கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

போவோமா ஊர்கோலம்

sudarshangopalan

New member
வணக்கம்,
என்னுடைய வீடியோவுக்கு ஆதரவு அளித்து அனைவருக்கும் நன்றி.

சிறு வயதில் இருந்தே நிறைய யாத்திரைகள் சென்றிருக்கிறேன் ..கல்லூரியில் படிக்கும் பொழுது தோன்றியது நாம் செல்லும் இடங்களை அடுத்தவர்களுக்கு உபயோகமாக பதிவு செய்தால் என்ன என்று அப்படி ஆரம்பித்தது தான் இந்த சேனலில் முதன் முதலில் எடுத்தது மலையாள திவ்ய தேசம் .

வ்ரஜ மண்டல யாத்திரை விடியோ ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று பதிவிடுகிறேன் .

இந்த வ்ரஜ மண்டல பரிக்ரமா என்பதே ஒரு வகையில் இயற்கையில் தெய்வத்தை காண்பதே அதாவது காடுகள் , மலைகள் , நதி , ஏரி , குளம் மற்றும் மண் கூட புனிதமாக கருதப்படுகிறது .
இந்த யாத்திரையை முதன் முதலில் செய்தவர் உத்தவர் .கிருஷ்ணர் மதுரா வந்தபின் தன்னை வளர்த்த தாய் , தந்தையான யசோதா , நந்த மஹாராஜ் மற்றும் கோபிகைகளுக்கு ஆறுதல் கூற அனுப்பி வைக்கிறார் அப்பொழுது கோபிகைகள் சொல்லும் கதை தான் கிருஷ்ண லீலை அவற்றை கேட்ட உத்தவருக்கு புரிகிறது அவர்கள் எந்த அளவு கிருஷ்ண பக்தியில் இருக்கிறார்கள் என்று .

இந்த யாத்திரையில் மொத்தம் 12 வனங்கள் , 12 உபவனங்கள் , 12 பிரதிவனங்கள் , 12 ஆதி வனங்கள் சேர்த்து 84 கோசம் அதாவது 275 கிலோமீட்டர் .

கால மாற்றத்தால் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் , இன்றும் இந்த யாத்திரை ஒவ்வொரு வருடமும் பக்தியோடு அநேக மக்கள் செய்கிறார்கள் அங்குள்ள மக்களும் தங்களை பிரிஜ் வாசிகள் நாங்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள்

 
Top