மதலையின் (தத்தையின்) தனிமை. ஆசிரியர்: அம்மு
"அம்மா அம்மா நான் இன்னைக்கு உங்களோட ஊருக்கு வரலாமா... எனக்கு மட்டும் வீட்டில் தனியா இருக்க பயமா இருக்கும்மா..."என்றாள் எட்டு வயது பவந்தி.
"சும்மா சும்மா சின்ன குழந்தை மாதிரி பண்ணி கொண்டு இருக்காதே பவதி... நீ ஒன்னு சின்ன குழந்தையும் கிடையாது... நான் எப்பவும் போல தம்பிய மட்டும் கூட்டிக்கிட்டு அந்த விசேஷ வீட்டுக்கு போயிட்டு வந்தர்றேன்... ஒழுங்கா வீட்டை பார்த்துவிட்டு இங்கேயே உட்கார்ந்து ஏதாவது செஞ்சு வை... அம்மாவும் அப்பாவும் தம்பியும் அங்க போயிட்டு வந்தாரோம்... அப்படியே சும்மா உட்கார்ந்து இருக்காம்ம ஏதாவது வேலை பார்த்து வை..."பவதியின் தாய் வள்ளி எப்போதும் போல அவளை மட்டும் தனியாக விட்டுவிட்டு சிறு குழந்தையான இரண்டு வயது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு கணவனுடன் கிளம்பி விட்டாள்.
பவந்தி தன் வீட்டு பால்கனியில் நின்று வண்டியின் முன் பகுதியில் அப்பாவும் அப்பாவிற்கு முன்பு தம்பியும் பின்னால் சிரித்தபடி அமர்ந்திருந்த தாயையும் காணக்காண தானும் அவர்களுடன் இணைய மாட்டோம் என அந்த பிஞ்சு மனம் ஏங்கித் தவித்தது.
"விடு பவந்தி இதெல்லாம் எப்போதும் நடக்கிற ஒன்றுதானே... அம்மா பாவம்... என்னையும் அழைத்துக் கொண்டு சென்றால் சிரமம் தானே... நம்ம போயி நம்ம வேலையை பார்ப்போம்...'சிறுவயதிலேயே அவ்வளவு மெச்சுதலோடு இருந்தாள் பவதி.
எப்போதும் போன்று தாய் வீட்டை விட்டு வெளியேறியதும் முதல் வேலையாக கதவைப் பூட்டிக் கொண்டு அதை சரியாக பூட்டி இருக்கிறோமா என ஒருமுறை உறுதி செய்து கொண்டே அடுத்தடுத்த வேலைகளை பார்ப்பாள் பவந்தி.
அடுத்தபடியாக வீட்டை ஒரு முறை நன்றாக பெருக்கி கிடக்கும் சில்லரை பாத்திரங்களை விளக்கி போட்டவள் சிறிது நேரம் உட்கார்ந்து தனது வீட்டு பாடத்தை செய்து முடித்துவிட்டு மேலும் ஒரு அரை மணி நேரம் நன்றாக படித்து விட்டு எழுந்தாள்.
அதன் பிறகு எப்போதும் போல் தாய் செய்து வைத்திருக்கும் தின்பண்டங்களை எடுத்து வைத்தவள் அதனுடன் வீட்டிலேயே செய்த பழச்சாறும் என எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து தனக்கு மிகவும் பிடித்தமான சின் சான் பார்க்க ஆரம்பித்தாள்.
பவதிக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து அவளுடைய தனிமைப் பொழுதுகளில் இப்படித்தான் நகர்கிறது.
ஆனால் அதற்காக அவள் தாய்க்கு அவள் மீது பாசம் இல்லையோ என்றும் சொல்ல முடியாது.
மகளும் மகனும் இருவருமே அவருக்கு ஒன்றுதான். ஆனால் மகள் எப்பொழுதும் கணவனுடையே திரிவதால் மகள் மீது சற்று எரிச்சல் உண்டாகும்.
பவந்தி தந்தையும் வேலை வேலை என அதை கட்டிக் கொண்டே அழுபவர் மீதம் இருக்கும் நேரங்களில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ரகம்.
அதில் சிறிது நேரத்தை மனைவிக்கும் தனிமை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது.
அதனால் பெரும்பாலான நாட்களில் ஏதாவது விசேஷம் எனச் சொல்லி கணவனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார் பவந்தியின் தாய்.
அவர் செல்லும் இடங்களில் பெரும்பாலும் அவர் தாய் வந்து விடுவார் என்பதால் அவரிடம் மகனை ஒப்படைத்து விட்டு சிறிது நேரத்திலேயே கணவனை தன்னுடன் அழைத்துக்கொண்டு தனிமையை நோக்கி சென்று விடுவார்.
கணவனுடன் தனிமைப் பொழுதுகளில் இருப்பது எப்போதும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அதேநேரம் பவந்தியின் வீட்டில் இருந்த தத்தை ஒன்று எப்போதும் போல் வெளியில் பறக்கும் பறவைகளைக் கூண்டுக்குள் இருந்த படியே ஏக்கமாக பார்த்தது.
ஏனோ அந்த தனிமை அந்தத் தத்தையை கொல்லாமல் கொன்றது.
பறந்து திரியும் தத்தைகளுக்கு கூண்டில் இருக்கும் தனிமை மிகவும் கொடுமையான ஒன்று.
சிறிது நேரம் தொலைக்காட்சியில் கவனத்தை செலுத்திய பவதி அதில் சலிப்பு ஏற்பட எப்போதும் போல் தன் தனிமையைப் போக்கும் தத்தையுடன் நேரத்தை செலவழிக்க வந்து விடுவாள்.
தத்தையை தூக்கி தன் கையில் வைத்துக்கொண்டு அதை தடவிக் கொடுப்பது ஏதேனும் சொல்லி அதைப் பேசு என்று சொல்வது அதனுடன் உற்சாகமாக விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
தத்தையின் தனிமை பொழுதுகள் பெரும்பாலும் தனியாக இருப்பதைக் காட்டிலும் பவதியுடன் இருக்கும் தனிமை அதற்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அதைச் செல்லம் கொஞ்சி முடிக்கவும் அவள் பெற்றோர்கள் வரவும் சரியாக இருந்தது.
அதன் பிறகு அப்பா தம்பி என சந்தோஷமாக பவந்தி விளையாட ஆரம்பித்தாள்.
பவதியின் தாய் சலித்தபடியே சமையல் அறையை நோக்கி சென்றாள். மீண்டும் தனிமை உணர்வு ஆட்கொள்ள எப்போதடா கணவனுடன் இன்னொரு பயணம் மேற்கொள்ள முடியும் என மனம் ஏங்கியது.
அதன்பிறகு நாட்கள் அதன் போக்கில் செல்ல பவந்தியின் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போக அங்கு செல்ல வேண்டிய சூழல் பவதி தாய் வள்ளிக்கு ஏற்பட அவசர அவசரமாக மகனை மட்டும் தயார் செய்தவர் கணவனுக்கு விஷயத்தைத் தெரிவிக்க அவரும் தயாராக இரு நானே வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூற பவந்தி அழைத்துச் செல்லும் முடியாது என யோசித்த வள்ளி எதிர்வீட்டில் இருக்கும் 70 வயதான முதியவர் பவதியின் மீது மிகவும் அன்பு கொண்டவர்(அவரது எண்ணம்) அவரிடம் விஷயத்தை சுருக்கமாக கூறி முடித்து "நான் வருவதற்கு காலைப்பொழுது ஆகும்... குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் சார்... பக்கத்து வீட்டு மாமி கிட்ட சொல்லி இருக்கேன் அவங்க சாப்பாடு கொடுத்துடுவாங்க... நீங்க பாப்பா கூட இருந்து அவரை பத்திரமாக பார்த்துக்கோங்க..."அவரிடம் கூற,
"நானே வயதான ஆள் தானமா...என்னை தாத்தா தாத்தா என்று அழைத்துக் கொண்டு திரியும் செல்ல பேத்தியை பார்த்து கொள்ள கசக்குமா என்ன... நான் பார்த்துகிறேன் நீ பத்திரமா போயிட்டு வாம்மா..."குழந்தையைப் பார்த்துக் கொள்வதாக கூற வள்ளியும் பவந்தி பற்றிய கவலையில்லாமல் கிளம்பினார்.
பள்ளி முடிந்து திரும்பிப்ய பவதியிடம் விஷயத்தை தெரிவித்த வள்ளி "தாத்தா உன்னை பார்த்துக்குவாங்க பத்திரமாக இரு..."மகளுக்கு எடுத்து கூற அவளோ தாய் தந்தையை விட்டுப் பிரிந்திருக்க முடியாது அதுவும் மாலை இரவில் தனிமையில் இருக்கவே முடியாது என்று அழுக ஆரம்பிக்க எரிச்சலடைந்த வள்ளி நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று அவளை உள்ளே வைத்து பூட்டியவர் சாவியை எதிர்வீட்டு முதியவரிடம் கொடுத்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு கீழே செல்ல கணவன் மகள் எங்கே என்று கேட்க விஷயத்தை சுருக்கமாக கூறி முடித்த வள்ளி அவள் பத்திரமாக இருக்கிறாள் .இப்போது நம் கிளம்புவோம் என்று கூறவும் அவரும் அதற்கு மேலும் ஒரு கேள்வியை கேட்காது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.
பவந்தி வீட்டில் தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தாள் தாய் தந்தை தன்னை விட்டுச் சென்றதில், ஏனோ அவளுக்கு எதிர் வீட்டு தாத்தாவை சுத்தமாக பிடிக்காது.
அவர் தனியாக இருக்கிறார் என அவருடன் விளையாட செல்லும் நேரத்தில் கைகளை அங்கங்கு உடம்பில் வைக்க அசௌகரியமாக உணர்ந்த பவதி அதை தாயிடம் சொல்வதற்கு முன்பாகவே வள்ளி அவளை பேசவிடாமல் சென்றுவிட்டார்.
பல நாளாக இந்த நாட்களுக்காக ஏங்கி காத்துக் கொண்டிருந்த அந்த வயதான வரும் வள்ளி கொடுத்துச் சென்ற சாவியை எடுத்துக்கொண்டு பவந்தி வீட்டுக் கதவைத் திறந்தவர் கண்களில் அச்சு அசலாக காம வெறி ஏறியது.
அவரின் பார்வை பந்திக்கு ஏதோ ஒன்று ஏற்பட அழுவதை நிறுத்தியவள் கண்களை துடைத்துக் கொண்டு "நீங்க போங்க தாத்தா நான் வீட்டில் பத்திரமாக இருந்து கொள்கிறேன்..."என்று கூறவும் வேறு வழியில்லாமல் தன் வீட்டிற்குச் சென்ற முதியவர் கிடைக்கப்போகும் தனிமை நேரத்திற்காக காத்திருந்தார்.
பகல் முழுவதும் தைரியமாக இருந்த பவதி சுற்றியிருந்த இருட்டு பயம் சூழ இருந்தாலும் பயத்தை காட்டாமல் தைரியமாகவே இருந்து கொண்டாள்.
எதிர் வீட்டு மாமி கொடுத்த உணவுகளை வாங்கி உண்டவள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு கதவை தாழ்பாள் போட்டு வந்து படுத்தவள் சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனாள்.
திடீரென தன் கை கால் மீது ஏதோ ஊர்வது போல இருக்க திடுக்கிட்டு எழுந்த போது பவதி அருகில் படுத்திருந்த தாத்தாவை கண்டதும் பயம் வர அவரை விட்டு சில அடிகள் பின்னால் சென்றாள்.
மணி பத்தை தொட்டதும் தன் கையில் இருந்த சாவியை கொண்டு பவந்தி வீட்டு கதவை திறந்த முதியவர் பவந்தி இருக்கும் அறையை நோக்கி சென்றவர் சிறு குழந்தை என்றும் பாராமல் அந்தக் குழந்தையின் அங்கங்களை தவறாக தொட பயந்து விழித்த குழந்தையை இதற்கு மேலும் விட்டால் ஆபத்து என நொடியில் பாய்ந்தது அந்த மனிதர் மிருகம்.
"தாத்தா வேண்டாம் என்னை விட்ருங்க ரொம்ப வலிக்குது தாத்தா என்னை விட்டுடுங்க..." சிறுகுழந்தையின் குரல் காற்றோடு கலந்து போக தனக்கு கிடைத்த தனிமையை பயன்படுத்திக் கொண்ட அந்த மனித மிருகம் அந்தக் குழந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டு அவளை விட்டு நகர வெறிபிடித்த மிருகத்தின் செயலை தாங்க முடியாமல் தனிமை தந்த பயத்திலும் பயந்து போயிருந்த சிறு குழந்தை அநியாயமாக தன் உயிரை விட்டிருந்தது.
அதைக் கண்டு பயந்து அந்த முதியவரும் அங்கிருந்த தனிமையை பயன்படுத்திக் கொண்டு ஊரை விட்டே ஓடிவிட்டான்.
நடந்த அனைத்தையும் கூண்டுக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தத்தை தன் தோழி இனி தன்னுடன் விளையாட வரமாட்டாள் என தெரியாமல் அவள் தனிமையைப் போக்கும் விதமாக தன்னுடன் விளையாட அழைப்பதாக எண்ணி "கீச் கீச் கீச்" கத்த அந்த சப்தம் அந்த குழந்தைக்கு கேட்காமலே போனது.
மறுநாளே தாய்க்கு உடல் சரியானதும் வீட்டிற்கு வந்த வள்ளி கண்டது பிணமாக கிடக்கும் தன் மகளைத் தான் பத்துமாதம் பெற்றெடுத்த பிள்ளையை பிணமாக பார்க்க துடிதுடித்துப்போனாள்.
அவளை தனிமையில் விட்டு விட்டு அடுத்தவரை நம்பி போனதை எண்ணி வெடித்து அழுதார்.
கூண்டுக்குள் இருந்த கிளியும் யாரும் கண்டுகொள்ளாதாதல் தன்னுடைய தனிமையை பயன்படுத்திக் கொண்டு குழந்தைக்கு நேர்ந்தது போல தனக்கும் நேர்ந்து விடுமோ என பறந்து போனது.
தனிமை சிலருக்கு சந்தோஷம் சிலருக்கு சாபம் சிலருக்கு கொடுமை சிலருக்கு இச்சை சிலருக்கு மரணம்.
தத்தையும் மதலை இருவரும் தங்களுடைய தனிமையில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டார்கள்.