கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 15

மஞ்சம் 15

தன் அறையில் வித்யாவை கண்ட அதிதி ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்றாள். இவ்வளவு சீக்கிரம் தன் அம்மா தன்னை தேடிக்கொண்டு விடை அறிய வருவாள் என்று அதிதி எதிர்பார்த்திருக்கவில்லை.அதிதியின் கண்கள் அவளையுமறியாமல் வெளியில் நிரஞ்சன் என்று கொண்டிருக்கிறானா என்று துழாவியது. அவள் மனம் நிரஞ்சனம் அருகில் இருந்தால் தேவலாம் என்று யோசிக்க புத்தியோ வேண்டாம்... வேண்டாம்... அவன் இங்கு வரவே வேண்டாம் என்றது.

வித்யா சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அதிதியிடம் பிரச்சனைக்கு காரணம் என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.


எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தன் கைவிரல் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது அதியின் கண்கள். அதில் கலக்கம் பயம் எத்தனை விதமான உணர்வுகள்... கணவனை விட்டுப் பிரிகிறோம் என்ற ஏக்கம் அவள் கண்களில் இல்லை. ஆனால் அவள் முகம் முழுவதும் இந்த முடிவிற்கு வந்து விட்டதற்கான சந்தோஷமும் இல்லை. கலவையான உணர்வுகளுடன் அதி இருக்கிறாள். விவாகரத்திற்கு காரணம் என்று வினயன் சொன்னது அதிதியின் ஆழ்மனதை கூறு போட்டிருக்கிது. அதிலும் கடைசி இரண்டு மாதங்களாக அவன் நடந்து கொண்டிருக்கும் விதம் கட்டாயம் ஒரு கணவனாக அல்ல...காமுகனாகத்தான். அதிதி மனம் முழுவதும் காயப்பட்டு இருக்கிறாள். அதிதியை பொருத்தவரை இவற்றை எல்லாம் அம்மாவிடம் சொல்வதற்கு அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை. கட்டாயம் பெற்றோருக்கு தெரிய வேணும்.ஆனால் சொல்லும் வார்த்தைகள் அதில் தான் தயக்கம்.


வித்யாவிற்கு இதற்கு மேலும் காத்திருக்க பொறுமை இல்லை... மகளின் நிலை என்னவென்று தெரிந்து கொள்வதற்கு அவளின் மனம் உருகி காத்துக்கொண்டிருக்கிறது

'சொல்லு அதிம்மா...நீ வாய் திறந்து ஏதாவது சொன்னா தான் எங்களுக்கு புரியும்'. உனக்கு நடந்தது பொம்மை கல்யாணம் இல்ல.

இந்த வார்த்தையை கேட்டவுடன் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அதிதி. அவளுக்கு அப்போதுதான் புரிந்தது விநயன் கைகளில் தான் வெறும் பொம்மையாக நடத்தப்பட்டிருக்கிறேன்

என்று. அந்த சொல்லை தான் அவள் இத்தனை நாளாக தேடிக்கொண்டிருந்தாள். அதன் வலி என்ன என்று அவளுக்கு மட்டும்தான் புரியும்.இதையெல்லாம் எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும்?


அம்மா இதற்கு மேல் சமாதானமாக மாட்டாள் என்று புரிந்து கொண்டவள், திருமணத்திற்காக காத்திருந்த சமயம் வினயன் பேசி இருந்தவை, அவன் எதிர்பார்ப்புக்கள், அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறை இருவருக்கும் ஒட்டாத மனம், அவன் சியட்டல் வந்த பிறகு அவனின் நடத்தைகள், நடாலியுடன் அவனின் உறவு, என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு கடைசி இரண்டு மாதங்கள் பற்றி சொல்லும் பொழுது தாங்க முடியாமல் வெடித்து சிதறினாள். அதிதியின் அறைக்கு பக்கத்து அறையில்தான் நிரஞ்சன். மூடியிருந்த கதவுகளையும் மீறி நிரஞ்சன் அறைக்குள் அதிதியின் அழுகை சத்தம் கேட்க தன் அறையிலிருந்து தன்னையும் மீறி எழுந்து ஓடி வந்துவிட்டான் நிரஞ்சன்.

வித்யா அதிதியின் அறைக்குள் செல்வதை அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தான் இந்த விஷயத்தில் தலையிட்டால் அதிதி வாயை திறப்பதற்கு சாத்தியங்கள் இல்லை என்பதால் தான் அவன் வித்யாவோடு வரவில்லை. அதோடு என்னதான் சொன்னாலும் அவன் வீட்டு மனிதன் கிடையாது . அவர்கள் குடும்ப விஷயத்தில் அவர்களாக சொல்லாதவரை தான் தலையிடமுடியாது.

வித்யா 'கிளம்பி வா' என்று சொன்னதால்தான் கிளம்பி வந்தான். இப்படி எல்லாம் அவன் மனது அவனை வழி நடத்தினாலும் அதிதியின் கதறலை தாங்கும் மனோ திடம் நிரஞ்சனுக்கு இல்லை.

தனது அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த நிரஞ்சனை கூட அதிதி உணரவில்லை. வித்யாவின் தோள்களில் முகம் புதைத்து, வார்த்தைகள் சிக்க அழுது கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் வித்யாவால் சமாளிக்க முடியாமல் போக,நிரஞ்சன் சற்றும் தாமதிக்காமல் அதிதியை இழுத்து தனது வயிற்றோடு கட்டிக்கொண்டான். எதையும் உணரும் நிலையில் அதிதி இல்லை. வித்யா திகைத்துப் போனாள். நிரஞ்சனின் கண்களில் நிரம்பி வழிந்த காதல் வித்யாவிற்கு கலவரம் மூட்டியதோ?


அன்றைக்கே இந்த பையனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்திருந்தால் இன்றைக்கு அதிதிக்கு இவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்திராமல் இருந்திருக்கும் என்று வித்யாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அதிதி சொன்னவற்றை எப்படி விஸ்வத்திடம் எப்படி சொல்வது என்ற குழப்பம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது.


மற்றவற்றை எல்லாம் கூட ஒதுக்கி, விவாகரத்தை வாங்கி கொடுத்து தன் மகளுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுக்கலாம் என்ற யோசனை ஒரு பக்கம் என்றாலும், கடைசி இரண்டு மாதங்கள் அவன் தன் மகளை படுத்திய பாடு, அவனை ஒரு வழி செய்ய வேண்டும் என்று வித்யாவிற்கு வெறியே வந்தது.

ஆனால் அழுகையினூடே வினயன் மிரட்டியதாக அதிதி சொன்ன, 'உங்க வீட்டுல இருந்து யாராவது பிரச்சனை பண்ண வந்தா உனக்கு விவாகரத்து,கிடைக்கிறது சிக்கலாகிவிடும். லேசுல விவாகரத்து கிடைக்காது சுத்த விடுவேன்.' என்ற வார்த்தைகள் வித்யாவை மிரளச் செய்தது. வித்யாவை மட்டும்தான் நிரஞ்சனை அல்ல.


கீழே விஸ்வம் மாத்திரை உபயத்தில் உறங்கி கொண்டிருக்கிறார். வினயன் அமைதி இன்றி தவிக்கிறான். நடாலி அவனை திரும்ப வரச்சொல்லி அழைக்கிறாள். வினய் எதிர்பார்த்திருப்பது அதிதி வீட்டினரின் வருகையை.

அதிதி அவளது முகத்தை தனது வயிற்றில் இறுக்கி கட்டிக் கொண்ட நிரஞ்சனின் தொடுகையைக் கூட உணராமல் அதிதி. அவளை நினைத்து நிரஞ்சனுக்கு கோபம் தான் வந்தது. படித்த பெண் தானே இவள்... பள்ளியிலிருந்து போலவே இன்றும் பூனைக்குட்டி போல் வாழவேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?

அந்த பூனை குட்டி கூட தன்னை தாக்குபவரை தன் நகங்கள் கொண்டு பிராண்டிவிடும். வினயன் இவ்வளவு தூரம் கேவலமாக நடத்திய பிறகும் இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?நிரஞ்சனின் மனதில் கொலைக்களமாக கொதித்தது. வினயன் அவனை ஏதாவது செய்தாக வேண்டும்... அதற்கு பின்பு இருந்து கொண்டு செய்தால் சரியாக வராது என்று மனதிற்குள் முடிச்சிட்டவன் வாயை திறந்து ஏதும் சொல்லினான் இல்லை.

சற்று நேரத்தில் அழுகை மட்டுப்பட தன்னை கொஞ்சமாக சுதாரித்தவள் நிமிர்ந்து பார்த்தால் நிரஞ்சனின் வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டு அவனிடம் தஞ்சம் புகுந்து இருப்பது புரிந்தது. தான் தன் அம்மாவில் தானே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தோம்? இவன் எப்போது வந்தான் என்று அப்போதுதான் அவள் மனதில் உரைத்தது.

ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொண்ட நிலையில் நிரஞ்சன் இல்லை.கண் துடைப்பதற்காக தனது கைகுட்டையை அவளிடம் கொடுத்து அவன் என்ன நினைத்தானோ தானே அந்தக் கைக்குட்டையை வைத்து அவள் கண்களில் ஒற்றி எடுத்தான்.இந்த மௌன நாடகத்தை பார்த்து கொண்டேயிருந்தாள் வித்யா.அவளுக்கு மனம் முழுவதும் நிரஞ்சனின் மனம் நிறைந்த காதல். தன் மகளுக்கு கிடைத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம். இதற்குமேல் இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு, லேசான தொண்டை கமறல் மூலம் தன் இருப்பை மீண்டும் அங்கே பதிவு செய்தாள் வித்யா. நிரஞ்சனுக்கு மனதிற்குள் வித்யா என்ன நினைப்பாளோ என்ற பயம் ஓங்கி நின்றது. ஆனால் இதற்காகவெல்லாம் அதிதியை விட்டுவிடவும் தயாராக இல்லை.

அதிதியிடம் சரி அதி, ஆபீஸ் வேலை அதிகம். நா ரூமுக்கு போறேன் என்றுவிட்டு, தான் எதையும் கேட்கவில்லை என்ற பாவனையில் அங்கிருந்து நகர்ந்து விட்டான். உண்மையில் அவன் முகத்தை பார்த்து பேசும் தைரியம் அதிதி பெண்ணிற்கு இல்லை. அவன் தான் தன் கணவனைப் பற்றி சொன்னதை எல்லாம் கேட்டு இருப்பானோ என்ற அசவுகரியம் வேறு. முன்பானால் எல்லாவற்றையும் நிரஞ்சனிடம் தானே நேராக சொல்லியிருப்பாள். ஆனால் இப்போது நிலைமையே வேறு... அவன் தெளிவாக தான் விரும்புவதை மறைமுக செய்கைகளால் சொல்லிவிட்டான். இதற்கு மேலும் அவனிடம் போய் தனது பழைய நட்பை வைத்து தனக்கு நடந்தவற்றை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. அத்துடன் ஆண் -பெண் என்ற பேதம் அவளுக்கு இப்போது நிறைய புரிகிறது.

நிரஞ்சன் விலகி நின்று அதற்கான காரணம் கூட தெரிகிறது.இதற்கெல்லாம் மேல் வினயன் அவன் சொன்ன வார்த்தைகள்... நீ வேஸ்ட் பீஸ்னு தெரிஞ்சு தான் நிரஞ்சன் உன்கிட்ட காதல் சொல்ல வில்லையா இந்த கேள்வி இன்றும் கூட அதிதியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு நிரஞ்சன் முகத்தை தோழமையுடன் பார்ப்பதற்கு கூட அவளுக்கு கூச்சமாக இருக்கிறது.

ஒருபுறம் இவ்வாறான யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க மறுபுறம் அவள் மனம் முழுவதும் நிரஞ்சன் இந்த நேரத்தில் தன் அருகில் இருந்தால் பரவாயில்லை என்றுதான் அவள் நினைக்கிறாள்.

மகளின் பார்வை சொல்லும் வார்த்தைகள் வித்யாவுக்கு புரியாமல் இல்லை.ஆனால் நிரஞ்சன் இங்கு அதி சொன்ன வார்த்தைகளை கேட்டுகொண்டு நின்றிருந்தால் அதை நினைத்து பிற்காலத்தில் மகள் என்பதற்காகவே வாயை மூடிக் கொண்டிருந்தாள்.அதேபோல் நிரஞ்சன் தன் மகளின் பார்க்கும் பார்வையில் இருக்கும் காதல் இருவருக்குமே நல்லது இல்லை என்பதும் வித்யாவிற்கு ஓரளவுக்கு புரிந்தது. தன் மகளுக்கு இந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த பிறகு வேறொரு வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கு பெற்றோர் நிச்சயம் முயற்சி செய்யப் போகிறோம் ஆனாலும் கூட நிரஞ்சன்... ம்ஹும்... வேண்டாம். ஏற்கனவே அவன் கேட்டபோது மறுத்து விட்டோம்.

இதற்கு மேலும் அவன் நண்பனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தன் மகளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை தேடும் சமயம் அந்த மாப்பிள்ளையும் ஏற்கனவே மண முறிவு ஏற்பட்ட வராக இருந்தால் தான் தன் மகளை புரிந்து கொள்ள முடியும் என்று கணக்கு போட்டாள். நிரஞ்சனின் காதல் தெரிகிறது.அவன் தன் மகளுக்காக அவளை விரும்புகிறான் என்பது புரிகிறது.

அப்போது கேட்டபோது வேறு வேறு காரணங்கள் சொல்லி மறுத்து விட்டு இப்பொழுது முதல் திருமணம் தோல்வி அடைந்த பிறகு,என் மகளை திருமணம் செய்து கொள் என்று அவனிடம் கேட்பதற்கு வித்யாவின் மனது ஒப்புக்கொள்ளவில்லை அதேபோல் நிரஞ்சன் அவனின் அம்மாவும் இந்த திருமணத்திற்கு எந்த காலத்திலும் சம்மதிக்க மாட்டார்.

அதுபோல் நீருவின் அம்மாவும் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறார் அவள் மனதில் தன் மகனின் திருமணத்தை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணங்கள் இருக்கலாம். ஏற்கனவே கணவரால் சிறுமைப் படுத்தப் பட்ட பெண்மணி அவள். வலி நிறைந்த வாழ்க்கை அவளது.தன் மகன் தலையெடுக்க வேண்டும். அவனுக்கு சீரும் சிறப்புமாக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவர் வைத்திருக்கும் வைராக்கியம். ஒரு தாயாக வித்யாவிற்கு நிரஞ்சன் அம்மாவின் நிலைமையும் புரிகிறது. இந்த ஜன்மத்தில் தன் மகளின் வாழ்க்கையில் விதித்திருப்பது நடந்தே தீரும்.என்று மனதை தேற்றிக் கொண்டு கீழே தனது கணவர் எழுந்து விட்டாரா என்று பார்க்கச் சென்றாள்.

விஷ்வம் அவரிடம் தங்கள் மகளுக்கு நடந்த கொடுமைகள் பற்றி சொல்வதற்குள் வித்யாவிற்கு மூச்சு முட்டியது. ஒரு பெண்ணாக சில வார்த்தைகளை சொல்வதற்கு அவருக்கு நா எழவில்லை... தனக்குள்ளேயே அவள் விழுங்கும் விஷயங்களை தோண்டாமல் மௌனம் காத்தார் அவர். ஒரு தகப்பனாக அவருக்கு நெஞ்சில் பேரிடி. ஆனால் தன் மனைவிக்கும் இதே நிலைமைதான் மனதில் இருக்கும் என்பதற்காக அமைதியாக இருந்தார். நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தருவதாக தன் மகளை தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு.

நிரஞ்சன் இதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் அலுவலக வேலையில் மூழ்கிவிட்டான்.அதிதி தன் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால், அதிதி மீது கவனம் வைத்து இருந்தான் நிரஞ்சன். மனதின் ஓரத்தில் அடுத்து இந்த பெண்ணை எப்படி கையாள்வது என்று எண்ணங்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது அவனுக்குள். தன்னுள் ஒரு திட்டத்தைத் தீட்டியவனாக அடுத்த நாளே விசுவம் வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிதி பெண்ணின் முன் செல்லவே இல்லை.

அடுத்த நாள் மதியத்திற்கு மேல் தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கோ தன்னையும் அறியாமல் கண்கள் நிரஞ்சனைத்தான் தேடின. வித்யாவிடம் நிரஞ்சன் பற்றி விசாரிக்க அவளுக்கு கிடைத்ததோ அவன் கிளம்பி விட்டான் என்ற தகவல்தான். மிகவும் ஏமாற்றத்துடன் சோர்ந்து போனாள் பெண். அதிதி பெண் நிரஞ்சனிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது அவளுக்கே புரியாத புதிர். ஏமாற்றத்தை தனக்குள்ளேயே புரிந்து கொண்டாள். வித்யாவிற்கு தனது மகளின் தேடுதல் புரிகிறது. ஆனால் எதிர்காலம் இல்லாத இந்த தேடுதலுக்கு துணை செய்வதற்கு வித்யா தயாராக இல்லை.
 
Top