அத்தியாயம் 39
வாசலில் யாரோ குரல் கொடுத்தார்கள்,
"ஆச்சி.. உள்ளே வரலாமா?.."
கல்லூரி அன்று விடுமுறையானதால் சத்யா வீட்டில் தான் இருந்தாள்.
தன்னுடைய அறையிலிருந்து எட்டிப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. யாரோ நான்கைந்து பேர் நின்றிருந்தனர்.. கையில் தாம்பாளம் தாட்டில் பூ பழம் என்று என்னென்னமோ வஸ்துக்களுடன் இருந்தார்கள்..
அகல சரிகையிட்ட கெட்டிப் பட்டுப் புடவையில் இரு நடுத்தர வயது பெண்களும் அவர்களுள் அடக்கம்.
'ஏதாவது கோவில் டொனேஷனுக்கு வந்திருப்பாங்களோ?.. இல்லை பத்திரிக்கை வைக்க வந்திருப்பங்களோ?. யாருன்னு தெரியலையே’ என்று யோசித்தபடி வாசலுக்கு வந்தவள்,
வெளியே வந்த சத்யா, "யாரு.. என்ன வேணும்?.." என்று விசாரித்தாள்.
அதற்குள் அந்தப் பெண்மணி.. "பெரியாத்தா வீட்டில் இல்லையா?.. அவங்களைப் பார்க்க வந்திருக்கோம்.. நாங்க உங்க தூரத்து சொந்தம்தான்னுங்கோ..", என்று சொல்லிக் கொண்டிருந்த போதே சமையல் கட்டிலிருந்து ஆச்சி வந்து விட்டார்.
அவர்களைப் பார்த்தது குடு குடு வென்று வெளியே ஓடி வந்த கண்ணாத்தாள்," ஏட்டி மீனாட்சி.. வாலே உள்ளே வா.. வாங்க எல்லாரும்.. ஏன் அங்கனயே நின்னுபுட்டிங்க?..", என்று வரவேற்றாள்.
"இல்லை பெரியாத்தா.. உம்மைக் காணலையா அதேன்..", என்று சத்யாவைப் பார்த்து விட்டு இழுத்தாள் அந்தப் பெண்மணி.
அந்தப் பெண்மணியின் பார்வையையை தொடர்ந்த ஆச்சி, “என்னடி அப்படிப் பார்க்குறே.. இவ தாண்டி கதிரு கட்டிகிட்டவ.. மருமவ..", என்றாள்.
"அதான் பெரியாத்தா பாக்குறேன்.. வந்த மருமக வாழலைன்னு அரசல் புரசலா பேச்சு வந்துச்சு.. அதேன்.. ஆனா இங்கே வேற கதையா இருக்குது?.. அதுவும் கல்யாணம் பேசலாமுன்னு வந்திருக்கோம்..", என்றவளை ஏற இறங்கப் பார்த்த ஆச்சி,
"மீனாச்சி, மொதல்லே உள்ளார வா.. வந்து எல்லாம் உக்காருங்க.. பொறவு எல்லாத்தையும் பேசிபோடுவோம்..", என்று அனைவரையும் அழைத்துக் கூடத்தில் உட்கார வைத்துவிட்டு, சத்யா பக்கம் திரும்பி,
"சத்யாம்மா போடா.. போயி எல்லோருக்குக்கும் காஃபி பலகாரம் எடுத்து வையிம்மா, மொதல்லே எழிலை தண்ணி கொண்டராச் சொல்லிப்புடு..", என்று சொல்லிவிட்டு அவர்களுடன் பேசத் தொடங்கினாள்..
உள்ளே சென்ற சத்யாவிற்கு இனம் புரியா பதட்டம் கவ்வி கொண்டது.. 'யார் இவங்க அந்தம்மா பார்வையே சரியா இல்லையே.. என்னை ஏற இறங்க பார்க்குறாங்க.. இந்த ஆச்சி வேறு ஒண்ணும் சொல்லாம நம்மை உள்ளே அனுப்பிவிட்டது.. எதுக்கு வந்திருக்காங்க.. ஏதோ கல்யாணம்னு சொன்னாங்களே?.. யாருக்கு?..’, என்று யோசித்தபடியே வந்தவள், எழிலைக் கூப்பிட்டு தண்ணீரை அனைவருக்கும் கொடுக்கும்படி சொல்லிவிட்டு காஃபி தயாரிப்பதற்காக போனாள்.
சிறிது நேரத்தில் காஃபியுடன் பலகாரகங்களையும் எடுத்துக் கொண்டு வந்தபோது அப்பத்தா அவர்களுடன் ஏதோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.. ஏதோ தேதி குறிப்பதைப் பற்றியும் பேச்சு விழுந்தது..
"வாம்மா, இந்தா எல்லாருக்கும் காப்பியை கொடு..", என்று சொல்லிவிட்டு,
"மீனாச்சி..அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது.. வேணாமின்னு போனதுக்கு அப்புறம் திரும்பவும் ஒட்டுமா சொல்லு.. நீ கவலைப்படாதே.. என் பேரனிடம் நான் பேசுறேன்.. நீ கவலைப்படாம போயி ஆகுற வேலையைப் பாரு.. இன்னியிலேந்து பதினைஞ்சாவது நாள் கல்யாணந்தேன்.. சந்தோஷ சமாச்சாரம் பேசியிருக்கோம்.. அந்த இனிப்பை மொதல்லே சாப்பிடுவே..", என்று மீனாட்சியிடமும் அவர் உடன் வந்தவர்களிடமும் சொன்னார் கண்ணாத்தா ஆச்சி.
தயங்கியபடியே, "பெரியாத்தா.. கைவிட மாட்டியே..உன்னைய நம்பித்தான் நான் துணிஞ்சு இறங்கீருக்கேன்.. அப்புறம் சரிவராதுன்னு சொல்லிடக் கூடாது.. ஒரு பொண்ணு வாழ்க்கை பாருங்க.. உம்ம பேரன் சம்மதிப்பாங்களா?.. அதுவும் ஒருமுறை இப்படி ஆகிப் போச்சேன்னு ஏதும் சொல்லுவாங்களா?.. எனக்கும் வேற வழி தெரியலை பெரியாத்தா.."
"அடியே மீனா.. என் பேரனுங்க தங்கம்டி.. என் ஒரு சொல்லை மீற மாட்டனில்லை... முன்னையும் அப்படித்தான் கட்டுடா தாலியன்னு சொன்னதும் கட்டிபுட்டானில்லை. எத எதை எப்படிப் பேசணுமின்னு எனக்குத் தெரியுண்டி.. உன் பொண்ணு தான் இந்த வீட்டு மருமவ.. போதுமா?.. சங்கடப்படாமே போயி ஆகுற வேலையைப் பாரு தாயி..", என்று சொல்லிக் கொண்டிருந்தார் கண்ணாத்தா ஆச்சி.
அதற்குள் அனைவருக்கும் சிற்றுண்டி காபி கொடுத்து முடித்த சத்யா அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் என்ன செய்வது என்பது போல் பார்க்க,
சரியான சமயத்தில் உள்ளே வந்தார் சக்திவேல்.
அனைவரிடமும் பொதுப்படையாய் குசலம் விசாரித்தவர், தன் அன்னையைப் பார்க்க,
"அதான்பபா, கல்யாண விஷயம் பேசலாமின்னு மீனா வந்திருக்கு.. அன்னிக்கே பேசினோமே.. உன்னோட ஒண்ணுவிட்ட தங்கச்சிதானே மீனாச்சி.. அவளுக்குச் சமயத்திலே ஒத்தாசை செய்யாட்டி வேறு யாரு செய்ய முடியும்?.. எப்படியும் முடிவு இதான்னு எல்லாத்துக்கும் தெரியுமில்லே.. அப்புறம் எதுக்கு நாளை கடத்தணும்.. அதான் இன்னும் பதினஞ்சி நாள்ளே நல்ல முகூர்த்தம் இருக்குதாம்.. சரின்னு சொல்லிபுட்டேன்.... என்ன நான் சொல்லுறது சரிதானே..?", என்று தன் மகனிடம் மறைமுகமாய்ச் சம்மதம் கேட்டார் கண்ணாத்தா.
சக்திவேலுக்குத் தன் அன்னையின் வார்த்தை தான் கடைசி வார்த்தை அதை அப்படியே கேட்பார்.. அப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை தன் அன்னையின் பேரில்.
"ஆத்தா, என்னைய எதுக்குக் கேக்கறீங்க, உங்களுக்குத் தெரியாதா.. யாருக்கு என்னா எப்படிச் செய்யனுமிட்டு..உங்களுக்குச் சரின்னு பட்டா எனக்கும் சரி..”
"அப்ப என்ன பிரச்சனை.. மீனா.. உன் அண்ணனுக்கும் சம்மதம்தான்..", என்றார் தீர்மானமாய்.
"ஆத்தா.. எதுக்கும் நம்ம கதிரை ஒரு வார்த்தை கேட்டுபுடலாமா?.. நாளை பின்னே பிரச்சனையாகிடப் போகுது.. நமக்கு எல்லாம் சரியாத்தான் தோணுது.. அவனும் வளந்தவன் இத்தனை பிசினெஸுவையெல்லாம் கட்டிக்காக்கிறவன்.. அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப் போட்டா பின்னாடி பிரச்சனை எதுவும் இல்லை அதான்..", என்று லேசாய் இழுத்தவரை, தன் பார்வையால் அடக்கிய கண்ணாத்தாள்,
"ஏலேய் அவனைப் பத்தி என்னைய கேளு.. நான் சொல்லுறேன்.. பாவம் அவனே அடுத்து என்னான்னு குழம்பிப் போயிருக்கான்.. அவங்கிட்டே போயி.. கல்யாணம் கார்த்தின்னு தொந்தரவு செய்ய முடியாதில்லே.. நாம தான் பெரியவங்களா லெச்சணமா ஒரு முடிவு சொல்லோணும்.. நீ சும்மா இரு லேய்.. நான் பாத்துக்கறேன்.. ஆத்தா மேலே நம்பிக்கையை வையி.. எல்லாம் சரியா முடிச்சுத் தாரேன்..", என்று தன் முடிவை திட்டவட்டமாகக் கூரிய பின் அவருக்கும் அதற்கு மேல் அங்குப் பேச ஒன்றும் இருக்கவில்லை..”
அதன் பிறகு சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர்.. போகுமுன் ஒரு கவரில் ஏதோ ஃபோட்டோவையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்..
அவர்களுடனேயே சக்திவேலும் வாயிலுக்குச் சென்று மறைந்தார்.
அவர்கள் வெளியே செல்வதற்காகவே காத்திருந்த சத்யா அவசர அவசரமாய், "அப்பத்தா யாரு அவங்க.. எதுக்கு இங்கே வந்தாங்க.. யாருக்குக் கல்யாணம்?", என்று படபடத்தாள்.
அவளை நிதானமாக ஒரு பார்வை பார்த்த ஆச்சி, "யாருக்குன்னா.. இங்க நம்ம வீட்டுலேதான்.. என் பேரனுக்குத்தான்.. ஏன் கேக்குறே..?, போட்டோ படம் குடுத்துருக்காங்க பாக்குறியா.. நான் நேரிலேயே பொண்ணைப் பார்த்துருக்கேன்.. நான் பாக்க வளந்த புள்ளை.. பொண்ணு வளர்த்தியா பீர்க்கம் வளர்த்தியான்னு தெரியாமயா சொல்லுறாங்க.. கட கடன்னு வளந்து குமரியாயி நிக்குதில்ல இப்போ..", என்றார் அலட்சியமாய்..
நிஜமாகவே உள்ளூர குளிரெடுத்தாற் போல ஆகிவிட்டது சத்யாவுக்கு.. 'ஆண்டவனே இந்த அப்பத்தா என்னமோ சொல்லுதே.. யாருக்குன்னு சொல்லாம பொதுப்படையாய் சொல்லுதே.. பதட்டத்தில் அவளே யாருக்குக் கல்யாணம் என்பதற்கும் ஒரு விடை கண்டுபிடித்து வைத்துக் கொண்டாள்.
"அப்பத்தா.. அவங்க சரின்னு சொல்லிட்டாங்களா.. அதெப்படி முடியும்.. இது கொஞ்சம் கூடச் சரியில்லை..", என்றவளுக்குக் கண்கள் கரிக்கத் தொடங்கின..
"எதுடி பேத்தி சரியில்லை.. நீ வாழ மாட்டேன்னு சொன்னா அப்படியே என் பேரனை விட்டுபிட முடியுமா?.. அவனும் ஒரு குழந்தை குட்டின்னு வாழ வேணாமா.. நான் எப்ப என் கொள்ளுப்பேரனைப் பாக்குறது தூக்கி கொஞ்சுறது.. நீ தான் சரியில்லை.. முடியாது வாழமாட்டேன்னு உன் டம்பப்பைய தூக்கிட்டு ஆபீசுக்கு போறே வாரே.. ஆனா நாங்கள்ல்லாம் அப்படியே அவனை உட்டுட முடியுமா சொல்லு... என்ன இருந்தாலும் என் ரத்தம்டி என் பேராண்டி.. அதான் பார்த்தேன்.. சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்..நீயோ ஒண்ணுதுக்கும் சரிவரலே.."
இப்போது கண்கள் நன்கு கலங்கி முகம் வியர்த்து கொட்டத் தொடங்கியது சத்யாவுக்கு.. அந்த நொடி அவளுக்குச் சர்வ நிச்சயமாய்ப் புரிந்து போனது யாரும் தனக்கு ஆதரவு இல்லை என்று.. தனக்குப் பரிதாபம் பார்த்த அப்பத்தா கூடத் தன் குடும்பம் என்று வரும்போது வேறு விதமாய் யோசிக்கிறாரே என்று வருத்தம் அவளை வாட்டியது..
சில நாட்களாகவே தனக்கும் தன் கணவனுக்கும் இடையே இருக்கும் பனித்திரையை எப்படி விலக்குவது என்ற குழப்பத்தில் தான் இருந்தாள் சத்யா.. தன் மனம் அவனை விரும்புவதை அன்று தோப்பு வீட்டிலேயே சர்வ நிச்சயமாய்ப் புரிந்து தான் வைத்திருந்தாள்..
ஆனாலும் கூட ஒரு சிறு ஈகோ அவளாய் அவனிடம் இயல்பாய் சேர விடாமல் தடுத்ததையும் புரிந்து தான் வைத்திருந்தாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனை மாற்றிவிடலாம் என்று நினைத்திருந்தவளுக்கு இது என்ன வேண்டாத குழப்பம் என்றே இப்பொழுது தோன்றியது..
ஆனாலும் தன் தைரியத்தைக் கை விடாமல்.. "அப்பத்தா.. நிச்சயம் நீங்க எடுத்த முடிவுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. என் புருஷனுக்கு நீங்க ரெண்டாம் கல்யாணம் செய்ய அனுமதிக்க மாட்டேன்.. உங்களால் என்னை மீறி அவருக்குக் கல்யாணம் செய்ய முடியுமா.. கதிர் ஒத்துக்க மாட்டாரு", என்று ஆத்திரமாய்க் கத்தினாள்.
"அடியே சீமை சிறுக்கி.. கேணக் கிறுக்கி.. நீ என்னாடி என் பேரனுக்கு அனுமதி தரது கல்யாணம் கட்ட.. அவன் சம்மதிக்காமலா நான் இவ்வளவு பெரிய முடிவு
எடுப்பேன்.. அதான் நீ ஏதோ காகிதத்திலே நிறையக் கையெளுத்து போட்டு குடுத்ததா என் பேரன் முந்தி எங்கிட்ட குடுத்து வச்சான்.. அது போதும்டி எனக்கு.. எங்க கிராமத்தில் இப்படி அத்துவிடறதெல்லாம் சகஜம்டி.. எளுதி வாங்கிட்டு இது இல்லாட்டி அதுன்னு போயிகிட்டே இருப்பாங்க..”
“ஏடி நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. நீயும் வாழாமாட்டே அவனோட.. அவனும் சந்தோசமா இருக்கக் கூடாதுன்னா.. இதென்னடி நியாயம்.. நிச்சயம் நான் சொன்னது போலே கல்யாணம் நடக்கும் இன்னும் பதினஞ்சு நாளிலே.. உன்னாலே ஆன சோலியைப் பாரு.. வேணுமின்னா அதான் ஆபிசு வேலைக்குப் போறீயே அதிலேயே இருந்துக்கோ.. உன்னை வேலையை விட்டு தூக்காம வச்சிக்கச் சொல்லுறேன்..", என்று ஒரே போடாகப் போட்டாள் கண்ணாத்தா..
எப்போதும் போல் ஆராயாமல் அலசிப் பார்க்காமல் கோபமும் அதற்குப் போட்டியாய் துக்கமும் தலைதூக்க,
"அப்பத்தா.. எப்ப இப்படிச் சொல்லிட்டிங்களோ.. போதும் இனி இந்த வீட்டில் நான் எதுக்கு இருக்கணும்.. தெரியாம நான் செஞ்ச தப்புக்குத் தினம் தினம் வார்த்தையால் அடிபட என்னாலே முடியாது.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் என்னாலே சொல்ல முடியும் உங்க பேரன் இனியாவது சௌக்கியமா சந்தோஷமா யாரோடாவது இருக்கட்டும்.. எனக்கு என்ன காத்திருக்குன்னு நான் பார்த்துக்கறேன்..”
“போதும் அப்பத்தா.. நல்லா கூட்டி வச்சு கழுத்தை அறுத்துட்டீங்க..இனி உங்க யார் தயவும் தேவையில்லை.. ஆனா அவருக்கு இந்தக் கல்யாணம் மகிழ்ச்சியைத் தரும்னா நான் அதுக்குத் தடை சொல்லமாட்டேன்.. நீங்கள்ளாம் இதுவரை எனக்குக் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி..",
என்று சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து அகன்று தன் அறைக்குள் சென்று தன் பெட்டியை தயார் செய்வதற்காக அங்கிருந்து நகரத் தொடங்கினாள்.
அதற்குள் அனைத்தையும் கேட்டபடியே உள்ளே ஏற்கனவே வந்திருந்த சக்திவேல்,
"சத்யாம்மா.. என்னம்மா ஏதேதோ பேசறே.. இதெல்லாம் தப்பும்மா..", என்று ஆரம்பிக்க,
ஆச்சியோ, "லேய் சக்தி, இதப்பாருடா.. எல்லாத்தையும் முளையிலேயே கிள்ளிபுடணும்.. நாளைப் பின்னே கல்யாணம் காட்சின்னு இந்த வீட்டிலே ஏகப்பட்ட வேலையிருக்கு.. அப்போ போயி இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் வெக்க முடியுமா சொல்லு..”
“அதுவே இப்பத்தான் சரியா யோசிக்க ஆரம்பிச்சிருக்கு.. புள்ளை சரியாத்தான் சொல்லுது.. இது புருசன் பெண்ஜாதி சமாச்சாரம் நாம யாரு தலையிட.. ஆற சோலியைப் பாருடா தம்பி..",
என்று சொல்லிவிட்டு தன் கண்டாங்கிச் சேலையின் முந்தியை ஒரு உதறு உதறிவிட்டு இழுத்து சொறுகியபடி தன் மகனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டார்.
அதற்குமேல் அங்கு நின்று என்ன சாதிக்கப் போகிறோம் என்று சத்யா அறைக்குள் சென்று தன் உடைமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
மனம் நிறையக் காயப்பட்டிருந்தது.. என்ன சொல்லுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.. தான் எங்குச் செல்லப் போகிறோம் என்பதும் புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்து போனது.. தன்னுடைய அகங்காரத்தால் தான் பெரிய பொக்கிஷத்தை தொலைத்துவிட்டோம் என்பது தெள்ளத் தெளிவாய் தெரிந்து போனது..
'இப்போதும் கூட ஒன்றும் கெட்டு போகவில்லை.. கதிரிடம் போய்ப் பேசினால்.. அவன் நிச்சயம் தன்னை ஏற்றுக் கொள்வான் தான்.. ஆனால் அது அவளுக்கே நியாயமாய்ப் படவில்லை..பாவம் அவன் தன்னால் எந்தச் சுகத்தையும் அனுபவிக்கவில்லை..
‘இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் தனக்காக அனைவரிடமும் பரிந்து பேசி தன்னிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான்.. இத்தனைக்கும் எவ்வளவு பெரிய மனுஷன் அவன்.. ஒரு குழந்தை மாதிரி தன்னைச் சுற்றி சுற்றி வந்து என் ஒருத்தியின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு அவமானங்களைச் சகித்திருக்கிறான்..’
‘அப்படிப்பட்டவனிடம் போய் நான் தப்புச் செஞ்சிட்டேன் என்னை ஏத்துக்கோ என்று சுயனலமாய்க் கோரிக்கை வைக்க மனம் ஒப்பவில்லை அவளுக்கு...சீ இனியாவது அவன் வாழட்டும்.. அவனைப் பிடித்த கஷ்டம் தொலைந்து போய் அவனாவது நன்றாய் இருக்கட்டும்.. அவனுக்கு நான் செய்யக் கூடிய ஒரே பிராயச்சித்தம் இது தான்’ என்றே அவளுக்குத் தோன்றியது..
ஆனாலும் கூட மனம் தன் கணவனின் அருகாமைக்காகவும், அந்த அனுசரித்துப் போகும் பண்புக்காகவும் ஏங்குவதைத் தடுக்க முடியவில்லை சத்யாவால்.
கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்று இருக்கும் போது அதன் அருமை தெரியாமல் அதைப் பெற்று இழக்கும் போது இன்னமும் வலியும் வேதனையும் அதிகமாய்த்தான் இருந்தது.
வேண்டாம்.. இனி அவன் நன்றாய் இருக்கட்டும், என்றே அப்போதும் அவள் நினைத்தாள். இன்னமும் கூடத் தானாய் எப்படி அவன் காலில் விழுவது என்ற சின்னத் தயக்கம் தான் அவளைக் கட்டிப் போட்டிருக்கிறது என்பதை அந்தப் பேதை அறியவில்லை.
மெல்லப் பெட்டியை அடுக்கி முடித்தவள்.. சரி இப்போதே நாம் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று பெட்டியை மூடி கையில் எடுத்துக் கொண்டு தன் ஹேண்ட் பாகையும் எடுத்துக் கொண்டு ரூமை விட்டு வெளியேற நினைக்கையில், அறையின் கதவு தாளிடப்படும் சத்தம் கேட்டது.
சட்டென்று தாழ்ப்பாள் சத்தத்தில் திரும்பியவள் அங்கே அறையின் வாசலில் கதவருகே தன் கணவன் நின்றிருக்கக் கண்டாள்.
அடுத்த கணம்...
***********************************************