கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோஹரா -5

hamsa

New member
இல்லறம் -5

ஒரு நாள், மாலையில் தலையில் பூச்சூடியவள் மிகவும் அழகாய் இருந்தாள் . அவள் அணிந்திருந்த ஆரஞ்சு வர்ணம் அவள் கன்னத்தில் பட்டு ஆரஞ்சு பழம் போலவே இருந்தது.கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த மனோ தன்னை அறியாமல்.....
"ரொம்ப அழகா இருக்க" என்று கூறி (உளறி ) விட்டான்.
"ஆமாம், தொடப்பக்கட்டைக்கு, பட்டு குஞ்சலம்தான் நம்ம கல்யாணம்" என்று தோளில் முகத்தை இடித்துக் கொண்டு போனாள் .
ஆனால், சிலது காதில் விழும்போது, லஷ்மிதான் மிகவும் வருந்துவாள். எங்கே அது கணவனுக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடுமோ என்பதால், தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள் . யாருக்கும் தெரியாமல் கடவுளிடம் மன்றாடுவாள், சண்டை போடுவாள்.
அலுவலகத்தில் தனக்கு கீழ் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். அத்தனை பேரை சமாளிக்க தெரிந்தவனுக்கு இவளை சமாளிப்பது பெரும்பாடாய் இருந்தது. அதற்குக் காரணம் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். தன்னை விட வயதில் சிறியவள். இன்னும் சில நாட்கள் தானே அவள் அங்கே சென்று விட போகிறாள்.
இவை மட்டும்தான் காரணமா ? இல்லை.
ஆழ் மனதில் அவள் மீது இருந்த அன்புதான் காரணம். அதை அவன் வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறான். அவள்தான் கேட்க தயாராக இல்லை.
"ஏங்க ! இங்க பாருங்க! நீங்க என்ன கலரு, நான் என்ன கலரு ? எப்படித்தான் எங்க அப்பா உங்கள போயி எனக்கு பார்த்தாங்களோ?" தலையில் அடித்துக் கொண்டவளுக்கு கண்ணீர் நிற்காமல் கொட்டியது.
அவள் அவனையும் திட்டி தன்னையும் வருத்திக் கொள்வது எதற்கு?
"நான்தான் நாம பிரிஞ்சுடலான்னு சொன்னேனே?"
"பிரிஞ்சா மட்டும்? நான் வாழா வெட்டிதானே?"
அவன் என்ன சொன்னாலும் அவன் மீதே பழி போட ஆரம்பித்தாள் .
"வேற கல்யாணம் செஞ்சுக்கோ. அதான் என்னோடு விரல் கூட படலியே ?"
"ஓஓ ! உங்களுக்கு அது வேற ஏக்கம் இருக்கோ?"
"எல்லாருக்கும் இருக்கறது தானே ?" நல்ல வேளை வார்த்தை வெளியில் வரவில்லை.
அவளுக்கு பதிளுக்கு பதில் அவனுக்கு பேச தெரியவில்லை. சில நேரங்களில் அவள் பேசுவதை பார்த்து அம்மாடி என்றிருந்தது. சில நேரங்களில் இதையே இவள் என்னிடம் ஆசையாக பேசினால் எப்படி இருக்கும் என்று நொந்து கொள்வான்.

மறு நாள்,
நாம இன்னிக்கே போய் வக்கீலை பார்த்துடுவோம்.
அம்மா இன்னிக்கு நாங்க போய் வக்கீலை பார்த்துட்டு வந்துடறோம்.
"எதுக்கு ?" பெற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"அப்பா! எங்களுக்குள்ள ஒத்து வரல. அதான் பிரிஞ்சுடலான்னு.........
"அம்மா உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன்" எந்த தப்பும் செய்யாமல் தலை குனிந்தபடி சொன்னான்,
என்றுமே தலை நிமிர்ந்தவனாகத்தான் அவனை வளர்த்திருக்கிறார்.ஆனால் என்றுமே அதில் கர்வம் இருந்ததில்லை. தன்னம்பிக்கையின் அடையாளமாகவே இருந்தது.
ஆனால் இன்று .....
"எனக்கு இந்த விஷயத்த பத்தி அம்மா ஏற்கனவே சொன்னா. சரி தானாவே வெளில வரட்டும். உங்க விஷயத்துல தலையிட வேண்டான்னு இருந்தேன்.என்னப்பா இது? புதுசா ஒரு பொம்மை வாங்கினேன். எனக்கு அது புடிக்கல, தூக்கி போட்டுடறேன்னு சொல்லறாப்புல இருக்கு? இந்த வார்த்தை ரெண்டு பேருக்கும் சேர்த்துதான்''
தன் பெற்றோரிடம் வாயாடுவதை போல இவரிடம் வாய் வரவில்லை. அமைதியாக நின்றாள் ரேவதி .
ஆனால் மனதில் '' இவர் என்ன என்னை சொல்லறது?''
"இங்க பாருடா! அன்னிக்கே உங்க அம்மா சொன்னா. அவளுக்குத்தான் புரியலனா நீயுமா? கொஞ்சம் பொறுத்துப்போடா''
"என்ன நீங்க இப்படி பேசறீங்க?அவரே வேண்டாங்கறார். உங்களுக்கு என்ன?" துடுக்காய் பேசினாள் .
"இது எங்க பையனோட வாழ்கை. அப்படியே எடுத்தோம் கவுதோன்னு எந்த முடிவும் எடுக்க முடியாது.உனக்குதான் இவன புடிக்கலையே? அப்புறம் எதுக்கு மணமேடைல உட்கார்ந்த? உன்னோட குடும்பத்துக்காக. அதுக்கு எங்க பையன்தான் பலி ஆடா? கூப்டு உன்னோட பேரண்ட்ஸ. அவங்க வரட்டும். எங்களோட கேள்விகளுக்கு அவங்க வந்து எங்களுக்கு பதில் சொல்லிதான் ஆகணும்"
மிரண்டு போனாலும் சமாளித்தாள்.
"அவங்க வர மாட்டாங்க. என்னோட வாழ்க்கைக்கு நான்தான் இனிமே முடிவெடுப்பேன். அவங்க எடுத்த முடிவுலதான் இன்னிக்கு என்னோட வாழக்கையே கேள்வி குறியா நிக்கறது ?"
"அது உன்னோட லைப்புக்கு மட்டும் தான். இதுல எங்க பையனோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு"
இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு இதற்கு மேல் முடியாது போயிற்று.
"அப்பா! உங்க கிட்ட தனியா பேசணும்"
உள் அறைக்கு தனியே சென்றவர்கள்,
"என்னோட உருவம் அவளுக்கு இந்த அளவுக்கு வெறுப்ப குடுக்கறதுன்னா நாங்க சேர்ந்து வாழ்ந்தா மட்டும் என்ன ஆகும் ?அப்பா! என்னால அவளோட வாழ முடியாது. தெனம் தெனம் என்ன ரொம்ப கேவலமா பேசறப்பா . என்னோட தன்னபிக்கையே உடையறது . என்னால முடியல. அவ என்ன கோழையாக்கிடுவா. எனக்கு வேண்டாம்ப்பா "
கையை பிடித்து கெஞ்சும் மகனை சமாதானபடுத்த முடியவில்லை. அதே சமயம் அவன் வாழக்கை தன்னால் வீணாகி விட்டதே என்ற வருத்தமும் சேர்த்துக் கொண்டது.
''எல்லாம் என்னாலதான்'' தலையில் அடித்துக் கொண்டார். "எங்களை மன்னிச்சுடுப்பா ...." கையெடுத்து கும்பிட்டார்.
"நீ என்னப்பா பண்ணுவ. எல்லாம் என்னோட தலை எழுத்து."
இளையவர்கள் சென்று வக்கீலை பார்த்தனர். இப்போதைக்கு விவாகரத்து கிடைக்காது என்று சொல்லி விட்டார். இருவருக்கும் ஏற்கனவே ஓரளவு விஷயம் தெரியும்.இருப்பினும் ஏமாற்றம்தான். வெளியில் காரில் வந்து அமர்ந்தவன் ,
"இங்க பாரு ரேவதி!
எப்படியும் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒன்னாதான் சேர்ந்து வாழனும். ப்ளீஸ் அதுவரைக்கும் , என்ன(னை) கொஞ்ச நாளைக்காவது திட்டாத "
அவன் சொன்ன விதம் சிரிப்பை உண்டாக்கினாலும், அதை காட்டிக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதை பற்றி சிந்தித்தவளுக்கு அதுவும் சரி என்றே பட்டது. இருக்கப்போவது இன்னும் சில நாட்களுக்குத்தான். அதுவரை தன்னுடைய சந்தோசத்தை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?
மாறுதல் இவளிடம் வந்தால் மட்டும் போதுமா ?
தான் பெற்ற மகனை கண்ணீர் சிந்த வைத்தவளை மனோவின் பெற்றோர் எப்படி ஏற்பார்கள் ? துடைத்து போட்டு போவது அத்தனை சுலபமானதா ?
இல்லை என்று அவர்களே காட்டினார்கள். என்னதான் அவளை யாரும் ஒன்றும் சொல்லி விட கூடாது, என்று மனோ கேட்டுக் கொண்டாலும், இவர்களால் அவளிடம் இயல்பாக இருக்க முடியவில்லை .
மதியம் வேலைக்கு சென்று விட்டு வந்தவள், வந்து உட்கார்ந்ததும், காபி, பலகாரம் எல்லாமே வந்தது. இன்னும் வேண்டுமா, போதுமா என்று கூட லஷ்மி கேட்கவில்லை. இவளாலும் அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. என்னதான் இருந்தாலும், இதற்கு முன்பும் பிரச்சனைதான். ஆனால் இவர்களிடம் நேரடியாக அந்த விஷயம் வரவில்லை. லஷ்மிக்கு தெரியும் என்றாலும், விரைவில் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் எப்போது விவாகரத்து வரை விஷயம் வந்ததோ அதை அவர்களால் மன்னிக்க முடியவில்லை.

மயக்க வருவான் மனோ............
 
Top