கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மகளதிகாரம்-1

Akila vaikundam

Moderator
Staff member
மகளதிகாரம்-1



ஒரு நள்ளிரவு நேரம் தென்மாவட்டத்தின் இந்திய வரைபடத்தில் இல்லாத ஒரு சிறுகிராமம் அங்கிருந்த ஒரு குடிசை வீட்டின் உற்பகுதி சிறு லாந்தர் விளக்கின் வெளிச்சம் மட்டுமே இருந்தது

வெளிப்புறம் முழுவதும் அடர் இருட்டு.


குடிசையின் சுற்று சுவர்
மூன்று அடி மட்டுமே இருக்கும் களிமண் சுவர்

அதன் பிறகு எல்லாமே பனைஒலையால் ஆனது தான் சுவர் போல அழகாக சுற்றிலும் வேய்ந்திருந்தது கூறையும் பனைஒலையால் ஆனவை தான்

வாசலில் கதவு கூட இல்லை ஒரு கோணியை நீளமாக வெட்டி அதில் நடுவில் தையல் போட்டதை தான் கதவாக உபயோகப் படுத்துகிறாகள்

மண்தரை சாணம் போட்டு மொழுகியதில் உண்டாகும் சிறுசிறு துகள்கள் குடிசை முழுவதும் வியாபித்திருந்தது…

அந்த தரையில் தாயின் பழைய புடவையை கீழே விரித்தபடி ஒரு சிறுமி நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஐந்து வயதிற்க்கும் குறைவான வயது குளிருக்கு இதமாக அணைத்து கொள்ள ஏதுமில்லாமல் தனது இருகால்களையும் வித்யாசமான முறையில் அணைத்த படி உறங்குகிறாள்.



அச்சிறுமியின் தாயோ அவளின் தலைமாட்டில் அமர்ந்து தனது இருகால்களை மடித்தபடி அமர்ந்திருக்க அதன் மீது தலையை தாங்கியிக்க கைகளோ தலையை சுற்றி போட்டபடி அரை தூக்கத்தில் யாரையோ ஏதிர் பார்த்து காத்திருந்தாள்.


தீடிரெனெ கோணித்தூணி விலக

ஒர் கம்பீரமான ஒருவம் எட்டிப்பாத்தது


கனி….

*****

கனி…

ம்ம்...யாரு என்று கண் திறந்தார் அந்த பெண் அடுத்த கணமே மகிழ்ச்சியில் முகம் விரிந்தது.


என்னங்க வந்துட்டிங்களா...
வாங்க…உள்ள வாங்க என்று வழிவிட

உள்ளே வந்தவர் மனைவியின் கைகளில் இரு பைகளை கொடுத்தவர் அடுத்த நிமிடமே மனைவியை ஆரத் தழுவினார்.


எப்படியிக்க கனி….
இளச்சிட்டியே...சரியா சாப்பிடலையோ என்று அவளை ஆராய்ந்த படி கவலையாக கேட்டார்.

இல்லங்க நல்லாதான் சாப்பிடறேன் நீங்களும் தான் இளைச்சிட்டிங்க...வேலை..வேலைனு உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திக்காதீங்க...என்று அவர் கொடுத்த பைகளை ஒரமாக வைத்தவள்


அவரை பார்த்து எனக்காவது பாப்பா இருக்கா நீங்க அங்க எங்களுக்காக தனியா கஷ்டப்படறீங்க எப்போங்க நாம சேர்ந்து இருக்கறது என்று கவலையாக கேட்க

கவலை படாத கனி அங்க ஆரம்பிச்ச தொழில் இப்போதான் வருமானம் வர தொடங்குது கூடிய சீக்கிரம் அங்க வீடு பாத்துட்டு உன்னையும் பாப்பாவையும் கூப்பிட்டு போறேன் என்றவரிடம்


ஆமா ஏங்க வர இவ்ளோ தாமதம் என்று கனி கேட்டார்.


அது ஒன்னுமில்ல பஸ் மாறி மாறி வந்தேன் அதான் வர தாமதம் என்றவரிடம்

ஒரே பஸ்ல வரலாமே ஏன் மாறி வந்திங்க

ஒரே பஸ்ல வந்தா கட்டணம் அதிகம் மாறி மாறி வந்தா கொஞ்சம் மிச்ச மாகும் அந்த காசுல ஏதாவது உங்களுக்கு வாங்கிட்டு வரலாம் இல்லையா அதனால தான் நான் மாறி மாறி வந்தேன்
என்பவரை பார்த்து கண்களில் கண்ணீருடன்


சரி பரவால்லங்க போகும் போதாவது ஒரே பஸ்ல போங்க மாறி மாறி எல்லாம் போக வேண்டாம்…

அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு எதுக்கு வந்ததுமே நான் போறத பத்தி பேசுற கனி


சரி பாப்பா எங்கே என்று மகளைக் கண்களால் தேட

இவ்ளோ நேரம் முழிச்சி இருந்தா நீங்க வருவீங்க பாக்கனும்னு இப்போதான் தூங்கினா இருங்க எழுப்பறேன்
அதுக்கு முன்னாடி நீங்க சாப்பிடுங்க என்று கூப்பிட்டாள்


இல்லல்ல பாப்பாவ எழுப்ப வேணாம் தூங்கட்டும் நா இப்படியே பாத்துக்கறேன் என்றவர்

தூங்கும் தன் மகளின் அருகில் வந்து அமர்ந்தார்... ஆசையாக பிள்ளையின் தலையை வருடினார் அக்குழந்தையின் நெற்றியில் ஒரு மென் முத்தம் வைத்தார் பிறகு அக்குழந்தைக்கு நோகா வண்ணம் தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார் அப்பொழுதுதான் யோசித்தபடி
கனி அந்த பை உள்ள ஒரு காகித பொட்டலம் இருக்கும் பாரு அதை கொஞ்சம் எடேன்...

என்னங்க இது என்று கேட்டபடியே அவர் கூறியதை எடுத்துப் பார்க்க ஒரு காகிதத்தில் ஏதோ ஒன்று சுற்றப்பட்டு இருந்தது ஆராய்ச்சி யாக அதை பிரித்தாள் கனி
சில பூந்தி துகள்களை ஒரு பொட்டலத்தில் சுற்றி வைத்திருந்தார் அந்தக் குழந்தையின் தந்தை…


என்னங்க இது பூந்தியா என்றவளிடம்
சிரித்தபடியே மதியம் பசிக்குதுன்னு பஸ் ஸ்டாண்ட்ல வாங்கினேன் அப்போ வாய்ல வைக்கவும் உடனே பாப்பா ஞாபகம் வந்தது இவளுக்கு ரொம்ப பிடிக்குமே அதனால சாப்பிட மனசே இல்ல என்று கூறியவர் அந்த காகிதத்தில் சுற்றி வைத்திருந்த சிறு அளவிலான பூந்தியை தனது மடியில் வைத்திருந்த மகளுக்கு எடுத்து வைத்தபடி ஊட்டத் தொடங்கினார்


தூக்கத்திலேயே அதை மெதுவாக ரசித்து சாப்பிட ஆரம்பித்தது அந்த பாப்பா

குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடியே ஊட்டி முடித்தவர்
கனி நா கொடுத்த பை உள்ள ஒரு சின்ன துணிப்பை இருக்கும் பாரு அதை எடு என்று கூற


கனியோ அவர் சொன்னது போல் அவர் கொடுத்த பையில் இருந்த ஒரு சிறிய ரக துணிப்பையை வெளியில் எடுத்தாள்

எடுத்தவள் அதன் உள்ளே என்ன என்று பார்க்க அது குழந்தைகள் உடுத்தும் ஒரு அழகிய கவுன்...

அட பாப்பாக்கு புதுத்துணி எடுத்தீர்களா அழகா இருக்கிங்க என்று கேட்டபடியே அதை முன்னும் பின்னும் கனி பார்க்க


அதை அவளின் கையிலிருந்து எட்ட வாங்கியவர்



தூங்கும் அக்குழந்தையின் பழைய ஆடையை கழட்டியவர் கொண்டு வந்து புது துணியை மாட்ட ஆரம்பித்தார் .



கனி பதறியபடி என்னங்க பண்றீங்க அவளை எழுப்ப வேணாம்னு சொல்லிட்டு நீங்களே எழுப்ப பாக்கறீங்களே முழிச்சிக்க போறா காலைல பாத்துக்கலாம் என்று கூறினாள்.

இல்ல கனி முழிக்காத மாதிரி மெதுவா போட்டு பாக்கறேன் இது மத்தியானம் நேரம் பஸ் மாறுவதற்காக மதுரையில் இறங்கினேன் அப்போ ரோட்டோரத்தில் ஒருத்தர் போட்டு வித்திட்டு இருந்தாங்க


செலவுக்கு வைச்சி இருந்த காசுல இதை வாங்கினேன் இது பாப்பாக்கு பத்துமா பத்தாதானு ஒரே கவலை


பத்தாம போச்சுன்னா காசு வீண் இல்லையா என்று அவசரமாக மகளுக்கு போட்டு அழகு பார்க்க அது கச்சிதமாகப் பொருந்தியிருந்தது திருப்தியாக மகளை ரசித்தவர்


ரொம்ப நல்லா இருக்குல்ல கனி ரொம்ப பயந்துட்டே இருந்தேன்

பணம் பத்தாம சாப்பிடறதுக்கு வச்சிருந்த காசையும் எடுத்து குடுத்தேனா எங்க பத்தாம போனா என்ன பண்றதுன்னு வீடு வர்ற வரைக்கும் கவலைப்பட்டேன் இப்போ பாரு பிள்ளைக்கு அழகா இருக்கு இப்பதான் எனக்கு திருப்தியா இருக்கு என்றவரை கோபமாக முறைத்த கனி

சாப்பிடறதுக்கு வெச்சிருந்த காசுல குழந்தைக்கு துணி வாங்கி இருக்கீங்க பசி பொருக்காம மீதி காசுல பூந்தி வாங்கி அதையும் சாப்பிடாம புள்ளைக்கு கொண்டு வந்துட்டீங்க ஏங்க இப்படி இருக்கீங்க என்று கோபித்துக் கொண்டவள் மகளை வாங்கி கீழே கிடத்தினாள்.


அதற்குள் அவரோ தனது பைகளில் கொண்டு வந்திருந்த புத்தம்புதிய ஒரு பெட்சீட்டை எடுத்து மகளுக்கு போர்த்தி விட்டார்.


பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கோச்சுக்காத கனி இந்த முறை உனக்கு நான் எதுவும் வாங்கல செலவுக்கு கூட அதிகம் பணம் கொண்டு வரல எப்படியாவது சமாளிச்சிகோ


கண்டிப்பா அடுத்த முறை நான் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன் நான் ஊருக்கு போனதும் உடனே உனக்கு மணி ஆர்டரில் பணமும் அனுப்புறேன் என்று மனைவியை சமாதானப்படுத்த


கனியோ நான் இப்போ உங்ககிட்ட எதுவுமே கேட்கலையே நீங்க போன தடவை அனுப்பின பணத்தையே நான் இன்னும் மிச்சம் வைத்து இருக்கேன் நீங்க தான் வரும்போதெல்லாம் எல்லாமே வாங்கிட்டு வரீங்களே ஆனாலும்
இப்படி பட்டினி கிடந்து பிள்ளைகளுக்கு வாங்கிட்டு வரனும்னு என்னங்க அவசியம்

சரி வாங்க உங்களுக்காக நான் சமைச்சு வைத்திருக்கேன் சாப்பிடலாம் என்று ஆசையாக அவருக்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்து அவரிடம் பரிமாறத் தொடங்கினார்.

அதன் பிறகு இருவருமே அன்றைய இரவை அழகான இரவாக கழித்தனர் விடியக்காலை கோழி கூவும் பொழுது கிளம்பத் தொடங்க கனியோ ஏமாற்றமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இங்க பாரு கனி நான் கிளம்பும் போது நீ முகத்தை இப்படி வச்சுக்கிட்டா நான் எப்படி சந்தோஷமா போக முடியும் சொல்லு இன்னும் கொஞ்ச நாள் தான் நம்மள இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்ட சொந்தக்காரங்க முன்னாடி நாம கண்டிப்பா ஒரு நல்ல நிலைமைல இருக்கனும் இல்லையா அதனால சந்தோஷமா என்னை அனுப்பி வை கூடிய சீக்கிரம் நாம எல்லாரும் சேர்ந்து இருப்பதற்கு என்னென்ன செய்யணுமோ அதை நான் செய்றேன்... கொஞ்சம் சிரியேன் கனி என்று கெஞ்சியவரை பார்த்து கண்களில் கண்ணீருடன் சிரித்தாள் கனி..


கனியின் முகத்தை இருகைகளாலும் தாங்கியவர்
பாப்பாவை நல்லா பாத்துக்கோ என்று கூற

இருங்க நான் அவளை வேணா எழுப்பறேன் என்றவளிடம்

அசந்து தூங்குறாரு எதுக்கு எழுப்பனும் கனி


நீங்க வந்துட்டு போனது தெரிஞ்சா அவ ரொம்ப அழுவாங்க என்னால சமாளிக்க முடியாது…



இப்ப நீ எழுப்பி விட்டா அவளை கொஞ்சவே நேரம் போதாது அப்புறம் எப்படி நான் முத பஸ்ஸை
பிடிக்கறது ?அதும்மில்லாம என்னை பார்த்தா ஊருக்கு வேற அனுப்ப மாட்டாளே கனி அதனால அவ தூங்கட்டும் நான் போயிட்டு வரேன் என்றவர் மனைவியின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு விடுவிடுவென கிளம்பி சென்றார்.


அவர் தெருவில் இறங்கி நடக்க தொடங்கவுமே எதிர் பட்ட ஒரு சிலரோ அவரை பார்த்து அட நீ எப்போ ஊருக்கு வந்த பாண்டி என்று கேட்டவர்களுக்கு எல்லாம் பதில் கூறியபடி முதல் பஸ்ஸை பிடிப்பதற்காக பஸ் நிலையம் நோக்கி விரைந்தார்.


காலையிலேயே ஐந்து வயது பாப்பா எழ அவளுக்கு வித்தியாசம் தெரிந்தது.


குளிருக்கு இதமாக தன் மீது ஒரு போர்வை போர்த்தி இருக்க ஆச்சரியத்துடன் அதை நகர்த்தி விட்டு எழுந்து நிற்கவும் மற்றொரு வித்யாசம் புரிந்தது.

தான் அணிந்திருக்கும் புத்தம்புதிய உடுப்பு தான் அது சந்தோஷத்தில் தன்னை மேலிருந்து கீழ் வரை தனக்குத்தானே ரசித்தவள் தனக்கு தானே ஒருமுறை சுற்றிக் கொண்டாள் உடனே எப்படி என யோசிக்கவுமே புரிந்தது தனது தந்தை நேற்றிரவு வந்திருக்கிறார் என்று


பிறகு குடிசையை விட்டு வெளியே வந்தவள் குடிசை முழுவதும் அப்பா அப்பா என்று கத்தியபடி அழுகையுடன் தேடத் தொடங்கினாள் குழந்தையான பாப்பா .


அவளின் அழுகை கலந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கனி மகளை தூக்கிக்கொண்டு


ஏன் பாப்பா அழற என்று சமாதானப் படுத்தியபடி கேட்க

பாப்பாவோ அவள் தாயிடம் அம்மா அப்பா நைட் வந்தாங்களா என்று ஏக்கத்துடன் கேட்பது


ஆம் என்று கனி தலையை அசைக்கவும் உடனே தாயை பலம் கொண்ட மட்டும் அடிக்கத் தொடங்கியது அந்த குழந்தை முகம் தலை முதுகு என பல அடிகளை கொடுத்தது பிறகு கதறி அழுதபடியே தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு


ஏம்மா என்ன எழுப்பல நான் அப்பாவைப் பார்க்கணும் பார்க்கணும் எத்தனை நாள் சொல்றேன் எனக்கு நீங்க அப்பாவை காட்டவே மாட்டேங்கிறீங்க போங்கம்மா என்று தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு


தான் தூங்கும் போது வீட்டுக்கு வந்த தனது தந்தை எப்படி இருந்தார் என யோசிக்கத் தொடங்கியது அவளுக்கு எதுவுமே ஞாபகம் வர மறுக்கிறது ஏதோ ஒரு கம்பீரமான ஆடவன் அவரின் மடியில் தூக்கி வைத்து புத்தாடை அணிவித்தது இனிப்பு ஊட்டியது எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது ஆனால் தந்தையின் முகம் மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அப்பா அப்பா என்று கதற...அப்பொழுது தாயின் உருவம் மறைய தொடங்க குழந்தை தரையில் விழுந்தது...வலியில் குழந்தை துடிக்க அப்பொழுது ஒரு ஆடவன் குழந்தையின் அருகே வந்து தூக்க எத்தனிக்கும் வேளை ஒரு கை வேணாம் என்பது போல் தடுத்து இழுத்துச் செல்ல


குழந்தையோ அப்பா ‌...அம்மா...என்று தனிமையில் கத்த தொடங்கியது…..தீடிரென இடமே இருட்டு சூழ புகையாக மறைந்தது…தீடிரென ஒரு வெளிச்சம் விழ ஒரு அழகிய பங்களா சொகுசான படுக்கையறை ஐம்பது வயது மதிக்கதக்க பாப்பா உறங்குகிறாள்.



நன்கு தூங்கிக் கொண்டிருந்த பாப்பாவுக்கு நெஞ்சை அடைப்பது போல் தோன்றியது மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டு அவளும் அப்பா அப்பா என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தாள்…


சுற்றும் முற்றும் பார்க்க அவளது அறையில் பாப்பா உறங்கிக் கொண்டிருக்கிறாள் இவ்வளவு நேரம் வந்தது அவளின் சிறுவயது கனவு ஆம் சிறுவயதில் இதே போல் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது பலமுறை நடந்திருக்கிறது தந்தையை ஒருமுறை கூட அவள் கண்டதே கிடையாது நன்கு விவரம் தெரிந்த பின் தன் தந்தையின் முகத்தை நினைத்துப் பார்க்கத் தொடங்கி இருக்கிறாள் அவளின் சிறுவயது ஞாபகம் எதிலுமே தந்தை இல்லை…


தலையை குலுக்கிய படி அறையின் மூலையில் இருந்த தண்ணீர் எடுத்து பருகுகிறேன்….

அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்றபடி அவுட் ஹவுஸை பார்க்க இன்னும் வெளிச்சம் உள்ளது.

அப்படியென்றால் கணவர் இன்னும் உறங்கச் செல்லவில்லை இன்னும் அவுட் ஹவுசில் அமர்ந்து கொண்டு மது அருந்தி கொடுக்கிறார் அவருக்கு உதவியாக ஒருவர் இருக்கிறார் கேட்டதை சமைத்துக் கொடுக்க இப்பொழுதெல்லாம் கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறார்


இவள் சண்டை போடுகிறாள் என்று இப்பொழுதெல்லாம் இவர்கள் அறையில் வந்து கூட உறங்குவதில்லை அங்கேயே உறங்கிக் கொள்கிறார் முக்கியமான நிகழ்ச்சிக்கு எங்காவது செல்லவேண்டுமானால் மட்டும் இவளை உடன் அழைத்துச் செல்வது
இல்லையென்றால் பிள்ளைகள் விட்டிற்கு வந்தால் மட்டும் மிகவும் அன்பான குடும்ப தலைவராக நடிப்பார்.


நினைக்கும் பொழுதே எரிச்சல் வர
மனக்குழப்பமும் தோன்ற இதோ பால்கனியில் வந்து அமர்கிறேன் .



நான் பாப்பாத்தி வயது ஐம்பது, பாப்பா என்று எல்லோராலும் அழைக்கப்படுபவள்,ஏன் இந்த பெயரை தாயார் வைத்தார் என இதுவரை புரியவில்லை ஓருவேளை எனக்கு பெயரே வைக்கவில்லையோ என அவ்வப்போது குழப்புவது உண்டு,


இந்த பெயரால் நான் அனுபவித்த கேலியும் கிண்டலும் ஏராளம்...பிள்ளைகள் முதல் கணவர் வரை தனது பெயரை கேலியுடனே உரைப்பர்.


கணவர் ராஜாவை திருமணம் செய்யும் பொழுது வயது இருபது அன்று முதல் இன்று வரை இல்லத்தரசி மட்டுமே...
இருகுழந்தைகளின் தாய்
அன்பான கணவனிடத்தில் மனைவி என்னும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து அடிக்கடி புகழுரைகள் வாங்குபவள்


ஆனால் மகளாக?

என்ன செய்தேன்
எதுவுமில்லை....

சுயநல வாழ்க்கையில் இந்த இந்நாள் ராணி முன்னால் இளவரசி தந்தைக்காக எதை செய்தாள்.


சதுரங்க ஆட்டத்தின் விதிமுறைகள் தெரியாவிட்டாலும் ராணியின் பங்களிப்பையும் ராஜாவின் முக்கியத்துவத்தையும் அறிந்தவள் நான்

அதனாலோ என்னவோ ராணியாக எனைநினைத்து குடும்பம் எனும் சதூரங்க ஆட்டத்தை என் வசம் வைத்துள்ளேன்




பிள்ளைகள் வளரந்து வேலை திருமணம் என வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர்.

கணவரோ தினம்தினம் அரசியலில் உழன்று கொண்டிருக்க

இப்போதைக்கு ஓரு ஆறுதல் எனது தந்தை மட்டுமே...என்னுடன் எனது வீட்டில் இருக்கிறார்.

எண்பது வயதை நெருங்குபவர் நோயாளி என்று ஊரும் உறவும் சொன்னாலும் இதுவரை என்னை அவர் தொந்தரவு செய்தில்லை

தாய் சில வருடங்களுக்கு முன்பு தந்தையை தனியாக விட்டுச் செல்ல அன்றுமுதல் இன்று வரை அவருக்காக ஒதுக்கப்பட்ட
அவரின் தனியறையில் தான் வாசம்…


பெண் பிள்ளை என்பதாலோ என்னவோ தந்தையை யாரிடத்திலும் விட பயம் அவரும் அப்படிதான் போல மகளை விட்டு எங்கேயும் செல்வதில்லை..


அவர் உள் அறையில்ஆழ்ந்த துக்கத்தில் இருக்க வெளியில் எனக்குத்தான் பல நியாபகங்கள்.

தந்தைக்கு வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல்நிலையில் ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்க சமீப காலமாக ஆகாரம் குறைய ஆரம்பித்தது…

இதோ உறங்கும் எனது தந்தையை எட்டிப்பார்க்க எலும்பும் தோலுமாக அந்த அறைக்கு சற்றும் பொருந்தாமல் மிக மெல்லியதாக மூச்சுவிட்டபடி உறங்கிக் கொண்டிருக்கிறார் இல்லையில்லை உறங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவரைப் பார்க்க பார்க்க என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கரை தட்டியது தன் ஒருத்திக்காக இந்த மனிதர் செய்த தியாகங்களும் கஷ்டங்களும் தான் எத்தனை


தந்தையை இந்த கோலத்தில் பார்க்கும் பொழுது மனம் ஆறவில்லை தன்னுடைய அழுகை அவரின் அமைதியை தொந்தரவு செய்து விடுமோ என்று எண்ணி கதவை மிக மெதுவாக மூடிவிட்டு மீண்டும் பால்கனியில் வந்து அமர நாட்கள் மீண்டும் எனது ஐந்து வயதிற்கு செல்கிறது.


தொடரும்..
 
Top