அனைவரின் ஆசைப்படி முதலில் ஒரு பெண் பிறந்தாள் . அவள் அங்கே தேவதையாகவே பார்க்கப்பட்டாள் .
நம்மை மயக்க வந்தது லாஸ்யா..........
லாஸ்ய ப்ரியா லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் அம்பாள் பெயர். வீட்டில அடுத்து பெண் குழந்தை பிறக்கும்போது வைக்க வேண்டும். ஏற்கனவே தீர்மானித்ததுதான். அழைக்கவும் மார்டனாக பள்ளியில் எழுதவும் எளிதாக அப்பப்பா எத்தனை யோசிக்க வேண்டி இருக்கிறது?
எந்நேரமும், யாராவது ஒருவர் மடியில் வைத்துக் கொண்டே இருந்தனர். மடி சூடு குழந்தைக்கு தாங்காது என்று பெண்கள் எத்தனை சொன்னாலும், யாரும் கேட்பதாகவே இல்லை. நம் தேவதை என்னேரமும் யாரிடமாவது, முத்த மழை வாங்கி கொண்டே இருந்தாள் . எந்நேரமும் யாரவது பேசிக் கொண்டே இருந்தாள் , அவளும் கண்களை உருட்டி உருட்டி விரைவிலேயே பேச ஆரம்பித்து விட்டாள். வாயில் வார்த்தைகள் வராமலேயே ஆயிரம் வார்த்தை பேசுவாள். விரைவிலேயே வார்த்தைகளும் வர ஆரம்பித்து விட்டது. கேட்கவா வேணும்?தாத்தாவோ எந்நேரமும் அவளிடம் கொஞ்சுவதும், கதை பேசுவதும் விளையாடுவதும் அவருக்கு நேரம் காலம் எதுவும் தெரிவதில்லை. அவளுக்கு மனைவி உணவு ஊட்டியவுடன், துடைப்பது, கை அலம்புவது, முகம் துடைப்பது, டயப்பர் மாற்றுவது எல்லாமே அவர்தான். பேத்தி தளிர் நடை போடுவதும், வீட்டில் விஷமம் அதிகமாயிற்று. இவள் தனது பொம்மைகளை எல்லாம் எடுத்து தூக்கி எறிவாள் . அவர் ஓடிப்போய் அள்ளி எடுக்கவேண்டும். இவள் கிளிக்கி கை தட்டுவாள். எல்லாமே நன்றாகவே இருந்தாலும், ரேவதியை பார்த்ததை விட பேத்திக்கு, இன்னும் செல்லம், கொண்டாட்டம்தான்.
பிள்ளை பெறும்போது இவளுக்கு தண்ணீர் வற்றி விட்டது. அதனால் வெகு நேரம் முயற்சி செய்தும், இறுதியில் அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுத்தனர். அதற்கு பின்னும், இவள் உடல் பலகீனமாகவே இருந்தாள் . லஷ்மியும் எத்தனையோ முயற்சி செய்து பார்த்தும், அவள் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போனாள் .
இவளுக்குதான், மனமும் உடலும் சேர்ந்து படுத்தியது. கணவன் தன் அருகிலேயே வராதது போல தோன்ற ஆரம்பித்தது. பெண்களுக்கு இயற்கையிலேயே பிள்ளை பெறும்போது வருவதுதான் என்றாலும் இவளால் மனோவை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியவில்லை. எந்நேரமும் அவன் மேல் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும். பழங்கள் கூட அவன் தான் ஊட்ட வேண்டும் என்னும் அளவுக்கு பைத்தியம் ஆகி போனாள். அதனாலேயே இவளுக்கு எல்லாரும் தன்னை சேர்ந்து ஒதுக்குவது போல தோன்ற ஆரம்பித்தது. முக்கியமாக கணவன். இரவில் கூட குழந்தையையே கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே இவர்களுக்குள் உடல் சம்பந்தம் இல்லாமல் போயிற்று. தன்னை தாங்கு தாங்கு என்று தாங்கியவர்களுக்கு இப்போது தான் தேவையே இல்லாமல் போனதாக நினைத்தாள் . என்னதான் இருந்தாலும் பெற்றவர்களுக்கும், மகன்தான் தேவை இந்த மகள் தேவையே இல்லை என்பது போல நினைத்துக் கொண்டாள் . இவளுக்கு மகப்பேறு முடிந்த அடுத்த சில மாதங்களில் அவளின் பெற்றோரும் கிளம்பி விட்டார்கள். கேட்கவா வேண்டும்? திருமணமான புதிதில் கூட அவள் இத்தனை தனிமையை இந்த வீட்டில் அனுபவித்ததில்லை. ஒரு வேளை அப்போது எப்படியாவது மனோவை விட்டு பிரிந்து விட வேணும் என்ற வெறியில் இருந்ததினால் இருக்கலாம்.இதற்கு எல்லாம் காரணம் தான் பெற்ற மகள் தான் காரணம்,கணவனின் காதலை பிடுங்கி கொண்டதாகவே மகளை நினைத்தாள். முதலில் எல்லாம் ஆசையாகவே பாலூட்டி சீராட்டியவள், போக போக அவளை எதிரியாகவே நினைக்க தொடங்கினாள்.
அது சரி, மனோ ஏன் இப்போதெல்லாம் இவளை கண்டு கொள்வதில்லை ?
சில மாதங்களுக்குள் இவள் மறுபடியும் கர்ப்பம் தாங்க கூடாது என்று மருத்துவர் சொல்லி இருந்தார். அதை தவிரவும், அவள் பேறு காலத்தில் பட்ட கஷ்டங்களை இவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இன்னும் சிறுது காலம் போகட்டும் போகட்டும் என்றே அவன் மனைவி அருகில் வருவதை தவிர்த்தான். மனைவியின் பார்வை ஒன்றே அவனை நிலை கொள்ளாமல் செய்துவிடும் என்பதை அவன் நன்றாகவே அறிவான். பாவம் அவன் மனைவிக்குத்தான் அது எதுவும் தெரியவில்லை. அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள எவ்வளவு சிரமப்பட்டான் என்பது அவனுக்குதானே தெரியும்.
ஏற்கனவே எதை எதையோ எண்ணி மனதை குழப்பிக் கொண்டிருந்தவளுக்கு, போக போக பொறுத்துக்க கொள்ள முடியாததாக மாறியது. ஒரு ஞாயிற்று கிழமை காலை இவள் தூங்கி எழுந்தபோதே கணவனையும், மகளையும் காணவில்லை.
காபி குடித்துவிட்டு பார்த்தால், அப்போதும் இருவரையும் காணவில்லை.
"அம்மா! அவா ரெண்டு பெரும் எங்க காணும்? அப்பா எங்க ?"
"அப்பா கடைக்கு போயிருக்கார். அவ ரெண்டுபேரும் கணத்தடில இருந்தாளே ?"
இவள் சென்று பார்த்தாள் அவள் பொம்மைக்கு இருவரும் சேர்ந்து குளிபாட்டிக் கொண்டிருந்தனர்.
"அப்பா!அப்பா! இவ கல் (பெண்ணாம் ) பாப்பா டிரஸ் பண்ணிக்கறேன். நீ போ" மழலையில் கொஞ்சியது.
"சரி! இங்கயே இருந்தா பேபிக்கு ஜுரம் வந்துடும். ரூமுல வந்து ட்ரெஸ் பண்ணு, பவுடர் எடுக்காத அம்மா திட்டுவா" சொல்லி கொண்டிருந்த கணவனை பார்த்தவளுக்கு
ஒரு புறம் மனம் சந்தோஷப்பட்டாலும்,
'ஞாயித்து கிழமை கூட பொண்ணுதான். என்னிக்குமே எனக்கு கிடையாதா?' இது ஏக்கமா? பொறாமையா? கோபமா? கணவனிடம் உரிமையாக சண்டையிட்டாள் .
"இங்க பாருங்கோண்ண! நீங்க பன்றது கொஞ்சம் கூட சரி இல்ல. எந்நேரமும் உங்களுக்கு உங்க பொண்ணுதானா . என்ன பத்தின நினைப்பே கிடையாதா?"
"என்னடி நீ? அவ எனக்கு மட்டும்தானா குழந்தை? உனக்கு இல்ல? அவளோட போட்டி போடற?"
"அப்பா, அப்பா இங்க வா"
"ஆமாண்டி! நீயே உங்க அப்பாவை வச்சுக்கோ. எப்பப்பாரு அப்பா அப்பான்னு, நான்தான் உன்ன பெத்தவ. ஞாபகம் இருக்கட்டும்" ஏக்கத்தில் குரல் நடுங்கியது.
அது எங்கே இவளை கண்டு கொண்டது ?
"பேபிக்கு கண்ணுல சோப்பு , வலிக்கறது" பொம்மைக்கு கண்ணை அலம்பி அலம்பி விட்டது . 'அந்த பொம்மைக்கு இருக்கற மரியாதை கூட எனக்கில்லையா?' குழந்தையிடம் ஓடிய மனோவை பார்த்து அவளுக்கு அத்தனை ஆத்திரம் .
ஆனால் இவற்றை எல்லாம் பார்த்த மாமியாருக்கோ சிரிப்பு முட்டியது. சிரமப்பட்டு அடக்கி கொண்டாள் .
இவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. இவள்தான் தாங்க முடியாமல் அறைக்குள் சென்று அழுதாள் . பின்னாடியே மாமியாரும் ஓடினாள். இவள் பிரச்னை அவளுக்கு புரிந்தது. அவளும் இதை எல்லாம் அனுபவித்தவள் தானே ?
"என்னம்மா ரேவதி இது. அது நீ பெத்த குழந்தை தானே?"
"இல்லமா! எந்நேரமும் அவளோடையே இருக்கார். நான் சாப்பிட்டேனான்னு கூட கேட்கறதில்லை"
இவளின் ஏக்கமும் மன அழுத்தமும், மாமியாருக்கு புரிந்தது.
"நான் அவன்கிட்ட பேசறேன். இனிமே ராத்திரி குழந்தையை நாங்க தூங்க பண்ணிக்கறோம். பால் குடி மறந்த குழந்தைதானே. தெனம் ஏதாவது கத சொன்னா தூங்கியே போயிடும். சரியா ? நீங்கதான் ஹனி மூன் கூட போகலியே? கொஞ்ச நாள் கழிச்சு எங்கையாவது போயிட்டு வாங்களேன்"
(இதுக்குதான் வீட்டுல நாலு பெரியவங்க வேணுங்கறது. எப்படி பாயிண்டை புடிச்சாங்க பார்ரா)
அதற்குள் தாத்தா பலூன் வாங்கி வந்தார். பேபியை தூக்கி போட்டு விட்டு பலூனுக்காக தாத்தாவிடம் ஓடியது.
மகளை பார்த்து சிரித்து கொண்டே தன் மனையாளிடம் வந்தான் மனோ. வேட்டியை தூக்கி மடித்து கட்டியவன் இப்போதும் அவளை மயங்கினான். இருந்தாலும் தனக்கான உரிமை?விட்டுவிடுவாளா ரேவதி?
இவனை பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் . அவளிடம் ஒட்டிக் கொள்ள இவனுக்கும் ஏக்கம்தான். ஏனோ அதை இன்று அவனால் புறம் தள்ள முடியவில்லை.
"என்னடி குளோப் ஜாமூன்!" அவளருகில் அமர்ந்து, அவள் மடியில் படுத்துக் கொண்டான். அவளை நெருங்கியே பல மாதங்கள் ஆகி விட்டது. இத்தனை நேரம் அவனின் மூச்சு காற்றுக்கு கூட ஏங்கியவள் இப்போது அவனை வீம்பாக தள்ளி விட்டாள் .
"ம்! என்ன உங்க பொண்ணு? எங்க? குளோப் ஜாமூன், பால்கோவா எல்லாமே உங்களுக்கு அவதான? குத்தலாக பேசினாள் . இதுக்கெல்லாம் நம்ம ஆளு பயப்படுவானா? பழைய ரேவதியையே சமாளிச்சாச்சு, இவ என்ன?
"என்னடி இது? பாரு, பேபி அவ்வளவுதான். இப்ப பலூனும் சாக்லேட்டும்தான் முக்கியம். அது குழந்தை. உன்னோட குழந்தை. அதுகிட்டப்போய் சக்களத்தி சண்டை போடற ?"
"சக்களத்தியா?ஆமா! அவ வந்ததுக்கு அப்புறமாதான் நீங்க என்ன கவனிக்கறதே இல்ல.எழுந்ததுலேர்ந்து படுக்கற வரைக்கும் அவதான், அவ பின்னடியேதான் சுத்தறேள்.நான் எப்படி இருக்கேன், சாப்பிட்டேனான்னு கூட உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு பொண்ண பெத்து குடுத்துனாலதான இப்டி . இதுவே பையனா இருந்தா ?"
"எதுவா இருந்தாலும் எனக்கு நீ தான் முதல்ல. இப்ப என்ன உனக்கு பையன் வேணுமா நான் ரெடி. நீ ரொம்ப வீக்கா இருக்க. உன்கிட்ட வந்தாலே என்னால என்ன அடக்க முடியல. சரின்னு பாவம் பார்த்தேன்" அவன் கைகள் அவள் முகத்தை காதை உதட்டை தடவியது. பட்டென கைகளை தட்டி விட்டாள் . உதடு பிதுக்கி கொண்டு அழத் தாயாராக நின்றாள்.
"இப்ப என்ன உன்ன கவனிக்கணும். கொஞ்சனும். அவ்வளவுதானே ? பண்ணிட்டா போச்சு.
அவளிடம் இருந்து மறு வார்த்தை வர இவன் விடவே இல்லை.
ரதி ரதி, ........... முத்தங்களால் மனைவியை மனைவியாக கொஞ்சிக்கொண்டிருந்தான்.
ரேவதியிடம் பேசப் போன சங்கரனை ,
"ன்ன , அச்சு பிச்சுன்னு போய் அவா ரூம் கதவை தட்டாதீங்கோ.பல்லுடிக்கில் கணவனை திட்டினாள் மனைவி.
லக்ஷ்மியின் அதட்டல்
சங்கரனுக்கு மட்டும் இல்லை,
நமக்கும்தான் நா எஸ்கேப் ......
சுபம் ...........