அத்தியாயம் 8
"நான் சொல்லுவேன்!",
"இல்ல இல்ல! நான் தான் சொல்லுவேன்.. நீ நாளைக்கு சொல்லு",
"நாளைக்கு சொல்ல முடியாது. அடுத்த வாரம் தான் சொல்ல முடியும். அதுக்குள்ள கதை மறந்து போயிடுமே!" இப்படி குசுகுசுவென்று உரையாடல்கள் வசந்தா டீச்சரின் டியூஷனில் நடந்துகொண்டிருந்தன.
"உன்னை நான் எட்டாம் வாய்ப்பாடை அஞ்சு தடவை எழுதச் சொன்னேன்.. என்ன அங்க பேச்சு?" என்று டீச்சர் அதட்ட,
"இல்ல டீச்சர் நான் ஒரு கதை யோசிச்சிட்டு வந்து இருக்கேன்.. இவன் தான் சொல்லணும்னு சொல்றான்" என்றாள் ஸ்ரீநிதி.
"என் கதை சூப்பரா இருக்கும்!" என்றான் நவீன்.
"நேரம் இருந்தா ரெண்டு பேருமே சொல்லுங்க.. இப்ப முதல்ல படிங்க!" என்ற வசந்தாவிடம்,
"அப்ப ப்ரைஸு?" என்று ஸ்ரீநிதி கேட்டாள்.
"ஒத்தைப் பென்சில் வாங்கி வச்சிருக்கேன் டா.. அதை வேணா பாதிப் பாதியா வெட்டி ரெண்டு பேத்துக்கும் கொடுத்துரவா?" என்று வசந்தா கேட்க,
"வேண்டாம்.. முழு பென்சிலாவே குடுங்க.." என்றான் நவீன். அதன்பின்னும் வகுப்பினரே இருவரும் மெல்லிய குரலில் விவாதம் செய்து, இறுதியில் ஸ்ரீநிதியே சொல்லட்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டான் நவீன்.
ஸ்ரீநிதி கூறிய கதை எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
"ஜார்ஜ்னு ஒரு பையன் இருந்தான். அவனோட ஸ்கூல்ல மிஸ் எப்பல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் மத்தவங்களுக்கு உதவி பண்ணுங்க, நீங்க செய்ற உதவி உங்களுக்கே திரும்பி வரும்னு சொன்னாங்களாம்.. அது எப்படி திரும்பி வரும் அப்படின்னு நெனச்சுக்கிட்டு வீட்டுக்கு போயிருக்கான் ஜார்ஜ்.
அப்ப ஒரு வயசான தாத்தா ரோட்டைக் கடந்து அந்தப்பக்கம் போக முடியாம தவிச்சிக்கிட்டு இருக்காரு.. ரோட்டுல நிறைய வண்டிங்க போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருந்திருக்கு.. ‘வாங்க தாத்தா நான் கொண்டு போய் விடுறேன்' அப்படின்னு சொல்லி அவரோட கையப் பிடிச்சு பத்திரமா அந்தப் பக்கம் கொண்டு போய்விட்டான் ஜார்ஜ். தாத்தா அவன் செய்த உதவிக்காக ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டிருக்கார். காசெல்லாம் வேண்டாம் தாத்தா, நீங்களும் யாருக்காவது உதவி பண்ணுங்க. நாம செஞ்ச உதவி அப்படியே திரும்பி வரும்னு எங்க மிஸ் சொன்னாங்கன்னு சொன்னானாம் ஜார்ஜ். தாத்தா, ‘நானே வயசானவன் என்னால யாருக்கு உதவ முடியும்' அப்படின்னு சொல்லிட்டே தன்னோட வீட்டுக்குப் போனாராம்.
மேகங்கள் இருண்டு மழை வர்ற மாதிரி இருந்திருக்கு. எதேச்சையாத் திரும்பிப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு நிறைய துணிகளை துவைச்சு காய வச்சுட்டு வீட்டைப் பூட்டிட்டு எங்கேயோ வெளியே போய்ட்டாங்க. ‘ஐயையோ மழை வர போகுதே துவச்சு நல்ல காஞ்சப்புறம் துணிகள் திருப்பி மழையில நனைஞ்சா வம்பாப் போயிடுமே' அப்படினு நெனச்சுட்டு இந்த தாத்தா அந்தத் துணிகளை எல்லாம் எடுத்து தன்னோட வீட்டுக்குள்ள கொண்டு வந்து வச்சாங்களாம். அப்புறம் நேரம் நிறைய இருந்ததால நடுங்குகிற கைகளால் அந்த துணி எல்லாம் மடிச்சு பத்திரமா வச்சிருந்தாங்க. சோன்னு மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சு.
பக்கத்து வீட்டுப் பொண்ணு மழைல எங்கேயோ மாட்டிக்கிட்டா. ‘ஐயையோ நம்ம துணி எல்லாம் என்ன ஆச்சு' அப்படின்னு பயந்துகிட்டே அவங்க வீட்டுக்கு வர, தாத்தா அவங்களை வரவேற்றாரு. ‘கவலைப்படாதே நான் உன்னோட துணியெல்லாம் எடுத்து பத்திரமா மடிச்சு வச்சிருக்கேன்', அப்படின்னு சொல்லி அதைக் குடுத்திருக்காங்க.
‘தேங்க்ஸ் தாத்தா அதுக்கு பதிலா எங்க வீட்டில இன்னைக்கு சாப்பிட வரீங்களா’, அப்படின்னு அந்த பொண்ணு கேட்க, ‘இல்லம்மா நாம செஞ்ச உதவி எந்த வடிவத்திலயாவது நமக்கே திரும்பி வருமாம், ஒரு குட்டிப் பையன் சொன்னான் அதனால நீ என்ன பண்ணு உன்னால முடிஞ்சதை மத்தவங்களுக்கு உதவியா பண்ணு' அப்படின்னு சொன்னாராம்.
அவர் சொல்லி ஒரு மணி நேரத்தில அந்தப் பொண்ணுக்கு ஏதோ முனகல் சத்தம் அவங்க வீட்டுக்கு பின்பகுதியில் கேட்டுகிட்டு இருக்க, என்னன்னு பார்த்தா மழையில நனைஞ்சு ஒரு குட்டி நாய் வெடவெடன்னு நடுங்கிட்டு இருந்திருக்கு. ‘ஐயையோ யார் வீட்டு நாயோ தெரியலையே' அப்படின்னு அதை எடுத்து துடைச்சு அடுப்புக்கு பக்கத்துல வச்சி அதோட நடுக்கத்தையும் போக்கினாங்களாம். சூடான பால் குடுத்து அதுக்கு பசியையும் ஆத்தியிருக்காங்க.
மழை விட்ட பிறகு அந்த நாய்க்குட்டியை எடுத்து வச்சுட்டு யாரோடதுன்னு தேடி தெருவில் நடந்து வந்தாங்க. இன்னொருத்தர், 'என்னோட செல்ல நாயைப் பாத்தீங்களா' அப்படின்னு கேட்டுகிட்டே வந்தாராம். ‘இதுவா’ அப்படின்னு இந்தப் பொண்ணு கேட்க, ஆமான்னு சொல்லி சந்தோஷத்தோட அவர் வாங்கிக்கிட்டாராம். பதிலுக்கு அவர் பணம் குடுக்கப் போக, ‘இந்த உதவியை நீங்க வேற யாருக்காவது செய்ங்க, அந்த உதவி நமக்கே திரும்பி வருமாம். இதைச் சொன்னது ஒரு குட்டிப் பையன்' அப்படின்னு அந்தப் பொண்ணும் சொன்னாங்களாம்.
அந்த நாய்க்குட்டியோட முதலாளிக்கு ரொம்ப சந்தோஷம். குழந்தை மாதிரி அவர் நினைச்சிருந்த நாய் திருப்பிக் கிடைச்சதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட தன்னோட கடைக்குப் போனாராம். அது ஒரு பொம்மைக் கடை. அப்ப அவரோட வேலையாள் கடையோட ஜன்னல்களை சுத்தமா தொடைச்சுக்கிட்டு இருந்தார். ‘அடடா இவர் எவ்வளவு அழகா துடைக்கிறார், இவருக்கு ஒரு சின்ன பரிசு கொடுக்கலாம், அதை நாய் கிடைச்சதுக்கான பதிலுதவியா வச்சுக்கலாம்' அப்படின்னு நினைச்ச முதலாளி ஒரு அழகான பொம்மை பைக்கை எடுத்து அந்தத் துப்புரவு தொழிலாளிக்கு குடுத்திருக்கார். ‘இந்தாங்க நீங்க நல்ல வேலை செய்றீங்க, அதற்குப் பரிசா இதை வச்சுக்கோங்க' அப்படின்னு குடுக்க, ‘ஐயோ இவ்வளவு பணம் என்கிட்ட இல்லையே' அப்படின்னாரு அந்த வேலையாள். ‘இல்ல இல்ல.. பணம் வேண்டாம், எனக்கு ஒருத்தங்க செய்த உதவியை நான் உங்களுக்கு திருப்பிச் செய்றேன், என் சந்தோசத்துக்காக வச்சுக்கோங்க. இந்த உதவி என்னைக்காவது எனக்கு திருப்பி வருமாம் அப்படின்னு ஒரு குட்டி பையன் சொன்னானாம்’னு பொம்மை கடை முதலாளி சொல்லிருக்கார்.
‘இதே மாதிரி பைக் வேணும்னு என் மகன் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தான். ரொம்ப நன்றி' அப்படின்னு சொல்லிட்டு தன்னோட வீட்டுக்கு போய் இருக்காரு தொழிலாளி. மகன் கிட்ட சந்தோஷமாக குடுத்து, ‘எங்க முதலாளி கொடுத்தாருப்பா, நாம செய்ற உதவி என்னைக்குன்னாலும் அது நமக்கே திரும்பி வரும் அப்படின்னு சொன்னாரு' அப்படின்னு அவர் சொல்லவும், ரெட்டை சந்தோஷத்தோட அவர் மகன் பொம்மையை வாங்கிக்கிட்டானாம். அவன் வேற யாரும் இல்லை, நம்ம கதையில முதன்முதலில் பார்த்த பையன் ஜார்ஜ் தான். 'அப்பா! இந்த விஷயத்தை இன்னிக்கி வெளில சொல்லி பரப்பின குட்டிப் பையன் நான் தாம்பா.. எனக்கு அந்த உதவி திரும்பி வந்திருச்சுப் பா' அப்படின்னு ஜார்ஜ் சொன்னான்" என்று கூறி கதையை ஸ்ரீநிதி நிறைவு செய்ய, எல்லாரும் படபடவென்று கைதட்டினார்கள்.
என்ன ஏது என்று பக்கத்து வீட்டிலிருந்து கூட சில தலைகள் எட்டிப் பார்த்தன. "நானும் தினமும் யாருக்காவது உதவி செய்வேன்" என்று முகுந்தன் சொல்ல,
"எல்லாருமே அவங்கவங்களுக்கு முடிஞ்ச உதவியைச் செய்யணும்.. இனி என்ன நல்ல காரியம் செஞ்சோம்னு யோசிச்சுப் பாத்து ஒரு டைரியில் கூட குறிச்சு வச்சுக்கலாம்" என்று வசந்தா ஆச்சி சொல்லி முடித்தார்கள்.
அந்தக் கதையை அம்மாவுக்கு சொல்லும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை முகுந்தனுக்கு. உற்சாகத்துடன் வீட்டுக்கு ஓடினான். இப்படி என்றோ செய்த உதவிகள் பல வடிவங்களில் தனக்குத் திரும்பி வரப்போவதை அறியாத அவனுடைய தாத்தா தன் பீரோவைத் திறந்து போட்டு ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். இப்படி வழக்கமாக எதையாவது தேடுவதும், சில பொருட்கள் கிடைப்பதும், சில பொருட்கள் கிடைக்காமல் போவதும் அவருக்கு வழக்கம் தான். இருந்தாலும் இன்று நான்கு மணி நேரத்தைத் தாண்டியது தேடல் வேட்டை.
தேடுகிறேன் பேர்வழி என்று அவர் வீட்டில் உள்ள பொருட்களையும் இடம் மாற்றி வைத்து விடுவதால் தேடுதல் வேட்டை நடத்தும் போதெல்லாம் அவ்வப்போது எட்டிப் பார்ப்பாள் துளசி. அதில் அவள், முகுந்தன், விநாயகம் யாராவது தொலைத்த பொருட்கள் இருந்தால், "மாமா இந்தக் கத்தியைத் தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். எடுத்துக்கவா?" என்று தன்மையாகக் கூறி எடுத்து வந்து விடுவாள்.
"ஆமா! நான் தான் பத்திரமா இருக்கட்டும்னு எடுத்து வச்சேன்" என்பார் தங்கமாரியப்பன்.
அவரது அறைக்கும் சமையல் கட்டுக்குமாக பலமுறை நடந்து கொண்டிருந்த துளசியிடம் முகுந்தன், "என்னம்மா என்ன பாக்குறீங்க?" என்று கேட்க,
"இன்னிக்கு ரொம்ப நேரமா தாத்தா கதவு திறக்கவே இல்லடா.. எப்பயும் கதவை திறந்து வச்சுட்டுத் தான் தேடுவார். இன்னைக்கு அவரு ரூம் கதவைப் பூட்டிக்கிட்டு இருக்காரு.. ஆனால் உள்ளே உருட்டுற சத்தம் கேட்டுகிட்டே இருக்கு" என்று துளசி கூற,
"தாத்தா தாத்தா!" என்று கதவைத் தட்டினான் முகுந்தன். லேசாகக் கதவைத் திறந்து பேரன் மட்டும்தான் நிற்கிறான், மகன் இல்லை என்று உறுதி செய்து கொண்டு கதவை திறந்தார் தங்கமாரியப்பன். "முகுந்தா! தாத்தா இந்த பீரோவோட சாவியை எங்கேயோ வச்சுட்டேன்டா.. தேடு தேடுன்னு தேடுறேன்.. கிடைக்க மாட்டேங்குது" என்றார்.
"தாத்தா! நீங்க நிறைய மறக்குறீங்கன்னு நான் சொன்னேன். நீங்க நம்பலையே.. இப்ப பார்த்தீங்களா.. தொலைச்சுட்டுத் தேடுறீங்க" என்றபடி அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான் முகுந்தன். அவரது கட்டிலில் பல பொருட்களை பரப்பி வைத்திருந்தார். அதில் தன்னுடைய பேனா, ஒரு ரப்பர், ஒருமுறை பரிசாக வாங்கிய பிள்ளையார் பொம்மை மூன்றும் இருப்பதைக் குறித்து வைத்துக் கொண்டான் முகுந்தன்.
கட்டாக கொஞ்சம் மஞ்சள் பைகளைக் கட்டி வைத்திருந்தார் தங்கமாரியப்பன். ஏற்கனவே அவரது கட்டிலில் குப்பையாக அடுக்கியிருந்த பொருட்களுடன் இவையும் சேர்ந்து காட்சி அளித்தது. "இது என்ன தாத்தா?" என்று முகுந்தன் கேட்க,
"நம்ம கோயில் திருவிழால்ல போன வருஷம் கொடுத்த தாம்பூலப் பைடா! நாமதான் அச்சடிச்சுக் குடுத்தோம். அதுல மிச்ச பையைக் கட்டி வச்சிருக்கேன். இதுல ஒவ்வொரு பையா எடுத்துத் தான் மாச மாசம் வாடகை பணத்துல இருந்து நூறு ரூபாய் பணத்தை எடுத்து அதுல வைப்பேன்.. அது எல்லாம் இந்த பீரோ லாக்கரில் தான் இருக்கு. அந்த சாவி தான் எங்க வச்சேன்னே தெரியல" என்று மீண்டும் தேடினார் தங்கமாரியப்பன்.
தேடலின் முடிவில் ரொம்பவும் சோர்வாகி இருந்தார். "நீங்க போய் சாப்பிடுங்க தாத்தா! நான் பாக்குறேன்" என்று முகுந்தன் கூறினாலும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
இருந்த பொருட்களை லேசாகப் புரட்டிப் பார்த்துவிட்டு ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு ஏறி அந்த பீரோவின் மேல் பார்க்க, அதற்கு மேலே தான் அந்த சாவி இருந்தது. "இங்க பாருங்க தாத்தா இங்க தான் சாவி இருக்கு!" என்று அவன் கூற,
"அட! இங்கே தான் வச்சுட்டு வீடு பூராவும் தேடிகிட்டு இருக்கேன்" என்று மகிழ்ந்த தங்கமாரியப்பன் சாப்பிட்டுவிட்டு வந்து பணத்தை எண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். திருப்பணிக் குழுவினர் அலைபேசியில் அழைத்து தங்கக் கலசம் செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப் போவதாகவும் பாதித் தொகையை இப்போது கொடுங்கள் என்றும் கூறியிருந்தார்கள். "சரி நாளைக்கு எடுத்து வைக்கிறேன். வாங்க!" என்று கூறியிருந்தவர் தான் இவ்வளவு நேரம் சாவியைத் தேடி இருக்கிறார்