." ஒரு மாதிரி சொல்லிக் கொண்டே அங்கே வந்தான் பிரகாஷ்.
அவன் குரலை கேட்ட வேதாவோ.. ஆச்சர்யத்துடன் அவனை விழியகல பார்த்தாள். 'இப்பத்தானே காரை எடுத்திட்டு வெளியே போனான்.. அதுக்குள்ள திரும்பி வந்திட்டான்.. இவனுக்கு எப்படித் தெரியும் பூனையைப் பத்தி..'
"மேடம்.. முதல்ல பிடிங்க.. பிடிங்க.. திரும்பி வெளியில குதிச்சிடப் போகுது.."
பையைக் கையில் பிடித்துக் கொண்ட வேதாவோ., மெல்லப் பூனைக்குட்டியை கையில் எடுத்து தன் மார்பில் அணைத்துக் கொண்டாள்.. அதுவோ பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம் என உணர்ந்ததோ இல்லை, பசி மயக்கமோ எதோ ஒன்றில் அவளுடன் அப்படியே ஒன்றிக் கொண்டது.
"மாமா.. பாருங்க.. குட்டி வெளியை வந்தாச்சு.. எவ்வளவு க்யூட்டா இருக்கு.. வெள்ளை பூனைக்குட்டி.. அழகு குட்டி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் இதை வைச்சிக்கட்டுமா?.. பாவமா இருக்கு.." என வேதா பிரகாஷைப் பார்த்து விட்டு ராஜேந்திரனை பார்த்தாள்.
"உனக்குப் பிடிச்சா வைச்சிக்கோம்மா.. ஆனால் பாரு முதல்ல அதுக்குக் கொஞ்சம் பாலாவது கொடுக்கணும்.. மயக்கமா இருக்கும் போல.." என்ற ராஜேந்திரனுக்குத் தலையாட்டி விட்டு பூனைக்குட்டியுடன் கீழே ஓடினாள் வேதா.
அவளைத் தொடர்ந்து அனைவரும் கீழே வர.. அங்கே சின்னத் தட்டில் பாலை நக்கி நக்கி குடித்துக் கொண்டிருந்த பூனைக்குட்டியை பாசமாகத் தடவி கொண்டிருந்த வேதாவை கண்டு ராஜேந்திரனும், பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
என்ன நடந்தது என்று புரியாமல், உடல் நலத்தைப் பொருட்டு அத்தனை நேரமாகக் கீழேயே இருந்த ருக்மணியும் அவர்களைக் கண்டு கொண்டு சிரித்தார்.
"ராஜ்.. பாருங்க நம்ம மருமகளை.. பூனைக்குட்டியை கொஞ்சிட்டு இருக்கறதை.. சின்ன வயசில பிரகாஷ் கூட இப்படித்தான் தெரு ஓரத்தில சுத்தற குட்டி நாயெலாம் நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு வந்த பாலை கொடு, பிஸ்கேட்டை கொடுங்கம்மான்னு எங்கிட்ட ஓடி வருவான்.. இப்போ வேதாவை பார்த்தா அதான் ஞாபகம் வருது.." எனச் சிரித்தார் ருக்மணி.
பிரகாஷும் அதைக் கேட்டு சிரிக்க..
ராஜேந்திரனோ, "ம்.. அதெல்லாம் ஒரு காலம்.. பாரு இப்போ அதுக்கெல்லாம் டைம் இல்லை.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் நல்ல ஜெர்மன் ஷெப்பர்ட் ப்ரீட் நாய்க் குட்டி தரேன்னு சொல்லிட்டு இருக்கான்.. பேசாமல் அதைக் கொடுக்கச் சொல்லட்டுமா?.."
"மாமா.. நல்ல ஐடியா.. வாங்கிட்டு வந்துடுங்க.. நம்ம மணிகுட்டியும், அந்த நாய்க்குட்டியும் சேர்ந்து நல்லா விளையாடும்.." என வேதா சொல்ல..
"மணிகுட்டியா.. அது யார் வேதா.." பிரகாஷ் சிரித்தான் அவள் மேல் இருந்த கோபத்தை மறந்து..
"ம்.. பிரகாஷ்.. இது கூடவா தெரியலை.. மணி குட்டி நம்ம பூனைக்குட்டி தான்.. அய்யே.." எனக் கலகலவெனச் சிரித்தாள்.
அவளுடன் இணைந்து சிரித்தவன் சட்டென முகம் இறுக..
"சரி தான் வேதா.. எனக்கு எதுவும் தான் தெரியவில்லை.. இல்லைன்னா.. இவ்வளவு நாட்களாக முட்டாளாக இருந்திருப்பேனா?.. இல்லை இத்தனை நாளாக உங்கள் சங்க மேடம் யார் என்று தெரியாமல் இருந்திருப்பேனா?.. சொல்லு.." என்று சற்று அழுத்தத்துடன் சொன்ன பிரகாஷின் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருந்ததோ..
அவனின் அந்தக் குரல் அவளை ஏதோ செய்ய.. புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வேதா.. சட்டென அவளுக்கு விஷயம் புரிபட.. ஆனால் அது எப்படிச் சாத்தியம்..
அவர்கள் பார்வைகள் இரண்டும் மோதிக் கொண்டன..
'என்னிடம் மறைத்தாயே..' எனப் பிரகாஷ் குற்றம் சாட்ட.. 'நான் எதற்கு மறைக்க வேண்டும்.. அப்படியே மறைத்தாலும் அதில் என்ன தப்பு.. அப்படி என்ன இருக்கிறது நம் இருவருக்கும் நடுவில்.." விழிகள் இரண்டு கேள்விகளால் மோதிக் கொள்ள அங்கே மௌனம் குடியேறியது.
அந்த அமைதியை கலைக்கவென்றே பிளம்பரோ, "மேடம்.. வேலை முடிஞ்சாச்சு.. நான் கிளம்பறேன்.." என்று வந்து நின்றான்.
சட்டெனச் சுதாரித்த வேதா.. "இருப்பா.. பணம் கொடுக்கச் சொல்கிறேன்.." என..
"அய்யே.. நம்ம மேடம் வூட்டுலே யாராவது காசு வாங்குவாங்களா?.. அதெல்லாம் வேணாம் மேடம்.." எனக் கிளம்பிச் செல்ல.. ராஜேந்திரனோ அவனுக்குரிய கூலியை கொடுத்து விட்டு பிறகு பேசிக் கொள்ளலாம் என அனுப்பி வைத்தார்.
"அப்பா.. என்ன நடக்குதுப்பா.. இதுக்குத்தான் நான் சொன்னேன் பூனைக்குட்டி வெளியே வந்தாச்சுன்னு.. இப்பவாது உண்மையைச் சொல்லுவீங்களா?.." கோபமாகக் கத்தினான் பிரகாஷ்.
வேதா தன் மாமா ராஜேந்திரனைப் பார்க்க.. அவரோ அமைதியாக இரு எனக் கண்ணை மூடி திறந்தார்.
"ராஜ்.. என்ன விஷயம்.. எதுக்குப் பிரகாஷ் கோபமா இருக்கான்.. என்னாச்சு.. வேதா நீயாவது சொல்லேன் மா.." என ருக்மணி பதட்டத்துடன் கேட்டார்.
அத்தனை நேரமாகச் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரெனக் கோபப்படவும் அவருக்குத் தலையும் புரியவில்லை.. வாலும் புரியவில்லை.
"ம்.. அவங்க எப்படிம்மா சொல்லுவாங்க.. அதான் முழுப் பூசணிக்காயை மறைச்சி வைச்சிட்டாங்களே?.. நானே சொல்லறேன்.. இதோ நிக்கறாளே எங்கப்பாவோடு ஆசை மருமகள்.. என்னுடைய பெண்டாட்டி.. அவ இப்ப என்ன செய்யறா தெரியுமா?.. அவதான் அந்தச் சங்கத்தின் தலைவியாம்.. இந்தம்மா தான் இந்தச் செர்வீஸ் சென்ட்டரை நடத்தறா?.." எனக் குண்டை தூக்கிப் போட்டான் ருக்மணியின் மேல்.
"என்ன.. என்ன.. வேதா.. சங்கத்தின் தலைவியா?.. என்னடா சொல்லறே?.." அதிர்ந்து போன ருக்மணி வாயைப் பிளந்தாள்.
***************************************************************************