அத்தியாயம் 4
"என்னங்க இந்தப் பெரிய குடம் கொஞ்சம் வழுக்குது.. ஒரு கை பிடிங்களேன்" என்று துளசி முன் வாசலில் இருந்து குரல் கொடுக்க, சோபாவில் சாய்ந்துகொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது கணவன் தங்கவினாயகம் “குடம் தூக்குறதும் தண்ணி புடிக்கிறதும் பொம்பளைங்க செய்ய வேண்டிய வேலை. அதுக்கு ஏன் என்னைத் தொந்தரவு பண்றே?" என்று கடிந்து கொண்டான். சோபாவிற்கு அருகில் புத்தகத்தை வைத்து குப்புறப்படுத்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்த முகுந்தன், "அப்பா பாய்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா அப்பா?" என்று கேட்டான்.
"ஆமா! பாய்ஸ் தான் ரொம்ப ஸ்ட்ராங்" என்று தங்கவிநாயகம் கூற, "அப்ப ஏன்பா ஸ்ட்ராங்கா இருக்கிற பாய்ஸ் ஒரு வேலையும் பண்ணாம எப்பப் பார்த்தாலும் சும்மாவே உட்கார்ந்து இருக்காங்க? லேடீஸ் மட்டும் வீட்டில் எல்லா வேலையும் பாக்குறாங்க?" என்று கேட்டான்.
சுவாரசியமாக யூடியூபில் ஏதோ வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கவிநாயகம், "எழுதறத விட்டுட்டு இங்க என்னடா கவனம்? உனக்கு யார் சொல்லிக் குடுத்து பேசுற இதெல்லாம்?" என்று அதட்ட,
"எனக்கே தோணுச்சு! வசந்தா பாட்டி கூட அன்னைக்கு ஒரு கதை சொன்னாங்க.." என்று அவன் ஆரம்பிக்க, "போடா நீயும் அந்த வசந்தாக் கிழவியும். அந்தக் கிழவியை துரத்திவிட்டா எல்லாம் ஒழுங்கா நடக்கும் மாசம். ஐநூறு ரூபாய் குடுத்துக் கூட டியூஷன் சேக்குறதுக்கு நான் ரெடி. அந்தக் கிழவி கிட்ட தான் படிப்பேன்னு உசுர வாங்குற.. இந்தப் பெருசுங்க எல்லாம் என்னைக்கு ஒழியுதோ, அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி. சின்ன வயசுப் பிரண்டு, பெரிய வயசுப் பிரண்டுன்னு பல பேரைச் சும்மா உட்கார வச்சு இந்தக் கிழவன் கழுத்தை அறுக்குறான். கிழவி என்னன்னா பிள்ளையை தூண்டிவிட்டு வேடிக்கை பாக்குது" என்று வாய்க்கு வந்தபடி ஏதேதோ பினாத்தினான்.
அப்படியே எதிரில் இருந்த டேபிள் மேட்டை ஒரு மிதிமிதித்தான். "பாத்துங்க அது உடைஞ்சுரப் போகுது" என்று கூறியவாறே கஷ்டப்பட்டு அந்தக் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்திருந்த துளசி, இவர்களைக் கடந்து சமையல் கட்டுக்குள் போனாள்.
"எப்பா! நீங்க ஏஜென்சி எடுத்து வாங்கிப்போட்ட டேபிள் மேட் பா.. தும்மல் போட்டாலே உடைஞ்சிரும்.. பார்த்துப்பா" என்று தன் பங்குக்கு அப்பாவை மேலும் கிண்டலடித்தான் முகுந்தன். அருகிலிருந்த செய்தித்தாளை தூக்கி முகுந்தன் மேல் வீசிய விநாயகம், "எல்லாம் அந்த கிழவன் குடுக்கிற தைரியம். அப்பனை எப்படி எதிர்த்துப் பேசுதுன்னு பாரு" என்று முகுந்தனை அவன் சத்தம் போட, முகுந்தன் ஏதோ சொல்ல வாய் எடுத்தான்.
‘முகுந்தன் தன்னை எதிர்த்துப் பேசுகிறான் என்றால் அடுத்ததாகத் தான் தன் அப்பாவைப் பற்றி திட்டியதையும் குறை கூறுவானே, இவன் ஏட்டிக்கி போட்டி பேசுகிற பயல் இனிமேல் இங்கு நின்றால் சரிவராது' என்று நினைத்து, "என்னமோ நானே தயாரிச்ச டேபிள் மேட் மாதிரி சொல்ற.. கம்பெனிக்காரன் மோசமான பிளாஸ்டிக்கை போட்ருக்கான். எதுவும் சரியில்லை.. அதுதான் முணுக்குங்க முன்னாடி உடைஞ்சு போயிருது.. பெருசா சொல்ல வந்துட்டான்.. படிக்கிற வேலையைப் பாரு. படிக்க ஒன்னும் இல்லன்னா, எந்திரிச்சு வெளியில போய் விளையாடு. வீட்டுக்குள்ளேருந்து நாட்டாமை பண்ணிக்கிட்டு.." என்று செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போய்விட்டான் தங்க விநாயகம்.
ஒரு துணிப் பையை எடுத்துக்கொண்டு உள்ளிருந்து துளசி, "என்னங்க என்னங்க!" என்று கூறிக்கொண்டே ஓடிவந்தாள்.
"அப்பாவை எங்கடா? தேங்காய் சுத்தமா காலியாயிடுச்சு.. தேங்காய் வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு நெனச்சேன்" என்று வாசலில் நின்றபடியே கேட்க,
"அப்பாவை நான் ஒரு பாயிண்ட்ல மாட்டினேன்.. அதனால பல்பு வாங்கிட்டு எஸ்கேப் ஆயிட்டாங்கம்மா" என்றான்.
"பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது" என்ற துளசி அடுத்ததாக வாசலில் நிரம்பியிருந்த குடத்தை நகர்த்தப் போனாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்த முகுந்தன் தானும் அவள் அருகில் சென்று, "அம்மா சின்னச் சின்ன குடமா ஊத்தி எனக்குத் தூக்கிக் குடுங்க.. நான் போய் உள்ள வைக்கிறேன்" என்றான்.
"அதெல்லாம் வேண்டாம்டா.. நீ படிக்கிற பையன். இந்த வேலை எல்லாம் செய்யக்கூடாது" என்றாள் துளசி.
"டீச்சர் ஆச்சி ஒரு கதை சொன்னாங்கம்மா.. மூணு அம்மாக்கள் தண்ணி எடுக்கப் போனாங்களாம். அதுல ஒரு அம்மா, ‘என் மகனைப் பத்தித் தெரியுமா, அவன் பெரிய படிப்பாளி. ஊர்ல எல்லாரும் அவனைப் பாராட்டுவாங்க' அப்படின்னு சொன்னாங்களாம்.. இன்னொரு அம்மா, ‘என் மகனோட பெருமை தெரியுமா, அவன் பெரிய ஜோசியன். ஊரே அவன் முன்னாடி தான் கைகட்டி ஜோசியம் பாக்குறதுக்கு நிக்கும்' அப்படின்னு சொன்னாங்களாம். மூணாவதா வந்த அம்மா மட்டும் எதுவுமே சொல்லலை. முதல் இரண்டு அம்மாக்களும், ‘பாவம் உன் மகனுக்கு எந்தத் தனி திறமையும் கிடையாது, அது தானே சொல்றதுக்கு ஒண்ணும் இல்லாம இருக்க..’ அப்படின்னு மூணாவது அம்மாவைக் கிண்டல் அடிச்சாங்களாம். மூணாவது அம்மா ஒண்ணுமே பேசல.. தண்ணிக் குடத்தோடு ஊருக்குள்ள நுழையும் போது முதல் அம்மாவோட மகன் எதுத்தாப்புல வந்திருக்கான், ‘எவ்வளவு நேரம் ஆச்சு தண்ணி பிடிக்க. சீக்கிரம் போய் சமையல் பண்ணுங்க' அப்படின்னு அம்மாவை விரட்டினானாம். கொஞ்ச தூரம் கழிச்சு ரெண்டாவது அம்மாவோட மகன் மரத்தடில உட்கார்ந்து பல பேருக்கு ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தான். ‘என் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டு வீட்டுக்கு வருவேன். நல்ல காய்கறிகளா வாங்கிட்டுப் போய் தடபுடலாக சமைச்சு வைக்கணும்', அப்படின்னு ஆர்டர் போட்டாராம். மூணாவது அம்மா ஒண்ணுமே பேசலயாம். கொஞ்சம் தூரம் கழிச்சு எதுத்தாப்புல வந்த மூணாவது அம்மாவோட மகன், 'அய்யோ அம்மா! என்கிட்ட சொன்னா நான் தண்ணி எடுத்துட்டு வந்திருப்பேனே.. வயசான காலத்துல நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுறீங்க.. குடுங்க குடுங்க!' அப்படின்னு சொல்லி குடத்தை வாங்கிகிட்டானாம்.. இப்ப முதல் இரண்டு அம்மாக்களும் அவமானத்துல தலை குனிஞ்சாங்களாம். ‘திறமையா வளர்த்தாலும் நல்லவனா என் மகனை நாங்க வளக்கத் தவறிட்டோம், உங்க மகனுக்கு தனித்திறமை எதுவும் இல்லைன்னாலும் அம்மா மேல பாசமா இருக்கான், மத்தவங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்குறான்.. அவன் தான் உண்மையிலேயே நல்ல மகன்' அப்படின்னு சொன்னாங்க. ‘அதனால பொம்பளப் பிள்ளைங்க தான் வீட்ல ஹெல்ப் பண்ணனும்னு இல்ல, ஆம்பளப் பசங்களும் ஹெல்ப் பண்ணனும். எல்லாருமே தனியா சமைச்சு சாப்பிட பழகிக்கணும், புது இடத்துக்குப் போனா சங்கடப்படக் கூடாது’ன்னு டீச்சர் சொன்னாங்கம்மா.. நானே தண்ணி பிடிக்கிறேன்" என்று கூறி ஒரு சிறிய குடத்தில் தண்ணீரை நிரப்பி முடிந்த அளவு சிந்தாமல் தானும் கொண்டுபோய் சமையல் கட்டில் வைத்தான்.
"ஏண்டா நான் பார்க்குற டிவி நாடகத்தில் எல்லாம் இது மாதிரி நல்ல கதையா வரமாட்டேங்குது? வந்த கதையே எல்லா நாடகத்திலும் வருதே அது ஏன்டா அப்படி?" என்று முகுந்தனைக் கேட்டாள் துளசி.
‘நான் அம்மாவாக்கும்.. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று கூறுவதில்லை' துளசி. யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வாள், திட்டினால் வாங்கிக் கொள்வாள், ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து வைப்பாள்.
"நீ ஏன் நாடகம் பாக்குற? பொம்மைப் படம் பாரும்மா.. அதான் கார்ட்டுன்.. அதுல கூட நல்ல கதையா சொல்லுவாங்க. வீட்ல டிவி நாடகம் பார்க்கறதுனாலதான் நிறைய பேருக்கு மனசே கெட்டுப் போகுதுன்னு டீச்சர் ஆச்சி சொன்னாங்கம்மா" என்று கூறியவாறு இன்னும் ஒரு சின்ன குடத்தைக் கொண்டு வந்து குழாயின் அருகில் வைத்தான்.
சில மாதங்களுக்கு முன்பாக அம்மாவுக்கு உதவுகிறேன் என்று தனக்கும் சேர்த்து ஒரு சிறிய குடம் வாங்கியிருந்தான். "பொம்பளை மாதிரி குடம் வச்சு விளையாடுற.. இதைத் தூக்கிப் போடு.. இன்னொரு தடவை பார்த்தேன், மிதிச்சே உடைச்சுருவேன்" என்று மிரட்டினான் அவனது அப்பா. பச்சைகலர் ப்ளாஸ்டிக் குடம், ஆசைப்பட்டு வாங்கியது அதனால் ஒளித்து மறைத்து பயன்படுத்திக் கொண்டிருந்தான் முகுந்தன்.
அந்த சின்ன குடத்தை மகன் தூக்கிக் கொண்டு வரவும், "டேய்! இதை எடுக்காதடா.. அப்பாக்கு கோவம் வந்துரும், நானே தண்ணி எடுத்துக்குறேன்" என்று துளசி கூற,
"அம்மா நீங்களே எவ்வளவு வேலை பார்ப்பீங்க.. பாய்ஸ் தான் ஹெல்ப் பண்ணனும் தெரியுமா? நான் பாதிப் பாதி குடத்தைத் தூக்கிட்டுப் போய் ஊத்திட்டு வரேன்" என்றான் முகுந்தன்.
"பாதிக் குடம் தண்ணி கொண்டு போனா தண்ணி ரொம்ப அலசும் டா.. முழுசாக் கொண்டு போனாத் தான் சிந்தாது.. நான் பார்த்துக்கிறேன்.. இந்தா இந்த ஒரு குடம் தான்.. இப்ப தண்ணி நிக்கிற நேரமாச்சு.. இனிமே தொட்டிக்குத் தான் திறந்துவிட போறேன்" என்று துளசி கூற,
"நிறை குடம் நீர் தளும்பாது.. குறைகுடம் கூத்தாடும் அப்படின்னா இது தானாம்மா..அதுக்கும் ஒரு கதை சொன்னாங்க டீச்சர் ஆச்சி.. அதை இன்னைக்கு நைட் தூங்கும் போது சொல்றேன்" என்றான் முகுந்தன்.
வசூலை முடித்துவிட்டு வந்த தங்கமாரியப்பன் அம்மாவும் மகனும் சுறுசுறுப்பாகத் தண்ணீர் எடுப்பதைப் பார்த்துவிட்டு தன் கையில் இருந்த பையை பேரனிடம் கொடுத்தவர், "ஏன் இப்படி கஷ்டப்பட்டு தூக்குதீங்க.. இருங்க நான் ஒரு நிமிஷத்துல கொண்டு வைக்கிறேன்" என்று அந்த 15 லிட்டர் குடத்தை அனாயாசமாகத் தூக்கித் தோளுக்கு மேல் வைத்துப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றார்.
"நம்ம வீட்டுலேயே தாத்தாதான் ஸ்ட்ராங்கு.." என்ற முகுந்தனுக்கு, 'உடம்பு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.. ஆனா மூளை தான் தேஞ்சு போச்சு' என்று வினாயகம் யாரிடமோ சொன்னது நினைவு வந்தது.
"துளசி துளசி! நாளைக்கு விசாலம் மகளுக்கு சடங்கு வச்சிருக்காங்க.. நினைவு இருக்கா.. காலையில கிளம்பி வெள்ளனவே போயிட்டு வந்துருவோம்.. அதுக்கு அப்புறம் ரேஷன் கடைக்கு போகணும்ல" என்று எதிர் வீட்டுப் பெண் துளசியைக் கேட்க,
"நல்ல வேளைக்கா.. ஞாபகப்படுத்துனீங்க.. காலையிலேயே கிளம்பிருதேன்" என்றாள் துளசி.
"ஒரு டிபன் கேரியர் எடுத்து வச்சுக்கோ.. நாம சாப்பிட்டுட்டு வீட்டுல உள்ளவங்களுக்கும் எடுத்துட்டு வந்துரலாம்.. பொங்க வேண்டாம்.. இட்லி எடுக்கலைன்னாக் கூட சட்னி-சாம்பாராவது கொண்டுவந்துடலாம்லா" என்று எதிர் வீட்டுப் பெண் கூற,
"ஆமாக்கா! ஆனா எங்க வீட்டு மனுஷன் சுடச்சுட வீட்ல சுட்டு போடணும்னு சொல்லுவாரே.. பாக்குறேன்.. என்ன குடுக்கப் போறீங்க.. கவர்ல 500 ரூபாய் குடுத்தாப் போதாதா?" என்று கேட்க,
"நான் கவர் தான் வைக்கப் போறேன்.. நீ தான் வழக்கமா ஒரு குக்கர் டப்பா குடுப்பியே.. அதைக் குடுத்துர வேண்டியது தானே?" என்று சிரிப்பினூடே கேட்டாள் எதிர் வீட்டுக்காரி.
"அதை எல்லாத்துக்கும் குடுத்துக் குடுத்து என் பேரே குக்கர் துளசின்னு ஆயிப்போச்சு.. இப்ப எல்லாத்தையும் காலி பண்ணிட்டேன்.. எங்க அம்மா ஊருக்கு போனேனே.. அங்க எடுத்துட்டு போய் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் குடுத்து முடிச்சிட்டேன்" என்றாள்.
"வேற ஏதாவது புதுசா உனக்குப் பேரு வக்கிறதுக்கு முன்னாடி உன் வீட்டுக்காரரை ஒழுங்கா ஒரே தொழிலைப் பாக்குற மாதிரி ஏற்பாடு பண்ணு" என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றாள் எதிர்த்த வீட்டுப் பெண்.
இப்படி வீட்டிற்குள்ளும் மதிப்பில்லாமல் வெளியிலும் யாரும் மதிக்காமல் திரிந்து கொண்டிருப்பவன் தான் தங்கவிநாயகம். அம்மன் அருள் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் பெயரில் பாதியை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் வைத்தாலும் மகன் குணத்தில் மட்டும் தங்கத்தைக் கொண்டு வரமுடியவில்லை மாரியப்பனால்.
ஒற்றைப் பிள்ளை என்பதற்காக விநாயகத்தைச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார் அவனது அம்மா. மண்வெட்டி பிடித்து, அழுக்கில் குளித்து ஒரு குறையும் இல்லாமல் குடும்பத்தை உயர்த்திய அப்பாவின் மேல் அவனுக்கு சிறு வயது முதலே ஒரு வித அருவருப்பு தான். அவர் கொடுத்த பணம் மட்டும் வேண்டும் அவரது அருகாமையும் அறிவுரையும் வேண்டாம் என்று நினைப்பவன். தொழில் செய்கிறேன் என்று சண்டைபோட்டு ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிப்பான். பின்பு அதைப் பாதியில் விட்டு விடுவான்.
டாக்ஸி ஓட்டுகிறேன் என்று இரண்டு கார்களையும் வாங்கி டிரைவர்களை வேலைக்குப் போட்டான். அதை ஒழுங்காக பராமரித்திருந்தாலே,
இப்போது பெரிய டிராவல்ஸ் முதலாளியாகி இருக்க முடியும். யாரோ சொன்னார்கள் என்று வந்த விலைக்கு அவற்றை விட்டுவிட்டு அதன்பின் ரியல் எஸ்டேட்டில் இறங்கினான். தொலைக்காட்சியில் எந்தெந்த துறையில் மோசடி நடைபெறுகிறது என்றெல்லாம் செய்தி போடுகிறார்களோ, அந்த எல்லாத்துறைகளிலும் ஒருமுறையாவது கால் வைத்திருப்பான் தங்கவினாயகம்.
குக்கர் விற்பதற்கு ஏஜென்சி எடுக்கிறேன் என்று பணத்தைக் கட்டி நூற்றுக்கணக்கான குக்கர்களை வாங்கி வீட்டின் ஒரு அறையில் அடுக்கினான். அதில் பத்துப் பதினைந்து குக்கர்கள் கூட விற்றிருக்க மாட்டான், அப்படியே போட்டு விட்டான். அதைக் காலி செய்வதற்காக, துளசி தான் போகும் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளில் ஒவ்வொரு குக்கரை அன்பளிப்பாக கொடுத்து வந்தாள். அதை வைத்து பலரும் அவளை 'குக்கர் துளசி' என்று கிண்டல் செய்தனர்.
இப்போது குக்கர் போய் அந்த இடத்தை டேபிள் மேட் பிடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையான டேபிள் மேட் இல்லை, இது டேபிள் மேக் என்ற பெயரைப் போட்டு அதேபோன்ற வடிவத்தில் படு சுமாரான தரத்துடன் வந்திருந்தது. இதை என்ன செய்யப்போகிறான் என்பதே தெரியவில்லை, அதற்குள்ளாக யாரோ சொன்னார்கள் என்று கேஸ் ஏஜென்சி ஆரம்பிக்க போகிறேன், அதுவும் ஏதோ பெஸ்ட் கேஸ் என்று ஒரு தனியார் நிறுவனம் என்று பேசிக்கொண்டு திரிகிறான் கொஞ்ச நாட்களாக.
அவ்வளவாக உலக விபரம் அறியாதவள் என்று அறியப்பட்ட துளசியே, "ஏங்க! இப்ப எல்லாம் இன்டேன் கேஸ்ல புக் பண்ணினா ஒரே நாள்ல சிலிண்டர் கொண்டு வந்துருதான்.. இப்பப் போய் யாருங்க தனியார் கேஸ் வாங்குவா? ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி தான் கேஸ் கனெக்சனும் சிலிண்டரும் கிடைக்கிறதுக்கு சங்கடப்படுவோம்.. இப்ப புது கனெக்சனும் ஈசியா கிடைச்சிருது" என்று சொல்லி விட்டாள். எப்போதும் அறிவு கெட்டவளே என்று அவளைக் கடிந்து கொள்வதோடு நிற்கும் தங்கவிநாயகம் அன்று அவள் பேசியதற்குக் கைநீட்டி அடித்தே விட்டான்