அத்தியாயம் 13
நாட்கள் வாரங்களாகின. துளசியின் கவனிப்பில் கொஞ்சம் தேறியிருந்தார் தங்கமாரியப்பன். துளசியும் வசந்தாவும் சேர்ந்து தங்கள் நகைகளைக் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து திருப்பணிக் காரர்களிடம் பணத்தை கொடுத்திருந்தார்கள். "ஐயா! கொத்தனார் ஐயா வாக்குக்காகக் கஷ்டப்பட்டு புரட்டியிருக்கோம்.. நல்லபடியா செலவு பண்ணுங்க.. மீதிப் பணத்தைத் தர முடியுமான்னு தெரியல" என்று சொல்லிவிட்டார்கள்.
அந்த சில நாட்கள் கஷ்டப்பட்டாலும் அதன்பின் மெதுமெதுவே முன்னேற்றப் பாதையில் சென்றது அவர்களது பயணம். நாள், கிழமை, நேரம், காலம் எதுவும் தெரியாமல் இருந்த தங்கமாரியப்பன் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம். "ஆச்சி இறந்து போயிட்டாங்க தாத்தா! நான்தான் உங்க பேரன். நீங்க தான் சாமி பேரையும் சேர்த்து தங்கமுகுந்தன்னு எனக்குப் பேரு வச்சீங்க!" என்று முகுந்தன் தாத்தாவின் மனதில் பதிய வைத்திருந்தான்.
குளித்தேனா, சாப்பிட்டேனா என்பது தெரியாமல் இருந்த தங்கமாரியப்பனுக்கு இப்போது அதெல்லாம் ஓரளவு பிடிபட்டிருந்தது.
'கொத்தனார் தாத்தாவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சாம்டே' என்று கூறியவர்கள், இப்போது 'கொத்தனாருக்கு மூளைல தேய்மானம் ஆயிருச்சாம்.. மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்காராம்' என்று மாற்றிவிட்டனர்.
இங்கு முன்னேற்றம் என்றால் தங்கவிநாயகத்துக்கு சற்று சறுக்கல் தான். கேஸ் ஏஜென்சி தருகிறேன் என்று கூறிவிட்டுப் போனவர் அதன்பின் ஆளையே காணவில்லை. ஃபோனும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. இவர்களது வளாகத்திலேயே ஒரு கடையைக் காலி செய்து அதில் பெஸ்ட் கேஸ் என்று போர்டு போட்டு நாற்காலி மேஜை சகிதமாக தங்கவிநாயகம் அமர்ந்தது தான் மிச்சம்.
அலையோ அலை என்று அலைந்து, "அந்த ஆள் ஒரு பிராடு அவரை நம்பியா ஒன்னரை லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தீங்க?" என்று யாரோ கேட்க, சின்னக்குட்டியும் விநாயகத்துடன் சேர்ந்து நீலிக் கண்ணீர் வடித்தான்.
அந்த ஒன்றரை லட்சத்தில் பாதி சின்னக் குட்டிக்குத் தான் போக இருந்தது என்பதை அறியாத தங்க விநாயகம், "அவனுக்கு வேற நம்பர் இருக்காடே? நாம வக்கீல் பார்ப்போமா? கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவோம்" என்று ஏதேதோ திட்டங்கள் போட்டான். ஒருநாள் அந்த ஆள் வசமாக மாட்ட, "குடுத்த காசுக்கு வழி சொல்லிட்டு போய்யா!" என்று அவன் சட்டையைப் பிடித்து விட்டான் தங்கவிநாயகம்.
நான்கு சிலிண்டர்களையும், இரண்டு அடுப்புகளையும் அடுப்பிலிருந்து சிலிண்டருக்கு மாட்டக்கூடிய குழாய்கள் பத்தையும் கொண்டு இறக்கி வைத்துவிட்டு, "நாளைக்கி லோடு வருது தம்பி! வந்ததும் மீதியைக் கொண்டு வரேன்" என்று கம்பி நீட்டினான் அந்த ஆள்.
"அது போகட்டும்! வடக்குக் காம்பவுண்டை விக்கிறதைப் பத்தி யோசி! இந்த மாசம் உங்க அப்பாவால வசூலுக்குப் போகமுடியலைல்ல.. நீ போ.. ராயலா உக்காந்துக்கிட்டு, எல்லாரும் வீட்டை காலி பண்ணிருங்க.. ஆளுக்கு அம்பதாயிரம் தரேன்.. அப்படின்னு பேசு!" என்று தூபம் போட்டான் சின்னக்குட்டி.
அவன் கூறும் போது, 'அவ்வளவுதானே!' என்று எளிதாகத் தோன்றியது விநாயகத்துக்கு. பயங்கர பந்தாவாக, அப்பாவைப் போலவே அவன் போய் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று கொண்டு வாடகையைக் கேட்க, சிலர் கொடுத்தார்கள். சிலர், "உங்க அப்பா பேங்க் அக்கவுண்ட்ல போட்டுட்டேனே.. அவர் வர முடியலைன்னா அதுல தான் போடச் சொல்லிருக்கிறார்" என்றனர். காலி செய்யுங்கள் என்று சொன்னதற்கு நோட்டீஸ் கொடுங்கள், அட்வான்சைத் திருப்பித் தாருங்கள், நான் எழுதிக் கொடுத்த அக்ரிமெண்ட் எங்கே? என்று ஆளுக்கு ஒன்றாக சொன்னார்கள்.
இவன் ஒரு வரிசை வீடுகளை முடித்துக்கொண்டு மறு வரிசைக்குத் திரும்பும்போது முதல் வரிசை வீட்டு ஆட்கள் அனைவரும் சேர்ந்து கூடிப் பேசியதும் தெரிந்தது. இவன் வந்ததை அறிந்து வசந்தா வாடகைப் பணத்தைத் தயாராகத்தான் எடுத்து வைத்திருந்தாள். ஆனால் வசந்தாவின் வீட்டிற்கு அவன் செல்லவில்லை. வடக்குக் காம்பவுண்டிலேயே இப்படி மோசமான அனுபவம் கிடைத்தது என்பதால் அடுத்தடுத்த இடங்களுக்கு அவன் செல்லவே இல்லை.
முதன்முறையாக, தான் இதுவரை செய்தது தவறோ என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. தந்தையின் அனுபவத்துக்கும் உழைப்புக்கும் முன்னால் தன்னுடைய ஏட்டுக் கல்வியால் நிற்கக்கூட முடியாது என்பது கசப்பான உண்மையாக அவனுக்குள் இறங்கியது.
ஆறாம் தேதி வரை வசூலுக்கு யாரும் வரவில்லை என்றவுடன் வணிக வளாகத்தில் இருந்து சபரி தங்கமாரியப்பனின் வீட்டிற்கே வந்து பார்க்க வந்தான். "தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, வாடகையும் வாங்க வரலையா.. அதான் என்னன்னு பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.." என்று கூறினான்.
"இருந்தும் இல்லாத நிலைமை ரொம்பக் கொடுமை தம்பி!" என்றாள் துளசி. எங்கோ சென்றிருந்த தங்கவிநாயகம் தொங்கிப் போன முகத்துடன் அப்போது உள்ளே வர, "அண்ணே! நீங்க என் கூட வரீங்களா.. கடைக்காரங்க வாடகையை உங்க கிட்ட வாங்கித் தரேன்" என்றான்.
இரண்டு நாட்களாக, "நீ சரின்னு சொல்லு.. உன் பேரைச் சொல்லி எல்லா வாடகையையும் வாங்கி உன் கையில கொண்டு வந்து குடுக்கிறேன்" என்று சின்னக்குட்டியும் கூறிக் கொண்டுதான் இருந்தான். அதைப்பற்றி விநாயகம் யோசிக்க, இவன் மனதில் உள்ளதை படிப்பது போல், "அண்ணே! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. நீங்க என்னை வேலையை விட்டு நிப்பாட்டினாலும் பரவால்ல.. சின்னக்குட்டி அண்ணனை நம்பாதீங்க.. உங்ககிட்ட பணத்தை வாங்கிட்டுப் போனாரே, அந்த கேஸ் கம்பெனி ஆளு.. அவரும் சின்ன குட்டி அண்ணனும் சேர்ந்து பேசுறதை ரொம்ப நாளா நான் பார்த்திருக்கேன்.. முந்தா நாள் கூட ரெண்டுபேரும் சேர்ந்து சரக்கு அடிச்சாங்க.. தாத்தாவைப் பாத்துக்கோங்க" என்று கூறியபடி கிளம்பிவிட்டான்.
கொத்தனார் தாத்தா என்றோ செய்த உதவிக்கு மறு உதவியாக அந்த ஒற்றை வரி அவன் வாயிலிருந்து வந்து விழுந்திருந்தது. முந்தாநாள் இதே மாதிரி சபரி கூறியிருந்தானானால், என் "ஃப்ரெண்டைப் பத்தி குறை சொன்னே, தொலச்சுருவேன்!" என்றுதான் சொல்லி இருப்பான் தங்கவிநாயகம்.
இப்போது வாழ்வின் உண்மை முகத்தில் அறைந்திருந்தது. அப்பாவிற்குப் பதில் தான் வீட்டுச் செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயம். பீரோ சாவி எங்கே என்று எனக்குத் தெரியவே தெரியாது என்று முகுந்தனும் துளசியும் சாதித்து விட்டனர். துளசி இலவசமாகக் கிடைக்கும் சிகிச்சையைச் செய்து கொண்டிருக்கிறாள். அதனால் அப்பாவின் வைத்தியத்திற்குப் பணம் கேட்கவில்லை.
இதுவரை நடந்தவை, சின்னக்குட்டியின் பேச்சுகள், தன்னுடைய எதிர்வினைகள், அவன் கூட்டி வந்த ஆட்கள், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மனதில் ஓட்டிப் பார்த்தான் தங்கவிநாயகம்.