இல்லறம்-10
"காபி அவளுக்கு மட்டும்தான். நீங்க அடிபோடாதீங்கோ! "
கணவன் மனைவியின் செல்ல சண்டையை பார்த்து விட்டு சிரித்து கொண்டே குளிக்க போனாள் .என்னன்ன(என்னங்க )இது இன்னும் குழந்தையாவே இருக்கா ?
அதுவும் இவள் காதில் விழுந்தது.
தன்னுடைய பிரச்னை பற்றியே யோசித்தவளுக்கு தன்னுடைய பெற்றோர் நிலைமை என்ன என்பதை கவனிக்க தவறி விட்டாள் பாவம். அதை கவனித்திருந்தால் வர போகும் பெரிய பிரச்சனையை தவிர்த்திருக்கலாம்.
மனோகரனை கணவனாக ஏற்க முடியவில்லை என்றாலும், அவன் பெற்றோரை அம்மா அப்பா என்றே நினைக்க ஆரம்பித்து விட்டாள்.
அன்று இரவு,
இவளுக்கு வாய் விட்டு கேட்க ஈகோ தடுத்தது. தந்தை மூலம் விஷயம் தெரிந்து கொண்டவன், தானாகவே வந்து கேட்டான்.
"உனக்கு ஆபிசுல ஏதோ பிரச்சன்னைனு அப்பா சொன்னா. ஒனக்கு சொல்ல பிடிக்கலைன்னா சொல்ல வேண்டாம். ஆனா உனக்கு ஹெல்ப் பண்ண நான் தயாரா இருக்கேன்"(எத்தனை முயன்றும் மானோவால் இவளிடம் வீராப்பு காட்ட முடியவில்லை)
"ம்., தேங்க்ஸ்.உங்ககிட்ட ஒன்னு கேட்கவா? "
"ம்"
"நான் வேலைக்கு போய்தான் ஆகணுமா ?
"உன்னோட இஷ்டம். அத எதுக்கு எங்கிட்ட கேட்கற?"
"இல்ல, அம்மாட்ட, உங்க அம்மாட்ட கேட்டேன். அவா வேண்டான்னு சொல்லிட்டா. அதான் நீங்க என்ன சொல்லுவேளோன்னு" .இத்தனை நேரம் கண்களின் ஓரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் வெளியே வந்தது. அது அவளின் சுய பச்சாதாபமாக இருக்கலாம்.
அவளின் தலை கோதி, நெஞ்சில் சாய்த்து பதில் சொல்ல ஆசைதான்; முடியாததால் கைகளை இறுக்கி கட்டிக் கொண்டான்.
"இங்க பாரு! நீ தான் என்னோட மனைவி. உன்னோட கடமை எனக்கு வாழ்கை முழுக்க இருக்கு. நீ சேர்ந்து இருந்தாலும், இல்லனாலும்! அதனால நீதான் முடிவு பண்ணனும்.
ஆனா நானாருந்தா, என்ன நான் ப்ரூவ் பண்ணதுக்கு அப்புறம்தான் வேலைய விடுவேன். எனக்கு ஒரு விஷயம் வரல, அதனால நான் பயந்து ஓடினதா இருக்க கூடாது"
முதலில் விட்டேத்தியாக பேசுவது போல தெரிந்தாலும் பிறகு அவன் சொல்வதில் இருந்த அர்த்தம் புரிந்தது ரேவதிக்கு.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் ,
"நீங்க நாளைக்கு பிரீயா இருந்தா எனக்கு சொல்லித் தருவேளா ?" வாய்க்கு வந்த படி எல்லாம் பேசும்போது இல்லாத பயம் இப்போது எங்கே அவன் மறுத்து விடுவானோ என்று ஒட்டிக் கொண்டது. எச்சில் முழிங்கினாள்.
ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தான்.
"சரி! ஒரு கண்டிஷன் . மூளையை சிதறடிக்க விடாம கவனிக்கணும்"
மறுநாள் காலை மாமியாருக்கு உதவி விட்டு சீக்கிரமாகவே தயாராகி வந்தாள். இவனும் சனி ஞாயிறு இருநாட்களையும் இவளுக்காக ஒதுக்கிக் கொண்டான். இந்த விஷயம் இத்தனை சுலபமானதா என்னும் அளவுக்கு தேர்ந்த ஆசிரியர் போல சொல்லித் தந்தான். மேம்போக்காக அல்லாமல் பொறுமையாக வேரிலிருந்து சொல்லிக் கொடுத்தான். பல சின்ன விஷயங்கள் கூட தெரியாமல் இருந்தவளுக்கு அவன் சொல்லிக் கொடுத்த பிறகு ஒரு நம்பிக்கை வந்திருந்தது. இவளும், சிறிதும் சுணங்காமல் கற்றுக் கொண்டாள்.
நேரம் போவது தெரியாமல் பாடம் படித்துக் கொண்டிருநந்த இருவரையும் பார்த்த மனோவின் பெற்றோருக்கும் இவர்கள் இருவரும் இனி ஒற்றுமையாய் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை தந்தது.
அந்த ஞாயிறு அனைவருக்குமே மன திருப்தியை தந்தது. அடுத்த ஞாயிறு, மகிழ்ச்சியை தந்தது.
அந்த வாரம் முழுதுமே அலுவலகத்தில் இவளால் திட்டு வாங்காமல் ஓட்ட முடிந்தது. அதனால் மகிழ்ச்சியாகவே சுற்றி திரிந்தாள். வீட்டில் ஒரு சிறு பெண் இத்தனை சந்தோசமாக சுற்றி திரிவது, மாமியார் மாமனார் இருவருக்குமே மகிழ்ச்சிதான். அவர்களும் பெண் குழந்தைக்காக ஏங்கியவர்கள்தான். இரண்டாவது உண்டாகியிருந்தபோது லஷ்மி கீழே விழுந்ததால், அபார்ஷன் ஆகி விட்டது. கர்ப்பபையில் ஆழமாக காயம் பட்டிருந்ததால் இனி குழந்தை பிறக்காது என்று மருத்துவர் கூறி விட்டார். எத்தனையோ பெண் குழந்தைகளை கொஞ்சி இருந்தாலும், (அதற்காகவே பெண்கள் பள்ளியில் வேலைக்கு சேர்ந்து கொண்டார்)இருவருக்கும் தன்னுடையது என்பது இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
இவள் தன் மகனுடன் சகஜமாக இருந்தால், ஒரு பேத்தி பிறக்காதா என்ற ஏக்கமும் வர ஆரம்பித்தது. அன்றைய ஞாயிறு, அவர்கள் வீட்டிற்கு சூர்யா வந்து நின்றான்.
"அச்சச்சோ! ஒன்னும் பிரச்னை இல்லன்னு நினைச்சோமே , வேலைலேர்ந்து தூக்கிட்டாரா? இல்ல! எப்படி இப்படி வேலை பாக்கறேன்னு திட்டறது வீட்டுக்கே வந்துட்டாரோ ? இவளுக்கு கை கால் உதறல் எடுத்தது. அது அர்த்தமில்லாதது என்று அந்த நிமிடம் உறைக்கவில்லை. ஆனா அப்பா இவர்கிட்ட சகஜமா பேசிண்டு வறாரே? சந்தேகம் வந்தது.
"லக்ஷ்மி!யாரு வந்துருக்கா பாரு? " மாமனாரின் குரலில் அப்படி ஒரு உற்சாகம்.
"யாரு ?
"மாமி! என்ன அடையாளம் தெரியலையா ?"
உன்னிப்பாய் பார்த்தாள் .
"சூர்யாவா ?"
"ஆமாம்! உங்க சூர்யாவேதான். எப்பிடி இருக்கீங்க ?"
"ரொம்ப நன்னா இருக்கேன்டா "
"இந்தாங்கோ, உங்களுக்கு பிடிச்ச மல்லி, மாம்பழம்,, மாமாக்கு நேந்திரம் பழம். இது நம்ம தோஸ்த்துக்கு நேந்திரம் சிப்ஸ்"
"என்னடா இது? இன்னும் எல்லாத்தையும் நியாபகம் வச்சுண்டிருக்க ?"
"பின்ன? இது நம்பாம்(நம்ம வீடு)"
"சரிடா! கை கால் அலம்பிக்கோ. காப்பியா ? சாப்பாடா?"
"இன்னிக்கு என்ன சமையல்?"
"வாழப்பூ பருப்பு உசிலி. ஓகே வா ? "
"எதுவா இருந்தாலும் டபுள் ஓகே. அவன் எங்க? "
"அவனா கோயிலுக்கு போயிருக்கான். இதோ இரு வந்துடுவான்"
"ஏன்டா படவா! ஏண்டா கல்யாணத்துக்கு வரல?"
"அப்பதான் அமெரிக்கா போயிருந்தேன். ஒடனே வர முடியல.எங்க உங்க மருமகளை காட்டவே மாட்டேங்கறீங்க ?"
"ஆமாடா! இரு அவளை கூப்பிடறேன்"
மாமியாரின் குரலில் சற்று தயங்கியபடியே ரேவதி வந்து நின்றாள்.
இவளை பார்த்ததும் சூர்யாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை. அவளுக்கோ வாயில் இருந்து வார்த்தையே வரவில்லை.
"வணக்கம்"
"வணக்கம்! என்னங்க! நீங்கதான் மனோவோட மனைவியா? யு ஆர் சோ லக்கி"
மனோ வருவதற்குள், இவர்களை பற்றி புகழ்ந்து தள்ளி விட்டான். இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"நான் ரொம்ப பணக்கார வீடு பையன்ங்க. எனக்கு 9வது படிக்கும்போது படிப்பு கொஞ்சம் ஆர்வம் மங்கி போச்சு. எல்லாம் வயசு கோளாறுதான். அப்பதான் எனக்கு மனோவோட பழக்கம் கிடைச்சுது. படிப்போட இம்பார்ட்டன்ஸ் என்ன? எல்லாம் சொன்னான். எனக்கு அம்மா கிடையாது. இவங்கதான் எனக்கு எல்லாம். ஞாயிற்று கிழமை ஆனா இங்கதான் டேரா. ஒரு நாள் கூட இவங்க என்ன திட்டினதே இல்ல. இவங்களுக்கு திட்ட தெரியுமான்னு கூட எனக்கு தெரியாது.
"என்னடா கண்ணா இது?" லட்சுமிக்கு வெட்கம் பிடுங்கியது. அவனுக்கு காபி தந்தவள் வழக்கம்போலவே தலையை கோதினாள் . இவன் அவள் நெஞ்சில் உரிமையுடன் சாய்ந்து கொண்டான். இடுப்பை கட்டிக் கொண்டான்.
இவற்றை எல்லாம் பார்த்த ரேவதிக்கு எல்லாமே வினோதமாக இருந்தது.
தன் வீட்டிலும் பாசம் உண்டுதான். ஆனால் எப்போதும், வேத்தாதுக்கு (வேறு வீட்டுக்கு) போக வேண்டிய பொண்ணு. கொஞ்சம் அடக்கமா இரு. ஆம்பள பையன அடிச்சு வளக்கணும். இப்படித்தான்.
சூர்யா சொல்வதோ வேறு மாதிரி இருந்தது. அதனால்தான் அன்று தன்னுடைய அலுவலக பிரச்சனை பற்றி மாமியாரிடம் கூறி அழ முடிந்தது என்று நினைத்தாள் மாமனாரும் நேரடியாக காண்பிக்க வில்லை என்றாலும், அவரின் கவனிப்பும் எப்போதும் இலை மறை காயாகவே இருக்கும்.
"இந்தா உனக்கு ஜாதி(மல்லி) புடிக்குமேனு அப்பா வாங்கிண்டு வந்தார். உனக்கும் எனக்கும் மருதாணி பறிச்சுண்டு வந்துருக்கார்." இப்படி எத்தனையோ ...........
இவளை பொறுத்தவரை அவர்கள் அவளை சந்தோஷமாகவே பார்த்துக்கொண்டனர்.
மனைவியும் குழந்தையும் சென்னை வரும்போது அழைத்து வருவாதாய் கூறி அன்றைய மாலை வரை இருந்து விட்டு, அப்புறம்தான் சென்றான் சூர்யா. அலுவகத்தில் இருக்கும் சூர்யாவா இது? வாய் விட்டே கேட்டு விட்டாள்.
"இங்க பாருங்க மேடம், நான் பார்க்க நல்லா இருக்கேன். நல்ல காசு. நிறைய பொண்ணுங்க சுத்தி சுத்தி வருவாங்க. கொஞ்சம் கண் அசந்தா போதும். என்னோட குடும்ப வாழ்க்கை போய்டும். என்னோட மனைவி தான் எனக்கு எல்லாமே. என்னோட பொண்ணு, என்னோட அம்மாவேதான். என்னால எப்படி அவங்கள இழக்க முடியும்? அதுக்காக நான் போட்டுக்கிட்ட வேஷம்தான் இந்த கோபக்கார பாஸ். அதுவும் இல்லனா யாரும் மதிக்க கூட மாட்டாங்க. ஆனா உங்களையும் நான் ரொம்ப கஷ்ட படுத்தி இருக்கேன். தப்பா நினைச்சுக்காதீங்க"
"ச ச !! அதெல்லாம் எதுவும் இல்ல"
வீட்டில் அனைவரும் மனதில் சிரித்து கொண்டனர். ( நான் வேலைய விட்டுடட்டுமா ???)
சூர்யாவின் வார்த்தைகளை மனதில் அசை போட்டவளுக்கு , வெறும் உருவம் மட்டும் முக்கியம் அல்ல, என்பதை அவள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை . ஆனால் அதற்காக அவள் மிகவும் வேதனைப் பட வேண்டும். பல நாட்கள் தூக்கம் தொலைக்க வேண்டும். சூர்யாவின் வருகை மனோகரன் மீது இன்னும் மதிப்பை ஏற்றியது. அவனை உருவத்தினால் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், நல்ல தோழனாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
வீட்டில் அனைவரும் ஒன்றாக கோயிலுக்கு சென்றனர். பீச்சுக்கு சென்றனர். அலையில் நிற்கும்போது அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். வீட்டில் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். அவர்களின் உறவில் இருந்த விரிசல் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
முதன் முதலாய் மனோவின் கோபத்தையும் அவள் கண்டு கொண்டாள்.
"மனோ இந்த தடவ எனக்கு எதுவும் நகை வேண்டாண்டா. உன் பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கி குடு"
"சரி மா! முதல்ல அவளுக்கு ஓகேவான்னு கேளு. ஓகேன்னா அப்பாவும், நீயும் போய் அவளுக்கு என்ன வேணுமோ வாங்கி குடுங்கோ. நான் கேஷ் கிரெடிட் பண்ணிடறேன்.
இவளுக்கு ஏனோ மனோவும் கூட வர வேண்டும் போல தோன்றியது.
"நீங்களும் வாங்களேன்" முகம் பார்த்து கூறவில்லை. ஆனால் குரலில் ஏதோ ஒரு உணர்வு.
அவளுக்கு என்றால் அவன் வராமல் எப்படி? ஆனால் அது அவளுக்கு பிடிக்காதே. அவளே அழைத்ததால் ஒத்துக் கொண்டான்.
கடையிலும் அவள் அருகில் வரவே இல்லை. தன் தந்தையுடனே இருந்துக் கொண்டான். ஆனால் கடையில் அவன் அம்மா அவனை விடாமல் இது நன்னாருக்கா, அது நன்னாருக்கா ஒவ்வொரு நெக்லஸாக காட்டிக் கொண்டிருந்தாள்.
இறுதியில் ஒன்றை தேர்ந்தெடுத்து, போட்டு பார்த்தாள் . மிக அழகாக இருந்தது. ஆனால் அது தலை முடியில் மாட்டிக் கொண்டது. அதை இவனே மெதுவாய் எடுத்து விட்டான்.
இவளுக்குத்தான், தன்னை அடக்கிக் கொள்ள சிரமமாக இருந்தது. காதின் ஓரம், அவன் கைகள்,... நெஞ்சு படபடத்தது. நொடியில் அவள் முகம் சிவந்திருந்தது. அவளின் கன்னச் சிவப்பிற்கு தான் தான் காரணம். அது அவனுக்குத் தெரியும் ஆனால் தொட்டு ரசிக்க முடியாது. அதுவும் தெரியும். மனோவிற்கு ஏக்க பெருமூச்சு வந்தது. மாற்றிக் கொண்டு பில் கட்டினான்.
ஒரு வழியாக வெளியில் வந்து சேர்ந்தனர்.
"அம்மா இங்கையே எங்கையாவது சாப்பிட்டு போகலாம்"
ஒரு ஓட்டலில் நுழைந்தனர்.
"யாருக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுங்கோ. ப்ளீஸ் வேஸ்ட் மட்டும் பண்ணாதீங்க" அதன்படியே அனைவரும் செய்தனர்.
மாட்டிக் கொண்டவள் ரேவதி தான். சாப்பிட்டபின் ஏனோ வயிறு நிறையாதது போல இருந்தது. அதனால், இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கி கொண்டாள் .
ஆனால் சிறிது உண்ட பின்னர் வயிறு அடைந்து விட்டது.
"எனக்கு போறும். அவள் உணவை தள்ளி வைத்ததைப் பார்த்தவனுக்கு வந்ததே கோபம்! "நாந்தான் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு சொன்னேனே?"
அவன் கண்ணை பார்த்து முறைத்து அதட்டிய அதட்டலில் இவள் பயந்து போனாள் . (என்னம்மா கண்ணு நீங்க மட்டும் தான் திட்டுவீங்களோ? நாங்களும் வச்சு செய்வோம், எப்படி?)
இருப்பினும் அவள் மிச்சம் வைத்ததை அவனே தான் உண்டான். இவள் அவமானம் தாங்காமல் அதை பிடுங்கி உண்டு முடித்தாள்( எப்படியோ கல்யாணத்தன்னிக்கி எச்சி சாப்பிட மாட்டேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டவள, இன்னிக்கு சாப்பிட வச்சுட்டோம்)
ஆனா வீட்டுக்கு போய் அவளை எப்படி சமாதான படுத்தபோறியோ !!!!! இப்பவே எங்களுக்கு உன்ன பார்த்தா பாவமா இருக்கு மனோ.
அதன் பின் இரண்டு நாட்களுக்கு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள் . பெரியவர்களுக்கு சிரிப்புதான் வந்தது. இவளுக்கு அவர்களும் மனோவுடன் சேர்ந்து கொண்டது போல தோன்றியது. ஆனால், அவர்களிடமும், இவன்தான் திட்டு வாங்கினான்.
"டேய்! மனோ அவளை பார்த்தா பாவமா இருக்குடா. சாரி சொல்லேண்டா ! " இது அன்னை.
"அம்மா! தப்பு பண்ணினது அவ. நான் ஏன் சாரி சொல்லணும் ? "
"சரி! சமாதான படுத்தலாமே ? "இது அப்பா .
"என்னப்பா சொல்லறேள் ?"
"டேய்!ஆத்து மனுஷாகிட்ட ஈகோ பாக்க கூடாது. முக்கியமா பொண்டாட்டிகிட்ட. நான் பண்ணதெல்லாம் தப்புன்னு கால்ல கூட விழலாம். ஆனா ரூமுக்குள்ள.யாருக்கும் தெரியாம "(ஹஸ்கி வாய்ஸ் )
"அப்பா! நீங்க பண்ணறதெல்லாம் என்ன பண்ண சொல்லாதீங்கோ"
"என்னமோ பா ! அவகிட்ட அடி வாங்காம இருக்க எனக்கு தெரிஞ்ச வழிய சொன்னேன்"
"வேற ஏதாவது ஐடியா இருந்தா குடுங்கோ "
"பேசாம அவளுக்கு ஐஸ் கிரீம், அப்புறம் சாக்கலேட், பொம்மை இந்த மாதிரி ஒவ்வொண்ணா வாங்கி குடு. சமாதானம் ஆகிடுவா"
"அப்பா இப்பதான் லட்ச ரூபாக்கு நக (நகை)வாங்கி குடுத்திருக்கேன். அதெல்லாம் கணக்கு கிடையாதா ?"
"போடா! இவன் ஒருத்தன். நீ வேணா அவளுக்கு இன்னிக்கே கசாட்டா வாங்கி குடு. அவகிட்ட தெரியற மாற்றங்களை பார்ப்ப "
நேரே மாலை அவள் அலுவலகம் சென்றான்.
"என்ன திடீர்னு வந்துருக்கேள் ?"
"சும்மாதான், ஏனோ உன்ன ஐஸ் கீரிம் பார்லருக்கு கூட்டிண்டு போகனுன்னு தோணித்து. உனக்கு வேண்டான்னா நேரா ஆத்துக்கு போகலாம். ஒரக் கண்ணில் அவள் முகத்தை பார்த்தான்"
என்ன பதில் சொல்லுவாள்........
மயக்குவான் மனோ......