கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோஹரா -4

hamsa

New member
இல்லறம்-4
அவளால் மிக எளிதாக அவன் மனதை புண்படுத்த முடிந்தது. ஆனால் இவனுக்கோ அது முடியாதது. பழக்கம் இல்லாதது. முகம் அசிங்கமாக இருந்தால் என்ன? இவன் மனம் அழகானது தானே? அதை அவள் புரிந்து கொள்வாளா? புரியும் காலத்தில் இருவரும் சேர்ந்திருப்பார்களா?

முதல் நாள் என்ன நடந்திருந்தாலும் மறுநாள் விடியலிலேயே எழுந்து சந்தியாவந்தனம் செய்ய போய் விட்டான். இவளோ நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.
"மாமி , என்ன மாப்பிளை அதுக்குள்ள எழுந்துட்டாரே ?"
"ஆமா! மாமி அவன் தெனம் சீக்கிரமே எழுந்துடுவான்"
"தெனம் சரி , இன்னிக்குமா?" சுந்தராம்பாளுக்கு கேட்பதற்கே ஒரு மாதிரியாக இருந்தது.
அப்போதுதான் லஷ்மிக்கும் உரைத்தது.
"நீங்கதான் மாமி உங்க பொண்ணாண்ட கேட்கணும்"
"சரி!"
மகளை எழுப்ப சென்றவளுக்கு, அந்த இடத்தை பார்த்ததுமே புரிந்தது.
ரேவதியின் அறைக்கு சென்ற அவள் அன்னை சுந்தராம்பாள், அனுப்பிய கோலம் கலையாமல் தலைக்கு அடியில் கையை வைத்து சுகமாக உறங்கிய மகளை கண்டவளுக்கு
கோபம், அதிர்ச்சி.
"இந்த கடன்காரி என்ன பண்ணி வச்சிருக்கா? ஆத்திரம் பொங்கியது" வெளி இடம் என்பதால் அடக்கி கொண்டாள்.
"ரேவதி எழுந்திரு, எழுந்திருடி."
"ப்ச்! அம்மா இன்னும் கொஞ்ச நேரம்"
"எருமை மாடே எழுந்திரு "
"சரி, எனக்கு காபி கொண்டு வந்து குடு, நான் எழுந்துக்கறேன்".
"எழுந்து பல்ல தேச்சு, போய் வாசல்ல நீதாண்டி கோலம் போடணும்"
"நீ பண்ணும்மா நான் தூங்கிட்டு வரேன். போர்வையை கொண்டு முகத்தை இழுத்து போர்த்திக் கொண்டாள் .
"உனக்கு கல்யாணம் ஆயிடுத்து . புக்காத்துல அதெல்லாம் நடக்காது , எழுந்திரு, பல்லை கடித்தாள்"
இதை கேட்டவள் விருக்கென எழுந்தாள். அவளை பார்த்த அன்னைக்கு அவர்களுக்குள் ஒன்றும் நடக்கவில்லை என்பது தெளிவாகவே புரிந்தது.
"என்னடி, ராத்திரி ஒண்ணுமே நடக்கலையா ?"
"என்ன நடக்கணும்? எங்க ரெண்டு பேருக்கும் நடுல அடிதடி சண்டை வராம இருந்ததே பெரிய விஷயம். இன்னும் சொல்லப்போனா அதை(மனோ) கட்டிண்டதுக்கு நான் இன்னும உயிரோட இருக்கறதே ஜாஸ்தி.
"என்ன வார்த்தை பேசற? அவா காதுல விழுந்தா என்ன நடக்கும்?" மண்டையில் நறுக்கென கொட்டினாள் அன்னை.
"என்ன இப்படிப்பட்ட எடத்துல கல்யாணம் பண்ணி குடுத்துக்கு நீயும் அப்பாவும் நன்னா அனுபவிக்க போறேள் ?" முறைத்துக் கொண்டே குளியல் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்தாள் .
அறைக்குள் இருந்து புத்தம் புது காலையில் அப்போது மலர்ந்த மலராக வந்தவளை
பார்த்த மாமியார்,
"வாடி கண்ணா, காபி சாப்பிடுறியா? இந்தா கோலம் போட்டுட்டு வா " என்று அன்பாக பேசினாள் .
"ம்! சரி! என்ன கோலம் போடணும் ? சாதாவா ? இல்ல படிக் கோலமா ? "
"படிக்கோலமே போடு. அங்கையே காவி இருக்கு"
"சரி"
"அம்மானு சொல்லணும் சரியா?
"சரிம்மா"
"அம்மா! அவரை எங்க காணும்?" பின் தலையில் லேசாக சொரிந்தபடி கேட்டாள் .
"அவன் மாடில சந்தியாவந்தனம் பண்ண போயிருக்கான்" நமுட்டு சிரிப்புடன் சொன்னாள் மாமியார்.
"ம்ம் சரி!"
ஏதோ கடமைக்கு கேட்க வேண்டும். கேட்டாயிற்று. அவ்விடம் விட்டு கோலம் போட சென்றாள் .
"கோலத்தை போட்டுட்டு தலையை நன்னா உலர்த்திக்கோ. வந்து விளக்கேத்திட்டு ஒரு பாயசத்தை பண்ணு . உங்கம்மாக்கு சாதத்தை போட்டா அவா கிளம்புவா "
"மண்ணி (அண்ணி) என்னதிது? முதல்ல நீங்கதான் எங்காத்துல சாப்பிடணும். நான் இதோ கிளம்பறேன்"
"அதெல்லாம் பரவால்ல சுந்தரம். நீங்களும் இந்தாத்து மனுஷிதான். நமக்குள்ள என்ன?"
"இல்ல மண்ணி! தப்பா எடுத்துக்காதீங்கோ. அங்க அவாளும் ரொம்ப டயர்டா இருப்பா . நான் போய்தான் ஏதாவது செய்யணும். இவளுக்காகதான் நான் இங்க நேத்திக்கு இங்க இருந்ததே. தப்பா எடுத்துக்காதீங்கோ "
ஹாலில் வந்து காப்பியை அருந்தியவள்,
மகளை தனியே அழைத்து,
"இங்க பாருடி அவா ரொம்ப நல்லவாளா இருக்கா . உலகம் முழுக்க தேடினாலும் நல்ல மனுஷா கிடைக்கறது ரொம்ப கஷ்டம். உன்னோட கோபத்தையெல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு, எல்லார் கிட்டையும் பதவிசா நடந்துக்கற வழிய பாரு. அதுதான் நீ எங்களுக்கு குடுக்கற மரியாதை. பார்த்து புரிஞ்சு நடந்துக்கோ"
அன்னையின் அறிவுரைகளுக்கு மகள் கொடுத்த ரியாக்ஷனில் அதற்கு பிறகு அவள் மகளிடம் சரியாக பேசவே இல்லை. மகளும் இந்த பிடிக்காத திருமணத்தினால் மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பெரியவர்கள் தான் பின் வந்த நாட்களில் சம்மந்தி வீட்டினர் மூஞ்சியை கூட பார்க்க முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு குற்ற உணர்ச்சி பிடுங்கியது.
பின் வந்த நாட்களில் சிறு சிறு விஷயங்களை எல்லாம் பெரியதாக்கி கொண்டு வந்து வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள். அது அவர்களின் மருமகளுக்கு இன்னும் வசதியாக போனது.

இரண்டாம் நாள் இரவு,
"என்னப்பா இது, இங்க உட்கார்ந்து என்ன பண்ணற?"
"என்னம்மா! என்ன பிராப்ளம் ?"
"இல்லடா! அங்க அவ காத்துண்டுருப்பா ...."
"அவளா? எனக்காகவா ?"
"என்னடா? என்ன ஆச்சு. உங்களுக்குள்ள பிரச்சனையா?அவ எதுவும் கோச்சுண்டாளா ?"
"ப்ச்! இல்லமா! நாந்தான் எல்லாத்துக்கும் காரணம்"
வேட்டியை இழுத்து விட்டு அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.
"ஏம்மா! நான் என்ன அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்? பொண்டாட்டிக்கு கூட சகிக்காத அளவுக்கு ?"
அன்னைக்கு அதிர்ச்சி. மறைத்துக் கொண்டாள் .
" அதெல்லாம் இல்லடா. நீ ரொம்ப நல்லவன். அவ இன்னும் உன்ன புரிஞ்சுக்கல"
"அதனால் என்னம்மா? எப்படியும் நாங்க விவாகரத்துக்கு செய்ஞ்சுடுவோம். ஆனா அதுக்குப்புறம் எனக்கு இன்னொரு கல்யாணம் பாக்காதம்மா"
இதயத்தில் வடிந்த ரத்த துளிகள் வார்த்தையாய் வந்தது.
முள்ளாய் குத்திய வார்த்தைகளுக்கு அன்னையிடம் ஆறுதல் தேடிய குழந்தை, அன்னை தலைக் கோத, அப்படியே உறங்கிப் போனான்.
அன்னையிடம் பாரத்தை கொட்டி விட்டு உறங்கிய மகன் அன்னையின் அழுகையை நல்ல வேளை அறியவில்லை.
மனோகரன் ரேவதியை பார்த்த மாத்திரத்திலேயே மனதை பறி கொடுத்தான். அவள் தனக்கு மனைவியாகப் போகிறவள் என்பது மட்டும்தான் காரணம். அவள் அழகிதான். ஆனால் அழகுக்கு இவன் முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல. அழகின் முக்கியத்துவம் என்ன என்பது மற்றவர்களை விட இவனுக்கு நன்றாகவே தெரியும். தன் மனம் கவர்ந்தவளின் மனதை தன்னால் ஏன் கவர முடியவில்லை?
பல நேரங்களில் தான் ஏன் இந்த திருமணத்தை செய்தோம் என்னும் அளவுக்கு அவளது வார்த்தைகளால் மனதை குத்தி கிழித்தாள்.

இப்படியே ஒவ்வொரு நாளாய் கழிந்தது. விருந்துக்கு அழைத்தவர் வீட்டிற்கு சென்று வந்தனர். அதுவும் பெரியவர்களின் கட்டாயத்தில்தான். ரேவதிக்குதான் அவனுடன் வெளியில் செல்வது என்பது அருவருப்பாக இருந்தது..
எப்படியோ இந்த வீட்டில் இருந்து சிலநேரங்களுக்கு விடுதலை. ஆம்! இருவரும் அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்துக் கொண்டனர். பின்னர்தான் தெரிந்தது, வீடே தேவலாம் என்று!
அனைவரும் புதுமண தம்பதியரை மகிழ்விப்பதாய் எண்ணி துக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.
கேலி, கிண்டல் என்ற பெயரில் சிலர் நன்றாகவே இவளின் அந்தரங்கத்தை, எல்லாம் தெரிந்து கொள்ள ஆசை பட்டனர். அலுவலகத்தில் மற்றவர் கேட்கும் ரகசிய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருப்பவள், அத்தனை கோபத்தையும் வீட்டில் கணவன் மீது காட்டினாள்.
சில சமயங்களில் வார்த்தைகள் தாறு மாறாக வந்தது. தான் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு பேச ஆரம்பித்தாள்.
ஒரு நாள், மாலையில் தலையில் பூச்சூடியவள் மிகவும் அழகாய் இருந்தாள் . கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த மனோ தன்னை அறியாமல்.....

மயக்க வருவான்........
 
Top