கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனேமனோஹரா -3

hamsa

New member
இல்லறம்-3
இருபத்து மூன்று முடிய போகும் ரேவதி பேரழகிதான். அய்யங்கார் வீட்டு அழகி இல்லை. அய்யர் வீட்டு அழகி. எந்த ஆண் மகனையும் நின்று திருப்பி பார்க்கச் செய்யும் அழகிதான் அவள். அப்படிப்பட்டவள் இதோ தன்னுடைய மனைவி. அக்னியை வலம் வரும் போது தெரிந்த அவளின் கெண்டை கால் அழகும், அடர் நிற புடவைக்கு நடுவில் தெரிந்த அந்த பளீரென்ற இடுப்பும் , நான் இங்க இருக்கேன் , எனக்கு எங்க முத்தம் குடுப்ப ? கேட்டது யார்? வைர மூக்குத்திக்கும் ரூபி ஜிமிக்கிக்கும் நடுவில் இருந்த கன்னங்கள்தான்.
இதோ கையில் பால் சொம்புடன் தயாரானாள் ரேவதி.
எதற்கு?
எல்லாம் அதுக்குத்தான்......
அவனை குத்தி கிழிக்க ஆரம்பித்த முதல் இரவு.
அனைத்திலுமே முதலாக வந்தவனுக்கு, இந்த முதல் இரவு தரப் போகும் பாடம் மிக கொடுமையானது. திருமணத்தில் தான் செய்தது எத்தனை பெரிய தவறு என்பதை வாழ்க்கை பாடமாய் கற்றுக் கொடுக்கப்போகும் முதல் இரவு.
அவனும் மற்றவர்களை போலவே ஆசையுடன் காத்திருந்தான். அதிலும் அவன் மனைவி அழகாகவே இருந்தாள் . அவள் திருமணத்திற்கு கட்டிக் கொண்டிருந்த குங்கும நிற கூரைப் புடவை அவள் நிறத்தை இன்னும் கூட்டியது.மடிசார் புடவையில் அவள் வாழைத்தண்டு கால்கள், அதற்கு கீழே மஞ்சள் பூசி இருந்த மருதாணி இட்ட அந்த பாதங்கள். ஏற்கனவே பேரழகு அதில் இன்னும் அவன் போட்ட அந்த முத்து வைத்த மெட்டி? அவள் காலில் சேர்த்ததற்கு நன்றி சொல்லுமா?

உண்ணும்போது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள வேண்டும். அவள் முடியாது என்று சிணுங்கினாள். அதை வெட்கம் என்று நினைத்தான். அவள் செய்கைகளை ஒவ்வொன்றாக நினைத்து மனதில் சிரித்துக் கொண்டிருந்தான். அப்போது தலை குனிந்தபடி அதிக நகைகள் இல்லாமல் மெல்லிய சரிகையில் அடர் பச்சை வண்ண புடவையில், காதில் வைரம் மினுமினுக்க வந்தவள் தங்க சிலை போல தெரிந்தாள் அவன் கண்களுக்கு.
(வாடா இருக்கு உனக்கு ஆப்பு)
பால் சொம்பை எடுத்து வந்தவள் அதை டொம் என்று வைத்தாள் .
அவளை பார்த்தவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அதை அறியாதவன், அவள் கையை பற்றினான்.
ச்சீ ! "கையை உதறினாள்.
"என்ன ?" குரலில் தீவிரம் தெரிந்தது.
இவள் அதை கண்டு கொள்ளவில்லை.
"என்னவா? என் வாழ்க்கையை அழிச்சிட்டு என்னவா?" ஆத்திரத்தில் குரல் நடுங்கியது.
"புரியல"
"நீயும் உன் மூஞ்சியும், உனக்கு என்னை மாதிரி அழகான பொண்ணு வேணுமா? என்னிக்காவது மூஞ்சிய கண்ணாடில பார்த்திருக்கியா?"
அவளின் வார்த்தைகளை அவனால் சமாளிக்க முடியவில்லை. அவள் முழுமனதாய் அவனை ஏற்றுக் கொண்டதாகவே அவன் நினைத்திருந்தான். எத்தனையோ பெண்கள் தன்னை வேண்டாம் என்று நிராகரித்த போதெல்லாம், மனதளவில் நொறுங்கியிருந்தான், எப்போது ரேவதியின் வீட்டில் இருந்து சம்மதம் என்ற செய்தி வந்ததோ அப்போதே அவளுக்கு கணவனாக மாறியிருந்தான். அவன் தோற்றத்தை விட வர போகும் மனைவியை தான் எப்படியெல்லாம் மதிக்க வேண்டும்? சந்தோச படுத்தவேண்டும் என்றேதான் அவனது நினைப்பெல்லாம் இருந்தது. தன்னுடைய தோற்றத்தை மற்றவர்கள் கேலி செய்யும்போது தனக்காக ஒருத்தி என்ற நினைப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அது எல்லாம் பொய் என்று இப்போது அவள் வார்த்தைகள் புரிய வைத்தன.
திருமணத்திற்கு முன் அவள் ஏன் போனில் கூட பேசவில்லை என்பதன் அர்த்தம் இப்போது அவனுக்கு புரிந்தது. இழுத்து மூச்சு விட்டான், மனதை சமன் செய்து கொண்டான். சிறிது சமாளித்து கொண்டவன்
"எனக்கென்ன குறைச்சல்? நன்னா (நல்லா) படிச்சுருக்கேன், நன்னா (நல்லா)சம்பாதிக்கறேன் வேறென்ன வேணும்?"
"ஆஹா! என்ன படிச்சு சம்பாதிச்சு என்ன பிரயோஜனம். இந்த காலத்துல எல்லாரும்தான் சம்பாத்திக்கறா.நானும்தான் சம்பாதிக்கறேன். ரொம்ப அழகா இருக்க வேண்டாம். அட்லீஸ்ட் பாக்கற மாதிரியாவது இருக்க வேண்டாம்? எத்தனை பேரு உன்ன வேண்டான்னு சொல்லி இருக்காங்க? தெரிய வேண்டாம்? உன்ன எனக்கு புடிச்சிருக்கா இல்லையான்னு ஒரு தடவையாவது கேட்டியா ? "
அவள் ஒருமையில் பேசுவது அவனுக்கு சுரீரென்றது (பொண்டாட்டிய மதிக்கனும் , அவளும் இந்த குடும்பத்தில ஒருத்தின்னு நீதானே நினைச்ச ? அவ இல்லையே?)

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அவன் சென்ற இடமெல்லாம் அவனுக்கு மதிப்பே கிட்டியது. இப்போது எந்த தவறுமே தனக்கு ஏன் இந்த அவமதிப்பு ? அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"உனக்குத்தான் தெரியுமே? நீ வேண்டான்னு சொல்ல வேண்டியதுதானே?" அவனும் விடவில்லை.
"சொன்னேனே? யாரு கேட்டா? நல்ல இடம், நாங்க சொல்லறவனத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் , அது இதுன்னு ., ஸ்ஸ்ஸ்.... அப்பா எத்தனை மிரட்டல், அட்வைஸ், பிளாக் மெய்ல்ஸ் ?" நெற்றியில் அடித்துக் கொண்டாள் .
"கல்யாணம் ஆயிடுத்தே ? இப்ப என்ன?" கண் சுருக்கிக் கேட்டான்.
இப்ப என்னவா? கிளியை வளர்த்து பூனை கையில குடுத்த மாதிரி எனக்கு இந்த கல்யாணம். நான் ஒரு நாள் கூட உங்களோட வாழ மாட்டேன்"
"உன்ன நான் கம்பல் பண்னா ?"
பதில் இல்லை. முகத்தை திருப்பிக் கொண்டாள் . உள்ளூர உதறல் எடுத்தது .
அவளுக்கும் அதற்கு பதில் தெரியவில்லை. என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், ரேவதி வீட்டுக்கு அடங்கியப் பெண் தான். அழுவாள், மிரட்டுவாள். வேறொன்றும் செய்ய மாட்டாள். இந்த விஷயம் முன்பே தெரிந்திருந்தால் மனோ மிக எளிதாக அவளை கையாண்டிருப்பான். அவளை கட்டிலில் தூக்கி போட்டு வித்தையை காட்டியிருந்தால், முதலில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலும், பின்னர் அடங்கியிருப்பாள்.
னால் அதில் காம வெறி மட்டுமே இருந்திருக்கும். அதை விரும்பாதவன் பாவம் மனோ அவளுக்கு பதில் கூட சொல்ல தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறான்.
"எப்போ மனசுக்கு ஏத்துக்க முடியலையோ அப்போ உடம்பு சேர்ந்தாலும் ஒன்னும் பிரயோஜனம் இல்ல, ஒரே ஆத்துல வாழறதுல அர்த்தமும் இல்ல. ஆனா என்ன? புடிக்கலைங்கறத என்கிட்டையே சொல்லிருக்கலாம். யாருக்கும் இவ்ளோ பிரச்னை வந்துருக்காது" தழைவாகவே சொன்னான்.
"நான் உன்ன கட்டாயபடுத்த மாட்டேன். நாம சீக்கிரமே விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடலாம்" ஏனோ அவன் குரலோ வார்த்தைகளோ அவளை அவளின் மனதை உலுக்கியது. இயல்பிலேயே நற்குணம் கொண்டவள்தான். இருப்பினும் இந்த சிறு கால மாற்றம் அல்லது குண மாற்றம் அவளே அறியாதது. அவளுக்கு ஏன் அவனை குத்தி கிழிக்கும் இந்த வெறி அவளுக்கே தெரியவில்லை. இரவெல்லாம் கண்ணீர் சிந்தினாள் . எதற்காக ? தனக்காகவா, வாழ்க்கையின் தோல்விக்காகவா அல்லது எதற்காக ? அதெல்லாம் தெரியாது. அழ வேண்டும் போல இருந்தது. அழுதாள். அவள் கண்ணீர் வெளியில் தெரிந்தது. அவன் கண்ணீர் வெளியில் தெரியவில்லை. அவள் தலையை கோத வேண்டும் போல இருந்தாலும் கைகளை அடக்கி கொண்டான். செய்யாத தவறுக்கு மனதில் மன்னிப்பு கேட்டான்.
என்னதான் அவனை வெறுத்தாலும், ஏனோ ஏன் அவன் தன்னை வந்து சமாதானப்படுத்தவில்லை ? தன் மீதுதான் தவறு என்று ஏன் ஒப்புக் கொள்ளவில்லை?" மனம் அவனிடம் நிறைய எதிர்பார்த்தது. உரிமை உள்ள இடத்தில்தான் எதிர்பார்க்க முடியும் என்பது அவளுக்கு அப்போது புரியவில்லை. தன் பெற்றோரிடத்தில் சண்டை போட்டால் அவர்கள் வந்து சமாதானப்படுத்துவார்கள். இவன் யாரோ புது மனிதன், இவனால் எப்படி அவளை புரிந்துகொள்ள முடியும்?
பாதி இரவில் அவள் கட்டிலில் இருந்து விழுந்து விடாமல் இழுத்து உள்ளே தள்ளி படுக்க வைத்தான். அன்று மட்டும் இல்லை, தினமுமே அதை வழக்கமாகவே செய்தான், கடமையாக மட்டுமே. ஆனால் அவளை தொடும்போதெல்லாம் அவன் தன்னை கட்டுப் படுத்த மிகவும் சிரமப்பட்டான் என்றே சொல்ல வேண்டும். 28 வயது இளம் ஆண்மகனுக்கு அது பெரும் சவாலாகவே இருந்தது. அதிலும் அவளது பால் வண்ண மேனியும், மெல்லிடையும், பஞ்சு போன்ற கால்களும்....
அவனுக்கோ, அவளின் வார்த்தைகள் மனதை குத்தி கிழித்தது. வீடு, சுற்றத்தார், உறவினர்,பள்ளி , கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலேயும் நல்ல பெயரே வாங்கியவனுக்கு இது பெரிய இடிதான் . இவனை பிடிக்கவில்லை என்றவர்கள் கூட யாரும் இவனை ஏமாற்றுக்காரன் என்று சித்தரிக்கவில்லை. ஒரு விதத்தில், பிடிக்காதவனை, அவனிடம் சொல்லாமல், திருமணம் செய்து இவனை ஏமாற்றியது அவள்தான். அதையே இவன் அவளிடம் சுட்டிக் காட்டினால் ? நிச்சயம் அவளால் தாங்க முடியாது.

இவன் மனதில் ஆயிரம் கேள்விகள் . அவளால் மிக எளிதாக அவன் மனதை புண்படுத்த முடிந்தது. ஆனால் இவனுக்கோ அது முடியாதது. பழக்கம் இல்லாதது. முகம் அசிங்கமாக இருந்தால் என்ன? இவன் மனம் அழகானது தானே? அதை அவள் புரிந்து கொள்வாளா? புரியும் காலத்தில் இருவரும் சேர்ந்திருப்பார்களா?
மறுநாள் விடியலிலேயே எழுந்து சந்தியாவந்தனம் செய்ய போய் விட்டான். இவளோ நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தது ?

மயக்க வருவான் மனோ....
 
Top